<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,957,919" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 30 2026 03:37:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260530T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30052026-CHN-05" position.sequence="05" ex-ref="30052026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="58">தனிமைப்படுத்தப் படுகிறதா தி.மு.க.? </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup682970_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="15.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">.மு.க. அதற்கு எதி­ரான பொய்­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் எதிர்­கொள்­வது இது முதல் முறை­யல்ல. தி.மு.க. தொடங்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அதற்கு எதி­ரான கட்­டுக் கதை­களை எதிர்த்­துப் போரா­டித்­தான் 75 ஆண்­டு­க­ளாக இந்த இயக்­கம் தன்னை நிலை­நி­றுத்­திக்­கொண்­டி ­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. தலை­வர் நம்­மோடு இருந்­த­வர்­கள்­மேல் கடு­மை­யான வார்த்­தை­களை பிர­யோ­கிக்க கூடாது என அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றார். அதே சம­யம் அர­சி­யல் களத்­தில் என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை ஆராய்­வது நமது கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது ஊட­கங்­க­ளில் பரப்­பப்­ப­டும் கட்­டுக்­க­தை­க­ளில் ஒன்று தி.மு.க.வுடன் இருந்த கூட்­ட­ணிக் கட்­சி­கள் இப்­போது த.வெ.கவை ஆத­ரிப்­ப­தால் தி.மு.க. பல­வீ­ன­ம­டைந்து விட்­டது என்­ப­தா­கும். அர­சி­யல் வர­லாறு தெரி­யா­த­வர்­க­ளும் தி.மு.க. வர­லாறு தெரி­யா­த­வர்­க­ளும் யாரையோ திருப்­திப்­ப­டுத்­தவோ அல்­லது தங்­கள் சுய வன்­மத்தை தீர்த்­துக்­கொள்­ளவோ சொல்­லும் கதை இது. தமிழ் நாட்­டின் தேர்­தல் வர­லாற்றை எடுத்­துப் பார்த்­தால் தேர்­த­லுக்கு தேர்­தல் கூட்­ட­ணி­கள் மாறிக்­கொண்டே இருந்­தி­ருக்­கின்­றன. இந்­தியா முழு­மைக்­குமே இது பொருந்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு ஒரே விதி­வி­லக்­காக தி.மு.க. தலை­வர் ஒரு கூட்­ட­ணியை எட்டு ஆண்­டு­க­ளாக கட்­டிக் காத்­தார். அதை வெற்­றி­க­ர­மான கூட்­ட­ணி­யாக கொண்டு செலுத்­தி­னார். கொள்கை வழிப்­பட்ட கூட்­ட­ணி­யாக அதை  வலி­மைப்­ப­டுத்­தி­னார். இரண்டு நாடாளு மன்­றத் தேர்­தல்­கள், இரண்டு சட்­ட­மன்ற தேர்­தல்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் என களம் கண்ட இந்­தக் கூட்­டணி 2026ல் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மட்­டும் ஒரு புதிய சூழ­லால் வெற்­றி­வாய்ப்பை இழந்த போதும் ஒன்­ற­ரை­கோ­டிக்­கும் மேல் வாக்­கு­க­ளைப் பெற்று 73 இடங்­க­ளைப் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் தி.மு.க. 54 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது காங்­கி­ரஸ் 5 இடங்­கள்,வி.சி.க.: 2 இடங்­கள், சி.பி.எம். (CPM)2, இடங்­கள் சி,பி.ஐ. (CPI):  இடங்­கள், ம.தி.மு.க. 2 இடங்­கள்,  ஐ.யு.எம்.எல். 2 இடங்­கள், கொ.ம.தே.க., 1 இடம், ம.ம.க 1 இடம், ம.ஜ.க 1 இடம் வீதம் வெற்றி பெற்­றன. இதன் பொருள் என்­ன­வென்­றால் தி.மு.க. கடும் பின்­ன­டை­வைச் சந்­தித்த ஒரு தேர்­த­லில்­கூட கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­காக கடு­மை­யாக உழைத்து அவர்­க­ளின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்தி அவர்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­ வத்­தைப் பெற்­றுத் தந்­தி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டின் மற்­றொரு மிகப்­பெ­ரிய கட­சி­யான 
அ.தி.மு.க. 47 இடங்­க­ளைக் கைப்­பற்­றிய போதும் இந்­தி­யாவை ஆளும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­யான பா.ஜ.க.  1 இடத்­தி­லும்  பா.ம.க. 4 இடங்­க­ளி­லும் அ.ம.மு.க. 1 இடத்­தி­லுமே வென்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது சொல்­லுங்­கள், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் வெற்­றி­வாய்ப்பை கடு­மை­யான சூழ­லி­லும் உறு­திப் 
படுத்­திய கட்சி எது? தலை­வர் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் மிக­வும் நம்­ப­கத்­தன்மை வாய்ந்த இந்­தக் கூட்­ட­ணி­யில் முதல் தாக்­கு­த­லைத் தொடுத்­தது காங்­கி­ரஸ். பிறகு வேறு சில கட்­சி­கள் அதைப்­பின் தொடர்ந்­தன. தேர்­த­லுக்கு முன்­பா­கவே இட பேரங்­கள், ஆட்­சி­யில் பங்கு கோஷங்­கள் பொது­வெ­ளி­யில் முன்­வை க்­கப்­பட்­டன. எட்டு ஆண்­டு­க­ளாக நம்­ப­க­மான கூட்­டணி  என்ற நம்­பிக்­கையை சிதறு  தேங்­காயை போல ஒவ்­வொ­ரு­வ­ராக உடைத்­தன. பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் பல வரு­டம் இந்­தக் கூட்­ட­ணியை உடைப் பதற்­காக செய்த முயற்­சி­களை தி.மு.க. கூட்­ட­ணி­லி­ருந்த சிலரே தங்­க­ளது சில தனிப்­பட்ட அபி­லா­ஷை­க­ளுக்­காக சித­று­தேங் ­கா­யை­போல சித­ற­டித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது தி.மு.க.விற்கு செய்த துரோ­கம் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு செய்த துரோ­க­மா­கும். பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக நலன், சமூக நீதி, மாநில உரி­மை­கள் சார்ந்து மிகப்­பெ­ரிய பாய்ச்­சலை நிகழ்த்­திக்­கொண்­டி­ருந்த ஒரு அரசை தோல்­வி­ய­டை­யச் செய்­த­தில் இவர்­க­ளுக்கு முக்­கிய பங்­குண்டு. இதில் சில கட்­சி­க­ளுக்­குள் ஊடு­ரு­விய பா.ஜ.க. மற்­றும்  த.வெ.க. ஏஜெண்­டு­கள் இந்த காரி­யத்தை  வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">த.வெ.க கூட்­டணி உண்­மை­யி­லேயே 
ஒரு கூட்­ட­ணியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்­த­லில் விஜய் அழைத்­தும்­கூட யாரும் அவ­ரு­டன் கூட்­டணி சேர முன்­வ­ர­வில்லை. காங்­கி­ரஸ் உள்­ளிட்ட சில கட்­சி­கள் விஜய்ய்­யு­டன் ரக­சிய பேச்­சு­வார்த்­தை­யில் இருந்­த­போ­தும் அவர்­கள் தி,மு.க. கூட்­ட­ணி­யி­லேயே நீடித்­த­னர். விஜய்­யின் அர­சி­யலை சிலர் கடு­மை­யாக விமர்­சிக்­க­வும் செய்­த­னர். கார­ணம் தி.மு.க. கூட்­டணி தான் வெற்றி பெறும் என எல்­லா­த­ரப்­பி­ன­ரும் உறு­தி­யாக நம்­பி­னர். வெற்­றி­யின் பக்­கம் இருப்­ப­து­தான் கொள்கை என நினைத்­தி­ருந்­த­னர் என்­பதை காலம் நிரூ­பித்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.விற்கு பெரும்­பான்மை கிடைக்­காத நிலை­யில் அ.தி.மு.க. ஆத­ர­வ­ளிக்­கத் தயா­ராக இருந்த போதும் தி.மு.க. கூட்­ட­ணியை உடைக்க வேண்­டும் என்ற சதித்­திட்­டத்­திற்கு முத­லி­டம் அளிக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி ஆட்சி வந்­து­வி­டும் என்ற பூச்­சாண்டி பரப்­பப்­பட்­டது. தனிப்­பெ­ரும் கட்­சி­யா­கவே த.வெ.க.வை ஆட்­சி­ய­மைக்க அழைக்க முடி­யும் என்­ற­போ­தும் ஆளு­நர் 118 பேர் ஆத­ரவு வேண்­டும் என அடம் பிடித்­தார்.  காங்­கி­ரஸ் தேர்­தல் முடி­வு­கள் வந்­த­தும் தனது பழைய திட்­டத்­தின்­படி த.வெ.க.வை நோக்கி ஓடோ­டிச் சென்­றது. தி.மு.க. கூட்­ட­ணிக் கட்­சி­கள் ஆளு­நர் ஆட்சி வராம லிருக்க த.வெ.க வை வெளியே இருந்து ஆத­ரிக்க போவ­தா­க­வும் ஆனால் தி.மு.க. கூட்­ட­ணி­யில் நீடிப்­ப­தா­க­வும் அறி­வித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிறகு ‘சோபா மாடல்’ அறி­மு­க­மா­ன­தும் எல்­லாம் தலை­கீ­ழா­னது. மின்­னல் வேகத்­தில் முடி­வு­கள் மாறின. காங்­கி­ர­சு­டன் சேர்ந்து வி.சி.க.வும் இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்­கும் த.வெ.க. மந்­திரி சபை­யில் இணைந்­த­னர். த.வெ.க.வை எதிர்த்து தி.மு.க. கூட்­ட­ணி­யில் களம் கண்­ட­வர்­கள் மூன்றே வாரத்­தில் அதே த.வெ.க. கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் மின்­னல் வேகத்­தில் களம் கண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்கு சிலர் சொன்ன கார­ணம் என்ன தெரி­யுமா? தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முயன்­றன, அதில் தங்­க­ளுக்கு உடன்­பா­டில்லை என்று சொல்ல ஆரம்­பித்­த­னர். யார் அப்­படி உங்­க­ளி­டம் சொன்­னார்­கள் என்று கேட்­டால்’அதி­கா­ர­பூர்­வ­மாக யாரும் சொல்­ல­வில்லை, சும்மா கேள்­விப்­பட்­டோம்’ என மழுப்­பி­னார்­கள். அதா­வது தி.மு.க. கூட்­ட­ணி­யில் நின்று வெற்றி பெற்று சில நாட்­க­ளி­லேயே தி.மு.க.வை அழிப்­ப­தற்­கா­கவே உரு­வாக்­க­பட்ட  த.வெ.க. கூட்­டணி ஆட்­சி­யில் பங்­கேற்­றால் அது ஜன­நா­ய­கம். ஆனால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்­டணி ஆட்சி அமைக்க முயல்­கின்­றன என வதந்தி பர­வி­னாலே அது அபச்­சா­ரம். அதா­வது எல்லா அறத்­தை­யும் அர­சி­யல் ஒழுக்­கத்­தை­யும் தி.மு.க.விற்கு மட்­டுமே கற்­பித்­துக்­கொண்­டி­ருக்க வேண்­டும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்­டணி என்ற திட்­ட­மிட்­டுப் பரப்­பிய வதந்­தியை தி.மு.க. கூட்­ட­ணியை விட்டு வெளி­யேற ஒரு சாக்­காக ஒவ்­வொ­ரு­வ­ராக பயன்­ப­டுத்­தி­னர். அதை ஊட­கங்­க­ளில் சிலர் இடை­ய­றாது பரப்­பி­னர். நடக்­காத ஒன்­றைக் காட்டி பல நாட­கங்­களை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தங்­கள் ஆத­ர­வின்­மூ­லம் த.வெ.க.வை தங்­கள் விருப்­பப்­படி செயல்­ப­டச் செய்­ய­லாம் என விஜய்­யின் திடீர் கூட்­டா­ளி­கள் கனவு கண்­ட­னர். ஆனால் விஜய்­யின்  ‘ ஒரிஜி­னல் ஓனர்’ டெல்­லி­யில் இருக்­கி­றார் என்­பதை நன்­க­றிந்­தும் வாராது வந்த மாம­ணி­போல தங்­க­ளுக்­குக் கிடைத்த வாய்ப்பை எப்­ப­டி­யா­வது இறு­கப் பற்­றிக்­கொண்டு அந்த உண்­மையை நம்­ப­வி­ரும்­பா­மல் இருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் த.வெ.க. இப்­போது அ.தி.மு.க.வை இரண்­டாக உடைத்­தி­ருக்­கி­றது. ஏற்­க­னவே தி.மு.க. கூட்­டணி கட்­சி­களை தன்­பக்­கம் கொண்டு வந்­தாகி விட்­டது. பின்­னர் அ.ம.மு.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்­கி­யா­கி­விட்­டது. அடுத்­த­தாக அ.தி.மு.கவை உடைத்து தங்­கள் பக்­கம் கொண்டு வந்­து­விட்­டால் தி.மு.க. கூட்­ட­ணி­யி­லி­ருந்து வந்த கட்­சி­களை சார்ந்து ஆட்சி நடத்­த­வேண்­டி­ய­தில்லை. அ.தி.மு.க.தான் 
த.வெ.க.வின் இயற்­கை­யான கூட்­டாளி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே அ.தி.மு.க.வின் வேலு­மணி  அணியை ‘ரிசர்வ்’­வில் வைத்­துக்­கொண்டு தங்­க­ளு­டைய திடீர் கூட்­டா­ளி­க­ளுக்கு ஒரு செய்­தியை மறை­மு­க­மா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார். ‘ உங்­கள் கொள்கை அர­சி­யலை எல்­லாம் சுருட்டி வைத்­து­விட்டு எங்­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்­தால் மட்­டுமே கூட்­ட­ணி­யில் நீடிக்­க­லாம்’ என்­ப­து­தான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது த.வெ.க.வின் திடீர் நண்­பர்­க­ளுக்கு திகி­லூட்டி விட்­டது. இப்­போது அவர்­கள் கடந்த மூன்று வாரங்­க­ளாக தமிழ்­நாட்­டில் நடந்­து­கொண்­டி­ருக்­கும் குற்­றச் செயல்­கள் குறித்தோ, மின் வெட்டு போன்ற பிரச்­சி­னை­கள் குறித்தோ ஆளும் கட்­சி­ன­ரின் அடா­வ­டித் தனங்­கள் குறித்தோ வாயைத் திறக்க மறுக்­கி­றார்­கள். மாறாக த.வெ.க. அர­சிற்கு வக்­கா­லத்து வாங்­கு­கிற அதன் செய்­தித் தொடர்­பா­ளர்­க­ளா­கவே இந்த திடீர் கூட்­டா­ளி­கள் மாறிப்­போ­ன­து­டன் ‘ தி.மு.க.வினர் எடுத்­த­தெற்­கெல்­லாம் இந்த அரசை குறை சொல்­லக்­கூ­டது ‘ என அறி­வுரை வழங்­கும் அளவு சந்­தி­ர­மு­கி­யா­கவே மாறி நிற்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனா­லும் அவர்­கள் ஒரு விஷ­யத்­தில் மட்­டும் தங்­கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அ.தி.மு.க.விலி­ருந்து விலகி த.வெ.க.வுடன் இணை­யும் எம்.எல்.ஏ.களை விஜய் சேர்த்­துக்­கொள்­ளக்­கூ­டாது என்று மன்­றா­டு­கி­றார்­கள். அதற்­குக் கார­ணம் அவர்­கள் வந்­தால் தங்­கள் இடம் காலி­யா­கி­வி­டும் என்­ப­து­தான். இன்­னும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் ராஜி­னாமா செய்­தால் சட்­ட­மன்ற பெரும்­பான்­மைக்­கான இடங்­க­ளும் குறைந்­து­வி­டும், த.வெ.க. இப்­போது இருக்­கும் இடத்தை வைத்­துக்­கொண்டே இடைத் தேர்­தல்­வரை ஆட்சி நடத்த முடி­யும். இந்­தக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தயவு தேவைப்­ப­டாத ஒரு ஆட்­சியை நடத்­து­வ­து­தான்  விஜய்­யின் நோக்­கம். அப்­படி தேவை  என்­றால் விஜய்­யின் பத­வி­யேற்பு விழா­விற்கு ஓடோடி வந்த ராகுல் காந்­திக்கு பதில் மரி­யா­தை­யாக கேர­ளா­வில் காங்­கி­ரஸ் மந்­தி­ரி­சபை பத­வி­யேற்பு விழா­விற்கு போயி­ருக்­க­லாம். அல்­லது பிர­த­மரை சந்­திக்க டெல்லி சென்­ற­வர் ராகுல் காந்­தி­யையோ சோனியா காந்­தி­யையோ சந்­தித்­தி­ருக்­கா­லாம். செய்­ய­வில்லை என்­ப­தி­லி­ருந்தே விஜய் காங்­கி­ரஸை எப்­ப­டிப் பார்க்­க­கி­றார் என்­ப­தைப் புரிந்­து­கொள்­ள­லாம். மேலும் அப்­ப­டிச் செய்­தால் அதை மோடியோ அமித்­ஷாவோ விரும்­ப­மாட்­டார்­கள் என்று விஜய்க்கு நன்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்­சித்­தா­வல் என்­பதை இந்­தியா முழுக்க ‘ நார்­ம­லைஸ்’ செய்த கட்சி பா.ஜ.க. என்­றால் இருந்த இடத்­தில் இருந்தே எதிர்­மு­கா­மிற்குபோவ­தில் எந்­தக் கூச்­ச­மும் இல்­லா­த­வர்­க­ளைக்­கொண்ட கட்சி காங்­கி­ரஸ். இன்­னொரு கட்­சி­யின் எம்.எல்.ஏகளை தங்­கள் பத­வியை ராஜி­னாமா செய்ய வைத்து பிறகு அவர்­களை இடைத் தேர்­த­லில் தங்­கள் கட்­சி­யின் சார்­பா­கவே போட்­டி­யி­டச் செய்து ஆட்­சிக் கவிழ்ப்பை நடத்தி அதி­கா­ரத்தை கைப்­பற்­றும் மாடலை இந்­தி­யா­வி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­திய கட்சி பா.ஜ.க. அந்த மாடல்­தான் இன்று தமிழ்­நாட்­டில் பா.ஜ.க.வால் செயல்­ப­டுத்­தப்­படு கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பல மாநி­லங்­க­ளில் இது­போன்ற தங்­கள் கட்சி எம்.எல்.ஏ.களை­யும், எம்.பி.க்களை­யும் பா.ஜ.க. விலைக்கு வாங்­கி­ய­போது கத­றிய காங்­கி­ரஸ் இப்­போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜி­னாமா செய்­து­விட்டு த.வெ.க.வில்  இணை­வது குதி­ரை­பே­ரமே அல்ல என்று சொல்­லும் அளவு சென்­றி­ருக்­கின்­ற­னர். ஊட­கங்­க­ளில் த.வெ.க. விற்கு ஊழி­யம் செய்­யும் பல அர­சி­யல் விமர்­ச­கர்­க­ளின் காண்ட்­ராக்ட் நீட்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவர்­க­ளும் இதை நியா­யப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சந்­தர்ப்­ப­வாத நிலைப்­பா­டு­கள் அந்­தந்த கட்­சி­க­ளைத்­தான் செல்­வாக்­கி­ழக்­கச் செய்­யுமே தவிர தி.மு.க.வை அல்ல. த.வெ.க. இப்­போ­தைய தங்­க­ளது தற்­கா­லிக கூட்­டா­ளி­களை கழற்­றி­விட்­டு­விட்டு அசல் கூட்­டா­ளி­க­ளான பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் இணைந்து 2029 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் களம் காண்­ப­து­தான் திட்­டம். இடைக்­கால  ஏற்­பா­டாக இப்­போது தன்­னு­டன் வைத்­தி­ருக்­கும் கூட்­டா­ளி­களை வெளி­யேற்­று­வ­தற்­கான அல்­லது வெளி­யே­று­வ­தற்­கான சூழலை விஜய் உரு­வாக்­கு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சற்று நிதா­னி­யுங்­கள் தோழர்­களே… அனு­ச­ரிப்ப தற்­கும் விட்­டுக்­கொ­டுப்­ப­தற்­கும் விஜய், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.விற்கு கூட்­டணி விஷ­யத்­தில் ஏற்­பட்­டி­ருப்­பது தோல்­வியோ பல­வீ­னமோ அல்ல. காட்­சி­கள் மாறும் போது கூட்­ட­ணி­க­ளும் மாறும். இந்த தற்­கா­லிக இடை­வே­ளையை தி.மு.க.வின் அழிவு என்று குதூ­க­லிப்­ப­ வர்­கள் கடந்த காலத்­தைப்­போ­லவே எதிர்­கா­லத்­தி­லும் ஏமாற்­ற­ம­டை­வார்­கள்.  இஸ்­லாமியர்­கள், தலித்­து­கள்,விளிம்பு நிலை மாந்­தர்­க­ளின் உரி­மை­க­ளை­யும் நலன்­க­ளை­யும்  எப்­போ­தும் தி.மு.க. பாது­காத்து வந்­தி­ருக்­கி­றது. அவர்­களை தி.மு.க.வை விட்டு எவ­ரா­லும் பிரிக்க இய­லாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>