<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1038" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 01 2026 03:46:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260601T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01062026-VLR-03" position.sequence="03" ex-ref="01062026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">01.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">தி.மு.க.வை எந்த கொம்­ப­னா­லும் வீழ்த்த முடி­யாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தோல்­வி­யி­லும் நெருக்­க­டி­யி­லும் சுய­மாக மீண்­டெ­ழும் இயக்­கம் இது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="35">இளைய தலை­முறை GenZ தி.மு.க.வினர் நடத்­திய கூட்­டத்­தில் முனை­வர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="T.R.B.Raja_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை,ஜூன் 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலை­ஞர் அரங்­கில் மே 30 அன்று நடந்த  GEN Z DMK சந்­திப்பு நிகழ்­வில் பங்­கேற்ற திமுக தக­வல் தொழில்­நுட்ப அணிச் செய­லா­ளர் முனை­வர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மே நான்­காம் தேதிக்கு பிறகு தி.மு.க. இன்று மீண்­டும் வென்­றுள்­ளது என்­பதை உரக்­கச் சொல்­லி­யி­ருக்­கும் உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ருக்­கும் எனது வணக்­கங்­கள்.  தி.மு.க.வை எந்த கொம்­ப­னா­லும் அழிக்க முடி­யாது. நீங்­கள் இதை ‘ஒன்ஸ்­மோர்’ கேட்­கி­றீர்­கள். இத்­த­கைய  உணர்­வு­மிக்க அரங்­கில் ஒரு மில்­லி­யன் தடவை வெளிப்­ப­டக்­கூ­டிய சொற்­கள் இவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நேரத்­தில் இதைப் பார்ப்­ப­தற்கு இங்கே தலை­வ­ரும், இளந்­த­லை­வ­ரும் இல்­லையே, எல்­லா­வற்­றை­யும் தாண்டி என் தாத்தா கலை­ஞர் இல்­லையே என்­கிற மிகப்­பெ­ரிய ஆதங்­கம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">89 வய­தில் டுவிட்­ட­ரில் உட்­கார்ந்­தி­ருந்­தார் கலை­ஞர். டுவிட்­ட­ரில் வரும் அனைத்து விச­யங்­க­ளை­யும் உன்­னிப்­பாக கவ­னிப்­பார். குறிப்­பாக நம்மை திட்­டு­ப­ வர்­க­ளை­யும், குறை சொல்­லு­ப­வர்­க­ளை­யும் கவ­னிப்­பார். குறை சொல்­லு­வ­தில் பாதி பேர் நம்ம பசங்க என்­பது அவ­ருக்கு நல்­லாவே தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி.மு.க. என்றால் எதிரிகளுக்கு பயம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்து பதி­னைந்து பேர் மட்­டுமே GEN Z DMK ன் கீழ் ஒன்று கூட­லாம் என்று முத­லில் முடி­வெ­டுத்­தி­ரு க்­கி­றார்­கள்.  இதற்­காக ஒரு கஃபே­யில் உட்­கார்ந்து பேச­லாம் என்று ஆலோ­சித்­தி­ருக்­கி­றார்­கள். ஆத­ர­வுக்­க­ரம் அதி­க­ரிக்­கவே கஃபே போதாது, சின்­னதா ஒரு ரூம் போட­லாம் என்று முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள்.  மேலும்  GEN Z DMKன் பலம் அதி­க­ரிக்­கவே சின்­னதா ஒரு ஹால் எடுக்­க­லாம் என்று நினைத்­தி­ருக்­கி­றார்­கள்.  ஆத­ர­வுக்­க­ரம் வலுப்­பெற்­றுக்­கொண்டே போகப்­போக, ஹால் போதாது, ஒரு மண்­ட­பமே எடுத்­தி­ட­லாம் என்­கிற முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவர்­க­ளின் முன்­னெ­ டுப்­பு­க­ளைப் பார்த்து வந்த அச்­சு­றுத்­தல்­களை எல்­லாம் பார்த்­தால், தி.மு.க. என்­றால் எதி­ரி­க­ளுக்கு என்­றைக்­கும் பயம் இருக்­கத்­தான் செய்­கி­றது என்­பது புரி­கி­றது. இது மிசாவை பார்த்த திமு­கடா.  தி.மு.க கூட்­டம் என்­றால் என்ன என்று இன்­னும் சில பேருக்கு தெரி­ய­மாட்­டேங்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சும்மா விட்­டி­ருந்தா 50 பேர் மட்­டும் உட்­கார்ந்து பேசி­யி­ருப்­பாங்க.  அச்­சு­றுத்­த­லால்­தான்இன்­றைக்கு இப்­படி ஒரு பெருங்­கூட்­டம் கூடி­யி­ருக்­
கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஐ.டி. விங் என்­பது ஒரு அமைப்பு அல்ல; தி.மு.க. இயக்­கமே அதில் இருக்க வேண்­டும் என்­ப­து­தான் நோக்­கம். அதை மன­தில் கொண்­டு­தான் செயல்­பட்டு வரு­கி­றோம். சுய­மாக எழுந்து வரும் சக்தி உள்ள இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அப்­ப­டித்­தான் இன்­றைக்கு GEN Z DMK தன்­னெ­ழுச்­சி­யாக வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு இன்­றைக்கு இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் மாநி­ல­மாக வளர்ந்­தி­ருக்­கி­றது என்­றால் அதற்கு கார­ணம் பெரி­யா­ரும், அண்­ணா­வும், கலை­ஞர் அவர்­க­ளும், இவர்­க­ளால் வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு வார்க்­கப்­பட்ட, நமது திரா­விட நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் அர­வ­ணைப்பு இது­வரை வர­லாறு காணாத வளர்ச்­சி­யைக் கொடுத்து தமிழ்­நாட்டை தூக்கி நிறுத்தி, 10 ஆண்­டு­கால இருண்ட ஆட்­சிக்கு பிறகு ஒளியை ஏற்றி, விடி­ய­லைக் கொடுத்த ஆட்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் திரா­விட மாடல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரொம்ப சுல­ப­மாக கிடைத்­து­ விட்­டால் அதன் மதிப்பு தெரி­யாது என்று சொல்­வார்­கள்.  அதா­னே­லேயே என்­னவோ தெரி­ய­வில்லை, ஒரு சில­ருக்கு அந்த மதிப்பு தெரி­ய­வில்லை. அந்த மதிப்பு தெரி­யா­மல் போன­தால் ஒரு சில விச­யங்­கள் நடந்­து­விட்­டன.  ஒரு­சில விச­யம் அவர்­க­ளுக்கு என்ன தெரி­ய­வில்லை என்­றால், இப்­படி அடிக்க அடிக்க, இன்­னும் அதி­க­மாக எழும்­பும் ஒரு இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்  என்­பது.  இன்று மட்­டும் துரோ­கச் செயல்­கள் அல்ல, 75 ஆண்­டு­க­ளுக்கு முன்பே இந்த மண்ணை போட்டு நசுக்­கிக்­கொண்­டி­ருந்த பலரை எதிர்த்து சுய­மாக, சுயம்­பு­வாக எழுந்து இளை­ஞர்­க­ளின் இயக்­க­மாக இருந்த உதித்த சூரி­யன் தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.  அப்­ப­டிப்­பட்ட இந்த இயக்­கத்­தின் மூல­மாக கடந்த 75 ஆண்­டு­க­ளை­யும் கடந்து ஒரு இயக்­கம் இன்­றும் இப்­படி ஒரு எழுச்­சி­யோடு இருக்­கி­றது என்­றால் அதற்கு கார­ணம், கொள்­கை­கள்.  இந்த கொள்கை பிடிப்பு இருக்­கும் வரை தமிழ்­நாட்டை, தமி­ழனை யாரும் எந்த காலத்­தி­லும் சீண்­டிப்­
பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘இந்த’ கால கட்­டத்­தில் ‘நான் திமு­க­கா­ரன்’ என்று கொடியை உயர பிடித்­துக் ­கொண்டு போகி­றானே… அவன் தான் உண்­மை­யான தி.மு.­க.­கா­ரன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டை மீட்டெடுத்த இயக்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்த காலத்­தில் காங்­கி­ர­சின் அடக்­கு­மு­றையை தாண்டிவந்து அதற்கு பிறகு மிசா என்­னும் கொடுங்­கோல் கால­கட்­டத்தை தாண்டி வந்து 13 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இல்­லா­விட்­டா­லும் மீண்­டும் ஆட்­சிக்கு வந்து இரண்­டாண்­டு­கள் மட்­டுமே இருந்­து­விட்டு மிகப்­பெ­ரிய கொடூ­ர­மான பொய்ச் செய்­தி­க­ளால் , பொய்ப்­பி­ரச்­சா­ரத்­தி­னால் அன்­றைக்­கும் தோல்வி கண்­டோம். இன்று மட்­டும் இது நடக்­க­வில்லை. அன்­றைக்­கும் நடந்­தது. அத­னால் 91ல்ஆட்சி அமைக்க முடி­யாத சூழ­லி­லும் மீண்­டும் 96ல் மிகப்­பெ­ரிய வர­லாற்று சிறப்பு  மிக்க வெற்றி பெற்று, மீண்­டும் வர­லாற்று சிறப்பு மிக்க ஆட்­சியை கொடுத்து துவண்டு விழுந்து கிடந்த தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்­தது திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கம்.  96ல் மட்­டு­மல்­லாது 2006லும், 2021லும் தமிழ்­நாட்டை மீட்­டெ­ டுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை எல்­லாம் பார்த்து இன்­றைக்­கும் தன்­னெ­ழுச்­சி­யாக ’நான் இருக்­கேன்டா..’ என்று வாழை­யடி வாழை­யாக, கொள்கை உடன்­பி­றப்­பு­க­ளாக  பெருகி வரும் கூட்­டம் இருக்­கி­றது.  இத­னால்­தான் சொல்­கி­றேன்… ’சாதா­ர­ணமா வர­லடா திமுக காரன்.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாதா­ர­ணமா வர­லடா 
தி.மு.­க.­கா­ரன் என்று சொன்­னால் அதற்கு பின்­னால் 75 ஆண்­டு­கால வர­லாறு இருக்­கி­றது. 75 ஆண்­டு­கா­லம் தோல்­வி­யைக் கண்டு துவண்டு போகா­மல் , ‘என்­னடா மக்­கள் இப்­படி பண்­ணிட்­டாங்­களே…’ என்று  மக்­கள் மீது வெறுப்பு கொள்­ளா­மல்,   மக்­க­ளுக்கு இன்­னும் நாம் சொல்ல வேண்­டி­யது நிறைய இருக்­கி­றது போல என்று நினைத்து அதை கற்­றுக்­கொண்டு, வெற்றி வாய்ப்பு இழந்த அடுத்த நாளே, ஏன் என் தலை­வர் திரா­விட நாய­கன் செய்­தாரே, எவ்­வ­ளவு பெரிய பின்­ன­டைவு..ஆனா­லும் மறு­நாளே கொளத்­தூர் தொகு­தி­யில் நின்று மக்­க­ளுக்கு நன்றி சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது மாதிரி ஒரே ஒரு தலை­வனை, இப்­ப­டிப்­பட்ட ஒரு தலை­வனை இந்த நாடு எந்த காலத்­தி­லா­வது பார்த்­தி­ருக்­கி­றதா? அதற்கு கார­ணம் என்ன?  கொள்கை பிடிப்பு, தமிழ்­நாட்­டின் வளர்ச்சி மீது அசைக்க முடி­யாத நம்­பிக்கை, பற்று, பாசம்.  தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு திமுக காரனை விட்­டால் எந்த காலத்­தில் வேறு வழி­யில்லை என்­கிற கார­ணம்­தான். திமுக காரன் என்­றால் எப்­ப­வுமே  ஒரு திமிர் இருக்­கத்­தான் வேண்­டும். திமு­க­ரா­னால் மட்­டும்­தான் தமிழ்­நாட்­டிற்கு வளர்ச்­சியை கொடுக்க முடி­யும். மக்­கள் நமக்கு கொடுத்த கொஞ்ச  காலத்­தி­லேயே இவ்­வ­ளவு பெரிய வளர்ச்­சியை கொடுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்­ப­தற்கு பல சான்­று­கள் எங்­க­ளால் கொடுக்க முடி­யும்.  அதை எல்­லாம் சொன்­னா­லும் நம்ப முடி­யாத அள­வுக்கு பொய்ச்­செய்­தி­கள் பர­விக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த பொய்ச்­செய்­தி­களை கட்­டுப்­ப­டுத்­தவே கழ­கம் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­திருக்­
கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜனநாயகத்தின் மீது மதிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனா­லும் என்­றைக்­கும் நாம் கருத்து சுதந்­தி­ரத்­திற்கு எதி­ராக இருக்க மாட்­டோம். ஜன­நா­யக சட்­டத்­திற்கு உட்­பட்­டுத்­தான் நமது இயக்­கம் என்­றைக்­குமே இயங்­கும்.  நாக­ரீக அர­சி­ய­லில் இருந்து மாறப்­போ­வ­தில்லை. ஜன­நா­ய­கத்­தின் மீதும் சட்­டத்­தின் மீதும் இருக்­கும் மதிப்பைஎன்­றைக்­குமே இந்த இயக்­கம் குறைத்­துக்­
கொள்­ளாது, மீறாது. அதை ஒட்­டியேநமது பய­ணம் இருக்­கும். GEN Z DMK வும்அதன்­ப­டியே பய­ணிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தன்­னெ­ழுச்­சி­யாக  GEN Z DMK உத­ய­மா­னால்­தான் உத­ய­சூ­ரி­யன் வெளிச்­சத்­தில் தமிழ்­நாடு தொடர்ந்து மின்­னும். மின்ன வைப்­போம்.  GEN Z DMKக்கு உறு­து­ணை­யாக நாங்­கள் இருப் ­போம். இந்த இயக்­கத்­தின் கடைக்­கோடி  தொண்­ட­னும் தோளோடு தோளாக நிச்­ச­ய­மாக நிற்­பார்­கள்.  எல்­லா­வற்­றை­யும் தாண்டி, நமது இளந்­த­லை­வ­ரும், எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான அருமை சகோ­த­ரர் உத­ய­நிதிஸ்டாலின் அவர்­க­ளும், இந்த நாட்­டின் நம்­பர் ஒன் முத­ல­மைச்­ச­ராக இருந்து, மகத்­தான வளர்ச்­சியை தமிழ்­நாட்­டிற்கு கொடுத்து, இன்­றும் ஒரு அர­சி­யல் தலை­வ­ராக எப்­படி மாண்­போடு இருக்க வேண்­டும் என்­ப­தற்கு பிர­தான உதா­ர­ண­மாக இருக்­கும் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் துணை உங்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக இருக்­கும்.  மீண்­டும் வரு­வோம். தமிழ்­நாட்டை நிச்­ச­ய­மாக மீட்­டெ­டுப்­போம். வெல்கதிரா­வி­டம். வாழ்க கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு முனைவர் டி.ஆர்.பி. ராஜா பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>