<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,384,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 06 2026 16:14:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260607T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07062026-MDU-07" position.sequence="07" ex-ref="07062026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">அடித்­தட்டு மக்­க­ளின்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">சுய­ம­ரி­யா­தையை காத்து, அதை சட்­டங்­க­ளாக்­கி­ய­வர் கலை­ஞர் !</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சைதைத் தேர­டித் திட­லில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடை­பெற்ற முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாள் விழா­வில் சுப. வீர­பாண்­டி­யன் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup690165_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="subavee_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் அனைத்­துத் தரப்பு அடித்­தட்டு மக்­க­ளின் சுய­ம­ரி­யா­தை­யைக் காத்து அதை சட்­ட­மாக்­கி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் என்று சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற பிறந்த நாள் பொதுக்­கூட்­டத்­தில் திரா­வி­டர் இயக்க தமி­ழர்­கள் பேர­வைத் தலை­வர் சுப. வீர­பாண்­டி­யன் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் 103ஆம்­ஆண்டு பிறந்­த­நாள் விழா வாழ்த்­த­ரங்க நிகழ்ச்சி சைதை தேர­டித் திட­லில் 3-.6-.2026 அன்று மாலை 6 மணிக்­குத் தொடங்கி நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வி­ழா­வில் திரா­விட இயக்க தமி­ழர் பேரவை­ தலை­வர் சுப.வீர­பாண்­டி­யன் அவர்­கள் கலந்­து­கொண்டு வாழ்த்­துரை வழங்­கி­னார். அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­ட­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">யாரா­வது நம்­பு­வார்­களா? தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­தக் கட்சி இவ்­வ­ளவு பெரிய நிகழ்ச்சி நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதை யாரா­வது நம்­பு­வார்­களா? தி.மு.க.வின் தனித்­தன்மை என்­ன­வென்று கேட்­டால் இது­தான் என்­பதை உரக்­கச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மே-4 நம்மை வீழ்த்­தி­வி­டும் என்று பலர் நினைத்­தார்­கள். ஜுன் -3 மறு­ப­டி­யும் நம்மை உயர்த்தி நிறுத்­தும். நான் மேடை­யி­லும், எதி­ரி­லும் அமர்ந்­தி­ருக்க எல்­லோ­ரை­யும், ஒவ்­வொ­ரு­வ­ரா­கப் பெயர் சொல்லி அழைக்­கப்­போ­வ­தில்லை. நாம் எல்­லோ­ருக்­கும் ஒரே பெயர் தான். முன் எப்­போ­தைக் காட்­டி­லும், இப்­போது இரு­வண்­ணக் கொடியை இறு­கப் பற்­றி­யி­ருக்­கும் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­புக்­கள் அனை­வ­ருக்­கும் என் அன்பு வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் ஒரு மான­முள்ள சுய­ம­ரி­யா­தைக்­கா­ரன் என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட தலை­வர் கலை­ஞர் அவர்­களை மறு­ப­டி­யும் மேடைப் போட்டு அதை மெய்­பிக்­க­வேண்­டி­யத் தேவை நமக்கு இல்லை. ஆனால் அவ­ரு­டைய சுய­ம­ரி ­யாதை உணர்­வு­க­ளில் ஒரு நுட்­பம் இருக்­கி­றது. அதை மட்­டும் சொல்­லி­மு­டிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு சின்ன நிகழ்­வுக்கு முன்­னாள், 12 அல்­லது 13 ஆண்­டு­க­ளுக்கு முன்­னாள் இதே ஜுன் -3ஆம் தேதி புதுக்­கோட்­டை­யில் உரை­யாற்­று­வ­தற்­காக நான் சென்­றி­ருந்­தேன். மாலை­யில் பொதுக்­கூட்­டம், காலை நேரத்­தில் மச்­சு­வாடி என்ற இடத்­திற்கு போய்­வ­ர­லாம் என்று என்னை அழைத்­துச்­சென்­றார்­கள். அப்­போது மாவட்­டச் செய­லா­ள­ரா­க­வி­ருந்த பெரி­யண்­ணன் அரசு, கவி­ஞர் கவி­தைப்­பித்­தன், சந்­தி­ர­சே­க­ரன் எல்­லோ­ரும் சேர்ந்து மச்­சு­வா­டிக்கு என்னை அழைத்­துச்­சென்­றார்­கள். எதற்கு என்று எனக்கு அப்­போது தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மச்­சு­வா­டி­யி­லே­யே­தான், தொழு­நோய் இர­வ­லர்­க­ளின் மறு­வாழ்­வுத் திட்­டம் இருக்­கி­றது. அவர்­க­ளுக்­கான சில உத­வித்­திட்­டங்­களை செய்­வ­தற்­காக அழைத்­துச்­சென்­றார்­கள். அப்­போது 416 பேர் அங்கு இருந்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது. அதில் ஒரு பெரி­ய­வர்­தான் இன்­றைக்கு நான் பேசப்­போ­கிற இந்த தலைப்­பைத் தந்­த­வர். தெருக்­க­ளில் நாங்­கள் தொழு­நோ­யா­ளி­க­ளாக மட்­டும் இல்லை. எல்லா இடங்­க­ளி­லும் அவ­ம­திக்­கப்­பட்­டோம். தெருக்­க­ளில் பிச்சை எடுத்­துக்­கொண்­டி­ருந்­தோம். அய்யா கலை­ஞ­ரைப் பார்த்­தால் சொல்­லுங்­கள், நாங்­கள் சுய­ம­ரி­யா­தை­யோடு வாழ்­கி­றோம் என்று சொல்­லுங்­கள் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­வர் சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர் என்­ப­தற்கு, தன்­னு­டைய சுய­ம­ரி­யா­தையை மட்­டும் நிலை­நி­றுத்­திக் 
கொள்­வ­தற்­காக அல்ல. நம்­மு­டைய அத்­த­னைப்­பே­ரு­டைய சுய­ம­ரி­யா­தைக்­காக சிந்­தித்­த­வர் தலை­வர் கலை­ஞர் என்­ப­தால், அவர் சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏறத்­தாழ 3,700 பேர் தமிழ்­நாடு முழு­வ­தும், தொழு­நோ­யா­ளி­க­ளாக இருந்­த­வர்­களை சேர்த்து பல்­வேறு இடங்­க­ளில் இல்­லங்­களை உரு­வாக்கி, வெறு­மனே தங்­கும் இட­மில்லை. நான் அன்­றைக்­குத்­தான் மச்­சு­வா­டி­யி­லேப் பார்த்­தேன். பிறகு பர­னூ­ரில் பார்த்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­க­ளுக்­குத் தங்­கு­வ­தற்கு இடம். அவர்­க­ளு­டைய உட­லின் சில பகு­தி­கள் குறைந்­தி­ருக்­கும், இருக்­கிற உடலை வைத்­துக்­கொண்டு அவர்­கள் என்ன தொழில் செய்ய முடி­யும் என்­கிற தொழில் பயிற்சி. மறு­ப­டி­யும் பிச்சை எடுக்க முடி­யாது. அது­மட்­டு­மல்ல. அந்த இல்­லத்­திற்­குள்­ளேயே அவர்­க­ளுக்­கான மருத்­து­வச் சிகிச்சை, இத்­த­னை­யை­யும், நினைத்­துப் பார்த்த ஒரு மாம­னி­தன் இருந்­தி­ருக்­கி­றார் என்­றால், அவர்­தான் சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் திட்­டத்தை எப்­போது கொண்­டு­வந்­தார். 1971ஆம் ஆண்டு ஜுன் - 3. இதே நாள்­தான். 1972 ஜுன்-3, கண்­ளொளி வழங்­கும் திட்­டம். பார்­வை­யில்­லா­மல் ஒரு­வன் அலை­யக்­கூ­டாது. அவ­னு­டைய சுய­ம­ரியா ­தையைக் காப்­பாற்ற வேண்­டும். எவ்­வ­ளவு பேர் ஏழரை லட்­சம் பேர். பர­னூ­ருக்கு ஒரு முறை இந்­தி­ரா­காந்தி அம்­மை­யார் வந்­த­போது பேசு­கி­றார். தொழு­நோ­யா­ளர்­க­ளுக்குஒரு மறு­வாழ்­வுத்­திட்­டத்தை உரு­வாக்க வேண்­டும் என்­கிற எண்­ணம் இந்த மனி­த­ருக்கு,எப்­படி வந்­ததோ என்று தெரி­ய­வில்லை என்­கி­றார். இந்­தி­யா­வி­லேயேமுதன்­மை­மு­றை­யாக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பிறகு ஏழரை லட்­சம் பேருக்கு கண்­ணொளி வழங்­கு­கி­றத் திட்­டம். ஒருலட்­சத்து ஏழா­யி­ரம் பேருக்கு, கேட்­ராக்ட் என்று சொல்­லு­கிற கண் புரை நீக்­கு­கிற அந்த அறு­வைச் சிகிச்­சையை செய்­தது கலை­ஞ­ரின் அரசு. ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய சுய­ம­ரி­யா­தை­யை­யும் எப்­படி காப்­பாற்­றி­யி­ருக்­கி­றார் என்­ப­தற்­காக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">கைரிக்க்ஷா ஒழித்­த­வர் கலை­ஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1973ஆம் ஆண்டு ஜுன்-3 கை ரிக்க்ஷா ஒழிப்­புத்­திட்­டம். மனி­தனை வைத்து மனி­தன் இலுக்­க­லாமா? கம்­யூ­னிஸ்ட் ஆண்ட மேற்­கு­வங்­கத்­தில்­கூட கைரிக்க்ஷா இருந்­தது. தமிழ்­நாட்­டில்­தான் அவர் கை ரிக்­க்ஷாவை ஒழித்­தார்.  ஆனால் என்ன செய்­வது நண்­பர்­களே, மக்­கள் மறந்து போனார்­கள். கைரி­க்ஷாவை ஒழித்­த­வ­ருக்கு வாக்­க­ளிக்­கா­மல், ஆட்­டோக்­கா­ர­ராக நடித்­த­வ­ருக்கு வாக்­க­ளித்­தார்­கள். ரிக்­க்ஷா­கா­ர­ராக நடித்­த­வ­ருக்கு வாக்­க­ளித்­தா­லும் பர­வா­யில்லை. அவ­ரோடு சேர்ந்து நடித்­த­வ­ருக்­கும் வாக்­க­ளித்­தார்­கள். ஆனால் அத்­த­னை­பே­ரு­டைய சுய­ம­ரி­யா­தை­யை­யும் காப்­பாற்­றி­யது நம்­மு­டைய சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1974ஆம் ஆண்டு ஜுன்-3, ஒவ்­வொரு ஆண்டு ஜுன் வரு­கி­ற­போ­தும், ஒரு குறிப்­பிட்ட பகுதி மக்­க­ளின் சுய­ம­ரி­யா­தை­யைக் காப்­பாற்­று­கி­றார். இப்­படி நான் சொல்­லு­கி­ற­போதே பேரா­சி­ரி­யர் தீபக் அவர்­க­ளுக்­குப் புரிந்­தி­ருக்­கும். மாமல்­ல­பு­ரம் போகிற வழி­யில் இருக்­கிற முட்­டுக்­காட்­டில், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஒரு மாற்­றுத்­திட்ட இல்­லம். மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஒரு தொழிற்­ப­யிற்­சிக் கூடம். சக்­கர நாற்­கா­லி­கள், காது­கேட்­கும் கரு­வி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காது­கேட்­கிற கருவி என்று கேட்­கி­ற­போ­தெல்­லாம் எனக்கு ஒரு நினை­விற்கு வரும் நண்­பர் மீஞ்­சூர் பாஸ்­கர் ஒரு தடவை சொன்­னார். அங்கு இருக்­கிற தேனீர்­கடை நப­ருக்கு காது­கேட்­கும் கருவி வாங்கி கொடுத்­தோம். மகிழ்ச்­சி­யாக வாங்­கிக்­கொண்­டார். ஒரு வாரத்­திற்­குப் பிறகு பார்க்­கி­ற­போது அந்த கரு­வியை காண­வில்லை. ஏன் காதில் வைத்­துக்­கொள்­ள­வில்­லையா? என்று கேட்­ட­தற்கு சொன்­னார். எப்­ப­டித்­தான் இவ்­வ­ளவு சத்­தத்­தில் வாழ்­கி­றீர்­களோ உங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. இத­னால் எனது அமை­தியே போய்­விட்­டது என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனது மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் எல்­லோ­ருக்­கும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை, தொழு­நோ­யா­ளி­களை, எப்­படி மதிக்­கி­ற­வர் என்­ப­தற்கு இன்று காலை­தான் நமது நண்­பர்­க­ளுக்கு ஒரு நிமி­டச் செய்­தி­யாக நான் அனுப்­பி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய நெஞ்­சுக்கு நீதி முதல் தொகுதி நூல் வெளி­யீட்டு விழா, அது 1975 ஜன­வரி 12 அன்று நடந்­தி­ருக்க வேண்­டும். முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, குடி­ய­ர­சுத் தலை­வ­ராக இருந்த சத்­ரு­தீன் ஹரிஅக­மது அவர்­கள் வெளி­யிட்­டி­ருக்க வேண்­டும். அதை வெளி­யி­டு­வ­தா­க­வும், அன்­றைக்கு ஆளு­ந­ராக இருந்த கே.கே.ஷா அவர்­கள் தலைமை வகிப்­ப­தா­க­வும் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆளு­நர்­களை எப்­போ­தும் நம்­ப­மு­டி­யாது போலி­யி­ருக்­கி­றது. அப்­போ­தும் நம்ப முடி­ய­வில்லை. ஆளு­நர் யாரோ சிலர் மூல­மாக சில செய்­தி­களை அனுப்­பி­னார். குடி­ய­ர­சுத் தலை­வர் வர இய­லாது என்று கடைசி நேரத்­தில் சொல்­லி­விட்­டார். ஆளு­ந­ரும் கலந்­து­கொள்­ள­வில்லை. அதை தயா­ரித்த தின­மணி கதிர் பதிப்­ப­கம் கொஞ்­சம் தடு­மா­றி­விட்­டது. கலை­ஞர் சொன்­னார் கலங்க வேண்­டாம். யார் வெளி­யீட்­டால் என்ன? புத்­த­கம்­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெளி­யீட்டு விழா எப்­படி நடந்­தது தெரி­யுமா? 1975 ஏப்­ரல் 30 கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். விழி இழந்­தோர் சங்­கத்­தின் தலை­வர் நல்­ல­தம்பி என்­ப­வர் பார்­வை­யற்­ற­வர் தலை­மை­யில் விழா நடந்­தது. முகம்­மது அலி என்­கிற ஒரு தொழு­நோ­யாளி அந்த புத்­த­கத்தை வெளி­யிட்­டார். சாந்­த­கு­மாரி என்­கிற ஒரு­வர் சக்­கர நாற்­கா­லி­யிலே வந்து பெற்­றுக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1974இல் ஊன­முற்­றோர் நலத்­திட்­டம் என்­று­தான் இருந்­தது. அதைக்­கூட 2010ஆம் ஆண்­டில் கலை­ஞர் என்ன நினைத்­தார். சொற்­க­ளால் கூட காயப்­ப­டுத்­தக்­கூ­டாது, அவ­னது சுய­ம­ரி­யா­தை­ யைச் சுரண்­டக் கூடாது. அவன் உடல் ஊன­முற்­ற­வன் இல்லை. மாற்­றுத்­தி­ற­னாளி என்று, 2010ஆம் ஆண்டு மார்ச்- 1 அறிக்கை விட்டு அறி­வித்­த­வ­ரும் தலை­வர் கலை­ஞர்­தான். மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளைக் கொண்டு ஒரு புத்­த­கம் வெளி­வந்­தது என்­பதை எங்­கே­யா­வதுகேள்­விப்­பட்­ட­துண்டா? அவர்­க­ளு­டைய சுய­ம­ரி­யா­தையை அந்த இடத்­தில்நிறுத்­திக்­காட்­டி­ய­வ­ரும் அவர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1972, 1973, 1974 என்று ஒவ்­வொருஆண்­டும் ஆத­ர­வற்­றோ­ருக்­கான கருணை இல்­லம். அவ­ரு­டைய பிறந்­த­நா­ளில் ஒவ்­வொரு ஆண்­டும் அவர் செய்­தி­ருக்­கிற செயல்­கள், நம்­மு­டைய சுய­ம­ரி­ யா­தையை காப்­பாற்­று­கிற செயல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குதி­ரைப் பந்­த­யத்தை ஒழித்­தார். அதன் பிறகு ராஜாஜி அவர்­க­ளு­டைய நினை­வி­டத்­தைத் திறப்ப­ 
தற்­காக வந்த ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன் அவர்­கள் மேடை­யிலே ஒரு வேண்­டு­கோள் வைத்­தார். நீங்­கள் குதி­ரைப் பந்­த­யத்தை ஒழித்­து­விட்­டீர்­கள். லாட்­டரி சீட்­டை­யும் ஒழித்­து­வி­டுங்­கள் என்று கலை­ஞ­ரி­டம் கோரிக்கை வைத்­தார். கலை­ஞர் மேடை­ யி­லேயே அறி­வித்­தார். அடுத்­தாண்டு தமிழ்­நாட்­டி­லி­ருந்து லாட்­டரி சீட்டு ஒழிக்­கப்­பட்­டது. லாட்­டரி சீட்­டுக்­குப் பின்­னால்­போய் தமி­ழன், சுய­ம­ரி­யா­தையை இழந்­து­வி­டக்­கூ­டாது என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால் பாருங்­கள். சில லாட்­டரி சீட்­டுக்­கா­ரர்­க­ளுக்குஇன்­ன­மும் கோபம் இருக்­கி­றது. கலை­ஞர் அவர்­கள் 1975ஆம் ஆண்டு ஒழித்­தார். இப்­போ­தும் அந்த கோபம் சில­பே­ருக்கு இருக்­கி­றது என்று புரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வ­ள­வும் செய்­தி­ருக்­கிற நம்­மைப் பார்த்து சிலர் சொல்­கி­றார்­கள். தி.மு.க. தீய சக்தி. கார சக்தி. பார சக்தி, கோர சக்தி. ஒரு நண்­பர் கேட்­டார். இதெற்­கெல்­லாம் என்ன பொருள் என்று. அவ­ரைக் கேட்டு சிர­மப்­ப­டுத்தா ­தீர்­கள். அவர் என்ன வைத்­துக்­கொண்டு வஞ்­ச­கமா செய்­கி­றார். அவ­ருக்கு தெரிந்­தால்­தானே சொல்­வார். எழு­திக்­கொ­டுத்­தார்­கள். பேசு­கி­றார். வேறு என்ன? அவ­ரா­கவா பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் அவை வசைச் சொற்­கள் என்று கரு­தி­யி­ருக்­க­லாம். நான் இந்­த­மே­டை­யிலே சொல்­கி­றேன். தி.மு.க/வை தூர சக்தி என்­பதோ. பார சக்தி என்­பதோ, கோர சக்தி என்­பதோ, வசைச் சொற்­கள் இல்லை. அவை­யும் ஒரு விதத்­தில் தி.மு.க.விற்கு பொருந்­தும். தி.மு.க/ தூர சக்­தி­தான். திரும்பி பாருங்­கள் ஒரு நூற்­றாண்­டுப்­பின்­னால் நமக்கு வர­லாறு இருக்­கி­றது. நான் அதைத்­தான் சொன்­னேன். நம்­ம­வர்­கள் இந்த தொழில்­நுட்­பத்­திற்கு வந்­து­வி­ட­வேண்­டும் என்று கரு­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">அடுத்த தலை­முறைக்கு 
நாம் நிறைய சொல்ல வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த இன்ஸ்­டாவோ, ரீல்ஸ் போதும் என்று நம்­மு­டை­ய­வர்­களே கரு­தத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள். இரண்­டு­நி­மி­டம் போதும் என்று. புரிந்­து­கொள்­ளுங் கள் பெரி­யோர்­களே, வர­லாறு இல்­லா­த­வர்­க­ளுக்கு இரண்டு நிமி­டம் போதும். நமக்கு இரண்டு நிமி­டம் போதாது. சுருங்­கச் சொல்­வது வேறு. ஆனால் நாம்  அடுத்த தலை­மு­றைக்கு நிறைய சொல்­ல­வேண்­டி­யி­ருக்­கி­றது. ஒரு வேளை நாம் சொல்ல தவ­றி­விட்­டோமோ என்று தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே இன்­றைக்கு நீங்­கள் எண்­ணிப்­பார்த்­தால், தூர சக்திஎன்­றால், தூரத்­தில் தொடங்­கிற்று நம்­மு­டைய வர­லாறு. ஒரு நூற்­றாண்­டுக்கு முன்­னர் தொடங்­கிற்று. இன்­னும் ஒரு நூற்­றாண்­டுக்கு இந்த இயக்­கம் வழி நடத்­தும். இது ஒரு தூர­சக்­தி­தான். யார் இல்­லை­யென்றுசொன்­னார்­கள். தொலை­தூர பார்வை எங்­க­ளுக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பிறகு பார சக்தி என்­கி­றார்­களே? பாரம் என்­றால் கனம் என்று பொருள். இந்த மேடை கன­மா­னது. இதே போல ஜுன் - 3ஆம் தேதி­தான், பலத் திட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்­தார். பிறகு 2008 ஏப்­ரல் மாதத்­தில். 1975க்குப் பிறகு ஏன் அந்­தத் திட்­டங்­கள் இல்லை. நம்­மு­டைய ஆட்­சிக் கலைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1989ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­த­துமே கலை­ஞர் செய்­தது. நினை­விலே வைத்­துக்­கொள்­ளுங்­கள். தன்­னு­டைய பிறந்­த­நாள் ஜுன்-3க்கு சில நாட்­கள் முன்­பா­கவே பெண்­க­ளுக்கு சொத்­து­ரிமை என்­பதை கலை­ஞர் அறி­வித்­தார். இங்கே இருக்­கிற பெண்­கள் குறித்து­ வைத்­துக் கொள்­ளுங்­கள். அது சொத்­து­ரி­மை­யல்ல. பெண்­க­ளு­டைய சுய­ம­ரி­ யாதை. யாரை­யும், யாரி­டத்­தி­லும் கைநீட்டி நிற்­க­வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2008ஆம் ஆண்டு, திரு­நங்­கை­க­ளுக்­கான நல­வா­ரி­யத்தை உரு­வாக்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர்­தான். அண்­மை­யிலே India Designs என்ற புத்­த­கத்­தைப் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது, ஒரு திரு­நங்கை ஒரு கவிதை எழு­தி­யி­ருக்­கி­றார். We are no parents. We are no siblings. எங்­க­ளுக்கு யாரு­மில்லை. உடன்­பி­றந்­த­வர்­கள் எங்­களை ஏற்­க­வில்லை. தன்­னந்­த­னி­யாய், அநா­தை­க­ளாய், நாங்­கள் நின்ற காலம் உண்டு என்று. கலை­ஞர்­தான் அவர்­க­ளுக்­கான ஒரு நல­வா­ரி­யத்தை ஏற்­ப­டுத்தி, ஏறத்­தாழ மூவா­யி­ரம் பேருக்­கான அடை­யாள அட்டை, குடும்ப அட்­டை­க­ளைக் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மேடை­யிலே நான் பேசு­வ­தற்கு தற்­செ­ய­லாக ஒரு பொறுத்­த­மும் உண்டு. 2015 ஏப்­ரல் 15இல் மாநி­ல­ளங்­க­ள­வை­யில் திரு­நங்­கை­யர்­க­ளுக்­கானதனி­ந­பர் மசோ­தாவை கொண்­டு­வந்­த­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திருச்சி சிவா அவர்­கள்.  அவர் ஏப்­ர­லிலே கொண்டு­வந்­தார். பிறகு அங்­கே­யி­ருந்து மக்­க­ள­வைக்­குப் போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த அரி­ய­வகை ஏழை­கள் இருக்­கி­றார்­களே, உயர்­ஜா­தி­யிலே பிறந்து அவர்­கள் ஏழை­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு, நான்கே நாட்­க­ளில் நிறை­வே­றிற்று. கவ­னத்­தில் வையுங்­கள். நானும் கோரிக்கை வைக்­க­வில்லை. கால­கா­ல­மாக இட­ஒ­துக்­கீடு வேண்­டும் என்று கேட்­கிற நமக்கு அது நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வி.பி.சிங் என்­கிற ஒரு மனி­தன் வர­வில்லை என்­றால், பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு கிடைத்­தி­ருக்­காது. தமிழ்­நாடு மைசூ­ரி­லே­தான் தொடக்­கம். 1978 வரைக்­கும் வட­நாட்­டில் பிற்­ப­டுத்­தப்­பட்ட­ வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு இல்லை. பீகா­ரிலே கற்­பூ­ரி­சாம்­பர் என்­கிற ஒரு முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போ­து­தான் அது தொடங்­கிற்று. ஆறு மாதத்­தில் அவ­ரு­டைய ஆட்­சிக் கலைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் பணக்­கா­ரர்­க­ளுக்கு. மிகப்­பெ­ரிய ஜாதி என்று சொல்­லிக்­கொள்­கி­ற­வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு நான்கே நாட்­க­ளில். இன்­றைக்கு மாநி­லங்­க­ளை­வை­யில் அதற்கு பிறகு உட­ன­டி­யாக குடி­ய­ர­சுத் தலை­வ­ரு­டைய கையொப்­பம். திருச்சி சிவா அவர்­கள் கொண்­டு­வந்த தனி­ந­பர் மசோதா, 2015 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­திலே கொண்­டு­வ­ரப்­பட்­டது. 2016 பிப்­ர­வ­ரி­யிலே ­தான் மக்­க­ள­வைக்­குப் போகி­றது. அவர்­க­ளுக்­கும்­கூட சுய­ம­ரி­யா­தைக்­காக நல­வா­ரி­யத்தை உரு­வாக்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர். எனவே இது ஒரு பார­சக்­தி­தான். கன­மான சக்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மா.சே.துங் தான் சொல்­வார். ஒரு துரோகி இறந்­து­போ­னால், ஒரு மயில் இறகு கீழே விழு­வ­தைப் 
­போல, ஒரு போராளி இறந்­து­போ­னால், ஒரு தியாகி இறந்­து­போ­னால், அது மேலே­யி­ருந்து ஒரு பாறை விழு­வ­தைப் போல. தி.மு.க. என்­பது ஒரு பாறை­யைப்­போல. நம் முத­ல­மைச்­சர் ஜோசப்விஜய் தெரி­யா­மல் பேசி­னார் என்று நினைக்­கா­தீர்­கள்.புரிந்­து­ தான், நேர­டி­யா­கப் பாராட்­டி­னால் பக்­கத்­தி­லி­ருக்­கிற லாட்­டரி சீட்­டுக்கா­ ரர்­கள் கோவப்­பட்­டுக்­கொள்­ளப்­போ­கி­றார்­கள் என்று, மறை­மு­க­மாக சொல்­கி­றார். இது ஒரு தூர சக்தி. பார சக்தி என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது என்ன கோர சக்தி என்­கி­றாரே? அது­வும் பொருந்­தும். கலை­ஞர் ஒரு­முறை சொன்­னார். எவ­னா­வது ஜாதி­யின் அடிப்­ப­டை­யில் ஏற்­றத்­தாழ்­வு­க­ளைக் கற்­பித்­தால், கட்டை விரலோ, தலையோ எவ­ரே­னும் காணிக்கை வேண்­டு­மென்று கேட்­டால், அவன்பட்டை உரி­யும். சுடு­காட்­டில் அவன் கட்டை எரி­யும் என்றுபாடி­ய­வர் தலை­வர் கலை­ஞர். கோர­சக்­தி­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எவ­னா­ன­வது சனா­த­னம் ஒழிய வேண்­டும் என்று நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் சட்­ட­மன்­றத்­திலே பேசி­னால் அவர்­க­ளுக்கு கோர சக்­தி­யா­கத்­தானே படும். ஒப்­புக்­கொள்­கி­றோம். இன்­னு­மொரு முறை உரக்­கச் சொல்­லுங்­கள். தி.மு.க. கோர சக்­தி­தான், தி.மு.க பார சக்­தி­தான். தி.மு.க சாதி­யால் மக்­க­ளைப் பிரிப்­ப­வர்­க­ளுக்கு கோர சக்­தி­தான் என்று. முத­ல­மைச்­சர் அவர்­களே முடிந்­தால் இன்­னொன்­றை­யும் அடுத்­தக்­கூட்­டத்­தில் சேர்த்­துக்­கொள்­ளுங்­கள். ஏழை, எளி­ய­வர்­க­ளி­டம் அன்­புக்­காட்­டு­கிற ஈர சக்­தி­யும் தி.மு.கதான். ஏனென்­றால் அடுக்­கு­மொ­ழிக்­கும் உங்­க­ளுக்கு பொருந்தி வரு­கி­றது. இல்­லை­யென்­றால் அவர் ஒப்­புக்­கொள்­ள­மாட்­டார்.அது கோர சக்தி. பார சக்தி. அது ஈர சக்தி என்று அதை­யும் சேர்த்­துக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்­னு­டைய ஒரு சிறிய ஆதங்­கத்தை பதிவு செய்து ­விட்டு எனது உரையை நிறைவு­ செய்­கி­றேன். நாங்­கள் ஈர சக்­தி­தான். எதி­ரி­க­ளி­டம்­கூட அன்­புக்­காட்­டு­கி­ற­வர்­கள்­தான். கலை­ஞர்­தான் அதை­யும் நமக்­குச் சொல்­லித்­தந்­தார். என்னை நீங்­கள் கட­லில் தூக்­கிப்­போட்­டா­லும், கட்­டு­ம­ர­மா­கத்­தான் மிதப்­பேன். கவிழ்ந்­து­விட மாட்­டேன். நீங்­கள் ஏறி அதில் பய­ணம் செய்­ய­லாம் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சரி­யா­கவோ, தவ­றா­கவோ புரிந்­து­கொண்டு, அண்­மை­யில் நான் எல்­லாத் தொலைக்­காட்­சி­யி­லும் பார்த்­தேன். தாய் மாமன் சீர் கொண்­டு­போ­கி­ற­வரை, இவ்­வ­ளவு பெருந்­தன்­மையா என்று எனக்­குத் தோன்­றிட்டு, நம்­மு­டைய மேனாள் அமைச்­சர் - மாவட்­டச் செய­லா­ளர் யாரு­டைய வீட்­டிற்கு தாய்­மா­மன் சீர் கொண்­டு­போ­கி­றார் என்­றால், இது பெரி­யார் மண் இல்லை. பெரி­யாரே மண் என்று சொன்­ன­வர் வீட்­டிற்கு, அண்ணா, கலை­ஞ­ரின் நினை­வி­டங் ­களை இடிக்க வேண்­டும்  என்று சொன்­ன­வர் 
வீட்­டிற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் சொல்­ல­வேண்­டும் என்று சொன்­னால், கல்­லக்­குடி கொண்ட கரு­ணா­நிதி எனும் பாட்டை, கள்­ளத்­த­னம் கொண்ட கரு­ணா­நிதி என்று பாடி­ய­வ­ரின் வீட்­டுக்கு, ஆரிய கடப்­பா­ரைக் கொண்டு திரா­வி­டக் கோட்­டையை இடிப்­பேன் என்று சொன்­ன­வர் வீட்­டிற்கு. தாய் மாமன் சீர் கொண்­டு­போ­கிற அள­வுக்கு எவ்­வ­ளவு பெரிய உள்­ளம். நாம் கொஞ்­சம் சின்­ன­புத்­திக்­கா­ரர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரைப் படித்­த­வன். அண்­ணாவை உண்­மை­யி­லேயே படித்­த­வ­னாக இருந்­தால்­தான் சாகும் வரை பகை­யா­ளி­யா­கவே இருப்­பேனே தவிர, ஒரு நாளும் உற­வா­ளி­யாக இருக்க மாட்­டேன். இது­வும் சுய­ம­ரி­யா­தை­யின் ஒரு வடி­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு சுப.வீர­பாண்­டி­யன் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், ஜீ.வி. மார்க்கண்டேயன்  கலந்து கொண்டு தொகுதியில் குடிநீர் பணிகள், மற்றும் சாலை வசதி பணிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ஹைகோர்ட் ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செல்வம், ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன்,  இம்மானுவேல்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும்  துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>