<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,635,610,1122" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 08 2026 03:30:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260608T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08062026-CBE-02" position.sequence="02" ex-ref="08062026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">எந்தவித கட்டுப்பாடு - முறையான கண்காணிப்பு - கணக்கெடுப்பு இல்லாமல்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">திருப்பூருக்கு ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வருகை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">தொழில் நகரின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருப்­பூர், ஜூன் 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எந்­த­வித கட்­டுப்­பா­டும் - முறை­யான கண்­கா­ணிப்­பும் - முறை­யானகணக்­கெ­டுப்பு இல்­லா­மல் திருப்­பூ­ருக்குரயி­லில் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான வட­மா­நில தொழி­லா­ளர்­கள் வரு­கை­யால் பொது­மக்­க­ளி­டையே ஒரு வித­மான அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது, இது தொழில் நக­ரின் பாது­காப்­பிற்­குப் பெரும் அச்­சு­றுத்த லாக மாறி­யுள்­ளது. இத­னால் குற்ற சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ள­தால்பொது­மக்­கள்கலக்­கத்­தில் உள்­ள­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தொழில் நக­ர­மான திருப்­பூ­ரின் பின்­ன­லாடை மற்­றும் அது சார்ந்த தொழில்­களை நம்பி, தமி­ழ­கத்­தின் பிற மாவட்­டங்­க­ளில் இருந்­தும், வட மாநி­லங்­க­ளில் இருந்­தும் தின­மும் ஆயி­ரக்­க­ணக் கான தொழி­லா­ளர்­கள் வந்த வண்­ணம் உள்­ள­னர். இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­க­ளில் இருந்­தும் வாழ் வாதா­ரத்­திற்­காக வரும் தொழி­லா­ளர்­க­ளின் புக­லி­ட­ மாக திருப்­பூர் விளங்கி வரு­கி­றது. ஆனால், சமீப கால­மாக எந்­த­வித கட்­டுப்­பா­டும், முறை­யான கண்­காணிப்­பும், முறை­யானகணக்­கெ­டுப்பு இல்­லா­மல் லட்­சக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­கள் நக­ருக்­குள் வரு­வது பொது­மக்­க­ளி­டையே ஒரு வித­மான அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு வரும் தொழி­லா­ளர்­களை பற்­றிய முறை­யான புள்ளி விவ­ரங்­களோ அல்­லது கணக்­கெ­டுப்போ அர­சி­டமோ, மாவட்ட நிர்­வா­கத்­தி­டமோ அல்­லது காவல் துறை­யி­டமோ இல்லை. வட மாநி­லங்­க­ளில் இருந்து ரயில்­கள் மூலம் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திருப்­பூ­ரில் இறங்­கு­கின்­ற­னர். அவர்­கள் யார்?, அவர்­க­ளின் பின்­னணி என்ன?, சொந்த ஊரில் ஏதே­னும் குற்­றப் பின்­னணி உள்­ளதா?, என்­பது போன்ற எந்­த­வொரு அடிப்­ப­டைத் தக­வ­லும் உள்­ளூர் நிர்­வா­கத்­திற்­குத் தெரி­வ­தில்லை. இது தொழில் நக­ரின் பாது­காப்­பிற்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">குறிப்­பாக, கடந்த பிப்­ர­வரி மாதம் டெல்­லி­யில் பாது­காப்பு படை­யி­ன­ருக்கு மிரட்­டல் விடுக்­கும் வகை­யில் ஒட்­டப்­பட்ட போஸ்­டர்­கள் தொடர்­பான வழக்­கில், டெல்லி தனிப்­படை போலீ­சார் திருப்­பூ­ரில் முகா­மிட்டு அதி­ரடி வேட்டை நடத்­தி­னர். இதில், போலி ஆவ­ணங்­கள் மூலம் திருப்­பூ­ரில் தங்­கி­யி­ருந்த மிஜா­னூர் ரஹ்­மான், முக­மது சபத், உமர் உள்­ளிட்ட 6 வங்­க­தேச தொழி­லா­ளர்­களை டெல்லி போலீ­சார் கைது செய்து அழைத்­துச் சென்­ற­னர். இதற்கு முன்­பாக, கடந்த ஆண்­டும் வட மாநில தொழி­லா­ளர்­கள் என்ற போர்­வை­யில் திருப்­பூ­ரில் சட்­ட­வி­ரோ­த­மாக பணி­பு­ரிந்து வந்த 25 வங்­க­தேச வாலி­பர்­கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளுக்கு நீதி­மன்­றம் சிறைத்­தண்­டனை விதித்­தது குறிப்­பி­டத்­தக்­கது. முறை­யான கணக்­கெ­டுப்பு இல்­லா­த­தால் சர்­வ­தேச ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் கூட திருப்­பூ­ரில் எளி­தாக தங்கி விட முடி­கி­றது. இது மட்­டு­மன்றி திருப்­பூ­ரில் ஆங்­காங்கே அரங்­கே­றும் குற்­றங்­கள் பொது­மக்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளன. இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு திருப்­பூர் கோல்­டன் நக­ரில் குடும்­பத் தக­ரா­றில் மனை­வியை கொடூ­ர­மாக கொன்ற பீகார் மாநி­லத்தை சேர்ந்த தொழி­லாளி ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கடந்த பிப்­ர­வரி மாதம், காத­லிக்க மறுத்த பெண்­ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற ஒடிசா மாநில வாலி­ப­ரின் வெறிச்­செ­ய­லும், பல்­ல­டத்­தில் பள்ளி, கல்­லூரி மாண­வர்­களை குறி­வைத்து கஞ்சா சாக்­லேட்­க­ளு­டன் பீகார் வாலி­பர் கைது செய்­யப்­பட்­ட­தும், கடந்த ஜன­வரி மாதம் சுமார்400 கிலோ தடை செய்­யப்­பட்ட குட்கா, புகை­யிலை பொருட்­க­ளு­டன் வட மாநில வாலி­பர்­கள் சிக்­கி­ய­தும் என அடுக்­க­டுக்­கான சம்­ப­வங்­கள் நீண்டு கொண்டே செல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஒரு குற்­றச்­சம்­ப­வம் நடந்த பிறகு. அதில் தொடர்­பு­டைய வெளி மாநில அல்­லது வெளி மாவட்ட நபர்­களை கண்­ட­றி­வது காவல்­து­றைக்கு சவா­லாக உள்­ளது. அவர்­கள் தங்­கி­யி­ருக்­கும் தற்­கா­லிக முக­வ­ரி­களோ, முறை­யான அடை­யாள அட்­டை­களோ இல்­லா­த­தால், குற்­ற­வா­ளி­கள் மிக எளி­தாக தப்­பிச்­சென்று விடு­கின்­ற­ னர்.  இது உள்­ளூர் மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்து வரு­கி­ற­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருப்­பூ­ரின் தொழில் வளர்ச்­சிக்­கும். உற்­பத்­திக்­கும் தொழி­லா­ளர்­க­ளின் வருகை அவ­சி­யம் என்­ப­தில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஆனால், அது சட்­டம் - ஒழுங்கை சீர்­கு­லைக்­கும் வகை­யில் அமைந்து விடக்­கூ­டாது. திருப்­பூ­ருக்கு வரும் தொழி­லா­ளர்­க­ளின் கணக்­கெ­டுப்பை முழு­மை­யாக மேற்­கொள்ள வேண்­டும் என பொது­மக்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது குறித்து சமூக ஆர்­வ­லர்­கள் கூறு­கை­யில், “நாளுக்கு நாள் வள­ரும் திருப்­பூர் தொழில் வளர்ச்­சிக்கு வட மாநி­லம் உட்­பட புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­னது. ஆனால், அவர்­க­ளின் விவ­ரங்­களை கொண்­டி­ருப்­ப­தும் முக்­கி­ய­மா­னது. மாவட்ட நிர்­வா­கம், தொழி­லா­ளர் நலத்­துறை, காவல் துறை­யும் உட­ன­டி­யாக ஒருங்­கி­ணைந்து, திருப்­பூ­ரில் தங்­கி­யுள்ள அனைத்து வெளி­மா­நில மற்­றும் வெளி மாவட்ட தொழி­லா­ளர்­க­ளின் விவ­ரங்­களை சேக­ரிக்க சிறப்பு முகாம்­களை நடத்த வேண்­டும். நிறு­வன உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் தொழி­லா­ளர்­களை தங்க வைக்­கும் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் ஆதார் அட்டை உள்­ளிட்ட அசல் அடை­யாள சான்­று­களை காவல் துறை­யின் பிரத்­யேக செய­லி­யில் பதி­வேற்­றம் செய்­வதை கட்­டா­ய­மாக்க வேண்­டும். இதன் மூலம் அனைத்து தரப்­பி­ன­ரும் காவல்­து­றை­யின் கண்­கா­ணிப்­பில் இருக்­கி­றோம். தவறு செய்­தால் எளி­தில் தப்பி விட முடி­யாது என்ற எண்­ணத்­திற்கு வரு­வார்­கள். இத­னால்,தவ­று­கள் குறை­யும், தவ­று­கள் நடந்­தால் உட­ன­டி­யாக கைது நட­வ­டிக்கை துரி­த­மாக மேற்­கொள்ள முடி­யும்” 
என்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>