<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="153,761,725,1263" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 06 2026 03:34:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06062026-CHN-01" position.sequence="01" ex-ref="06062026-CHN-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">‘ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">ரூ.12,698 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,923 கோடி மட்டுமே ஒதுக்கீடு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு – அக்கறை காட்டாத த.வெ.க. அரசு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூன் 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஜி ராம் ஜி திட்­ட­த்தின் கீழ் மாநி­லங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­ட­தால் தமி­ழ­கத்­திற்கு வெறும் ரூ.3,923 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட உள்­ளன. ஆனால், உத்­த­ர­பி­ர­தே­சம் மற்­றும் குஜ­ராத் போன்ற பாஜ ஆளும் மாநி­லங்­க­ளில் நிதி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தென் மாநி­லங்­களை ஒன்­றிய அரசு ஓரம் கட்டி இருப்­பது வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­யுள்­ளன. ஆனால் தவெக அரசு இது­கு­றித்து கருத்து தெரி­விக்­கா­மல் அமை­தி­யாக இருப்­பது ஏன் என்ற கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய ஊரக வளர்ச்சி அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை­வாய்ப்பு உறுதி திட்­டம் என்று அழைக்­கப்­பட்­டும், பொது­மக்­க­ளி­டம் பர­வ­லாக நூறு நாள் வேலை வாய்ப்­புத்­திட்­டம் என அறி­யப்­பட்டு வந்­த­தின் பெய­ரை­யும் அதன் பழைய கட்­ட­மைப்­பு­க­ளை­யும் மாற்றி நாடா­ளு­மன்­றத்­தில் ‘ஜி ராம் ஜி’ திட்­டம் என்ற ஒரு வரைவு சட்­டம் பா.ஜ. அரசு கொண்டு வந்து இரு அவை­க­ளின் ஒப்­பு­த­லு­டன் நிறை­வேற்­றின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதனை பல மாநி­லங்­க­ளில் ஆளும் கட்­சி­யி­னர் எதிர்த்­த­னர். குறிப்­பாக, தமி­ழக முதல்­வ­ராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜன.23ம் தேதி சட்­டப்­பே­ர­வை­யில் இத்­திட்­டத்­தினை எதிர்த்து தனி தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­னார். இது அனைத்து கட்­சி­க­ளின் ஆத­ர­வோடு ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டன. தமிழ்­நாட்­டைப் போலவே பஞ்­சாப், தெலங்­கானா போன்ற மாநி­லங்­க­ளும் இப்­பு­திய சட்­டத்­திற்கு எதி­ராக தங்­க­ளின் சட்­ட­மன்­றங்­க­ளில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சுருக்­க­மாக கூறி­னால், தமிழ்­நாட்­டின் கிரா­மப்­புற ஏழை மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை பாது­காக்­க­வும், மாநி­லத்­தின் நிதி உரி­மையை நிலை­நாட்­ட­வும் ஒன்­றிய அர­சுக்கு எதி­ராக தன் வலு­வான சட்­டப்­பூர்வ எதிர்ப்­பைச் சட்­ட­மன்­றத்­தின் வாயி­லாக மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு பதிவு செய்­தன. தற்­போது இந்த ஜி ராம் ஜி சட்­டம் இந்­தி­யா­வின் கூட்­டாட்சி தத்­து­வத்­திற்கு கடு­மை­யான சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்­த­வ­கை­யில் 16வது நிதி ஆணைய பரிந்­து­ரை­யின் படி மாநி­லங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு திருத்தி அமைக்­கப்­பட்டு ஒன்­றிய அர­சின் ஊரக வளர்ச்­சித்­துறை அமைச்­ச­கம் மாநி­லங்­ களுக்கு தற்­போது அனுப்­பிய வரைவு அறிக்கை அண்­மை­யில் அனுப்பி வைத்­துள்­ளது. அதில் ஜி ராம் ஜி திட்­டத்­தில் ஒன்­றிய அரசு ஒதுக்­கும் ஒட்­டு­மொத்த நிதி ரூ.95,692 கோடி­யில் தமி­ழத்­திற்கு வெறும் ரூ.3,926 கோடி மட்­டும் கிடைக்க உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கிரா­மப்­புற வேலை­வாய்ப்­புத் திட்­டத்­திற்­காக ஒன்­றிய அரசு வழங்­கும் ஒட்­டு­மொத்த நிதி­யில், தமிழ்­நாடு இது­வரை 10 சத­வீத பங்­கைப் பெற்று முன்­ன­ணி­யில் இருந்­தது. ஆனால், புதிய கணக்­கீட்டு முறை­யின்­படி, தமிழ்­நாட்­டின் பங்கு 4.10 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. முந்­தைய காலங்­க­ளில் ஒப்­பி­டு­கை­யில் தமிழ்­நாட்­டின் எதிர்­கால நிதி உரிமை, ஒரே­ய­டி­யாக பாதிக்­கும் கீழ் சரிந்­துள்­ளதை இந்த தர­வு­கள் காட்­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மின்றி, ஜிராம்ஜி திட்­டத்­தின் கீழ் ஆந்­தி­ரா­வுக்கு 8.8 சத­வீ­தம் வழங்­கப்­பட்ட நிலை­யில் 4.20 சத­வீ­த­மும், கேர­ளா­வுக்கு 3.94 சத­வீ­தம் வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில் 2.38 சத­வீ­த­மும், தெலங்­கா­னா­வுக்கு 3.94 சத­வீ­தம் வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில் 2.17 சத­வீ­த­மும் குறைப்­பட்­டுள்­ளது. இத­னால் தென் மாநி­லங்­கள் ஓரங்­கட்­டப்­பட்டு இருப்­பது வெட்­ட­வெ­ளிச்­ச­மாகி உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் பா.ஜ. ஆளக்­கூ­டிய உத்­த­ர­பி­ர­தே­சத்­திற்கு ஒதுக்­கப்­ப­டும் நிதி 9.67 சத­வீ­தத்­தில் இருந்து 17.62 சத­வீ­த­மும், பீகா­ருக்­கான நிதி 6.10 சத­வீ­தத்­தில் இருந்து 9.95 சத­வீ­த­மும், மராட்­டிய மாநி­லத்­திற்கு நிதி 3.99 சத­வீ­தத்­தி­லி­ருந்து 6.44 சத­வீ­த­மும், குஜ­ராத்­துக்கு அளிக்­கப்­ப­டும் நிதி 1.49 சத­வீ­தத்­தில் இருந்து 3.76 சத­வீ­த­மும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், இந்த மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட நிதி ஒதுக்­கீடு ஜூலை 1ம் தேதி முதல் அம­லுக்கு வரும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே, மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்பு திட்­டத்­திற்­கான நிலுவை தொகை­யான ரூ.4,034 கோடியை (கூலி மற்­றும் பொருட்­கள் பங்கு) ஒன்­றிய அரசு நீண்ட நாட்­க­ளாக தமிழ்­நாட்­டிற்கு வழங்­கா­மல் இழுத்­த­டித்­த­போது திமுக சார்­பில் மாநி­லம் தழு­விய பிர­மாண்ட போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. கல்வி நிதியை சமக்ர சிக்‌ஷா அபி­யான் முடக்­கு­வது, சென்னை மெட்ரோ ரயில் திட்­டத்­திற்­கான நிதியை தரா­மல் தாம­திப்­பது மற்­றும் வரிப் பகிர்­வில் தமிழ்­நாட்­டிற்கு தகுந்த பங்­க­ளிக்­கா­மல் புறக்­க­ணிப்­பது என பல்­வேறு தளங்­க­ளில் ஒன்­றிய அரசு காட்­டும் மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யை  கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் மக்­கள் மத்­தி­யில் வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">12 வருடத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ரூ.87 ஆயிரம் கோடி நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டு மொத்தமாக ரூ.87,639 கோடியை பெற்றுள்ளது. நாட்டின் மொத்த நிதியில் 10 சதவீதம் பங்கினை தமிழ்நாடு மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போதைய புதிய சட்ட மாற்றங்கள் இந்த நிதிப் பகிர்வை பாதியாகக் குறைத்துள்ளன. கடந்த காலங்களை பொறுத்தவரை 2023-–24 நிதியாண்டில் ரூ.12,698 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.10,156 கோடி, 2025-26 நிதியாண்டில் ரூ.5,878 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பி டத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்­வர் விஜய் உச்ச நீதி­மன்­றத்­தில் சட்­டப் போராட்­டம் நடத்­து­வாரா அல்­லது போராட்­டங்­களை முன்­னெ­டுப்­பாரா என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டும். ஆனால் தமி­ழ்நாடு அரசு அமை­தி­யாக இருப்­பது பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>