<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,72,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 04 2026 03:54:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260604T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="04062026-MDU-15" position.sequence="15" ex-ref="04062026-MDU-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டமன்றத்திற்குள்ளே கேள்வி கேட்டால்  பதில் கூற இயலவில்லை,  திருச்சியில் வீரவசனம் பேசுவது அரசியல் அசிங்கம், புலம்பல்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="134">முதலமைச்சர் பொறுப்புக்கே இழுக்கானவர் விஜய்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="46">சென்னை – அண்ணா அறிவாலயத்தில் – கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. காட்டமான பேட்டி!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">விஜய், தூய சக்தி இல்லை! துப்பில்லா சக்தி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">EWS சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர் தலைவர் மு.க.ஸ்டாலின்!   தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட மோடியிடம் கெஞ்சுபவர் விஜய், உங்கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா?</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="raja_15_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“சட்­ட­மன்­றத்­திற்­குள்ளே கேள்வி கேட்­டால்  தயக்­கம், மயக்­கம், இய­லா­மை­யைக் காட்­டி­விட்டு  திருச்­சி­யில் வீர­வ­ச­னம் பேசு­வது அர­சி­யல் அசிங்­கம், புலம்­பல்!” என்­றும், “தான் வகிக்­கிற முத­ல­மைச்­சர் பத­விக்­குப் பொருத்­த­மா­ன­வ­ராக இல்­லா­மல் பிதற்­றி­யி­ருக்­கி­றார் விஜய்” என்­றும், “அர­சி­யல் சட்­டத்­தால் திருத்­தப்­பட்ட EWS சட்­டத்தை  தமிழ்­நாட்­டில் அனு­ம­திக்க மாட்­டேன் என்று சொன்­ன­வர் தலைவர் மு.க.ஸ்டாலின் என்­றும், தமிழ்த்­தாய் வாழ்த்­துப்­பாட மோடி­யி­டம் கெஞ்­சு­ப­வர் விஜய், உங்­கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்­தக் கூடாதா?” என்றும் தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஆ.இராசா, எம்.பி.  செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில், நேற்று முன்தினம்  (02–06–2026) தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஆ.ராசா, எம்.பி. செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் சட்­டப்­பே­ர­வைக்­கான பொதுத்­தேர்­தல் நடை­பெற்று 234 தொகு­தி­க­ளில் 107 இடங்­க­ளில் வெற்றி பெற்று, அந்த எண்­ணிக்­கை­யோடு தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்­சிப் பொறுப்­பினை ஏற்­றது. முத­ல­மைச்­ச­ராக விஜய் பொறுப்­பேற்­றுக்­கொண்­டார். சட்­ட­ மன்­றத்­தில் நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்­தின்­போது  போது­மான வாக்­கு­க­ளைப் பெறு­கிற அள­விற்கு எதிர்க்­கட்­சி­க­ளும் அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைத்து அவர் முத­ல­மைச்­ச­ரா­கப் பணி­யைத் தொடர்ந்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தலை­வர் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற புதிய ஆட்­சிக்கு வாழ்த்­து­களைச் சொன்­ன­தோடு “ஆறு மாத காலத்­திற்கு உங்­க­ளு­டைய ஆட்­சி­யி­னு­டைய திற­னைக் கடு­மை­யாக விமர்­சிக்க மாட்­டோம்” என்று கூறி  இந்த அர­சாங்­கம் தொடர்ந்து நடை­பெற வேண்­டும் என்று விழைந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்­குப் பிறகு முத­ல­மைச்­சர் டெல்­லிக்­குச் சென்­றார்; பிர­த­ம­ரைப் பார்த்­தார். ஏனைய மூன்று மாநில (அசாம், மேற்கு வங்­கா­ளம், கேரளா) முத­ல­மைச்­சர் க­ளைப் பிர­த­மர் ஏறத்­தாழ 40 முதல் 50 நிமி­டங்­கள் சந்­தித்­தார். ஆனால் என்ன கார­ணத்­தி­னாலோ தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ருக்கு வெறும் 10 நிமி­டங்­கள் மட்­டுமே பிர­த­ம­ரால் ஒதுக்­கப்­பட்டு, உட­ன­டி­யாக நிர்­மலா சீதா­ரா­ம­னைத் தவிர வேறு யாரை­யும் 
சந்­திக்­கா­மல் அவர் திரும்பி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அர­சி­யல் சட்ட ஒழுக்­கத்­தைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கடைப்­பி­டிக்க வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்­குப் பிறகு  முதன்­மு­த­லா­கத் தமிழ்­நாட்­டி­னு­டைய தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ரா­கத் தொகுதி மக்­க­ளுக்கு நன்றி சொல்­வ­தற்­குத் திருச்­சிக்­குச் சென்­ற­வர்  ஒரு 18 நிமி­டங்­கள் பேசி­யி­ருக்­கி­றார். அர­சி­யல் சட்­டத்­தால் நிறு­வப்­பட்­டுள்ள ஒரு பத­வி­யில் ஒரு நாற்­கா­லி­யில் உட்­கார்ந்­தி­ருக்­கின்ற ஒரு­வர் அர­சி­யல் 
சட்­டம் என்ன ஒழுக்­கத்­தைக் கடைப்­பி­டிக்­கச் சொல்­கிறதோ அதா­வது Constitutional Morality –ஐ பின்­பற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் நான் தெளி­வா­கச் சொல்­வ­தென்­றால், அர­சி­யல் நிர்­ணய சபை­யில் அம்­பேத்­கர் அவர்­கள் பேசு­கின்­ற­போது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“அர­சி­யல் சட்­டம் இருக்­கிற எல்லா நாடு­க­ளுக்­கும் அர­சி­யல் ஒழுக்­கம் என்று ஒன்று தேவை­யில்­லா­மல் இருக்­க­லாம், ஆனால் இந்­தி­யா­விற்கு Constitutional Morality தேவைப்­ப­டு­கி­றது. அது முத­ல­மைச்­சர் 
க­ளுக்­கும், அமைச்­சர்­க­ளுக்­கும், பிர­த­மர்­க­ளுக்­கும் பொருந்­தும்” என்று உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தகு­தி­யைக் குறைத்து பிதற்­றல்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த Constitutional Morality, Accountability எது­வுமே இல்­லா­மல், தான் வகிக்­கிற பத­விக்­குப் பொருத்­த­மா­ன­வ­ராக இல்­லா­மல், தன்­னு­டைய தகு­தி­யைக் குறைத்­துக்­கொண்டு பிதற்­றி­யி­ருக்­கி­றார்; வீர­வ­ச­னம் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் தமிழ்­நாட்டு மக்­களை, அவ­ருக்கு வாக்­க­ளித்த பெரு­மக்­களை,வாக்­க­ளிக்­காத பெரு மக்­களை, வாக்­க­ளிக்­கா­விட்­டா­லும் எனக்­கும் சேர்த்து அவர்­தான் முத­ல­மைச்­சர் என்­கின்ற அந்த உணர்­வோடு, மிகுந்த மரி­யா­தை­யோடு கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் ஒன்­று­தான்: சட்­ட­மன்­றத்­தில் பதி­லுரை ஆற்­றிய விஜய் அவர்­க­ளு­டைய Tone and tenor, அவ­ரு­டைய குர­லி­னு ­டைய வலிமை, அந்த அழுத்­தம், அந்­தச் சத்­தம்... அதை­யும், திருச்­சி­யில் அவர் உரை­யாற்­று­கி­ற­போது எள்­ள­லும் துள்­ள­லு­மாக, கர்­ஜித்­த­தா­கச் சொல்­லிக்­கொண்டு கத்­திக்­கொண்டுபேசி­னாரே அந்­தப் பேச்­சை­யும், இரண்­டை­யும் ஒப்­பிட்­டுப் பாருங்­கள். ஏன் சட்­ட­மன்­றத்­திற்­குள்ளே தளர்வு, சோர்வு, தயக்­கம், மயக்­கம், இய­லாமை? ஆனால் திருச்­சி­யில் ஏன் இந்த வீர வச­னம்? அந்த வச­னத்தை எழு­திக் கொடுத்­தது யார்? என்­கின்ற பொருத்­தப்­பாட்டை, ஒப்­பீட்டை நீங்­கள் எண்­ணிப்­பார்த்­தால், இதற்­குப் பின்­னாலே இருக்­கின்ற அர­சி­யல் தந்­தி­ரம், அர­சி­யல் அசிங்­கம், 
புலம்­பல் எல்­லாம் உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அல்லு சில்லு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் சொல்­லு­கி­றார், ஒவ்­வொரு வரிக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைக் குறை சொல்­வ­தாக நினைத்­துக் கொண்டு  “Stalin சார்” என்­பது... அப்­பு­றம் “திமு­க–­வுக்­கும் தவெ­க–­வுக்­கும் தான் போட்டி, மத்­த­வங்க எல்­லாம் அல்லு சில்லு” என்­கி­றார். மத்­த­வங்க எல்­லாம் அல்லு சில்­லுன்னா யார்? அதி­முக மற்­றும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“உங்­க­ளுக்­கும் எனக்­கும் தான் போட்டி, மத்­த­வங்க எல்­லாம் அல்லு சில்லு” என்­றீர்­களே முத­ல­மைச்­சர் அவர்­களே, உங்­க­ளுக்கு ரொம்ப சங்­க­ட­மாக இல்­லையா? நான் வேறு வார்த்­தை­யைப் பயன்­படுத்த விரும்­ப­வில்லை. அந்த அல்லு சில்லு 
வீட்­டுக்கே நீங்­களே போய், சால்வை போட்டு, அவர்­க­ளோடு சேர்ந்து ஓட்டு வாங்­கி­னீர்­களே... அந்த அல்லு சில்­லு­கிட்ட போய் கெஞ்­சிக் கூத்­தா­டி­யது தில்­லு­முல்லு அர­சி­யலா, அநா­க­ரிக அர­சி­யலா? அதைத் தமிழ்­நாட்டு மக்­கள் தெரிந்­து­கொள்ள வேண்­டாமா? நீங்­கள் என்ன வேண்­டு­மா­னா­லும் பேசு­வீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இப்­போ­தும் சொல்­கி­றேன், இந்த ஆட்சி அமைந்­த­தற்­குப் பிறகு, ஒரு முத­ல­மைச்­ச­ருக்­குத் தர வேண்­டிய மரி­யா­தையை எங்­க­ளு­டைய தலை­வ­ரும் நாங்­க­ளும் தரத் தயார். ஆனால் எங்­க­ளு­டைய நிலைப்­பாடு உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­வர்­கள் இந்த ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றார்­கள் என்ற கார­ணத்­தி­னால் அதே வழி­யில் 
முத­ல­மைச்­ச­ரும் செல்­லக் கூடாது என்று உங்­களை நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கவர்ச்சி அர­சி­யல்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொன்­றுக்­கும் அர­சி­யல் புரி­தல் இல்­லா­மல் “கவர்ச்சி அர­சி­யல்” என்­கி­றார்­கள். வாதத்­திற்கு வைத்­துக்­கொள்­வோம், ஏன் சினிமா நடி­க­ருக்­குக் கவர்ச்சி அர­சி­யல் இருக்­கக் கூடாது? “அந்­தக் கவர்ச்சி அர­சி­ய­லில் இருந்து வெளியே வாருங்­கள்” என்று தமிழ்­நாட்டு மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­வ­தற்கு மற்ற கட்­சி­களுக்கு எல்­லாம் உரிமை இல்­லையா? அது என்ன “கவர்ச்சி அர­சி­யல்” என்று வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­தி­னால் எனக்கு நன்­றாக வந்­து­வி­டும்... என்ன வார்த்தை வந்­து­வி­டும்? இது முத­ல­மைச்­ச­ருக்கு அழகா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“You are occupying the constitutional chair, brother / bro Vijay” என்று நாங்­க­ளும் கேட்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு முத­ல­மைச்­ச­ரா­கப் போகி­றீர்­கள், நன்றி சொல்­கி­றீர்­கள். திமு­கவை விமர்­சிக்க வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை, விமர்­சி­யுங்­கள். அதற்கு ஒரு ஐந்து நிமி­டம் எடுத்­துக்­கொள்­ளுங்­கள். மீதி 10 நிமி­டங்­கள், “பிர­த­ம­ரோடு போனேன், சந்­தித்­தேன், என்ன செய்­யப் போகி­றேன், பிர­த­ம­ரி­டம் மனு அளித்­தி­ருக்­கி­றேன்” என்று ஏதா­வது சொல்­லி­யி­ருக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் சார் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">யார் தெரி­யுமா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன், யாரைப் பார்த்து நீங்­கள் குறை சொல்­கி­றீர்­கள்? தமிழ்த்­தாய் வாழ்த்­துக்கு நீங்­கள் போய் கடி­தம் கொடுக்­கி­றீர்­கள். நீங்­கள் சொன்ன “Stalin சார்” யார் தெரி­யுமா? அர­சி­யல் சட்­டத்­தால் திருத்­தப்­பட்ட EWS (Economically Weaker Sections) constitutional mandate, once it was passed by the Parliament, அதைத் தமிழ்­நாட்­டுக்­குள்ளே அனு­ம­திக்க மாட்­டேன் என்று சொன்­ன­வர்­தான் ஸ்டாலின்! நீங்­கள் தமிழ்த்­தாய் வாழ்த்­துக்­குப் போட்­டி­ருப்­பது என்ன தெரி­யுமா? வெறும் அர­சாணை (G.O.) சார். அர­சி­யல் சட்­டத்தை மீறி­னால் ஆட்­சி­யையே கலைக்­க­லாம். நாங்­கள் மீறி­யி­ருக்­கி­றோம், தாழ்த்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­காக, பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­காக! நீங்­கள் ஒரு தமிழ்த்­தாய் வாழ்த்­துக்­குப் போய் கெஞ்­சு­கி­றீர்­களே, கூத்­தா­டு­கி­றீர்­களே, உங்­கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்­தக் கூடாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இய­லா­மையை விமர்­சிக்­கா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இருக்க முடி­யாது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒன்று தெரிந்­து­கொள்­ளுங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­களே, “நாங்­கள் உங்­க­ளு­டைய governance–ஐத் தான் ஆறு மாதம் கழித்து விமர்­சிப்­போம்” என்று சொன்­னோம். “உங்­க­ளு­டைய இய­லா­மையை, day–to–day administration–இல் இருக்­கிற குறை­பா­டு­களை நாங்­கள் விமர்­சிக்க மாட்­டோம்” என்று நீங்­க­ளும் சொல்ல முடி­யாது, நாங்­க­ளும் கேட்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­கள் day–to–day administration–ஐச் சொன்­னால்... இவ்­வ­ளவு கொலை நடக்­கி­றது, கொள்ளை நடக்­கி­றது, இவ்­வ­ளவு பாலி­யல் தொந்­த­ர­வு­கள் நடக்­கின்­றன என்று சொன்­னால், நீங்­கள் உடனே முந்­தைய அரசை விமர்­சிக்­கி­றீர்­களா? நீங்­கள் சொன்­னீர்­களே, “நான் வந்த உடனே எல்­லாம் சரி­யா­கி­வி­டும்” என்று. சரி, பணம் இல்லை, நிதி­நி­லை­மை­யைச் சீர் செய்­வ­தற்கு ஆறு மாதம் ஆக­லாம் அல்­லது இரண்டு வரு­டம் ஆக­லாம். சட்­டம் ஒழுங்­குக்கு என்ன பிரச்­சனை? போலீஸ் உங்­க­ளி­டம் தானே இருக்­கி­றது? துப்­பாக்கி உங்­கள் கையில் தானே இருக்­கி­றது? Transferring authority நீங்­க­தானே? அதற்கு என்ன கால அவ­கா­சம் வேண்­டும் என்று கேட்­கி­றேன்? 
உள­வுத்­து­றை­யைச் சரி­யாக வைத்­தி­ருக்க வேண்­டி­ய­து­தானே நீங்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளு­டைய உரை­யில் அப்­பு­றம் வேறு என்­ன­வெல்­லாம் சொல்­கி­றீர்­கள்? இப்­போது தமிழ்­நாட்­டுக்கு அவர் கையெ­ழுத்­துப் போட்­ட­தில் “சிங்­கப்­பெண்” என்று ஒரு திட்­டத்­திற்கு உங்­க­ளின் முதல் 
கையெ­ழுத்­தைப் போட்­டீர்­கள். நான் கேட்­கி­றேன், “சிங்­கப்­பெண்” திட்­டத்­திற்கு budgetary support என்ன? கலை­ஞர் மூன்று கையெ­ழுத்­துப் போட்­டார், எங்­க­ளு­டைய தலை­வர் ஸ்டாலின் முதல் கையெ­ழுத்­துப் போட்­டார் முத­ல­மைச்­ச­ராக வரும்­போது. அதற்­கெல்­லாம் budgetary support என்ன என்று நிதித்­துறை செய­லா­ள­ரோடு பேசி, நிதி ஒதுக்­கீடு செய்து முடித்த பிற­கு­தான் கையெ­ழுத்­துப் போடு­வோம். 
“சிங்­கப்­பெண்” திட்­டத்­திற்கு budget allocation என்ன? நீங்­கள் என்ன சொல்ல வரு­கி­றீர்­கள், பெயரை மட்­டும் மாற்­றி­விட்­டால் போதுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கைத்­தட்­ட­லுக்­காக – உணர்ச்­சி­யைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தூண்­டு­வ­தற்­காக பேச்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு IG–யைப் போட்­டீர்­கள், புதி­தாக recruit பண்­ணி­னீர்­களா? அதற்­குப் புதி­தாக department வாங்­கிக் கொடுத்­தீர்­களா? அல்­லது எந்­தெந்த மாவட்­டத்­தில் “சிங்­கப்­பெண்” திட்­டத்­திற்­குப் போலீஸ் allot ஆகி­யி­ருக்­கி­றார்­கள்? எத்­தனை வாக­னங்­கள் நீங்­கள் வாங்­கி­யி­ருக்­கி­றீர்­கள்? அதை ஏன் என்னை விவா­திக்க 
வைக்­க­வில்லை? கையெ­ழுத்­துப் போட்­டீர்­களே, ஏன் என்னை விவா­திக்க வைக்­க­வில்லை என்று கேட்­கிறேன். உங்­களை “inability, incompetent” என்று நான் சொல்­வ­தில் என்ன தப்பு? ஆனால் நீங்­கள் பேசு­வ­தைப் பார்த்­தால், கைதட்­ட­லுக்­காக, உணர்ச்­சி­யைத் தூண்­டு­வ­தற்­காக எல்­லாம் பண்­ணு­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­கள் என்ன சக்தி தெரி­யுமா? மும்­மொ­ழிக் கொள்­கையை நாங்­கள் உள்ளே விட­வில்லை. என்­னென்ன திட்­டங்­களை நிறுத்தி வைத்­தி­ருக்­கி­றோம்! Delimitation–ஐ நாங்­கள் தான் நிறுத்­தி­னோம். National Education Policy–யை நாங்­கள் தான் நிறுத்­தி­னோம். PM–SHRI திட்­டத்­தில் 2500 கோடி இழந்­தா­லும் பர­வா­யில்லை, 10000 கோடி நஷ்­டப்­பட்­டா­லும் பர­வா­யில்லை, “மாநில உரி­மையை விட்­டுக் கொடுக்க மாட்­டேன்; மோடி அவர்­களே, நான் அதற்­கெல்­லாம் பயப்­பட மாட்­டேன்” என்று சொன்­ன­வர் தூர சக்­தி­யாம், ஓர சக்­தி­யாம், கோர சக்­தி­யாம், 
பார சக்­தி­யாம், தூர்ந்­து­போன சக்­தி­யாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எழு­திக் கொடுத்த ஸ்கிரிப்ட் வீரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Bro Vijay, bro... எங்கே bro போச்சு உங்­க­ளு­டைய சக்தி? பிர­த­மர் முன்­னாடி “முடி­யாது” என்று சொல்­லிட்டு வாங்க bro. ஏன் bro, முத­ல­மைச்­சர் bro, ஏன் பேசா­மல் வந்­தீர்­கள்? ஏன் bro, பிரஸ்­ஸைப் பார்ப்­ப­தற்கு உங்­க­ளுக்­குத் தைரி­யம் இல்லை? ஏன் bro, எழு­திக் கொடுத்த ஸ்கிரிப்ட்­டுக்கு இவ்­வ­ளவு நேரம் வீரம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு பிரச்­சனை இருக்கு! “பாசி­சத்­தை­யும் எதிர்க்­கி­றோம், பாயா­சத்­தை­யும் எதிர்க்­கிறோம்” என்­றீர்­கள். ரைட், பாயா­சத்தை முடித்­து­ விட்­டீர்­கள்; பாசி­சம் என்ன ஆயிற்று bro? திரு­வள்­ளு­ வ­ருக்­குக் காவி உடை, காவி கலர் போட்­டி­ருக்­கி­றார் கவர்­னர். உங்­க­ளி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு, “அதைப் பற்றி இப்­போது பேச வேண்­டாம்” என்­கி­றீர்­கள். எப்­போது பேசு­வீர்­கள்? திரு­வள்­ளு­வர் எங்­க­ளு­டைய இனத்­தி­னு­டைய, மொழி­யி­னு­டைய, கலாச்­சா­ரத்­தி­னு­டைய அடை­யா­ளம். “பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்” என்று emblem போட்­டுக்­கொண்­டால் பத்­தாது. திரு­வள்­ளு­வ­ருக்கு இங்கே காவி சாயம் பூசும்­போது, “நான் இப்­போது பேச மாட்­டேன்” என்று சொன்­னால், எங்­க­ளு­டைய மொழி­யை­யும் இனத்­தை­யும் தாழ்த்­து­கிற ஒரு­வ­ரைக் கேள்வி கேட்­ப­தற்­குத் துப்பு இல்­லாத ஒரு சக்தி, எங்­க­ளைப் பார்த்­துத் 
தீய சக்தி, தூர சக்தி என்று சொல்­லு­வீங்­களா? நீங்­கள் என்ன சக்தி? நார சக்­தியா? கேட்க மாட்­டோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­பு­றம் நாங்­கள் சாதி, மதம், பணத்­தை­யெல்­லாம் உடைத்­து­விட்­டோம் என்­கி­றீர்­கள். நீங்­கள் சாதி பார்த்து candidate–ஐப் போட­வில்­லையா? நீங்­கள் மதமே பார்க்­க­வில்­லையா? கையில் ஒரு மதம், நெற்­றி­யில் ஒரு மதம்... பதவி ஏற்­கும்­போது “ஜோசப் விஜய் என்­னும் நான்...” அது ஒரு மதம். என்ன bro, total contradiction bro! Bundle of contradictions! இந்த bundle of contradictions–ஐத் தாண்டி வந்­து­விட்­டீர்­கள் அல்­லவா? அதை­யெல்­லாம் உள்ளே மறைத்­துப் போட்டு வைத்­தி­ருக்­கி­றீர்­கள் என்று அர்த்­தம். அதை­வி­டப் பெரிய கொடுமை, திருச்சி கிழக்கு தொகுதி வந்து, “என்­னு­டைய செல்­லப் பிள்ளை...” ஐயோ ஜனங்­களே ஜாக்­கி­ர­தை­யாக இருங்­கள்! நான் இப்­போது கேட்­கி­றேன், இதெல்­லாம் ஒரு chief minister–இன் பிரச்­ச­னையா? ஒரு chief minister–க்கு முன்­னாடி என்­னென்ன பிரச்­ச­னை­கள் இருக்­கின்­றன? தமிழ்­நாட்­டுக் குத் தர வேண்­டிய உரி­மை­களை நீங்­கள் வாங்­கி­னீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்­குப் பக்­கத்து மாநி­லத்­தி­னு­டைய துணை முத­ல­மைச்­சர் D.K. Shivakumar பேசி­யி­ருக்­கி­றார்: “திமு­க–­வும் ஸ்டாலி­னும் இருக்­கிற வரைக்­கும் தான் எங்­க­ளுக்­குப் பிரச்­சனை, மேக­தாது அணை கட்­டு­வ­தற்கு இனி­மேல் எங்­க­ளுக்­குப் பிரச்­சனை இல்லை” என்­கி­றார். இதைக் கேட்­ட­தற்­குப் பிறகு, காங்­கி­ரஸ்­கார்­கள் இங்கே இருக்­கிற இரண்டு அமைச்­சர்­கள் அதற்­குத் தான் எதிர்­வினை ஆற்­றி­யி­ருக்­கி­றீர்­களா? முத­ல­மைச்­சர் அவர்­களே, உங்­க­ளைச் சொல்­கி­றார், நீங்­கள் ஒரு ஆளே இல்லை என்­கி­றார் அவர்; “எங்­க­ளுக்­குப் பிரச்­ச­னையே இல்லை” என்­கி­றார். D.K. Shivakumar–க்கு உங்­கள் பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­கள் போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­பு­றம் பச்­சைத் துண்­டைப் போட்­டுக்­கொண்டு சொன்­னீர்­களே, நான் விவ­சாயி மக­னா­கப் பிறக்­கா­மல் இருப்­ப­தற்கு வருத்­தப்­பட்­டேன் என்று.. நான் விவ­சாய வீட்­டுப் பிள்ளை, எட்­டா­வது பிள்ளை, நான் கடை­சிப் பிள்ளை, எனக்கு ஏர் ஓட்­டத் தெரி­யும், தண்­ணீர் பாய்ச்­சத் தெரி­யும், உழவு தெரி­யும், வண்டி மாடு ஓட்­டி­யி­ருக்­கி­றேன், எல்­லாம் பண்­ணி­யி­ருக்­கி­றேன்” என்று. நீங்­கள், “ஐயயோ, எனக்கு விவ­சா­யப் பிள்­ளை­யா­கப் பிறக்­கா­மல் போய்­விட்­டதே” என்­றீர்­களே, இன்­றைக்­குப் பார்த்­தீர்­களா டிவி­யில்? விவ­சா­யி­கள் போரா­டு­கி­றார்­கள், “பிண­மாக நடித்­துக்­கொண்டு போரா­டு­கி­றோம், இந்த ஆட்­சி­யில் நாங்­கள் பிண­மா­கிக் கொண்­டி­ருக்­கி­றோம்” என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொன்று கேட்­கி­றேன், “எங்­களை ஆறு மாதம் கேள்வி கேட்­கா­தீர்­கள்” என்று சொன்­னீர்­களே, நீங்­கள் ஆறு மாதம் அல்ல, ஆறு வரு­டம் கூடக் கேள்வி கேட்க வேண்­டாம். உங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் உங்­க­ளு­டைய நடத்தை, நாண­யம் இருக்­கி­றதா? Reserve Bank guidelines இல்­லா­மல் நீங்­கள் விவ­சா­யக் கடனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்ய முடி­யாது. 2025 guidelines இருக்­கும்­போது, நீங்­கள் 2026–இல் தானே தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கி­றீர்­கள்? அந்த அறிக்கை தயா­ரிக்­கும்­போது இப்­படி ஒரு சட்­டம் இருப்­பது என்­பது தெரி­யா­மல் கூட ஒரு அர­சி­யல் கட்சி தேர்­தல் அறிக்கை கொடுத்­தால், உங்­க­ளுக்கு என்ன பெயர் வைக்­க­லாம்? “ரொம்ப கல்­வி­யா­ளர்­கள்” என்று பெயர் வச்­சி­ட­லாமா? “மெத்த படித்­த­வர்­கள்”, “பேர­றி­வா­ளர்­கள்”, “ஞானி­கள்” என்று பெயர் வச்­சி­ட­லாமா? நீங்­களே ஒரு வார்த்­தை­யைச் சொல்­லுங்­க­ளேன்!அப்போ நீங்­களே ஒரு வாக்­கு­று­தி­யைக் கொடுத்­து­விட்டு, அதை முடிக்க முடி­யா­மல் 
இப்­போது புதுப்­புது நிபந்­த­னை­கள் வைக்­கி­றீர்­கள் 200 யூனிட் மின்­சா­ரத்­திற்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றுக்­கும் “No comments”…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">“No comments”.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­பு­றம் கச்­சத்­தீவு... கச்­சத்­தீவு வந்து நீண்ட நாள் எங்­க­ளு­டைய தமி­ழ­ரு­டைய பிரச்­சனை, மீன­வ­ரு­டைய பிரச்­சனை. “அதைக் கேட்­டி­ருக்­கி­றேன்” என்று சொல்­லுங்­கள், “கேட்­போம்” என்று சொல்­லுங்­கள், “போரா­டு­வோம்” என்று சொல்­லுங்­கள், ஒத்­துக்­கொள்­கி­றோம். அதில் அர­சி­யல் சட்­டச் சிக்­கலே இருக்­கி­றது.தமிழ்­நாடு அர­சாங்­கத்­தி­னு­டைய, சட்­ட­மன்­றத்­தி­னு­டைய அனு­மதி இல்­லா­ம­லேயே அன்­றைக்­குக் கச்­சத்­தீவை ஒன்­றிய அர­சாங்­கம் தாரை வார்த்­தது. அதைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்சி, கலை­ஞர் தலை­மை­யில் சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் போட்டு கண்­டித்­தி­ருக்­கி­றது. எல்­லாம் ஆவ­ணங்­க­ளாக இருக்­கின்­றன. உடனே நீங்­கள் செய்து கொடுக்க வேண்­டும் என்று அவ­சி­யம் இல்லை, ஆனால் குறைந்­த­பட்ச ஒரு accountability வேண்­டாமா? உங்க அமைச்­சர்­க­ளுக்கு என்ன அமைச்­சர்­கள் அவர்­கள்? கச்­சத்­தீவைப் பற்­றிப் பேசி­னால் “No comments”. திரு­வள்­ளு­ வர் சிலைக்கு ஏன் காவி சாயம் அடிக்­கி­றார் கவர்­னர் என்று கேட்­டால், “அதை இப்­போது பேச வேண்­டாம்” என்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பக்­ரீத்­துக்கு ஒரு judgment வந்­தி­ருக்­கி­றது, எங்­கள் கட்­சி­யின் சார்­பில் சர­வ­ணன், கழ­கத்­தி­னு­டைய துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கவி­ஞர் கனி­மொழி எல்­லாம் அதைக் கண்­டித்­தி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் என்ன பேசி­யி­ருக்­கி­றீர்­கள்? “மாநில உரி­மையை விட்­டுக் கொடுக்க மாட்­டேன்” என்று போனீர்­களே, பிர­த­ம­ரி­டம் என்ன கேட்டு வந்­தீர்­கள்? “மதச்­சார்­பின்­மையை விட்­டுக் கொடுக்க மாட்­டேன்” என்­றீர்­களே, இந்த judgment–இல் உங்­க­ளு­டைய பதில் என்ன? உங்­கள் comments என்ன? Appeal போகப் போகி­றீர்­களா, என்ன பண்­ணப் போகி­றீர்­கள்? எது­வுமே இல்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முன்­கூட்டி அறி­வ­தற்­குத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">துப்பு இல்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி இந்த electricity bill, இன்­றைக்கு electricity scarcity–க்கு திமுக ஆட்சி மேல் பழி போடு­கி­றீர்­களே, ஏன்? கோடை­கா­லத்­தில் ஒவ்­வொரு ஆண்­டும் back records இருக்­கின்­றன. ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து மே மாதத்­தில் தமிழ்­நாட்­டில் எவ்­வ­ளவு கூடு­தல் மின்­சா­ரம் தேவைப்­ப­டும் என்­ப­தற்கு ஜெய­ல­லிதா காலத்­தி­லி­ருந்து, எங்­க­ளு­டைய காலத்­தி­லி­ருந்து, எடப்­பாடி காலத்­தி­லி­ருந்து back record, track record இருக்­கி­றது. வழக்­க­மாக ஒரு அர­சாங்­கம் என்ன பண்­ணும் என்­றால், எந்­தப் பரு­வக்­கா­லத்­தில் எவ்­வ­ளவு தேவைப்­ப­டும் என்­பதை முன்­கூட்டி அறிந்து  அதற்­கான கூடு­தல் மின்­சா­ரத்­தைப் பெற வேண்­டும். கூடு­தல் விலை­யாக இருந்­தால் கூட அதை­யும் சேர்த்து அமைச்­ச­ர­வை­யில் ஒப்­பு­தல் பெற்று, “வேறு வழி இல்லை, நாங்­கள் வாங்­கு­கி­றோம்” என்று சொல்ல வேண்­டும். அதைச் செய்­வ­தற்­குக் கூடத் துப்பு இல்லை உங்­க­ளுக்கு! கரண்ட் இப்­போது போய்­விட்­டது என்­றால் கார­ணம் ஸ்டாலின் என்­கி­றீர்­கள், திமுக என்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Bro, Chief Minister, Honorable Vijay bro... really we are afraid, bro! எங்கே போய்க்­கொண்­டி­ருக்­கி­றது என்று தெரி­ய­வில்லை bro. தூக்­கம் வர­மாட்­டேங்­குது bro. ஒன்­றுமே சரி­யில்­லையே bro. தொலை­நோக்­குத் திட்­ட­மும் ஒன்­றும் கிடை­யாது, day–to–day administration–உம் ஒன்­றும் கிடை­யாது. என்ன பண்­ற­துன்னு தெரி­யல bro. ஏதா­வது ஒரு நல்ல முடிவு எடுங்­கள் bro, இல்­லைன்னா நல்லா இருக்­காது bro.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய தலை­வர், எங்­க­ளு­டைய திமுக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உங்­க­ளு­டைய நியா­ய­மான எல்­லாச் செயல்­க­ளுக்­கும் உடன்­நிற்­கத் 
தயா­ராக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தான் தோன்­றித்­தன அர­சாங்­கம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முதிர்ச்சி இல்­லா­மல், முன்­ன­னு­ப­வம் இல்­லா­மல் போவ­தில் தவ­றில்லை, ஆனால் முதிர்ச்சி இல்­லாத, பக்­கு­வம் இல்­லாத, எதைப் பற்­றி­யும் சிந்­திக்­காத ஒரு தான்­தோன்­றித்­த­ன­மான அர­சாங்­கத்­தைத் தந்­து­கொண்­டி­ருக்­கிற முத­ல­மைச்­சர் அவர்­களே... உங்­க­ளைத் தமிழ்­நாட்டு மக்­க­ளின் சார்­பில் வாக்­க­ளித்த மக்­க­ளின் சார்­பில், வாக்­க­ளிக்­காத மக்­க­ளின் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">65 சத­வி­கி­தம் எதிர்ப்பு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­பு­றம் சொல்­கி­றீர்­கள், “ஒரே தலை­வர், ஒரே நம்­பிக்கை நான் தான்” என்று. உங்­க­ளுக்கு ஓட்டு போட்­டது 35% தான். Parliamentary democracy, I admit. நாடா­ளு­மன்ற தேர்­தல் முறை­யில் நீங்­கள் வெற்றி பெற்­று­விட்­டீர்­கள். ஆனால் “தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நான் தான் தலை­வன்” என்று சொல்ல உங்­க­ளுக்கு எந்த அதி­கா­ர­மும் இல்லை, எந்த அனு­ம­தி­யும் இல்லை. ஏனென்­றால், 65% பேர் உங்­களை வேண்­டாம் என்று ஓட்டு போட்­டி­ருக்­கி­றார்­கள். Electoral policy–படி அது­தான் சரி என்று நான் சொல்­ல­வில்லை, அர­சி­யல் சட்­டப்­படி அது­தான் சரி. ஆனால் மன­திலே வைத்­துக்­கொள்­ளுங்­கள், உங்­களை வேண்­டாம் என்று நிரா­க­ரித்­த­வர்­கள் 65% பேர் இருக்­கி­றார்­கள். அந்த 65%–த்தில் இன்­னும் ஒரு 10, 15 சத­வீ­த­மா­வது உங்­கள் பக்­கம் ஈர்ப்­ப­தற்கு முயற்சி எடுங்­கள். எங்­களை, எங்­கள் தலை­வரை எப்­போது பார்த்­தா­லும் குறை சொல்லி, அதிலே எள்­ள­லும் துள்­ள­லு­மா­கப் பேசி, நக்­கல் நையாண்டி பேசி, உங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் என்ற நாற்­கா­லிக்­கு­ரிய தகு­தி­யைக் குறைத்­துக்­கொள்­ளா­தீர்­கள் என்று உங்­களை அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு ஆ.ராசா எம்.பி. செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேட்டி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>