<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,777" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 16:43:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="06062026-MDU-07" position.sequence="07" ex-ref="06062026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">ஒவ்­வொரு நாளும் கொலை – பாலி­யல் வன்­மு­றை­கள்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">பழி சொல்­லும் அர­சி­யலை விட்­டு­விட்டு – பிரச்­சி­னைக்கு தீர்வு காணுங்­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">சென்­னை­யில் - முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாள் விழா­வில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">கழக துணைப் பொதுச் செய­லா­ளர்  கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kanimozhi462_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 103-ஆவது பிறந்­த­நாள் சிறப்­பு­டன் கொண்­டா­டப்­பட்­டது. இதனை முன்­னிட்டு, தி.மு.க. மக­ளி­ரணி சார்­பில் ‘வெல்­லும் தமிழ்ப்­பெண்­க­ளுக்கு’ நன்றி பாராட்டு விழா முத்­த­மிழ்ப் பேர­வை­யின் டி.என். ராஜ­ரத்­தி­னம் கலைய­ரங்­கத்­தில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வி­ழா­வில் தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் பிறந்த நாளில் தேர்­தல் நேரத்­திலே தமிழ்­நாடு முழு­வ­தும் எல்லா பகு­தி­க­ளி­லும்,  இடங்­க­ளி­லும் தேர்­தல் களப்­ப­ணி­யில் மிகச் சிறப்­பாக பணி­யாற்­றிய வெல்­லும் தமிழ் பெண்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கக்­கூ­டிய வகை­யிலே மக­ளிர் அணி­யின் சார்­பிலே இவ்­வி­ழாவை  கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். நமக்கு நம்­மு­டைய உரி­மை­க­ளுக்­காக போராட வேண்­டும் என்று சொல்­லித் தந்­த­வர் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த சமூ­கம், பெண்­க­ளைச் சுற்றி வடி­வ­மைத்­தி­ருந்த அத்­தனை கண்­கா­ணிப்­பை­யும், வேலி­க­ளை­யும் உடைத்­துக்­கொண்டு உங்­க­ளு­டைய உரி­மை­க­ ளுக்­காக, இலக்­கு­க­ளுக்­காக நீங்­கள் வாழ வேண்­டும் என்று கூறி­ய­வர் தந்தை பெரி­யார். அதை தனது ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­த­வு­டன் நிறை­வேற்­றிக் காட்­டிய தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நமது உழைப்பை நாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அங்­கீ­க­ரிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாம் எல்­லோ­ரும் நம்மை யாரும் பாராட்ட மாட்­டார்­களா என சிந்­தித்து இருப்­போம். இன்­றைக்கு இந்­தப் பாராட்டு விழாவை நடத்­து­கி­றோம் என்­றால், வேறு யாரும் நம்­மைப் பாராட்­டப் போவ­தில்லை என்­ப­தால் நாம்­தான் நம்­மைப் பாராட்­டிக் கொள்ள வேண்­டும். நமது உழைப்பை முத­லில் நாம் அங்­கீ­க­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மக­ளிர் அணி பெண்­கள், ஒவ்­வொரு தேர்­த­லி­லும் வீடு வீடா­கச் சென்று மக்­களை சந்­தித்து வாக்­குக் கேட்­டார்­கள். ஆனால் இந்த உழைப்பை யாரும் தனி­யாக அழைத்­துப் பாராட்­டு­வ­தில்லை. அத­னால்­தான், யார் பாராட்­டி­னா­லும் சரி, இல்­லா­விட்­டா­லும் சரி நமது உழைப்பு என்­ன­வென்று நமக்­குத் தெரி­யும் என்ற உணர்­வோடு, நம்மை நாமே பாராட்­டிக் கொள்­ள­லாம் என்று முடிவு செய்­தோம். அத­னா­லேயே, தலை­வர் கலை­ஞர் பிறந்­த­நாள் நிகழ்ச்­சி­யில், தமிழ்­நாடு முழு­வ­தும் மக­ளிர் அணி­யின் சார்­பில் இந்­தப் பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒரு குடும்­பத்­தில் பெண்­க­ளின் உழைப்பு எப்­படி இருக்­கி­றது? குடும்­பத்தை நடத்­து­வது, குழந்­தை­களை வளர்ப்­பது, உற­வு­க­ளைப் பேணு­வது, பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் உணர்ச்சி ரீதி­யா­க­வும்குடும்­பத்­தைத் தாங்­கிப் பிடிப்­பது என இவை அனைத்­தும் ஒரு பெண்­ணின் கடமை என்று மட்­டுமே இந்­தச் சமூ­கம் பார்க்­கி­றது. ஆனால் அவ­ளது உழைப்பை ஒரு பொருட்­டா­கவே மதிப்­ப­தில்லை. அவ­ளது உரி­மை­க­ளைப் பற்றி பேசக்­கூட யாரும் தயா­ராக இல்லை. அவ்­வா­றான சூழ­லில் நமது உரி­மைக்­காக குரல் எழுப்­பி­ய­வர் தந்தை பெரி­யார். அதன்­பின், ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்த தலை­வர் கலை­ஞர், பெண்­க­ளுக்­கான உரி­மை­க­ளைச் சட்­டங்­க­ளா­கவே உரு­வாக்­கி­னார். குடும்­பத்­தில் பெண்­கள் செய்­யும் எத்­த­னையோ தியா­கங்­களை அங்­கீ­க­ரிக்­கும்­வி­த­மாக குடும்­பச் சொத்­தில் பெண்­ணுக்­கும் பங்கு உண்டு என்ற உரி­மை­யைச் சட்­டப்­படி உறுதி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின் தொலை­நோக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இங்கே பேசும்­போது, பல­ரும் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் திட்­டங்­கள் ஒவ்­வொன்­றும் தொலை­நோக்கு பார்­வை­யு­டன் உரு­வாக்­கப்­பட்­டவை என்­பதை குறிப்­பிட்­டார்­கள். அதி­லும், தலை­வர் கலை­ஞர் இல்­லை­யென்­றால், நாம் எல்­லோ­ரும் இன்று இந்த மேடை­யில் இருந்­தி­ருக்க மாட்­டோம் என்­ப­து­தான்உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஏனென்­றால், தலை­வர் கலை­ஞர் ஒவ்­வொரு சிறு கிரா­மத்­தி­லும், ஒவ்­வொரு பகு­தி­யி­லும் பள்­ளிக்­கூ­டங்­களை உரு­வாக்­கா­விட்­டால், பெண்­க­ளைப் படிக்க அனுப்­பும் தைரி­யம் பெற்­றி­ருக்க மாட்­டார்­கள். பெண்­கள் படிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே திரு­மண உத­வித் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். பெண்­கள் சமைத்து முடித்து வெளியே வர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே சமை­யல் எரி­வாயு இணைப்பு வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மின்றி படித்த பெண்­கள் சுய­மா­கச் சிந்­திக்க வேண்­டும், சுய­மாக நிற்க வேண்­டும் என்­ப­தற்­காக அர­சுப் பணி­க­ளில் பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு உரு­வாக்­கித் தந்­தார். இன்று நமது கழக தலை­வர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில் அந்த இட ஒதுக்­கீட்டை இன்­னும்அதி­கப்­ப­டுத்தி, பெண்­க­ளுக்கு அதிக வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றார். இந்த அத்­தனை திட்­டங்­க­ளும் ஒரே நோக்­கத்­திற்­காக உரு­வா­னவை. அது பெண்­கள் தங்­கள் உரி­மை­க­ளுக்­கா­கப் போராட வேண்­டும், தங்­கள் உரி­மை­க­ளைப் பாது­காக்க வேண்­டும். தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் என்ற வரி­சை­யில்இந்­தப் பெரும்­பா­ரம்­ப­ரி­யத்­தைத் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நமது அண்­ணன் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்சி, பெண்­க­ளுக்­கான ஆட்­சி­யாக, பெண்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­தும் ஆட்­சி­யாக திகழ்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய தி.மு.க. அரசு அடி­மட்­டத்­தில் இருக்­கும் எங்­கள் வீட்­டுப் பிள்­ளை­கள் படிக்க வேண்­டும், அவர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்­டும், அவர்­கள் சுய­மாக வாழ வேண்­டும் என்­ப­தற்­காக உழைக்­கும் ஆட்சி. இது பெண்­க­ளின் முன்­னேற்­ றத்­திற்­கா­க­வும், சமூ­கத்­தின் மாற்­றத்­திற்­கா­க­வும் உரு­வான ஆட்சி. இந்த உணர்­வோடு, பெரு­மை­யோடு நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வோம். இதை எத்­தனை சவால்­கள் வந்­தா­லும், எத்­தனை தோல்­வி­கள் சந்­தித்­தா­லும் நாம் தலை நிமிர்ந்து சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த சமூ­கத்­தில் தலை­வர்கலை­ஞர் அவர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பார்க்­கும்­போது, அவர் கொண்டு வந்த திட்­டங்­கள் எண்­ணற்­றவை. அவற்றை எவ்­வ­ளவு நேரம் எண்­ணி­னா­லும் முடி­யாது. இன்­றைக்­கும், நாளைக்­கும், நாளை மறு­நா­ளும் எண்­ணிக்­கொண்டே இருக்­க­லாம். அந்த அள­வுக்கு விரி­வான, அனை­வ­ரை­யும் தழு­விய திட்­டங்­களை அவர் செய்து தந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மாக, இந்­தச் சமூ­கம் ஒதுக்கி வைத்­தி­ருந்த, யாரும் கண்­டுக்­கொள்­ளாத பிரி­வி­ன­ரை­யும் அவர் அர­வ­ணைத்­தார். மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­கள், தொழு­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், பிச்­சைக்­கா­ரர்­கள் என்று ஒதுக்­கப்­பட்ட அனை­வ­ரை­யும் தனது ஆட்­சி­யில் உள்­ள­டக்­கிய நல்­லாட்­சியை வழங்­கி­னார். அவர்­க­ளுக்­கெல்­லாம் தகுந்த திட்­டங்­களை உரு­வாக்கி, சமூ­கத்­தின் அங்­க­மாக மாற்ற வேண்­டும் என்று சிந்­தித்த ஒரே தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால், தலை­வர் கலை­ஞர் பற்றி பேசும்­போதுபாராட்­டு­களை விட விமர்­ச­னங்­களே அதி­கம் வரு­கின்­றன. நான் ரீல்ஸ் பார்க்­கும்­போது அடிக்­கடி வரும் ஒரு காட்­சியை இங்கே நினை­வு­கூர விரும்­பு­கி­றேன். தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் தலை­வர் கலை­ஞர் ஒரு பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யில், நாம் யாருக்­கெல்­லாம் நல்­லது செய்­கி­றோமோ, அவர்­கள் நமக்கு நன்­றி­யோடு இருப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கக் கூடாது என்று பதி­ல­ளித்­ததை இளை­ஞர் நினை­வுக்­கூ­ரு­வர். அந்த எதிர்­பார்ப்பு இல்­லா­ம­லேயே, அவர்­களை மேம்­ப­டுத்­து­வ­து­தான் நமது கடமை என்று கலை­ஞர் கூறி­யி­ருந்­தார் என்­ப­தைச் சொல்லி, தனது சொந்த அனு­ப­வத்­தைப் பகிர்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அந்த இளை­ஞர் ஒரு முன்­னே­றிய சமூ­கத்­தைச் சேர்ந்த, முதல் தலை­முறை பட்­ட­தாரி. அவ­ரது குடும்­பத்­தி­னர் உனக்கு கல்­விக்­கான உத­வித்­தொகை கிடைக்­காது, உயர்­சா­தி­யைச் சேர்ந்த நீ எதற்கு விண்­ணப்­பிக்­கி­றாய்?கலை­ஞர் உங்­க­ளுக்­குக் கொடுக்க மாட்­டார் என்றுதடுத்­தார்­கள். ஆனா­லும் அவர் விண்­ணப்­பித்­த­தும் கல்­விக்­கான உத­வித்­தொகை கிடைத்­தது.  மொத்­தம் 80,000 ரூபாய்க்கு மேல் வழங்­கப்­பட்­ட­தன்­மூ­லம் தனது கல்­வியை தொடர்­கி­றார். அவ­ரது சொந்­தக்­கா­ரர்­கள், குடும்­பத்­தி­னர் என யாரும் ஒரு நாளும் கலை­ஞர் நல்­லது செய்­தார் என்று சொல்­ல­வில்லை. அவர் இறந்­த­போது கூட, நன்­றி­யு­ணர்­வோடு பேசா­மல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோ­டு­தான் பேசி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இறு­தி­யில் என் உற­வி­னர்­கள் யாரும் எனக்கு உத­வ­வில்லை. ஆனால் கலை­ஞர் கொடுத்­தார் என இளை­ஞர் சொன்­னார். இது­தான் தலை­வர் கலை­ஞர். எதிர்­பார்ப்பு இல்­லா­மல், நன்­றியை எதிர்­பார்க்­கா­மல், இந்த மக்­க­ளுக்­காக உழைத்த ஒரு தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எழி­லன் பேசும்­போது, தேர்­த­லில் ஆட்சி பொறுப்பை இழந்த பிறகு மாலை நேரத்­திலே கலை­ஞர் அவர்­கள் அமை­தி­யாக உட்­கார்ந்து பிடித்த உணவை சாப்­பிட்­டுக் கொண்­டி­ருப்­பார். அந்த சாதா­ர­ண­மான, அமை­தி­யான தோற்­றம்­தான் அவ­ரது மாண்பு. இன்று தேர்­தல் முடி­வு­கள் 4, 5 மணி நேரத்­தில் தெரிந்­து­வி­டு­கின்­றன. ஆனால் அந்­தக் காலத்­தில் வாக்கு எண்­ணிக்கை முடிய பல மணி நேரங்­கள் ஆகும். இருந்­தா­லும், தலை­வர் முடி­வு­கள் நமக்கு சாத­க­மில்லை என்­பதை அறிந்த பிற­கும், தனது இயக்­கத் தோழர்­க­ளு­டன் அமை­தி­யாக அமர்ந்து, அடுத்த கட்­டத்­தைப் பற்றி பேசு­வார். அந்த மன உறுதி, அந்த பொறு­மையே அவரை ஒரு உண்­மை­யான தலை­வ­ராக்­கி­யது. தேர்­தல் போக்கு நமக்கு சாத­க­மாக இல்லை என்­பது தெரிந்த பிற­கும், தன்­னைச் சுற்றி இருப்­ப­வர்­களை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தில் தலை­வர் கலை­ஞர் மிகுந்த கவ­ன­மாக இருப்­பார். யாரும் சோகத்­தில் ஆழ்ந்­து­வி­டக் கூடாது, யாரும் விரக்­தி­யில் விழக்­கூ­டாது என்­ப­தற்­காக அந்த இடத்­தையே கல­க­லப்­பாக மாற்­றி­டு­வார். அவர் வெற்­றியை மட்­டு­மல்ல, தோல்­வி­யை­யும் ஒரு கொண்­டாட்­ட­மாக மாற்­றிய தலை­வர். வெற்­றி­யில் உற்­சா­க­மும், தோல்­வி­யில் உறு­தி­யும் காட்­டிய மாபெ­ரும் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கொள்­கை­யில் உறு­தி­யோடு நின்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தோல்வி நம்மை வீழ்த்த முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கொள்­கை­யில் உறு­தி­யோடு நின்­றால், எந்த இக்­கட்­டும், எந்­தத் தோல்­வி­யும் நம்மை வீழ்த்த முடி­யாது. எது வந்­தா­லும் அதைத் தாண்ட முடி­யும் என்­பதை ஒரு தந்­தை­யாக அவ­ரி­டம் நான் கற்­றுக்­கொண்ட மிகப்பெரிய பாடம்.  எந்த நேரத்­தி­லும், எந்­தச் சூழ­லி­லும், கொள்­கையை விட்­டுக்­கொ­டுக்­கா­மல், அதைத் தக்க வைத்து போராட வேண்­டும் என்­பதை தனது வாழ்­நாள் முழு­வ­தும் செய்­தி­யாக நமக்கு சொல்­லித் தந்­த­வர் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அப்­ப­டிப்­பட்ட மாபெ­ரும் தலை­வ­ரின் பிறந்­த­நா­ளில் இந்த உணர்­வோடு, உறு­தி­யோடு இங்கே நாம் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டில் எந்த ஆட்சி மாற்­றம் வந்­தா­லும், மாற்­றம் வந்­து­விட்­டது என்­பார்­கள். எனக்கு ஆட்சி மாற்­றத்­தைப் பற்றி பெரிய கவ­லை­யில்லை. எனக்கு இன்­னும் புரி­யாத ஒரு முக்­கி­ய­மான விஷ­யம் என்­ன­வென்­றால் ஒரு புதிய கட்சி ஆட்சி பொறுப்­பேற்­றுக் ­கொள்­கி­றது. ஆனால் இன்­றைய ஆட்சி உண்­மை­யில் பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டதா என்­பதுஎனக்கு தெரி­ய­வில்லை. அவர்­கள் ஆட்­சிக்கு வந்­து­ விட்­டார்­கள், ஆனால் சில இடங்­க­ளுக்­குப் போனால், உங்­கள் பொரு­ளுக்கோ, உடை­மைக்கோ நீங்­களே பாது­காப்பு நிர்­வா­கம் பொறுப்பு இல்லை என்று போர்­டு­கள் இருக்­கும். அதைப்­போல இன்­றைய அரசு இதற்­கெல்­லாம் நாங்­கள் பொறுப்­பல்ல என்­கி­றது போலவே நடந்­து­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஒவ்­வொரு நாளும் கொலை –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாலி­யல் வன்­மு­றை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு நாளும் நம் கண்­முன் கொலை, பாலி­யல் வன்­மு­றை­கள், குழந்­தை­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­கள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் ஆட்சி மேலி­டம் இதற்­கெல்­லாம் நாங்­கள் பொறுப்­பல்ல என்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது ஆட்­சியா? இல்லை, பொறுப்­பைத் தவிர்ப்­பதா? இத்­தனை நாள் ஆட்­சி­யில் இருந்­த­வர்­களை விமர்­சிப்­பது எளிது. நீங்­கள் தேர்­தல் மன­நி­லை­யில் இருந்து வெளியே வரா­மல், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தை­யும், கலை­ஞ­ரை­யும் திரும்­பத் திரும்ப குறை சொல்­லிக்­கொண்டே இருப்­பது இன்­னும் எளிது. ஆனால் அப்­ப­டிச் செய்­வது, உங்­களை நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நீங்­கள் செய்­யும் துரோ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உண்­மை­யில் கார­ணங்­க­ளைத் தேடி, பழி­யைப் போடு­வது ரொம்ப சுல­பம். 3000 வரு­ஷ­மாக எங்­களை அடக்கி வைத்­தார்­கள் என்று சொல்­லிக்­கொண்டே இருக்­க­லாம். ஆனால் திரா­விட இயக்­கம் அந்த 3000 ஆண்­டு­கால விலங்­கு­களை உடைத்­தெ­றிந்து, தமிழ்­நாட்டை முன்­னேற் ­றி­யது என்­பதை மறக்­கக்­கூ­டாது. அந்த உடைப்­பின் விளை­வு­தான் இன்­றைய கல்வி, சமூக நீதி, பெண் முன்­னேற்­றம், பெண் விடு­தலை. எந்த மாற்­றத்­தை­யும்கொண்­டு­வர வேண்­டு­மென்­றால், பழி சொல்­லும் மன­நி­லையை விட்­டு­விட்டு, பொறுப்பை ஏற்க வேண்­டும். அதைத்­தான் கலை­ஞர் செய்­தார். குற்­றம் சொல்­லா­மல், தீர்வு காண்­ப­தில் கவ­னம் செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எங்­கள் தள­பதி, முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் கலை­ஞ­ரின் கொள்­கைப் பாதை­யில் தமிழ்­நாட்டை நடத்­து­வார் என்­ப­தில் எங்­க­ளுக்கு எந்த சந்­தே­க­மும் இல்லை. மொழி, மாநில சுயாட்சி, கல்வி, சமூக நீதி என அனைத்­தை­யும் தன் வாழ்­நா­ளில் தீர்­மா­னித்­துத் தந்த தலை­வர் கலை­ஞர். எனவே, இன்று ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் முத­லில் பொறுப்பை ஏற்­றுக்­கொள்­ளுங்­கள். மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப ஆளுங்­கள். பழி சொல்­லும் அர­சி­யலை விட்­டு­விட்டு, தீர்வு காணும் அர­சி­ய­லைத் தொடங்­குங்­கள் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் தி.மு.க. மக­ளி­ர­ணித் தலை­வர் விஜயா தாயன்­பன், மக­ளி­ர­ணிச் செய­லா­ளர் ஹெலன் டேவிட்­சன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மயிலை த.வேலு, எழி­லன் நாக­நா­தன், தமி­ழ­ரசி ரவிக்­கு­மார் மற்­றும் தி.மு.க. மக­ளி­ரணி நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>