<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1252" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 03:38:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260605T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05062026-CHN-05" position.sequence="05" ex-ref="05062026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="Arial" fontStyle="Black" size="17">5</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">முத்தமிழறிஞர் கலைஞரின் பல பரிமாணங்களில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="61">“போராளி” எனும் சொல்லே வெற்றி பெற்றது!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதைத் தேரடி திடலில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர்  பிறந்தநாள் விழாவில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup697798_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="sivadmk1_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை,ஜூன்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சி சைதை தேரடித் திடலில் 3-.6.-2026 அன்று மாலை 
6 மணித் தொடங்கி நடைபெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்விழாவில் கழக துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி.  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பேராசிரியர் சுப.வீ. பேசும் போதும் குறிப்பிட்டார். தேர்தலிலே தோற்றக் கட்சிக்கு இவ்வளவு பெரியக் கூட்டம் வேறு எங்கு என்று கேட்டார்? மன்னிக்கவும் இது தோற்றுப்போனக் கட்சியல்ல. ஆட்சிக்கட்டிலைத்தான் நாம் இழந்திருக்கிரோமே தவிர, மக்களிடம் நாம் தோற்றுப்போகவில்லை என்பது என் அன்பானக் கருத்து. ஒன்றரைக் கோடி பேர் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். நம்மை எதிர்த்து இன்று ஆட்சியிலிருப்பவர் நம்மைவிட வெறும் 17 லட்சம் வாக்குகள்தான் அதிகம் பெற்றிருக்கிறார். பெரிய அலை அடித்தது என்றோ, அவர்பால் மக்கள் கூட்டம் சென்றுவிட்டது என்றோ, இளைஞர்கள் திரண்டு இருக்கிறார்கள் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">என்னுடைய முழு நேர</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அரசியல் பிரவேசம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்படியென்றால் அவர் 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பெரும்பான்மைகூட இடங்கள் தராமல் வெறும் 107 இடங்கள் மட்டுமே தந்த தமிழ்நாடு என்பது இது என்பதை தயவு செய்து மறந்துவிடக் கூடாது. தேர்தல் தோல்வி என்பது நமக்கு ஒன்றும் புதிததல்ல. நமக்கு ரொம்பவும் பழக்கமானதுதான். என்னுடைய முழுநேர அரசியல் பிரவேசம் என்பது, கழகம் ஆட்சியை இழந்து, அவசர நிலையை சந்தித்தபோதுதான், எப்படி நமது இந்துராம்  பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலேயிருந்து, இடது சாரிக்கொள்கைகளில் பற்றுக்கொண்டிருந்தாரோ, அதுபோல நான் படிக்கிற காலத்திலேயிருந்து கழகத்தின் கொள்கைகள்மீது பற்றுக்கொண்டிருந்தவன். ஆனால் என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவுகளையெல்லாம் தூக்கிஎறிந்துவிட்டு, இந்த இயக்கத்தையும், இந்தத் தலைவரையும்தான் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தக் காலம், கழகம் சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருந்த அவசர நிலைக்காலம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்தக் காலக்கட்டத்திலேயே கழகம் ஆட்சியை இழந்திருந்தது. இன்றையக் கழகத்தின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும், என்னைப் போன்றவர்களும் ஓராண்டுக் காலம் சிறையிலிருந்தோம். கழகத் தோழர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கலைஞர் தனித்துவிடப்பட்டார். “நெருப்பாற்றிலே நீந்துகின்ற மெழுகுவர்த்தி மனிதன்” என்று கலைஞர் எழுதியக் கடிதங்கள். பல பேர் விலகிச்சென்றபோது, கோழைகள் விலகட்டும், வீரர்கள் தொடரட்டும் என்று உணர்ச்சியூட்டியத் தலைவர். இரங்கல் கூட்டங்களிலும், பிறந்தநாள் விழாக் கூட்டங்களிலும், திருமண விழாக்களிலும் அரசியல் வளர்த்த செம்மல் அவர். அந்தக் காலக்கட்டத்திற்கு பின்னால் நடைபெற்றத் தேர்தலில் ஜனநாயகத்திற்காக ஓர் ஆட்சியையேப் பறிகொடுத்த இயக்கம். தேர்தலில் தோற்றுப்போனது. கலங்கவில்லை. சரியாக இரண்டு மாதங்களில் இந்திராகாந்திக்கு கருப்புக்கொடிக் காட்டியக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மறந்துவிடாதீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சியை எதிர்த்து போராட்டக் களம் கண்டு, சிறைக்குச் சென்றதும் ஆறு மாதத்திற்குள்ளாகத்தான். ஆகத் தேர்தல்தோல்வி என்பது நம்மைத் துவளச்செய்வது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">1996 ஆம் ஆண்டு பொற்கால ஆட்சியை நடத்தினோம். இலவச அரிசிக்கொடுத்தோம். இலவச வண்ணத் தொலைக்காட்சிக் கொடுத்தோம். விவசாயிகள் வாங்கியக் கடனைத் தள்ளுபடி செய்தோம். மாணவர்கள் பேருந்திலே பயணம் செய்வதற்கு இலவச பஸ்பாஸ் கொடுத்தோம். அடுத்தத் தேர்தலில் தோற்றுப்போனோம். இதெல்லாம் இயற்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆக, தமிழ்நாடு என்று இல்லை. இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டாலும் சரி, உலக நாடுகளில் எடுத்துக்கொண்டாலும் சரி, ஒரு ஆட்சித் திறமையாக நன்மைகளை செய்கிறது. மக்களின் மீது அன்புகாட்டுகிறது என்பதால், தொடர்ந்து ஆட்சி நடத்த அனுமதிக்காமலும் நடப்பதுதான் தேர்தல் ஜனநாயகம் என்பது. காமராஜர் தோற்றதற்குப் பின்னால் பேரறிஞர் அண்ணாவிடம் போய், அண்ணா காமராஜரையேத் தோற்கடித்துவிட்டோம் என்று சொன்னார்கள். அப்போது அண்ணா சொன்னார். திருத்திக்கொள்ளுங்கள். இது காமராஜரையே தோற்கடிக்கிற நாடு எச்சரிக்கையாக இருங்கள் என்றுதான் சொன்னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கழகம் – பக்குவப்பட்ட அரசியல் கட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆக எதுவேண்டுமானாலும் ஜனநாயகத்தில் நடக்கும் ஏற்றுக்கொள்ள பக்குவம். பக்குவப்பட்ட ஓர் அரசியல் கட்சிக்குத்தான் உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதனால்தான் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கிடையில் இன்று வாழ்த்தரங்கத்தைத் தம்பி மா.சு.  ஏற்பாடு செய்திருக்கிறார். தேர்தலுக்குப் பின்னால் நான் கலந்துகொள்கிற முதல் கூட்டமாக அமைந்திருப்பது எனக்கும், மகிழ்ச்சியைத்  தருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சைதைத் தேரடி, இந்தப் பகுதிவாழ் மக்கள், உங்களுக்கு இயக்கத்தின் மீதிருக்கிற பற்று எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் தேர்தல் முடிந்து வேறாகயிருந்தது. மக்களோடு மக்களாக அவர்களுடன் நடமாடி, அவர்களுடன் ஓடி, முடித்து வீடு, வீடாகச் சென்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லக்கூடிய இந்தத் தம்பி மா.சு. தோற்றுப்போனார் என்றால், அது அவருடைய குற்றமல்ல. அதையும் ஏற்கிற பக்குவம், அவருக்கும் வரவேண்டும். நாம் இன்னும் ஜனநாயகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியதும், நிறைய இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எனவே வெற்றி பெற்றவர் நம்மைவிட வீரியம் கொண்டவர். நம்மைவிட வலிமையானவர். நம்மைவிட சிறந்தவர் என்பது அல்ல. மக்கள் தந்தத் தீர்ப்பை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தட்டுதடுமாறி ஆள்சேர்த்து ஆட்சியை நடத்தவேண்டிய நிலையில்தான் அவர் இருக்கிறாரேத் தவிர அள்ளிக்கொடுக்கவில்லை. மறந்துவிடாதீர்கள். நம்மையும் முற்றிலுமாகக் கைவிடவில்லை. ஒன்றரைக்கோடி மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலைஞருக்கான அடையாளம் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">போராளி என்பதுதான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால்தான் நமக்கு மரியாதையா இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கிறபோது நமக்கு இருக்கிற வேகமும், வீரியமும் வேறு எந்தக் கட்சிக்கும் இந்திய நாட்டில் கிடையாது. முதுகில் குத்துகிற துரோகிகளையும் தெரியும். சிரித்துக்கொண்டே பேசி ஏமாற்றுகிறவர்களையும் தெரியும். உடன் வந்துகொண்டே உடன் காணாமல் போகிறவர்களையும் தெரியும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செல்கின்ற அந்த வலிமையும், பக்குவமும், இதன்மூலமாகத்தான் இயக்கம் வளர்த்தோம். இயக்கம் காத்தோம். எதிர்காலத்தில் இயக்கத்தை மீட்டெடுக்கப்போவதும் உங்களால்தான். மறந்துவிடாதீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கலைஞருக்கான அடையாளம் அவர் ஒரு போராளி என்பதுதான். கடைசி நிமிடம் வரை அவர் போராளியாகத்தான் இருந்தார். என் போன்றவர்களை மாணவர் பருவத்திலேயே கலைஞர் கவர்ந்ததற்குக் காரணம், அவருடைய வீரமிக்க பேச்சுக்களும், அவருடைய செய்கைகளும், அவருடைய செயல்களும்தான். முதலில் முதலமைச்சர் என்பதால் நான் அவரிடம் நெருங்கவில்லை. மாறாக முதலமைச்சர் பதவியை இழந்ததற்குப் பின்னால் போராடிய கலைஞரைப் பார்த்து, இவரைப் போன்றவருக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும் முழுமையாக என்று எல்லாவற்றையும் தூக்கிஎறிந்துவிட்டு வந்த ஒரு பெருங்கூட்டம் என் வயதைச் சார்ந்தவர்களுக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்றைக்கு நாங்கள் இளைஞர்களுக்கு நாங்கள் வழிகாட்டுகிற அல்லது வழி நடத்துகிற தலைமுறையாக உயர்ந்துவிட்டோம். வயது காரணமாக. அனுபவத்தின் காரணமாக, ஆனால் என்ன காரணத்திற்காக வந்தோம் என்ற காரணத்தினால்தான் ஐம்பது ஆண்டுகாலமாக எங்களுடைய இந்தப் பயணம் தொய்வில்லாமல், தொடர்கிறது. அதுதான் எங்களோடு இருப்பவர்களுக்கும் இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த உணர்வைத் தந்தது கலைஞர் என்ற போராளி. கல்லக்குடி என்ற போராட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தை எடுத்துக்கொள்ளலாம். மாணவர்கள் தான் அந்தப் போராட்டத்தை வெற்றிபெற செய்தார்கள். அதனால்தான் 1967ஆம் ஆண்டு ஆட்சி மலர்ந்தது. ஆனால் அந்த மாணவர்கள் அன்றைக்கு உத்வேகம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்கள் போராட்டம், இந்தியை எதிர்த்து, நடக்கிற போது, நான் வேதனையோடு நினைவுக்கூட விரும்புகிறேன். இதெல்லாம் வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்கள். அண்ணாபோய் ஒரு கல்லூரியிலே பேசுகிறார். அவருடைய தொண்டை விம்புகிறது. தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறார். தண்ணீரைக் கொண்டுபோய் கொடுக்கிறபோது, அதில் இருக்கிற வேறொரு கட்சியைச் சேர்ந்த மாணவன், அதைத் தட்டிவிடுகிறான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">யாருக்காவது தெரியுமா? நினைவிருக்கிறதா? தெரிந்தவர்களுக்கு, அண்ணா பேசுகிறபோது பேசமுடியாமல் விம்முகிறபோது அவருக்கு தண்ணீர் வேண்டுமென்று கேட்கிற நேரத்தில் கொடுக்கிறபோது தட்டிவிட்டவர்கள் இன்றைக்கும், தட்டிவிட்டுவிட்டு நிற்கிறார்கள். மறந்துவிடாதீர்கள். அடுத்து அந்தப் போராட்டம் வீரியம் கொண்டபோது, அவர்களை சமாளிப்பதற்கும், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கும், அண்ணா அனுப்பிவைத்தது தலைவர் கலைஞரைத்தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர் பேச்சின்மூலமாகத்தான்  அமைதியானார்கள். அண்ணா சொன்னார். என்னை நம்புங்கள். மொழிப்போராட்டத்தை மையமாக வைத்துத்தான் நான் ஆட்சிக்கு வந்தேன். நான் மறுக்கவில்லை. பல்வேறு கோரிக்கைகள், கொள்கைகள் இருக்கலாம். என்னை நம்புங்கள் என்று சொன்னதற்குப் பின்னால்தான், 1968ஆம் ஆண்டு, இருமொழிக்கொள்கை என்பதை நடைமுறைக்கு அண்ணா கொண்டுவந்தார். இந்தி என்பது என்னாலும் தமிழ்நாட்டில் இல்லையென்று, அவர் அன்று உருவாக்கிய சட்டம். அதை நிறைவேற்றுகிறபோது அண்ணா  அழகாகப் பேசுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">இயக்கத்தைக் காப்பாற்றப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">போகும் சிப்பாய்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தம்பிமார்களே, தெரிந்துகொள்ளுங்கள். எதிர்காலத்தில் இயக்கத்தைக் காப்பாற்றப்போகிறவர்கள் நீங்கள் என்பதைச் சொன்னேன். நீங்கள் எல்லாம் எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, வருவீர்கள் என்பதைச் சொல்ல நான் இங்கு வரவில்லை. இந்த இயக்கத்தை காப்பாற்றப்போகிற சிப்பாய்கள் என்ற உணர்வோடுதான் பேசுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதில் அண்ணாபேசுகிறபோது சொன்னார், இனி தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் என்று. இந்தி என்பதற்கு இடமில்லை. பாடத்திட்டங்களில் அது இருக்காது. அடுத்து சொல்கிறார். அண்ணா அன்பானவர். மென்மையானவர். ஆனால் வேறு ஒரு முகமும் இருந்தது. அதுதான்அவரை அவ்வளவு பெரிய தலைவனாக உயர்த்தியது. பேசுகிறார். ஆட்சிமொழித் தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தையும் இம்மன்றம் நிராகரிக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்டப்பேரவைக்கு இருக்கிற சான்றாண்மையை (Sovereignty) அண்ணா நிறைவேற்றுகிறார். மத்திய அரசு ஆட்சிமொழித் தொடர்பாக நிறைவேற்றியத் தீர்மானங்களை இந்த அரசு நிராகரிக்கிறது. தேசிய மாணவர் படையில் என்.சி.சி. என்று இந்த மாநிலத்திலே இருக்கிறது. அதில் உத்தரவுகள் இந்தியிலேயேதான் வெளியிடப்படுகின்றன. இன்றைக்கு இந்த மன்றம் தீர்மானிக்கிறது, இனிமேல் என்.சி.சி. அமைப்பில் ஆங்கிலத்தில்தான் உத்தரவுகள் இருக்க வேண்டும் என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது. இந்தியில் இருக்கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அடுத்தபடிபோய் சொல்கிறார். ஒருவேளை மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்குமேயானால், ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்லுமானால், நான் அறிவிக்கிறேன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாட்டில் தேசிய மாணவர் படை கலைக்கப்படும் என்றார். யாரைப் பார்த்து, அண்ணா அன்றைக்கு தண்ணீரைத் தட்டிவிட்ட மாணவர்கள்மீது கோபப்படவில்லை. ஆனால் ஏற்றியிருக்கிற கடமையில் அதனை ஆட்சி மொழியாகக் கொண்டுவருகிறார். பின்னர் கலைஞர் அதனைத் தொய்வின்றி எடுத்துச்சென்றார். இன்றையத் தலைவரும் அதனைத்தான் தொடர்ந்து செய்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நமக்கு ஆட்சியும், அதிகாரமும் வேண்டும் என்று சொன்ன காரணத்தில்தான், தேர்தல் களத்தில் நுழைந்தோம். தேர்தல் களத்திலே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் ஆட்சிபொறுப்பில் இருந்த நேரத்திலெல்லாம் சட்டங்களைக் கொண்டுவந்தோம். இல்லாத நேரத்திலே துவண்டு போகவுமில்லை. கிடைத்த நேரத்தில் மருண்டு போய், வெகுண்டுபோய் மற்றவர்களைபோல் பேசவுமில்லை. அது போல் நடந்துகொள்ளவுமில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அவசர நிலையை எதிர்த்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலைஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வீரனாக இருந்த காரணத்தில்தான், போராளியாக இருந்த காரணத்தில்தான், அவசரநிலையை எதிர்த்தார். நன்றாக நினைவிலே கொள்ளுங்கள். 1971ஆம் ஆண்டு முதன்முதலாக தி.மு.கழகம் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கிறது. இந்திராகாந்தி அம்மையாரோடு, அது எதற்காக என்றால்,  மன்னர் மானியத்தை ஒழித்தார். வங்கிகளை தேசிய உடைமையாக்கினார். முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்துகிறார் என்கிற காரணத்தில்தான், கூட்டணி அமைக்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதுவரை தமிழ்நாட்டில் வேறு எவரும் பெறாதவகையில் 184 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சிஅமைத்தோம். நாடாளுமன்றத்திலேயே பெரும்பான்மை நமக்கு. மீதி அவர்களுக்கு. இப்படி ஆட்சி நடக்குறபோதுதான், இதே மாதம் ஜுன் 25ஆம் தேதி 1975ஆம் ஆண்டு இந்திராகாந்திக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு, இன்றைக்கு அப்பாவுக்கு தீர்ப்பு வந்திருக்கிறது. ஒரு  மனிதன் தேர்தலிலே போட்டியிட்டு, செல்லாது என்று பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் வந்திருக்கிறது, இப்படி தோற்கடித்தார்கள் என்று தொடங்கிய அந்த வழக்கு. பத்தாண்டுகளுக்குப் பின்னால் இன்றைக்குத்தான் தீர்ப்பு வந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால் அன்றைக்கு இந்திராகாந்தியின் வழக்கு. அவருடைய தேர்தல் செல்லாது என்று அறிவித்தவுடன், மிகவும் நாகரிகமாக இறங்கி வழிவிடவில்லை. மாறாக, அவசரநிலையைக் கொண்டு வருகிறார். அவசர நிலை என்றால் என்ன? உரிமைகள் பறிக்கப்படும். அது அரசியல் சட்டம்தந்த ஒரு உரிமைதான். அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். நான் கைதுசெய்யப்பட்டேன். நான் கல்லூரியிலே படிக்கிற காலத்தில் என்னைத் தேடி போலீசார் வருகிறார்கள். முதல்வர்  ஒரு அறையிலேயே உட்கார வைத்துவிட்டு எனக்கு ஓர் நபரினை அனுப்பி, போலீஸ் வந்திருக்கிறது, வகுப்பு நடக்கிறது என்று, தொந்தரவு செய்யவேண்டாம் என்று சிவாவை அப்படியே ஓடிப்போகச்சொல் என்றார். ஆக முதல்வரின் உதவியால் அன்று நான் நகர்ந்தேனே தவிர, பதினைந்து நாள் கழித்து, கைதானேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த நேரத்திலே என்னை கைது செய்துவிட்டார்கள். நான் சிறையிலே இருக்கிறேன் என்று, என் தந்தையாரால் பக்கத்துவீட்டில்போய் சொல்ல முடியாது. என் நண்பர்களிடம் போய் ஒரு கடிதம் எழுதிக்கொடுங்கள், அவன் தனிமையில் தவிக்கிறான். உங்களோடு சுற்றியவன் என்கிறபோது, ஒரு கடிதம்கூட எழுதிக்கொடுக்காத நண்பர்களும் எங்களுக்கு இருந்தார்கள். உறவினர்கள் ஒருவர்கூட வந்து பார்த்ததில்லை. நானும் அது குறித்து கவலைப்பட்டதும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">என் வாழ்க்கை – இனி கலைஞருடன்தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எனக்கு அப்போது 21 வயது. அங்கிருந்த மூத்தவர்களைப் பார்த்து உரமேறியவனாக, உற்சாகமேறியவனாக இருந்தேனேதவிர, ஒரு நாளும் கலங்கவில்லை. காரணம் கலைஞரைப் பற்றி சிறைக்குள்ளே பேசிக்கொண்டே இருந்தோம். கருத்தரங்குகள் நடத்தினோம். பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது இவர்களைப்போல்தான் நாமும் ஆகவேண்டுமென்று தோன்றியதே தவிர, எப்போது திறந்துவிடுவான் ஓடலாம் என்று முடிவெடுக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விடுதலையாகி  வெளியே வந்தபோது, தொடர்ந்து கல்விக்குப் பின்னால் நான் கண்ட கனவு ஐ.ஏ.எஸ். அதைநோக்கி செல்வதா? அல்லது கலைஞருக்குப் பின்னால் செல்வதா? என்று கேள்வி எழுந்தபோது, அந்த வயதில் சிறை வாசலில் முடிவெடுத்தேன், நாடு, மக்கள், ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டுமென்றால், வாழ்க்கை இனி கலைஞருக்குப் பின்னால் என்று முடிவெடுத்தோம். தொடர்கிறது அந்தப் பயணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது என்ன காரணத்தினால், அந்த நேரத்தில் அவர் போராடிய அந்த உணர்வு. அதனால்தான் நான் கல்லக்குடி போராட்டத்தை நான் விவரிக்கவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி பேசினால் நான் எவ்வளவோ நேரம் பேசலாம். அவசரநிலை காலத்திலே, அவருடைய அந்த, போராட்ட உணர்வு, அதற்குப் பின்னால் நிறைய நடந்தது. தம்பி, மா.சு.விற்கு நினைவிருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சைதாப்பேட்டை கிட்டு மாவட்டச் செயலாளர். ஒரு முறை இங்கே ஒரு பிரச்சினை. அறிவாலயம் திறந்து கொஞ்சநாட்கள் ஆகிறது. கலைஞர் அங்கே உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவல்துறையில் ஒரு அதிகாரி இருந்தார். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. அத்துமீறி நடக்கிறார் என்று சொன்னார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கட்டுப்பட்டு நடக்கிறாரா என்று கேளுங்கள்? இல்லையென்றால் நானே வருகிறேன் என்று அந்தத் துண்டை எடுத்து தோளிலே போட்டு நடந்தார்பாருங்கள். மறக்கமுடியாத நாள் அது. அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள். எதனால் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. நமக்கென ஒரு கட்சி அலுவலகம் என்ற முடிவுக்கு வந்தோம். ஏற்கெனவே இருந்தது. எங்கே என்றால் அரசினர் தோட்டத்தில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு பெரிய இடம். நாங்களெல்லாம், அப்போது ஒரு காரணமும் இல்லாமல் சென்னைக்கு வருவேன். கலைஞர் என்ன காரணமாக வந்தீர்கள் என்று கேட்கிறபோது, உங்களைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது வந்தேன் என்று சொல்வேன். கூட்டமில்லையா? இல்லை. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள், அதோடு இன்னும் அய்க்கியமானோம். எப்படி அவருக்குப் பின்னால் தொடர்ந்தோமோ, அந்த சிரிப்பும், போகிறபோது வரட்டான்யா? எப்ப ஊருக்கு என்று கேட்கிறார் பாருங்கள். அதற்கு ஈடேதும் கிடையாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த காலக்கட்டத்திலே, எம்.ஜி.ஆர். அவரை அந்த இடத்திலே இருந்து (அரசினர் தோட்டத்தில்) அப்புறப்படுத்த உத்தரவிடுகிறார். தி.மு.க அலுவலகத்தை காலிசெய்ய வேண்டும். ஒரே ஓர் அலுவலகத்தை மட்டும்தான் தருகிறேன். நன்றாக எல்லோருக்கும் நினைவிருக்கும். உட்கார்ந்த நாற்காலியை விட்டு நான் எழுந்திரிக்க மறுத்து, போகமாட்டேன் என்று சொன்ன கலைஞரைத் தூக்கி நாற்காலியோடு வெளியே போட்டார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாற்காலியோடு வெளியே வீசப்பட்ட கலைஞர் சொன்னார். இந்தியாவிலே இதுபோல் தமிழகத்தில் யாருக்கும் இல்லாத அளவுக்கு ஒரு கட்சி அலுவலகத்தைக் கட்டிக்காண்பிக்கிறேன் என்று சொன்னார் கலைஞர். அப்படிக் கட்டியதுதான் அண்ணா அறிவாலயம். ஊர் ஊராகப் போனார். கையேந்தினார். கூட்டம் போட்டார். காசு கேட்டார். நன்றாக கொஞ்சம் போய் முரசொலியை படியுங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அறிவாலய நூலகம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அறிவாலயத்திலேயே இருக்கிற நூலகத்திலே படியுங்கள். 1984-1985 காலக்கட்டங்களில், அறிவாலயம் கட்டுவதற்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியல் இருக்கிறது. போய் பாருங்கள். ஒவ்வொரு பெயருக்குப் பின்னால் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்றெல்லாம் இருக்கிறது. இந்த கட்சியிலே இருக்கிற பாமரன், வண்டி இழுக்கிறவன். மூட்டை சுமக்கிறவன். அப்போது உயர்ந்தார் கலைஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சில பேர் துன்பத்தில் இருக்கிறபோது, நம் மனதில் உருவாகும். அது திரைப்படத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். அரசியல் தலைவர்களாக இருக்கலாம். பார்க்கிறபோது மனதில் ஒரு பிம்பம் உருவாகும். ஆனால் நெருங்குகிறபோது அந்த பிம்பம் கலையும் அல்லது கரையும். ஆனால் நாளுக்குநாள் பிம்பம் உயர்ந்த தலைவன் கலைஞர் மட்டும்தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துகிறேன் என்று. நான் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தபோது மாடியிலே போய் சொன்னேன். எதிர்பார்த்தது எனக்கு அவர் அனுமதி தருவார் என்று. வேண்டாம் என்றார். இல்லை அண்ணா மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் என்று கேட்டபோது சொன்னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இரக்கமற்றவர். ஏதாவது பெரிய அசாம்பாவிதங்கள் நடக்கும். அதனால்தான் வேண்டாம் என்று சொல்கிறேன். அதை வேறு மாதிரியாகப் பார்த்துக்கொள்ளலாம். அப்போது எனக்கு அண்ணா நினைவுக்கு வந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கை விடுங்கள். தம்பிமார்களே, கட்சிப் பார்த்துக்கொள்ளும் என்று சொன்னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் இந்தியை எதிர்ப்பதும், தமிழை வாழ வைப்பதும், உங்களை வாழ வைப்பதற்காகதானே தவிர உங்களை சாகக்கொடுத்துவிட்டு, நான் தமிழை வாழ வைத்துவிட்டு நான் என்ன செய்யப்போகிறேன்? என்று சொன்னவர் அண்ணா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலைஞர் முக்கியத்துவம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தந்த புகைப்படம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு இரக்கமற்றவரை எதிர்த்து போராடி, மாணவர்கள்  உயிர்கள் வீணாக பலியாகிவிடக் கூடாது என்று சொன்னவர் கலைஞர். நான் வந்ததற்குப் பின்னால் முரசொலியிலேயே கட்டுரை எழுதுகிறபோது சொன்னேன். கலைஞரைப் பார்த்துவிட்டு நான் ஒவ்வொருப் படியாக இறங்குகிறபோது, அவரைப் பற்றிய அபிப்பிராயம் ஒவ்வொருப் படியாக உயர்ந்துகொண்டே போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பின்னாளில் கலைஞரை இவர்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் சந்திக்கிறார்கள். புகைப்படங்களை கண்ணுக்கு முன்னாள் போடுகிறார்கள். இதிலே உங்களுக்குப் பிடித்தப் புகைப்படம் எது? எல்லா புகைப்படங்களும் கலைஞருடையது. கலைஞர் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொடுக்கிறார். அது அண்ணா சிலை அருகில், அவர் கைதாகிற படம்.  கேட்கிறார்கள். ஏன்? போராட்டத்தில் கைதாகிறீர்கள் என்றால்? ஆம் என்று கலைஞர் சொல்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்படியென்றால் நீங்கள் கல்லக்குடி ரயிலுக்கு முன்னால் படுத்துப் போராட்டம் நடத்திய புகைப்படத்தையல்லவா கொடுத்திருக்க வேண்டும். எவ்வளவுப் பெரிய போராட்டம். ஏன் இதைக் கொடுக்குறீர்கள்? என்றபோது, கலைஞர் சொன்னார். 1953ஆம் ஆண்டு அந்த போராட்டத்தில் நான் கலந்துகொண்டபோது, கழகம் வளர்ந்துகொண்டிருந்த காலம். கழகம் தேர்தலிலே போட்டியிடாத காலம். ஆனால் இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நான் கைதானது. முதலமைச்சராக நான் இருந்ததற்குப் பின்னால், முதலமைச்சர் ஆகியதற்கு பின்னால் ஒரு மனிதன் வீதியிலே இறங்கிப் போராடியதற்கு பிறகு கைது செய்த ஒரு தலைவனை இந்தியாவில் எனக்குக் காட்டுங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்களும் அதைத்தான் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். வந்தார். கைப்பட எழுதினார். இப்போது இருக்கிற நவீன வசதிகள் கிடையாது. ஜெராக்ஸ் மிஷின் கிடையாது. ரோனியோ என்று சொல்வது உங்களுக்கு எல்லாம் தெரியும். மையை உருட்டி, கையாலேயே உருட்ட வேண்டும். ஆளில்லாமல், சாதாரண அந்த மெலிந்த உருவம், ஐந்நூக்கும் மேற்பட்ட பிரதிகளை தானே சுற்றி சுற்றி இழுத்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதை எடுத்துக்கொண்டு மறுநாள் காலை பொழுது புலர்கிறபோது, அண்ணா நினைவிடத்திலே மக்கள் பார்க்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கையில் துண்டு பிரசுரங்களோடு நிற்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று எழுதப்பட்ட அந்தக் கடிதம். கடைக்கடையாக பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே நடந்த அந்த உருவம். அந்தத் தலைவனைக் கற்பனை செய்து பாருங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கூட்டம் கூடுகிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. கட்சித் தோழர்கள் பின்னால் வந்துவிட்டார்கள். அண்ணா சிலை அருகே வருகிறபோது, கட்டுக்கடங்காதக் கூட்டம், என்று தெரிந்து, போலீசார் வந்து கைது செய்கிறார்கள். அந்தப் படத்தைத்தான் கலைஞர் கொடுத்துச்சொன்னார். இதற்கு முன்பு நான்கலந்துகொண்ட போராட்டங்கள், ஒரு எதிர்க்கட்சித் தலைவனாக, வளர்ந்த கட்சியில் உள்ளவனாக, எனக்கு கட்சிப் பொறுப்பு வரும் என்று கருதாத காலம், ஆனால் முதலமைச்சராக இருந்ததற்குப் பின்னாலும் நான் அதே கருணாநிதியாகத்தான் இருக்கிறேன் என்பதாக சொன்னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலைஞரின் ஆசை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆட்சியாளர்கள் அன்றைக்கு இருந்தவர்கள் மறுக்கிறார்கள். நான் அவர்களை மனசாட்சி இல்லாதவர்கள், இரக்கமில்லாதவர்கள் என்று சொல்லமாட்டேன். அரசியல் காரணமாக மறுத்தார்கள். எல்லோரும் துவண்டுபோய் கிடக்கிறோம். கலைஞருடைய ஆசையே இரண்டுதான். ஒன்று, அவருடைய நினைவிடத்திலே ஓயாமல் உழைத்த ஒருவன் இங்கே உறங்குகிறார் என்று எழுதிவையுங்கள் என்று முன்போ சொல்லியிருந்தார். இரண்டாவது அண்ணாவுக்குப் பக்கத்திலே உறங்க வேண்டும் என்று சொன்னார். அவர் வலியிலே அம்மா என்று கத்தியதில்லை. அண்ணா என்று தான் கத்தியிருக்கிறார். மருத்துவர்களே அதனை சொல்வார்கள். அது அவரது கனவு. அது முடியாமல் போனது என்று அனைவரும் கலங்குகிறபோது, எங்களையெல்லாம் வாருங்கள், கலைஞரை  இப்போதே பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் இப்போது பார்த்துவிடுங்கள். நாளை கூட்டம் அதிகமாகும் என்றபோது உள்ளே சென்று பார்த்தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முகத்தில் வாட்டமில்லை. அந்த இடம் முக்கியம். முகத்திலே சிரிப்பு இருந்தது. ஒரு புன்னகை இருந்தது. இத்தனை நாள் உடல்நலம் முடியாமல், நோய்வாய் பட்டு இருந்தவர். முகத்திலே புன்முறுவல். அந்த புன்முறுவலின் பொருள் எப்போது தெரிந்தது தெரியுமா? நீதிமன்றத்திலே நமக்கு உத்தரவு கிடைத்ததற்குப் பிறகு, அண்ணாவுக்குப் பக்கத்திலே வைக்கிற கடைசி நேரத்தில்தான் தெரிந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்? எனக்குத் தெரியும், நான் விரும்பியதை அடைந்தேத் தீருவேன் எனக்குத் தெரியும். ஆக ஒரு போராளியாகப் போராடித்தான் அந்த இடத்திற்கு போனாரே தவிர, எவருடைய இரக்கத்தினாலும், கருணையினாலும் இல்லை. அப்படி வாழ வேண்டுமென்ற அவசியமுமில்லை. வாழவேண்டி வந்தால், வாழ வேண்டியதுமில்லை என்ற அந்த தலைவன் என்றைக்கும் நம்மை வழிநடத்துகிறான். அவர் வழியில் இன்றையத் தலைவர். அவர் வழியில் நாம் அனைவரும். அவர் வழியில் நீங்களும். எதிர்காலம் நம்முடையது. நன்றி. வணக்கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்வாறு திருச்சி சிவா உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>