<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 02 2026 03:46:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260602T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02062026-MDU-02" position.sequence="02" ex-ref="02062026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#8c4600" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">குழந்­தை­களை பக­டைக்­கா­யா­கப் பயன்­ப­டுத்­தி­யது...!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup680087_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">‘பே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">த்தி சொல்லி விசி­லுக்கு வோட்­டுப் போட்­டேன்’, ‘பேரன் சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டேன்’ என்று சொன்­ன­வர்­கள் அனை­வ­ரும், ‘இப்­பத்­தான் ஏன் போட்­டேன்னு வருத்­தப்­ப­டு­றேன்’’ என்று வருத்­தப்­பட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். சமூக வலை­த­ளங்­க­ளில் இது போன்ற பேட்­டி­களைஅதி­கம் பார்க்க முடி­கி­றது. பேரன், பேத்­தி­க­ளுக்கு நல்­லது சொல்லி வளர்க்­கா­மல்அவர்­கள் சொன்­னார்­கள் என்று வாக்­க­ளித்­து­விட்டு இப்­போது வருத்­தப்­ப­டு­ வ­தால் என்ன பயன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">அந்த அள­வுக்கு குழந்­தை­க­ளைத் தூண்­டி­னார் விஜய். தனது இத்­தனை ஆண்­டு ­கால சினி­மாப் புகழை, முத­லீ­டா­கப் போட்­டார் விஜய். அவர் கட்சி ஆரம்­பித்­தது வேண்­டு­மா­னால் இரண்டு ஆண்­டுக்கு முன்­பாக இருக்­க­லாம். ஆனால், மக்­களை மயக்­கத் தொடங்கி பல காலம் ஆகி­விட்­டது. அந்த சினிமா மயக்­கம் தான் அவ­ருக்­குப் பல­ரும் வாக்­க­ளிக்­கக் கார­ணம். அதி­லும் குறிப்­பாக குழந்­தை­களை தனது பேச்­சில் அதி­க­மா­கத் தூண்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">‘நீங்­கள் உங்­கள் அப்பா, அம்­மாவை வாக்­க­ளிக்க வையுங்­கள். இந்த ஒரு தடவை எனக்கு வாய்ப்­ப­ளிக்­கச் சொல்­லுங்­கள்’ என்று குழந்­தை­க­ளைத் தூண்­டி­னார் விஜய். இது மன ரீதி­யான தாக்­கு­தல் ஆகும். அது­வும் குழந்­தை­கள் மீது செய்­யப்­பட்ட தாக்­கு­தல் ஆகும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">குழந்­தை­க­ளுக்கு, சிறு­வர்­க­ளுக்கு அது  தேர்­த­லுக்­கா­கக்  கேட்­கப்­ப­டும்  வாக்கு என்றே தெரி­யாது. அவர்­க­ளுக்­குப் பிடித்த ஒரு­வர், ஏதோ கேட்­கி­றார். அதைச் செய்ய வேண்­டும் என்­பது மட்­டுமே அவர்­க­ளுக்­குப் புரிந்­தி­ருக்­கும். ‘சக்­தி­மா­னைப்’ பார்த்து அவர் செய்­வது போலவே மாடி­யில் இருந்து இறந்தசிறு­வர்­க­ளைப்  பார்த்­துள்­ளோம். அது­போன்ற பொய்­மா­னைப் பார்த்து சிறு­வர், சிறு­மி­யர் செய்த செய­லா­கவே இதைப் பார்க்க வேண்டி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">‘தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் த.வெ.க. சார்­பில் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது தவறு’ என்று சொல்லி சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ளது. கட­லூர் மாவட்­டம் புவ­ன­கி­ரி­யைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் வாசுகி, சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் இது தொடர்­பாக வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். “நடந்து முடிந்த சட்­ட­ச­பைத் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசிய விஜய், குழந்­தை­க­ளைத் தூண்­டும் வகை­யில் பேசி­னார். ‘நீங்­கள் உங்­கள் பெற்­றோ­ரி­ட­மும்  அண்­ணன், அக்­கா­வி­ட­மும் சொல்­லுங்­கள்’ என்று சொன்­னார். இது தேர்­தல் நடத்தை விதி மீறல் ஆகும்’’ என்று மனு­வில் குறிப்­பிட்டு இருந்­தார். நீதி­ப­தி­கள் சுவா­மி­நா­தன், லட்­சுமி நாரா­ய­ணன் ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன் விசா­ர­ணைக்கு வந்­தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">த.வெ.க.சார்­பில் வாதிட்ட வழக்­க­றி­ஞர், ‘‘வெறும் செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் மனு­வைத் தாக்­கல் செய்­துள்­ளார்­கள்” என்று சொல்லி இருக்­கி­றார். வெறும் செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் அல்ல, விஜய் பேசிய பேச்­சு­கள் ஆதா­ர­மாக உள்­ளது. ‘‘வீட்­டில் இருக்­கும் குட்டி நண்பா, நண்­பீஸ்... விஜய் மாமா­வுக்கு வோட்­டுப் போடச் சொல்­லுங்­கள். உங்­கள் பெற்­றோ­ரை­யும் வோட்­டுப் போடும் வய­தில் இருக்­கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்­தப்பா எல்­லோ­ரை­யும் விசில் சின்­னத்­துக்கு வோட்­டுப் போடச் சொல்­லுங்க’’ என்று விஜய் பேசிய  ஆதா­ரம் போதாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தேர்­தல் முடிந்து முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற மேடை­யி­லும் குழந்­தை­கள், சிறு­வர், சிறு­மி­ய­ருக்கு நன்றி சொன்­னார் விஜய். இந்த ஆதா­ரம் போதுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">‘பேத்தி சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டோம்’, ‘பேரன் சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டோம்’ என்று சொல்­ப­வர்­க­ளின் பேட்­டி­கள் இணை­யத்­தில் வைரல் ஆகி வரு­கி­றது. எனவே, இது வெறும் செய்­தி­கள் அல்ல. உண்­மை­கள் என்­பதை நிரூ­பிக்க ஏரா­ள­மான ஆதா­ரங்­கள் இருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">‘குழந்­தை­களை தனது அர­சி­யல் சுய லாபத்­துக்­கா­கப்  பயன்­ப­டுத்­தி­யது’ குறித்து ஜூலை 10 ஆம் தேதிக்­குள் விஜய் விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">‘‘சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­களை தூண்­டி­விட்டு பிரச்­சா­ரம் செய்த விஜய் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என்று வலி­யு­றுத்தி தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் அர­விந்­தாக்­சன் எழு­தி­யுள்ள கடி­தத்­தில், ‘‘கடந்த ஏப்­ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை       நந்­த­னத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பேசிய த.வெ.க. தலை­வர் விஜய், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­க­ளைத் தூண்டி விட்டு த.வெ.க.வுக்­குப் பிரச்­சா­ரம் செய்­தார். த.வெ.க.வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு தங்­கள் பெற்­றோர்­க­ளை­யும் உற­வி­னர்­க­ளை­யும் வலி­யு­றுத்த வேண்­டும் என, குழந்­தை­க­ளுக்கு விஜய் நிர்ப்­பந்­தித்­தார்.  குழந்­தை­களை இலக்­கா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, இந்­தப் பிரச்­சா­ர­மா­னது தேர்­தல் ஆணை­யத்­தின் வழி­காட்­டு­தல்­க­ளின் கீழ் கடு­மை­ யா­கத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. குழந்­தை­களை ஒரு அர­சி­யல் கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வது சட்­டப்­படி குற்­ற­மா­கும்.  சமூக ஊட­கங்­க­ளில் பரவி வரும்          ஏரா­ள­மான காணொ­ளி­க­ளில், சிறார்­கள் அழு­து­கொண்­டும், கத­றிக்­கொண்­டும், கூச்­ச­லிட்­டுக்­கொண்­டும், அடம் பிடித்­துக்­கொண்­டும் இருப்­பது காணப்­ப­டு­கி­றது. இதன்­மூ­லம், அவர்­கள் தங்­கள் பெற்­றோர்­க­ளை­யும் குடும்­பத்­தில் உள்ள வயது வந்த உறுப்­பி­னர்­க­ளை­யும் த.வெ.க.வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு நிர்ப்­பந்­திப்­பது தெரி­கி­றது. தங்­கள் கோரிக்­கையை பெற்­றோர்­கள் நிறை­வேற்­றா­ விட்­டால், குழந்­தை­கள் சாப்­பி­டக் கூட மறுப்­ப­தா­க­வும், மேலும், குழந்­தை­கள் தங்­கள்  பெற்­றோர்­களை  மிரட்­டு­வது  போன்ற  காட்­சி­கள்  சமூக வலை­த­ளங்­க­ளில் இடம் பெற்­றுள்­ளது. எனவே, சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்டு பிரச்­சா­ரம் செய்த விஜய் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்” என்று அக்­க­டி­தத்­தில் குறிப்­பிட்டு இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">தேர்­தல் பணி­க­ளில் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்று 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போது கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் விதித்­தி­ருந்­தது. விஜய் மீது தேசிய குழந்­தை­கள் உரி­மை­கள் பாது­காப்பு ஆணை­யத்­தி­லும்  புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">விஜய்­யின் பேச்சு சென்னை உயர்­நீ­தி­மன்­றம், தேர்­தல் ஆணை­யம், தேசிய குழந்­தை­கள் உரி­மைப் பாது­காப்பு ஆணை­யம் ஆகிய மூன்­றின் விசா­ர­ணை­யி­லும் உள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">குழந்­தை­களை இலக்­கா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, விஜய்­யின் பிரச்­சா­ர­மா­னது தேர்­தல் ஆணை­யத்­தின் வழி­காட்­டு­தல்­க­ளின் கீழ் கடு­மை­யா­கத் தடை செய்­யப்­பட்ட முறை  ஆகும். குழந்­தை­களை ஒரு அர­சி­யல் கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வது சட்­டப்­படி குற்­ற­மா­கும். தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் குழந்­தை­கள் மீது செல்­வாக்­குச் செலுத்­தி­யது தொடர்­பாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">குழந்­தை­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வது என்­பது  பிஞ்சு மனங்­க­ளின்  மீது நடத்­தப்­பட்ட அர­சி­யல் அச்­சு­றுத்­தல், வன்­முறை ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>