<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,956,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 01 2026 16:31:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260602T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02062026-VLR-07" position.sequence="07" ex-ref="02062026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">கலைஞர் என்ற வரலாற்று ஆளுமை!  அவர் வகுத்திட்ட வழித்தடத்தில் பயணித்து மீண்டும் வாகை சூடும் தி.மு.க.!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame691105_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup691196_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M8bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M4bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="M2bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="M3bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="8" source="M5bw_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">லை­ஞ­ரின் 103-ஆவது பிறந்த தினம் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. நாடு போற்­றும் நல்­லாட்­சியை ஐந்­தாண்­டு­கா­லம் தந்த தி.மு.க தேர்­த­லுக்­குப் பின் ஆட்­சி­யைத் தொடர இய­லாத இந்­தத் தரு­ணத்­தில் கலை­ஞர் பிறந்த தினம் கொண்­டா­டப் படு­கி­றது. தி.மு.க இவ்­வாறு எதிர்­நீச்­சல் போடு­வது புதி­தல்ல என்­பதை எண்­ணிப்­பார்க்க வேண்­டிய தரு­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒவ்­வொரு முறை­யும் ஆட்­சி­யில் தமிழ்­நாட்டை ஏற்­றம் பெறச் செய்­யும் எண்­ணற்ற திட்­டங்­களை செயல்­ப­டுத்­தும் தி.மு.க. ஆனா­லும் அடுத்த முறை ஆட்­சி­யில் தொட­ராது. இந்த புதி­ருக்கு என்ன கார­ணம் என்­பதை விளங்­கிக்­கொள்ள நாம் கலை­ஞர் எவ்­வாறு ஒரு வர­லாற்று ஆளுமை என்ற அடை­யா­ளத்­தைப் பெறு­கி­றார், வர­லாறு என்­றால் என்ன ஆகிய வினாக்­களை எழுப்­பிக் கொள்­வது பொருத்­த­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க உரு­வான 1949-ஆம் ஆண்­டி­லி­ருந்து இரு­ப­தாண்டு காலம் அறி­ஞர் அண்ணா அதன் ஒப்­பற்ற தலை­வ­ராக விளங்­கி­னார். தி.மு.க-வின் தனித்­து­வ­மிக்க அர­சி­யல் கோட்­பா­டு­களை வடி­வ­மைத்­தார். பதி­னெட்டு ஆண்­டு­க­ளில் எந்த பண­ப­ல­மும், சமூக ஆதிக்­கப் பின்­பு­ல­மும் இல்­லா­மல், எளிய சாமா­னி­யர்­களை அணி­தி­ரட்டி, மிக உறு­தி­யான ஒரு கட்­சிக் கட்­ட­மைப்பை மாநி­லம் முழு­வ­தும் உரு­வாக்கி, அதனை கொள்கை வழி நெறிப்­ப­டுத்தி ஆட்­சிக் கட்­டி­லில் அமர்த்­தி­னார். ஆனால் இரண்டே ஆண்­டு­க­ளில் காலம் அவரை அழைத்­துக்­கொண்­டது. அதன் பின், ஐம்­ப­தாண்­டு­கா­லம், தி.மு.க-வை வழி நடத்தி, நவீன தமிழ்­நாட்­டின் வர­லாற்­றைச் செதுக்­கி­ய­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சுதந்­திர இந்­தி­யா­வின் அர­சி­யல் வர­லாற்­றில் இவ்­வாறு அரை நூற்­றாண்­டுக்­கா­லம் ஒரு கட்­சியை வழி நடத்­தி­ய­வர், ஒரு மாநி­லத்­தின் வர­லாற்றை நிர்­ண ­யித்­த­வர் என்று வேறு எவ­ரை­யும் சொல்ல இய­லாது. உலக அள­வில் கூட ஃபிடல் காஸ்ட்ரோ என்ற ஒரு­வர் பெயர்­தான் உட­ன­டி­யாக ஒப்­புமை சொல்ல முடி­கி­றது. இது வெறும் ஆண்­டுக் கணக்கு மட்­டு­மல்ல. தொடர்ந்து ஒவ்­வொரு சூழ­லி­லும்,தமிழ்­நாட்டு நலன்­களை காத்து நின்று அதன் வளர்ச்­சிக்கு வழி­வ­குத்த இலட்­சி­யப் பய­ணம் என்­பதை கவ­னிக்க வேண்­டும். இந்த பின்­ன­ணி­ யில்­தான் நாம் வர­லாறு என்­றால் என்ன, வர­லாற்று ஆளுமை என்­றால் என்ன என்­பதை புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வர­லாறு என்­றால் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வர­லாறு என்­பதை கடந்த காலத்­தில் நிகழ்ந்த நிகழ்­வு­கள் என்­ப­தா­கவே பெரும்­பா­லும் புரிந்­து­கொள்­கி­ றோம். மூவா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன் என்ன நிகழ்ந்­தது என்ற பண்­டைய வர­லாறு, ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன் என்ன நிகழ்ந்­தது என்ற மத்­திய கால வர­லாறு, நூறு ஆண்­டு­க­ளுக்கு முன் என்ன நிகழ்ந்­தது என்ற சம­கால வர­லாறு என்­றெல்­லாம் வகைப்­ப­டுத்தி, அந்­நி­கழ்­வு­களை ஆரா­யும் அறி­வுத்­து­றையே வர­லாறு எனப்­ப­டு­கி­றது. அந்த ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வர­லாற்றை எழு­து­வது வர­லாற்று எழு­தி­யல் (historio graphy) எனப்­ப­டு­கி­றது. இது வர­லாறு என்­ப­தற்­கான ஒரு பொருள் மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வர­லாறு என்­ப­தற்கு மற்­றொரு பொருள் இருக்­கி­றது. அது என்­ன­வென்­றால், மானு­டர்­க­ளின் தன்­னு­ணர்வு மூலம், அவர்­கள் தங்­கள் ஆற்­றல்­களை உணர்ந்து புதிய சாத்­தி­யங்­களை செயல்­ப­டுத்தி  வாழ்வை மேம்­ப­டுத்­திக்­கொள்­வது. சமூக மாற்­றத்தை உரு­வாக்­கு­வது. சமூ­கத்தை சீர்­தி­ருத்­து­ வது. அர­சி­ய­ல­மைப்பை மேம்­ப­டுத்­து­வது. வன்­மு­றை­யும், நெருக்­க­டி­யும்மிகுந்த வாழ்வை சீர­மைத்து, அமை­தி­யும் செழு­மை­யும் கொண்ட சக­வாழ்வை உரு­வாக்­கு­வது என பல­வாறு கூற­லாம். இப்­படி குறை­க­ளைக் களைந்து மேம்­ப­டு­வ­தையே முன்­னால் செல்­வது, முற்­போக்கு என்று கூறு­கி­றோம். இதுவே வர­லாற்று உரு­வாக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த இரண்டு பொருள்­க­ளும் ஒன்­றோ­டொன்று தொடர்­பு­டை­யன. கார்ல் மார்க்ஸ் அதனை சிறப்­பாக வெளிப்­ப­டுத்­தி­னார். “மக்­கள்­தான் வர­லாற்றை உரு­வாக்­கு­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் நினைத்­த­ப­டி­ யெல்­லாம் அதனை உரு­வாக்­கு­வ­தில்லை; அவர்­கள் விரும்­பும் சூழ்­நி­லை­யில் அவர்­கள் அதனை உரு­வாக்­கு­வ­தில்லை. மாறாக, அவர்­கள் நேர­டி­யாக எதிர்­கொள்­ளும் கடந்த காலங்­க­ளில் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லை­ க­ளில்­தான் உரு­வாக்­கு­கி­றார்­கள். இறந்து போன தலை­மு­றை­கள் உரு­வாக்­கிய மர­பு­கள் துர்க்­க­ன­வு­கள் போல வாழ்­ப­வர்­க­ளின் மனங்­க­ளின் சுமை­க­ளாக உள்­ளன” என்ற அவ­ரு­டைய மேற்­கோள் புகழ் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டை எண்­ணிப் பார்த்­தால் மார்க்ஸ் மேற்­கோள் சிறப்­பா­கப் புரி­யும். பார்ப்­ப­னீ­யம், வர்ண தர்­மம், சனா­த­னம், ஆணா­திக்­கம், ஜாதீ­யம் எல்­லாமே துர்க்­க­ன­வு­க­ளாக வாழ்­ப­வர்­க­ளின் ஆன்­மா­வைப் பீடித்­துள்­ளன. அந்த சூழ்­நி­லையை எதிர்­கொண்­டு­தான் சமூக நீதி­யும், சமத்­து­வ­மும் நில­வும் புதிய மக்­க­ளாட்சி சமூ­கத்தை உரு­வாக்க வேண்­டும். பல நூறாண்­டு­க­ளாக,ஓரா­யி­ரம், ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக மொழி­யில், சொல்­லா­ட­லில், கதை­யா­ட­லில் ஊடு­று­விய எண்­ணற்ற மூட நம்­பிக்­கை­கள், கற்­பி­தங்­கள், ஏற்­றத் ­தாழ்­வு­கள், சுரண்­டல் அமைப்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் எதிர்­கொண்­டு­தான் புதிய வர­லாற்றை உரு­வாக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இது­தான் மக்­க­ளாட்­சி­யின் எதிர்­நீச்­சல். இந்­தி­யா­வில் வேறுஎந்த அர­சி­யல் கட்­சி­யை­வி­ட­வும் எந்த சவா­லை­யும் சிறப்­பாக எதிர்­கொண்ட கட்சி தி.மு.க என­லாம். கார­ணம் அது பகுத்­த­றி­வுப் பக­ல­வன் பெரி­யா ­ரின் சுய­ம­ரி­யா­தைப் பேரொ­ளி­யில் பிறந்த இயக்­கம். மக்­க­ளாட்­சி­யில் சமூக மாற்­றத்தை உரு­வாக்க வேண்­டு­மா­னால், அர­ச­தி­கா­ரத்தை சாமா­னி­யர்­கள் கைப்­பற்றி அவர்­கள் அர­சாங்­கத்தை அமைப்­பது அவ­சி­யம் என்று உணர்ந்த அறி­ஞர் அண்ணா உரு­வாக்­கிய கட்சி. அப்­படி அமைத்த அர­சாங்­கத்­தின் மூலம் பெரி­யார், அண்ணா எண்ண ங்களை செயல்­ப­டுத்தி தமிழ்­நாட்டு வர­லாற்றை வடி­வ­மைத்த கலை­ஞர் வழி­ந­டத்­திய கட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் இந்த இலட்­சி­யப் பய­ணம் சுல­ப­மா­ன­தல்ல. உல­கில் எங்­குமே ஏற்­றத்­தாழ்வு நீங்கி, அர­சி­யல் பொரு­ளா­தார சமத்­து­வம் நில­வும் சமூ­கத்தை உரு­வாக்க முடி­ய­வில்லை என்­பதே இரு­பத்­தோ­ராம் நூற்­றாண்­டின் துல்­லி­ய­மான நிலை. கார­ணம் முத­லீட்­டிய திரட்சி என்­பதே வளர்ச்­சி­யின் அடிப்­ப­டை­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி முத­லீட்­டிய திரட்சி தொடர்ந்து நிக­ழ­வேண்­டு ­மா­னால் சமூக, பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வை பயன்­ப­டுத்­தியே மக்­க­ளின் உழைப்­பாற்­றலை திரட்ட வேண்­டி­யுள்­ளது. அத­னால் ஒரு புறம் அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு என்று அர­சி­யல் கட்­சி­கள் முயற்­சிக்­கும்­போது, பொரு­ளா­தா­ரத்­தில் முத­லீட்­டிய சக்­தி­கள் அந்த வாய்ப்­பு­க­ளின் கத­வு­களை பல­ருக்­கும் அடைக்­கி­றது. பல்­வேறு அடை­யா­ளங்­க­ளில் மக்­களை சிறைப்­ப­டுத்தி அவர்­கள் ஒன்­றி­ணைந்து உரி­மை­க­ளைப் பெறு­வது தடுக்­கப் படு­கி­றது. உலக நாடு­க­ளி­லெல்­லாம் எவ்­வ­ளவு தூரம் சமத்­து­வம் நில­வு­கி­றது என்­பதை ஆராய்ந்த பொரு­ளா­தார அறி­ஞர் தாமஸ் பிக்­கெட்டி இரு­ப­தாம் நூற்­றாண்­டின் மத்­தி­யில் சமத்­து­வம் அதி­க­ரித்­தது என்­றும், கடந்த முப்­ப­தாண்­டு­ க­ளில் மீண்­டும் ஏற்­றத்­தாழ்வு அதி­க­ரிக்­கி­றது என்­றும் கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த உல­க­ளா­விய வர­லாற்­றின் பின்­ன­ணி­யில் ­தான் தமிழ்­நாட்­டில் கலை­ஞர் எப்­படி ஒரு வர­லாற்று ஆளு­மை­யாக விளங்­கி­னார் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்­டும். அதற்கு நாம் தி.மு.க-விற்கு கடந்­த­கா­லத்­தின் சுமை­யாக வந்து சேர்ந்த சூழ்­நி­லை­கள் என்ன, அவற்றை எந்த அளவு மாற்­று­வ­தற்கு அத­னால் போராட முடிந்­தது, தி.மு.க-விற்கு எதி­ராக திர­ளும் எதிர்­பு­ரட்சி சக்­தி­க­ளின் வடி­வங்­கள் என்ன என்­ப­தை­யெல்­லாம் கவ­ன­மாக பரி­சீ­லிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வர­லாற்று ஆளுமை என்­பது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தத்­து­வி­ய­லா­ளர் ஹெகல் வர­லாற்று ஆளுமை, ஹிஸ்­டா­ரி­கல் பெர்­ச­னேஜ் (historical personage) என்ற கருத்­தாக்­கத்தை விவா­தித்­தார். இதன் முக்­கி­ய­மான கூறு என்­ன­வென்­றால் இவ்­வா­றான ஆளு­மை­கள் அவர்­கள் எதிர்­கொள்­ளும் அன்­றாட முரண்­பா­டு­க­ளில், அதி­கா­ரப் போட்­டி­க­ளில்­தான் கவ­னம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். ஆனா­லும் அவர்­க­ளது செயல்­பா­டு­கள், ஆட்­சி­யின் செயல்­பா­டு­கள் பெரும் சமூக மாற்ற ஆற்­றல்­களை உரு­வாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு தனி நப­ராக அவர்­க­ளது அன்­றாட அர­சி­யல் நகர்­வு­களை மட்­டும் கவ­னம் கொண்­டால் அவர்­க­ளின் வர­லாற்­றுப் பங்­க­ளிப்பு என்­பது புரி­யாது. ஏனெ­னில் முர­ண­ர­சி­யல், நடை­முறை அர­சி­யல் போன்­ற­வற்­றில் எத்­த­னையோ விருப்பு, வெறுப்­பு­கள், சந்­தர்ப்­ பத்­திற்­கேற்ற நடை­மு­றை­கள் என பல விவாத த்திற்­கு­ரிய அம்­சங்­கள் இருக்­கும். அவற்றை மட்­டும் பார்த்­தால் அவர்­க­ளது வர­லாற்று ஆளுமை என்­பது புரி­யாது, ஏனெ­னில் ஒரு மக்­கள் தொகு­தி­யின் வர­லாறு உருக்­கொள்­ளும்­போது அவர்­கள் அதில் கார­ணி­யா­கச் செயல்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் வடி­வில் சமூக ஆற்­றல் தன்னை வெளிப்­ப­டுத்­திக்­கொள்­கி­றது என்று கரு­தி­னார் ஹெகல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ் மொழி சார்ந்த ஈரா­யி­ரம் ஆண்­டுக்­கும் முற்­பட்ட பண்­பாட்டு சேக­ரத்­தின் உள்­ளுறை ஆற்­றல் என்­பது அதற்­கான வர­லாற்றை வடி­வ­மைக்­கும் திறன் கொண்­ட­தாக இருக்­கி­றது. அந்த திறன் ஒரு குறிப்­பிட்ட நப­ரின் வடி­வில் இயக்­கம் கொள்­கி­றது. அவ­ரால் அந்த மக்­கள் தொகு­தி­யின், சமூ­கத்­தின் வர­லாறு தன்னை வடி­வ­மைத்­துக் கொள்­ளத் தேவை­யான தலை­மை­யினை வழங்க முடி­கி­றது. இது­தான் வர­லாற்று ஆளு­மை­யின் அடை­யா­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இந்த அடிப்­ப­டையில்­தான் நாம் காந்தி, நேரு, அம்­பேத்­கர், பெரி­யார், அண்ணா, கலை­ஞர் என அனை­வ­ரை­யும் பார்க்க வேண்­டும். அவர்­க­ளது அன்­றாட செயல்­பா­டு­க­ளில், அர­சி­யல் முரண்­க­ளில் எத்­த­னையோசர்ச்­சைக்­கு­றிய நிலை­பா­டு­கள் இருக்­க­லாம். தவ­றான முடி­வு­கள் கூட இருக்­க­லாம். சம­ர­சங்­கள், பல­வீனங்கள் என பல­வற்­றைக் கூற இய­ல­லாம். இத்­த­கைய ஆளு­மை­களே ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் முரண்­பட்டு இயங்­கி­யி­ருக்­க­லாம். ஆனா­லும் அனை­வ­ருமே வர­லாற்று ஆற்­றல்­க­ளின் வெளிப்­பா­டு­கள் என்­று­தான் நாம் கருத வேண்­டும். ஏனெ­னில் அவர்­கள் செயல்­கள் மிகப் பர­வ­லா­னது, அரு­வ­மா­ன­து­மான சமூக ஆற்­றல்­களை வெளிக்­கொ­ணர்ந்து வர­லாற்­றுப் பாதை­களை வடி­வ­மைத்­தன என்­ப­து­தான் முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் வடி­வ­மைத்த வர­லாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொன்­மை­யான தமிழ் மொழி தன் ஆற்­றலை கலை­ஞர் மூலம் வெளிப்­ப­டுத்­தி­ய­து­தான் அவ­ரது அனைத்­துச் சாத­னை­க­ளுக்­கும் அடிப்­படை என­லாம். அத­னால்­தான் அவர் தமிழ்த்­தா­யின் தலை­ம­கன் என்­றெல்­லாம் போற்­றப்­ப­டு­கி­றார். யார் வேண்­டு­மா­னா­லும் ஒரு கட்­சித் தலை­வ­ரா­க­லாம்; ஆட்­சிக்­குக் கூட வந்­து­வி­ட­லாம். ஆனால் கலை­ஞர் போல கருத்­தோ­வி­யங்­களை மொழி­யில் செதுக்­கித் தர ஒரு ஆளுமை தோன்­று­வது மிக, மிக அரி­தான நிகழ்­வா­கும். அதி­லும் சமூ­கத்­தில் ஒடுக்­கப்­பட்ட ஒரு பிரி­வி­லி­ருந்து தோன்றி, பள்­ளி­யில் சேர்­வ­தற்கே போராட வேண்­டி­யி­ருந்த ஒரு­வர் ஒட்­டு­மொத்த சமூ­கத்தை வழி நட த்தும் இடத்­திற்­கு­பெற்ற  ஏற்­றம் என்­பது வர­லாற்­றின் ஆகச்­சி­றந்த வெளிப்­பா­டு­க­ளில் ஒன்று என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் போல தினம் தோறும் கட்சி உடன்­பி­றப்­பு­ க­ளுக்கு கடி­தம் எழுதி கருத்­துக்­களை பகி­ரும் தலை­வர்­களைக் காண்­பது அரிது என்­றால், அதன் மூலம் அவர் 
கட்­சியை அனைத்து எதிர்ப்­பு­க­ளை­யும் சமா­ளித்து கட்­டிக் காத்­த­வி­தம்­தான் முக்­கி­ய­மா­னது. அவர் தி.மு.க தலை­மை­யேற்ற நேரம் இந்­தி­யா­வில் கருத்­தி­யல் முரண்­கள் தீவிர 
வடி­வ­மெ­டுத்த காலம். காங்­கி­ரஸ் கட்சி இரண்­டா­கப் பிளந்­தது. கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யும் பிளவை சந்­தித்­தது. நக்­ஸல் இயக்­கம் பர­வத் தொடங்கி இருந்­தது. வல­து­சாரி சிந்­த­னை­க­ளும், கட்­சி­க­ளும் ஆங்­காங்கே வேரூன்ற முயன்று கொண்­டி­ருந்­தன. கலை­ஞர் கட்­சி­யைக் கொந்­த­ளிக்­கும் கட­லில் எந்த பாறை­யின் மீதும் மோதா­மல் கப்­ப­லைச் செலுத்­தும் மாலு­மி­யைப் போல திறம்­பட நடத்­திச் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவ­ரது தனித்­து­வம் கருத்­தி­யல் மோதல்­கள் ஒரு புறம், நடை­முறை அர­சி­யல் சவால்­கள் ஒரு புறம், முர­ண­ர­சி­யல் மோதல்­கள் மற்­றொ­ரு­பு­றம் என அனைத்­தை­யும் சரி­யான விதத்­தில் எதிர்­கொண்­ட­து­தான். இந்­திரா காந்தி, காம­ரா­ஜர், ராஜாஜி, சோ ராம­சாமி என யாராக இருந்­தா­லும் தன்­னு­டைய நிலை­யி­லி­ருந்து உறு­திப்­பாட்­டு­டன் அவ­ரால் உறவு கொள்­ள­வும், முரண்­ப­ட­வும் முடிந்­தது. மாநில சுயாட்சி, சமூக நீதி, மக்­கள் நல அரசு ஆகிய இலக்­கு­களை நோக்கி தொடர்ந்து இயங்­க­வும் முடிந்­தது. பகுதி நலன்­கள், கட்சி நலன்­கள் ஆகி­ய­வற்­றைக் கடந்த ஒட்­டு­மொத்த சமூக நலன் குறித்த விரிந்த பார்வை இருந்­தால்­தான் இப்­ப­டி­யான தலை­மைத்­து­வத்தை சாதிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பொரு­ளா­தா­ரத்­தில் பின் தங்­கிய, ஜாதீ­ய­மும் ஆணா­திக்­க­மும் ஊறிப்­போன, கல்­வி­ய­றிவு பர­வாத சமூ­கத்­தில் பகுத்­த­றி­வின், முற்­போக்கு சிந்­த­னை­யின் விதை­களை ஊன்றி கட்சி அமைப்­பினை கட்­டிக் காப்­பது என்­பது சுல­ப­மல்ல. நாள்­பட்ட நோயினை மருந்து கொடுத்த உட­னேயே குணப்­ப­டுத்த முடி­யாது. அத­னால் மருத்­து­வர் சரி­யில்லை என்று கரு­தி­னால் நோய் குண­மே­யா­காது. தமிழ்­நாட்­டில் கலை­ஞர் மீதான விமர்­ச­னங்­கள் இப்ப டித்­தான் வைக்­கப்­பட்­டன. இன்­றும் தி.மு.க மீது அப்­ப­டித்­தான் வைக்­கப் படு­கின்­றன. தி.மு.க-விற்கு மாற்­றாக ஆட்­சிக்கு வரு­ப­வர்­கள் மட்­டும் எல்லா பிரச்­சி­னை­க­ளை­யும் தீர்த்து விடு­கி­றார்­களா என்­றால் அது­வும் கிடை­யாது. ஆனால் தி.மு.க-வை மட்­டும் கூடு­த­லா­கக் குறை சொல்­வது என்­பது தமிழ்­நாட்­டில் பல­ரு­டைய வினோத பழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் உரு­வாக்­கிய வர­லாற்று வழித்­த­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­வி­டத் தமி­ழர் என்ற வர­லாற்­றுத் தன்­னு­ணர்வை தி.மு.க உரு­வாக்­கி­யது என்­றும், கலை­ஞர் அந்த தன்­னு­ணர்வை மங்­கி­வி­டா­மல் காப்­ப­தையே வர­லாற்று வழித்­த­ட­மா­கக் காட்­டி­னார் என்­ப­தும் முக்­கி­ய­மா­னது. இதைச் சொல்­லும்­போது சிலர் திரா­விட த் தமி­ழர் என்ற தன்­னு­ணர்வு ஒரு­ப­டித்­தா­னது, அனைத்து மக்­க­ளும் அந்த அடை­யா­ளத்தை ஏற்­கி­றார்­களா என்­றெல்­லாம் விதண்­டா­வா­தம் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காந்­தி­யும், நேரு­வும் உரு­வாக்­கிய இந்­தி­யத் தேசி­யத் தன்­னு­ணர்வு என்­பதை மட்­டும் அனைத்து மக்­கள் பிரி­வி­ன­ரும் ஒரு­ப­டித்­தா­ன­தாக ஏற்­றுக்­கொண்­டு­விட்­டார்­களா என்­பதை சிந்­திக்க வேண்­டும்,. ஒரு கருத்­தாக்­கம், உரு­வ­கம் சமூ­கத்­தில் முதன்மைபெரும்­போது அது வர­லாற்று விசை­யைக் கைக்­கொள்­கி­றது. அதற்கு முரண்­ப­டும் சக்­தி­க­ளும் அந்த விசை­யி­னால் இயக்­கப்­பட்டு பய­ணிப்­பது தவிர்க்க முடி­யா­தது. அதுவே முர­ண­ர­சி­ய­லின் ஊற்­றுக்­கண்­ணாக மாறு­கி­றது. மக்­க­ளாட்­சி­யில் சமூக முழுமை என்­பது முர­ணற்ற முழு­மை­யல்ல. அது முரண்­க­ளின் கள­மா­கவே வடி­வம் பெரும். அத­னைத்­தான் முர­ண­ர­சி­யல் வடி­வ­மைப்பு, Formations of the Political என்று கூறு­கி­றோம். முதன்மை பெரும் கருத்­தாக்­கம் சமூக முழு­மையை கட்­ட­மைக்­கும் போது­தான் அத­னுள் முர­ண­ர­சி­யல் வடி­வம் பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முர­ண­ர­சி­ய­லில் பல்­வேறு கட்­சி­க­ளின் அணி­சேர்க்­கை­கள் மாறி, மாறி நடக்­க­லாம். அந்­தந்த சூழ­லுக்­கேற்ப கூட்­ட­ணி­கள் அமை­ய­லாம். அதெல்­லாம் வர­லாற்று வழித்­த­டத்தை மாற்றி விடாது. இதனை நிரூ­பித்­த­வரே கலை­ஞர். அவர் 1999-–2004 ஆண்­டு­க­ளில் பா.ஜ.­க. -­வு­டன் கூட்­டணி வைத்­துக்­கொண்­டார் என்று ஓயா­மல் பேசு­ப­வர்­கள் 
உள்­ளார்­கள். அது ஏன் நிகழ்ந்­தது என்­பதை பேச­மாட்­டார்­கள். பல நிகழ்­வு­களை சிந்­தித்­துப் பார்த்­தால் வியப்­பாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உதா­ர­ண­மாக 1989-ஆம் ஆண்டு அமைந்த தி.மு.க ஆட்சி இலங்கை ஆயு­தக்­கு­ழுக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­து­விட்­டது, சட்­டம் ஒழுங்கு சரி­யில்லை என்று கலைக்­கப்­பட்­டது. ஆளு­னர் மூல­மாக ஒன்­றிய ஆட்­சியே நடந்­தது. ஒன்­றிய ஆட்­சி­யில் நடந்த 1991 தேர்­த­லின் போது ராஜீவ் காந்தி தமிழ்­நாட்­டில் படு­கொலை செய்­யப்­பட்­டார். அப்­போது ஒன்­றிய அர­சு­தானே அதற்­குப் பொறுப்­பேற்க வேண்­டும்? ஆனால் தி.மு.க அலு­வ­ல­கங்­கள் மீது தாக்­கு­தல்­கள் நடந்­தன. தேர்­த­லில் தி.மு,க பெரும் சரிவை சந்­தித்­தது. தி.மு.க ஆட்­சி­யி­லி­ருந்து இந்த துயர சம்­ப­வம் நடந்­தி­ருந்­தால் அதனை பொறுப்­பாக்­கு­வது நியா­யம். ஆட்­சி­யைக் கலைத்­து­விட்டு அதன் பின்­ன­ரும் தி.மு.க-வை பொறுப்­பாக்­கு­வது எப்­படி நியா­ய­மாக இருக்­கும் என்­பதே கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ராஜீவ் காந்தி அனு­தாப அலை­யில் ஜெய­ல­லிதா ஆட்­சிக்கு வந்­தார். அவ­ரா­க­வே­தான் பல கோளா­று­க­ளைச் செய்து மக்­க­ளின் கடும் அதி­ருப்­தியை சந்­தித்­தார். அதற்கு அடுத்த 1996 தேர்­த­லில் காங்­கி­ரஸ் பிர­த­மர் நர­சிம்ம ராவ் மீண்­டும் ஜெய­ல­லி­தா­வு­டன் கூட்­டணி வைத்­த­போது, மூப்­ப­னார், சிதம்­ப­ரம் உள்­ளிட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் வெளி­யேறி தமிழ் மாநில காங்­கி­ரஸை உரு­வாக்­கி­னர். தி.மு.க-வு­டன் கூட்­டணி வைத்து தேர்­தலை சந்­தித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சி­யும் ஒன்­றி­யத்­தில் தி.மு.க. பங்­கேற்ற ஐக்­கிய முன்­னணி ஆட்­சி­யும் 1996 தேர்­த­லின் விளை­வாக உரு­வா­னது. இரண்டே ஆண்­டு­க­ளில் தி.மு.க ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் இடம் பெறக்­கூ­டாது என்று சொல்லி காங்­கி­ரஸ் ஆத­ரவை விலக்­கிக் கொண்­டது. 1998 தேர்­த­லில் ஜெயல லிதா பா.ஜ.­க.­வு­டன் கூட்­டணி அமைத்­தார். முதன்­முறை­யாக பா.ஜ.க. ஆட்சி ஒன்­றி­யத்­தில் வாஜ்­பேயி தலை­மை­யில் உரு­வா­னது. ஜெயலலிதா தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சியை அகற்ற வேண்­டும் என அழுத்­தம் கொடுத்­தார். அதனை வாஜ்­பேயி செய்ய மறுத்­த­போது ஆத­ரவை விலக்­கிக் கொண்டு, காங்­கி­ர­சு­டன் இணைந்து நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் கொண்­டு­வந்­தார். தி.மு.க-.வை தனி­மைப்­ப­டுத்த வேண்­டும், பல­வீ­னப்­ப­டுத்த வேண்­டும் என்று பல்­வேறு சக்­தி­கள் இணைந்து இயங்­கின. இந்­தச்  சூழ­லில்­தான் பா.ஜ.­க.-­வு­டன் கூட்­டணி வைக்க தி.மு.க. நிர்­பந்­திக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் குறைந்­த­பட்ச பொது வேலைத்­திட்­டத்தை  உரு­வாக்­கிய பின்­னரே வாஜ்­பேயி தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில் இடம் பெற்­றார். அப்­ப­டி­யும் மத­வா­தம் தீவி­ர­மாக தலை­தூக்­கிய நிலை­யில், மீண்­டும் காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்து 2004-ஆம் ஆண்டு மன்­மோ­கன் சிங் தலை­மை­யி­லான ஒன்­றிய அமைச்­ச­ர­ வை­யில் பங்­கேற்­றார். இந்த கூட்­டணி மாறு­பா­டு­க­ளால் தி.மு.க-.வின் அடிப்­ப­டைக் கொள்­கை­களோ, வர­லாற்று வழித்­த­டமோ எந்­த­வ­கை­யி­லும் மாறி­வி­ட­ வில்லை. ஆனால் ஒவ்­வொரு முறை­யும் கட்­சியை தேர்­த­லில் வெல்­லச்­செய்­வது இந்த மாறு­தல்­க­ளால் பல சவால்­களை சந்­திக்­கவே செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அனைத்து சவால்­க­ளை­யும் கடந்து, தான் உரு­வாக்­கிய செயல்­ப­டுத்­திய திட்­டங்­க­ளால் தமிழ்­நாட்­டின் சமூக அமைப்பை தொடர்ந்து மேம்­ப­டுத்­திக் காட்­டி­னார் கலை­ஞர். ஒவ்­வொரு தி.மு.க. ஆட்­சி­யும் தமிழ்­நாட்­டின் மேன்­மைக்கு எண்­ணற்ற திட்­டங்­களை வழங்­கி­யது. கன்­னி­யா ­கு­ம­ரி­யில் நெடுந்­தோங்கி நிற்­கும் ஐயன் வள்­ளு­வர் சிலை­போல தமிழ் பண்­பாட்­டினை நிலை­நி­றுத்­திக் காட்­டி­யது. 
இனி வரும் காலங்­க­ளி­லும் கழ­கம் அவ்­வ­ழி­யிலே தொட­ரும், மீண்­டும் வெற்றி வாகை சூடும் என்­ப­தில் எந்த ஐய­மும் இருக்க முடி­யாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>