<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed May 27 2026 16:52:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260528T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="28052026-TRY-05" position.sequence="05" ex-ref="28052026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">த</lang>
	</hl4>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் -– இராஜாஜி அமைத்த கூட்டணி ஆட்சியும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame669176_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame669143_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup669059_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிழ­கச் சட்­ட­மன்­றத்­திற்கு 2026 ஏப்­ரல் 23 ஆம் தேதி தேர்­தல் நடந்­தது. மே 4 ஆம் தேதி முடி­வு­கள் வெளி­யா­யின. எந்­த­வொரு கட்­சிக்­கும் ஆட்சி அமைக்­கும் அள­வுக்கு பெரும்­பான்மை கிடைக்க வில்லை. சட்­ட­மன்­றத்­தில் அதிக இடங்­க­ளைப் பெற்ற முதன்மை கட்­சி­யா­கத் தமி­ழக வெற்­றிக் கழ­கம் திகழ்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இதற்­குத் தி.மு.க. அணி­யி­லி­ருந்த கட்­சி­கள் பா.ஜ.க. வின் அதி­கார ஊடு­ரு­வ­லைத் தடுக்­க­வும் உட­ன­டி­யா­கத் தேர்­த­லைச் சந்­திக்க வேண்­டாம் என்­ப­தற்­கா­க­வும் 
த.வெ.கவை  ஆத­ரித்து ஆட்­சி­யில் அம­ரச் செய்­தன. 
த.வெ.க.வினர் தப்­பாட்­டம் ஆடி மேலும் அதிக இடங்­க­ளைப் பெரும்­பான்­மை­யா­கப் பெருக்­கிக் காட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இத­னால் சிலர் 1952-ஆம்  ஆண்டு நடை­பெற்ற கூட்­டணி ஆட்­சி­யைப் போன்­றது இக் கூட்­டணி, சென்னை மாநி­லத்­தில் (தமிழ்­நாட்­டில்)  முத­லில் அமைந்த அந்­தக் கூட்­டணி ஆட்­சிக்­குப் பிறகு தமிழ்­நாட்­டில் அது போன்ற கூட்­ட­ணி-­இப்­போது அமைந்­துள்ள த.வெ.க. கூட்­டணி என்று பேசி வரு­கின்­ற­னர். ஆகவே அந்­தக் கூட்­டணி எப்­படி அமைந்­தது? அன்­றைய கட்­சி­க­ளின் வெற்­றி­யின் நில­வ­ரம் என்ன?- சூழ்­நிலை என்ன என்­ப­தைக் கழ­கத் தோழர்­கள் அறிந்து கொள்­வ­தற்­காக எழு­தப்­ப­டும் கட்­டுரை இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சென்னை மாநி­லத்­தின் பகு­தி­யாக இருந் தது. ஆந்­தி­ரா­வும் மல­பார் பகு­தி­யும் தமிழ்­நா­டும் சேர்ந்­த­து­தான் சென்னை மாநி­ல­மாக அப்­போது இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றைய சட்­ட­மன்­றத்­திற்கு 375 இடங்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்டு இருந்­தன. முதல் தேர்­தல் 1952 ஜன.27 ஆம் தேதி முதல்   தொடங்கி மார்ச்­சில் தேர்­தல் நடந்து முடிந்­தது. தேர்­தல் இந்­தியா முழு­வ­தும் 4, 5 கட்­டங்­க­ளாக நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.கழ­கம் தனது தனி­நாட்­டுக் கொள்­கையை ஆத­ரிப்­ப­வர்­க­ளுக்கு பரப்­புரை செய்­தது. வாக்­கா­ளர்­களை அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டது. தி.மு.கழ­கம் அப்­போது தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை. கழ­கம் காங்­கி­ரசை மிகக் கடு­மை­யாக எதிர்த்­தது. கம்­யூ­னிஸ்­டு­க­ளும் எதிர்த்­த­னர். பெரி­யார் காங்­கி­ரசை எதிர்த்­தார். சோச­லிஸ்­டுக் கட்­சி­யி­ன­ரும் காங்­கி­ரசை எதிர்த்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் முறை இப்­போ­து­போல் வளர்ச்சி அடைந்­த­தாக இருக்­க­வில்லை. 1952, 1957 பொதுத்­தேர்­தல்­க­ளில் வாக்­கா­ளர்­க­ளுக்கு  வாக்கு அளிப்­பது என்­ப­தும் வாக்­குப் பெட்­டி­யும் வித்­தி­யா­ச­மான காட்­சி­க­ளாக இருந்­தன. ஒவ்­வொரு வேட்­பா­ள­ருக்­கும் தனித்­த­னிப் பெட்டி கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தப் பெட்­டி­க­ளில் வேட்­பா­ளர்­க­ளின் சின்­னங்­கள் ஒட்­டப்­பட்டு இருந்­தன. வாக்­கா­ளர் தாம் விரும்­பும் வேட்­பா­ளர் பெயர் மற்­றும் சின்­னத்தை அறிந்து அதற்­கு­ரிய பெட்­டி­யில் வாக்­கைப் போடு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­குச் சீட்­டின் அளவு சிறி­ய­தாக இருந்­தது. வாக்­குப் பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்ள இடம் திரை­யி­னாலோ தட்­டி­யி­னாலோ மறைக்­கப்­பட்டு இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர்­கள் தாம் தேர்ந்­தெ­டுக்க விரும்­பும் வேட­பா­ளர் சின்­னம் உள்ள பெட்­டி­யில் வாக்­கைப் போடா­மல் இருக்­க­வும் வாய்ப்பு உண்டு. இதைச் சாத­க­மாக்­கிக் கொண்டு வாக்­கு­கள் வாங்­கப்­பட்­டன. எப்­படி, என்­றால் வாக்­கா­ளர் தனக்­குக் கொடுத்த வாக்­குச் சீட்­டைப் பெட்­டி­யில் போடா­மல் மறைத்து எடுத்­துக் கொண்டு வெளி­யில் போகும் வாய்ப்பு அப்­போது இருந்­தது. பின்­னர் இக்­கு­றை­கள் நீக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கப் பரப்­பு­ரை­யும் அப்­போ­தைய கம்­யூ­னிஸ்­டுக் கட்­சி­யின் செல்­வாக்­கும் காங்­கி­ர­சைத் திக்­கு­முக்­காட வைத்­தன. பொது­வாக மக்­க­ளி­டையே காங்­கி­ரஸ் எதிர்ப்பு அலை 1952 ஆம் ஆண்டு நடை­பெற்ற  முதல் தேர்­த­லி­லேயே வீசி­யது.  காங்­கி­ரஸ் சுதந்­தி­ரம் பெற்று தந்த கட்சி என்ற உணர்ச்­சி­யும் மக்­க­ளி­டம் இல்லை. விளைவு என்­ன­வா­யிற்று?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­த­லில், முத­ல­மைச்­ச­ராக இருந்த குமா­ர­சாமி ராஜா­வும் இன்­னும் நான்கு சக அமைச்­சர்­க­ளும் தோற்­ற­னர். பூண்டி வாண்­டை­யார், குன்­னி­யூர் சாம்­ப­சிவ அய்­யர், இரா­ம­நா­த­பு­ரம் ராஜா போன்­றோர் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தோற்­ற­னர். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ – ‘தின­மணி’ அதி­பர் இராம்­நாத் கோயங்கா போன்­றோர் தோற்­றோ­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காம­ரா­சர் விரு­து­ந­கர் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் நின்று வெற்றி பெற்­றார். இவரை எதிர்த்து ஜி.டி.நாயுடு போட்­டி­யிட்­டார். தேர்­தல் முடி­வு­கள் வெளி­வ­ரத் தொடங்­கின. ஒரு கட்­டத் தேர்­தல் முடிந்­த­துமே. மறு­கட்ட தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு  முன்பே முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்­டன. இத­னால் வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றி-­தோல்­வி­கள் எதிர்­பா­ரா­மல் நிகழ்ந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆக,தேர்­தல் முடி­வு­கள் ஒரு வழி­யாக வெளி­வந்­தன. அந்த முடி­வு­கள் கீழ்க்­கா­ணும் விதத்­தில் அமைந்து இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன்­படி எந்­தக் கட்­சி­யும் ஆட்சி அமைக்­கும் அள­வுக்­குப் பெரும்­பான்­மை­யைப் பெற­வில்லை. காங்­கி­ரஸ் 152 இடங்­களை மட்­டுமே பெற்று இருந்­தது. இதைக் கொண்டு காங்­கி­ரஸ் ஆட்­சியை அமைக்க முடி­யாது.  ஆட்சி அமைக்க 188 இடங்­கள் தேவை­யாக இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் தலை­வ­ராக இருந்த காம­ரா­சர் மிக தைரி­ய­மாக காங்­கி­ரஸ் ஆட்சி அமைக்­கும் என்று அறிக்கை வெளி­யிட்­டார். இந்­தி­யா­வில் எந்தஒரு மாநி­லத்­தி­லும் அப்­படி ஒரு நிலைமை ஏற்­ப­ட­வில்லை. ஆனால் தென்­ன­கத்­தில் இப்­ப­டி­யொரு சூழ்­நிலை உரு­வா­யிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் கவர்­னர் ஜென­ர­லா­க­வும், மேற்கு வங்க கவர்­ன­ரா­க­வும், ஒன்­றிய அர­சின் இலாகா இல்­லாத அமைச்­ச­ரா­க­வும், உள்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்த இரா­ஜாஜி 1952-இல் எந்­தப் பத­வி­யும் இல்­லாத ‘அர­சி­யல் சந்­நி­யாசி’ ஆகி­யி­ருந்­தார். பிர­த­ம­ராக இருந்த பண்­டித ஜவ­ஹர்­லால் நேரு சென்னை மாநி­லத்­தில் அமைச்­ச­ரவை அமைக்­கும்­படி அவ­ரி­டம் கோரி­னார். இது அவ­ரின் அப்­போ­தைய சூழ்­நி­லைக்கு ஏற்ப தெரி­வித்த தனிப்­பட்ட விருப்­ப­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு தர்­ம­சங்­க­ட­மான சூழ்­நி­லை­யைக்  குழப்­ப­மான வெற்றி இடங்­க­ளைப் பெற்­றுள்ள கட்­சி­களை இரா­ஜாஜி எப்­ப­டிச் சரி செய்­தார்? கவர்­னர் எப்­படி நடந்து கொண்­டார்? காங்­கி­ரஸ் கட்சி எப்­படி நடந்து கொண்­டது?  கவர்­னர் தப்­பாட்­டம் ஆட எப்­படி ஒத்­து­ழைத்­தார்?- என்­ப­ன­வற்றை இனி, பார்ப்­போம். இதன்­படி கவர்­ன­ரின் ஆட்­டங்­கள் தொடங்­கிய முதன் மாநி­லம்-­சென்னை  மாநி­லம்­தான் அதா­வது தமிழ்­நா­டு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது ஒரு­முறைவெற்றி பெற்ற கட்­சி­க­ளின் பட்­டி­யலை பார்த்­துக் கொள்­ளுங்­கள். இப்­போது நாம் அதைப் பற்றி விளக்­கு­வ­தைப் படித்­துப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காம­ரா­சர் காங்­கி­ரஸ் ஆட்­சியை அமைக்­கும் என்று அறி­வித்­த­வு­டன், கம்­யூ­னிஸ்­டு­கள் நாங்­கள் ஆளு­வோம் என்­றார்­கள். அவர்­கள் காங்­கி­ரஸ் அல்­லாத ஆட்சி அமைப்­பது சாத்­தி­யம் என்று கூறி­னார்­கள். காங்­கி­ரஸ் அணி­யில் அல்­லா­த­வர்­க­ளுள் நிலப்­பி­ர­புக்­க­ளும் வெற்றி பெற்று இருந்­தார்­கள். அவர்­க­ளும் கம்­யூ­னிஸ்டு அணி­யில் சேரு­வார்­கள் என்று கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­கா­சம்­காரு தோற்­றுப்­போ­னா­லும் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­கள் 35 பேர் வெற்றி பெற்று இருந்­தார்­கள். அவர் 61 கம்­யூ­னிஸ்­டு­க­ளைச் சேர்த்­துக் கொண்டு ஒரு முன்­ன­ணியை அமைத்து ஆட்­சியை உரு­வாக்­க­லாம் என்று கரு­தி­னார். ஆனால் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­க­ளான 35 பேர் கம்­யூ­னிஸ்­டு­க­ளுக்கு எதி­ராக இருந்­தார்­கள், அவர்­கள் பிர­கா­சம்­கா­ரு­வின் கருத்­துக்கு உடன்­பா­டாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனா­லும் அவ­ரின் அய்க்­கிய ஐன­நா­யக முன்­ன­ணி­யின் சார்­பாக 166 இடங்­க­ளுக்­கான கட்­சி­க­ளைக் கொண்டு ஆட்சி அமைக்க உரி­மைக் கோரி­னார். இந்த எண்­ணிக்கை சட்­ட­மன்­றத்­தில் பலம் காட்­டு­வ­தற்­கு­ரி­ய­தாக இல்லை. அடுத்து வெற்றி பெற்ற கட்­சி­க­ளுள் பெரும்­பான்மை (152 எண்­ணிக்கை) கொண்ட ஒரே கட்­சி­யாக காங்­கி­ரசு இருந்­தது. இப்­போது கவர்­னர் யாரை அழைப்­பார்? 166 எண்­ணிக்­கை­யைக் கொண்ட அணி­யையா? 152 எண்­ணிக்கை கொண்ட  ஒரே கட்­சி­யான காங்­கி­ர­சையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">166 பேர் கொண்ட அணியை கவர்­னர் அழைத்து ஆட்­சியை அமைக்­கச் சொல்லி சட்­ட­மன்­றத்­தில நிரூ­பிக்­கச் சொல்லி இருக்க வேண்­டும். அப்­போது கவர்­ன­ராக இருந்­த­வர் பவ­ந­கர் ராஜா என்று அழைக்­கப்­பட்ட மகா­ராஜா கிருஷ்­ண­கு­மார் சிங்ஜி ஆவார். இவர் பத­வி­கா­லம் முடிந்து இருந்­தது. ஆனால் பத­வி­யில் இருக்­கி­றார். அவ­ருக்கு புதி­ய­வர் வரும் வரை அவர்­தான் கவர்­னர். ஆனால் அவர் கட்­சி­களை  ஆட்சி அமைக்க அழைக்­க­வில்லை. அந்த வாய்ப்பை மேலி­டம் அவ­ருக்கு வழங்­க­வில்லை. புதிய கவர்­னர் விஷ­ய­மாக எந்­தச் செய்­தி­யும் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்­தும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இப்­படி ஒரு வெற்­றி­டம் இந்­நி­கழ்­வில் தெரி­ய­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் நேரு இரா­ஜா­ஜியை ஆட்சி அமைக்­கு­மாறு கோரி­யி­ருந்­தார் என்­பதை நாம் முன்­னரே குறிப்­பிட்டு இருந்­தோம். இரா­ஜாஜி முதல்­வ­ரா­வதை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டோ­ரில் சிலர் விரும்­பி­னர்.  அவர் முதல்­வ­ராக வேண்­டும் என்­ப­தற்­காக உட­ன­டி­யாக பவ­ந­கர்­ரா­ஜா­வின் இடத்­திற்கு ஸ்ரீபி­ர­காசா கவர்­ன­ராக நிய­ம­னம் ஆனார். அவர் 166 பேர் கொண்ட அய்க்­கிய ஜன­நா­யக முன்­ன­ணியை அழைக்­கத் தயா­ராக இல்லை. ஸ்ரீபி­ர­காசா, இரா­ஜாஜி மட்­டுமே குழப்­ப­நி­லையை சமா­ளித்து ஆட்சி அமைக்­கக் கூடி­ய­வர் என்று கரு­தி­னார். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜாஜி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இல்லை. அவர் (இடைத்)தேர்­த­லில் நிற்­கக் கூடி­ய­வர் இல்லை. இரா­ஜாஜி முதல்­வ­ரா­வ­தற்கு காம­ரா­ச­ரின் ஒப்­பு­தல் கிடைத்­தது. அப்­போது தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்டி எவ்­வ­ளவு சுதந்­தி­ர­மும் அதி­கா­ர­மு­டை­ய­தாக இருக்­கி­றது பாருங்­கள்.  இரா­ஜாஜி விஷ­ய­மா­யிற்றே காம­ரா­ச­ரின் கருத்­தும் செய­லும் மிக முக்­கி­ய­மா­னது. டெல்லி மேலி­டம் முதல் தமிழ்­நாடு வரை காம­ரா­சர் அதி­கார பொறுப்­பில் இல்­லா­ம­லேயே ஆற்­றல் மிகுந்த தலை­வ­ராக அவர் விளங்கி வந்­ததே இதற்­குக் கார­ணம்! மேலும் பிர­த­மர் நேரு காம­ரா­ச­ரின் ஆத­ரவு இல்­லா­மல் இரா­ஜாஜி முதல்­வர் ஆவதை விரும்­ப­வில்லை. அப்­ப­டி­யா­னால் காம­ரா­ச­ரின் பலம் காங்­கி­ர­சில் எப்­படி இருந்­தது  என்­பதை நாம் உண­ர­லாம். இதற்கு இன்­னொரு கார­ண­மும் இருந்­தது. தேர்­த­லுக்­குப் பிறகு நேருவை காம­ரா­சர் சந்­திக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜாஜி முதல்­வ­ராக வர வேண்­டும் என்­ப­தற்­கா­கக் குமா­ர­சாமி ராஜா தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி இருந்­தார். உள்­ளூர் காங்­கி­ரஸ் கமிட்­டி­கள்  வேறு தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி இருந்­தன.  நேரு­வும் இரா­ஜாஜி அமைப்பு ரீதி­யாக முன்­மொ­ழி­யப்­பட்டு முதல்­வ­ராக வர­வேண்­டும் என்று விருப்­பம் கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜா­ஜிக்கு முதல்­வர் ஆவ­தில் விருப்­பம் இல்லை என்றே ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன. ஆராய்ந்து பார்த்­தால் அது உண்மை  என்றே தெரி­கி­றது. வெற்றி பெற்­ற­வர்­களை ஒருங்­கி­ணைத்து அமைச்­ச­ரவை  அமைக்க இரா­ஜாஜி  ஏற்­ற­வர் என்ற முடிவே அவ­ரின் முன்­மொ­ழி­வுக்­குக் கார­ண­மாக அமைந்­தது.  இது குறித்து நேரு தலை­மைச் செய­லா­ள­ருக்கு ஒரு குறிப்பை அனுப்பி வைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜாஜி அந்­தக் குறிப்­பின் மீது தலை­மைச் செய­லா­ளர் இரா­முன்னி மேன­னுக்கு  ஒரு கடி­தம் எழு­து­கி­றார். அது­மட்­டு­மில்லை, குடி­ய­ர­சுத் தலை­வர் இரா­ஜேந்­தி­ரப் பிர­சாத்­துக்கு   இரா­ஜாஜி முதல்­வர் தேர்­வைப் பற்றி கவர்­னர் ஸ்ரீபி­ர­காசா ஒரு கடி­தம் எழு­தி­னார்.  இப்­படி இரா­ஜாஜி முதல்­வ­ரா­வ­தற்­குள் குடி­ய­ர­சுத் தலை­வர், பிர­த­மர், கவர்­னர், காங்­கி­ரஸ் தலை­வர்­கள், அமைப்­பு­கள் என்று ஏரா­ள­மான குறிப்­பு­க­ளும் கடி­தங்­க­ளும் உரை­யா­டல்­க­ளும் நடந்து இருக்­கின்­றன.  அவற்­றை­யெல்­லாம் எழு­தி­னால் இது ஒரு நூலாக உரு­வெ­டுத்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">இதற்­குள் தேர்­தல் நடந்து இரண்டு மாதங்­கள் ஆகி­விட்­டன. 1952 மார்ச் 31 ஆம் தேதி கவர்­னர் சிறப்பு  நிய­மன அடிப்­ப­டை­யில் சட்­ட­மன்ற மேலவை உறுப்­பி­ன­ராக இரா­ஜாஜி நிய­மிக்­கப்­பட்­டார். இன்­னும் சில­ரும் நிய­மிக்­கப்­பட்­ட­னர். கவர்­னர் அறி­வி­யல், இலக்கியம், சமூக சேவை போன்ற வற்­றில் ஈடு­பா­டுள்­ள­வர்­களை நிய­மிக்­க­லாம் என்று சட்­டம் சொல்­கி­ற­படி இரா­ஜாஜி நிய­ம­ன­மா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னொரு மிக முக்­கிய மான விஷ­ய­மும் நடந்­தது. காங்­கி­ரஸ் சட்­ட­மன்ற உறுப் பினர்­க­ளின் தலை­வ­ராக இரா­ஜாஜி தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும் என காங்­கி­ரஸ் ஒரு தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­தது. அந்­தத் தீர்­மா­னத்­தைக் காம­ரா­சர் முன்­மொ­ழிந்­தார். அதை ஆந்­திர பிர­தேச காங்­கி­ரஸ் சார்­பாக சஞ்­சீவ ரெட்டி வழி மொழிந்­தார். இரா­ஜாஜி ஏக­ம­ன­தாக காங்­கி­ரஸ் ஆட்­சி­மன்­றத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்ட மறு நாளே கவர்­னர் ஸ்ரீபி­ர­காசா, இரா­ஜா­ஜியை அமைச்­ச­ரவை அமைக்­கும் படி கேட்­டுக் கொண்­டார். மார்ச் மாத­மும் கடந்து ஏப்­ரல் மாத­மும் வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே இன்­னொரு செய்­தி­யை­யும் சொல்ல வேண்­டும் என்று விரும்­பு­கின்­றோம். 1952 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் எம்.பக்­த­வத்­ச­ல­மும் தோற்­றுப்­போ­யி­ருந்­தார்.  அவர் இரா­ஜாஜி முதல்­வர்  ஆவது குறித்து சொல்­கி­ற­போது, 1952 ஆம் ஆண்டு இரா­ஜாஜி முத­ல­மைச்­சர் ஆனார். மேல் சபை­யில் என்னை உறுப்­பி­ன­ரா­கப் போட வேண்­டும் என்று அவர் விரும்­பி­னார். காம­ராஜ் அதை விரும்­ப­வில்லை. ஆனா­லும் உறுப்­பி­னர் தேர்­த­லில் நான் வெற்றி பெற்­றேன். பிறகு இரா­ஜாஜி சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் மூலம்  நான் அவ­ரது மந்­தி­ரி­ச­பை­யில் சேர வேண்­டும் என்று சொல்­லிய னுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“காம­ராஜ் சார்­பில் கோசல்­ராம் முத­லி­ய­வர்­கள் என்­னி­டம் வந்து மந்­திரி பத­வியை ஒப்­புக் கொள்ள வேண்­டாம் என்று தடுத்­தார்­கள். இரா­ஜாஜி காங்­கி­ரஸ் சார்­பில் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார். காங்­கி­ரஸ் காரி­யக் கமிட்­டி­யின் ஆத­ர­வும்  அதற்கு இருந்­தது. அவ­ரு­டன் ஒத்­து­ழைக்க மறுக்­கப்­பட்­டது என்­றால் காங்­கி­ர­சுக்கு ஒத்­து­ழைப்­புத்­தர மறுப்­பது என்று அர்த்­தம் , அதை நான் விரும்­ப­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வ­தாக, பாகிஸ்­தான் சர்ச்­சை­யில் நான் இரா­ஜா­ஜியை எதிர்த்து இருக்­கி­றேன். அப்­ப­டி­யி­ருந்­தும் என்னை மந்­திரி பதவி ஏற்க அழைத்து இருந்­தார். காங்­கி­ரஸ் முத­ல­மைச்­ச­ரான அவ­ருக்கு ஒத்­து­ழைப்­புத்­தர மறுக்க இய­லாது என்­பது தர்க்க ரீதி­யான நிலை; அந்த அடிப்­ப­டை­யில்­தான்  அவ­ரது மந்­திரி  சபை­யில் சேர ஒப்­புக் கொண்­டேன்” என்று ‘எனது நினை­வு­கள்’ நூலில் முன்­னாள் முதல்­வர் பக்­த­வத்­ச­லம் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1952 ஆம் ஆண்டு ஜன.27இல் தொடங்கி நடத்­தப்­பட்ட தேர்­தல் முடி­வு­கள் வந்து இரா­ஜாஜி அமைச்­ச­ர­வைப் பத­வி­யேற்­ப­தற்கு 72 நாள்­கள் ஆகி­விட்­டன. இறு­தி­யாக ஏப்­ரல் 10 ஆம் தேதி  இரா­ஜாஜி அமைச்­ச­ர­வைப் பதவி ஏற்­றுக் கொண்­டது. அமைச்­சர்­க­ளின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(1) இரா­ஜாஜி –- முத­ல­மைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(2) ஏ.பி.ஷெட்டி- – சுகா­தா­ரம் (மக்­கள் நல்­வாழ்வு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(3) சி.சுப்­பி­ர­ம­ணி­யம்-­ – நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(4) கே.வேங்­க­ட­சாமி நாயுடு- – அற­நி­லை­யத்­துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(5) என்.ஜி.ரங்கா- – தொழி­லா­ளர் துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(6) எம்.வி.கிருஷ்­ணா­ராவ்- – கல்வி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(7) வி.சி. பழ­னி­சாமி -– மது­வி­லக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(8) டாக்­டர் யூ.கிருஷ்­ணா­ராவ்- – தொழில் அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(9) நாகண்ணா கவுடா -– விவ­சா­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(10) சண்­முக ராஜேஸ்­வர சேது­பதி -– பொதுப்­ப­ணித் துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(11) மாணிக்­க­வேல் நாயக்­கர் - – வரு­வாய்த்­துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(12) கே.பி. குட்டி கிருஷ்ண நாயர் -– சட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(13) சங்­கர ரெட்டி- – உள்­ளாட்­சித் துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(14) பட்­டா­பி­ரா­ம­ராவ் - – கிராம நலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(15) சஞ்­சீ­வய்யா- – கூட்­டு­றவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆந்­திர பிர­தே­சம் தனி மாநி­லம் ஆன பிறகு ஆந்­தி­ரத்­தைச் சேர்ந்த அமைச்­சர்­கள் வில­கிக் கொண்­ட­னர். 10.03.1953 இல் எம்.பக்­த­வத்­ச­லம்-­வி­வ­சா­யம், ஜோதி வெங்­க­டா­ச­லம்-­ம­து­வி­லக்கு, கே.ராஜா­ராம் நாயுடு - உள்­ளாட்­சித் துறை எனப் பதவி ஏற்­றுக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜா­ஜி­யின் கூட்­டணி அமைச்­ச­ரவை ஒரு வழி­யா­கப் பதவி ஏற்­றுக் கொண்­டது. இது­வரை நாம் எடுத்­துக் கூறி­ய­வற்­றி­லி­ருந்து சார­மாக அறிந்து கொள்­ளத் தக்­க­வைப் பற்றி கீழ்க்­கா­ணும் படி வரி­சைப்­ப­டுத்தி இருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(1) தேர்­தல் சம­யத்­தி­லும் தேர்­தல் முடி­வு­றும் சம­யத்­தி­லும் பவ­ந­கர் ராஜா கிருஷ்­ண­கு­மார் சிங்ஜி இருந்­தார். இவ­ரின் பதவி காலம் முடிந்த தரு­ணம் அது. புது கவர்­னர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. பழைய கவர்­னர் பொறுப்­பில் இருக்­கி­ற­போது வெற்றி பெற்ற கட்­சி­க­ளின் கோரிக்­கையை அவர் ஏற்க அல்­லது அழைக்க அனு­ம­திக் ­கப்­ப­ட­வில்லை என்­பது நன்­றா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஸ்ரீபி­ர­காசா சென்னை மாநி­லத்­தின் கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­ட­பின் கட்­சி­க­ளின் அழைப்பு நிகழ்ச்­சி­கள் நடந்­தன. அடுத்த புது கவர்­னர் வரும் வரை பழைய கவர்­னர் பத­வி­யில்   நீடிக்­க­லாம்  எனச்  சட்­டம் சொல்  ­கி­றது- அப்­போது ஆட்சி அமைக்க கட்­சி­களை அவர் அழைக்க லாம் அல்­லவா? ஆனால் கவர்­னர் பவ­ந­கர் ராஜா அப்­படி நடந்து கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(2) சென்னை மாநில ஆட்­சியை இத்­த­கைய குழப்ப நிலை­யில் இரா­ஜாஜி பொறுப்­பேற்­கக் கூடாது என்று நேரு  கரு­தி­னார். ஆனால் அதை  அவர் வெளிப்­ப­டை­யா­கக் காட்­டிக்­கொள்­ள­வில்லை. ஆனால் அவ­ரது ஆத­ரவு இரா­ஜா­ஜிக்கு இருந்­தது. அந்த அள­வுக்கு விமர்­ச­ன­மும் இரா­ஜாஜி மீது வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வ­ராக இருந்த காம­ரா­சர் காங்­கி­ரஸ் ஆட்­சியை அமைக்­கும் என்று தெரி­வித்து இருந்­தார். நேரு, காம­ரா­சர்,  இரா­ஜா­ஜியை ஆத­ரிக்க வேண்­டும் என்று விரும்­பி­னார். இப்­ப­டிக் குழப்­ப­நிலை நீடித்­துக் கொண்­டி­ருந்த நிலை­யில் காம­ரா­சர் நேரு­வைச் சந்­திக்­க­வில்லை. ஆனா­லும் தமிழ்­நாடு, ஆந்­தி­ரத் தலை­வர்­களை  காம­ரா­ச­ரும் சஞ்­சீ­வ­ரெட்­டி­யும் காங்­கி­ரஸ் கமிட்­டி­க­ளில்  இரா­ஜாஜி முதல்­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னர். இது ஒரு வகை­யில் நேரு­வுக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தி­ருக்­கக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(3) இரா­ஜாஜி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இல்லை. அவர் (இடைத்)தேர்­த­லில் நிற்­க­மாட்­டார். பொது­வா­கவே அவர் தேர்­த­லில் நிற்க விரும்­பு­வ­தில்லை. ஆகவே கவர்­னர் அவரை மேல­வைக்கு உறுப்­பி­ன­ராக  நிய­மித்­தார். கலை, இலக்­கி­யம், சமூ­கப் பணி ஆற்­றி­ய­வர்­களை கவர்­னர் அந்­தச் சிறப்­புத் தகுதி கருதி  மேலவை உறுப்­பி­னர் ஆக்­க­லாம். அப்­படி இரா­ஜாஜி  மேலவை உறுப்­பி­னர் ஆக்­கப்­பட்­டார். இத­னால் அவர் முதல்­வ­ரா­னால் தேர்­த­லுக்கு நிற்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­கிற எளி­தான வழியை கவர்­னர் உண்­டாக்கி வைத்­தார். அதைச் ‘சட்­ட­மன்­றத்­திற்­குள் புறக்­கடை வழி­யாக நுழைந்­த­வர்’ எனக் குத்­தூசி குரு­சாமி விடு­த­லை­யில் இரா­ஜா­ஜி­யைப் பற்­றிய விமர்­ச­னத்தை முன் வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(4)தி.மு.கழக ஆத­ரவு பெற்ற 43 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கம்­யூனி ஸ்டுகள், 43 பேர் நீங்­கிய சுயேச்­சை­கள், சோச­லிஸ்­டு­கள் இதர கட்­சி­யி­னர் எவ­ரும் இரா­ஜா­ஜியை ஆத­ரிக்­க­வில்லை. 166 பேர் கொண்ட அய்க்­கிய ஜன­நா­யக முன்­ன­ணியை ஸ்ரீபி­ர­காசா  ஆட்சி அமைக்க அழைக்­க­வில்லை. இதற்கு மாறாக வெற்றி பெற்ற இடங்­க­ளில் அதிக இடங்­க­ளைப் பெற்ற -அதா­வது 152 இடங்­க­ளைப் பெற்ற - சட்­ட­மன்­றத்­தில் பெரிய ஒரே கட்­சி­யா­கத் திகழ்ந்த காங்­கி­ரசை கவர்­னர் அழைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(5) காங்­கி­ரஸ்–152, உழைப்­பா­ளர் கட்சி–19, என்.ஜி.ரங்கா கட்சி–15, காமன்­வீல் கட்சி–6 என இக்­கட்­சி­க­ளின் மொத்த இடம் 192. ஆகவே இரா­ஜாஜி சட்­ட­மன்­றத்­தில் பெரும்­பான்­மை­யைக் காட்டி ஆட்சி அமைத்­தார்.   இதற்­காக  மாணிக்க வேலு  நாயக்­கர், இரா­ம­சாமி  படை­யாட்­சி­யார் ஆகி­யோ­ரின்  கட்­சி­க­ளான  உழைப்­பா­ளர் கட்­சிக்­கும்,  காமன்­வீல் கட்­சிக்­கும்  அமைச்­சர் பத­வியை வழங்கி கூட்­டணி அர­சில் சேர்த்­துக் கொண்­டார். என்.ஜி.ரங்­கா­வும் அப்­படி அமைச்­ச­ராக்­கப்­பட்­டார். இதன் தொடர்ச்­சி­யாக இரா­ஜாஜி  சுதந்­தி­ராக் கட்­சித் தொடங்­கிய போது  என்.ஜி.ரங்கா  கட்­சி­யின் அகில இந்­திய  பொதுச்­செ­ய­லா­ளர் ஆனார். 1952 இல் இரா­ஜாஜி  பல தந்­தி­ரங்­க­ளைக்  கையாண்டு  முதல்­வ­ரா­னார். நேரு­வின் விருப்­பத்­தை­யும் நிறை­வேற்­றி­னார். குழப்­பத்­தைத் தவிர்த்­தார். இரா­ஜா­ஜிக்கு எதி­ராக மற்ற கட்­சி­கள் 183 இடங்­க­ளைப் பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ஜா­ஜி­யின் ஆட்­சி­யின் மீது நம்­பிக்கை கோரும் தீர்­மா­னம் 30.6.1952 ஆம் தேதி விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. விவா­தம் 4 நாட்­கள் நடை­பெற்­றது. தீர்­மா­னம் ஓட்­டெ­டுப்­புக்கு வந்­த­போது எதிர்க்­கட்­சி­யி­னர் சிலர் அவை­யில் ஆஜ­ரா­க­வில்லை. நம்­பிக்கை கோரும் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக 200 உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­த­னர். 151 உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­த­னர். ஒரு உறுப்­பி­னர் நடு­நிலை வகித்­தார். மொத்­தத்­தில் இரா­ஜாஜி அமைச்­ச­ரவை வெற்றி பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரா­ஜா­ஜி­யால் அமைக்­கப்­பட்ட இக் கூட்­டணி அமைச்­ச­ரவை 10.04.1952 முதல் 13.04.1954 வரை இயங்­கி­யது. அதன் பிறகு இரா­ஜாஜி பதவி விலக வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விட்­டது. இருப்­பி­னும்  இந்த  அமைச்­ச­ர­வைக் கவி­ழா­மல் தொடர்ந்­தது என்­பது மிக முக்­கி­ய­மா­னது. காம­ரா­ஜர் அமைச்­ச­ர­வை­யில் எஸ்.எஸ்.இரா­ம­சாமி படை­யாட்­சி­யார் அமைச்­ச­ரா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இவ்­வா­று­தான் 1952 ஆம் ஆண்டு சென்னை மாநி­லத்­தில் –அப்­போ­தைய தமிழ்­நாட்­டில் கூட்­டணி அமைச்­ச­ரவை அமைந்­தது. இப்­போது அமைந்­துள்ள த.வெ.க. அமைச்­ச­ர­வையை 1952 கூட்­டணி அமைச்­ச­ர­வை­யோடு  எந்த வகை­யி­லும் ஒப்­பிட்­டுப் பார்க்­கத்­தக்­கது இல்லை.  ஆகவே 1952 ஆண்டு அமைக்­கப்­பட்ட கூட்­டணி  ஆட்சி மிகச் சிறப்­புக்­கு­ரி­யது.  அந்­தக் களத்­தின்  ‘அர­சி­யல்  அழகே’ தனி என்று மட்­டுமே நம்­மால்உறு­தி­யா­கச் சொல்ல முடி­யும்.  இப்­போது அமைந்­துள்ள அமைச்­ச­ரவை ‘அப்­ரன்­டீஸ்’ அமைச்­ச­ரவை ஆகும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>