<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,957,919" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 29 2026 12:15:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260530T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30052026-CBE-06" position.sequence="06" ex-ref="30052026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="58">தனிமைப்படுத்தப் படுகிறதா தி.மு.க.? </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup682684_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="15.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">.மு.க. அதற்கு எதிரான பொய்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கு எதிரான கட்டுக் கதைகளை எதிர்த்துப் போராடித்தான் 75 ஆண்டுகளாக இந்த இயக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. தலைவர் நம்மோடு இருந்தவர்கள்மேல் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார். அதே சமயம் அரசியல் களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆராய்வது நமது கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்போது ஊடகங்களில் பரப்பப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று தி.மு.க.வுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் இப்போது த.வெ.கவை ஆதரிப்பதால் தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்பதாகும். அரசியல் வரலாறு தெரியாதவர்களும் தி.மு.க. வரலாறு தெரியாதவர்களும் யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது தங்கள் சுய வன்மத்தை தீர்த்துக்கொள்ளவோ சொல்லும் கதை இது. தமிழ் நாட்டின் தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. இந்தியா முழுமைக்குமே இது பொருந்தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு ஒரே விதிவிலக்காக தி.மு.க. தலைவர் ஒரு கூட்டணியை எட்டு ஆண்டுகளாக கட்டிக் காத்தார். அதை வெற்றிகரமான கூட்டணியாக கொண்டு செலுத்தினார். கொள்கை வழிப்பட்ட கூட்டணியாக அதை  வலிமைப்படுத்தினார். இரண்டு நாடாளு மன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்ற தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் என களம் கண்ட இந்தக் கூட்டணி 2026ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மட்டும் ஒரு புதிய சூழலால் வெற்றிவாய்ப்பை இழந்த போதும் ஒன்றரைகோடிக்கும் மேல் வாக்குகளைப் பெற்று 73 இடங்களைப் பெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் தி.மு.க. 54 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ் 5 இடங்கள்,வி.சி.க.: 2 இடங்கள், சி.பி.எம். (CPM)2, இடங்கள் சி,பி.ஐ. (CPI):  இடங்கள், ம.தி.மு.க. 2 இடங்கள்,  ஐ.யு.எம்.எல். 2 இடங்கள், கொ.ம.தே.க., 1 இடம், ம.ம.க 1 இடம், ம.ஜ.க 1 இடம் வீதம் வெற்றி பெற்றன. இதன் பொருள் என்னவென்றால் தி.மு.க. கடும் பின்னடைவைச் சந்தித்த ஒரு தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகளுக்காக கடுமையாக உழைத்து அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தி அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்நாட்டின் மற்றொரு மிகப்பெரிய கடசியான 
அ.தி.மு.க. 47 இடங்களைக் கைப்பற்றிய போதும் இந்தியாவை ஆளும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.  1 இடத்திலும்  பா.ம.க. 4 இடங்களிலும் அ.ம.மு.க. 1 இடத்திலுமே வென்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்போது சொல்லுங்கள், கூட்டணிக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பை கடுமையான சூழலிலும் உறுதிப் 
படுத்திய கட்சி எது? தலைவர் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இந்தக் கூட்டணியில் முதல் தாக்குதலைத் தொடுத்தது காங்கிரஸ். பிறகு வேறு சில கட்சிகள் அதைப்பின் தொடர்ந்தன. தேர்தலுக்கு முன்பாகவே இட பேரங்கள், ஆட்சியில் பங்கு கோஷங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டன. எட்டு ஆண்டுகளாக நம்பகமானகூட்டணி  என்ற நம்பிக்கையை சிதறு  தேங்காயை போல ஒவ்வொருவராக உடைத்தன. பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் பல வருடம் இந்தக் கூட்டணியை உடைப் பதற்காக செய்த முயற்சிகளை தி.மு.க. கூட்டணிலிருந்த சிலரே தங்களது சில தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக சிதறுதேங்காயைபோல சிதறடித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது தி.மு.க.விற்கு செய்த துரோகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக நலன், சமூக நீதி, மாநில உரிமைகள் சார்ந்து மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருந்த ஒரு அரசை தோல்வியடையச் செய்ததில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இதில் சில கட்சிகளுக்குள் ஊடுருவிய பா.ஜ.க. மற்றும்  த.வெ.க. ஏஜெண்டுகள் இந்த காரியத்தை  வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">த.வெ.க கூட்டணி உண்மையிலேயே 
ஒரு கூட்டணியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்தலில் விஜய் அழைத்தும்கூட யாரும் அவருடன் கூட்டணி சேர முன்வரவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விஜய்ய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் இருந்தபோதும் அவர்கள் தி,மு.க. கூட்டணியிலேயே நீடித்தனர். விஜய்யின் அரசியலை சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். காரணம் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என எல்லாதரப்பினரும் உறுதியாக நம்பினர். வெற்றியின் பக்கம் இருப்பதுதான் கொள்கை என நினைத்திருந்தனர் என்பதை காலம் நிரூபித்து கொண்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.விற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க. ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் தி.மு.க. கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற சதித்திட்டத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்ற பூச்சாண்டி பரப்பப்பட்டது. தனிப்பெரும் கட்சியாகவே த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்றபோதும் ஆளுநர் 118 பேர் ஆதரவு வேண்டும் என அடம் பிடித்தார்.  காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் வந்ததும் தனது பழைய திட்டத்தின்படி த.வெ.க.வை நோக்கி ஓடோடிச் சென்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் ஆட்சி வராம லிருக்க த.வெ.க வை வெளியே இருந்து ஆதரிக்க போவதாகவும் ஆனால் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாகவும் அறிவித்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிறகு ‘சோபா மாடல்’ அறிமுகமானதும் எல்லாம் தலைகீழானது. மின்னல் வேகத்தில் முடிவுகள் மாறின. காங்கிரசுடன் சேர்ந்து வி.சி.க.வும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் த.வெ.க. மந்திரி சபையில் இணைந்தனர். த.வெ.க.வை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் களம் கண்டவர்கள் மூன்றே வாரத்தில் அதே த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் மின்னல் வேகத்தில் களம் கண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்கு சிலர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சியமைக்க முயன்றன, அதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்ல ஆரம்பித்தனர். யார் அப்படி உங்களிடம் சொன்னார்கள் என்று கேட்டால் ’அதிகாரபூர்வமாக யாரும் சொல்லவில்லை, சும்மா கேள்விப்பட்டோம்’ என மழுப்பினார்கள். அதாவது தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றி பெற்று சில நாட்களிலேயே தி.மு.க.வைஅழிப்பதற்காகவே உருவாக்கபட்ட  த.வெ.க. கூட்டணி ஆட்சியில் பங்கேற்றால் அது ஜனநாயகம். ஆனால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சி அமைக்க முயல்கின்றன என வதந்தி பரவினாலே அது அபச்சாரம். அதாவது எல்லா அறத்தையும் அரசியல் ஒழுக்கத்தையும் தி.மு.க.விற்கு மட்டுமே கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி என்ற திட்டமிட்டுப் பரப்பிய வதந்தியை தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற ஒரு சாக்காக ஒவ்வொருவராக பயன்படுத்தினர். அதை ஊடகங்களில் சிலர் இடையறாது பரப்பினர். நடக்காத ஒன்றைக் காட்டி பல நாடகங்களை நடத்தினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தங்கள் ஆதரவின்மூலம் த.வெ.க.வை தங்கள் விருப்பப்படி செயல்படச் செய்யலாம் என விஜய்யின் திடீர் கூட்டாளிகள் கனவு கண்டனர். ஆனால் விஜய்யின்  ‘ ஒருஜினல் ஓனர்’ டெல்லியில் இருக்கிறார் என்பதை நன்கறிந்தும் வாராது வந்த மாமணிபோல தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை எப்படியாவது இறுகப் பற்றிக்கொண்டு அந்த உண்மையை நம்பவிரும்பாமல் இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் த.வெ.க. இப்போது அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்திருக்கிறது. ஏற்கனவே தி.மு.க. கூட்டணி கட்சிகளை தன்பக்கம் கொண்டு வந்தாகி விட்டது. பின்னர் அ.ம.மு.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கியாகிவிட்டது. அடுத்ததாக அ.தி.மு.கவை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்டால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வந்த கட்சிகளை சார்ந்து ஆட்சி நடத்தவேண்டியதில்லை. அ.தி.மு.க.தான் 
த.வெ.க.வின் இயற்கையான கூட்டாளி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே அ.தி.மு.க.வின் வேலுமணி  அணியை ‘ரிசர்வ்’வில் வைத்துக்கொண்டு தங்களுடைய திடீர் கூட்டாளிகளுக்கு ஒரு செய்தியை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ‘ உங்கள் கொள்கை அரசியலை எல்லாம் சுருட்டி வைத்துவிட்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்கலாம்’ என்பதுதான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது த.வெ.க.வின் திடீர் நண்பர்களுக்கு திகிலூட்டி விட்டது. இப்போது அவர்கள் கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் குற்றச் செயல்கள் குறித்தோ, மின் வெட்டு போன்ற பிரச்சினைகள் குறித்தோ ஆளும் கட்சினரின் அடாவடித் தனங்கள் குறித்தோ வாயைத் திறக்க மறுக்கிறார்கள். மாறாக த.வெ.க. அரசிற்கு வக்காலத்து வாங்குகிற அதன் செய்தித் தொடர்பாளர்களாகவே இந்த திடீர் கூட்டாளிகள் மாறிப்போனதுடன் ‘ தி.மு.க.வினர் எடுத்ததெற்கெல்லாம் இந்த அரசை குறை சொல்லக்கூடது ‘ என அறிவுரை வழங்கும் அளவு சந்திரமுகியாகவே மாறி நிற்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனாலும் அவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வுடன் இணையும் எம்.எல்.ஏ.களை விஜய் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றுமன்றாடுகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வந்தால் தங்கள் இடம் காலியாகிவிடும் என்பதுதான். இன்னும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் ராஜினாமா செய்தால் சட்டமன்ற பெரும்பான்மைக்கான இடங்களும் குறைந்துவிடும், த.வெ.க. இப்போது இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டே இடைத் தேர்தல்வரை ஆட்சி நடத்த முடியும். இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படாத ஒரு ஆட்சியை நடத்துவதுதான்  விஜய்யின் நோக்கம். அப்படி தேவை  என்றால் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு ஓடோடி வந்த ராகுல் காந்திக்கு பதில் மரியாதையாக கேரளாவில் காங்கிரஸ் மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு போயிருக்கலாம். அல்லது பிரதமரை சந்திக்க டெல்லி சென்றவர் ராகுல் காந்தியையோ சோனியா காந்தியையோ சந்தித்திருக்காலாம். செய்யவில்லை என்பதிலிருந்தே விஜய் காங்கிரஸை எப்படிப் பார்க்ககிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேலும் அப்படிச் செய்தால் அதை மோடியோ அமித்ஷாவோ விரும்பமாட்டார்கள் என்று விஜய்க்கு நன்கு தெரியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்சித்தாவல் என்பதை இந்தியா முழுக்க ‘ நார்மலைஸ்’ செய்த கட்சி பா.ஜ.க. என்றால் இருந்த இடத்தில் இருந்தே எதிர்முகாமிற்கு போவதில் எந்தக் கூச்சமும் இல்லாதவர்களைக்கொண்ட கட்சி காங்கிரஸ். இன்னொரு கட்சியின் எம்.எல்.ஏகளை தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்து பிறகு அவர்களை இடைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பாகவே போட்டியிடச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி அதிகாரத்தை கைப்பற்றும் மாடலை இந்தியாவிலேயே அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க. அந்த மாடல்தான் இன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் செயல்படுத்தப்படு கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பல மாநிலங்களில் இதுபோன்ற தங்கள் கட்சி எம்.எல்.ஏ.களையும், எம்.பி.க்களையும் பா.ஜ.க. விலைக்கு வாங்கியபோது கதறிய காங்கிரஸ் இப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில்  இணைவது குதிரைபேரமே அல்ல என்று சொல்லும் அளவு சென்றிருக்கின்றனர். ஊடகங்களில் த.வெ.க. விற்கு ஊழியம் செய்யும் பல அரசியல் விமர்சகர்களின் காண்ட்ராக்ட் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் இதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அந்தந்த கட்சிகளைத்தான் செல்வாக்கிழக்கச் செய்யுமே தவிர தி.மு.க.வை அல்ல. த.வெ.க. இப்போதையை தங்களது தற்காலிக கூட்டாளிகளை கழற்றிவிட்டுவிட்டு அசல் கூட்டாளிகளான பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் இணைந்து 2029 நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண்பதுதான் திட்டம். இடைக்கால  ஏற்பாடாக இப்போது தன்னுடன் வைத்திருக்கும் கூட்டாளிகளை வெளியேற்றுவதற்கான அல்லது வெளியேறுவதற்கான சூழலை விஜய் உருவாக்குவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சற்று நிதானியுங்கள் தோழர்களே… அனுசரிப்ப தற்கும் விட்டுக்கொடுப்பதற்கும் விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.விற்கு கூட்டணி விஷயத்தில் ஏற்பட்டிருப்பது தோல்வியோ பலவீனமோ அல்ல. காட்சிகள் மாறும்போது கூட்டணிகளும் மாறும். இந்த தற்காலிக இடைவேளையை தி.மு.க.வின் அழிவு என்று குதூகலிப்பவர்கள் கடந்த காலத்தைப்போலவே எதிர்காலத்திலும் ஏமாற்றமடைவார்கள்.  இஸ்லாமியர்கள், தலித்துகள், விளிம்பு நிலை மாந்தர்களின் உரிமைகளையும் நலன்களையும்  எப்போதும் தி.மு.க. பாதுகாத்து வந்திருக்கிறது. அவர்களை தி.மு.க.வை விட்டு எவராலும் பிரிக்க இயலாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>