<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 26 2026 22:04:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260527T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="27052026-CBE-05" position.sequence="05" ex-ref="27052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">ஊடகங்களும், பூடகங்களும்: மக்கள் மனதில் நிற்பவற்றை தீர்மானிப்பது எது?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame667726_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup667785_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M8bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M10bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M2bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="M6bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="M4bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="15.6">ஊ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">ட­கம் என்ற சொல் இன்று பிரம்­மாண்­ட­மான பரி­மா­ணத்தை எட்­டி­யுள்­ளது. அதற்கு முக்­கிய கார­ணம் செல்­பே­சி­கள் வழி­யா­கப் பரி­மா­றப்­ப­டும் செய்­தி­கள். இதில் மக்­கள் அனை­வ­ருமே செய்­தி­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளா­க­வும், நுகர்­ப­வர்­க­ளா­க­வும் மாறு­கி­றார்­கள். ஒரு­வர் உரு­வாக்­கும் செய்தி அல்­லது கருத்து ஏரா­ள­மா­ன­வர்­களை சென்­ற­டைந்­தால் அது “வைரல்” ஆகி­விட்­டது என்று கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">அதன் பொருள் என்­ன­வென்­றால், தொற்று நோயைப் பரப்­பும் வைரஸ் என்­னும் நுண்­கி­ரு­மி­கள் பர­வு­வது போல சில தக­வல்­கள், கருத்­துக்­கள் வேக­மா­கப் பர­வு­கின்­றன என்­ப­து­தான். சில செய்­தி­கள் பல இலட்­சம் பேரைச் சென்று சேர்­கின்­றன. சில புகைப்­ப­டங்­கள், காட்­சி­கள் நாடு முழு­வ­தும் பர­வு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">இப்­ப­டிப் பர­வு­வது மக்­க­ளாக விரும்­பிப் பரப்­பு­வது என்று மட்­டும் நாம் எடுத்­துக்­கொள்ள முடி­யாது. ஏனெ­னில் இணைய வலைப்­பின்­ன­லில் இயங்­கும் இந்­தச் சமூக ஊட­கங்­களை அல்­கா­ரி­தம் என்­னும் கணினி மென்­பொ­ருள் நிரல்­க­ளால் கட்­டுப்­ப­டுத்தி ஒரு செய்­தியை அதி­கம் பரப்­பவோ, பர­வா­மல் தடுக்­கவோ முடி­யும் என்­ப­தும் முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">உதா­ர­ண­மாக ஃபேஸ்­புக் என்ற முக்­கி­ய­மான சமூக ஊட­கத் தளத்­தில், அந்­தத் தளமே பணம் கொடுத்­தால் உங்­கள் தக­வலை அதி­கம் பேருக்கு காண்­பிக்­கி­றேன் என்று கூறு­கி­றது. இப்­படி தொழில் முறை­யாக செய்தி பரப்­பு­ப­வர்­களை இன்ஃ­பு­ளூ­யன்­ஸர்ஸ் என்று கூறு­கி­றார்­கள். இவர்­கள் குறிப்­பாக யூடி­யூப், இன்ஸ்­டா­கி­ராம் ஆகி­ய­வற்­றின் மூலம் படங்­கள், காணொ­லி­களை பரப்­பு­கி­றார்­கள். தொடு­திரை செல்­பே­சி­கள் கோடிக்­க­ணக்­கில் பர­வி­விட்­ட­தால், இன்று சமூக ஊட­கங்­கள் பாரம்­ப­ரிய ஊட­கங்­க­ளை­விட முக்­கிய­ மான­தா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">உதா­ர­ண­மாக பத்து நாட்­க­ளுக்கு முன் உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி வேலை­யில்லா இளை­ஞர்­கள் கரப்­பான் பூச்­சி­கள் போல பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வ­தா­கச் சொன்­னது பெரும் கொந்­த­ளிப்பை உரு­வாக்­கி­யது. அத­னைத் தொடர்ந்து மஹா­ராஷ்­டி­ரா­வி­லுள்ள சாம்­பாஜி நக­ரைச் சேர்ந்த  (அவு­ரங்­கா­பாத்) அபி­ஜித் திப்கே என்­ப­வர் காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்ற வலைத்­த­ளத்­தைத் தொடங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">அதனை இன்ஸ்­டா­கி­ராம், எக்ஸ் போன்ற சமூக ஊட­கங்­க­ளில் பரப்ப, அதில் பல இலட்­சம் பேர் உறுப்­பி­னர்­கள் ஆன­து­டன் பல்­வேறு காணொ­லி­கள், பாடல்­கள் ஆகி­ய­வற்­றை­யும் பரப்­பத் தொடங்­கி­விட்­ட­னர். இப்­போது இந்த தளத்தை ஒன்­றிய அரசு முடக்­கி­யுள்­ளது. ஆனா­லும் ஆங்­காங்கே இளை­ஞர்­கள் இந்­தக் கட்­சி­யின் பெய­ரில் ஊர்­வ­ல­மா­கச் செல்­கின்­ற­னர். நீட் தேர்வு வினாத்­தாள்­கள் கசிந்­தது குறித்த இளை­ஞர்­கள் கோபம் இதில் தீவி­ர­மாக வெளிப்­ப­டு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இந்த நேரத்­தில் பல கேள்­வி­கள் எழு­கின்­றன. தொலைக்­காட்சி ஊட­கம், அச்சு ஊட­கம் ஆகி­ய­வற்­றிற்­கும், சமூக ஊட­கங்­க­ளுக்­கும் உள்ள தொடர்பு என்ன, இவற்றை யாரெல்­லாம் எப்­ப­டி­யெல்­லாம் கட்­டுப்­ப­டுத்­து­கி­றார்­கள், எந்­தச் செய்­தி­கள் பர­வு­கின்­றன, எவை பர­வு­வ­தில்லை; எந்த நிகழ்­வு­கள் குறித்து எவ்­வா­றான கருத்­துக்­கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன, எவ்­வி­த­மான கருத்­துக்­கள் பர­வு­வ­தில்லை என்­ப­தெல்­லாமே தானாக நிகழ்­கி­றதா, அல்­லது பல்­வேறு ஆதிக்க நலன்­க­ளின் தூண்­டு­தல்­க­ளால் நடை­பெ­று­கின்­றதா என்­ப­தெல்­லாம் முக்­கி­ய­மான கேள்­வி­க­ளாக மாறு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">சமூ­கப் பரப்­பில் வெகு­மக்­கள் மன நிலையை 
கட்­ட­மைப்­ப­தில், சமூக நினை­வு­க­ளில் ஒரு சில நிகழ்­வு­களை பதிப்­பது அல்­லது மறக்­க­டிப்­ப­தில் ஊட­கப் பரப்­பினை கட்­டுப்­ப­டுத்­து­ப­வர்­கள் முக்­கிய பங்­கினை வகிக்­கி­றார்­கள் என­லாம். இவர்­கள் முயற்­சி­கள் எல்­லாமே எடு­ப­டு­கின்­ற­னவா என்று சொல்ல முடி­யா­விட்­டா­லும், ஒரு சில முயற்­சி­கள் நிச்­ச­யம் எடு­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">குறிப்­பாக மக்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய செய்­தி­களை பிற செய்­தி­க­ளி­டையே மூழ்­க­டிப்­பது மிக­வும் பர­வ­லாக நடப்­ப­தைக் காண­லாம். உல­கெங்­குமே இந்த ஊட­கப் பெருக்­கத்­தால், அவற்­றின் மீதான கட்­டுப்­பாட்­டால், அவற்றை இயக்­கும் ஆதிக்க சக்­தி­க­ளால் அர­சி­யல் இயக்­கங்­கள், கட்­சி­கள் பெரும் நெருக்­க­டி­க­ளைச் சந்­திக்­கின்­றன. ஏனெ­னில் ஆதிக்க சக்­தி­க­ளின் ஊடக வலைப்­பின்­னலை மீறி மக்­க­ளி­டையே செய்­தி­களை, கருத்­துக்­களை எடுத்­துச் செல்­வது பெரும் சவா­லாக மாறி வரு­கி­றது. ஊட­கங்­கள் பெரு­கப் பெருக அவற்றை ஆதிக்க சக்­தி­களே ஆயு­தங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­து­வ­தைப் பார்க்க முடி­கி­றது. எலன் மஸ்க் டிவிட்­டரை கைப்­பற்றி எக்ஸ் என்று மாற்­றி­ய­தைக் கருத்­தில் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.6">மக்­கள் திர­ளுக்கு மதிப்­பி­ருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இரு­பத்­தோ­ராம் நூற்­றாண்­டின் துவக்­கம் பல முக்­கி­ய­மான ஊட­கக் காட்­சி­க­ளைக் கொண்­டது. செப்­டம்­பர் 11, 2001-ஆம் ஆண்டு கடத்­தப்­பட்ட இரண்டு விமா­னங்­கள் நியூ­யார்க் நக­ரின் இரட்­டைக் கோபு­ரங்­க­ளில் மோதி அவற்­றைத் தகர்ந்து விழச் செய்­யும் காட்சி உல­கெங்­கும் பர­வி­யது. அல் கொய்தா என்ற அரபு முஸ்­லீம் தீவி­ர­வாத அமைப்­பி­னர்­தான் இந்­தத் தாக்­கு­தலை நட த்தினர் என்று தெரிய வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இத­னைத் தொடர்ந்து அமெ­ரிக்கா அல் கொய்­தா­விற்கு நெருக்­க­மான தாலி­பான்­கள் ஆட்சி செய்த ஆப்­கா­னிஸ்­தான் மீது போர் தொடுத்­தது. தாலி­பான்­கள் ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­ட­னர். அல் கொய்தா தலை­வர் ஒசாமா பின் லேடன் தலை­ம­றை­வா­னார். பத்­தாண்­டு­க­ளுக்­குப் பின் கராச்­சி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டார். ஆனால் இந்த நிகழ்­வு­க­ளுக்­குப் பின்­னால் அடங்­கி­யுள்ள சர்­வ­தேச ஆதிக்­கப் போட்­டி­யின் விவ­ரங்­கள் ஊட­கங்­க­ளால் கூறப்­ப­டு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">ஆப்­கான் மீது போர் தொடுத்­த­தையே அமெ­ரிக்­கா­வில் கற்­ற­றிந்த மக்­கள், குடி­மைச் சமூக சிந்­த­னை­யா­ளர்­கள் கடு­மை­யாக எதிர்த்­த­னர். ஆனால் கூட இரட்­டைக் கோபு­ரத் தாக்­கு­தல் ஏற்­ப­டுத்­திய பாதிப் ­பில் கணி­ச­மா­னோர் ஆத­ரிக்­க­வும் செய்­த­னர். ஆப்­கன் மீது படை­யெ­டுத்­த­தால் நீண்ட கால நோக்­கில் என்ன பயன் என்று இன்­றைக்கு சிந்­தித்­துப் பார்த்­தால் வியப்­பாக இருக்­கும். ஏனெ­னில் அங்கே மீண்­டும் தாலி­பான்­தான் இப்­போது ஆட்சி செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">ஆனால் ஆப்­கன் போரை­விட முக்­கி­ய­மான நிகழ்வு அதன் பிறகு நடந்­த­து­தான். போர் ருசி கண்ட அமெ­ரிக்கா ஈராக்­கின் சதாம் ஹுசைன் பயங்­கர ஆயு­தங்­களை தயா­ரிக்­கி­றார் என்று கூறி­யது. அவர் மீது ஏகப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் பரப்­பப்­பட்டு அவரை பெரும் தீய சக்­தி­யாக ஊட­கங்­கள் அனைத்­தும் ஒரே குர­லில் வர்­ணித்­தன. இத­னைத் தொடர்ந்து ஈரான் மீது போர் தொடுக்க அமெ­ரிக்­கா­வும், இங்­கி­லாந்­தும் ஆயத்­த­மா­யின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">அப்­போ­து­தான் அமெ­ரிக்­கா­வி­லும், பிற ஐரோப்­பிய நாடு­க­ளில் மக்­கள் பெரு­ம­ள­வில் போருக்கு எதி­ரான இயக்­கங்­க­ளைத் தொடங்­கி­னார்­கள். பிப்­ர­வரி 15, 2003 உலக வர­லாற்­றில் மிக முக்­கி­ய­மான நாள். ஏனெ­னில் அன்­றைய தினம் நியூ­யார்க், லண்­டன், ரோம், பாரிஸ் என ஏரா­ள­மான மேற்­கத்­திய நாடு­க­ளின் முக்­கிய நக­ரங்­க­ளில் இலட்­சக் கணக்­கான மக்­கள் போருக்கு எதி­ராக பிரம்­மாண்­ட­மான பேரணி நடத்­தி­னார்­கள். நியூ­யார்க்­கில் கலந்து கொண்ட பல இலட்­சம் மக்­க­ளு­டன் நானும், நண்­பர்­க­ளும் பேர­ணி­யில் பங்­கேற்­றோம். அத­னைப் போன்ற மக்­கள் வெள்­ளத்­தைக் கண்­ட­தில்லை என்­ப­து­டன் எத்­த­னையோ வண்­ணப் பதா­கை­களை போருக்கு எதி­ராக எழுதி, வரைந்து அனை­வ­ரும் ஏந்தி வந்­த­னர். உய­ர­மான கட்­டி­டங்­க­ளி­லி­ருந்து மக்­கள் வண்­ணக் காகி­தத் தூண்­டு­களை மலர்­கள் போல ஊர்­வ­லத்­தி­னர் மீது தூவி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">எல்லா வர­லாற்று சிறப்பு மிக்க மேற்­கத்­திய தலை­ந­க­ரங்­க­ளி­லும் வர­லாறு காணாத மக்­கள் திரள்­கள் போருக்கு எதி­ராக முழக்­க­மிட்­டன. ஆனால் இவ்­வ­ளவு பெரிய நிகழ்வை ஊட­கங்­கள் முதன்­மைப் 
­ப­டுத்­த­வில்லை. அர­சாங்­கம் சதாம் ஹூசைன் மீது கூறிய குற்­றச்­சாட்­டு­க­ளுக்கே முக்­கி­யத்­து­வம் அளித்­தன. இத்­தனை ஊர்­வ­லங்­க­ளும் நடந்து ஒரு மாதத்­தில் அமெ­ரிக்கா பிற மேற்­கத்­திய நாடு­கள் துணை­யு­டன்  ஈராக் மீது போர் தொடுத்­தது. கைப்­பற்­றி­யது. சதாம்   ஹூசைனை தூக்­கி­லிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இஸ்­ரேல் காஸா­வி­லும், வெஸ்ட் பாங்­கி­லும் பாலஸ்­தீ­னி­யர்­களை தன்­னிஷ்­டத்­திற்கு ஒடுக்­கி­ய­து­டன், அவர்­களை மானா­வா­ரி­யா­கக் கொன்று குவிக்­க­வும் தயங்­க­வில்லை. அமெ­ரிக்கா இதற்­கெல்­லாம் ஆத­ர­வா­கவே இருந்­தது. இப்­போது ஈரா­னின் மீது போர் தொடுத்­துள்­ளது. அமெ­ரிக்க அதி­பர் டொனால்ட் டிரம்­பிற்கு எதி­ராக மக்­கள் எவ்­வ­ளவு போரா­டி­னா­லும் எடு­ப­டு­வ­தில்லை. அவர் மனம்­போ­ன­படி செயல்­ப­டு­கி­றார்; பேசு­கி­றார். அமெ­ரிக்க மக்­க­ளாட்சி பெரும் சீர­ழி­வைச் சந்­தித்­துள்­ளது. ஊட­கங்­கள் செய­லற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.6">அச்சு ஊட­கம் உரு­வாக்­கி­யதே மக்­க­ளாட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">நவீன மக்­க­ளாட்சி உரு­வா­ன­தற்­குக் கார­ணமே அச்சு ஊட­கம்­தான் என­லாம். அப்­ப­டி­யொன்று உரு­வா­கி­யி­ரா­விட்­டால் ஒட்­டு­மொத்­த­மாக ஒரு நாட்­டின் நிகழ்­வு­களை அனை­வ­ரும் அறிந்­து­கொள்­ளும் வசதி, பல்­வேறு கருத்­துக்­களை பகிர்ந்து கொண்டு விவா­திக்­கும் வசதி போன்­றவை தோன்­றி­யி­ருக்­காது. குடி­ய­ரசு என்­னும் சட்­டத்­தின் ஆட்­சியை செயல்­ப­டுத்தி மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் அரசு உரு­வா­ன­தும், அப்­படி பிர­தி­நி­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் மக்­கள் ஒரு தேசத்­தி­ன­ராக வரை­ய­றுக்­கப்­பட்­ட­தும் அச்சு ஊட­கங்­கள் அந்­தந்த மக்­கள் பேசும் மொழி­க­ளில் தோன்­றி­யி­ருக்­கா­விட்­டால் சாத்­தி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">அப்­படி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">ஊட­கங்­கள் உரு­வாக்­கிய பொது­மன்­றம் முத­லில் பல்­வேறு சிந்­த­னை­க­ளுக்­கும் இட­ம­ளிப்­ப­தாக இருந்­தது. உல­கெங்­கும் முற்­போக்கு இயக்­கங்­கள், கால­னீய எதிர்ப்பு தேசிய இயக்­கங்­கள் எல்­லாமே அச்சு ஊட­கத்­தின் துணை கொண்­டு­தான் மக்­களை அணி­தி­ரட்­டின. உதா­ர­ண­மாக காந்தி இந்­தி­யன் ஒப்­பீ­னி­யன், யங் இந்­தியா என்ற ஆங்­கில ஏடு­க­ளை­யும். நவ­ஜீ­வன், ஹரி­ஜன் ஆகிய இந்தி மொழி ஏடு­க­ளை­யும் நடத்­தி­னார். அவர் கருத்­துக்­களை அந்த ஏடு­கள் தாங்கி வந்­தன. இது போல பல்­வேறு தலை­வர்­க­ளும் பத்­தி­ரி­கை­க­ளும், ஏடு­க­ளும் நடத்­தியே அர­சி­யல் அணி­தி­ரட்­டலை மேற்­கொண்­டார்­கள். பெரி­யா­ரின் குடி அரசு, பகுத்­த­றிவு, விடு­தலை, அறி­ஞர் அண்ணா துவங்­கிய திரா­விட நாடு, கலை­ஞர் துவங்­கிய முர­சொலி ஆகி­யவை இல்­லா­மல் திரா­விட இயக்­கத்தை சிந்­தித்­துப் பார்க்க இய­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.6">செயற்­கைக்­கோள் தொலைக்­காட்சி வலைப் ­பின்­னல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இரு­ப­தாம் நூற்­றாண்­டின் இறு­திப் பகு­தி­யில் இந்த நிலை மாறத் துவங்­கி­யது. கார­ணம் முத­லீட்­டிய திரட்­சி­யின் வேகம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் வணிக மய­மாக்­கி­யது. ஊட­கங்­க­ளும் பெரு­மு­த­லீட்­டிய வலைப் பின்­ன­லுக்­குள் வந்­தன. அரசு அல்­லது பெரு­மு­த­லீட்­டிய நிறு­வ­னங்­க­ளின் அத­ரவு இல்­லா­மல் ஊட­கங்­கள் செயல்­பட முடி­யாது என்ற நிலை உரு­வா­கி­யது. குறிப்­பாக தொலைக்­காட்சி ஊட­கம் பர­வ­லான பிறகு மக்­க­ளின் கவ­னத்­தைப் பெறு­வது என்­பது பெரும் சவா­லாக மாறி­யுள்­ளது. எல்லா நேர­மும் கேளிக்­கை­க­ளுக்கே முக்­கி­ யத்­து­வம் கொடுப்­ப­தாக சமூ­கம் மாற்­றப்­பட்­டுள்­ள­தால், கருத்­துக்­க­ளுக்கு, சிந்­த­னை­க­ளுக்கு இடம் கொடுப்­பது கடி­ன­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">மக்­க­ளின் கவ­னத்தை ஈர்க்க வேண்­டு­மென்­றால் சுவா­ர­சி­ய­மான செய்­தி­க­ளுக்கே முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும். மக்­க­ளின் சுவா­ர­சி­யம் என்­பது அதீத கற்­ப­னை­களை உள்­ள­டக்­கிய திரைப் 
­ப­டங்­கள், தொலைக்­காட்­சித் தொடர்­கள் ஆகி­ய­வற்­றின் மேல்­தான் உள்­ளது. ஊட­கங்­கள் பணம் ஈட்ட நடி­கர்­க­ளையே எப்­போ­தும் மையப்­ப­டுத்­து­கின்­றன. அச்சு ஊட­கம், தொலைக்­காட்சி ஊட­கம், சமூக ஊட­கம் எல்­லாமே மக்­க­ளின் ஈடு­பாடு என்­ப­தைக் கட்­ட­மைப்­ப­தி­லேயே மையம் கொள்­கின்­றன. ஈடு­பாடே வணி­கம்; முத­லீட்­டிய திரட்சி, அதி­கா­ரத் திரட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.6">பெரு­மு­த­லீட்­டிய சக்­தி­கள் நிர்­ண­யிக்­கும் 
ஊடக வெளி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">பெரு­மு­த­லீட்­டிய சக்­தி­கள் தங்­க­ளுக்­குச் சாத­க­மான அர­சாங்­கங்­களை உரு­வாக்க நினைக்­கி ன்­றன. அர­சி­யல் கட்­சி­கள் வெகு­மக்­க­ளுக்­கும், முத­லீட்­டிய சக்­தி­க­ளுக்­கும் இடை­யி­லான பேரங்­க­ளின் வடி­வ­மாக உள்­ளன. மக்­கள் வாழ்வை மேம்­ப­டுத்­தி­னால்­தான் அவர்­க­ளது ஆத­ரவை கட்­சி­கள் பெற­மு­டி­யும். தேர்­தல்­க­ளில் வெல்லமுடி­யும். ஆனால் முத­லீட்­டிய சக்­தி­க­ளுக்கு இசை­வாக இருந்­தால்­தான் அவர்­கள் ஆத­ர­வைப் பெற முடி­யும்; பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வழி வகுக்­கும் ஆட்சி நடத்த முடி­யும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இந்த நிலை­யில் மக்­கள் ஆத­ரவை அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஊட­கங்­கள் வழி­யாக திரட்­டிக் கொடுக்க முத­லீட்­டிய சக்­தி­கள் களம் இறங்­கு­கின்­றன. அவையே விளம்­ப­ரங்­கள் வழி­யா­க­வும், நேர­டி­யாக ஊட­கங்­களை விலைக்கு வாங்­கி­யும், அவர்­களே ஊடக நிறு­வ­னங்­க­ளைத் துவங்­கி­யும் ஊட­கங்­களை தங்­கள் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வரு­கி­றார்­கள். என்.டி.டி.வி. நிறு­வ­னத்தை அதானி கைப்­பற்­றி­யது போல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">இந்த நிலை­யில் எந்த அர­சி­யல் கட்­சி­யும், தலை­வ­ரும் முத­லீட்­டிய சக்­தி­கள் ஆத­ரவு இருந்­தால்­தான் மக்­க­ளின் மன­தில் இடம் பெற முடி­யும் என்ற நிலை எழுந்­துள்­ளது. மக்­க­ளி­டம் நேர­டி­யா­கச் சென்று அணி­தி­ரட்­ட­லாம் என்ற சாத்­தி­யம் இருக்­கத்­தான் செய்­கி­றது. ஆனால், இப்­போது மக்­க­ளுக்­கி­டையே செல்­பேசி நுழைந்­து­விட்­ட­தால் சமூ­கம் மேலும் ஊடக மய­மா­கி­விட்­டது. எதி­ரெ­திரே அமர்ந்­துள்ள இளம் வய­தி­னர் செல்­பே­சி­யில் வாட்ஸ் அப் மூலம் தக­வல் பரி­மா­றிக் கொள்­கின்­ற­னர். வாயால் பேசு­வதை மறந்­து­விட்­டார்­களோ என்று வியப்­பாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">அனைத்­தும் பிம்ப மய­மான சமூ­கத்தை சிந்­திப்­பது சவா­லாக இருக்­கி­றது. ஏனெ­னில் பிம்ப மய­மா­வது வணிக மய­மா­வ­தாக மாறி­வி­டு­கி­றது. நிறை­யப் பேர் யூடி­யூ­பில் என் பேச்­சைக் கேட்க வேண்­டு­மென்­றால் நான் சுவா­ர­சி­ய­மா­கப் பேச வேண்­டும். அப்­போது விளம்­ப­ரங்­கள் கிடைக்­கும். அதன் பிறகு அதற்­குத் தகுந்­தாற்­போல என் கருத்­துக்­க­ளை­யும் மாற்­றிக் கொள்­ளத் தோன்­ற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">இப்­ப­டி­யா­கத்­தான் மக்­க­ளாட்சி பெரும் நெருக்­க­டியை சந்­திக்­கி­றது. ஊட­கங்­கள் நிகழ்­வு­களை உரு­வாக்­கு­கின்­றன. நூறு பேர் கூடு­வதை விளம்­ப­ரம் செய்து ஆயி­ரம் பேராக மாற்­று­கின்­றன. ஆயி­ரம் பேர் கூடு­வதை விளம்­ப­ரம் செய்து பத்­தா­யி­ரம் பேராக மாற்­று­கின்­றன. காஞ்­சீ­பு­ரத்­தில் நீருக்­க­டி­ யில் இருக்­கும் அத்­தி­வ­ர­தர் விக்­கி­ர­கத்தை 40 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வெளி­யில் எடுத்து தரி­ச­னத்­திற்கு வைப்­பார்­கள் என்ற உள்­ளூர் நிகழ்வு, ஊடக நிகழ்­வாக மாறி­ய­தில் இலட்­சக் கணக்­கா­ன­வர்­கள் அங்கே கூடத் துவங்­கி­னார்­கள். கூட்­டம் அதி­க­ரிக்க அதி­க­ரிக்க அது மேலும் முக்­கி­ய­மான ஊடக நிகழ்­வாக மாறி­யது. இறு­தி­யில் கூட்­டத்­தில் நெறி­பட்டு சிலர் மர­ண­ம­டைந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.1">ஈராக் போருக்கு எதி­ராக பல இலட்­சம் பேர் கூடி­யதை சிறு நிகழ்­வாக மாற்­றின ஊட­கங்­கள். அதற்கு எந்த அர­சி­யல் முக்­கி­யத்­து­வ­மும் ஏற்­ப­ட­வில்லை. ஆனால் ஒரு நடி­க­ரைக் காண ஐயா­யி­ரம் பேர் கூடு­வ­தைக் கூட பெரு­நி­கழ்­வாக மாற்ற ஊட­கங்­க­ளால் முடி­யும். எந்த நிகழ்­வை­யும் சமூக ஊட­கங்­க­ளில் வைர­லாக்க முடி­யும். மறக்­கச் செய்­ய­வும் முடி­யும். வதந்­தி­களை மின்­னல் வேகத்­தில் பரப்ப முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.6">புரா­ணங்­க­ளில் தேவா­சுர யுத்­தங்­கள் மூவு­ல­கி­லும், அதா­வது பூமி­யி­லும், ஆகா­யத்­தி­லும், பாதா­ளத்­தி­லும் நடப்­ப­தாக கற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கும். அது போல இன்று அர­சி­யல் என்­பது சமூ­கத்­தி­லும், ஊட­கங்­க­ளி­லும், சமூக ஊட­கங்­க­ளி­லும் நடப்­ப­தாக இருக்­கி­றது. கண்­ணுக்­குத் தெரி­யாத மாயா­வி­கள் ஏவி­வி­டும் மாய பிம்­பங்­களை சமா­ளிக்க ஏகப்­பட்ட பகுத்­த­றிவு பாணங்­களை தயா­ரிக்க வேண்­டி­யுள்­ளது. பகுத்­த­றிவே வெல்­லும் என்ற நம்­பிக்­கையை இறு­கப் பற்ற வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>