<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,659,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 26 2026 03:48:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260526T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26052026-VLR-02" position.sequence="02" ex-ref="26052026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">இராதாபுரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">வரும் நாடா­ளு­மன்­றம் – உள்­ளாட்­சித் தேர்­த­லில் தி.மு.கழ­கம் மிகப்­பெ­ரிய வெற்றி பெறும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">நெல்லை - பண­கு­டி­யில் மு.அப்­பாவு பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Appavu_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Vasanthamphoto_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை, மே 26 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை மாவட்­டம், இரா­தா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மதச்­சார் பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­ யின் கழக வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட முன்­னாள் சட்­ட­ப்பே­ரவை தலை­வர் மு.அப்­பாவு இரா­தா­பு­ரம் தொகு­திக்கு உட்­பட்ட பண­குடி, வள்­ளி­யூர் ஆகிய பகு­தி­க­ளில்  தனக்கு  உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­க­ளுக்கு தெருத் தெரு­வாக சந்­தித்து நன்றி தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து முன்­னாள் பேரவை தலை­வர் மு.அப்­பாவு  பண­கு­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போ­தைய அர­சுக்கு ஆத­ர­வாக  சுமார் 300 கோடி ரூபாய் செல­வில் ஒரு பெரும் ‘ரீல்ஸ்’ உரு­வாக்­கும் கூட்­டம் செயல்­பட்டு வரு­கி­றது. 1,200 தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள், 200 துணைநடி­கர்­கள் இதற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தின­சரி உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­களை இன்ஸ்­டா­கி­ராம் ரீல்ஸ்­கள் மூலம் உரு­வாக்­கு­கி­றார்­கள். சுமார் 30,000 வாட்ஸ்­அப் குழுக்­கள் மற்­றும் 2 லட்­சம் போலி ஐடி­கள்  மூலம் இந்­தச் செய்­தி­கள் பரப்­பப்­ப­டு­கின்­றன. குழந்­தை­களை ஈர்க்­கும் கார்ட்­டூன் வீடி­யோக்­கள் வரை இவை ஊடு­ரு­வி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போ­தைய முதல்­வர், பெண் ஒரு­வ­ரின் மர­ணத்­திற்கு ‘சி.எம். சார், அந்தஉயி­ரைத் திரும்­பக் கொடுக்கமுடி­யுமா?’ என்று கேள்வி எழுப்பி கடு­மை­யாக விமர்­சித்­தார்.  அதே­போன்ற ஒரு சூழல் தற்­போது கோயம்­புத்­தூ­ரில் நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அங்கு 10 வய­துக் குழந்தைஒன்று கடத்­தப்­பட்டு, பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்டு படு­கொலைசெய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தச்சம்­ப­வத்­தில் மூன்று நான்கு நாட்­க­ளா­கப் பெற்­றோர்­களை அலைக்­க­ழித்த பிறகே காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து,   தற்­போது   உடற்­கூ­றாய்­வுக்­குப் பின் உட­லைப் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குழந்­தையை இழந்து கத­றும் பெற்­றோர்­க­ளி­டம், இனி இப்­படி ஒரு சம்­ப­வம் நடக்­காது என்ற ஒரு மாயை­யான  வாக்­கு­று­தியை  அளித்­து­தான் இவர்­கள்வாக்­கு­களை பெற்­றுள்­ள­னர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஒரு தொலை­பேசி வாயி­லா­கக் கூட அந்­தப் பெற்­றோ­ருக்கு முதல்­வர் ஆறு­தல் தெரி­விக்­க­வில்லை. தேர்­த­லின் போது எவ்­வாறு ரீல்ஸ்­கள் மூலம் பொய்ப்பிர­சா­ரம் செய்­யப்­பட்­டதோ,அதே­போல தற்­போ­தும் வலை­த­ளங்­க­ளில் ஆறு­தல் கூறு­வது போன்ற பதி­வு­களை மட்­டுமே அவர்­கள் வெளி­யிட்­டுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் பொது­மக்­க­ளின் கொந்­த­ளிப்­பைத் தாங்க முடி­யா­மல், முன்­னாள் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்,  தனது  ஆட்­சிக்­கா­லத்­தில் இதுபோன்ற சம்­ப­வங்­கள் நடந்த உடனே பாதிக்­கப்­பட்ட பெற்­றோ­ரைத் தொலை­பே­சி­யில் அழைத்து ஆறு­தல் கூறி, தகுந்த பாது­காப்பு மற்­றும் நிதி­யு­த­வி­க­ளைச் செய்து, குற்­ற­வா­ளி­க­ளுக்­குக் கடு­மை­யான தண்­டனை பெற்­றுத் தந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் தற்­போ­தைய முதல்­வர், ஐந்து நாட்­க­ளுக்­குப் பிறகே முன்­னாள் முதல்­வ­ரின் வழி­யைப் பின்­பற்றி தொலை­பே­சி­யில் அழைத்து ஆறு­தல் கூறி­யுள்­ளார். இதன் மூலம் அவர்­க­ளின் ஏமாற்று வேலை மக்­க­ளுக்கு வெட்ட வெளிச்­ச­மா­கத் தெரிந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அ.தி.மு.க-., தி.மு.க. கூட்­டணி ஆட்சி அமை­யுமா?” என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த அவர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு அ.தி.மு.க.வில் குழப்­பம் நில­வி­ய­போது ஆளு­நர் நமது தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­களை அழைத்து ஆட்சி அமைக்­கக் கோரி­னார். தி.மு.க. வசம் அப்­போது 107 எம்.எல்.ஏ-.க் கள் இருந்­த­னர். பெரும்­பான்­மைக்கு 118 பேர் தேவைஆனால் “குறுக்கு வழி­யில் நான் ஆட்­சிக்கு வர விரும்­ப­ வில்லை. 118 பேரின் ஆத­ர­வு­டன்  மக்­க­ளால்   தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் மட்­டுமேமுதல்­வ­ராக அமர்­வேன். அது­வரை பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கவே செயல்­ப­டு­வேன்” என்று மு.க.ஸ்டாலின்அவர்­கள் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. தலை­வர் தெளி­வா­கவே தனது நிலைப்­   பாட்டை அறி­வித்­துள்­ளார். மக்­கள் எங்­களை எதிர்க்­கட்­சி­யாக அமர்த்­தி­யுள்­ள­னர். அத­னால் பிர­தான எதிர்க்­கட்சியாகவே செயல்­ப­டு­வோம். குறுக்கு வழி­யில் ஆட்­சிக்கு வர விருப்­ப ­மில்லை என்று தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சார வாரி­யத்­தின் கடன் நிலை குறித்து பேசிய மு.அப்­பாவு, “2011ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்­சி­யி­     லி­ருந்து வில­கி­ய­போது மின்­வா­ரி­யத்­தின் மொத்­தக் கடன் ரூ.43 ஆயி­ரம் கோடி மட்­டுமே இருந்­தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில் தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி, அதிக விலைக்கு கொள்­மு­தல், சோலார் ஒப்­பந்­தங்­க­ளில் முறை­கேடு போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளால் ஆயி­ரக்­க­ணக்­கான கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதை சி.ஏ.ஜி. அறிக்­கை­யும் சுட்­டிக்­காட்­டி ­யுள்­ளது. அதுவே தற்­போது மின்­வா­ரி­யம் பெரும் கட­னில் சிக்க கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொறடா உத்­த­ரவை மீறி­ய­தாக கூறப்­ப­டும் 25 அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் தகுதி நீக்க விவ­கா­ரம் குறித்து விளக்­கம் அளித்த அவர், “கட்­சித் தாவல் தடைச் சட்­டத்­தின்­படி, கட்­சி­யின் சின்­னத்­தில் வெற்றி பெற்று பின்­னர் கட்சி உத்­த­ர­வுக்கு எதி­ரா­கச் செயல்­பட்­டால் சபா­நா­ய­கர் நட­வ­டிக்கை எடுக்க முழு அதி­கா­ரம் உள்­ளது. டி.டி.வி. தின­க­ரன் ஆத­ரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்­கில் எடுத்த நட­வ­டிக்­கை­யும், அதனை நீதி­மன்­றம் உறுதி செய்த தீர்ப்­பு­க­ளும் இதற்குமுன்­னு­தா­ர­ண­மாக உள்­ளன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்று ஒரு அமைப்பை உரு­வாக்கி உள்­ளார்­கள். வேலை­யில்­லாத இளை­ஞர்­களை கொச்­சைப்­ப­டுத்தி பேசி­ய­தின் விளை­வாக ஜென்-சி” (Gen-Z) என்று அழைக்­கப்­ப­டும் இன்­றைய இளம் தலை­மு­றை­யி­னர் லட்­சக்­க­ணக்­கில் ஒன்­றி­ணைந்து இந்த “காக்­ரோச் ஜனதா பார்ட்டி” என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ள­னர். இந்த இளை­ஞர் சக்தி(காக்­ரோச்) மிக விரை­வில் அர­சி­ய­லில் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அ.தி.மு.க.வின் சின்­ன­மான இலை­யை­யும், பா.ஜ.க.வின் சின்­ன­மான ‘தாம­ரை­யை­யும் இந்த “காக்­ரோச்” சாப்­பிட்டு முடித்­து­வி­டும் என்று தோன்­று­கி­றது. மேலும் காக்­ரோச் போடும் இரைச்­ச­லில், விசில் சத்­தம் காணா­ம­லேயே போய்­வி­டும். யார் எவ்­வ­ளவு பொய்ப் பிர­ச் சா­ரம் செய்­தா­லும் மக்­கள் அதை நம்­ப­மாட்­டார்­கள். தி.மு.க. என்­பது கொள்­கைப் பிடிப்­புள்ள இயக்­கம், ஆட்சி அதி­கா­ரத்­திற்­காகஎதை­யும் செய்­ப­வர்­கள் அல்ல.வர­வி­ருக்­கும் நாடா­ளு­மன்­றம் மற்­றும் உள்­ளாட்­சித் தேர்­தல்­க­ளி­லும் தி.மு.க. கூட்­டணி மிகப்­பெ­ரியவெற்­றி­யைப் பெறும்” என்றுநம்­பிக்கை தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் ஒன்­றி­யக் கழகச் செய­லா­ளர்­கள் ஜோசப் பெல்சி,  அலெக்ஸ்அப்­பாவு, மாவட்ட பொறுப்­புக் குழு உறுப்­பி­னர் நம்பி உள்­பட கழக நிர்­வா­கி­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டை பேரூர் மற்றும் முருக்கம்பாடி, கொங்கணாமூர், அத்தியந்தல், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், ஜம்பை, கே.சி.தாங்கல், பள்ளிச்சந்தல், மேட்டுச்சேரி, காங்கியனூர், மேலந்தல் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>