<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,493,829" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 26 2026 22:13:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260527T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27052026-TRY-04" position.sequence="04" ex-ref="27052026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">இணைய ஆதாயக் குற்றவாளிகள்!</lang>
	</hl1>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup668011_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கோ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வை சிறுமி பலாத்­கா­ரம் செய்து கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தில் த.வெ.க ஆத­ரவு சமூக வலை­தள மாஃபியா தனது கோர முகத்தை இன்­னும் உக்­கி­ர­மாக காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. ’சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைவு‘ என்ற ஒற்றை வாக்­கி­யத்தை வைத்­துக்­கொண்­டு­தான் தமிழ்­நாட்­டில் நடந்த தனி­ந­பர் குற்­றங்­களை­ யெல்­லாம் அர­சாங்­கத்­தின் பொறுப்­பாக்கி விஜய் பிரச்­சா­ரம் செய்­தார். இத்­த­னைக்­கும் எல்­லாக் குற்­றங்­க­ளி­லும் குற்­ற­வாளி ­கள் உட­னுக்­கு­டன் கைது செய்­ய­பட்டு தண்­ட­னை­யும் பெற்­றுத் தரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா பல்­க­லைக்­க­ழக மாணவி பலாத்­கார சம்­ப­வம் ஒரு உதா­ர­ணம். இருந்­தும் தமிழ்­நாட்­டில் பெண்­க­ளுக்கு பாது­காப்பே இல்லை என்ற பொய்யை த.வெ.கவின் டிஜிட்­டல் மாஃபியா இடை­வி­டா­மல் பரப்­பி­யது. அந்­தப் பொய்­பி­ரச்­சா­ரத்­திற்கு பலி­யாகி கணி­ச­மான பெண்­கள் ஒரு பீதி­யு­டன் த.வெ.கவிற்கு வாக்­க­ளித்­தார்­கள். தேர்­த­லில் த.வெ.க வென்­ற­தும் ‘ இப்­போ­து­தான் நாங்­கள் பாது­காப்­பாக இருக்­கி­றோம்’ என சில பெண்­களை பேச­வைத்­துப் பரப்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் கெட்­டிக்­கா­ரன் புளுகு எட்­டு­நாள்­கூட தாங்­க­வில்லை. நெஞ்சை உலுக்­கும் பல­கொ­டூர சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக தமி­ழ­க­மெங்­கும் அரங்­கே­றி­வ­ரு­கின்­றன. ’என்ன கார­ண­ங்கூறி ஆட்­சிக்கு வந்­தீர்­களோ அதே குற்­றங்­கள்­தான் இப்­போ­தும் நடக்­கின்­றன, உங்­கள் பதில் என்ன?’ என்று மக்­கள் கேள்வி எழுப்­பு­கி­றார்­கள். பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தைச் சேர்ந்த­ வர்­கள் கேள்வி எழுப்­பு­கி­றார்­கள். ஆனால் இதற்கு மட்­டு­மல்ல எதற்­குமே முத­ல­மைச்­சர் பதில் அளிக்க மாட்­டார். அமைச்­ச­ரி­டம் கேள்வி கேட்­டால் கேமிரா முன் வாய் மூடிச் சிரிப்­பார். காவல்­துறை அதி­கா­ரி­கள் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே  வாய்­விட்­டுச் சிரிப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் கடந்த காலத்­தில் த.வெ.க இழைத்த கரூர் நெரி­சல் மர­ணங்­கள் போன்ற குற்­றங் ­களை­யெல்­லாம் தி.மு.க. மேல் திசைதிருப்பி ருசி­கண்ட சமூக வலை­தள நாசகார கும்­பல் ஆட்­சிக்கு வந்­த­பின்­னும் அதே உத்­தி­யைக் கையாண்டு மக்­களை திசை திருப்­பும் முயற்சி­யில் இறங்­கி­யி­ருக்­கி­றது. இந்த முறை தி.மு.க. மீது  மட்­டு­மல்ல, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின்­மீ­தும் தன் கோரப்­பற்­களை நீட்­டத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. எந்த போலி நாட­கங்­கள்­மூ­லம் ஆட்­சிக்கு வந்­தார்­களோ அதே போலி நாட­கங்­கள் ­மூ­லம் தங்­க­ளது கையா­லா­காத அரசை காப்­பாற்­றி­வி­ட­லாம் என்று நம்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொல்­லப்­பட்ட கோவைச் சிறு­மி­யின் அம்­மா­வின் ஒழுக்­கத்தை கேள்­விக்­குள்­ளாக்கி அவர்­தான் இந்­தக் குற்­றத்­திற்கு கார­ணம் 
என்­ப­து ­போன்ற காணொ­ளி­களை பரப்பி வரு­கி­றார்­கள். இன்­னொரு புறம் குற்­றம் இழைத்த நபரை  தி.மு.கவோட சம்­பந்­தப்­ப­டுத்த முயற்­சிக்­கும் போலிக் காணொ­ளி­கள். அதே சம­யம் சிறு­மி­யின் மர­ணம் தொடர்­பாக செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் காவல்­துறை அதி­கா­ரி­கள் சிரிக்­கும் காணொளி வெளி­வந்­தால் அது ஏ.ஐ. காணொளி எனப் பரப்­பு­வது. அதா­வது பொய்யை உண்மை எனக் காட்­டு­வது. உண்­மையை பொய் எனக்­காட்­டு­வது. இதே­தான் ஆரம்­பம்­மு­தல் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எம்.எல்.ஏ.க்களின் போலிக் கல்­விச் சான்­றி­தழ்­கள், ஏற்­க­னவே நடந்­து­கொண்­டி­ருக்­கும் திட்­டங்­களை புதி­தாக அறி­விப்­ப­து­போல ஸ்டிக்­கர் ஒட்­டு­வது, கஜானா காலி என பொய்­சொல்­லி­விட்டு எதிர்ப்பு வந்­த­தும் மறு­நாளே மக­ளி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் மாதாந்­திர தொகை யினை அளிப்­பது, அரசு எந்த அர­சா­ணை­யும்  போடாத பொய் அறி­விப்­பு­களை (அரசு அலு­வ­க­கத்­தில் லஞ்­சம் வாங்­கி­ய­வர்­களை படம் பிடித்­தால் ஒரு இலட்­சம் பரிசு) இன்ஸ்­டா­கி­ரா­மில் பரப்­பு­வது, ’ரீல்ஸ்’க்­காக அத்து மீறி அரசு அலு­வ­ல­ கங்­க­ளி­லும் மருத்­து­வ­ம­னை­யி­லும் சட்­ட­வி­ரோ­த­மாக த. வெ.கவி­னர் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­வது, அமைச்­சர் பெட்­டிக் கடை­யில் போய் ‘ முறுக்­கின் மனுஃ­பாக்­ச­ரிங்க் டேட்’ எனக் கேட்டு அதி­ரடி சோத­னை­யில் ஈடு­பட்டு ’ரீல்ஸ்’ எடுப்­பது, தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்­வர் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே ’ரீல்ஸ்’­­­களை வெளி­யிடு­வது என இந்த இரு­பது நாட்­க­ளில் என்­ன­தான் நடக்­க­வில்லை இந்­தத் தமிழ் நாட்­டில்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­வெட்­டால் தமிழ்­நாடே தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது இதற்­குக் கார­ணம் ’மின் துறை­யில் சில கறுப்பு ஆடு­கள்­தான் கார­ணம்’ என பழியை பிறர்­மேல் போட்டு தப்பி ஓடு­கி­றார்­கள். ஆனால் மின் வெட்டு அன்­றாட வாழ்க்­கையை சீர் குலைக்­கும் கடும் துய­ரம். கரூர் சம்­பவத்­தை­போல இதை­யும் கையா­ள­லாம் என்று திட்­ட­மிட்­டால் மக்­கள் கடும் பதி­லடி கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் இன்­றைய நிலை அர­சாங்­கம் என்ற ஒன்று இருக்­கி­றதா என்­பதே கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கி­றது. எல்­லாத் துறை­க­ளும் முடங்­கிப்­போ­யி­ருக்­கின்­றன. அரசு அதி­கா­ரி­க­ளுக்கு எந்­தத் திசை­யில்செல்­வது என்று தெரி­ய­வில்லை. பல்­வேறு நிழல் அதி­கார மையங்­கள் அரசு எந்­தி­ரத்தை ஆட்­டிப் படைக்­கின்­றன. அமைச்­சர்­க­ளுக்கு அதி­கா­ரி­கள்­மேல் எந்­தச் செல்­வாக்­கும் இல்லை. ஒரு அமைச்­ச­ருக்கு தான் வகிப்­பது சுற்­று­லாத் துறையா சுற்­றுச் ­சூழல்  துறையா என்­ப­து­கூ­டத் தெரி­ய­வில்லை. தொழில்­துறை அமைச்­சர் எதிர்­மறை செய்­தி­கள் மூலம் தன்னை பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தில் குறி­யாக இருக்­கி­றார். முத­லீ­டு­கள் தமிழ்­நாட்டை விட்டு வெளி­யே­றத் தொடங்­கியி­ருக்­கின்­றன. ஆறு­மா­தம் அவ­கா­சம் கொடுத்து விமர்­சிப் ­போம் என்­றார்­கள். அரை மாதத்­தி­லேயே இந்த அர­சின் சாயம் வெளுத்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு புதிய அர­சில் தடு­மாற்­றங்­கள் இருக்­க­லாம். போதா­மை­கள் இருக்­க­லாம். ஆனால் பாதிக்­க­ப்பட்ட மக்­க­ளை­யும் நியா­யம் கேட்­ப­வர்­க­ளை­யும் ‘ கேரக்­டர் அசா­ஷி­னே­சன்’ செய்­வ­தன் மூலமே தாங்­கள் தொடர்ந்து ஆட்சி செய்­ய­லாம் என நினைத்­தால் அதை­விட மூடத்­த­னம் வேறு எது­வும் இல்லை. அன்­றா­டம் பல­பி­ரச்­சி­னை­க­ளில் சிக்­கித் தவிக்­கும் மக்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு பதில் தேவை. அவ­தூ­று­க­ளும் பொய்­க­ளுமே இதற்கு பதில் என்­றால் வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு செய்­யும் துரோ­கம் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சில உட­னடி ஆதா­யங்­க­ளுக்­காக இந்த அரசை தூக்­கிச் சுமப்­ப­வர்­கள் எல்­லா­வற்­றுக்­கும் வாய்­மூடி மெள­ன­மாக இருக்­கி­றார்­கள். இவர்­கள் 
தி.மு.க.வோடு இருந்­த­போது ஏதா­வது பிரச்­சினை வந்­தால் அர­சுக்கு எத்­த­கைய நெருக்­க­டி­க­ளைக் கொடுத்­தார்­கள் என்­பதை நினைத்­துப்­பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. பதில் அளிக்­கும் முத­ல­மைச்­ச­ரி­டம்­தான் கேள்வி கேட்க முடி­யும். இறு­கிய மெள­னத்­தோடு இருப்­ப­வரி­டம் என்ன கேட்க முடி­யும்? அவ­ரது 
ஆட்­சியை காப்­பாற்­றும் திருப்­ப­ணியை மட்­டும் செய்­து­கொண்­டி­ரு­ப்பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.கவின் இந்த சமூக வலை­தள கும்­பல் ஒரு மிகப்­பெ­ரிய சமூக விரோத கும்­ப­லாக வளர்ந்­தி­ருக்­கி­றது. இன்­றைய தக­வல் தொழில் நுட்ப சட்­ட­ப­டியே இவர்­கள் மிகக்­க­டு­மை­யாக தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டிய குற்­றங்­களை செய்து வரு­கி­றார்­கள். நேற்று குழந்­தை­களை பயன்­ப­டுத்தி ஆட்­சிக்கு வந்­தார்­கள். இன்று ஒரு குழந்­தைக்கு நடந்த கொடு­மைக்கு அந்­தக் குழந்­தை­யின் தாயி­னது ஒழுக்­கத்­தைக் கேள்­விக்­குள்ளாக்கி திசை திருப்ப முயற்­சிக்­கி­றார்­கள். த.வெ.க. ஆத­ரவு இணைய மாஃபி­யா­வின் இந்­தக் கொடும் செயல்­கள் தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும், இவர்­கள் சட்­டத்­தின்­முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். இன்ஃப்­ளு­யன்­ஸர்­கள் என்ற பெய­ரில் செயல்­ப­டும் இந்த இணைய கூலிப் ப­டை­யி­னர் ஆதா­யக் கொலை­யா­ளி­களை­வி­ட ஆபத்­தா­ன­வர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>