<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,134,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 14:31:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06062026-CBE-05" position.sequence="05" ex-ref="06062026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="155">‘ஷோபா மாடல்’ ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் வெற்றிக்காக  உழைத்த  கழக நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில்   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி உரை! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 6–ஆம் பக்கம்</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="udhayasirspee_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="udhayasirspee1_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Quotes1_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சென்னை, சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி 
சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் வெற்­றிக்­காக உழைத்த கழக நிர்­வா­கி­க­ளுக்கு நன்றி அறி­விப்­புக் கூட்­டம் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. இதில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் கலந்து கொண்டு, கழ­க­நிர்­வா­கி ­க­ளுக்கு  நன்றி தெரி­வித்து எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­ னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் 
அவர்­கள் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“ நேற்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பிறந்­த­நாள் விழா. இன்று சென்னை சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில், கழக வெற்­றிக்­காக உழைத்த கழக நிர்­வா­கி­க­ளுக்கு நன்றி அறி­விக்­கின்ற நிகழ்ச்­சி­யில் உங்­களை எல்­லாம் மீண்­டும் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பாராட்­டு­கள், வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு நன்றி அறி­விப்பு விழா. இதில் பலர் மகிழ்ச்­சி­யோடு கலந்­து­கொண்­டா­லும், சிலர் கொஞ்­சம் இறுக்­க­மான முகத்­து­டன் அமர்ந்­தி­ருக்­கி­றீர்­கள். அது தேவை­யில்லை. இந்­தத் தோல்வி நிரந்­த­ர­மல்ல, நிச்­ச­யம் மீண்­டும் வென்று காட்­டு­வோம். தேர்­தல் முடி­வு­கள் வந்­த­வு­ட­னேயே, இரண்­டா­வது நாள், மூன்­றா­வது நாளி­லேயே  உங்­கள் பகு­திக்கே வந்து நான் நன்றி சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று மீண்­டும் உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்து நன்றி சொல்ல வேண்­டும், அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் நன்றி சொல்ல வேண்­டும் என்று மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் சொல்லி, இந்த நிகழ்ச்சி இவ்­வ­ளவு சிறப்­பாக இரண்டே நாட்­க­ளில் ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார் சிற்­ற­ரசு அவர்­கள். சிற்­ற­ரசு அவர்­க­ளுக்கு என்­னு­டைய பாராட்­டு­கள், வாழ்த்­து­கள். அத்­து­டன் பகு­திச் செய­லா­ளர், மதன் மோகன் அவர்­க­ளுக்­கும் அனைத்து வட்­டக் கழ­கச் செய­லா­ள­ருக்­கும் என்­னு­டைய பாராட்­டு­கள், வாழ்த்­து­கள். இப்­பொ­ழுது மீண்­டும் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தற்கு வருகை தந்­துள்­ளேன். ஆனால், இதி­லி­ருந்து ஒன்று மட்­டும் நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். உங்­க­ளி­ட­மி­ருந்து என்­னைப் பிரிக்க முடி­யாது. என்­னி­ட­மி­ருந்து உங்­களை யாரா­லும் பிரிக்­கவே முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்த வெற்றி உங்­கள் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு. இந்த நான்கு மாவட்­டங்­க­ளில் எல்லா தொகு­தி­க­ளி­லும் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். இருந்­தா­லும் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கே­ணி­யில் மட்­டும் நாம் வெற்றி பெறு­கி­றோம் என்­றால், அதற்கு கார­ணம் நான் கிடை­யாது. அதற்கு முழுக்­கா­ர­ணம் இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள்­தான். இந்த வெற்றி உங்­கள் வெற்றி. ஏனென்­றால், மூன்று நாள்­தான் பிரச்­சா­ரத்­துக்கு வந்­தேன். மக்­க­ளைச் சந்­தித்­தேன். அதற்கு முன்பு ஐந்து வரு­டம் உங்­க­ளு­டன்­தான் இருந்­தேன். `உங்­க­ளு­டன்­தான் இருந்­தேன்’ என்று சொல்­வ­தை­விட நாம் எல்­லாம் ஒன்­றா­கத்­தான் இருந்­தோம். தொகுதி முழு­வ­தும் சுற்­றி­னோம். ஒவ்­வொரு தெரு­வா­கச் சென்­றோம். எந்­தெந்த தெரு­வுக்கு என்ன வேண்­டும், ஒவ்­வொரு வீடாக என்­னென்ன தேவை என்­ப­தைப் பார்த்­துப் பார்த்­துச் செய்­தோம். எனவே, இந்த வெற்­றிக்கு முழுக்­கா­ர­ணம் இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­க­ளா­கிய  நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வெற்­றிக்­காக நீங்­கள் அத்­தனை பேரும் கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். அதற்கு முத­லில் என்­னு­டைய நன்­றியை நான் மீண்­டும் மீண்­டும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.  என்­றைக்­குமே சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி தி.மு.க–வின் கோட்டை என்­பதை நீங்­கள் மீண்­டும் நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எது தவ­றிப்­போ­னா­லும் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி தவ­றிப்­போ­காது என்­பதை மீண்­டும் நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்து வரு­ட­மாக, நமது தொகுதி மட்­டும் இல்லை, தமிழ்­நாட்­டின் எந்த மாவட்­டத்­துக்­குச் சென்­றா­லும் அங்கே என்னை `சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யின் செல்­லப் பிள்ளை’ என்­று­தான் சொல்­வார்­கள். அதை மீண்­டும் நீங்­கள் நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எப்­போ­துமே நான் உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யா­கத்­தான் இருப்­பேன். உங்­கள் வீட்டு செல்­லப் பிள்­ளை­யா­கத்­தான் நிச்­ச­யம் இருப்­பேன். கடந்த முறை ஒரு வெற்­றி­யைக் கொடுத்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் பிறகு, என்னை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆக்­கி­னீர்­கள். நமது தலை­வர் அவர்­கள் எனக்கு அமைச்­சர் பொறுப்பு கொடுத்­தார்­கள். அதன் பிறகு துணை முத­ல­மைச்­சர் பொறுப்பு வரைக்­கும் கொடுத்­தார்­கள். அதற்­குக் கார­ணம் நீங்­கள்­தான். இந்த முறை தலை­வர் அவர்­கள் என்னை எதிர்க்­கட்­சித் தலை­வர் பொறுப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள், மிகப்­பெ­ரிய பொறுப்பு. அதற்­கும் கார­ணம் இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள்­தான், உங்­கள் அன்­பும் உங்­கள் ஆத­ர­வும் இல்­லா­மல் நான் ஒன்­றுமே கிடை­யாது. அதைநிச்­ச­யம் உணர்ந்து என்­னால் முடிந்த அள­வுக்கு நம் தொகு­திக்­கும், உங்­க­ளுக்­கும் என்­னென்ன திட்­டங்­கள் வேண்­டுமோ, அந்­தப் பணி­கள் எல்­லாம் செய்­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எதிர்­பார்க்­காத ஒரு முடிவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த முறை நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வரா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால், மக்­கள் நமக்கு ஒரு மிகப்­பெ­ரிய ஒரு கட­மை­யைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். `எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருங்­கள், எதிர்க்­கட்­சி­யாக நீங்­கள் செயல்­பட வேண்­டும்’ என்று மக்­கள் நம்­மீது நம்­பிக்கை வைத்து, இந்­தப் பொறுப்பை நம்­மி­டம் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இந்த முடிவு உண்­மை­யா­கவே, நாம் எதிர்­பார்க்­காத முடி­வு­தான். நாம் மட்­டும் இல்லை, தமிழ்­நாட்டு மக்­களே எதிர்­பார்க்­காத ஒரு முடி­வு­தான். ஏன் இன்­னும் சொல்­லப்­போ­னால், இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சரே எதிர்­பார்க்­காத ஒரு முடி­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உண்­மை­யான எதிரி யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">களத்­தில் யார் உண்­மை­யான எதிரி என்­பது தெரி­யா­மல், இல்­லாத எதி­ரி­யு­டன் சண்டை போட்­டி­ருக்­கி­றோம். அதை நாம் புரிந்­து­கொண்­டு­தான் ஆக வேண்­டும். எங்கே தவ­ற­விட்­டோம் என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் நம் தவ­றைத் திருத்­திக்­கொண்டு, அடுத்த முறை உண்­மை­யான எதிரி யார் என்­ப­தைக் கண்­டு­பி­டித்து, அதற்­குத் தகுந்த மாதிரி நம் செயல்­பா­டு­க­ளைச் செய்­தோம் என்­றால், நிச்­ச­யம் வெற்­றி­பெ­று­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி மட்­டும் இல்லை, தமிழ்­நாடு முழு­வ­தும் உண்­மை­யான எதிரி யார் என்றே தெரி­யா­மல் கள­மாடி இருக்­கி­றோம். அங்­கே­தான் நாம் தவ­ற­விட்­டு­விட்­டோம். மக்­கள் மீது அதி­கப்­ப­டி­யான தன்­னம்­பிக்­கை­யு­டன் இருந்­து­விட்­டோம். ஊர் ஊரா­கப் போய் ஓட்டு கேட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தெருத் தெரு­வாக ஓட்டு கேட்­டோம். நம் தலை­வர் தமிழ்­நாடு முழு­வ­தும் போய் ஓட்டு கேட்­டார். ஆனால், எங்கே தெரி­யுமா தவ­ற­விட்­டோம்? நம் வீட்­டில் இருக்­கக்­கூ­டிய, நம் குடும்­பத்­தி­ன­ரி­டம் ஓட்டு கேட்க மறந்­து­விட்­டோம். நம் வீட்­டில் இருக்­கக்­கூ­டிய நம் பிள்­ளை­க­ளி­டம், நம் உற­வி­னர்­க­ளி­டம், நம் சாத­னை­க­ளைச் சொல்­லத் தவ­றி­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இனி வரும் காலங்­க­ளில், அந்­தத் தவறை நாம் திருத்­திக்­கொள்ள வேண்­டும். முத­லில் நம் வீட்­டுப் பிள்­ளை­களை அர­சி­யல்­ப­டுத்த வேண்­டும். கலை­ஞ­ரின் திட்­டங்­களை, நாம் கொண்டு வந்த சாத­னை­களை இப்­போது இந்த ஆட்­சி­யில் நடக்­கக்­கூ­டிய அலங்­கோ­லங்­களை எல்­லாம், தின­மும் நம் வீட்­டில் நாம் பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஒரு திட்­ட­மும் கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று இந்­தப் புதிய அரசு பொறுப்­பேற்று 25 நாட்­கள் ஆகி­விட்­டன. உருப்­ப­டி­யாக ஏதா­வது ஒரு திட்­டம் கொண்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று சொல்ல முடி­யுமா? ஒரு திட்­ட­மும் கிடை­யாது. ஏற்­க­னவே பணி­யில் இருக்­கக்­கூ­டிய காவல்­து­றை­யி­ன­ரின் வாக­னத்­துக்கு, வெறும் ஸ்டிக்­கரை மாற்றி ஒட்டி, `சிங்­கப்­பெண் திட்­டம்’ என்று ஒரு திட்­டத்­தைக் கொண்டு வரப்­போ­கி­றோம் என்று சொல்லி, அதை­யும் கொண்­டு­வர முடி­யாத நிலை­மை­யில்­தான் இன்று இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதா­வது ஒரு கூடு­தல் செலவு இல்­லாத ஒரு திட்­டத்­தைக் கூடத் தொடங்கி வைப்­ப­தற்கு வக்­கில்­லாத ஒரு `சோபா மாடல் ஆட்சி’ இன்று நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யோசித்­துப்­பா­ருங்­கள், 2021–இல் நம் தலை­வர் முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்­கும்­போது, முதல் நாள் கையெ­ழுத்­துப் போட்­டார். என்­னென்ன திட்­டங்­கள் தெரி­யுமா கொண்டு வந்­தோம்? மக­ளி­ருக்கு `விடி­யல் பய­ணத் திட்­டம்’ முதல் கையெ­ழுத்­துப் போட்­டார், முதல் நாளி­லேயே கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது இருந்த நிலைமை என்ன என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். நிதி நிலைமை மோசம், கொரோனா இரண்­டா­வது அலை, ஊர­டங்கு. முதல் நாளி­லேயே கையெ­ழுத்­துப் போட்­டார். மக­ளிர் விடி­யல் பய­ணத் திட்­டம் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொரோனா நிவா­ரண நிதி­யாக ஒவ்­வொரு குடும்ப அட்­டைக்­கும் 4,000 ரூபாய் கொடுத்­தார் நம் தலை­வர். ஆவின் பால் லிட்­ட­ருக்கு 3 ரூபாய் குறைத்­தார், பெட்­ரோல் விலையை 2 ரூபாய் குறைத்­தோம். இதெல்­லாம் செய்­தது நம் திரா­விட மாடல் அரசு, நம் கழ­கத் தலை­வர் அவர்­கள். ஆனால் இன்று இந்த சோபா மாடல் அரசு ஏதா­வது ஒரு திட்­டத்தை நிறை­வேற்றி இருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">4–ஆம் தேதிக்கு பிறகு கூத்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் இந்­தத் தேர்­த­லில் சில லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில்­தான் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். நம்மை விட 17 லட்­சம் வாக்­கு­கள்­தான் அதி­கம் பெற்று, இன்று இந்த ஆட்சி அமைந்­தி­ருக்­கி­றது. அவர்­கள் எப்­படி ஆட்சி அமைத்­தார்­கள், நான்­காம் தேதிக்­குப் பிறகு என்­னென்ன கூத்­து­கள் நடந்­தன என்­ப­தை­யெல்­லாம் நீங்­கள் அத்­தனை பேரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள். நான்­காம் தேதி இரவு, வெற்­றி­பெற்ற நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் தமிழ்­நாட்­டில் இருந்து, எல்லா மாவட்­டங்­க­ளில் இருந்­தும் கிளம்பி சென்­னைக்கு வரு­வ­தற்கு, தலை­வ­ரைப் பார்ப்­ப­தற்கு, பேருந்­தில் பய­ணச்­சீட்டு, தொடர்­வண்­டி­யில் பய­ணச்­சீட்டு, விமா­னத்­தில் பய­ணச்­சீட்­டைப் பதிவு செய்­து­கொண்டு இருந்­தார்­கள். ஆனால், இன்று இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், யாருக்­கும் தெரி­யா­மல் திருட்­டுத்­த­ன­மாக எங்கே சென்று தங்­க­லாம் என்று சொகுசு விடு­தி­க­ளில் அறை பதிவு செய்­து­கொண்டு இருந்­தார்­கள். இது­தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கும் மற்ற கட்­சி­க­ளுக்­கும் உள்ள வித்­தி­யா­சம். இது­தான் ஒரு தொண்­டன் தலைமை மீது வைத்­துள்ள நம்­பிக்கை. எந்­தக் காலத்­தி­லும்  அந்த `ரிசார்ட் பாலி­டிக்ஸ்’ அர­சி­யலை நம் தலை­வர், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றுமே செய்­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மாக, தேர்­தல் முடி­வு­கள் முழு­மை­யாக வரு­வ­தற்கு முன்பே நம்­மோடு கூட்­டணி வைத்­தி­ருந்த காங்­கி­ரஸ் இயக்­கம், துரோ­கக் கூட்­டம் நம் பேரைச் சொல்லி, நம் தலை­வர் முகத்­தைக் காட்டி வாக்­கு­க­ளைப் பெற்று, தலை­வ­ரைப் பார்த்து ஒரு நன்­றி­கூ­டச் சொல்­லா­மல், ஓடிப்­போய்­விட்­டது. அந்த நன்­றி­கெட்ட கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை தி.மு.க. காரன் என்­றுமே மறக்க மாட்­டான், மறக்­கக்­கூ­டாது. தமிழ்­நாட்டு மக்­க­ளும் மறக்க மாட்­டார்­கள். ஐந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க வைத்து, ஆட்சி அமைத்­தார்­கள். அது­மட்­டு­மில்லை, நம் கூட்­ட­ணி­யில் வெற்­றி­பெற்ற இன்­னும் சில கூட்­ட­ணிக் கட்­சி­கள் எல்­லாம், நம் தலை­வ­ரி­டம் வந்து சொல்­லி­விட்­டுச் செல்ல, தலை­வர்­தான் `சென்று வாருங்­கள்’ என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் தய­வால்­தான் இன்று இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது. ஆனால் என்ன,  முத­லில் வெளி­யில் இருந்து ஆத­ரவு என்று சொல்­லி­விட்­டுப் போனார்­கள், அங்கே சென்­ற­வு­டன், ஆசை யாரை விட்­டது? இந்த முத­ல­மைச்­சர் எங்கே சென்­றா­லும், முத­லில் சோபா போகும், சோபா­விற்­குப் பின்­னா­டியே முத­ல­மைச்­சர் போவார். இப்­போது அமைச்­ச­ர­வை­யி­லும் இடம் பெற்­று­விட்­டார்­கள், அவர்­க­ளுக்­கும் வாழ்த்­து­கள். அவர்­கள் எல்­லாம் அமைச்­சர் ஆவ­தற்கு ,முன்பே சட்­ட­மன்­றத்­தில் அவர்­க­ளுக்கு வாழ்த்து சொன்­ன­வன்­தான் இந்த எதிர்க்­கட்­சித் தலை­வர். இதெல்­லாம் நடக்­கும் என்று எனக்­குத் தெரி­யும். இப்­படி நம் தலை­வ­ரின் உழைப்­பால் வெற்­றி­பெற்ற, அந்­தக் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன்­தான் இன்று இந்த சோபா மாடல் ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சத்­தி­ய­மாக 
தெரி­யா­துங்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி 108 இடங்­க­ளில் வெற்றி பெற்­றி­ருக்­கி­றார்­கள். இன்­னொன்று தெரி­யுமா? இந்த 108 தொகு­தி­க­ளில், சில தொகு­தி­க­ளைத் தவிர, வாக்கு செலுத்­திய மக்­க­ளுக்கு யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று தெரி­யாது. இன்­னும் சொல்­லப்­போ­னால், மக்­க­ளுக்கு இல்லை, இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­ச­ருக்கே யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், யார் அமைச்­சர் என்று தெரி­யாது. சவால் விடு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான்கு நாட்­க­ளுக்கு முன்பு, தொலைக்­காட்­சி­க­ளில் செய்­தி­யைப் பார்த்­தி­ருப்­பீர்­கள், திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் இரவு முழு­வ­தும் மின்­சா­ரம் இல்லை. பொது­மக்­கள் அத்­தனை பேரும் தெரு­விற்கு வந்து போராட்­டத்­தில் இறங்­கி­விட்­டார்­கள். செய்­தி­யா­ளர்­கள் சென்று அவர்­க­ளி­டம், கேட்­கி­றார்­கள் ``ஏன் இப்­பொ­ழுது சாலை மறி­யல் செய்­கி­றீர்­கள்? சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்து கோரிக்கை வைக்க வேண்­டி­ய­து­தானே?’’ என்று, அப்­பொ­ழுது அந்த மக்­கள் எல்­லாம் சொல்­கி­றார்­கள், ``யார் எங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்றே சத்­தி­ய­மாக எங்­க­ளுக்­குத் தெரி­யா­துங்க. தெரிந்­தால்­தானே அவர்­கள் வீட்­டுக்­குச் சென்று நாங்­கள் கேட்க முடி­யும்?” என்று கேட்­கி­றார்­கள். இது­தான் இந்த சோபா மாடல் அர­சின் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஓட்டு போட்ட மக்­க­ளுக்கு அவர்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் யார் என்று தெரி­ய­வில்லை. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­கள் எந்­தத் தொகு­தி­யில் நின்று ஜெயித்­தோம் என்று தெரி­ய­வில்லை. நேற்று ஒரு அமைச்­சர் நன்றி சொல்­கி­றார், அங்கே இருக்­கக்­கூ­டிய மக்­கள் எல்­லாம் சொல்­கி­றார்­கள், ``இது உங்­கள் தொகுதி கிடை­யா­துங்க, நாங்­கள் உங்­க­ளுக்கு ஓட்­டே­போ­ட­வில்லை என்று. நீங்­கள் பக்­கத்­துத் தொகுதி’’ என்று. இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட சோபா மாடல் ஆட்­சி­தான் இன்று தமிழ்­நாட்­டில் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் நான் சொல்­ல­வில்லை, உண்­மை­யா­கவே நடந்­தது தொலைக்­காட்­சி­க­ளில் நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள்.  அதி­லும் இப்­பொ­ழுது அவர்­கள் வேட்­பா­ள­ராக அறி­வித்­த­தெல்­லாம் யார் என்று தெரி­யுமா? ஜெயித்­த­வர்­கள் எல்­லாம் யார் என்று தெரி­யுமா? இப்­பொ­ழுது அமைச்­ச­ராக இருக்­கி­ற­வர்­கள் எல்­லாம் யார் என்று தெரி­யுமா? போதைப்­பொ­ருள் விற்­ற­வர், கஞ்சா விற்­ற­வர், மனை­வி­யைக் கொடு­மைப்­ப­டுத்தி  அடித்­த­வர், சினிமா படத்­துக்­குத் திருட்­டுத்­த­ன­மாக டிக்­கெட் விற்­ற­வர், புதிய திரைப்­ப­டத்­தின் திருட்டு வி.சி.டி விற்­ற­வர், ஜோசி­யத்­தால் புற்­று­நோ­யைக்  குணப்­ப­டுத்த முடி­யும் என்று போலி மருத்­து­வம் பார்த்­த­வர், ஆர்.எஸ்.எஸ்–­இல் சேர்ந்து காக்கி கால்­சட்டை போட்­டுச் சுற்­றி­ய­வர், வாச்­சாத்தி கொடு­மைக்கு முக்­கி­ய­மான கார­ண­மாக இருந்­த­வர், வேட்­பா­ளர் அறி­விப்­பிற்கு முந்­தின நாள் வேறு கட்­சி­யி­லி­ருந்து தாவி குதித்­துப் போன­வர், இவர்­கள் எல்­லாம் இன்று ஆளுங்­கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அமைச்­சர்­கள். இவர்­கள் பெய­ரும் முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">லாட்­டரி சீட்டு விற்­ற­வரா? இதெல்­லாம் முன்­னா­டியே தெரிந்­தி­ருந்­தால் சரி­யாக சூதா­ன­மாக இருந்­தி­ருக்­க­லாம். இதெல்­லாம் தேர்­தல் முடி­வு­க­ளுக்­குப் பிற­கு­தான் நமக்கே தெரி­கி­றது. இன்­னொன்று கொடுமை என்ன தெரி­யுமா? இந்த ஆட்­சி­யில் அமைச்­சர்­க­ளாக வந்­தி­ருக்­கி­றார்­கள் அல்­லவா, நிய­மிக்­கப்­பட்­டி­ ருக்­கி­றார்­கள் அல்­லவா, எந்த அமைச்­ச­ருக்கு எந்­தத் துறை என்று அமைச்­ச­ருக்கே தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு அமைச்­சர் ``நான் சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சரா அல்­லது சுற்­று­லாத்­துறை அமைச்­சரா?’’ என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கேட்­கி­றார். இந்த மாதிரி ஒரு கேடு­கெட்ட ஆட்­சியை எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? என்ன பொறுப்பு என்று, அமைச்­ச­ருக்கே தெரி­ய­வில்லை எந்­தத் துறை என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">`ஒரு கோமாளி அரண்­ம­னைக்­குப் போவ­தா­லேயே, அவன் அர­சன் ஆகி­விட மாட்­டான். அந்த அரண்­ம­னை­தான் சர்க்­கஸ் கூடா­ர­மாக மாறி­வி­டும்’ என்று ஒரு பழ­மொழி சொல்­வார்­கள்.  இன்று அது நம் கண் முன்­னாடி நடந்­து­கொண்டு இருக்­கி­றது. ஆனால் ஒரு கோமாளி இல்லை, எல்­லாமே கோமா­ளி­கள்­தான். ரம்மி விளை­யாட்­டில்­தான் சொல்­வார்­கள், பதி­மூன்­றும் ஜோக்­க­ராக வந்­தால் என்ன செய்­வது’ என்று, அந்த நிலை­மை­யில் இன்று இந்த `சோபா மாடல் அரசு’ நடந்­து­கொண்டுஇருக்­கி­றது. இதைத்­தான் நம் தலை­வர் `இங்கு அமைந்­தி­ருப்­பது ஒரு மாயா­ஜால, கவர்ச்சி ஆட்சி அமைந்­தி­ருக்­கி­றது’’ என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு நம் `சி.எம். சார்’ அவர்­கள், நன்றி சொல்­வ­தற்­காக திருச்சி கிழக்­குத் தொகு­திக்­குச் சென்­றார். இங்கே பெரம்­பூ­ரில் ஜெயித்­தி­ருக்­கி­றார், இங்கே இருக்­கக்­கூ­டிய பெரம்­பூ­ருக்­குச் சென்று நன்றி சொல்­வ­தற்கு வக்­கில்லை. இது­வும் நான் சொல்­லித்­தான் சென்­றார், சட்­ட­மன்­றத்­தில் நான் சொன்­னேன், ``திருச்­சிக்­குச் சென்று முத­லில் நன்றி சொல்­லுங்­கள்’’ என்று, 20 நாட்­க­ளுக்கு முன்­னாடி சொன்­னேன். அங்கு சென்­றாரே நன்றி சொன்­னாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது­வாக ஒரு முத­ல­மைச்­சர் ஆன­தற்­குப் பிறகு, நம் தலை­வர் இந்த ஐந்து வரு­டத்­தில் எந்த மாவட்­டத்­துக்­குச் சென்­றா­லும் அந்த மாவட்­டத்­துக்­குப் புதிய திட்­டங்­களை அறி­விப்­பார். ஏதா­வது ஒரு திட்­டத்தை அறி­வித்­தாரா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>