<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,638,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 30 2026 03:38:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260530T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30052026-CHN-06" position.sequence="06" ex-ref="30052026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24"> பல்கலை வேந்தராக முதலமைச்சர்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையாம்!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">த.வெ.க. அரசு உயர்கல்வித் துறை அமைச்சர் பேசுவது, வன்மையான கண்டனத்திற்குரியது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="30">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup685079_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="veeramani_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, மே 30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தி­யா­வி­லேயே வேறு எந்த மாநி­ல­மும் பெறாத ராக்­கெட் வேகக் கல்வி வளர்ச்­சி­யைத் பெற்­றுள்ள தமிழ்­நாட்­டில், பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு வேந்­த­ராக ஆளு­நரே இருக்­க­லா­மாம்; முத­ல­மைச்­சர்­தான் இருக்­க­வேண்­டும் என்­பது அவ­சி­யம் இல்­லை­யாம்! தமிழ்­நாட்­டுக் கல்­விப் புரட்சி வர­லாறு தெரி­யா­மல், உயர்­கல்­வித் துறை அமைச்­சர் இப்­ப­டிப் பேசு­வது, வன்­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­யது! கல்­வித் துறை பற்­றிய திட்­ட­வட்ட கொள்கை நிலைப்­பாட்டை தாம­திக்­கா­மல் அறி­விக்­க­வேண்­டி­யது அவ­சர, அவ­சி­ய­மா­கும் என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள்அறிக்கை விடுத்­துள்­ளார். அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">புதி­தாக அமைந்­துள்ள முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­க­ளின் கட்சி தனிப்­பெ­ரும்­பான்மை இல்­லா­வி­டி­னும், அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்­றி­ருந்த நிலை­யில், ‘‘ஆட்­சி­யில் அதி­கா­ரத்­தில் பங்கு’’ என்ற பேர­வா­வு­டன், புதிய ஆட்சி அமை­வ­தற்கு முன்­பி­ருந்தே ரக­சி­யத் தொடர்­பு­க­ளைப் பேணி வந்த காங்­கி­ரஸ் கட்சி, பின்­னர், தி.மு.க.வுடன் இருந்த கூட்­ட­ணியை வெளிப்­ப­டை­யாக முறித்­துக்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வட­நாட்­டி­லி­ருந்து வந்த காங்­கி­ர­ஸின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஒரு­வ­ரும், இந்த உள்­வி­வ­கா­ரங்­க­ளைத் தொடக்­கம் முதல் கவ­னித்து வந்த பிர­வீன் சக்­ர­வர்த்தி மற்­றும் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் உள்­ளிட்­டோ­ரும் த.வெ.க. கட்­சி­யின் அலு­வ­ல­கத்­திற்கு ஓடோ­டிச் சென்று கூட்­ட­ணி­யில் இணைந்து, ஆத­ரவு தந்­தது. மேலும், இந்­தத் கூட்­டணி இப்­போது மட்­டு­மல்­லா­மல், வர­வி­ருக்­கும் உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும், அதற்­குப் பிற­கும்­கூட தொட­ரும் என்று காங்­கி­ரஸ் கட்சி தானா­கவே அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">தங்­க­ளது சுய­ந­லப் போக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­ட­வர்­க­ளில் ஒரு­வர், முன்பு தி.மு.க. கூட்­டணி என்­பது ‘‘கொள்­கைக் கூட்­டணி’’ என்று கூறி­வந்­தார். ஆனால் இப்­போது அதற்கு முற்­றி­லும் மாறாக, ‘‘அது வெறும் தேர்­தல் கூட்­ட­ணி­தான்; தேர்­தல் கூட்­டணி மட்­டும்­தான்’’ என்று கூறி தங்­க­ளது தன்­மை­யைக் காட்­டிக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. தலை­மை­யில் உள்ள கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்டு, காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் வெற்றி பெற்ற அய்ந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைக் கொடுத்து, இரண்டு அமைச்­சர் பத­வி­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதைப் பெற்­றுப் பொறுப்­பேற்ற காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர் விசு­வ­நா­தன் அவர்­கள், செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில், எடுத்த எடுப்­பி­லேயே, ‘‘முந்­தைய அர­சின் கொள்­கை­களை நாங்­கள் பின்­பற்­ற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு வேந்­த­ராக ஆளு­நரே இருக்­க­லாம்; முத­ல­மைச்­சர்­தான் இருக்­க­வேண்­டும் என்­பது அவ­சி­யம் இல்லை. ஆளு­ந­ரு­டன் ஒத்­துப் போவ­து­தான் சரி’’ என்ற கருத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அத­னால், பல­ரது கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கல்­வித்­து­றை­யில் ஓர் அமை­திப் புரட்­சியை ஏற்­ப­டுத்­திய தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘உயர்­கல்­வித் துறை’ என்­பது, உயர் கல்­விக்­கான துறை­யாக மட்­டு­மல்­லா­மல், கல்வி நிலை­யைத் தமிழ்­நாட்­டில் உயர்த்­திய துறை­யா­க­வும் அமைந்­த­து­தான் தமிழ்­நாட்­டின் சிறப்பு! இந்­நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் ஒடுக்­கப்­பட்டு, வாய்ப்பு மறுக்­கப்­பட்டு, மனு­தர்­மம் கோலோச்­சிய நாட்­டில், குல­தர்­மக் கல்வி கொண்டு வந்து திணிக்­கப்­ பட்ட வர­லாற்றை மாற்­றி­ய­மைத்­தது, காம­ரா­ச­ரின் கல்­விப் புரட்சி. அதை மேலும் பெருக்­கிய அறி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் மற்­றும் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆகி­யோ­ரின் ஆட்­சி­க­ளில், இந்­தி­யா­வி­லேயே வேறு எந்த மாநி­ல­மும் பெறாத ராக்­கெட் வேகக் கல்வி வளர்ச்­சி­யைத் தமிழ்­நாடு பெற்­றுள்­ளது. எல்லா மாவட்­டங்­க­ளி­லும் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், உயர்­ப­டிப்­பு­கள்என கல்­வித்­து­றை­யில் ஓர் அமை­திப் புரட்­சியை இவர்­கள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் ஓர் ஆளு­ந­ரின் ஒத்­து­ழை­யா­மை­யை­யும் தாண்­டிப் பல்­வேறு சாத­னை­கள் நிகழ்த்­தப்­பட்­ டன. பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் ஆர்.எஸ்.எஸ். கொள்­கை­க­ளைத் திணிக்­கும் ஆளு­ந­ரின் முயற்­சி­க­ளுக்­குக் கடு­மை­யான எதிர்ப்­பு­கள் கிளம்­பின. இந்த நிலை­யில், சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தாக்­களை ஆளு­நர் கால­வ­ரை­யறை இன்றி நிறுத்தி வைப்­ப­தைக் கண்­டித்து உச்ச நீதி­மன்­றத்­தில் சட்­டப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது. ‘‘மசோ­தாக்­களை ஆளு­நர் கால­வ­ரை­யற்று நிறுத்தி வைத்து, ஊறு­காய் ஜாடி­யில் ஊற வைக்­கக் கூடாது’’ என்று நீதி­மன்­றமே சுட்­டிக்­காட்­டும் அள­வுக்­குத் தமிழ்­நாடு ஒரு பெரிய வர­லாற்றை உரு­வாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">திட்­ட­மிட்­டுக் கால­தா­ம­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒன்­றி­யத்­தில் உள்ள பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு, உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பை மறுக்க முடி­யா­த­ தால் குறுக்கு வழி­யைக் கையாண்­டது. இதன்­படி, குடி­ய­ர­சுத் தலை­வர் மூல­மாக உச்ச நீதி­மன்­றத்­தி­டம், ‘கருத்­துரை’ என்ற பெய­ரில் ஒரு திட்­டத்­தைச் சமர்ப்­பித்து, திட்­ட­மிட்­டுக் கால­தா­ம­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் உள்ள 11 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் துணை­வேந்­தர்­கள் நிய­மிக்­கப்­ப­டா­மல் இருக்­கும் தற்­போ­தைய சூழ்­நிலை, உயர்­கல்­வி­யில் தமிழ்­நாடு அடைந்­துள்ள ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் இமா­ல­யச் சாத­னை­களை மறைக்­கும் வகை­யில், கல்­விக் கண்­க­ளைக் குத்­தும் முயற்­சி­யில் ஈடு­ப­டக்­கூ­டாது. மாநில உரி­மை­களை எக்­கா­ர­ணம் கொண்­டும் விட்­டுக்­கொ­டுக்­கக் கூடாது. அதே­நே­ரத்­தில், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மனு­தர்­மக் கண்­ணோட்­டத்­து­ட­னான கல்­வித் திணிப்பு முயற்­சி­க­ளைத் தடுத்து நிறுத்த வேண்­டிய மிக முக்­கி­ய­மா­ன­தொரு கால­கட்­டத்­தில் நாம் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">இந்­தக் கருத்து யாரு­டைய முடிவு?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஜோசப் விஜய் தலை­மை­யில் அமைந்த கூட்­டணி ஆட்சி, இந்­தப் பிரச்­சி­னை­ யில், எப்­படி? என்ன நிலைப்­பாடு எடுக்­கப் போகி­றது? ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் முட்­டுக்­கட்டை முயற்­சி­ களை எப்­படி எதிர்­கொள்­ளப் போகி­றது? என்ற கேள்­வி­கள் எழுந்­துள்ள முக்­கிய தரு­ணத்­தில், காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில் அமைச்­ச­ராக உள்ள உயர்­கல்­வித் துறை அமைச்­சர் விசு­வ­நா­தன் அவர்­கள் இப்­படி கூறி­யி­ருப்­பது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அவ­ரது கருத்தா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அவர் சார்ந்த கட்­சி­யின் கருத்தா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அவ­ருக்கு அமைச்­சர் பதவி தந்த முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­க­ளது கொள்கை முடிவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்ற சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தும் கேள்­வி­க­ளுக்கு இடந்­த­ரும் நிலை­யில், அவ­ரது பேட்டி அமை­வது சரி­யா­ன­தல்ல. ‘‘ஊட­கங்­க­ளில் தவ­று­த­லா­கப் போட்­டு­விட்­டார்­கள்’’ என்ற சமா­தா­னம் தொலைக்­காட்சி – வீடியோ காலத்­தில் எடு­ப­டக் கூடி­ய­தல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஊழல் சாம்­ராஜ்­ஜி­யத்­தின் உற்­பத்­திக் கூடா­ர­மான ‘நீட்’ போன்ற தேர்­வு­க­ளில் உயிர்ப் பலி வாங்­கும், கார்ப்­ப­ரேட், லஞ்ச லாவண்ய போக்­கு­க­ளும், சி.பி.அய். விசா­ர­ணை­க­ளும் நடப்­ப­தால், ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான், பதவி வில­க­வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் முதல் பொது­வா­ன­வர்­கள் வரை கேட்டு வரும் நிலை­யில், தமிழ்­நாட்டு உயர்­கல்­வித் துறை­யின் புதிய அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற ஒரு­வர் இப்­ப­டித் தெளி­வின்றி பேசு­வ­தும், பின்­னர் மறுப்­ப­தும் சரி­யான தொடக்­கமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">வன்­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­யது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘கொள்­கைக் கூட்­டணி இல்லை, பத­விக் கூட்­ட­ணி­தான்’’ என்­றால், எப்­படி வேண்­டு­மா­னா­லும் பேச­லாமா? தமிழ்­நாட்­டுக் கல்­விப் புரட்சி வர­லாறு தெரி­யா­மல் இப்­படி பேசு­வது, வன்­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­ய­தல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சம­தர்­மத்­தின் குரல் ஒலிக்­க­வேண்­டிய இடத்­தில், மனு­தர்­மக் குரல் ஒலித்­தால், தமிழ்­நாடு ஒரு­போ­தும் அதை ஏற்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">அவ­சர, அவ­சி­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர், உயர்­கல்வி, பள்­ளிக் கல்­வித் துறைஉள்­ளிட்ட கல்­வித் துறை பற்­றிய தம் அர­சின், திட்­ட­வட்­ட­மான கொள்கை நிலைப்­பாட்­டைத் தாம­திக்­கா­மல் அறி­விக்­க­வேண்­டி­யது அவ­சர, அவ­சி­ய­மா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி கண்­ட­னம் தெரி­வித்­து 
உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, கலைளூர் நகர் பணிமனை, மற்றும் தியாகராயர் நகர் பணிமனை செயல் வீரர்கள் கூட்டம் கலைஞர் நகர் பணிமனையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்றசங்க பொதுச்செயலாளர் பெரம்பூர் த. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக தொழிலாளர் அணி செயலாளர், பிடிசி. ஜி.செல்வராஜ், கழக தொழிலாளர் அணி துணை செயலாளர் பிடிசி வெ.பாலு ஆலோசனை வழங்கினர். உடன் பொருளாளர் எம்.பெருமாள், துணை தலைவர் ஆர்.கந்தன், எம்.சதீஸ்குமார் (தி.நகர்), பி.சுரேஷ் (ஆவடி) மற்றும் பணிமனை நிர்வாகிகள், கே.சதீஸ்குமார், சுதர்சன், சுபாஷ்குமார். சி.நந்த கோபால், அன்புமணி, சங்கரன், செல்வம், சங்கர், புருசோத்தமன், கே.வெங்கடேசன், தியாகராஜன்.கே, முரளி, கோபி, ஜோதி, திருவாசகம் மதிவாணன், பாண்டியன், எஸ்.ரமேஷ், ரவிராஜா, சசிக்குமார், ராமகிருஷ்ணன் அமல்ராஜ், ஜெயச்சந்திரன், ஏகாம்பரம், தமிழ்செல்வன், தனபால், தினேஷ், மோகன், செந்தில், சதீஸ்குமார், ரவி, தசரதன், பாக்கியராஜ் சீனிவாசன், அன்பு, ராஜரத்தினம், அழகர் சாமி துரை, பாபு, ரங்கராஜன் லஷ்மணன், ரமேஷ், செல்வகுமார், டேவிட், ஆனந், ஆறுமுகம், சித்தார்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>