<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="44,363,950,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 03 2026 03:38:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260603T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03062026-CHN-01" position.sequence="01" ex-ref="03062026-CHN-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="99">முத்தமிழறிஞர் கலைஞர் 103–ஆவது பிறந்தநாள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">இன்று தமிழ்நாடெங்கும் கழகத்தினர், பொதுமக்கள் எழுச்சிமிகு கொண்டாட்டம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சென்னை, ஜூன் 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமி­ழர்­க­ளின் நெஞ்­ச­மெல்­லாம் 
நீக்­க­மற நிறைந்­தி­ருக்­கும் நவீன 
தமிழ்­நாட்­டின் சிற்பி முத்­த­மி­ழ­றி­ஞர் 
கலை­ஞர் அவர்­க­ளின் 103–ஆவது பிறந்­தநாள் – ‘செம்மொழி நாள்’ இன்று (ஜூன் 3).  இந்­நா­ளை­யொட்டி  தமிழ்­­நாடெங்­கும் கழ­கத்­தி­னர், பொது­மக்­கள் ஏழை எளி­யோ­ருக்கு நல­உ­த­வி­கள் வழங்கி எழுச்­சி­யுடன் கொண்­டா­டு­
கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஜுன் திங்­கள் 3-ஆம் நாள். இன்­றைய திரு­வா­ரூர் மாவட்­டம் திருக்­கு­வளை கிரா­மத்­தில் ஒரு எளிய விவ­சா­யக் குடும்­பத்­தில் பிறந்­த­வர். இளம் சிறு பரு­வத்­தி­லேயே சீர்­தி­ருத்­தக் கருத்­து­கள் அவர் நெஞ்­சில் வள­ரத் தொடங்­கின. அவற்­றின்­ அ­டிப்­ப­டை­யில் பள்­ளிப் பரு­வத்­தி­லேயே ‘முர­சொலி’ கையெ­ழுத்து ஏடா­க­வும், பின்­னர் மாத வார ஏடா­க­வும், நாளே­டா­க­வும் வளர்ந்து இன்­றும் பத்­தி­ரிகை உல­கில் ஓர் சிறந்த ஆயு­த­மா­கப் பயன்­ப­டு­கி­றது. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா ஆகி­யோ­ரைச் சந்­தித்­த­பின், அவர்­க­ளு­டைய கொள்­கை­களை இத­யத்­தில் ஏந்தி, அவற்றை தம்­வாழ் நாள் முழு­வ­தும் பரப்பி அவ்­வ­ழி­யில் இறு­தி­வரை வாழ்ந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தமிழ்நாட்டை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">உயர்த்தியவர் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">1957 ஆம் ஆண்டு குளித்­த­லைச் சட்­ட ­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்டு, 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ச்­சி­யாக 13 முறை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றி பெற்று வர­லாற்­றுச் சாதனை படைத்­த­வர்.  பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் மறை­வுக்­குப் பின்பு, 1969 ஆம் ஆண்டு தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றார். இத­னைத் தொடர்ந்து, 1971, 1989, 1996, 2006ஆம் ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­­  சரா­கப் பணி­யாற்றி பல எண்­ணற்ற நலத்­திட்­டங்­களை தமி­ழக மக்­களுக்கு வழங்­கிச் சிறப்பு  செய்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தமிழ்­நாட்­டில் 5 முறை  முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற காலத்­தில் ஏழை எளிய மக்­கள் கல்வி, அறி­வி­யல், சமூக பொரு­ளா­தா­ரத்­தில் முன்­னேற்­றம் பெற்­றிட எண்­ணற்ற சிறப்­பான சமூக நலத்­திட்­டங்­க­ளைத் திறம்­ப­டச் செயல்­ப­டுத்தி, இந்­தி­யா­வி­லுள்ள மாநி­லங்­க­ளுக்­கெல்­லாம் முன்­னோடி மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">எண்ணற்ற திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தீட்டியவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக் காலத்­தில் குடி­சைப் பகுதி மாற்று வாரி­யம், பேருந்­து­கள் நாட்­டு­டைமை, விவ­சா­யிக­ளுக்கு இல­வச மின்­சா­ரம், பெண்­களுக்கு சொத்­து­ரிமை, உழ­வர் சந்தை, வரு­முன் காப்­போம் திட்­டம், நமக்கு நாமே திட்­டம், மூவ­லூர் இரா­மாமிர்­தம் திரு­மண உத­வித் திட்­டம், அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டம், பெரி­யார் நினைவு சமத்­து­வ­பு­ரம், அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் போன்ற எண்­ணற்ற திட்­டங்­களை அறி­வித்­துச் செயல்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தந்தை பெரி­யார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">அறி­ஞர் அண்­ணா­வால் புக­ழப்­பட்­ட­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளால்‘கலை­ஞர் அவர்­களை அறி­வில் சிறந்­த­வர் என்­றும், நிரு­வா­கத்­தில் சிறந்­த­வர்’ என்­றும் பொதுத் தொண்­டுக்­காக தியா­கம் செய்­வ­தில் சிறந்­த­வர்’ என்­றும், பாராட்­டப் பெற்­ற­வர். பேர­றி­ஞர்அண்ணா அவர்­கள் ‘தண்­ட­வா­ளத்­தில் தலை­வைத்­துப் படு’ என்று சொன்­னா­லும், ‘அமைச்­சர் பதவி ஏற்­றுக் கொள்’ என்று சொன்­னா­லும் இரண்­டை­யும் ஒன்­றா­கக் கரு­து­ப­வர் என் தம்பி கரு­ணா­நிதி’. ‘என் தம்பி பாளை­யங்­கோட்டை தனி­மைச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கும்  இடம்­தான் நான் யாத்­திரை செல்­லும் தலம் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யைப் பற்­றிக் குறிப்­பி­டும் போது ஆட்­சிப்­பணி என்­பது, இடை­யில் வரும் போகும்  என்­றும் என் எழுத்­துப் பணி, எனது செங்­கோல்; என்­றைக்­கும் என்­னி­ட­மி­ருந்துஎவ­ரா­லும் பறிக்க முடி­யாது; என்­றைக்­கும் நிலை­யா­னது என்­றும் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">கலைத்­து­றை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">கலை­ஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் கலைத்­து­றை­யில் ஆற்­றி­யுள்ள பணி­கள் அள­வில்­லா­தவை. 75க்கும் மேற்­பட்ட திரைப்­ப­டங்­க­ளுக்­குக் கதை, வச­னம் எழு­தி­யுள்­ளார். பல்­வேறு நாவல்­கள், நாட­கங்­கள், சிறு­க­தை­கள், கவி­தைத் தொகுப்­பு­கள், உரை­நூல்­கள், கட்­டு­ரை­கள்எழு­திச் சாத­னை­கள் படைத்­தார். முக்­கி­ய­மாக, திருக்­கு­றள் உரை, சங்­கத் தமிழ், தொல்­காப்­பி­யப் பூங்கா, இலக்­கி­யப் படைப்­பு­கள், குறள் ஓவி­யம், சிலப்­பதி­கா­ரம், நாட­கக் காப்­பி­யம், பூம்­பு­கார், தாய் ஆகி­யவை குறிப்­பி­டத்­தக்­கவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">கலைஞர் நூல்கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">நாட்டுடைமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தனது வாழ்க்கை வர­லாற்­றைத் தமி­ழக மக்­கள் அறி­யும் வகை­யில் “நெஞ்­சுக்கு நீதி” என்ற தலைப்­பில் முர­சொலி மற்­றும் குங்­கு­மம் இதழ்­க­ளில் தொடர்­கட்டு­ரை­யாக எழு­தி­னார். பின்­னர், அவை “நெஞ்­சுக்கு நீதி” ஆறு பாகங்­கள் கொண்ட நூலாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்­தும் கடந்த ஆட்சியில் முத­ல­மைச்­சராக இருந்த கழகத் தலைவர்   மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் அர­சு­டை­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தமது  பொதுவாழ்­வில் தந்தை பெரி­யார்,  பேர­றி­ஞர் அண்ணா  ஆகி­யோர் வழி­யில் அய­ராது உழைத்து ஆற்­றி­யுள்ள தொண்­டு­கள் ஏரா­ளம். தமிழ்ச் சமு­தா­யத்­தின் உரி­மை­களை நிலை­நாட்ட அரும்­பா­டு­பட்­டார். தீண்­டா­மை­யின் விளை­வா­கச் சமு­தா­யத்­தில் நீடிக்­கும் கொடு­மை­கள் ஒழிக்­கப்­பட வேண்­டும் என்­றும், வறுமை மற்­றும் வேலை­யில்­லாத் திண்­டாட்­  டத்­தி­னால் பாதிக்­கப்­ப­டும் நாட்டு 
மக்­கள் நல்­வாழ்வு பெற வழி­வகை செய்ய வேண்­டும் என்­றும், பெண்­ணு­ரிமை பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­றும் அய­ராது பாடு­பட்டவர் 
முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">ஒப்­பற்ற வழி­காட்டி கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களின் கலை, இலக்­கிய, அர­சி­யல் வாழ்க்கை வர­லாற்­றி­னைப் பொது­மக்­கள் அறிந்­தி­டும் வகை­யில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினை­வி­டம் சென்னை, மெரினா கடற்­கரை, காம­ரா­சர் சாலை­யில் மிகச் சிறப்­பான முறை­யில் அமைக்­கப்­பட்டு, 26.2.2024 அன்று  கடந்த கழக ஆட்சியின்போது  முத­ல­மைச்­  சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மேலும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினை­வி­டத்­தின் அரு­கில் கீழ்த்­த­ளத்­தில் டிஜிட்­டல் முறை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கலை­ஞர் உலக அருங்­காட்­சி­ய­கத்­தினை நாள் ­தோ­றும் பொது­மக்­கள் பார்­வை­யிட்டு வரு­கின்ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">ஜூன் 3 – செம்­மொழி நாள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வாழும்­போது வர­லா­றா­க­வும், மறைந்­தும் தமிழ்­நாட்டு மக்­க­ளின் மனங்­க­ளில் நிலைத்து வாழ்­கின்ற அவ­ரது புக­ழுக்­குப்  பெருமை சேர்க்­கின்ற வகை­யி­லும்,   முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த ஜுன் 3-ஆம் நாள்   “செம்­மொழி நாள்” என கடந்த கழக ஆட்சியின்போது தமிழ்­நாடு அர­சி­னால் அறி­வித்து ஆணை வெளி­யிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">80 ஆண்டுகால</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">பொது வாழ்க்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இப்படி பார்போற்றும் வகையில் தனது 14ஆம் அகவை முதல் 94ஆம் அகவை வரையில் சுமார் 80 ஆண்டுகாலம் மக்கள் பணிக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். அப்பேற்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்த நாள் இன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">கலைஞர் திருவுருவச் சிலைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  மரியாதை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதுடன் அவரது திருவுருவச் சிலை, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்து கிறார். மேலும் ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கி சிறப்பிக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அதேபோன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறி வறுத்தலின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் அனைவரின் திருநாளாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்ஆங்காங்கு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்துவதுடன், நலிவுற்ற ஏழை, எளிய நிலையில் உள்ள அனைவருக் கும் நலத்திட்ட உதவிகள்வழங்கி கழகத்தினர் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடன் இன்று மட்டுமின்றி இந்த மாதம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>