<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 07 2026 03:31:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260607T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07062026-CBE-05" position.sequence="05" ex-ref="07062026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="Wingdings" fontStyle="Regular" size="13">•</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="13">	முத்தமிழறிஞர் கலைஞரின் மிகச் சிறந்த பதிப்பு, "தளபதி மு.க.ஸ்டாலின்' என்ற புத்தகம்தான்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="Wingdings" fontStyle="Regular" size="13">•</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="13">'</lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="13">முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள்' என்பது –</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="13">'</lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="13">அழியாத தமிழினம்' என்ற தத்துவத்தின் அடையாளம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">பல துறைகளிலும் இன்று தமிழர்கள் கோலோச்சுவதற்கு   </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">முத்தமிழறிஞர் கலைஞரின் செயல்பாடே மூலக்காரணம்!  </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – மாவட்டச் செயலாளர் –  முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.   முன்னின்று நடத்திய </lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="27">'</lang>
	<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="27">முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் புகழரங்கில்' சுகி சிவம் புகழாரம்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="sugeesivamc_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை. ஜூன் 7-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் - மாவட்­டச் செய­லா­ள­ரும் முன்­னாள்அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ.நிகழ்ச்சி ஏற்­பாட்­டில் - முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த நாளை­யொட்டி -
“பன்­முக ஆற்­ற­லின் நாய­கன் ! பலர் வாழ உழைத்த சூரி­யன் !” எனும் தலைப்­பில் பிர­மாண்ட புக­ழ­ரங்க நிகழ்ச்சி,சென்னை - பாரி­முனை ராஜா- அண்­ணா­மலை மன்­றத்­தில் மிகச் சிறப்­புற நடை­பெற்­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­பு­க­ழ­ரங்­கில் -  புகழ்­பெற்ற பட்­டி­
மன்­றப் பேச்­சா­ளர் சுகி­சி­வம் அவர்­கள் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் தனது உரை­யில், “பல துறை­க­ளி­லும் இன்று தமி­ழர்­கள் கோலோச்­சு­வ­தற்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் செயல்­பாடே மூலக் கார­ணம்!” என்று 
புக­ழா­ரம் சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப் புக­ழ­ரங்­கில் சுகி­சி­வம் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அனை­வ­ருக்­கும் என்­னு­டைய பணி­வன்­பான வணக்­கங்­களை முத­லில் 
தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தம்பி சிநே­கன் அவர்­கள் பேசி­ய­தைப் போன்று, ஆவே­ச­மாக, ஆக்­ரோ­ஷ­மா­கப் பேசும் வயது எனக்­குக் கடந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இன்­றைக்கு உங்­க­ளுக்கு ஒரு வகுப்பு நடத்­தப் போகி­றேன். அந்த வகுப்பை நீங்­கள் பொறு­மை­யா­கக் கொஞ்­சம் கேட்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">டாக்­டர் ஜெகத்­ரட்­ச­கன் அவர்­க­ளைப் போன்று, கவி­தை­யா­கவே பேசும் நிலை­யும் இப்­போது எனக்கு இல்லை. அவ­ருக்கு மட்­டும் வயது ஆகவே மாட்­டேன் என்­கிறது. ஆழ்­வார்­க­ளின் அமு­தத் தமி­ழைப் படிப்­ப­தால், என்­றும் மாறா இள­மை­உ­டை­ய­வ­ரா­கவே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வின் உண்­மை­யான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அதி­கா­ரம் யாரிடம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இன்­றைக்கு முத­லில் உங்­க­ளுக்­குச் சொன்­ன­தைப் போன்று, வகுப்பு நடத்­தப் போகி­றேன் என்று சொன்­ன­தால் 
முத­லில் ஒரு கேள்வி கேட்­கப் போகி­றேன். ஒரு 15 நிமி­டம் என்­னோடு நீங்­கள் 
பய­ணிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“இந்­தி­யா­வி­லேயே இன்­றைக்கு வலி­மை­யான மனி­தன் என்று ஒரு­வ­ரைச் சொல்­வ­தென்­றால், அவர் யார் என்று நினைக்­கி­றீர்­கள்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் வேறு ஒரு அர்த்­தத்­தில் சொல்­கி­றீர்­கள். அதா­வது செயல் திற­னில், மக்­கள் மன­தில் போரா­டும் தன்­மை­யில் ஒரு தலை­வ­ரைச் சொல்­கி­றீர்­கள். ஆனால் நான் சொல்­வது, அடக்கி அனைத்­தை­யும் நிறுத்­தும், இந்­திய அள­வில் இருக்­கும் ஒற்றை மனி­தன். நீங்­கள் அடை­யா­ளம் கண்­டு­பி­டித்­தீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் மீண்­டும் மீண்­டும் புக­ழின் பின்­னா­லேயே போகி­றீர்­களே ஒழிய, உண்­மை­யின் பின்­னால் போவ­தற்­குப் பய­ணிக்­கத் தொடங்­கி­னால் மட்­டும்­தான் மீண்­டும் உங்­க­ளால் எழுந்து நிற்க முடி­யும். நான் உங்­க­ளுக்கு வகுப்பு நடத்­து­கிறேன் என்று சொன்­னேன். இன்­றைக்கு உண்­மை­யி­லேயே இந்­தி­யா­விலே மிக மிக வலி­மை­யான ஒரே மனி­தன் யார் தெரி­யுமா? மோகன் பக­வத். நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உங்­கள் எதிரி யார் என்று தெரி­யா­த­வரை, நீங்­கள் வெற்­றிக்­க­ளத்தை ஒரு­போ­தும் அடை­யா­ளம் காண முடி­யாது. இந்த நாடு யாரு­டைய கண்­ண­சை­வின் பெய­ரில் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தைப் பற்­றிய புரி­தல் இன்­னும் தமிழ்­நாட்டு மக்­களுக்கு ஏற்­ப­ட­வில்லை. ஆர்.எஸ்.எஸ்.-ஐ. (RSS) இயக்­கிக் கொண்­டி­ருக்­கும் மோகன் பக­வத் தான் இன்­றைக்கு இந்­தி­யா­வின் உண்­மை­யான சர்­வா­தி­காரி என்­பதை நீங்­கள் புரிந்து கொள்­ளாத வரை­யில், அடுத்த தேர்­த­லில் களம் காண்­பது கடி­னம். அவ­ரு­டைய விருப்­பப்­ப­டி­தான் இந்­தியா தன்­னு­டைய போக்­கைக் கொண்டு போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெளியே பார்க்­கும் போது நரேந்­திர மோடி ஒரு பல­முள்ள மனி­த­ரா­கக் காட்­டப்­ப­டு­கி­றாரே ஒழிய, மிகத் தெளி­வா­கச் சொல்­லு­கி­றேன்... அவர்ஒரு சோளக்­கொல்லை பொம்மை. உண்­மை­யான ராட்­ச­சன், இந்த நாட்டை ஆட்டி வைக்­கும் வலிமை உடை­ய­வர் இன்­றைக்கு யார்? நான் சொல்­லும் ஆர்.எஸ்.எஸ்.னுடைய மோகன் பக­வத் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நூறாண்­டுத் திட்­டத்­தின் ஆபத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏன் சொல்­கி­றேன் என்­றால், நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு காந்­தி­ய­டி­கள் வீழ்ச்சி அடைந்த பிறகு, காந்­தி­ய­டி­க­ளின் உடல் இந்த மண்­ணிலே விழுந்த பிறகு, அன்று ஒரு விதை போட்­டார்­கள். “இந்த நாட்டை எப்­படி முழு­மை­யாக 100 ஆண்­டு­க­ளுக்­குள் தாங்­கள் நினைப்­பது போல் கொண்டு போக வேண்­டும்?” என்று வெறித்­த­ன­மாக ஒரு கூட்­டம் திட்­ட­மிட்­டது. அவர்­கள் திட்­டத்­தின் ஒவ்­வொரு அங்­கத்­தைத்­தான் ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் நாம் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். உண்­மை­யில் இப்­போது நடப்­பது உங்­க­ளுக்கு இந்­திய அள­விலே ஒரு ஜன­நா­யக ஆட்சி அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்து சர்­வா­தி­கா­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ரஷ்­யா­வில் எப்­படி கம்­யூ­னிச சர்­வா­தி­கா­ரம் வளர்ந்­தி­ருக்­கி­றதோ, சீனா­வில் எப்­படி கம்­யூ­னிச சர்­வா­தி­கா­ரம் வளர்ந்­தி­ருக்­கி­றதோ, அப்­படி ஒரு இந்து சர்­வா­தி­கா­ரத்தை ஆர்.எஸ்.எஸ். கொண்­டு­வர விரும்­பு­கி­றது. இந்த இந்து சர்­வா­தி­கா­ரம் இந்த நாட்­டுக்கு வந்­தால் என்­ன­வா­கும்? நான் வேறு எந்த நோக்­கத்­துக்­கா­க­வும் இவர்­க­ளோடு இணைந்து பணி­யாற்­ற­வில்லை. இந்து சர்­வா­தி­கா­ரம் என்ற ஒன்று இந்­தி­யா­வில் ஏற்­பட்­டு­விட்­டால், இந்த நாடு அன்­றோடு வீழ்ச்சி அடைந்­து­வி­டும். அதன் பிறகு இந்த நாட்டை எழுப்பி நிறுத்­து­வது கடி­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது நடக்­கா­மல் இருப்­ப­தற்கு ஒவ்­வொரு காலத்­தி­லும் ஒரு தலை­வனை இந்த உல­கம் கொடுத்­தது. அப்­ப­டிப்­பட்ட தலை­வர்­க­ளில் ஒப்­பற்ற தலை­வன்­தான் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உங்­க­ளுக்கு வர­லாறு புரிய வேண்­டும்; என்ன நோக்­கத்­தில் அவர்­கள் இந்­தி­யா­வைக் கொண்டு போகி­றார்­கள் என்­பது புரிய வேண்­டும். உங்­க­ளுக்­குத் தெரி­யுமோ தெரி­யாதோ, அனைத்து கட்­சி­க­ளி­லும் உச்­சத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்­குப் பக்­கத்­தில் ஆர்.எஸ்.எஸ். காரர்­கள் இருப்­பார்­கள். இது­போன்ற திட்­ட­மி­டு­தல், சூழ்ச்சி செய்­தல் இவற்றை எல்­லாம் கற்­றுக்­கொள்­ளா­மல் அர­சி­யல் நடத்த முடி­யாது என்­ப­தைத் தய­வு­செய்து மீண்­டும் நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்ன வேண்­டுமோ அதை நோக்கி அவர்­கள் நகர்த்­து­வார்­கள். அதன் கார­ண­மாக, நாம் இயல்­பா­கப் பெறும் வெற்றி என்­பதை இயல்­பா­கப் பெற்­று­விட முடி­யா­த­படி, அவர்­கள் வஞ்­ச­னை­யால் இந்த வெற்­றியை மாற்றி அமைப்­பார்­கள் என்ற ரக­சி­யத்­தைத் தய­வு­செய்து புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த நாட்­டில் அந்த விபத்து நடக்­கா­மல் இனி இருக்க வேண்­டும் என்­றால், கொள்கை அடிப்­ப­டை­யில் இந்த நாடு ஒரு இந்து சர்­வா­தி­கார நாடாக மாறு­வது ஆபத்­தா­னது. ஏன் என்று கேட்­டால், அதன் பிறகு நீங்­கள் உல­கத்­தில் இருக்­கும் கிறிஸ்­துவ நாடு­க­ளோ­டும் நட்பு கொள்ள முடி­யாது, வளை­குடா முஸ்­லிம் நாடு­க­ளோ­டும் நட்பு கொள்ள முடி­யாது. இந்­தி­யர்­கள் உலக அரங்­கத்­தில் வேலை பார்க்க முடி­யாது; இந்­தியா தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டும்; இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் வீழ்ச்சி அடை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்­கொன்­றும் ஆர்.எஸ்.எஸ். மீது எந்­தக் கோப­மும் இல்லை. ஆனால், இந்­தி­யாவை அந்­தக் கொள்கை நாச­ம­டைய வைத்­து­வி­டும் என்ற ஒரே வருத்­தத்­தால்­தான் இன்­னும் நான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். நீங்­கள் இந்­தக் கொள்­கை­களை, இந்­தத் திட்­டங்­களை, இந்­தச் செயல் திட்­டங்­க­ளைப் புரிந்து கொண்­டால் மட்­டும்­தான் சரி­யான மாற்­றத்தை நோக்கி கொண்டு போக முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தேர்­தல் பின்­ன­ணி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அமித்­ஷா­வின் திட்­ட­மும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போ­து­கூட, மிகுந்த மரி­யா­தைக்­கு­ரிய நம்­மு­டைய தள­பதி அவர்­கள் மிகுந்த மரி­யா­தைக்­கு­ரிய, மிகப்­பெ­ரிய ஒரு உச்­ச­நி­லை­யில் இருந்து மக்­க­ளால் மீண்­டும் மீண்­டும் கொண்­டா­டப்­பட வேண்­டிய ஒரு பெரிய தலை­வ­னாக இருந்­தி­ருக்க வேண்­டிய ஒரு சூழல், விபத்து போன்று நழு­விப் போய்­விட்­டது. இதை நீங்­கள் நன்­றா­கப் புரிந்து கொள்ள வேண்­டும். அந்­தக் கால­கட்­டத்­தில் அவர்­கள் ஒரு முடி­வெ­டுக்­கி­றார் கள். என்ன முடி­வெ­டுக்­கி­றார்­கள்? தன்­னு­டைய கூடவே இருக்­கி­ற­வர்­கள்­கூட இப்­போது அமைந்­தி­ருக்­கும் ஓர் அர­சோடு இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு அவர்­கள் அனு­மதி வழங்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை நீங்­கள் எப்­ப­டிப் பார்த்­துக் கொள்ள வேண்­டும் என்று சொன்­னால், எப்­ப­டிப்­பட்ட சூழ்­நிலை இந்­தி­யா­வில் உரு­வாக்­கப்­பட்­டது? ஒரே வார்த்தை சொல்­கி­றேனே... இந்­தத் தேர்­த­லில் யார் வென்­றார் என்று உங்­க­ளால் சொல்ல முடி­யுமா? இந்­தத் தேர்­த­லிலே யார் வெற்றி பெற்­றார் என்று உங்­க­ளில் யாரா­வது சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு­வர் 108 இடங்­கள் வாங்­கு­கி­றார்; இன்­னொ­ரு­வர் 70 சில்­லறை இடங்­கள் வாங்­கு­கி­றார்; இன்­னொ­ரு­வர் 40 சில்­லறை இடங்­கள் வாங்­கு­கி­றார். இந்­தத் தேர்­த­லில் அப்­ப­டி­யா­னால் யார் வெற்றி பெற்­றார்­கள்? நீங்­கள் உண்­மை­க­ளைப் புரிந்து கொள்­ளா­மல் உங்­க­ளால் அர­சி­யல் நடத்த முடி­யாது. நான் அர­சி­யல் கட்சி சார்ந்­த­வன் அல்ல, ஆனால் அர­சி­யல் சிந்­த­னை­ 
யா­ளன். நான் சொல்­வதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர்­அ­மித்­ஷா­மட்­டுமே. இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர் அமித்ஷா மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏனென்­றால், தமிழ்­நாட்­டில் ஒரு பல­மான அரசு இருக்­கக்­கூ­டாது; இந்­திய அள­வில் எப்­போ­தும் முன்­னே­றிக்­கொண்­டி­ ருக்­கும் தமி­ழர்­கள் வாழ்க்கை வீணாக வேண்­டும் என்­ப­தற்­காக, திக்­கு­முக்­கா­டும் ஒரு சூழ்­நி­லை­யில் தமி­ழ­கத்­தைக் கொண்டு வந்து நிறுத்த வேண்­டும் என்று அமித்ஷா திட்­ட­மிட்டு, அத­னு­டைய செயல் விளை­வைத்­தான் இப்­போது தமிழ்­நாடு சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் உங்­கள் உண்­மை­யான எதி­ரி­களை அடை­யா­ளம் காணாத வரை­யில் எப்­ப­டிப் போர் செய்­யப் போகி­றீர்­கள்? யாரை நோக்கி வாள் சுழற்­றப் போகி­றீர்­கள்? யாரை எதிர்த்து நீங்­கள் இந்­தக் காரி­யத்­தைச் செய்­யப் போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்ன நடந்­தி­ருக்­கி­றது என்­ப­தைப் புரிந்து கொள்­ளுங்­கள். இங்கே யாருமே ஆட்­சிக்கு வரக்­கூ­டாது, மக்­கள் தீர்­மா­னிப் பது நடக்­கக்­கூ­டாது. இங்கே ஒரு வலி­மை­யான அர­சாங்­கமே தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டாது. அப்­படி இல்­லா­மல் இருந்­தால்­தான் மத்­திய அரசு அல்­லது ஒன்­றிய அரசு நினைக்­கும் கருத்­துக்­களை உள்ளே கொண்­டு­வர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு ஆளு­நர் அர­சி­ய­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மு.க.ஸ்டாலி­னின் முடி­வும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்ன நடந்­தி­ருக்­கும் தெரி­யுமா? இந்த நாட்டு ஜன­நா­யக மர­பிலே அதிக எண்­ணிக்கை பெற்ற கட்­சியை ஆட்­சிக்கு அழைக்க வேண்­டும் என்­பது எழு­தப்­ப­டாத சட்­டம்; உச்ச நீதி­மன்­றம் (Supreme Court) பல­முறை உச்­ச­ரித்­தி­ருக்­கி­றது. ஆனா­லும் ஆளு­நர் அப்­படி அழைக்­கவே இல்லை ஒரு கட்­சியை. அப்­ப­டி­யா­னால் அவர்­க­ளு­டைய திட்­டம் என்ன? அவ­ரு­டைய நோக்­கம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­கள் என்­ன­நி­னைக்­கி­றார்­கள்? ஒரு கட்­சி­கூட இந்த ஆட்­சிக்கு வரக்­கூ­டாது, ஒரு ஆறு மாத காலம்இங்கே மீண்­டும் அவர்­க­ளின் ஆட்சி நடக்க வேண்­டும் என்று. அப்­போ­து­தான் நசுக்க வேண்­டி­ய­வர்­களை நசுக்க முடி­யும், அப்­போ­து­தான் திணிக்க வேண்­டி­ய­வற்­றைத் திணிக்க முடி­யும், முடிக்க வேண்­டி­ய­வற்றை முடிக்க முடி­யும் என்று ஆறு மாத காலம் அவர்­கள் இங்கே தங்­க­ளு­டைய ஆட்­சியை நிலை­நி­றுத்த வேண்­டும் என்று விரும்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதி­லும் உங்­க­ளுக்­குத் தெரி­யாத ரக­சி­யத்தை இப்­போது நான் சொல்­கி­றேன். தமிழ்­நாட்­டுக்கு என்று இன்­ன­மும் முறை­யான ஒரு ஆளு­நர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இந்த தமிழ்­நாடு ஒரு நிரந்­தர ஆளு­ந­ருக்­குக்­கூட தகு­தி­யற்­றதா? ஒரு முழு­மை­யான ஆளு­ந­ருக்­குக்­கூட இந்த தமிழ்­நாடு தகு­தி­யற்­றதா? தமிழ்­நாட்டை எப்­படி அவ­மா­னப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள் என்று உங்­க­ளுக்­குப் புரி­கி­றதா? தமிழ்­நாட்­டுக்கு நிரந்­த­ர­மான ஒரு ஆளு­நர்­கூட இல்லை, அந்த 
வஞ்­ச­னையை நீங்­கள் புரிந்து கொள்ள 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­கள் விரும்­பி­யது, இங்கே யாருமே ஆட்­சிக்கு வர முடி­யா­த­போது, மீண்­டும் மேற்கு வங்­கா­ளத்­தில் இருந்து ஆர்.என். ரவி இங்கே அழைத்து வரப்­ப­டு­வார். அவர் ஐந்து ஆண்­டு­க­ளாக எதற்குஇங்கே நம்­மை­யெல்­லாம் அவ­மா­னப்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­தாரோ, அதை ஆறு மாத காலம் இங்கே நிறை­வேற்ற வேண்­டும் என்று கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு காத்­தி­ருந்­தார்­கள். அதைத் தடுத்த பெரு­ம­கன்­தான் தள­பதி ஸ்டாலின் என்­பதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். ஆர்.என். ரவி என்­ப­வர் மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் வந்து, ஆறு மாத காலத்­தில்அத்­த­னை­யும் தான் தீர்த்­து­விட்­டுப் போக வேண்­டும் என்று நினைத்த வெறியை அடக்கி வைத்த பெருமை தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­குத்­தான் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­ய­லில் நுட்­ப­மான பகு­தியை நீங்­கள் பார்க்க வேண்­டும். அவ­ருக்கு நன்கு தெரி­யும், நம்­மோடு இருக்­கி­ற­வர்­கள் அங்கே போவது என்­ப­தில் இருக்­கும் சிக்­கல் என்ன என்று தெரி­யும் என்­றா­லும், அனைத்து வேத­னை­க­ளை­யும், அனைத்து அவ­மா­னங்­க­ளை­யும், அனைத்து துக்­கங்­க­ளை­யும் சகித்தே பழ­கப்­பட்ட ஸ்டாலின் அவர்­கள், இவற்றை எல்­லாம் மன­த­ள­வில் ஏற்­றுக்­கொண்டு, அனைத்து கஷ்­டங்­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­ளும் இயல்­பு­டைய ஒரு பெரிய மனி­தன். அத­னால் இவற்றை ஏற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்­டில் மறந்­தும் அப்­படி ஒரு ஜனா­தி­பதி ஆட்சி வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக, ஒரு அரு­மை­யான முடிவை அவரே மன­தில் வகுத்­துக்­கொண்டு செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார் என்­பதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஜன­நா­ய­கக் கோட்­பாட்­டுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">விரோ­த­மா­னது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடுத்த ஓர் உண்­மை­யைப்­பு­ரிந்து கொள்ள வேண்­டும். அர­சி­ய­லைப் பற்­றிய அறிவு தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு இன்­னும் வள­ர­வில்லை, இந்­தி­யர்­க­ளுக்கே வள­ர­வில்லை. ஜனா­தி­பதி ஆட்சி என்ற உடனே, ஒரு கவர்­னர் தன் விருப்­பப்­படி இரண்டு அட்­வை­சர்­களை வைத்­துக்­கொண்டு நடத்­து­கி­றார். நம்­மு­டைய அர­ச­மைப்­புச் சட்­டப்­படி அது தவறு. இது ஜன­நா­யக நாடு; ஒரு தனி மனி­தன் தான் விரும்­பிய எண்­ணப்­படி ஆட்சி நடத்­து­வது சட்­டத்­தில் இருந்­தா­லும், அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் இருந்­தா­லும், அது ஜன­நா­ய­கக் கோட்­பாட்­டுக்கு விரோ­த­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது நான் சொல்­லு­கி­றேன், ஒரு மாநி­லத்­தில் ஜனா­தி­பதி ஆட்­சி­யைக்­கொண்டு வரு­வ­தாக இருந்­தால், ஒற்றை ஆளு­ந­ரு­டைய உத்­த­ர­வுப்­படி அங்கே எந்த ஆட்­சி­யும் நடக்­கக்­கூ­டாது. அங்கே இருக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டைய மொத்த எண்­ணிக்­கை­யைப் பார்த்து, அவர்­க­ளது ஆலோ­ச­னைப்­ப­டி­தான் அந்த மாநி­லத்து ஆளு­நர் ஆள வேண்­டுமே ஒழிய, தனி­ம­னித சர்­வா­தி­கா­ரத்­திற்கு இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டம் இடம் தரக்­கூ­டாது. இவற்­றை­யெல்­லாம் நீங்­கள் யோசிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அழைத்து, இப்ப நமக்கு ஒரு 40 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இருக்­கி­றார் என்­றால், கவர்­னர் தீர்­மா­னத்­தைக் கொண்டு வர வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒப்­புக்­கொண்­டதை மட்­டும்­தான் கவர்­னர் நிறை­வேற்ற வேண்­டுமே ஒழிய, அவர் இச்­சை­யாக உத்­த­ரவு போடக்­கூ­டாது என்று இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­லேயே மாற்­றம் வந்­தாக வேண்­டும். நான் சொல்­வ­தெல்­லாம் இந்த நாட்டை மீண்­டும் மாற்றி அமைப்­ப­தற்கு, கட்­ட­மைப்­ப­தற்­கு­ரிய பல்­வேறு செய்­தி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அண்ணா, கலை­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சித்­தாந்­தத்­தின் முக்­கி­யத்­து­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை ஏன் நான் இங்கே பேசு­கி­றேன் என்­றால், இது­போல் சிந்­தித்த ஒப்­பற்ற பெரிய மனி­தன்­தான் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் என்­பதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். என்ன செய்­தார் அவர்? சில பேர் படிக்க முடி­யாது, சில பேர் வேலைக்கு வர முடி­யாது, வெறும் சில பணக்­கா­ரர்­கள் கையில் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் இருக்­கும், மக்­கள் எப்­போ­தும் அஞ்சி அஞ்­சிச் சாவார்­கள் என்­ப­தைப் போன்று அவர்­கள் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளாக எப்­போ­தும் கீழேயே இருக்க வேண்­டும் என்ற நிலை இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை மாற்றி அமைப்­ப­தற்கு அந்த மனி­தன் பட்ட பாடு என்ன? நான் மீண்­டும் சொல்­கி­றேன், அவர்­க­ளைக் கைதூக்கி விடு­வ­தற்கு அந்த மனி­தன் பட்ட பாடு என்­பதை அவர்­க­ளில் பலரே மறந்து போனார்­கள். அவர்­க­ளில் பலரே தாங்­கள் பெற்ற உய­ரங்­க­ளுக்­கெல்­லாம் இந்த மனி­தன்­தான் கார­ணம் என்ற அடிப்­படை உணர்­வு­கூட இல்­லா­மல் போய்­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மனி­தன் இந்த தமிழ்­நாட்­டுக்­குள் வரா­மல் இருந்­தி­ருந்­தால், பல­பேர் கிரா­மங்­க­ளில் ஆடு மாடு­களை மேய்த்­துக்­கொண்­டு­தான் இருந்­தி­ருக்க வேண்­டும். அவர்­கள் வாழ்­வின் மிக உயர்ந்த இடங்­களை ஒரு­போ­தும் அடைந்­தி­ருக்க முடி­யாது. உயர்­நீ­தி­மன்­றங்­க­ளி­லும், வேறு பல இடங்­க­ளி­லும் இன்­றைக்­குப்பல தமி­ழர்­கள் கோலோச்­சு­வ­தற்கு மூல கார­ண­மாக இருந்­தது பேர­றி­ஞர் அண்­ணா­வின் சித்­தாந்­த­மும், கலை­ஞ­ரின் செயல்­பா­டும். இதை­யெல்­லாம் புரிந்துகொண்­டால்­தான், நாம் சரி­யான ஓர் அர­சி­யல் வகுப்­பைக் கற்­றுக்­கொண்­ட­தாக அர்த்­தம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சினிமா காத­லும் தமிழ்­நாட்­டின் தற்­போ­தைய 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நிலை­யும் (விஷம் குடித்த பிள்ளை)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது நான் வேறு ஒரு செய்­தியை உங்­க­ளுக்கு முன்பு சொல்­வ­தற்கு விரும்­பு­கி­றேன். அண்­மை­யிலே நடை­பெற்ற தேர்­த­லில் ஒரு­வர் வென்­றது, அல்­லது வென்­றது போன்று காட்சி அளிப்­பது, அல்­லது வென்­றது போல் உங்­க­ளுக்­குக் கட்­ட­மைக்­கப்­பட்­டது, இப்­படி எத்­த­னையோ வார்த்­தை­களை நீங்­கள் பயன்­ப­டுத்­த­லாம். ஆனால் நான் உங்­க­ளுக்கு ஒன்று சொல்­லு­கி­றேன்; அது எவ்­வ­ளவு பெரிய விபத்து என்­ப­தைப் புரிய வைப்­ப­தற்கு ஓர் உண்­மையை உங்­க­ளுக்கு நான் புரிய வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்­னு­டைய மருத்­து­வர் ஒரு­வர், அவர் ஒரு­முறை வருத்­தப்­பட்டு ஒரு செய்தி சொன்­னார். நான் அவ­ரு­டைய மருத்­து­வ­ம­னை­யிலே காத்­தி­ருந்­தேன், அவர் வரு­வ­தற்­குத் தாம­த­மா­யிற்று. “என்­னய்யா எங்க போயிட்­டீங்க, இவ்­வ­ளவு நேரம் ஆச்சே காணுமே?” என்று கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் சொன்­னார்: “எங்க வீட்ல வேலை பார்க்­கிற அம்மா, அந்த வேலை பார்க்­கிற அம்­மா­வோட பையன் விஷம் குடிச்­சிட்டு சாவு­ற­துக்கு போயிட்­டான். கடை­சில அப்­படி இப்­படி கொண்டு போய் ஆஸ்­பத்­தி­ரில போட்டு இருக்­காங்க. அத­னால நான் அங்க போய் பார்த்து எல்லா ஏற்­பா­டும் பண்ணி, அவன காப்­பாத்­த­ற­துக்கு எல்­லாம் பண்­ணிட்டு அப்­பு­றமா நான் இங்க வரேன்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“அய்­யயோ அப்­ப­டியா, ஏன் விஷம் குடிச்­சான்?” என்று கேட்­டேன். “அவன் காத­லிச்­சான். காத­லிச்ச பொண்­ணைக் கல்­யா­ணம் பண்­ண­னும்னு சொன்­னான். அவங்க வீட்­ல­யும் ஒத்­துக்­கல, பொண்ணு வீட்­ல­யும் ஒத்­துக்­கல. அவன் விஷத்­தைக் குடிச்­சிட்­டான்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“சரி, இப்ப என்ன நடந்­தி­ருக்­குது?” என்று கேட்­டேன். “இனிமே அவன் உயி­ரோட இருந்­தும் வேஸ்ட்” என்­றார். “என்­னது? அவன் உயி­ரோட இருந்­தும் வேஸ்ட்டா?” என்று கேட்­டேன். “ஏன், காப்­பாத்­திட்­டோம்... இங்க இருந்து குடல் வரைக்­கும் வெந்து புண்ணா போயாச்சு, சாப்­பி­டவே முடி­யாது.” நான் ஏன் இதை சொல்­கி­றேன்­என்று நீங்­கள் பொறு­மை­யாக கேட்­க­வேண்­டும். “சாப்­பி­டவே முடி­யாது. இனிமே அவன் இருக்­கி­ற­தும் ஒன்­னு­தான், செத்து போற­தும் ஒன்­னு­தான்” என்­றார் மருத்­து­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“நீங்க அந்த பைய­னைக் கேட்­கக் கூடாதா, ஏன்டா இப்­படி விஷம் குடிச்­சியே, நீ இப்­படி பண்­ண­லா­மா­டான்னு”.”கேட்­டேன் சார். அவன் சொன்­ன­தைக் கேட்டு நான் அப்­ப­டியே அதிர்ச்­சி­யில் உட்­கார்ந்து இருக்­கேன்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“எல்லா சினி­மா­வி­லே­யும் காத­லிப்­பாங்க. பெற்­றோர் எதிர்த்த உடனே விஷம் குடிப்­பாங்க. அந்த விஷம் குடிச்ச உடனே பெத்­த­வங்க எல்­லாம் மனசு மாறி, உடனே ரிஜிஸ்­டர் ஆபீஸ் கூட்­டிட்டு போய் மாலை போடு­வாங்க. கல்­யா­ணம் ஆகி ‘சுபம்’ அப்­ப­டின்னு அந்­தப் படத்­தோட கடைசி காட்சி முடி­யும். அது­தான் நடக்­கும்னு நினைச்சு நானும் விஷம் குடிச்­சேன் அப்­ப­டின்னு சொன்­னான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏன்னா, சீன் பை சீன் (Scene by scene) அவன் பாத்­துட்­டான். முதல் சீன் இவங்க காத­லிப்­பாங்க; இரண்­டா­வது சீன் அப்பா அம்மா எதிர்ப்­பாங்க; மூன்­றா­வது சீன் அவன் விஷம் குடிப்­பான்; நான்­கா­வது சீன் ஆஸ்­பத்­திரி கூட்­டிட்டு போவாங்க; ஐந்­தா­வது சீன் உடனே அவங்­கள எல்­லா­ரும் சேர்ந்து சேர்த்து வச்­சி­ரு­வாங்க, எனக்­குக் கல்­யா­ணம் ஆயி­டும்னு நினைச்­சேன்” என்­றான். இவர் சொன்­னார், “சாப்­பி­டவே முடி­யா­துடா உன்­னால, குடலே வெந்து போச்சு, உனக்கு வாழ்க்­கையே இனிமே கிடை­யா­துடா, என்­னடா இப்­படி பண்­ணிட்­டியே” என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தக் காட்­சி­கள் எப்­படி நிஜ­மாக நம்­பப்­பட்­டதோ, அப்­படி இப்­போ­தைக்கு தமிழ்­நாடு விஷம் குடித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தாயு­மா­ன­வ­னா­கத் தவிக்­கும் தள­பதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், எனக்கு இப்­போ­தும் தமி­ழர்­கள் மீது உள்ள அக்­க­றை­யால் சொல்­கி­றேன்; இவ்­வ­ளவு குழந்­தைத்­த­ன­மாக இருக்­கி­றீர்­களே என்று பெற்ற வயிறு பற்றி எரிய நான் வருத்­தப்­ப­டு­கி­றேன். ஒரு காட்­சி­யும் அடுத்த காட்­சி­யும் ஒரு ஃபிலிம் ரோலில் (Film roll) மாற்றி விட­லாம். ஆனால் நடை­மு­றை­யில் மாற்­று­வ­தற்கு 50 ஆண்டு காலம் இந்த மனி­த­னைப் (கலை­ஞ­ரைப்) போன்று ஒரு­வர் படாத பாடு­பட வேண்­டும். இவர் சந்­திக்­காத சிறைச்­சா­லை­களா? இவர் சந்­திக்­காத தடி­ய­டி­களா? இவர் சந்­திக்­காத அவ­மா­னங்­களா? இவர் சந்­திக்­காத விமர்­ச­னங்­களா? 
எத்­தனை வித­மான துய­ரங்­க­ளைச் சந்­தித்­தார்! ஒரே ஓர் உத்­த­ரவை இந்த நாட்­டில் நிறை­வேற்­று­வ­தற்கே50 ஆண்டு காலம் பாடு­பட வேண்டி இருக்­கி­றது.அடுத்த 
காட்­சி­யில் எது­வும் நடக்­காது என்­ப­தைத் தமிழ் மக்­கள் மிக விரை­வில் புரிந்து கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் அவர்­கள் எத்­த­னையோ இலக்­கி­யங்­கள் எழு­தி­னார்; தொல்­காப்­பி­யத்­துக்கு உரை எழு­தி­னார்;நிறைய கவி­தை­கள் எழு­தி­னார்; நிறைய நூல்­கள் எழு­தி­னார். ஆனால், அவர் எழுதி வெளி­யிட்ட பதிப்­பு­க­ளி­லேயே தமி­ழுக்கு அவர் கொடுத்த மிகச்­சி­றந்த பதிப்­பு”­த­ள­பதி மு.க. ஸ்டாலின்”­என்ற புத்­த­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்ன நிதா­னம்! எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் தடு­மா­றாத குணம்! அதா­வது இதைப்­போன்று ஒரு­வர் தன் தொகு­திக்கு பாடு­பட முடி­யாது என்று, அவ்­வ­ளவு கண்­ணுக்­குக் கண்­ணாக வளர்த்­தும், அதி­லி­ருந்து தான் இப்­படி அடைய வேண்­டிய வெற்­றியை அடைய முடி­யாத போது­கூட, இம்­மி­கூட அச­ரா­மல் மறு­நாள் அந்த மக்­க­ளைப் போய் பார்த்­து­வ­ரும் ஒரு பண்பு. விஷமே பிள்­ளை­கள் குடித்­தா­லும் தாய்­சென்று பார்க்­கா­மல் இருக்க முடி­யுமா? எப்­ப­டி­யா­வது மீண்­டும் விஷம் குடித்த பிள்­ளை­யைக் காப்­பாற்ற வேண்­டும் என்று பெற்ற மனம் தவிக்­காதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்­குத் தாயு­மா­ன­வ­னாக அந்­தத் தள­ப­தி­யின் மனம் தவிக்­கி­றது. “இப்­படி நம்­மு­டைய மக்­கள் விஷம் குடித்­தி­ருக்­கி­றார் களே, இவர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும்” என்று இன்­ன­மும் அந்­தத் தாயு­மா­ன­வன் தவித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார் என்­பதை மறந்து விடக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கொள்கை மோதல்: திரா­வி­ட­மும் -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆர்.எஸ்.எஸ்.-உம்(Ideological Clash)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் ஏதோ ஒரு கோபத்­தில் ஆர்.எஸ்.எஸ்.-ஐப் பேசி­னேன் என்று நினைக்­கா­தீர் கள்.இட்ஸ் அன் ஐடி­ய­லா­ஜிக்­கல் கிளாஷ் (It’s an ideological clash).திரா­விட இயக்­கம் என்­பது பேர­றி­ஞர் அண்­ணா­வால் பெரி­யா­ரி­ட­மி­ருந்து எதற்­குத் தோற்­று­விக்­கப்­பட்­டது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தியா விடு­தலை அடைந்­த­போது உச்­சத்­திலே இருந்­தது இந்­திய தேசிய காங்­கி­ரஸ். அந்த இந்­திய தேசிய காங்­கி­ர­ஸுக்­குச் சவா­லாக இருந்­தது இரண்டு; ஒன்று மதத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., இன்­னொன்று சமூக சீர்­தி­ருத்­தத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட தந்தை பெரி­யார். இது இரண்­டு­தான் இந்­திய தேசிய காங்­கி­ர­ஸுக்கு அப்­போது சவால். பெரி­யார் காங்­கி­ரஸை விட்டு வெளி­யில் வரு­கி­றார்;சமூக மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று போரா­டு­கி­றார். அப்­போது அதே­போன்று அவர்­கள் இந்து மதத்தை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு, மதம் சார்ந்த நாடாக இதை மாற்ற வேண்­டும் என்று ஒரு கொள்­கையை வகுக்­கி­றார்­கள். மறந்து விடா­தீர் கள், இந்­திய விடு­த­லைக்­குப் பிறகு இரண்டு இயக்­கங்­கள்­தான் வலி­மை­யா­னவை; ஒன்று மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்., இன்­னொன்று இனம் சார்ந்த திரா­விட இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பல­பேர் கேட்­கி­றார்­கள், “திரா­வி­டம் இனம்?” என்று எங்கே இருக்­கி­றது என்று கேட்­கி­றார்­கள். இவர்­கள் குழந்­தை­க­ளைப் போன்று பேசு­கி­றார்­கள். ‘இந்து’ என்ற வார்த்­தையே இடம் சார்ந்­தது தெரி­யுமா உங்­க­ளுக்கு? இந்து என்­பது ஒரு மதம் என்­பது பின்­னாலே வந்­தது; அது இடம் சார்ந்த இடச்­சுட்டு. அதா­வது, சிந்து நதிக்கு இந்­தப் பக்­கம் வாழு­கி­ற­வர்­கள் இந்­துக்­கள். நீ எந்த மத­மாக வேண்­டு­மா­னா­லும் இருக்­க­லாம்;சிந்து நதிக்கு இந்­தப் பக்­கம் வாழு­கி­ற­வர்­கள் சிந்­தூஸ் (Sindhoos). நம்மை ‘மத­ராசி’ என்று ஒரு காலத்­திலே அழைப்­பார்­கள்; மத­ரா­ஸுக்கு இந்­தப் பக்­கம் வாழு­கி­ற­வர் மத­ராசி. அது­போன்று, சிந்­தூஸ் என்று அழைக்­கப்­பட்­ட­வர்­கள் இந்­துக்­கள். அது இடச்­சுட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இடச்­சுட்டு – மதச்­சுட்டு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இடச்­சுட்டு எப்­படி மதச்­சுட்­டாக மாறிற்றோ, அப்­ப­டித்­தி­ரா­வி­டம் என்­பது இடச்­சுட்­டாக இருந்து இனச்­சுட்­டாக மாறி­விட்­டது.அது ஓர் இனத்­தின் அடை­யா­ள­மா­கப் பின்­னா­ளில் மாறி இருக்­கி­றது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த இரண்டு இயக்­கங்­க­ளுக்­கும் இடை­யி­லான ஓயா­தப் போர் நிற்­கப் போவதே இல்லை. நீங்­கள் தற்­கா­லி­க­மான நாற்­கா­லி­க­ளைப் பற்­றிய சிக்­கல்­க­ளைத் தள்ளி வைத்­து­விட்டு, கொள்கை ரீதி­யான போர் எங்கே நடை­பெ­று­கி­றது என்­ப­தைப் பற்­றித் தெளி­வாக இருக்க வேண்­டும் என்ற விண்­ணப்­பத்­தில்­தான் நான் இந்­தப் பாடத்தை இந்த இடத்­தில் நடத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பற­வை­யும் காகி­த­மும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் தத்­து­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு சொற்­பொ­ழி­விலே முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஒரு வார்த்தை சொல்­லு­கி­றார்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“காற்­ற­டிக்­கி­றது... பற­வை­யும் பறக்­கி­றது, பேப்­ப­ரும் பறக்­கி­றது. காற்று நின்ற பிற­கு­தான், பறவை எது என்று தெரி­யும்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எவ்­வ­ளவு துன்­பத்­தி­லும் பறக்க முடி­யும்; காற்று நின்ற பிற­கு­தான் எது பறவை என்று தெரி­யும். நின்று பிடிக்­கும் ஆற்­றல் பற­வைக்குஉண்டு, பேப்­ப­ருக்­குக் கிடை­யாது. காற்­ற­டிக்­கி­றது, பற­வை­யும் பறக்­கி­றது, பேப்­ப­ரும் பறக்­கி­றது. காற்று நின்ற பிற­கு­தான் பறவை தள­பதி ஸ்டாலின் என்­பது தெரி­யும். இதற்கு மேல் நான் நீட்­டிக்க விரும்­ப­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நம் நாட்டு நீதி­மன்­றங்­கள் மிக மிகச் சுறு­சு­றுப்­பாக இயங்­கக்­கூ­டி­யவை. அப்­பாவு அவர்­கள் 2016 சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்­பதை இந்­தக் கால­கட்­டத்­தில் அறி­விக்­கும் அள­வுக்கு மிக வேக­மாக வேலை பார்க்­கும் ஆச்­ச­ரி­ய­மான நீதி­மன்­றங்­கள்.அனை­வ­ரை­யும் அந்­தந்த நேரத்­தில் வேலையை முடி என்று உத்­த­ரவு போடு­வார்­கள்; அவர்­கள் மட்­டும் எப்­போது சௌக­ரி­யமோ அப்­போ­து­தான் தங்­க­ளு­டைய தீர்ப்­பு­களை எழு­து­வார்­கள். ஒன்­றும் செய்ய முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் இவ்­வ­ளவு கஷ்­ட­மான சூழ்­நி­லை­யி­லும் மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­தைக் கொண்டு செலுத்தி, மக்­களை நம்பி ஓர் இயக்­கத்தை நடத்தி வெற்றி பெற்ற ஒரு மாபெ­ரும் தலை­வன், கலை­ஞர். அவர் பிறந்த நாள் என்­பது ஒரு நாளைய அடை­யா­ளம் அல்ல; அது அழி­யாத தமி­ழி­னம் என்ற தத்­து­வத்­தி­னு­டைய அடை­யா­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்வாறு அவர் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>