<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,72,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 26 2026 22:18:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260527T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="27052026-VLR-03" position.sequence="03" ex-ref="27052026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="4">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="29">பேராசிரியர் காதர்மொய்தீனுக்கு – மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு.தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கண்டனம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="29">காங்கிரசாருக்கு காமராஜர் கற்றுக் கொடுத்த அரசியல் இதுதானா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="29">லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்தால்.....</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup674100_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thamimunansar_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சிதம்­ப­ரம், மே 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">‘‘முஸ்லிம் வாக்குகள் என்பதும் முஸ்லிம்லீக் வாக்குகள் என்பதும் வேறு என்பதுகூட தெரியாமல் பேசுவதா?’’ என்று மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்­சித் 
தலை­வர் மு.தமீ­முன் அன்­சாரி எம்.எல்.ஏ. பேராசிரியர் காதர்மொய்தீனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மனி­த­நேய ஜன­நா­யக கட்­சி­யின் தலை­வ­ரும், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தமீ­முன் அன்­சாரி  நேற்று செய்­தி­யா­ளர்­க­ளுக்­கு அளிதித பேட்­டி­ வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் ‘பவர் கட்’ 
அதி­க­மாக இருக்­கி­றதே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமீ­முன் அன்­சாரி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">துறை சார்ந்த அமைச்­ச­கம் கூடு­த­லாக கவ­னம் எடுத்து, எத­னால் பவர் கட் ஆகி­றது என்­பதை ஆராய்ந்து சரி செய்­ய­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதே போன்ற தவ­று­கள் போன முறை நடக்­கும்­போது எவ்­வ­ளவு கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தீர்­கள்?  உங்­க­ளுக்கு வந்­தால் இரத்­தம், மற்­ற­வர்­களுக்கு வந்­தால் தக்­காளி சட்­னியா?  உட­ன­டி­யாக இதை நீங்­கள் சரி செய்ய வேண்­டும். இதே தவ­று­களை கடந்த ஆட்­சி­யி­ன­ரைக் கடு­மை­யாக நீங்­கள் விமர்­ச­னம் செய்­தீர்­கள். சோசி­யல் மீடி­யா­வில் கிண்­டல் செய்­தீர்­கள்.  அந்­தத் துறை அமைச்­ச­ராக இருந்த செந்­தில் பாலாஜி அவர்­களை, ‘அணில்’ என்று சொல்லி நக்­கல் செய்­தீர்­களா, இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஆறு சிலிண்­டர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எப்­போது தரப் போகி­றீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­பொ­ழுது அதே போன்ற பிழை­கள், அதே மாதத்­தில் தானே வரு­கி­றது. இப்­பொ­ழுது இதற்கு என்ன விளக்­கம் கொடுக்­கப் போறீங்க? பெண்­க­ளுக்கு, நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால், மக­ளிர் உரி­மைத் தொகை­யாக  ரூ.2500 கொடுப்­போம் என்று சொன்­னீர்­கள். ஏன் நீங்­கள் கொடுக்­க­வில்லை. தி.மு.க. ஆட்­சி­யில் கொடுக்­கப்­பட்ட 1000 ரூபா­யைத்­தானே கொடுக்­கு­றீர்­கள். அந்த 1000 ரூபாயை நாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் அதி­கப்­ப­டுத்­தித் தரு­வோம் என்று கொடுத்த வாக்­கு­று­தியை ஏன் உங்­க­ளால் செயல்­ப­டுத்த முடி­ய­வில்லை. நடை­மு­றைக்கு ஒத்­து­வ­ராத வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பதை நீங்­கள், இப்­பொ­ழு­தா­வது ஒப்­புக் கொள்­கி­றீர்­களா? ஆண்­டுக்கு ஆறு சிலிண்­டர்­கள் கொடுப்­போம் என்று சொன்­னீர்­களே, எப்­பொ­ழுது கொடுக்­கப் 
போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சி.பி.ஐ., சி.பி.எம்.ல. வி.சி.க. இந்­தக் கட்­சி­கள் எல்­லாம்  வந்து,  குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வந்­து­வி­டக்­கூ­டாது என்ற அடிப்­ப­டை­யி­லும், பா.ஜ.க. வினு­டைய கரம் ஓங்கி விடக்­கூ­டாது என்ற அடிப்­ப­டை­யி­லும் தான் நாங்­கள் ஆத­ரவு கொடுத்­தோம் என்று சொன்­னார்­கள். சி.பி.ஐ., சி.பி.எம். இரண்டு கட்­சி­க­ளும் வெளி­யி­லி­ருந்து ஆத­ரவு என்று சொல்லி, ஒரு முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள்.  அது அந்­தக் கட்­சி­க­ளு­டைய நிலைப்­பாடு. வி.சி.க.வும், ஐ.யு.எம்.எல். கட்­சி­யும்  ஆட்­சி­யில் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­பொ­ழுது நாம் என்ன சுட்­டிக்­காட்­டு­கி­றோம் என்று சொன்­னால், ஒவ்­வொரு கட்­சிக்­கும், என்ன முடி­வெ­டுக்க வேண்­டும் என்­கிற அதி­கா­ரம் எல்­லாம் அந்­தக் கட்­சி­க­ளு­டைய தலைமை நிர்­வா­கத்­துக்கு உண்டு. அந்­தத் தலைமை நிர்­வா­கி­கள் எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் என்ன சொல்­கி­றோம் என்று சொன்­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய உழைப்­பால், வியர்­வை­யால் இந்த வெற்­றி­கள் சாத்­தி­ய­மா­னது என்­பதை நாம் எல்­லோ­ருமே ஒப்­புக்­கொள்ள வேண்­டும். இதே கூட்­ட­ணி­யில்­தான் தொடர்­வோம் என்று சொல்லி இருக்­கி­றீர்­கள். இன்­னொரு பக்­கம், ஆட்­சி­யி­லே­யும் பங்­கெ­டுத்து இருக்­கி­றீர்­கள். இது எதிர்­கா­லத்­தில், இது எத்­த­கைய நகர்வை நோக்­கிச்  செல்­லும் என்று நம்­மால் உறு­தி­யா­கக் கூற முடி­ய­வில்லை. எது எப்­படி இருந்­தா­லும், தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கடந்த அய்ந்து ஆண்டு காலத்­தில் எவ்­வ­ளவு சிறப்­பான ஆட்­சியை நடத்­தி­யது என்­பது எல்­லோ­ருக்­குமே தெரி­யும். அதை யாருமே, அவ்­வ­ளவு எளி­தில் மறந்து போய்­விட முடி­யாது. இப்­போது நீங்­கள் அணி மாறி, ஆட்­சி­யில் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றீர்­கள். எங்­க­ளு­டைய திட்­டங்­கள் எல்­லா­வற்­றை­யும் நீங்­கள் முடங்­கா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டிய கடமை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தள­பதி ஸ்டாலி­னின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சிறப்­பான ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மிகச் சிறப்­பான ஓர் ஆட்­சியை தள­பதி அண்­ணன் ஸ்டாலின் அவர்­கள் கொடுத்­தார்­கள். அந்­தத் திட்­டங்­கள் முடங்­கா­மல் கொண்டு செல்­வ­தற்­கான பணி­களை, நீங்­கள் எல்­லாம் முன்­னெ­டுங்­கள் என்று கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் நீண்ட கால­மாக தி.மு.க. கூட்­ட­ணி­யில் அங்­கம் வகித்த கட்சி. தி.மு.க.வும் பார­திய ஜனதா கட்­சி­யும் கூட்­டணி இருந்த கால­கட்­டத்­தில், அவர்­கள் அந்­தக் கூட்­ட­ணி­ யில் இல்லை. அ.தி.மு.க. கூட்­ட­ணிக்­குப் போனார்­கள். அதற்­குப் பிறகு, தி.மு.க. கூட்­ட­ணிக்கு வந்­த­வர்­களை, தி.மு.க. எப்­போ­துமே பெரிய அள­வில் அவர்­களை மதித்­தி­ருக்­கி­றது. கூட்­ட­ணிப் பேச்சு வார்த்­தை­ யைத் தொடங்­கும்­போது, முதல் கட்­சி­யாக அவர்­க­ளுக்­கு­தான் அழைப்பு கொடுப்­பார்­கள். கூட்­ட­ணி­யில் ஒரு மூத்த தலை­வ­ரா­கத்­தான் பேரா­சி­ரி­யர் காதர் மொகி­தீன் அவர்­களை, தி.மு.க.வினு­டைய தலை­வர் அவர்­கள் மதித்து வந்­தார். எப்­படி அய்யா நல்­ல­கண்­ணுவை மதித்­தார்­களோ, எப்­படி அய்யா சங்­க­ரய்­யாவை மதித்­தார்­களோ, எப்­படி பழ.நெடு­மா­றன் அவர்­களை மதிக்­கி­றார்­களோ, அப்­ப­டித்­தான் அவர்­களை மதித்­தார்­கள். ‘தகை­சால் தமி­ழர்’ என்ற உய­ரிய விரு­தை­யும் கொடுத்து சிறப்­பித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், பேரா­சி­ரி­யர் காதர் மொகி­தீன் அவர்­கள், தங்­கள் கட்­சி­யி­னு­டைய முடிவை  செயல்­ப­டுத்தி இருக்­கி­றார். அந்­தக் கட்­சி­யி­னு­டைய விருப்­பம்; நாங்­கள் அதை குறை சொல்­ல­வில்லை. ஏனென்­றால், ஒவ்­வொரு கட்­சிக்­கும் முடி­வெ­டுக்­கக் கூ­டிய அதி­கா­ரம் உண்டு. அதை, நாம் மட்­டு­மல்ல, கூட்­ட­ணி­யி­னு­டைய தலை­வர் தள­பதி மு.க. ஸ்டாலின் அவர்­கள் கூட சொல்­லி­ருக்­கி­றார்­கள். ஒவ்­வொரு கட்­சிக்­கும், முடி­வெ­டுக்­கக்­கூ­டிய சுதந்­தி­ரம் இருக்­கி­றது, உரிமை இருக்­கி­றது என்று சொல்­லி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், நாம் என்ன சொல்­கி­றோம் என்­றால், நீங்­கள் பிரி­யும் போது, நண்­பர்­க­ளா­கப் பிரிந்து செல்­ல­வேண்­டும். இத்­தனை ஆண்டு காலம் உன்­ன­த­மான இடத்­தில், நம்மை வைத்­தி­ருந்­தார்­கள். நல்ல நட்­பில் இருந்­தோம், தோழ­மை­யில் இருந்­தோம். நாம் வேறு ஒரு அர­சி­யல் முடி­வு­களை மேற்­கொள்­ளும் போது, வேறு ஓர் அர­சி­யல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும்­போது, சங்­க­டம் இல்­லா­மல், காயம் இல்­லா­மல் பிரிந்து செல்­ல­வேண்­டும் என்­கிற அடிப்­படை பண்பு இருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் அதை பேரா­சி­ரி­யர் காதர் மொகி­தீன் அவர்­க­ளு­டைய ஒரு தனி­யார் தொலைக்­காட்சி பேட்டி, உடைத்­தி­ருப்­ப­தாக நான் கரு­து­கி­றேன். மிக­வும் வருந்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">முஸ்­லிம் வாக்­கு­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தி.மு.க. வெற்­றி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேரா­சி­ரி­யர் காதர் மொகி­தீன்  போன்ற பெரிய மனி­தர்­கள், மூத்த அர­சி­ய­லா­ளர்­கள் இப்­படி எல்­லாம் பேச­லாமா? என்ற வருத்­தம் எனக்கு இருக்­கி­றது. அடுத்­தாக, முஸ்­லிம்­க­ளு­டைய வாக்­கு­க­ளால்­தான் தி.மு.க. வெற்றி பெற்­றது என்று சொன்­னார்­கள். நாங்­கள்  ஒரு விஷ­யத்­தைச் சொல்­கி­றோம். முஸ்­லிம் லீக்­கி­னு­டைய வாக்­கு­கள் என்­பது வேறு; முஸ்­லிம்­க­ளு­ டைய வாக்­கு­கள் என்­பது வேறு. இரண்­டுக்­கும் வித்­தி­யா­சம் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முஸ்­லிம்­கள் ஏறத்­தாழ பர­வ­லாக, ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டில் எடுத்­துக்­கொண்­டால், 70% முதல் 80 % வாக்­கு­களை திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தி­னு­டைய தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்­குத்­தான் செலுத்தி இருக்­கி­றார்­கள். ஒரு சில இடங்­க­ளில் அது 10% மாக எதிர்க்­கட்­சிக்­குப் போயி­ருக்­க­லாம். பிற கட்­சி­க­ளுக்கு 20 % அள­வில் போயி­ருக்­க­லாம். சில இடங்­க­ளில் 30 % அள­வில் கூட போயி­ருக்­க­லாம். ஆனால், 70%க்கும் அதி­க­மான வாக்­கு­கள், அது அதி­க­பட்­ச­மாக 80% வரை மொத்­த­மாக தி.மு.க.வுக்­கு ­தான் முஸ்­லிம்­கள் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். இந்த வாக்­கு­கள் முஸ்­லிம் லீக்­கி­னு­டைய வாக்­கு­கள் அல்ல. அதா­வது, கடந்த 15 ஆண்­டு­க­ளாக மோடி அவர்­கள், பிர­த­ம­ராக வந்த பிறகு, அவ­ரு­டைய அர­சி­யல் தீவி­ரம் பெற்ற பிறகு, இந்­தியா முழுக்க இருக்­கக்­கூ­டிய முஸ்­லிம்­கள், ஒவ்­வொரு  மாநி­லத்­தி­லும் தங்­க­ளு­டைய அர­சி­யல் நல­னுக்கு எது உகந்­ததோ, அதற்­கேற்ப முடி­வெ­டுத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உத்­த­ரப் பிர­தே­சம் என்­றால், அகி­லேஷ் யாத­வுக்கு ஓட்டு போடு­வார்­கள், சமாஜ்­வாதி கட்­சிக்கு. பீகார் மாநி­லம் என்­றால், ராஷ்ட்­ரிய ஜனதா தள், தேஜஸ்வி யாத­வுக்குஓட்டு போடு­வார்­கள். மேற்கு வங்­கா­ளம் என்று சொன்­னால், திரி­ணா­முல்  காங்­கி­ரஸ், மம்தா பானர்­ஜிக்கு ஓட்டு போடு­வார்­கள். அதே மாதி­ரி­தான் தமிழ்­நாட்­டில் சி.ஐ.ஏ. போராட்­டம் வந்­த­தற்­குப் பிறகு அல்ல, அதற்கு முன்­பி­ருந்தே நல்ல நட்பு இருக்­கி­றது. குறிப்­பாக சி.ஐ.ஏ. போராட்­டம் வந்­த­தற்­குப் பிறகு, தி.மு.க.தான் சிறு­பான்மை மக்­க­ளுக்­குப் பாது­காப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டி­னு­டைய சமூக ஒற்­று­மைக்கு தி.மு.க.வால்­தான் பாது­காப்­புத் தர முடி­யும் என்ற நம்­பிக்கை சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற கார­ணத்­தி­னால்­தான், 70 % வரை­யில் அதி­க­மான வாக்­கு­களை இந்த முறை­யும் போட்டு இருக்­காங்க. அது பல இடங்­க­ளில் 90 % வரை­யும் போட்டு இருக்­கி­றார்­கள். சில இடங்­க­ளில் 95 % வரை­யும் போட்டு இருக்­கி­றார்­கள். அதற்கு முஸ்­லிம் லீக் கார­ணம் அல்ல என்­ப­தைப் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கூட்­ட­ணியை காயப்­ப­டுத்­தா­தீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்­த­தாக பேரா­சி­ரி­யர் காதர் மொகி­தீன்  அவர்­கள், ஒரு மூத்த அர­சி­ய­லா­ளர். அது­வும் கலை­ஞர் அவர்­க­ளு­டைய குடும்­பத்­துக்கு மிக­வும் நெருக்­க­மாக இருந்­த­வர். அவர் என்ன சொல்­கி­றார் என்­றால், எங்­க­ளு­டைய முடிவை யாரும் விமர்­சிக்­கக் கூடாது. அப்­படி விமர்­சித்­தால், நாங்­க­ளும் அதே மாதிரி விமர்­சிப்­போம் என்று சொல்­லி­யி­ருப்­பது, ஒரு பெரிய மனி­த­ருக்­கான அழ­காக எனக்­குத் தெரி­ய­வில்லை. அடுத்­தது, அவ­ரு­டைய பேட்­டி­யில், ‘‘எங்­களை விமர்­சிப்­பது முட்­டாள்­த­னம், போக்­கி­ரித்­த­னம்’’ என்­பது போன்ற வார்த்­தை­களை அவர் பயன்­ப­டுத்தி இருக்­கி­றார். இது, ஒரு கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­கள் உரு­வாக்­கிய முஸ்­லிம் லீக்­கி­னு­டைய தலை­வர்­கள் பேசக்­கூ­டிய பேச்சா? என்ற ஒரு கேள்­வியை வைக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மீண்­டும் தெளி­வா­கச் சொல்­கி­றோம். நீங்­கள் எந்த அர­சி­யல் முடிவு வேண்­டு­மென்­றா­லும் எடுங்­கள். அது உங்­கள் விருப்­பம். அதற்­காக இந்­தக் கூட்­ட­ணி­யைக் காயப்­ப­டுத்­தி­விட்­டுச் செல்­லா­தீர்­கள். கடந்த காலத்­தில் இருந்த நட்­பை­யும், அவர்­கள் தந்த மரி­யா­தை­யை­யும் சற்று நினைத்­துப் பார்க்க வேண்­டும் என்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாட்­டில் புரட்சி ஒன்று வரு­கி­றது; மாற்­றம் ஒன்று வரு­கி­றது என்­றால், அது ஆக்­கப்­பூர்­வ­மான அடிப்­ப­டை­யில் வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சோசி­யல் மீடி­யாவை மட்­டுமே நம்பி, எந்த ஒரு மாற்­ற­மும் வந்­து­வி­டும் என்று சொல்லி, நம்­பு­வதை முழு­மை­யாக ஏற்­க­வும் முடி­ய­வில்லை; நிரா­க­ரிக்­க­வும் முடி­ய­வில்லை.  நான் என்ன சொல்­கி­றேன் என்­றால்,  ஊழ­லுக்கு எதி­ரான செயல் திட்­டங்­கள், விரை­வான அரசு நட­வ­டிக்­கை­கள், வேலை­வாய்ப்­புப் பிரச்­சி­னை­களை தீர்த்­தல், பொரு­ளா­தார முன்­னேற்­றம் – இப்­ப­டிப்­பட்ட குறிக்­கோள்­களை மய்­ய­மாக வைத்து ஒரு புரட்சி ஏற்­பட்­டது என்­றால், அந்­தப் புரட்­சியை நாம் வர­வேற்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், அர­சி­யல் விவ­ரம் புரி­யா­த­வர்­கள் எல்­லாம் சோசி­யல் மீடி­யா­வில் எழுதி, அதன் மூல­மாக ஒரு மாற்­றத்தை உரு­வாக்­கப் போகி­றோம் என்­பது எந்த அள­வுக்கு விடை­யைத் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன், மக்­க­ளி­டம் புரட்­சி­க­ர­மான சிந்­தனை ஏதா­வது ஏற்­பட்­டி­ருக்­கி­றதா? நான்  வெளிப்­ப­டை­யா­கச் சொல்­கி­றேன், கடந்த தேர்­த­லில் என்ன நடந்­தது? எங்­க­ளு­டைய பேரப்­பிள்­ளை­கள் சொல்­லிட்­டார்­கள், எங்­கள் பிள்­ளை­கள் சொல்­லிட்­டார்­கள்; அத­னால், நாங்­கள் ஒரு ஓட்­டுப் போட்­டோம்; இப்­படி ஓர் ஆட்­சியே மாறும் என்று  நாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை என்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு தரப்­பைப் பார்த்து மக்­கள் கேட்­கி­றார்­கள், ‘‘ஏம்பா உதய சூரி­யன் காரர்­க­ளி­ட­மும் நீங்­கள் பணத்தை வாங்கி விட்­டீர்­கள், ஓட்­டுக்கு; இரட்டை இலைக்­கா­ரங்­க­ளி­ட­மும் பணத்தை வாங்கி விட்­டீர்­கள். இரண்டு பேரி­ட­மும் பணத்தை வாங்­கிக் கொண்டு. மூன்­றா­வது ஆளுக்கு ஓட்­டுப் போட்­ட­தற்­குப் பெயர் என்­னப்பா? இது என்ன நேர்மை? என்று கேட்­கி­றார்­கள். இந்த விவா­தங்­கள் எல்­லாம்  விவா­திக்­கப்­பட வேண்­டுமா, இல்­லையா? அப்­ப­டி­யென்­றால், புரட்சி என்­பது 100 சத­வி­கி­தம் நியா­யத்­தின் அடிப்­ப­டை­யி­லும், ஒழுக்­கத்­தின் அடிப்­ப­டை­யி­லும் அமை­யப்­பட வேண்­டும். மாற்­றம் என்­ப­தும், ஜன­நா­யக தன்­மை­யோடு நகர்த்­தப்­பட வேண்­டும். ஜன­நா­யக தன்­மை­யும், ஒழுக்­க­மும் இல்­லாத எந்த மாற்­ற­மும், புரட்­சி­யும் நீண்ட காலம் தாக்­குப் பிடிக்­காது. அத­னால், இந்­தக் காக்­ரோச் ஜனதா பார்ட்டி இவை எல்­லாமே  ஒரு நாள் செய்­தி­க­ளாக, ஒரு வார செய்­தி­க­ளாக இருக்­கும். நீண்ட கால மாற்­றத்­துக்கு இவை­யெல்­லாம் உத­வாது என்று நான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">காம­ரா­ஜர் கற்­றுத் தந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அர­சி­யல்  இது­தானா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">10 ஆண்டு கால­மாக தி.மு.க. கூட்­ட­ணி­யில் இருந்த காங்­கி­ரஸ் கட்சி, இப்­போது தி.மு.க.வை கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­கி­றதே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமீ­முன் அன்­சாரி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சோத­னை­யான கால­கட்­டங்­களில் எல்­லாம் காங்­கி­ரஸ் கட்­சிக்­குத் துணை­யாக நின்­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அதை காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் யாரா­வது மறுப்­பார்­களா? அண்­ணன் ராகுல் காந்தி மறுப்­பாரா? அன்னை சோனியா காந்தி மறுப்­பார்­களா? இங்கே இருக்­கக்­கூ­டிய அய்யா ப.சிதம்­ப­ரம் போன்ற மூத்த அர­சி­யல் தலை­வர்­கள் மறுப்­பார்­களா?  உங்­க­ளுக்கு உண்­மை­யி­லேயே  தி.மு.க.வின் மீது கசப்பு இருந்­தி­ருந்­தால், கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லேயே உறவை முறித்­துக் கொண்டு போயி­ருக்க வேண்­டும். அல்­லது இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உங்­கள் உறவை முறித்­துக் கொண்டு போயி­ருக்க வேண்­டும். இப்­போது நீங்­கள் நடந்து கொண்ட அர­சி­யல் அணு­கு­மு­றை­கள் 
மக்­க­ளால் ரசிக்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றத் தேர்­த­லில், 28 சீட்­டு­க­ளைக் கேட்­டுப் பெற்­றீர்­கள். ஒரு மாநி­லங்­க­ள­வைச் சீட்­டைக் கேட்டு பெற்­றீர்­கள். வெற்றி பெற்ற பிறகு, தங்­க­ளுக்­கா­கத் தேர்­த­லில் செலவு செய்த, தங்­க­ளுக்­காக 28 தொகு­தி­க­ளி­லும் கடு­மை­யா­கப் பாடு­பட்ட தி.மு.க.வினு­டைய தொண்­டர்­க­ளைத் திருப்தி படுத்­தும் வித­மாக, அந்­தத் தலை­வ­ரி­டம் ஒரு வார்த்தை நன்­றி­யைச் சொல்­லிட்டு, ‘ஒரு புதிய அர­சி­யல் சூழல் உரு­வாகி இருக்­கி­றது. எங்­கள் தொண்­டர்­கள் இப்­படி விரும்­பு­கி­றார்­கள். எங்­கள் கட்­சித் தலை­வர்­கள் இப்­படி விரும்­பு­கி­றார்­கள். நாங்­கள் அந்­தக் கூட்­ட­ணிக்­குப் போகி­றோம் என்­பதை பண்­பா­டா­கச் சொல்­லிட்டு போயி­ருந்­தீர்­கள் என்­றால், நாங்­களே உங்­க­ளுக்­குச் சால்வை போர்த்தி வாழ்த்தி இருப்­போம். சரி, பிரி­யும் போது கூட, நண்­பர்­க­ளா­கப் போகி­றார்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், எப்­பொ­ழுது, இப்­ப­டிப்­பட்ட ஒரு முடிவு வரும் என்று காத்­தி­ருந்­தது போல­வும், இத்­தனை ஆண்­டு­கள் வேண்டா வெறுப்­பாக இருந்து நடித்­துக் கொண்­டி­ருந்­தது போல­வும், உட­ன­டி­யாக சத்­தி­ய­மூர்த்தி பவ­னில், ராகுல் காந்தி அவர்­க­ளு­டைய படத்­தை­யும், விஜ­யி­னு­டைய படத்­தை­யும் வைத்து நீங்­கள் ஆட்­டம் போட்­டீங்­களே, இதெல்­லாம் நல்ல அர­சி­யலா? இது­தான் காம­ரா­ஜர் கற்­றுக் கொடுத்த அர­சி­யலா? இது­தான் கக்­கன் கற்­றுக் கொடுத்த அர­சி­யலா? இப்­ப­டிப்­பட்ட ஒரு பண்­பாட்டு வீழ்ச்­சிக்கு நீங்­கள் போய்­விட்­டீர்­கள்.  இப்­பொ­ழுது நீங்­கள் தி.மு.க.வை விமர்­சிக்­கி­றீர்­கள் என்று சொன்­னால், அது எந்­த­வி­தத்­தில் நியா­ய­மாக இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத்­தனை ஆண்டு காலம் தி.மு.க.வைச் சுற்­றியே வந்­தீர்­கள்; அறி­வா­ல­யத்தை சுற்­றியே வந்­தீர்­கள்; தி.மு.க.வினு­டைய நிர்­வா­கி­க­ளோடு கொஞ்சி குலா­வி­னீர்­கள்.  இப்­படி எல்­லாம் செய்­து­விட்டு, ஒரே மாதத்­தில் நீங்­கள் மாற்­றிப் பேசு­கி­றீர்­கள் என்­றால், இது என்ன அர­சி­யல் அறம்? என்று எனக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சத்­தி­ய­மூர்த்தி பவ­னில் இருக்­கக்­கூ­டிய பல தலை­வர்­க­ளு­டைய படங்­க­ளைப் பார்க்­கி­றோம். பல தலை­வர்­க­ளு­டைய உன்­ன­த­மான கருத்­து­க­ளைக் கேட்டு பெற்ற காங்­கி­ரஸ்­கா­ரர்­கள்­தான் இப்­ப­டி­யெல்­லாம் பேசு­கி­றார்­களா என்று எனக்கு சந்­தே­க­மாக இருக்­கி­றது. சங்­க­ட­மா­க­வும் இருக்­கி­றது. நாளைக்கு முகம் பார்க்க வேண்­டும். அர­சி­ய­லில் இதே நிலை தொட­ரும் என்று சொல்ல முடி­யாது. நீங்­கள் நிச்­ச­ய­மாக என்­றா­வது ஒரு நாள் அறி­வா­ல­யத்­தின் பக்­கம் திரும்­பித்­தான் பார்ப்­பீர்­கள். அப்­பொ­ழுது திரும்­பிப் பார்க்­கும்­போது, தி.மு.க. தலை­வ­ரு­டைய முகத்­தைப் பார்க்க வேண்­டும், சந்­திக்க வேண்­டும் என்­பதை மன­தில் வைத்­துப் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">டெல்லி தீய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சக்­தி­க­ளின் விருப்­பம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் திரா­வி­டக் கட்­சி­களை அழிக்­க­வேண்­டும் என்­பது டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய சில தீய சக்­தி­க­ளு­டைய விருப்­பம், கனவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">‘‘கழ­கங்­கள் இல்­லாத தமிழ்­நாடு; கவ­லை­கள் இல்­லாத தமிழ்­நாடு’’ என்று ஒரு கோரிக்கை வைத்­தார்­கள். அதற்கு முதல் பலி அண்ணா தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அண்ணா தி.மு.க.வை, மரி­யா­தைக்­கு­ரிய மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா அம்மா அவர்­கள் மறைந்த பிறகு, அந்­தக் கட்­சியை எப்­படி எல்­லாம் உடைத்து நொறுக்­கி­யது யார் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும்.  பல தலை­வர்­களை வெளி­யேற்­றி­யது யார் என்­றும் உங்­க­ளுக்­குத் தெரி­யும். வெளி­யேற்­றிய தலை­வர்­களை அழைத்து வைத்து, பஞ்­சா­யத்து செய்­த­வர்­கள் யார்? என்­ப­தும் தெரி­யும். இன்­றைக்கு அண்ணா தி.மு.க.வை பிள­வுப்­ப­டுத்­தி­ னார்­கள். இப்­பொ­ழுது என்ன செய்­கி­றார்­கள் தெரி­யுமா? தி.மு.க.வை தனி­மைப்­ப­டுத்த நினைக் 
கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் நாங்­கள் சொல்­லக்­கூ­டிய ஒரு முக்­கி­ய­மான செய்தி, தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் தி.மு.க. தனி­மைப்­ப­டு­வதோ, அண்ணா தி.மு.க. பிள­வு­ப­டு­வதோ நல்­ல­தல்ல. சண்­டையோ, சச்­ச­ரவோ தமிழ்­நாட்டை, ஒன்று தி.மு.க. ஆள வேண்­டும் அல்­லது அண்ணா தி.மு.க. ஆள வேண்­டும். இந்த இரண்டு திரா­வி­டக் கட்­சி­க­ளுக்­குத் தான் அனு­ப­வங்­கள் இருக்­கின்­றன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க.. கொள்­கை­களை அழுத்­த­மா­கப் பேசும், ஆழ­மாக பேசும். அண்ணா தி.மு.க. அந்த அள­வுக்கு அழுத்­த­மாக, ஆழ­மா­கப் பேசா­விட்­டா­லும், அதைச் சார்ந்து செல்­லும். ஆனால் இரண்டு திரா­வி­டக் கட்­சி­க­ளை­யும் ஒழிக்க வேண்­டும் என்­ப­தில், சில தீய சக்­தி­கள் ரொம்ப விருப்­பத்­தோடு இருக்­கி­றார்­கள். அதற்கு நாம் யாரும் இடம் கொடுத்துவிடக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்­குத் தி.மு.க.வை தனி­மைப்­ப­டுத்த நினைக்­கி­றார்­கள். எழுதி வைத்­துக் கொள்­ளுங்­கள், இந்த நேரத்­தில் தி.மு.க.வைப் பாது­காப்­பது, ஜன­நா­யக சக்­தி­க­ளு­டைய கடமை என்றுநினைக்­கி­றோம். இந்த நெருக்­க­டி­யான நேரத்­தில், எங்­க­ளு­டைய மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி, தி.மு.க.வோடு தான் இருக்­கி­றது. தி.மு.க. மீண்­டும் பலம் பெறு­கின்ற வரை, தி.மு.க.வுக்கு ஆத­ர­வா­கத்­தான் நாங்­கள் இருப்­போம். ஏனென்று சொன்­னால், தி.மு.க. ஒழிக்க வேண்­டும் என்று  சில பேர் நினைக்­கி­றார்­கள். இந்த நேரத்­தில், தி.மு.க. தமிழ்­நாட்­டி­னு­டைய நல­னுக்­கா­கப் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று சொல்லி, அதை நாங்­கள் விரும்­பு­கி­றோம். அத­னால், தமிழ்­நாட்டு மக்­கள் இந்த அர­சி­ய­லைத் தெளி­வா­கப் புரிந்து கொண்டு, சில முடி­வு­கள் எடுக்க வேண்­டும் என்று அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜன­நா­யக சக்­தி­கள் 
பிளவு படக்­கூ­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலைமை தடு­மா­று­கி­றது. அத­னால், வி.சி.க.வில் இருந்து வில­கு­கி­றேன் என்று  பனை­யூர் பாபு வில­கி­யி­ருக்­கி­றாரே, அதை நீங்­கள் எப்­படி பார்க்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமீ­முன் அன்­சாரி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விடு­த­லைச் சிறுத்­தை­கள் எங்­க­ளு­டைய தோழ­மை­யில், தேர்­தல் வரை இருந்த இயக்­கம். இப்­போது கூட அவர்­கள் வேறு முடிவு எடுத்­தா­லும், நாங்­கள் தி.மு.க.வோடு நட்பு தொட­ரும் என்று சொல்லி இருக்­கி­றார்­கள். காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளைப் போல ஒரு கடு­மை­யான, பிழை­யான அணு­கு­மு­றை­களை அவர்­கள் மேற்­கொள்­ள­வில்லை. இப்­போ­தும் சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., ஐ.யூ.எம்.எல். எல்­லா­வற்­றை­யும் நாங்­கள் நட்பு சக்­தி­க­ளா­கத்­தான் பார்க்­கி­றோம். தமிழ்­நாட்­டில் ஜன­நா­யக சக்­தி­கள் பிள­வு­ப­டு­வதை நாங்­கள் விரும்­ப­வில்லை. நாங்­கள் என்ன சொன்­னோம்? அண்ணா தி.மு.க. பிள­வு­ப­டு­வதை விரும்­ப­வில்லை என்று சொன்­னோம். அதே­போ­லத்­தான் வி.சி.க. பிள­வு­ப­டு­ வ­தையோ, அங்கே சச்­ச­ர­வு­கள் உரு­வா­வதை நாங்­கள் விரும்­ப­வில்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால், பாட்­டாளி மக்­கள் கட்சி பிள­வு­ப­டு­வ­தையே நாங்­கள் விரும்­ப­வில்லை. அது வேறு அர­சி­யல் அணி­யில் இருந்­தா­லும், அது ஒரு சமூக நீதிக் கட்சி. ஜாதி­வாரி கணக்­கெ­டுப்­புக்­காக போரா­டக்­கூ­டிய கட்சி. பூரண மது­வி­லக்­குக்­கா­கப் போரா­டக்­கூ­டிய கட்சி, தமிழ்­நாட்­டி­னு­டைய, தமி­ழர்­க­ளு­டைய நல­னுக்­காக போரா­டிய கட்சி. நாங்­கள் வேறு அணி­யில் இருந்­தா­லும், பா.ம.க. பிளவு படக் கூடாது என்று நாங்­கள்  நினைத்­தோம். அதே மாதி­ரி­தான் இப்­பொ­ழுது வி.சி.க.வும் பிளவு படக் கூடாது என்று நினைக்­கி­றோம். அண்ணா தி.மு.க.வும் பிளவு படக் கூடாது என்று நினைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏனென்­றால், இவர்­கள் எல்­லா­ருமே, நாங்­கள் அர­சி­ய­லில் வெவ்­வேறு அணி­க­ளாக இருக்­க­லாம். வெவ்­வேறு நிலை­க­ளைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­லாம். ஆனால், இவர்­கள் எல்­லாம் ஜன­நா­ய­கச் சக்­தி­கள். தமிழ்­நாட்­டி­னு­டைய வாழ்­வு­ரி­மை­களை, தமிழ்­நாட்­டி­னு­டைய நலனை விட்­டுக் கொடுக்­காத கட்­சி­கள். இவர்­கள் எல்­லாம் பல­கீ­னப்­பட்­டார்­கள் என்­றால், டில்­லி­யில் இருக்­கக்­கூ­டிய தீய சக்­தி­கள் பலம் பெற்று விடு­வார்­கள். அத­னால்­தான் நாங்­கள் சொல்­றோம், இங்கே நடப்­பது அண்­ணன் – தம்பி பிரச்­சனை. பாட்­டாளி மக்­கள் கட்சி பிரச்­ச­னை­யாக இருக்­கட்­டும்; விசிக பிரச்­ச­னை­யாக இருக்­கட்­டும், தி.மு.க. பிரச்­ச­னை­யாக இருக்­கட்­டும், அண்ணா தி.மு.க. பிரச்­ச­னை­யாக இருக்­கட்­டும்  இவை­யெல்­லாம் அண்­ணன் – தம்பி பிரச்­சனை. நமக்­குள்ள பேசி சரி செய்து கொள்­வோம். ஆனால், இந்­தப் பிள­வு­க­ளால், தமிழ்­நாட்­டி­னு­டைய எதிர்­கால நலன் பாதிக்­கப்­பட்டு விடக்­கூ­டாது என்­ப­தில் நாம் தெளி­வாக இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க.வும் – அண்ணா தி.மு.க.வும் அர­சி­யல் பங்­கா­ளி­கள். ஏன், அண்­ணா­வு­டைய தம்­பி­கள் ஒன்­றாக அமர்ந்து பேசக்­கூ­டாதா? பெரி­யா­ரு­டைய பேரப்­பிள்­ளை­கள் கலந்­து­ரை­யா­டக் கூடாதா? தமிழ்­நாட்­டைப் பாது­காக்க வேண்­டும் என்­கிற  நல­னுக்­காக ஒரு சாதா­ரண பேச்சு வார்த்­தை­யைக் கூட நடத்த கூடாதா? அவர்­கள் நடத்­தி­னார்­களா, இல்­லையா என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. அப்­படி நடத்­தி­னால், என்ன தவறு என்று நான் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">லாட்­ட­ரியை எதிர்த்து 
போராட்­டம் நடத்­து­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">லாட்­டரி சீட்டு மாஃபி­யா­தான் இன்­றைக்கு தமிழ்­நாட்­டி­னு­டைய ஆட்­சி­யைக் கைப்­பற்றி இருக்­கி­றது. ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு, லாட்­டரி சீட்டு தொழில். அதே மாதிரி  லாட்­டரி சீட்டு தொழில் நடத்­தும் மார்ட்­டி­னு­டைய மனைவி அண்ணா தி.மு.க. சார்­பாக வெற்றி பெற்­றி­ருக்­கி­றார்.  மீண்­டும் தமிழ்­நாட்­டில் லாட்­டரி சீட்டு வந்­தால், உங்­க­ளு­டைய நிலை­பாடு என்­ன­வாக இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமீ­முன் அன்­சாரி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர்­கள் லாட்­டரி சீட்டு நடத்­து­கி­றார்­களா? கள்­ளச்­சா­ரா­யம் காய்ச்­சு­கி­றார்­களா? மணல் மாபி­யா­வாக இருக்­கி­றார்­களா? என்­பது எங்­க­ளுக்­குத் தேவை­யில்லை. அதை அரசு கவ­னிக்க வேண்­டும்.  ஆனால், ஆட்சி அதி­கா­ரத்­தின் பெய­ரால், மீண்­டும் லாட்­டரி சீட்டு தமிழ்­நாட்­டுக்கு வரு­மே­யா­னால், அந்த நகலை எரிக்­கும் போராட்­டத்தை மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி தொடங்­கும். அனைத்து வித­மான ஜன சக்­தி­க­ளை­யும் அணி திரட்டி எங்­க­ளு­டைய போராட்­டத்தை நடத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏழை, எளிய மக்­கள் ஏற்­க­னவே டாஸ்­மாக் கடை­க­ளால் அழிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். இப்­பொ­ழுது நீங்­கள் வந்து பேரா­சை­யைக் காட்டி, லாட்­ட­ரிக் கொண்டு வந்­தால்,  உழைக்­கும் மக்­க­ளு­டைய  பணம் எல்­லாம் அந்த லாட்­ட­ரியை நம்பி சீர­ழி­யும். சில நபர்­கள் வந்­தால், பல மில்­லி­யன் டாலர் சம்­பா­திக்­க­லாம். ஆனால், பல லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளு­டைய வாழ்க்கை சீர­ழிந்து போய்­வி­டும். அத­னால், லாட்­டரி சீட்­டைக் கொண்டு வரக்­கூ­டிய எந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டா­லும், அதை நாங்­கள் மிகக் கடு­மை­யாக எதிர்ப்­போம். ஜன­நா­ய­கச் சக்­தி­களை அணி­
தி­ரட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனவே, தமிழ்­நாடு அரசு, அந்த தப்­பான முடிவை சிந்­திக்­கவே கூடாது என்று நாங்­கள் கேட்­டுக்­கொள்­கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தமி­முன்  அன்­சாரி பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>