<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,34,958,1007" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 04 2026 04:09:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260604T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04062026-VLR-12" position.sequence="12" ex-ref="04062026-VLR-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">எல்லா எதிர்ப்பையும், மிரட்டலையும் கடந்து</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">விஸ்வரூபம் எடுத்து நிற்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்!    </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உறுதி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630702_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup696368_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="kani_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தென்காசி, ஜூன்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எல்லாவிதமான எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் கடந்து, விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கூடிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உறுதிபட உரையாற்றி னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவரு மான கனிமொழி கருணாநிதி எம்.பி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டி.என். புதுக்குடி மற்றும் புளியங்குடி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்முடைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வரை அழைத்து வந்து இவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சூழல் அமைந்திருந்தது. அதற்கு பின்புலமாக மிகப்பெரிய நிறு வனங்கள் எல்லாம் நின்று பணியாற்றியது.  ஆனால் அத்தனையையும் உடைத்த நம்முடைய ராஜா, இங்கே உங்களுடைய அன்பை பெற்று, ஆதரவை பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாக்குறுதிகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நிறைவேற்றப்படும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரு நீண்ட பட்டியலை உங்களுக்கு செய்து தருகிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.  நிச்சயமாக செய்து தருவார். ஏனென்றால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சங்கரன்கோவிலுக்கு எப்படியும் எல்லா அதிகாரிகளையும் எல்லா அமைச்சர்களை யும் சந்தித்து நேரடியாக தன்னுடைய தொகுதிக்கு  வேண்டுவதையெல்லாம் வாங்கி வந்திடுவார்.  அதனால் நிச்சயமா நீங்க நம்பிக்கையோடு இருக்கலாம். அவர் உங்களுக்கு தந்திருக்கக் கூடிய வாக்குறுதி களை எல்லாம் நிறைவேற்றி தருவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஒன்னே ஒன்னு மக்களுக்கு பணியாற்றுவதற்கும், மக்களுக்காக பணியாற்ற கூடியவர்களுக்கு உறுதுணை யாக இருக்கக்கூடிய ஒரு ஆட்சி வேண்டும். அது நம்முடைய திராவிடமாடல் ஆட்சி. நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர் 
களுடைய ஆட்சி.  ஆனால் இன்று இருக்கக்கூடியவர்கள் எப்படிப்பட்ட ஆட்சி நடத்துவார்கள் என்று உங்களுக்கு தெரியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட 23 நாட்கள் கடந்து விட்டது. இன்றோடு தமிழகத்திலேயே இதுவரை இந்த 23 நாட்களிலே 64 கொலை சம்பவங்கள், நடந்திருக்கிறது. 111 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. அதில் 61 குழந்தைகளுக்கு எதிரானது.  இன்றைக்கும் கூட பெண்களுக்கு எதிரான 2 குற்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. மதுரையிலே ஒரு வண்டியிலிருந்து ஒரு பெண்ணுடைய இறந்த சடலத்தை எடுத்து இருக்கிறார்கள். இன்னொரு பகுதியில மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கக் கூடிய செய்தியை நாம் பார்க்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தி.மு.கழக ஆட்சியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நிலைமை இப்படி அல்ல!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கக் கூடிய நேரத்திலே ஆட்சி பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்கள் அந்த பிரச்சினைகளை எப்படி சரி செய்வது என்பதை பற்றி கவலை பட வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு சென்ற தி.மு.க. ஆட்சியில் நடந்த சில செயல்களால் தான் இன்று இவ்வாறு நடக்கிறது என்பதை ஏற்கத்தக்கது அல்ல. இப்போது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல பேர் whatsapp தளத்தில் தவறான செய்திகளை மேடைகளில் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு சூழல் தமிழ்நாட்டிலே இல்லை. நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் போது இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இன்று பெண்களுடைய பாதுகாப்பு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறி யாகி கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் பொறுப்போடு இந்த பிரச்சினைகளை களைவதற்கான முயற்சிகளை  எடுக்க வேண்டும். இதற்கான தீர்வுகளை தேடி, சட்டம் ஒழுங்கை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும் வேறு யார் மீது பழி போடலாம் என்று அவர்கள் காரணங்களை தேடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்தல் நேரத்தில் அந்த வாக்குறுதி கொடுக்கும் பொழுதே அவர்களுக்கு ரிசர்வ் பேங்க் சட்ட திட்டங்கள் தெரியாதா ரிசர்வ் பேங்க் பதினோராவது மாதமே அதற்கான சட்டதிட்டங்களை தெளிவாக எடுத்துச் சொல்லி இருந்தார்கள்.  யாருக்கு எப்படி  கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியுமா? முடியாதா? என்று அதற்கான வழிமுறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி இருந்தார்கள். நம்முடைய தேர்தல் அறிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டபோது பல இடங்களில் இருந்து கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒரு வாக்குறுதியை கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அண்ணன் தளபதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எங்களுக்கிட்ட பணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்முடைய முதலமைச்சராக இருந்த அண்ணன் தளபதி அவர்கள் ஒன்றே ஒன்றுதான் எங்களுக்கு திரும்பத் திரும்பச் சொன்னார். அது செய்யக்கூடியவற்றை மட்டுமே வாக்குறுதியாக கொடுக்க வேண்டும். நம்மால் செய்ய முடியாததை தேர்தல் வருகிறது வாக்கு வாங்கிட வேண்டும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி எந்த வாக்குறுதியை எழுதக்கூடாது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையிலே என்றார். இதுதான் அவர் எங்களுக்கு சொன்ன பணி. இதுதான் அவருடைய கட்டளையாகவும், அறிவுறுத்தலாகவும் இருந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்றால் வாக்குறுதி கொடுக்காமல் கூட செய்யலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாமல் செயல்படுத்தப்பட்டது.குறிப்பாக முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள்.  தேர்தல் வாக்குறுதிகள் சொல்லப்படவில்லை, ஆனால் நிறைவேற்றப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதனால் மக்களை ஏமாற்றி எந்த தேர்தல் வாக்குறுதியையும் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்று மிகத் தெளிவாக அந்த சிந்தனையோடு செயல்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். இன்றைக்கு ஆட்சி பொறுப்பிற்கு வந்துவிட்டு ரிசர்வ் பேங்கில் இருக்கக்கூடிய சட்ட திட்டங்கள் இதற்கு புறம்பாக இருக்கிறது எங்களால் செய்ய முடியலை என்கிறார்கள். மேலும், நிதிநிலை சரியாக இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். யாரையாவது குறை சொல்லிக் கொண்டு அவர்கள் மீது பழியை போட்டு விட்டு ஆட்சி பொறுப்பிலே இருக்கக் 
கூடியவர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திராவிட முன்னேற்றக் கழகம் தான் இன்னைக்கு எதிர்க்கட்சி. எதிர்க்கட்சியிலே எப்படி செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். ஆனால் தவறு இருந்தால் போராடவும், சுட்டிக்காட்டவும் எந்த காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தவறாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஒவ்வொரு குடும்பத்திற்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நலத்திட்டங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்முடைய ஆட்சியிலே நம்முடைய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தன்னுடைய திட்டங்கள் போய் சேராத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டிலே இல்லை என்று சொல்லக்கூடிய பெருமை மிகுந்த ஆட்சியை நடத்தி காட்டி இருக்கிறார்.  இந்த பகுதியில் இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். இதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுஇன்று நேற்று மட்டுமல்ல தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி செய்ததிலிருந்து தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களோடு சிறுபான்மை மக்களோடு தொடர்ந்து உறுதியாக இருக்கக் கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இங்கு இருக்கக்கூடிய சகோதரி களுக்காக எந்தெந்த வகையிலே எத்தனை திட்டங்களை கொண்டுவந்து அவர் 
களுடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியுமோ அத்தனை சாதனைகளையும் செய்து முடித்திருக்கிறோம்.   அந்த பெருமையோடு தான் நாங்கள் இந்த மேடையிலே நின்று கொண்டிருக்கிறோம்.  வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருந்தாலும் நாங்கள் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து தான் உங்களை ஒவ்வொரு முறையும் சந்திக்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நேரத்திலே ஒன்றியத்தில் இருந்து எத்தனையோ பலத்தோடு வந்த அந்த பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்ற நம்முடைய ராஜாவிற்கு வெற்றியை ஒப்படைத்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பகுதியிலே இருக்கக்கூடிய 22 தொகுதிகளில் பணியாற்றக்கூடிய பொறுப்பை தந்தமைக்கு நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாளை மறுநாள் நம்முடைய தலைவர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியதலைவர் கலைஞர். அவர் கடந்து வந்திருக்கக்கூடிய எத்தனையோ சோதனைகள் அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சி பொறுப்பில் இருந்தாலும் மக்களுக்கான பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்த தலைவர் கலைஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எமர்ஜென்சி காலக்கட்டத்தில்  தலைவர் கலைஞர் சென்னையிலே ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளும் பொழுது மேடையிலேயே முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அந்த மேடையில் பேசும்பொழுது சொல்கிறார் முதல் அமைச்சராக நான் கலந்து கொள்ளக்கூடிய கடைசி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வீடு போகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி அவருக்கு வருகிறது. அதனால் இந்த எதிர்ப்புகளை,  மிரட்டல்களை எல்லாவற்றையும் கடந்து நின்று விஸ்வரூபம் எடுத்து நிற்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த உறுதியோடு தொடர்ந்து பணியாற்றுவோம். மக்களோடு நின்று களமாடுவோம். உங்களோடு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து உங்களுக்காக  தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே பணியாற்றுவோம் என்று உறுதி கூறுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி  எம்.பி. உரையாற்றினர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>