<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 14:30:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06062026-CBE-04" position.sequence="04" ex-ref="06062026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முத்தமிழறிஞர் கலைஞரின் பல பரிமாணங்களில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="61">“போராளி” எனும் சொல்லே வெற்றி பெற்றது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதைத் தேரடி திடலில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="sivadmk1_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை,ஜூன். 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் மாவட்ட கழக செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் 103ஆம்­ஆண்டு பிறந்­த­நாள் விழா வாழ்த்­த­ரங்க நிகழ்ச்சி சைதை தேர­டித் திட­லில் 3-.6.-2026 அன்று மாலை 6 மணித் தொடங்கி நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வி­ழா­வில் கழக துணைப்­பொ­துச்­செ­ய­லா­ளர் திருச்சி சிவா எம்.பி.  கலந்­து­ கொண்டு வாழ்த்­துரை வழங்­கி­னார். அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­ட­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேரா­சி­ரி­யர் சுப.வீ. பேசும் போதும் குறிப்­பிட்­டார். தேர்­த­லிலே தோற்­றக் கட்­சிக்கு இவ்­வ­ளவு பெரி­யக் கூட்­டம் வேறு எங்கு என்று கேட்­டார்? மன்­னிக்­க­வும் இது தோற்­றுப்­போ­னக் கட்­சி­யல்ல. ஆட்­சிக்­கட்­டி­லைத்­தான் நாம் இழந்­தி­ருக்­கி­ரோமே தவிர, மக்­க­ளி­டம் நாம் தோற்­றுப்­போ­க­வில்லை என்­பது என் அன்­பா­னக் கருத்து. ஒன்­ற­ரைக் கோடி பேர் நமக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். நம்மை எதிர்த்து இன்று ஆட்­சி­யி­லி­ருப்­ப­வர் நம்­மை­விட வெறும் 17 லட்­சம் வாக்­கு­கள்­தான் அதி­கம் பெற்­றி­ருக்­கி­றார். பெரிய அலை அடித்­தது என்றோ, அவர்­பால் மக்­கள் கூட்­டம் சென்­று­விட்­டது என்றோ, இளை­ஞர்­கள் திரண்டு இருக்­கி­றார்­கள் என்­பது நம்மை நாமே ஏமாற்­றிக்­கொள்­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">என்­னு­டைய முழு நேர</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அர­சி­யல் பிர­வே­சம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­ப­டி­யென்­றால் அவர் 150 இடங்­க­ளில் வெற்றி பெற்­றி­ருக்க வேண்­டும். பெரும்­பான்­மை­கூட இடங்­கள் தரா­மல் வெறும் 107 இடங்­கள் மட்­டுமே தந்த தமிழ்­நாடு என்­பது இது என்­பதை தயவு செய்து மறந்­து­வி­டக் கூடாது. தேர்­தல் தோல்வி என்­பது நமக்கு ஒன்­றும் புதி­த­தல்ல. நமக்கு ரொம்­ப­வும் பழக்­க­மா­ன­து­தான். என்­னு­டைய முழு­நேர அர­சி­யல் பிர­வே­சம் என்­பது, கழ­கம் ஆட்­சியை இழந்து, அவ­சர நிலையை சந்­தித்­த­போ­து­தான், எப்­படி நமது இந்­து­ராம்  பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படிக்­கிற காலத்­தி­லே­யி­ருந்து, இடது சாரிக்­கொள்­கை­க­ளில் பற்­றுக்­கொண்­டி­ருந்­தாரோ, அது­போல நான் படிக்­கிற காலத்­தி­லே­யி­ருந்து கழ­கத்­தின் கொள்­கை­கள்­மீது பற்­றுக்­கொண்­டி­ருந்­த­வன். ஆனால் என்­னு­டைய ஐ.ஏ.எஸ். கன­வு­க­ளை­யெல்­லாம் தூக்­கி­எ­றிந்­து­விட்டு, இந்த இயக்­கத்­தை­யும், இந்­தத் தலை­வ­ரை­யும்­தான் பின்­பற்ற வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தக் காலம், கழ­கம் சோத­னை­க­ளைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருந்த அவ­சர நிலைக்­கா­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்­தக் காலக்­கட்­டத்­தி­லேயே கழ­கம் ஆட்­சியை இழந்­தி­ருந்­தது. இன்­றை­யக் கழ­கத்­தின் தலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும், என்­னைப்போன்­ற­வர்­க­ளும் ஓராண்­டுக் காலம் சிறை­யி­லி­ருந்­தோம். கழ­கத் தோழர்­கள் அலைக்­க­ழிக்­கப்­பட்­டார்­கள். கலை­ஞர் தனித்­து­வி­டப்­பட்­டார். “நெருப்­பாற்­றிலே நீந்­து­கின்ற மெழு­கு­வர்த்தி மனி­தன்” என்று கலை­ஞர் எழு­தி­யக் கடி­தங்­கள். பல பேர் வில­கிச்­சென்­ற­போது, கோழை­கள் வில­கட்­டும், வீரர்­கள் தொட­ரட்­டும் என்று உணர்ச்­சி­யூட்­டி­யத் தலை­வர். இரங்­கல் கூட்­டங்­க­ளி­லும், பிறந்­த­நாள் விழாக் கூட்­டங்­க­ளி­லும், திரு­மண விழாக்­க­ளி­லும் அர­சி­யல் வளர்த்த செம்­மல் அவர். அந்­தக் காலக்­கட்­டத்­திற்கு பின்­னால் நடை­பெற்­றத் தேர்­த­லில் ஜன­நா­ய­கத்­திற்­காக ஓர் ஆட்­சி­யை­யேப் பறி­கொ­டுத்த இயக்­கம். தேர்­த­லில் தோற்­றுப்­போ­னது. கலங்­க­வில்லை. சரி­யாக இரண்டு மாதங்­க­ளில் இந்­தி­ரா­காந்­திக்கு கருப்­புக்­கொ­டிக் காட்­டி­யக் கட்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்து எம்.ஜி.ஆர். ஆட்­சியை எதிர்த்து போராட்­டக் களம் கண்டு, சிறைக்­குச் சென்­ற­தும் ஆறு மாதத்­திற்­குள்­ளா­கத்­தான். ஆகத் தேர்­தல்­தோல்வி என்­பது நம்­மைத் துவ­ளச்­செய்­வது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1996 ஆம் ஆண்டு பொற்­கால ஆட்­சியை நடத்­தி­னோம். இல­வச அரி­சிக்­கொ­டுத்­தோம். இல­வச வண்­ணத் தொலைக்­காட்­சிக் கொடுத்­தோம். விவ­சா­யி­கள் வாங்­கி­யக் கட­னைத் தள்­ளு­படி செய்­தோம். மாண­வர்­கள் பேருந்­திலே பய­ணம் செய்­வ­தற்கு இல­வச பஸ்­பாஸ் கொடுத்­தோம். அடுத்­தத் தேர்­த­லில் தோற்­றுப்­போ­னோம். இதெல்­லாம் இயற்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆக, தமிழ்­நாடு என்று இல்லை. இந்­தியா முழு­வ­தும் எடுத்­துக்­கொண்­டா­லும் சரி, உலக நாடு­க­ளில் எடுத்­துக்­கொண்­டா­லும் சரி, ஒரு ஆட்­சித் திற­மை­யாக நன்­மை­களை செய்­கி­றது. மக்­க­ளின் மீது அன்­பு­காட்­டு­கி­றது என்­ப­தால், தொடர்ந்து ஆட்சி நடத்த அனு­ம­திக்­கா­ம­லும் நடப்­ப­து­தான் தேர்­தல் ஜன­நா­ய­கம் என்­பது. காம­ரா­ஜர் தோற்­ற­தற்­குப் பின்­னால் பேர­றி­ஞர் அண்­ணா­வி­டம் போய், அண்ணா காம­ரா­ஜ­ரை­யேத் தோற்­க­டித்­து­விட்­டோம் என்று சொன்­னார்­கள். அப்­போது அண்ணா சொன்­னார். திருத்­திக்­கொள்­ளுங்­கள். இது காம­ரா­ஜ­ரையே தோற்­க­டிக்­கிற நாடு எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள் என்­று­தான் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கழ­கம் – பக்­கு­வப்­பட்ட அர­சி­யல் கட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆக எது­வேண்­டு­மா­னா­லும் ஜன­நா­ய­கத்­தில் நடக்­கும் ஏற்­றுக்­கொள்ள பக்­கு­வம். பக்­கு­வப்­பட்ட ஓர் அர­சி­யல் கட்­சிக்­குத்­தான் உண்டு. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு உண்டு. அத­னால்­தான் தொடர்ந்து பல்­வேறு நிகழ்ச்­சிக்­க­ளுக்­கி­டை­யில் இன்று வாழ்த்­த­ரங்­கத்­தைத் தம்பி மா.சு.  ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார். தேர்­த­லுக்­குப் பின்­னால் நான் கலந்­து­கொள்­கிற முதல் கூட்­ட­மாக அமைந்­தி­ருப்­பது எனக்­கும், மகிழ்ச்­சி­யைத்  தரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சைதைத் தேரடி, இந்­தப் பகு­தி­வாழ் மக்­கள், உங்­க­ளுக்கு இயக்­கத்­தின் மீதி­ருக்­கிற பற்று எல்­லாம் எனக்­குத் தெரி­யும். ஆனால் தேர்­தல் முடிந்து வேறா­க­யி­ருந்­தது. மக்­க­ளோடு மக்­க­ளாக அவர்­க­ளு­டன் நட­மாடி, அவர்­க­ளு­டன் ஓடி, முடித்து வீடு, வீடா­கச் சென்று தனிப்­பட்ட முறை­யில் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய பெய­ரை­யும் சொல்­லக்­கூ­டிய இந்­தத் தம்பி மா.சு. தோற்­றுப்­போ­னார் என்­றால், அது அவ­ரு­டைய குற்­ற­மல்ல. அதை­யும் ஏற்­கிற பக்­கு­வம், அவ­ருக்­கும் வர­வேண்­டும். நாம் இன்­னும் ஜன­நா­ய­கத்­தைக் கற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­தும், நிறைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனவே வெற்றி பெற்­ற­வர் நம்­மை­விட வீரி­யம் கொண்­ட­வர். நம்­மை­விட வலி­மை­யா­ன­வர். நம்­மை­விட சிறந்­த­வர் என்­பது அல்ல. மக்­கள் தந்­தத் தீர்ப்பை நன்­றாக நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். தட்­டு­த­டு­மாறி ஆள்­சேர்த்து ஆட்­சியை நடத்­த­வேண்­டிய நிலை­யில்­தான் அவர் இருக்­கி­றா­ரேத் தவிர அள்­ளிக்­கொ­டுக்­க­வில்லை. மறந்­து­வி­டா­தீர்­கள். நம்­மை­யும் முற்­றி­லு­ மா­கக் கைவி­ட­வில்லை. ஒன்­ற­ரைக்­கோடி மக்­கள் நமக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலை­ஞ­ருக்­கான அடை­யா­ளம் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">போராளி என்­ப­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு கட்சி ஆட்­சி­யில் இருந்­தால்­தான் நமக்கு மரி­யா­தையா இல்லை. எதிர்க்­கட்­சி­யாக இருக்­கி­ற­போது நமக்கு இருக்­கிற வேக­மும், வீரி­ய­மும் வேறு எந்­தக் கட்­சிக்­கும் இந்­திய நாட்­டில் கிடை­யாது. முது­கில் குத்­து­கிற துரோ­கி­க­ளை­யும் தெரி­யும். சிரித்­துக்­கொண்டே பேசி ஏமாற்­று­கி­ற­வர்­க­ளை­யும் தெரி­யும். உடன் வந்­து­கொண்டே உடன் காணா­மல் போகி­ற­வர்­க­ளை­யும் தெரி­யும். எல்­லா­வற்­றை­யும் ஏற்­றுக்­கொண்டு தொடர்ந்து செல்­கின்ற அந்த வலி­மை­யும், பக்­கு­வ­மும், இதன்­மூ­ல­மா­கத்­தான் இயக்­கம் வளர்த்­தோம். இயக்­கம் காத்­தோம். எதிர்­கா­லத்­தில் இயக்­கத்தை மீட்­டெ­டுக்­கப்­போ­வ­தும் உங்­க­ளால்­தான். மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கலை­ஞ­ருக்­கான அடை­யா­ளம் அவர் ஒரு போராளி என்­ப­து­தான். கடைசி நிமி­டம் வரை அவர் போரா­ளி­யா­கத்­தான் இருந்­தார். என் போன்­ற­வர்­களை மாண­வர் பரு­வத்­தி­லேயே கலை­ஞர் கவர்ந்­த­தற்­குக் கார­ணம், அவ­ரு­டைய வீர­மிக்க பேச்­சுக்­க­ளும், அவ­ரு­டைய செய்­கை­க­ளும், அவ­ரு­டைய செயல்­க­ளும்­தான். முத­லில் முத­ல­மைச்­சர் என்­ப­தால் நான் அவ­ரி­டம் நெருங்­க­வில்லை. மாறாக முத­ல­மைச்­சர் பத­வியை இழந்­த­தற்­குப் பின்­னால் போரா­டிய கலை­ஞ­ரைப் பார்த்து, இவ­ரைப் போன்­ற­வ­ருக்­குப் பின்­னால்­தான் நிற்க வேண்­டும் முழு­மை­யாக என்று எல்­லா­வற்­றை­யும் தூக்­கி­எ­றிந்­து­விட்டு வந்த ஒரு பெருங்­கூட்­டம் என் வய­தைச் சார்ந்­த­வர்­க­ளுக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு நாங்­கள் இளை­ஞர்­க­ளுக்கு நாங்­கள் வழி­காட்­டு­கிற அல்­லது வழி நடத்­து­கிற தலை­மு­றை­யாக உயர்ந்­து­விட்­டோம். வயது கார­ண­மாக. அனு­ப­வத்­தின் கார­ண­மாக, ஆனால் என்ன கார­ணத்­திற்­காக வந்­தோம் என்ற கார­ணத்­தி­னால்­தான் ஐம்­பது ஆண்­டு­கா­ல­மாக எங்­க­ளு­டைய இந்­தப் பய­ணம் தொய்­வில்­லா­மல், தொடர்­கி­றது. அது­தான் எங்­க­ளோடு இருப்­ப­வர்­க­ளுக்­கும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த உணர்­வைத் தந்­தது கலை­ஞர் என்ற போராளி. கல்­லக்­குடி என்ற போராட்­டத்­தில் இருந்து ஆரம்­பிக்­க­லாம். இந்தி எதிர்ப்­புப் போர்க்­க­ளத்தை எடுத்­துக்­கொள்­ள­லாம். மாண­வர்­கள் தான் அந்­தப் போராட்­டத்தை வெற்­றி­பெற செய்­தார்­கள். அத­னால்­தான் 1967ஆம் ஆண்டு ஆட்சி மலர்ந்­தது. ஆனால் அந்த மாண­வர்­கள் அன்­றைக்கு உத்­வே­கம் பெறு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்­த­வு­டன் மாண­வர்­கள் போராட்­டம், 
இந்­தியை எதிர்த்து, நடக்­கிற போது, நான் வேத­னை­யோடு நினை­வுக்­கூட விரும்­பு­கி­றேன். இதெல்­லாம் வர­லாற்­றில் மறைக்­க­மு­டி­யாத பக்­கங்­கள். அண்­ணா­போய் ஒரு கல்­லூ­ரி­யிலே பேசு­கி­றார். அவ­ரு­டைய தொண்டை விம்­பு­கி­றது. தண்­ணீர் வேண்­டு­மென்று கேட்­கி­றார். தண்­ணீ­ரைக் கொண்­டு­போய் கொடுக்­கி­ற­போது, அதில் இருக்­கிற வேறொரு கட்­சி­யைச் சேர்ந்த மாண­வன், அதைத் தட்­டி­வி­டு­கி­றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">யாருக்­கா­வது தெரி­யுமா? நினை­வி­ருக்­கி­றதா? தெரிந்த­வர்­க­ளுக்கு, அண்ணா பேசு­கி­ற­போது பேச­மு­டி­யா­மல் விம்­மு­கி­ற­போது அவ­ருக்கு தண்­ணீர் வேண்­டு­மென்று கேட்­கிற நேரத்­தில் கொடுக்­கி­ற­போது தட்­டி­விட்­ட­வர்­கள் இன்­றைக்­கும், தட்­டி­விட்­டு­விட்டு நிற்­கி­றார்­கள். மறந்­து­விடா­தீர்­கள். அடுத்து அந்­தப் போராட்­டம் வீரி­யம் கொண்­ட­போது, அவர்­களை சமா­ளிப்­ப­தற்­கும், அவர்­க­ளுக்கு ஆறு­தல் சொல்­வ­தற்­கும், அண்ணா அனுப்­பி­வைத்­தது தலை­வர் கலை­ஞ­ரைத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் பேச்­சின்­மூ­ல­மா­கத்­தான்  அமை­தி­யா­னார்­கள். அண்ணா சொன்­னார். என்னை நம்­புங்­கள். மொழிப்­போ­ராட்­டத்தை மைய­மாக வைத்­துத்­தான் நான் ஆட்­சிக்கு வந்­தேன். நான் மறுக்­க­வில்லை. பல்­வேறு கோரிக்­கை­கள், கொள்­கை­கள் இருக்­க­லாம். என்னை நம்­புங்­கள் என்று சொன்­ன­தற்­குப் பின்­னால்­தான், 1968ஆம் ஆண்டு, இரு­மொ­ழிக்­கொள்கை என்­பதை நடை­முறைக்கு அண்ணா கொண்­டு­வந்­தார். இந்தி என்­பது என்­னா­லும் தமிழ்­நாட்­டில் இல்­லை­யென்று, அவர் அன்று உரு­வாக்­கிய சட்­டம். அதை நிறை­வேற்­று­கி­ற­போது அண்ணா  அழ­கா­கப் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இயக்­கத்­தைக் காப்­பாற்­றப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">போகும் சிப்­பாய்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தம்­பி­மார்­களே, தெரிந்­து­கொள்­ளுங்­கள். எதிர்­கா­லத்­தில் இயக்­கத்­தைக் காப்­பாற்­றப்­போ­கி­ற­வர்­கள் நீங்­கள் என்­ப­தைச் சொன்­னேன். நீங்­கள் எல்­லாம் எதிர்­கா­லத்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக, அமைச்­சர்­க­ ளாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக, மேயர்­க­ளாக, வரு­வீர்­கள் என்­ப­தைச் சொல்ல நான் இங்கு வர­வில்லை. இந்த இயக்­கத்தை காப்­பாற்­றப்­போ­கிற சிப்­பாய்­கள் என்ற உணர்­வோ­டு­தான் பேசு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதில் அண்­ணா­பே­சு­கி­ற­போது சொன்­னார், இனி தமிழ்­நாட்­டில் இரு­மொழி கொள்­கை­தான் என்று. இந்தி என்­ப­தற்கு இட­மில்லை. பாடத்­திட்­டங்­க­ளில் அது இருக்­காது. அடுத்து சொல்­கி­றார். அண்ணா அன்­பா­ன­வர். மென்­மை­யா­ன­வர். ஆனால் வேறு ஒரு முக­மும் இருந்­தது. அது­தான்­அ­வரை அவ்­வ­ளவு பெரிய தலை­வ­னாக உயர்த்­தி­யது. பேசு­கி­றார். ஆட்­சி­மொ­ழித் தொடர்­பாக மத்­திய அரசு நிறை­வேற்­றிய தீர்­மா­னங்­கள் அனைத்­தை­யும் இம்­மன்­றம் நிரா­க­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வைக்கு இருக்­கிற சான்­றாண்­மையை (Sovereignty) அண்ணா நிறை­வேற்­று­கி­றார். மத்­திய அரசு ஆட்­சி­மொ­ழித் தொடர்­பாக நிறை­வேற்­றி­யத் தீர்­மா­னங்­களை இந்த அரசு நிரா­க­ரிக்­கி­றது. தேசிய மாண­வர் படை­யில் என்.சி.சி. என்று இந்த மாநி­லத்­திலே இருக்­கி­றது. அதில் உத்­த­ர­வு­கள் இந்­தி­யி­லே­யே­தான் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. இன்­றைக்கு இந்த மன்­றம் தீர்­மா­னிக்­கி­றது, இனி­மேல் என்.சி.சி. அமைப்­பில் ஆங்­கி­லத்­தில்­தான் உத்­த­ர­வு­கள் இருக்க வேண்­டும் என்று இம்­மன்­றம் தீர்­மா­னிக்­கி­றது. இந்­தி­யில் இருக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்­த­ப­டி­போய் சொல்­கி­றார். ஒரு­வேளை மத்­திய அரசு எதிர்ப்­புத் தெரி­விக்­கு­மே­யா­னால், ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டேன் என்று சொல்­லு­மா­னால், நான் அறி­விக்­கி­றேன் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டில் தேசிய மாண­வர் படை கலைக்­கப்­ப­டும் என்­றார். யாரைப் பார்த்து, அண்ணா அன்­றைக்கு தண்­ணீ­ரைத் தட்­டி­விட்ட மாண­வர்­கள்­மீது கோபப்­ப­ட­வில்லை. ஆனால் ஏற்­றி­யிருக்­கிற கட­மை­யில் அதனை ஆட்சி மொழி­யா­கக் கொண்­டு­வ­ரு­கி­றார். பின்­னர் கலை­ஞர் அத­னைத் தொய்­வின்றி எடுத்­துச்­சென்­றார். இன்­றை­யத் தலை­வ­ரும் அத­னைத்­தான் தொடர்ந்து செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நமக்கு ஆட்­சி­யும், அதி­கா­ர­மும் வேண்­டும் என்று சொன்ன கார­ணத்­தில்­தான், தேர்­தல் களத்­தில் நுழைந்­தோம். தேர்­தல் களத்­திலே வாய்ப்­புக் கிடைத்­த ­போ­தெல்­லாம் ஆட்­சி­பொ­றுப்­பில் இருந்த நேரத்­தி­லெல்­லாம் சட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்­தோம். இல்­லாத நேரத்­திலே துவண்டுபோக­வு­மில்லை. கிடைத்த நேரத்­தில் மருண்டு போய், வெகுண்­டு­போய் மற்­ற­வர்­க­ளை­போல் பேச­வு­மில்லை. அது போல் நடந்­து­கொள்­ள­வு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அவ­சர நிலையை எதிர்த்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலை­ஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது வீர­னாக இருந்த கார­ணத்­தில்­தான், போரா­ளி­யாக இருந்த கார­ணத்­தில்­தான், அவ­ச­ர­நி­லையை எதிர்த்­தார். நன்­றாக நினை­விலே கொள்­ளுங்­கள். 1971ஆம் ஆண்டு முதன்­முத­லாக தி.மு.கழ­கம் காங்­கி­ரஸ் கட்­சி­யோடு கூட்­டணி வைக்­கி­றது. இந்­தி­ரா­காந்தி அம்­மை­யா­ரோடு, அது எதற்­காக என்­றால்,  மன்­னர் மானி­யத்தை ஒழித்­தார். வங்­கி­களை தேசிய உடை­மை­யாக்­கி­னார். முற்­போக்­குத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­கி­றார் என்­கிற கார­ணத்­தில்­தான், கூட்­டணி அமைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது­வரை தமிழ்­நாட்­டில் வேறு எவ­ரும் பெறா­த­வ­கை­யில் 184 இடங்­க­ளில் வெற்­றிப்­பெற்று ஆட்­சி­அ­மைத்­தோம். நாடா­ளு­மன்­றத்­தி­லேயே பெரும்­பான்மை நமக்கு. மீதி அவர்­க­ளுக்கு. இப்­படி ஆட்சி நடக்­கு­ற­போ­து­தான், இதே மாதம் ஜுன் 25ஆம் தேதி 1975ஆம் ஆண்டு இந்­தி­ரா­காந்­திக்கு எதி­ரான வழக்­குத் தீர்ப்பு, இன்­றைக்கு அப்­பா­வுக்கு தீர்ப்பு வந்­தி­ருக்­கி­றது. ஒரு  மனி­தன் தேர்­த­லிலே போட்­டி­யிட்டு, செல்­லாது என்று பத்­தாண்­டு­க­ளுக்­குப் பிற­கு­தான் வந்­தி­ருக்­கி­றது, இப்­படி தோற்­க­டித்­தார்­கள் என்று தொடங்­கிய அந்த வழக்கு. பத்­தாண்­டு­க­ளுக்­குப் பின்­னால் இன்­றைக்­குத்­தான் தீர்ப்பு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால் அன்­றைக்கு இந்­தி­ரா­காந்­தி­யின் வழக்கு. அவ­ரு­டைய தேர்­தல் செல்­லாது என்று அறி­வித்­த­வு­டன், மிக­வும் நாக­ரி­க­மாக இறங்கி வழி­வி­ட­வில்லை. மாறாக, அவ­ச­ர­நி­லை­யைக் கொண்டு வரு­கி­றார். அவ­சர நிலை என்­றால் என்ன? உரி­மை­கள் பறிக்­கப்­ப­டும். அது அர­சி­யல் சட்­டம்­தந்த ஒரு உரி­மை­தான். அடிப்­படை உரி­மை­கள் பறிக்­கப்­ப­டும். நான் கைது­செய்­யப்­பட்­டேன். நான் கல்­லூ­ரி­யிலே படிக்­கிற காலத்­தில் என்­னைத் தேடி போலீ­சார் வரு­கி­றார்­கள். முதல்­வர்  ஒரு அறை­யி­லேயே உட்­கார வைத்­து­விட்டு எனக்கு ஓர் நப­ரினை அனுப்பி, போலீஸ் வந்­தி­ருக்­கி­றது, வகுப்பு நடக்­கி­றது என்று, தொந்­த­ரவு செய்­ய­வேண்­டாம் என்று சிவாவை அப்­ப­டியே ஓடிப்­போ­கச்­சொல் என்­றார். ஆக முதல்­வ­ரின் உத­வி­யால் அன்று நான் நகர்ந்­தேனே தவிர, பதி­னைந்து நாள் கழித்து, கைதா­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த நேரத்­திலே என்னை கைது செய்­து­விட்­டார்­கள். நான் சிறை­யிலே இருக்­கி­றேன் என்று, என் தந்­தை­யா­ரால் பக்­கத்­து­வீட்­டில்­போய் சொல்ல முடி­யாது. என் நண்­பர்­க­ளி­டம் போய் ஒரு கடி­தம் எழு­திக்­கொ­டுங்­கள், அவன் தனி­மை­யில் தவிக்­கி­றான். உங்­க­ளோடு சுற்­றி­ய­வன் என்­கி­ற­போது, ஒரு கடி­தம்­கூட எழு­திக்­கொ­டுக்­காத நண்­பர்­க­ளும் எங்­க­ளுக்கு இருந்­தார்­கள். உற­வி­னர்­கள் ஒரு­வர்­கூட வந்து பார்த்­த­தில்லை. நானும் அது குறித்து கவ­லைப்­பட்­ட­தும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">என் வாழ்க்கை – இனி கலை­ஞ­ரு­டன்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனக்கு அப்­போது21 வயது. அங்­கி­ருந்த மூத்­த­வர்­க­ளைப் பார்த்து உர­மே­றி­ய­வ­னாக, உற்­சா­க­மே­றி­ய­வ­னாக இருந்­தே­னே­த­விர, ஒரு நாளும் கலங்­க­வில்லை. கார­ணம் கலை­ஞ­ரைப் பற்றி சிறைக்­குள்ளே பேசிக்­கொண்டே இருந்­தோம். கருத்­த­ரங்­கு­கள் நடத்­தி­னோம். பல்­வேறு கருத்­து­களை பகிர்ந்­து­கொண்­ட­போது இவர்­க­ளைப்­போல்­தான் நாமும் ஆக­வேண்­டு ­மென்று தோன்­றி­யதே தவிர, எப்­போது திறந்­து­வி­டு­ வான் ஓட­லாம் என்று முடி­வெ­டுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விடு­த­லை­யாகி  வெளியே வந்­த­போது, தொடர்ந்து 
கல்­விக்­குப் பின்­னால்நான் கண்ட கனவு ஐ.ஏ.எஸ். அதை­நோக்கி செல்­வதா? அல்­லது கலை­ஞ­ருக்­குப் பின்­னால் செல்­வதா? என்று கேள்வி எழுந்­த­போது, அந்த வய­தில் சிறை வாச­லில் முடி­வெ­டுத்­தேன், நாடு, மக்­கள், ஜன­நா­ய­கம் காப்­பாற்­றப்­ப­ட­வேண்­டு­மென்­றால், வாழ்க்கை இனி கலை­ஞ­ருக்­குப் பின்­னால் என்று முடி­வெ­டுத்­தோம். தொடர்­கி­றது அந்­தப் பய­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது என்ன கார­ணத்­தி­னால், அந்த நேரத்­தில் அவர் போரா­டிய அந்த உணர்வு. அத­னால்­தான் நான் கல்­லக்­குடி போராட்­டத்தை நான் விவ­ரிக்­க­வில்லை. இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தைப் பற்றி பேசி­னால் நான் எவ்­வ­ளவோ நேரம் பேச­லாம். அவ­ச­ர­நிலை காலத்­திலே, அவ­ரு­டைய அந்த, போராட்ட உணர்வு, அதற்­குப் பின்­னால் நிறைய நடந்­தது. தம்பி, மா.சு.விற்கு நினை­வி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சைதாப்­பேட்டை கிட்டு மாவட்­டச் செய­லா­ளர். ஒரு முறை இங்கே ஒரு பிரச்­சினை. அறி­வா­ல­யம் திறந்து கொஞ்­ச­நாட்­கள் ஆகி­றது. கலை­ஞர் அங்கே உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். அப்­போது காவல்­து­றை­யில் ஒரு அதி­காரி இருந்­தார். நான் பெயர் சொல்ல விரும்­ப­வில்லை. அத்­து­மீறி நடக்­கி­றார் என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கட்­டுப்­பட்டு நடக்­கி­றாரா என்று கேளுங்­கள்? இல்­லை­யென்­றால் நானே வரு­கி­றேன் என்று அந்­தத் துண்டை எடுத்து தோளிலே போட்டு நடந்­தார்­பா­ருங்­கள். மறக்­க­முடி­யாத நாள் அது. அண்ணா அறி­வா­ல­யம் திறக்­கப்­பட்ட நாள். எத­னால் அண்ணா அறி­வா­ல­யம் திறக்­கப்­பட்­டது. நமக்­கென ஒரு கட்சி அலு­வ­ல­கம் என்ற முடி­வுக்கு வந்­தோம். ஏற்­கெ­னவே இருந்­தது. எங்கே என்­றால் அர­சி­னர் தோட்­டத்­தில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு பெரிய இடம். நாங்­க­ளெல்­லாம், அப்­போது ஒரு கார­ண­மும் இல்­லா­மல் சென்­னைக்கு வரு­வேன். கலை­ஞர் என்ன கார­ண­மாக வந்­தீர்­கள் என்று கேட்­கி­ற­போது, உங்­க­ளைப் பார்க்க வேண்­டும்­போல் இருந்­தது வந்­தேன் என்று சொல்­வேன். கூட்­ட­மில்­லையா? இல்லை. உங்­க­ளைப் பார்க்­கத்­தான் வந்­தேன். ஒரு சிரிப்பு சிரிப்­பார் பாருங்­கள், அதோடு இன்­னும் அய்க்­கி­ய­மா­னோம். எப்­படிஅவ­ருக்­குப் பின்­னால் தொடர்ந்­தோமோ, அந்த சிரிப்­பும், போகி­ற­போது வரட்­டான்யா? எப்ப ஊருக்கு என்று கேட்­கி­றார் பாருங்­கள். அதற்கு ஈடே­தும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த காலக்­கட்­டத்­திலே, எம்.ஜி.ஆர். அவரை அந்த இடத்­திலே இருந்து (அர­சி­னர் தோட்­டத்­தில்) அப்­பு­றப்­ப­டுத்த உத்­த­ர­வி­டு­கி­றார். தி.மு.க அலு­வ­ல­கத்தை காலி­செய்ய வேண்­டும். ஒரே ஓர் அலு­வ­ல­கத்தை மட்­டும்­தான் தரு­கி­றேன். நன்­றாக எல்­லோ­ருக்­கும் நினை­ வி­ருக்­கும். உட்­கார்ந்த நாற்­கா­லியை விட்டு நான் எழுந்­தி­ரிக்க மறுத்து, போக­மாட்­டேன் என்று சொன்ன கலை­ஞ­ரைத் தூக்கி நாற்­கா­லி­யோடு வெளியே போட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாற்­கா­லி­யோடு வெளியே வீசப்­பட்ட கலை­ஞர் சொன்­னார். இந்­தி­யா­விலே இது­போல் தமி­ழ­கத்­தில் யாருக்­கும் இல்­லாத அள­வுக்கு ஒரு கட்சி அலு­வ­ல­கத்­தைக் கட்­டிக்­காண்­பிக்­கி­றேன் என்று சொன்­னார் கலை­ஞர். அப்­ப­டிக் கட்­டி­ய­து­தான் அண்ணா அறி­வா­ல­யம். ஊர் ஊரா­கப் போனார். கையேந்­தி­னார். கூட்­டம் போட்­டார். காசு கேட்­டார். நன்­றாக கொஞ்­சம் போய் முர­சொ­லியை படி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அறி­வா­லய நூல­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அறி­வா­ல­யத்­தி­லேயே இருக்­கிற நூல­கத்­திலே படி­யுங்­கள். 1984-1985 காலக்­கட்­டங்­க­ளில், அறி­வா­ல­யம் கட்­டு­வ­தற்கு பணம் கொடுத்­த­வர்­கள் பட்­டி­யல் இருக்­கி­றது. போய் பாருங்­கள். ஒவ்­வொரு பெய­ருக்­குப் பின்­னால் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்­றெல்­லாம் இருக்­கி­றது. இந்த கட்­சி­யிலே இருக்­கிற பாம­ரன், வண்டி இழுக்­கி­ற­வன். மூட்டை சுமக்­கி­ற­வன். அப்­போது உயர்ந்­தார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சில பேர் துன்­பத்­தில் இருக்­கி­ற­போது, நம் மன­தில் உரு­வா­கும். அது திரைப்­ப­டத்­தைச் சார்ந்­த­வர்­க­ளாக இருக்­க­லாம். அர­சி­யல் தலை­வர்­க­ளாக இருக்­க­லாம். பார்க்­கி­ற­போது மன­தில் ஒரு பிம்­பம் உரு­வா­கும். ஆனால் நெருங்­கு­கி­ற­போது அந்த பிம்­பம் கலை­யும் அல்­லது கரை­யும். ஆனால் நாளுக்­கு­நாள் பிம்­பம் உயர்ந்த தலை­வன் கலை­ஞர் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஜெய­ல­லி­தாவை எதிர்த்து ஒரு போராட்­டம் நடத்­து­கி­றேன் என்று. நான் மாநில இளை­ஞ­ரணி செய­லா­ள­ராக இருந்­த­போது மாடி­யிலே போய் சொன்­னேன். எதிர்­பார்த்­தது எனக்கு அவர் அனு­மதி தரு­வார் என்று. வேண்­டாம் என்­றார். இல்லை அண்ணா மாண­வர்­கள் நிறைய பேர் இருக்­கி­றார்­கள் என்று சொன்­னேன். அத­னால்­தான் வேண்­டாம் என்­கி­றேன் என்­றார். ஏன் என்று கேட்­ட­போது சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரக்­க­மற்­ற­வர். ஏதா­வது பெரிய அசாம்­பா­வி­தங்­கள் நடக்­கும். அத­னால்­தான் வேண்­டாம் என்று சொல்­கி­றேன். அதை வேறு மாதி­ரி­யா­கப் பார்த்­துக்­கொள்­ள­லாம். அப்­போது எனக்கு அண்ணா நினை­வுக்கு வந்­தார். இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்தை கை விடுங்­கள். தம்­பி­மார்­களே, கட்­சிப் பார்த்­துக்­கொள்­ளும் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இந்­தியை எதிர்ப்­ப­தும், தமிழை வாழ வைப்­ப­தும், உங்­களை வாழ வைப்­ப­தற்­கா­க­தானே தவிர உங்­களை சாகக்­கொ­டுத்­து­விட்டு, நான் தமிழை வாழ வைத்­து­விட்டு நான் என்ன செய்­யப்­போ­கி­றேன்? என்று சொன்­ன­வர் அண்ணா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலை­ஞர் முக்­கி­யத்­து­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தந்த புகைப்­ப­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு இரக்­க­மற்­ற­வரை எதிர்த்து போராடி, மாண­வர்­கள்  உயிர்­கள் வீணாக பலி­யா­கி­வி­டக் கூடாது என்று சொன்­ன­வர் கலை­ஞர். நான் வந்­த­தற்­குப் பின்­னால் முர­சொ­லி­யி­லேயே கட்­டுரை எழு­து­கி­ற­போது சொன்­னேன். கலை­ஞ­ரைப் பார்த்­து­விட்டு நான் ஒவ்­வொ­ருப் படி­யாக இறங்­கு­கி­ற­போது, அவ­ரைப் பற்­றிய அபிப்­பி­ரா­யம் ஒவ்­வொ­ருப் படி­யாக உயர்ந்­து­கொண்டே போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பின்­னா­ளில் கலை­ஞரை இவர்­க­ளைப் போன்றபத்­தி­ரி­கை­யா­ளர்­கள் சந்­திக்­கி­றார்­கள். புகைப்­ப­டங்­களைகண்­ணுக்கு முன்­னாள் போடு­கி­றார்­கள். இதிலே உங்­க­ளுக்­குப் பிடித்­தப் புகைப்­ப­டம் எது? எல்லா புகைப்­ப­டங்­க­ளும் கலை­ஞ­ரு­டை­யது. கலை­ஞர் ஒரு புகைப்­ப­டத்தை எடுத்­துக்­கொ­டுக்­கி­றார். அது அண்ணா சிலை அரு­கில், அவர் கைதா­கிற படம்.  கேட்­கி­றார்­கள். ஏன்? போராட்­டத்­தில் கைதா­கி­றீர்­கள் என்­றால்? ஆம் என்று கலை­ஞர் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­ப­டி­யென்­றால் நீங்­கள் கல்­லக்­குடி ரயி­லுக்குமுன்­னால் படுத்­துப் போராட்­டம் நடத்­திய புகைப்­ப­டத்­தை­யல்­லவா கொடுத்­தி­ருக்க வேண்­டும். எவ்­வ­ள­வுப் பெரிய போராட்­டம். ஏன் இதைக் கொடுக்­கு­றீர்­கள்? என்­ற­போது, கலை­ஞர் சொன்­னார். 1953ஆம் ஆண்டு அந்த போராட்­டத்­தில் நான் கலந்­து­கொண்­ட­போது, கழ­கம் வளர்ந்­து­கொண்­டி­ருந்த காலம். கழ­கம் தேர்­த­லிலே போட்­டி­யி­டாத காலம். ஆனால் இந்­தப் போராட்­டத்­திற்­குப் பிறகு நான் கைதா­னது. முத­ல­மைச்­ச­ராக நான் இருந்­த­தற்­குப் பின்­னால், முத­ல­மைச்­சர் ஆகி­ய­தற்கு பின்­னால் ஒரு மனி­தன் வீதி­யிலே இறங்­கிப் போரா­டி­ய­தற்கு பிறகு கைது செய்த ஒரு தலை­வனை இந்­தி­யா­வில் எனக்­குக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­க­ளும் அதைத்­தான் மன­திலே பதிய வைத்­துக்­கொள்ள வேண்­டும். வந்­தார். கைப்­பட எழு­தி­னார். இப்­போது இருக்­கிற நவீன வச­தி­கள் கிடை­யாது. ஜெராக்ஸ் மிஷின் கிடை­யாது. ரோனியோ என்று சொல்­வது உங்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். மையை உருட்டி, கையா­லேயே உருட்ட வேண்­டும். ஆளில்­லா­மல், சாதா­ரண அந்த மெலிந்த உரு­வம், ஐந்­நூக்­கும் மேற்­பட்ட பிர­தி­களை தானே சுற்றி சுற்றி இழுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதை எடுத்­துக்­கொண்டு மறு­நாள் காலை பொழுது புலர்­கி­ற­போது, அண்ணா நினை­வி­டத்­திலே மக்­கள் பார்க்­கி­றார்­கள். முன்­னாள் முத­ல­மைச்­சர் கையில் துண்டு பிர­சு­ரங்­க­ளோடு நிற்­கி­றார். இந்­தி­யா­வில் ஜன­நா­ய­கம் இல்லை என்று எழு­தப்­பட்ட அந்­தக் கடி­தம். கடைக்­க­டை­யாக பேருந்­துக்­காக காத்­துக்­கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்­குக் கொடுத்­துக்­கொண்டே நடந்த அந்த உரு­வம். அந்­தத் தலை­வ­னைக் கற்­பனை செய்து பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கூட்­டம் கூடு­கி­றது. பெருங்­கூட்­டம் கூடு­கி­றது. கட்­சித் தோழர்­கள் பின்­னால் வந்­து­விட்­டார்­கள். அண்ணா சிலை அருகே வரு­கி­ற­போது, கட்­டுக்­க­டங்­கா­தக் கூட்­டம், என்று தெரிந்து, போலீ­சார் வந்து கைது செய்­கி­றார்­கள். அந்­தப் படத்­தைத்­தான் கலை­ஞர் கொடுத்­துச்­சொன்­னார். இதற்கு முன்பு நான் கலந்­து­கொண்ட போராட்­டங்­கள், ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வ­னாக, வளர்ந்த கட்­சி­யில் உள்­ள­வ­னாக, எனக்கு கட்­சிப் பொறுப்பு வரும் என்று கரு­தாத காலம், ஆனால் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­தற்­குப் பின்­னா­லும் நான் அதே கரு­ணா­நி­தி­யா­கத்­தான் இருக்­கி­றேன் என்­ப­தாக சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலை­ஞ­ரின் ஆசை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆட்­சி­யா­ளர்­கள் அன்­றைக்கு இருந்­த­வர்­கள் மறுக்­கி­றார்­கள். நான் அவர்­களை மன­சாட்சி இல்­லா­த­வர்­கள், இரக்­க­மில்­லா­த­வர்­கள் என்று சொல்­ல­மாட்­டேன். அர­சி­யல் கார­ண­மாக மறுத்­தார்­கள். எல்­லோ­ரும் துவண்­டு­போய் கிடக்­கி­றோம். கலை­ஞ­ரு­டைய ஆசையே இரண்­டு­தான். ஒன்று, அவ­ரு­டைய நினை­வி­டத்­திலே ஓயா­மல் உழைத்த ஒரு­வன் இங்கே உறங்­கு­கி­றார் என்று எழு­தி­வை­யுங்­கள் என்று முன்போ சொல்­லி­யி­ருந்­தார். இரண்­டா­வது அண்­ணா­வுக்­குப் பக்­கத்­திலே உறங்க வேண்­டும் என்று சொன்­னார். அவர் வலி­யிலே அம்மா என்று கத்­தி­ய­தில்லை. அண்ணா என்று தான் கத்­தி­யி­ருக்­கி­றார். மருத்­து­வர்­களே அதனை சொல்­வார்­கள். அது அவ­ரது கனவு. அது முடி­யா­மல் போனது என்று அனை­வ­ரும் கலங்­கு­கி­ற­போது, எங்­க­ளை­யெல்­லாம் வாருங்­கள், கலை­ஞரை  இப்­போதே பார்க்க வேண்­டி­ய­வர்­கள் எல்­லாம் இப்­போது பார்த்­து­வி­டுங்­கள். நாளை கூட்­டம் அதி­க­மா­கும் என்­ற­போது உள்ளே சென்று பார்த்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முகத்­தில் வாட்­ட­மில்லை. அந்த இடம் முக்­கி­யம். முகத்­திலே சிரிப்பு இருந்­தது. ஒரு புன்­னகை இருந்­தது. இத்­தனை நாள் உடல்­ந­லம் முடி­யா­மல், நோய்­வாய் பட்டு இருந்­த­வர். முகத்­திலே புன்­மு­று­வல். அந்த புன்­மு­று­ வ­லின் பொருள் எப்­போது தெரிந்­தது தெரி­யுமா? நீதி­மன்­றத்­திலே நமக்கு உத்­த­ரவு கிடைத்­த­தற்­குப் பிறகு, அண்­ணா­வுக்­குப் பக்­கத்­திலே வைக்­கிற கடைசி நேரத்­தில்­தான் தெரிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் ஏன் பத­று­கி­றீர்­கள்? எனக்­குத் தெரி­யும், நான் விரும்­பி­யதை அடைந்­தேத் தீரு­வேன் எனக்­குத் தெரி­யும். ஆக ஒரு போரா­ளி­யா­கப் போரா­டித்­தான் அந்த இடத்­திற்கு போனாரே தவிர, எவ­ரு­டைய இரக்­கத்­தி­னா­லும், கரு­ணை­யி­னா­லும் இல்லை. அப்­படி வாழ வேண்­டு­மென்ற அவ­சி­ய­மு­மில்லை. வாழ­வேண்டி வந்­தால், வாழ வேண்­டி­ய­து­மில்லை என்ற அந்த தலை­வன் என்­றைக்­கும் நம்மை வழி­ந­டத்­து­கி­றான். அவர் வழி­யில் இன்­றை­யத் தலை­வர். அவர் வழி­யில் நாம் அனை­வ­ரும். அவர் வழி­யில் நீங்­க­ளும். எதிர்­கா­லம் நம்­மு­டை­யது. நன்றி. வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திருச்சி சிவா உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>