<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,718,957,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 31 2026 03:34:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260531T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="31052026-CBE-07" position.sequence="07" ex-ref="31052026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">வீர வசனம் பேசாமல் ஆசிரியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="27">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AnbilMaheshco_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, மே 31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“TET தேர்வு, ஆசி­ரி­யப் பெரு­மக்­க­ளைப் பாது­காக்­கும் பணி­யில் உடனே இறங்­குங்­கள். தய­வு­செய்து வீர­வ­ச­னம் வேண்­டாம்” என்­றும், “இன்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடை­பெற்ற சீராய்வு மனுக்­கள் மீதான விசா­ர­ணை­யில், ஏற்­க­னவே பணி­யில் உள்ள ஆசி­ரி­யர் க­ளுக்­குத் தகு­தித் தேர்­வில் இருந்து முழு­மை­யாக விலக்கு அளிக்க திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ள­தோடு, மேலும் ஓராண்டு கால நீட்­டிப்­பும் வழங்கி இருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது” என பள்­ளிக் கல்­வித்­து­றை­யின் முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“பணி­யில் இருக்­கும் ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ருக்­கும் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு”(TET) கட்­டா­யம் என 01.09.2025 அன்று உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யது. ஆசி­ரி­யர்­கள் பதவி உயர்வு பெறு­வ­தற்­கும், பணி­யில் தொடர்­வ­தற்­கும் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு கட்­டா­யம் என­வும், இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் தேர்ச்சி பெறு­தல் அவ­சி­யம் என்­றும் உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள லட்­சக்­க­ணக்­கான மூத்த ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­சர் திமுக தலை­வர் மு.க. ஸ்டாலி­னின் அறி­வு­றுத்­த­லின்­படி தீர்ப்பு வந்த மறு­நாளே, எனது தலை­மை­யில் உட­ன­டி­யாக ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. ஆசி­ரி­யர் சங்க பொறுப்­பா­ளர்­களை அழைத்து இரண்டு முறை விரி­வான கருத்­துக் கேட்­புக் கூட்­டம் நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு ஆசி­ரி­யர் கூட உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பி­னால் பாதிக்­கப்­ப­டாத வகை­யில் தமிழ்­நாடு அரசு ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் துணை நிற்­கும் என்ற உத்­த­ர­வா­தத்தை வழங்­கி­ய­தால், ஆசி­ரி­யர்­கள் மனச்­சு­மை­யின்றி பணி­யாற்­றும் சூழ­லைத் திரா­விட மாடல் அரசு உரு­வாக்­கி­யது. மேலும், அன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளோடு நானும் பள்­ளிக்­கல்­வித்­துறை உய­ர­தி­கா­ரி­க­ளும் உட­ன­டி­யாக ஆலோ­சனைநடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொடர்ந்து, உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளைக் கொண்டு சீராய்வு மனு­வைத் தாக்­கல் செய்­வது என்­றும், மூத்த ஆசி­ரி­யர்­கள் ஒரு­வர் கூட பாதிக்­கப்­ப­டா­மல் தமிழ்­நாடு அரசு தொடர்ந்து பாது­காக்­கும் என்­றும், ஆசி­ரி­யர்­கள் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்­கத் திரா­விட மாடல் அரசு துணை நிற்­கும் என்­றும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் விரி­வான அறிக்­கை­யின் மூலம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளைக் கொண்டு சீராய்வு மனு­வி­னைத் தாக்­கல் செய்­வ­தற்கு, ‘வில்­சன் அல்ல வின்­சன்’ என்று முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞ­ரால் பாராட்­டப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் வில்­சன் உள்­ளிட்ட வழக்­க­றி­ஞர்­க­ளோடு தமிழ்­நாடு அரசு ஆலோ­சனை நடத்தி, உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் சீராய்வு மனு தாக்­கல் செய்­யப்­பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விடமாடல் அர­சின் முத­ல­மைச்­சர் தலை­மை­யில் நடை­பெற்ற கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தி­லும் இது­குறித்து ஆலோ­சனை வழங்­கி­னார். இந்­தியா முழு­வ­தும் உள்ள ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காக்­கப்நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத்­தி­ருத்­தம் கொண்­டு­வர வலி­யு­றுத்த வேண்­டும் என்­கிற அன்­றைய முத­ல­மைச்­ச­ரின் அறி­வு­ரைப்­படி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேள்வி நேரத்­தில் சட்­டத்­தி­ருத்­தம்குறித்து வலி­யு­றுத்­தி­ னார்­கள். இத்­த­கைய தொடர் நட­வ­டிக்­கை­கள்மூல­மாக ஆசி­ரி­யர் சமூ­கத்­தைக் காத்துவந்­தது தி.மு.க அர­சு­தான் என்­பது ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ரும் நன்கு அறி­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­த­கைய நிலை­யில், இன்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடை­பெற்ற சீராய்வு மனுக்­கள் மீதான விசா­ர­ணை­யில், ஏற்­க­னவே பணி­யில் உள்ள ஆசி­ரி­யர்­களுக்­குத் தகு­தித் தேர்­வில் இருந்து முழு­மை­யாக விலக்கு அளிக்க திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ள­தோடு, மேலும் ஓராண்டு கால­நீட்­டிப்­பும் வழங்கி இருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பதவி உயர்­வுக்­குத் தகு­தித் தேர்வு கட்­டா­யம் என்­ப­தில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­ வில்லை. பல்­வேறு நீதி­மன்ற தீர்ப்­பு­ க­ளால், ஆரம்­பப் பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் முதல் உயர்­நிலைப்­பள்ளி தலைமை ஆசி­ரி­யர் உள்­ளிட்ட பல்­வேறு பதவி உயர்­வு­கள் வழங்­கப்­ப­டா­த­தால் நிர்­வா­கப் பணி­யி­டங்­க­ளில் சுணக்­கம் ஏற்­ப­டும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது பல ஆண்­டு­கால அனு­ப­வ­முள்ள மூத்த ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பெரும் சுமை­யா­கவே அமை­யும். திரா­விட மாடல் அர­சின் சிறப்பு முயற்­சி­யால் ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக சிறப்பு தகு­தித் தேர்வு நடத்­தப்­ப­டும் என்று அர­சாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளி­யி­டப்­பட்­டது. கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நடை­பெற்ற ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் ஆசி­ரி­யர்­க­ளின் நலன் கருதி, தேர்ச்சி பெறு­வ­தற்­கான மதிப்­பெண்­ணில் 5 சத­வீ­தத் தளர்­வும் வழங்­கப்­பட்­டது. இத­னால் ஏரா­ள­மான ஆசி­ரி­யர்­கள் பயன்­பெற்­றுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், சிறப்பு ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் அனைத்து ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் உத­வி­டும் வகை­யில், அதற்­கான பயிற்­சிக் கட்­ட­கங்­கள் (Training Modules) தயா­ரிக்­கும் பணி மற்­றும் இணை­ய­வ­ழிப் பயிற்சி வழங்­கும் பணி­யா­னது, ஆசி­ரி­யர் பயிற்சி மற்­றும் ஆராய்ச்சி நிறு­வ­னத்­தி­டம் (SCERT) ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஆனால், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு நடத்­தப்­பட உள்ள நிலை­யில், இது­வரை ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பயிற்­சிக் கட்­ட­கங்­கள் எது­வும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இணை­ய­வ­ழிப் பயிற்சி குறித்­தும் எவ்­வித அறி­விப்­பும் இல்லை. ஆகவே, ‘ரீல்ஸ்’ அர­சா­கத் திக­ழும் இன்­றைய தமிழ்­நாடு அரசு வீர­வ­ச­னம் பேசி அனைத்­தை­யும் வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருப்­ப­து­போல, இவ்­வி­ரண்­டை­யும் எளி­தா­கக் கடந்து சென்­று­வி­டா­மல் உட­ன­டி­யாக நம்­மு­டைய ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுத்­திட வேண்­டும் என வலி­யு­றுத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி, நாடா­ளு­மன்­றத்­தில் சிறப்­புச் சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வரச்­செய்து, தமிழ்­நாடு மட்­டு­மல்­லாது இந்­தியா முழு­மைக்­கு­மா­கப் பணி­யில் உள்ள மூத்த ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். பயிற்­சிக் கட்­ட­கங்­கள் மற்­றும் இணை­ய­வ­ழிப் பயிற்சி குறித்­தும் தெளி­வான விளக்­கம் அளிக்க வேண்­டும். எங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளான ஆசி­ரி­யர்­க­ளுக்கு எப்­போ­தும் நாங்­கள் துணை நிற்­போம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கிறோம்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர்  தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>