<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,522,959,941" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 25 2026 03:46:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260525T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="25052026-TRY-05" position.sequence="05" ex-ref="25052026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">த.வெ.க. அர­சில் 4 பவர் சென்­டர்­கள்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­தில் கடும் இழு­பறி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, மே 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த.வெ.க. அர­சில் தற்­போது 4 பவர் சென்­டர்­கள் உரு­வா­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இந்த பவர் சென்­டர்­கள் மூல­மா­கவே அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள் நிய­ம­னம் நடை­பெற்­றுள்­ளது. இத­னால்முடி­வெ­டுப்­ப­ தி­லும், அதை அமல்­படுத்­து­வ­தி­லும் கடும் குழப்­பம் ஏற்­பட்டு வரு­வ­தாககூறப்­ப­டு­கி­றது. தமி­ழ­கத்­தில் யாரும்எதிர்­பா­ராத வித­மாக  த.வெ.க. அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்­பான்மை கிடைக்­கா­த­தால் இழு­பறிஏற்­பட்டு ஆட்­சியை அமைத்­துள்­ள­னர். தேர்­தல் முடி­வு­கள் 4ம் தேதிஅறி­விக்­கப்­பட்­டது. 10ம் தேதி­தான்பதவி ஏற்பு விழா நடை­பெற்­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பதவி ஏற்­கும்­போது 9 அமைச்­சர்­கள் மட்­டுமே பதவி ஏற்­ற­னர். அதன்­பின்­னர் கடந்த 21ம் தேதி 2வது முறை­யாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்­தது. அப்­போது 23 அமைச்­சர்­கள் பதவி ஏற்­ற­னர். காங்­கி­ரசைச் சேர்ந்த 2 பேர் பதவி ஏற்­ற­னர். பின்­னர்  விசிக, ஐயு­எம்­எல் கட்­சி­யைச் சேர்ந்த தலா ஒரு­வர் என விஜய்­யை­யும் சேர்த்து மொத்­தம் 35 பேர் பதவி ஏற்­றுள்­ள­னர். அமைச்­சர்­கள் நிய­ம­னத்­தில் கடு­மை­யான குழப்­பம் நில­வி­ய­தாக கூறப்­ப­டு ­கி­றது. அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­தி ­லும் குழப்­பம் நிலவி வரு­கி­றது. அதற்கு முக்­கிய கார­ணம் 4 பேர் பவர் சென்­டர்­க­ளாக இருப்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்­ஜூனா, ஜான் ஆரோக்­கி­ய­சாமி என 4 பேர் பவர் சென்­டர்­க­ளாக உள்­ள­னர். இவர்­கள் நான்கு பேர் மூல­மா­கத்­தான் பலர் அமைச்­சர் பத­வியை பிடித்­துள்­ள­னர். குறிப்­பாக வேட்­பா­ளர் தேர்­வி­லும் இந்த மோதல் எதி­ரொ­லித்­துள்­ளது. இந்த 4 பவர் சென்­டர் தவிர, செங்­கோட்­டை­யன் தனி­யாக ஒரு ரூட் போட்டு இந்த 4 பவர் சென்­டர்­க­ளி­டம் தன்­னு­டைய ஆத­ர­வா­ளர்­களுக்கு தேவை­யான உத­வி­களை செய்து கொடுத்­துள்­ளா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வேட்­பா­ளர் தேர்வை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோர்­தான் செய்­துள்­ள­னர். இந்­தப் பட்­டி­யல் ஜான் ஆரோக்­கி­ய­சா­மி­யி­டம் சென்­றுள்­ளது. அவர் சில மாற்­றங்­களை செய்­துள்­ளார். கடை­சி­யாக விஜய்­யி­டம் சென்­றுள்­ளது. அவ­ரும் சிலவேட்­பா­ளர்­களை மாற்­றி­யுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதே­போ­லத்­தான் அமைச்­ச­ரவை நிய­ம­னத்­தி­லும், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோர்­தான் அமைச்­சர்­களை தேர்வு செய்து, அவர்­க­ளுக்­கான இலா­காக்­களை தேர்வு செய்­துள்­ள­னர். பின்­னர் இந்­தப் பட்­டி­யல் விஜய் கவ­னத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அவர் ஜான் ஆரோக்­கி­ய­சா­மி­யி­டம் பேசி, பட்­டி­யலைஇறுதி செய்­துள்­ளார். இறுதி செய்த பட்­டி­யல்­தான் கடை­சி­யாக புஸ்ஸிஆனந்­தி­டம் வழங்­கப்­பட்டு ஆளு­ந­ரின் ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது. புஸ்ஸி ஆனந்த் தயா­ரித்த அமைச்­ச­ரவை பட்­டி­யல், விஜய்­யி­டம் சென்ற பின்­னர் மாற்­றம் நிகழ்ந்­துள்­ளது. இத­னால் அமைச்­ச­ரா­கப் போகி­ற­வர்­க­ளி­டம் விஜய்யே போன் செய்து பேசி, ஏதோ தான் மட்­டுமே பட்­டி­யல் தயா­ரித்­த­து­போல அவர்­க­ளி­டம் பேசி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், அவர்­கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்­ஜூனா, ஜான் ஆரோக்­கி­ய­சாமி மூலம் பதவி ெபற்­றது அவர்­க­ளுக்கு மட்­டுமே தெரி­யும் என்­ப­தால் அவர்­க­ளும் விஜய் மட்­டுமே பதவி கொடுத்­து­போல நடித்­துள்­ள­னர். அதா­வது நடி­க­னி­டமே அமைச்­சர்­கள் நடித்­துள்­ள­னர். அதே­போல இலாகா விவ­கா­ரத்­தி­லும் அப்­ப­டியே நடந்­துள்­ளது. அதில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆகி­யோர் அமைச்­சர்­க­ளா­கி­விட்­டா­லும், ஜான் ஆரோக்­கி­ய­சாமி அமைச்­ச­ரா­க­வில்லை. ஆனால் அவர் அமைச்­ச­ர­வை­யில் நடப்­பது தெரிந்து கொள்­வ­தற்­காக தன்­னு­டைய ஆளாக நிர்­மல்­ குமாரை நிய­மித்­துள்­ளா­ராம். இந்த 4 பவர் சென்­டர்­கள், அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­தி­லும் முடி­வு­களை எடுக்­கி­றார்­க­ளாம். தலை­மைச் செய­லா­ளர், டிஜிபி ஆகி­ யோரை தேர்­தல் ஆணை­யம் நிய­மித் 
துள்­ளது. அவர்­க­ளில் தலை­மைச் செய­லா­ளர் சாய்­குமார், ஜூலை மாதத்­தில் ஓய்வு பெறு­கி­றார். இத­னால் அது­வரை தான் தலை­மைச் செய­லா­ள­ராக இருக்­கி­றேன் என்று விஜய்­யி­டம் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதை அவ­ரும் ஏற்­றுக் கொண்­டார்.அதைத் தொடர்ந்து ஐ.ஏ­.எஸ்.அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­தைப் பொறுத்­த­வரை தலை­மைச் செய­லா­ளர் சாய்­கு­மார், மாறு­தல் பட்­டி­யலை தயா­ரித்து முதல்­வர் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கி­றார். அங்கு சில மாற்­றங்­கள் செய்­யப்­பட்டோ அல்­லது அப்­ப­டி­யே­வா­கவோ பைல் வரு­கி­றது. ஆனால் முதல்­வ­ரின் அலு­வ­ல­கம் செல்­லும் பைல் 3 நாட்­களுக்­குப் பிற­கு­தான் தலை­மைச் செய­ல­கத்­துக்கு திரும்பி வரு­கி­ற­தாம். சென்னை போலீஸ் கமி­ஷ­னர் அமல்­ரா­ஜூம், விஜய்­யும் ஒரே சர்ச்­சுக்கு செல்­கி­ற­வர்­கள்.இத­னால் அந்த சர்ச் பங்குதந்தைகூறி­ய­தால் நேர­டி­யாக விஜய்யே தேர்வு செய்­தா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் மற்ற பத­வி­க­ளைப் பொறுத்­த­வரை ஆளா­ளுக்கு பரிந்­துரை செய்­கி­றார்­க­ளாம். கடை­சி­யில் விஜய் முடிவு செய்­கிறா­ராம். ஆனால் பதவி ஏற்பு விழா­வில், இந்த ஆட்­சி­யைப் பொறுத்­த­வரை ஒரே பவர் சென்­டர் தான் மட்­டுமே என்­றார். ஆனால் அப்­படி இல்லை என்­கின்­ற­னர் அதி­கா­ரி­கள். சென்னைபோலீஸ் கமி­ஷ­னர் அமல்­ரா­ஜின் பைல் கடந்த திங்­கட்­கி­ழ­ மையே முதல்­வர் அலு­வ­ல­கம் சென்­ற­தாம். ஆனால் வியாழக்­ கி­ழ­மை­தான் பைலுக்கு விஜய் ஒப்­பு­தல் கொடுத்­ததை உதா­ர­ண­மாக கூறு­கின்­ற­னர். பைல்­கள் தாம­த­மா­வ­தோடு முடி­வு­க­ளை ­யும் எடுக்க முடி­யா­மல் திணறி வரு­கி­றார்­க­ளாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் போலீஸ் அதி­கா­ரி­கள் மாற்­றம் நடை­பெ­ற­வில்லை, செய­லா­ளர்­கள் மாற்­றம் நடை­பெ­ற­வில்லை. இதற் கெல்­லாம் கார­ணம் இந்த கால­தா­ம­தம்­தான் என்­கின்­ற­னர் அதி­கா­ரி­கள். இதே நிலைமை நீடித்­தால், ஜெய­ல­லிதா ஆட்­சியை விடமோச­மான நிலைக்கு விஜய் ஆட்சி செல்­லும் என்­கின்­ற­னர் தலை­மைச் செய­லக அதி­கா­ரி­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>