<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 08 2026 03:49:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260608T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08062026-TRY-07" position.sequence="07" ex-ref="08062026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">08.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="28">முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,  மீண்டும்  முதலமைச்சராகப் பொறுப்பேற்கின்ற நாளினை    எல்லாத் தலைமுறையும் சேர்ந்து உருவாக்குவோம்!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">கலைஞர்,  சமரசம்   இல்லாத   ஒரு   மாபெரும்    போராளி!</lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="50">  </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27"> சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – மாவட்டச் செயலாளர் –  முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">முன்னின்று நடத்திய ‘கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும்  பொதுக்கூட்டத்தில்’ – கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup691981_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="rasanewph_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன்  8</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">“முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­யேற்­கின்ற நாளை, எல்­லாத் தலை­
­மு­றை­யும் சேர்ந்து உரு­வாக்­கு­வோம்” 
என்­றும் – “கலை­ஞர் சம­ர­சம் இல்­லாத ஒரு மாபெ­ரும்  போராளி” என்­றும், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் – மாவட்­டச் செய­லா­ளர் –  முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. முன்­னின்று நடத்­திய,  “திரா­வி­டத்­தால் உயர்ந்த ஆகா­யம்! திரா­விட இனத்­தின் பூபா­ளம்!” எனும் தலைப்­பி­லான ‘முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் புக­ழ­ரங்­கில்’ உரை­யாற்­று­கை­யில் கழக துணைப் பொதுச் செய­லா­ளர் ஆ.இராசா எம்.பி. குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மாவட்­டச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு வழி­காட்­டு­தலில் – பகு­திச் செய­லா­ளர் எம்.டி.ஆர்.நாக­ராஜ் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற இக்­கூட்­டத்­தில் கழக துணைப் பொதுச் செய­லா­ளர் 
ஆ.இராசா எம்.பி. அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­வர் கலை­ஞ­ரு­டைய பிறந்த நாளை நாம் கொண்­டா­டு­கி­றோம். எனக்கு முன்­னால் உரை­யாற்­றிய தம்பி தமி­ழன் பிர­சன்னா அவர்­கள், கலை­ஞர் கோலோச்­சிய கோட்­டை­யில், எப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் 
எல்­லாம் கோலோச்­சு­கி­றார்­கள் என்று, “நாங்­கள் சொல்­ல­வில்லை, ஜூனி­யர் 
விக­டன் சொல்­கி­றது” என்று தோலு­ரித்­துக் காட்­டி­யிருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வழக்­க­றி­ஞர் சகோ­தரி அருள்­மொழி அவர்­கள், “தோலு­ரித்­துக் காட்­டி­னால் 
மட்­டும் போதாது; இப்­ப­டிப்­பட்ட நேர்­வு­கள் எல்­லாம் அர­சி­ய­லில் வரும். அதி­லி­ருந்து பெரி­யார் வழி­யில், அண்ணா வழி­யில், கலை­ஞர் வழி­யில் எப்­படி நாம் வெளியே வரு­வது? இந்த மக்­களை மீண்­டும் எப்­படி ஆட்­கொள்­வது? அடுத்த தலை­மு­றைக்­காக எப்­படி நாம் சிந்­திப்­பது?” என்­பதை ஒரு கேள்­வி­யாக உங்­க­ளி­டத்­திலே வைத்து, அதற்கு விடை­யும் சொல்­லி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் உங்­க­ளி­டத்­திலே அவர்­கள் உரைக்­குப் பிறகு மிகச் சுருக்­க­மாக உரை­யாற்ற விரும்­பு­கி­றேன். அருள்­மொ­ழிக்கு இருக்­கிற சங்­க­டம், வருத்­தம் எனக்­குத் தெரி­யும். தமி­ழன் பிர­சன்­னா­வுக்கு இருக்­கிற கோபம், ஆவே­சம் எனக்­குப் புரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் எல்­லாம் பர­வா­யில்லை, தமிழ்­நாட்­டில் இதை­யெல்­லாம் சகித்­துக் கொண்டு, இதை­யெல்­லாம் எதிர்­கொண்டு, அவர்­க­ளுக்கு வெவ்­வேறு பெயர்­களை எல்­லாம் வைத்­துக்­கொண்டு, அது வாயில் வருமோ, நோயில் வருமோ எனக்­குத் தெரி­யாது; எல்­லாப் பெயர்­க­ளை­யும் வைத்­துக்­கொண்டு நீங்­கள் இருந்­து­வி­டு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­க­ளுக்கு என்ன பிரச்­சினை தெரி­யுமா? மனந்­தி­றந்து சொல்ல வேண்­டு­மென்­றால், நாடா­ளு­மன்­றத்­தில் இருக்­கி­றோம். நாடா­ளு­மன்­றத்­தில் எங்­க­ளைப் பார்த்­தால் என்ன சொல்­வார்­கள் என்­றால், “இவர்­க­ளுக்கு மட்­டும் எப்­படி முடி­கி­றது? இந்த வீரம், இந்­தச் செறிவு, இந்த ஆழ­மான பார்வை, மத­வா­தத்­திற்­கும் – சாதி­ய­வா­தத்­திற்­கும் ஆட்­ப­டாத அறி­வு­மிக்­க­வர்­க­ளா­கத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­ டைய உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­களே!” என்­பது மட்­டு­மல்ல...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அகி­லேஷ் யாதவ் கேட்ட கேள்­வி­யும், ஸ்டாலின் பெற்­றுத்­தந்த சமூக நீதி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு நாள் நாடா­ளு­மன்­றத்­தி­னு­டைய உணவு விடு­தி­யிலே உட்­கார்ந்து சாப்­பிட்­டுக் கொண்­டி­ருந்­தோம். அகி­லேஷ் யாதவ் வந்து எங்­க­ளு­டைய கையைப் பிடித்­துக் 
­கொண்டு, “எப்­படி இதெல்­லாம் உங்­கள் தலை­வ­ரால் முடி­கி­றது, உங்­கள் கட்­சி­யால் முடி­கி­றது?” என்று கேட்­டார். “என்ன?” என்று கேட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மோடி அவர்­கள் ‘நீட்’ (NEET) கொண்டு வந்­த­தற்­குப் பிறகு, ஓர் ஆண்­டுக்கு 5,500 இடங்­கள், அர­சுக் கல்­லூரி, தனி­யார் கல்­லூரி என இந்­தி­யா­வில் முழு­வ­தும் இருக்­கிற கல்­லூ­ரி­க­ளில், 15 சத­வீத இடங்­களை நீட் அடிப்­ப­டை­யில், ஒன்­றிய அர­சி­னு­டைய தொகுப்­பாக நாங்­கள் கொண்டு வந்து போடு­வோம் என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் இருக்­கிற எல்­லாக் கல்­லூ­ரி­க­ளி­லும் – ஸ்டான்­லி­யாக இருந்­தா­லும், எம்.எம்.சி.யாக இருந்­தா­லும், ஜே.பி.ஆராக இருந்­தா­லும், எஸ்.ஆர்.எம்.மாக இருந்­தா­லும், தனி­யார் கல்­லூ­ரி­கள் எது­வாக இருந்­தா­லும், 15 சத­வீத இடத்தை ஒன்­றிய அர­சாங்­கம் நிரப்­பும். அப்­பொ­ழுது இந்­தி­யா­வில் இருக்­கிற மொத்­தக் கல்­லூ­ரி­க­ளில் ஓர் ஆண்­டுக்கு ஏறத்­தாழ 5,500 பேர் படிக்க வேண்­டும். யார்? இங்கேராஜஸ்­தான்­கா­ரர்படிப்­பார், குஜ­ராத்­துக்­கா­ரர்படிப்­பார். அதே மாதிரி, தமிழ்­நாட்­டுக்­கா­ரர் அங்கே படிப்­பார். தமிழ்­நாட்­டுக்­கா­ரர் 
குஜ­ராத்­துக்­குப் போவார், இல்லை என்று சொல்­ல­வில்லை. “தேச ஒற்­று­மைக்­காகநாங்­கள் வைக்­கி­றோம், ஒரே மாதிரி கல்வி வேண்­டும்என்­ப­தற்­காக வைக்­கி­றோம்” என்று 15 சத­வீத இட ஒதுக்­கீட்டை அவர்­கள் எடுத்­துக் கொண்­டார்­கள். எடுத்­துக் 
கொள்­ளட்­டும், தப்­பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், எங்கே பிரச்­சினை வரு­கி­றது என்­றால், அந்த 15 சத­வீத இட­ஒ­துக்­கீட்­டில்பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு இடம் உண்டா?தாழ்த்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு இடம் உண்டா? 5,500 இடங்­கள், அதற்கு இட­ஒ­துக்­கீடு (Reservation) இல்லை. எங்­க­ளுக்கு யாருக்­கும் தெரி­ய­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">“உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நான் இருக்­கி­றேன்; பீகா­ரில் தேஜஸ்வி இருக்­கி­றார்; காஷ்­மீ­ரில் ஃபரூக் இருக்­கி­றார்; ஆம் ஆத்மி டெல்­லி­யிலே இருக்­கி­றது; ஆனால், எந்த முத­ல­மைச்­ச­ருக்­கும், எந்த அர­சி­யல் கட்­சித் தலை­வ­ருக்­கும் 15 சத­வீ­தத்­தில் இட­ஒ­துக்­கீடு இல்­லையே! பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வன் இந்த ஊரில் முத­லி­யார், கவுண்­டர், நாயுடு, செட்­டி­யார், வன்­னி­யர், முக்­கு­லத்­தோர், அது மாதிரி அங்கே இருக்­கிற ஜாதி. இவர்­க­ளுக்­கெல்­லாம் இட­மில்­லையே!” என்று நாங்­கள் தவித்த நேரத்­தில், தெரி­யாத நேரத்­தில், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­கிற ஒற்றை மனி­தன் உச்ச நீதி­மன்­றத்­தி­னு­டைய கத­வு­க­ளைத் தட்டி, சமூக நீதியை நிலை­நாட்டி, “அதி­லே­யும் எங்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வேண்­டும்” என்று தமிழ்­நாட்­டுக்கு மட்­டும் அல்ல, ராஜஸ்­தா­னில், குஜ­ராத்­தில், பீகா­ரில், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இருக்­கிற பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு இட­
ஒ­துக்­கீடு வாங்­கித் தந்த தலை­வ­னும்இயக்­க­மும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தொகுதி மறு­சீ­ர­மைப்­புச் சூழ்ச்­சி­யும், நாடா­ளு­மன்­றப் போரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அமித்­ஷா­வி­னு­டைய, மோடி­யி­னு­டைய கோரப் புத்தி என்ன செய்­தது? தென்­னாடு முழுக்க பிஜேபி பரவ முடி­ய­வில்லை. திரா­வி­டத்­தில் காலூன்ற முடி­ய­வில்லை. அங்­கொன்­றும் இங்­கு­மா­கச் சில நேரங்­கள் ஹைத­ரா­பாத் வரைக்­கும் போகி­றோம். ஆனால் வட­பு­லத்­திலே மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பில், நாமெல்­லாம் ‘80–ல் “இரண்டே இரண்டு குழந்­தை­கள்” என்று சொன்­னோம். “நாம் இரு­வர், நமக்கு இரு­வர்” நாங்­கள் படிக்­கும்­போது. இப்­பொ­ழுது என் மகள் பள்­ளிக்­குச் போகும்­போது, “நாம் இரு­வர், நமக்கு ஏன் மற்­றொ­ரு­வர்?” என்று குறைத்­து­விட்­டார்­கள். நாமெல்­லாம் சரி­யா­கக் குறைத்­துக் குறைத்­துக் குறைத்து, இப்­பொ­ழுது எனக்கு ஒரே ஒரு மகள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், எங்­கள் அப்பா அம்­மா­வுக்கு நான் எட்­டா­வது பிள்ளை. எட்­டா­வது 
பிள்­ளை­யா­கப் பிறந்த ஒரு­வ­னுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை. ஆஸ்­திக்கு ஆண் பிள்ளை, என் பெண் பிள்ளை ஆஸ்திவைத்­துக்­கொள்­ளக் கூடாதா? விட்­டு­விட்­டேன்அதோடு. ஆனால் வட­நாட்­டில் இன்­னும் 
8 பிள்­ளை­கள், 10 பிள்­ளை­கள், 12 பிள்­ளை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் என்ன செய்­கி­றார்? “மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களை நாங்­கள் மாற்­று­வோம்” என்­கி­றார். தமிழ்­நாட்­டுக்கு 40 (புதுச்­சேரி 1 சேர்த்து) இருக்­கி­றது, அது 47 ஆகும். ஆனால் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 80 இருக்­கி­றது, அது 140–க்குப் போகும். இப்­படி ஏறிப் போனால், எந்­தச் சட்­டத்­தை­யும் – அது நீட்­டாக இருந்­தா­லும், தமிழ்­நாடு, கேரளா, ஆந்­திரா இல்­லா­மல் தானா­கவே அவர்­கள் சட்­ட­மேற்­றக்­கூ­டிய வலி­மை­யைப் பெற்று விடு­வார்­கள் என்­ப­தற்­காக அதைக் கொண்டு வந்­தார்­கள். யாருக்­கும் புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அகி­லேஷ் யாதவ் என்ன சொல்­கி­றார்? “எங்­க­ளுக்கு நல்­ல­து­தானே, 80 என்­பது 140 ஆகி­றது எங்­க­ளுக்கு என்ன பிரச்­சினை? அத­னால் தமிழ்­நாட்­டுக்­குத்­தான் பாதிப்பு, நாங்­கள் ஏன் சத்­தம் போட வேண்­டும்?”. ஆனால் தலை­வர் கடி­தம் எழு­தி­னார், நாங்­கள் பேசி­னோம்: “ஐயா, உங்­க­ளுக்கு 80 என்­பது 140 ஆகி­றது என்று சந்­தோ­ஷப்­ப­டா­தீர்­கள். அவர்­க­ளு­டைய நோக்­கம் ஒவ்­வொரு மாநி­ல­மாக மாநி­லக் கட்­சி­களை ஒழித்­துக் கொண்டே வரு­வது, எண்­ணிக்­கை­யைக் கூட்­டு­வது; கூட்­டணி சேரு­மாம்; அந்­தக் கட்சி காலி. அ.தி.மு.க. சேர்ந்­ததா – அது காலி, ஆப் (AAP) இருந்­ததா – அது காலி.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­படி ஒவ்­வொரு மாநி­ல­மா­கப் பிராந்­தி­யக் கட்­சி­களை, மாநி­லக் கட்­சி­களை ஒழித்­து­விட்டு, நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளு­டைய எண்­ணிக்­கை­யைக் கூட்டி, “இதை இந்து ராஷ்­டி­ரம், நாங்­கள்­தான் ஆளு­வோம்” என்று சொல்­லு­வ­தற்­கான சூழ்ச்சி உள்ளே இருக்­கி­றது என்று சொன்­ன­வு­டன், சொன்­னால் நம்ப மாட்­டீர்­கள், “தி.மு.க. தவிர நமக்கு வேறு யாரும் பிரச்­சினை இல்லை” என்று அந்­தச் சட்­டத்­தைக் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்கள்... கெஞ்­சி­னார், கை எடுத்­துக் கும்­பிட்­டார். “ஒரு மணி நேரம் கொடுங்­கள், நான் மாற்­றிக் கொடுத்­து­வி­டு­கி­றேன். அகி­லேஷ் யாதவ், நீங்­கள் ஏன் ஸ்டாலி­னோடு சேர்ந்து வம்பு இழுக்­கி­றீர்­கள்?” என்று நேர­டி­யாக கேட்­டார். நேர­லை­யில் (Live) போகி­றது. அப்­ப­டிப்­பட்ட அகி­லேஷ் யாதவை, வட­பு­லத்­துக்­கா­ரர்­களை, “இந்­தத் தீங்கு உங்­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் மட்­டு­மல்ல, எதிர்­கா­லத் தீங்கு இந்­தி­யா­விற்கு” என்று சொல்லி, அதை முதன்­மு­த­லாக நாடா­ளு­மன்­றத்­தில் அமித்­ஷா­வும் – மோடி­யும் உட்­கார்ந்­தி­ருக்­கும் போதே தோற்­க­டித்த இயக்­கம் இந்த இயக்­கம்! இவ்­வ­ளவு பெரிய வலி­மை­யுள்ள ஒரு இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் அடிப்­ப­டைப் பண்­பு­க­ளைக் காத்த தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இன்­னும் சொல்­லட்­டுமா? நான் தான் அடிக்­கடி சொல்­லு­வேன். இந்­தி­யா­வி­னு­டைய அர­சி­யல் சட்­டம் என்ன சொல்­லு­கி­றது? சுருக்­க­மா­கச் சொன்­னோம் என்­றால், “WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC”. இந்­தி­யாவை நாங்­கள் எப்­படி வடி­வ­மைத்­தி­ருக்­கி­றோம்? இது ஒரு இறை­யாண்மை உள்ள நாடு; இறை­யாண்மை உள்ள குடி­ய­ரசு நாடு; இது ஒரு ஜன­நா­யக நாடு; இது ஒரு மதச்­சார்­பற்ற நாடு; இது ஒரு சம­தர்ம நாடு. இந்த நாடு­தான் அர­சி­யல் சட்­டத்­தி­னு­டைய அடிப்­படை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­யல் சட்­டத்தை எத்­தனை முறை வேண்­டு­மா­னா­லும் திருத்­திக் கொள்­ள­லாம் என்று உச்ச நீதி­மன்­றம் சொல்­லி­விட்­டது. ஆனால், அர­சி­யல் சட்­டத்­தி­னு­டைய அடிப்­ப­டைப் பண்­பு­களை – இந்த நான்­கை­யும் மாற்­றவே முடி­யாது. நான் பெரு­மை­யோடு சொல்­கி­றேன்... இந்த நான்­குக்­கும் ஆபத்து வந்த போதெல்­லாம், அர­சி­யல் சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கிற இறை­யாண்மை; அர­சி­யல் சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்ற ஜன­நா­ய­கம்; அர­சி­யல் சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கிற மதச்­சார்­பின்மை; அர­சி­யல் சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கிற சம­தர்­மம்; இந்த நான்­கும்­தான் அர­சி­யல் சட்­டத்­தின் அடிப்­ப­டைப் பண்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தப் பண்­புக்கு ஊறு நேரிட்ட போதெல்­லாம், இந்த நான்கு பண்­பு­க­ளுக்­கும் ஆபத்து வந்த போதெல்­லாம், அந்த நான்கு பண்­பு­க­ளை­யும் அர­சி­யல் சட்­டத்­தை­யும் காப்­பாற்­றிய இயக்­கம் தேசிய இயக்­கம் அல்ல, வேறு எந்த மாநி­லக் கட்­சி­யும் அல்ல... தி.மு.க., தி.மு.க., தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">1. இறை­யாண்மை (Sovereignty)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இறை­யாண்­மைக்கு ஆபத்து வந்­தது. இப்­பொ­ழு­து­கூட நாடா­ளு­மன்­றத்­தில் சொன்­னேன், பார்த்­தி­ருப்­பீர்­கள் நீங்­கள், வைரல் ஆனது என்­றார்­கள். பாகிஸ்­தான் படை­யெ­டுத்து வந்­தது, எங்­க­ளுக்கு என்ன கவலை? ஒரு காலத்­தில், திரா­விட நாடு கேட்­டோம்; தனித் தமிழ்­நாடு கேட்­டோம். எங்­கேயோ பாகிஸ்­தான் படை­யெ­டுக்­கி­றான், எங்­க­ளுக்கு என்ன ஆபத்து? பாதிப்பு, காஷ்­மீருக்கு இருக்­கும்; பக்­கத்­தில் இருக்­கும் உத்­த­ரப் பிர­தே­சத்­திற்கு இருக்­கும். தமிழ்­நாட்­டில் வந்து குண்டு போடு­கி­றானா? இங்­கே­தான் முஸ்­லிம்­கள் எல்­லாம் பாது­காப்­பாக இருக்­கி­றார்­களே... பெரி­யா­ரால், காயிதே மில்­லத்­தால். ஆனால், “இந்­தி­யா­வி­னு­டைய இறை­யாண்மை காப்­பாற்­றப்­பட வேண்­டும், தேசம் துண்­டா­டப்­ப­டக் கூடாது” என்­ப­தற்­காக, ஒரு இன்ச் கூடப் போகக் கூடாது என்­ப­தற்­காக, அன்­றைக்கு எந்த முத­ல­மைச்­ச­ரும் தராத நேரத்­தில், 
6 கோடி ரூபாயை இந்­திரா காந்­தி­யி­டம் 
அள்­ளித் தந்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், கலை­ஞர்! இது இறை­யாண்­மைக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">2. ஜன­நா­ய­கம் (Democracy)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஜன­நா­ய­கத்­திற்கு ஆபத்து வந்­தது, மிசா (MISA) கொண்டு வந்­தார்­கள். பேச முடி­யாது; எழுத முடி­யாது. எல்­லா­ரும் சிறை­யில் இருந்­தார்­கள். ஆற்­காட்­டார் இருந்­தார்; முர­சொலி மாறன் இருந்­தார்; டி.ஆர். பாலு இருந்­தார்; (சிவா) இருந்­தார்; எங்­கள் ஊரில் எல்­லா­ரும் இருந்­தார்­கள். பேச முடி­யாது; எழுத முடி­யாது. போன­வர்­கள் எப்­பொ­ழுது வந்­தார்­கள் என்று தெரி­யாது. சிட்டி பாபுவை நாம் பறிகொடுத்­தோம். அந்த ஜன­நா­ய­கத்தை எதிர்ப்­ப­தற்­குப் கம்­யூ­னிஸ்ட்­கா­ரர்­கள் முன் வந்­தார்­களா? எந்த மாநி­லக் கட்­சி­யா­வது முன் வந்­ததா? வர­வில்­லையே! அதை எதிர்த்­துத் தீர்­மா­னம் போட்டு, ஆட்­சியை எதிர்த்து, ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­றிய இயக்­கம் இந்த இயக்­கம். அர­சி­யல் சட்­டத்­தில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">3. மதச்­சார்­பின்மை (Secularism)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மதச்­சார்­பின்­மைக்கு ஆபத்து வந்­தது. எப்­பொ­ழுது ஆபத்து வந்­தது? “நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் பாபர் மசூ­தியை இடித்­து­விட்டு ராமர் கோயில் கட்­டு­வோம்; நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கிற 370–வது சிறப்­புப் பிரிவு, காஷ்­மீர்க்­கா­ரன் மட்­டும்­தான் நிலம் வாங்க முடி­யும்; காஷ்­மீ­ருக்கு வேண்­டிய சட்­டத்­தைக் நாடா­ளு­மன்­றம் இயற்ற முடி­யாது, காஷ்­மீர் சட்­ட­மன்­றமே இயற்­றிக்­கொள்­ள­லாம். இதெல்­லாம் நேரு­வால் பாகிஸ்­தான் பிடிக்­கக் கூடாது என்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சிறப்பு உரிமை. அதை இன்­றைக்­குக் குறை சொல்­கி­றார்­கள். நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் அதை எடுப்­போம் என்­றார்­கள். நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு, கிறிஸ்­த­வர்­க­ளுக்கு, இந்­துக்­க­ளுக்­குத் தனித்­தனி சட்­டம் எல்­லாம் ஒன்­றாக்­கு­வோம் என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது­தான் பி.ஜே.பி.யின் ஜீவா­தா­ரக் கொள்கை. அதிலே இரண்டை முடித்­து­ 
விட்­டார் மோடி. கோயில் கட்­டி­விட்­டார், 370–ஐ எடுத்­து­விட்­டார். சிவில் சட்­டம் இன்­னும் கொஞ்ச நாளில் வரப்­போ­கி­றது. இது­தான் மூலா­தா­ரக் கொள்கை, மதச்­சார்­பின்­மைக்கு நேர் எதி­ரான கொள்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் கலை­ஞர் அன்­றைக்கு பிஜே­பி­யோடு கூட்­டணி வைத்து, பி.ஜே.பி.யினு­டைய மூலா­தா­ரக் கொள்கை எதுவோ, அந்த கொள்­கை­யைக் குறைந்­த­பட்ச செயல் திட்­டத்­தால் முடக்­கிப் போட்­டார். அப்­பொ­ழு­தெல்­லாம் அருள்­மொழி என்­னி­டம் பேசாது; ஆசி­ரி­யர் என்­னி­டம் பேச மாட்­டார். திட்­டு­வார்­கள் எங்­களை, “எப்­படி நீங்­கள் 
பி.ஜே.பி. கூடப் போக­லாம்?” என்று. இவர்­கள் வேலி கட்டி பி.ஜே.பி.யைக் காப்­பாற்ற நினைத்­தார்­கள்; நாங்­கள் கூடப் போய் கையும் காலை­யும் கட்டி உள்ளே போட்டு அடக்க வேண்­டும் என்று நினைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இருந்­த­வரை, பாபர் மசூ­திக்கு ஆபத்து இல்லை; கலை­ஞர் அந்­தக் கூட்­ட­ணி­யில் இருந்­த­வரை, 370–க்கு ஆபத்து இல்லை; நாங்­கள் அங்கே இருந்­த­வரை, சிவில் சட்­டத்­தைப் பற்­றிப் பேச முடி­யாது. மதச்­சார் ­பின்­மை­யைக் கூட்­டணி வைத்­தும் காப்­பாற்­றிய இயக்­கம் கலை­ஞ­ரின் இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். நாங்­கள் வெளியே வந்­தோம்; இப்­போது எல்­லாம் காணா­மல் போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">4. சம­தர்­மம் (Socialism)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சம­தர்­மம். மொரார்ஜி தேசாய் நிதி அமைச்­சர்; இந்­திரா காந்தி பிர­த­மர். அப்­பொ­ழு­து­தான் நமக்கு அதி­க­மாக 184 இடங்­கள்... நம்­மு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் (MP) 25 பேர்; மீதி காங்­கி­ர­ஸிற்கு, கூட்­ட­ணி­யில் இருக்­கி­றோம். இந்­திரா காந்தி என்ன கொண்டு வந்­தார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­பொ­ழுது எல்­லாம் வங்­கிக்­குப் போக முடி­யுமா? என் மகள் இப்­பொ­ழுது நெட் பேங்­கிங்–­­இல் (Net banking) இருக்­கி­றாள். நான் முதன்­மு­த­லில் 1989–இல் வழக்­க­றி­ஞ­ராகி, என்னை நீதி­மன்­றத்­தில் பார்த்­து­விட்டு, கனரா வங்­கி­யில் ஆலோ­ச­க­ரா­கப் போட்­டார்­கள். உண்­மை­யைச் சொல்­கி­றேன், முதன்­மு­த­லில் அன்­றைக்­குத்­தான் எனக்­குக் காசோ­லைப் புத்­த­கமே (Cheque book) கொடுத்­தார்­கள். “சார், உங்­க­ளுக்கு ஊதி­யம் (Fee) எல்­லாம் காசோ­லை­யில்­தான் சார் வரும்” என்­றார்­கள். அந்­தக் காசோ­லைப் புத்­த­கத்­தைக் கொண்டு போய் எங்­கள் அம்­மா­வி­டம் கொடுத்­தேன்; கண்­ணில் ஒற்­றிக்­கொண்டு, அவர்­கள் கொண்டு போய் கட­வுள் படத்­தி­டம் வைத்­தார்­கள். “ஏம்மா, அது கனரா வங்கி கொடுத்­த­தும்மா, கட­வுள் என்ன செய்­வார்? அங்கே போய் வைக்­கி­றாய்” என்­றேன். காசோ­லைப் புத்­த­கமே அப்­பொ­ழு­து­தான் சார்நான் பார்த்­தேன்; காசோ­லைப் புத்­த­கத்­தைப்பார்த்­தது 1989–இல். இப்­பொ­ழுது என் மகள் லண்­ட­னில் தொடர்­வண்­டி­யில் (Train) ஏறி இறங்­கு­கி­றாள், எனக்­குத் செல்­பே­சி­யில் வரு­கி­றது. பேங்­கிங்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் இந்த வங்கி என்ன தெரி­யுமா செய்­தது? நீங்­கள் ஒரு­வ­ரும் அரு­கில் போக முடி­யாது. பேருந்து முத­லாளி போக­லாம்; ஆலை (Mill) முத­லாளி போக­லாம்; விவ­சா­யத்­திற்கு கடன் (Loan) கொடுக்க மாட்­டான்; பெரிய பெரிய பணக்­கா­ர­னுக்­குத்­தான் கனரா வங்கி உள்­ளிட்ட எல்லா வங்­கி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“இந்த வங்­கி­கள் ஏழை­க­ளைப் போய் சேர வேண்­டும்” என்று இந்­திரா காந்தி கொண்டு வந்­தார், “Nationalized Banks – வங்­கி­க­ளைத் தேசி­ய­ம­ய­மாக்­கு­கி­றேன்.” கோப்பு நிதி அமைச்­ச­ருக்­குப் போகி­றது. நிதி அமைச்­சர் மாறு­பட்ட குறிப்பை (Dissent note) எழு­து­கி­றார், “இது தேவை­யில்லை, இது வங்­கி­க­ளைப் பாதிக்­கும்.” காங்­கி­ரஸ் இரண்­டாக உடை­கிற மாதிரி ஆகிப்­போ­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரே ஒரு கடி­தம்... ஒரே ஒரு கடி­தம் இந்­திரா காந்­திக்கு, “நீங்­கள் கொண்டு வரு­கிற இந்­தச் சட்­டம் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு, தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு, விவ­சா­யி­க­ளுக்கு வங்­கி­க­ளைக் கொண்டு போய்ச் சேர்க்­கும். வங்­கி­க­ளால் தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட, ஏழை எளிய மக்­கள் பயன்­பெ­று­வார்­கள். எனவே, எங்­க­ளு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 25 பேர் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்­கள், அந்­தச் சட்­டத்­தைக் கொண்டு வாருங்­கள்” என்று சொன்­னது கலை­ஞர், நிறை­வேற்ற வைத்­தது கலை­ஞர். சம­தர்­மம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­பொ­ழுது சொல்­கி­றேன், “We, the people of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Socialist, Secular, Democratic Republic...” இந்த நான்­கை­யும் காப்­பாற்­றிய இயக்­கம், காங்­கி­ரஸ் கூட அல்ல; அன்­றைக்கு இருந்த ஜனதா தளம் கூட அல்ல; அன்­றைக்கு இருந்த எந்த மாநி­லக் கட்­சி­யும் அல்ல; அந்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், செய்து காட்­டிய மகத்­தான தலை­வன், இன்­றைக்­குப் பிறந்த நாளைக் கொண்­டா­டு­கி­றோமே அந்­தக் கலை­ஞர் என்ற மகத்­தான மனி­தன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தலை­மு­றை­கள் தாண்­டிய சமூக மாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வ­ளவு பெரிய இயக்­கம். இந்த இயக்­கத்தை இன்­றைக்கு இந்­தியா முழுக்க கொண்டு போய் சேர்த்­தார், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின். இவ­ரு­டைய திட்­டத்தை எல்­லாம் பார்த்து ஆச்­ச­ரி­யப்­பட்­டார்­கள். அருள்­மொ­ழிக்கு ஒரு வருத்­தம்; பிர­சன்­னா­வுக்கு ஒரு வருத்­தம், கோபம். எங்­க­ளுக்கு இருக்­கிற வருத்­தம், இந்­தி­யாவே தமிழ்­நாட்டை உற்­றுப் பார்த்­ததே, இந்­தத் தமிழ்­நாடு இப்­படி ஆகி­விட்­டதே. நாடா­ளு­மன்­றத்­திற்­குப் போனால் நம்மை எப்­ப­டிப் பார்ப்­பார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு அறி­வா­ளி­யி­டம் தோற்­றால் பர­வா­யில்லை; அர­சி­யல் ஆளு­மை­யி­டம் தோற்­றால் பர­வா­யில்லை; ஒரு புத்­தி­சா­லி­யி­டம் தோற்­றால் பர­வா­யில்லை; ஒரு கொள்­கை­யா­ள­ரி­டம் தோற்­றால் பர­வா­யில்லை; உள்­ள­ப­டி­யாக ஒரு மாற்­றத்தை விரும்­பி­னால் பர­வா­யில்லை. நான் எல்லா இடங்­க­ளி­லே­யும் சொல்­லு­வேன், எங்­கள் தாத்தா தீண்­டா­மைக்­கா­க­வும், ஏழ்­மைக்­கா­க­வும் இலங்­கைக்கு ஓடி­னார். எங்­கள் அப்பா ஆங்­கி­லம் படித்­தார்; அங்­கி­ருந்து பொரு­ளீட்டி வந்­தார், சொத்து வாங்­கி­னார். நான் எட்­டா­வது பிள்ளை, எங்­கள் வீட்­டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நக­ராட்சி ஆணை­யர், மருத்­து­வர், பொறி­யா­ளர் எல்­லாம் வந்­து­விட்­டார்­கள். எட்­டா­வது பையனே திரா­விட முன்­னேற்­றத் ­தால், கலை­ஞ­ரால், பெரி­யா­ரால், அண்­ணா­வால், அம்­பேத்­க­ரால் ஒன்­றிய அமைச்­சர் ஆகி­விட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என் மகள் லண்­ட­னில் படிக்­கி­றாள். 
அவ­ளுக்கு ஜாதி என்­றால் என்­ன­வென்று தெரி­யாது. அவ­ளி­டம் போய், நீ SC என்று சொல்­லிப் பாருங்­கள். உடனே புஸ்ஸி என்று உதைக்­கும். தாத்தா ஓடி­னார்; அப்பா கொஞ்­சம் மாற்­றம்; ராஜா வந்­தார், பெரிய முன்­னேற்­றம்; ராஜா­வுக்­குப் பின்­னால் புரட்­சி­கர மாற்­றம், என்­னு­டைய மகள் மயூரி. இந்த மாற்­றங்­க­ளுக்­குப் பின்­னால் யார்? இந்த இயக்­கம் – பெரி­யார், அண்ணா, கலை­ஞர், அம்­பேத்­கர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­பொ­ழுது நீங்­கள் ஒரு மாற்­றம் என்­கி­றீர்­களே, என்ன கிழிக்­கப் போகி­றீர்­கள்? என்று கேட்­டேன். பேசிப் பேசியே வளர்ந்த தமிழ்­நாட்டு அர­சி­ய­லில், பேசாத ஒரு ஆள் முத­ல­மைச்­சர்! அப்­ப­டியே பேசி­னா­லும் எங்கே பேச வேண்­டுமோ அங்கே பேச மாட்­டேங்­கு­றார். வெளியே வந்­தால் கை கால் இப்­ப­டிப் போகி­றது. சட்­ட­ச­பைக்­குப் போனால், என்ன... ஒன்­றும் புரி­ய­ வில்லை. சேகர் பாபு, ஒன்று சொல்­கி­றேன் தப்பா நினைக்­காதே... நீ விபூதி வைத்­தி­ருப்­ப­தால் சொல்­கி­றேன். எங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை, நீ எல்­லாம் ஏதோ பாவம் செய்­தி­ருக்­கி­றாய். இந்­தச் சட்­ட­ச­பை­யில் சென்று உட்­கார்ந்­தி­ருக்­கி­றாய் பார்த்­தாயா... அப்­படி ஆகிப்­போச்சு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­பொ­ழுது ஒன்­றும் கெட்­டுப் போக­வில்லை. அருள்­மொழி அழ­கா­கச் சொன்­னார்­கள்... திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்­தத் தலை­மு­றைக்­காக மட்­டும் சிந்­திக்­கக்­கூ­டிய இயக்­கம் அல்ல. இன்­னும் சொல்­லப்­போ­னால், அவரை மாதிரி போராளி யார் இருக்­கி­றார்? எத்­தனை முறை... ஒன்­று­மில்லை, ஐ.பி.கே.எஃப். (IPKF) – இந்­திய அமை­திப்­படை போனது இலங்­கைக்கு; நம்­மு­டைய தமி­ழர்­க­ளைக் கொன்­றார்­கள். முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார் கலை­ஞர். ஒன்­றிய அர­சாங்­கம் சொல்­லு­கி­றது, “ஆளு­நரை, அந்­தந்த மாநில முத­ல­மைச்­சர் போய் வர­வேற்க வேண்­டும்” என்று. “போக முடி­யாது” என்­றார். “ஆட்­சி­யைக் கலைப்­போம்” என்­றார். “கலை” என்­றார். “என் தமி­ழன் இறந்­து­விட்­டான்; அவ­னைப் போய் இந்­திய ராணு­வம் கொல்­லு­கி­றது; அதற்­காக என்­னு­டைய ஆட்சி போகும் என்­றால் போகட்­டும்” என்று சொல்ல முடி­யுமா? சொல்ல முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்ச்­செல்­வன்... ஒரு விடு­த­லைப் புலி. அவர் ஒன்­றும் பண்­ண­வில்லை. தலை­மைச் செய­ல­கத்­தில் ஒரு பேப்­பர் எடுத்­து­விட்­டா­ராம்; அது அர­சாங்­கப் பேப்­ப­ராம்; அந்த அர­சாங்­கப் பேப்­ப­ரில் தட்­டச்சு செய்­து­விட்­டா­ராம். “அந்த இரண்டு பேப்­பர்­களை அர­சாங்­கச் செல­வில் தட்­டச்சு செய்­து­விட்­டார் முத­ல­மைச்­சர்; விடு­த­லைப் புலி­க­ளுக் ­காக எப்­படி எழு­த­லாம், ஆட்­சி­யைக் கலைக்க வேண்­டும்”என்­றார் ஜெய­ல­லிதா. “ஏம்மா, நான் நிறைய எழு­தும்­போ­தெல்­லாம், நீ அமை­தி­யாக இருந்­தாய்; ஒரே ஒரு தாளிற்­கா­கக் கலைக்க வேண்­டும் என்­கி­றாயே, உனக்கு அவ்­வ­ளவு விருப்­பம் இருந்­தால் கலைத்­துக்­கொள்” என்­றார். ஒரு தமிழ்ச்­செல்­வ­னுக்­காக அல்ல; தமிழ்ச்­செல்­வ­னுக்­குப் பின்­னால் இருக்­கிற மிகப்­பெ­ரிய தமிழ் சமு­தா­யம், என் உட­லில் ஓடு­கின்ற தமிழ் இரத்­தத்­திற்­கா­கச் சொல்­கி­றேன், “என் ஆட்­சியை கலைத்­துக்­கொள், கவலை இல்லை” என்று சொன்­ன­வர் அவர்! அவர் எவ்­வ­ளவு பெரிய போராளி! வாழ்க்கை, வார்த்தை எல்­லாமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">டெல்­லி­யிலே இருக்­கி­றார், தமிழ்­நாடு இல்­லத்­தில். பிர­பா­க­ரன் இறந்­து­விட்­டார் என்று காட்­டு­கி­றார்­கள் தொலைக்­காட்­சி­யில், முகத்­தைக் காண்­பிக்­கி­றார்­கள். பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் பார்க்க வேண்­டும் என்று வரு­கி­றார்­கள். நாங்­கள் எல்­லாம் சொல்­கி­றோம், “தவிர்க்­க­லாம், இன்­னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை, அது அவ­ரு­டைய படம் தானா என்று தெரி­ய­வில்லை, நாம் வருத்­த­மாக இருக்­கி­றோம்” என்­றோம். செய்­தி­யா­ளர்­க­ளைப் பார்த்­து­விட்டு இப்­பொ­ழுது ஓடு­கி­றீர்­களே, “சிஎம் சார், டெல்­லிக்கு எந்த சிஎம் வந்­தா­லும் பேட்டி கொடுப்­பார்­கள் சார், மரபு சார், லெகசி (Legacy) சார், தய­வு­செய்து சார்” என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">48 செல்­சி­யஸ் வெயில். இருக்­கிற சட்­டை­யைக் அவிழ்த்­துப் போட்­டு­விட்டு, பனி­ய­னோடு இன்­றைக்கு போனார்­கள் டெல்­லி­யில். அந்த வெயி­லில் ஒரு ஆள் கருப்­புக் கோட்­டைப் போட்டு ஓடு­கி­றார். மைக்கை நீட்­டு­கி­றார்­கள், ஓடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ்­வ­ளவு இக்­கட்­டான சூழல் தமிழ்­நாடு இல்­லத்­தில். கலை­ஞர் கேட்­டார், “பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் நிற்­கி­றார்­கள் அல்­லவா... கரு­ணா­நிதி பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பார்க்­கா­மல் போனார் என்று சொல்­லு­வார்­கள்? அது எனக்கு இழுக்கு, கூப்­பிடு” என்­றார். பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் வந்­தார்­கள். “பிர­பா­க­ரன் இறந்­து­விட்­டாரா? நெடு­மா­ற­னும், வைகோ­வும் இல்லை என்று சொல்­கி­றார்­கள். அர­சாங்­கம் உறு­திப்­ப­டுத்தி இருக்­கி­றது. எது உண்மை? இறந்­து­விட்­டாரா? இல்­லையா?” என்று கேட்­டார்­கள். ஒரே வரி: “போரா­ளிக்­குச் சாவில்லை! கலை­ஞ­ருக்­கும் சாவில்லை!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இறுதி உரை: எதிர்­கா­லத்­திற்­கான உழைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னால் தான் இந்த நாளில் நீங்­கள் உணர வேண்­டும் என்று நினைக்­கி­றோம். நான் என்ன கேட்­கி­றேன்... நான் எவ்­வ­ளவோ அர­சி­யல் பார்த்­தி­ருக்­கி­றேன், நீங்­க­ளும் பார்த்­தி­ருக்­கி­றீர்­கள். ஒரு பொய்யை இவர்­க­ளா­கக் கட்­ட­மைத்து, அந்­தப் பொய்க்கு ஒரு பதில் சொல்­லு­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது ஒன்­று­மில்லை... “ஏன் நான் கோட்டு போடக்­கூ­டாதா, சூட்டு போடக்­கூ­டாதா?” உன்னை யார் போட வேண்­டாம் என்று சொன்­னது? அதா­வது இவ­ரா­கவே ஒன்­றைக் கற்­பனை பண்­ணிக்­கொண்டு, “நான் கோட்டு போடக்­கூ­டாதா, சூட்டு போடக்­கூ­டாதா?” அதை யார் முத­லில் சொன்­னது? என்­னமோ சூட்டு போட்­ட­தால் நாங்­கள் பொறா­மை­யாக இருக்­கிற மாதி­ரி­யும்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது ஒரு குப்­ப­னும் சுப்­ப­னும் படித்து... நான் சூட்டு போட்­டால் ஒரு நியா­யம் இருக்­கி­றது. ஏன் என்­றால், எங்­கள் தாத்தா கோவ­ணம் கட்­டி­யி­ருந்­தார்; எங்­கள் அப்பா இலங்­கை­யிலே குளி­ருக்கு போட்­டி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காந்தி ஏன் கோவ­ணம் கட்­டி­னார், அம்­பேத்­கர் ஏன் சூட்டு போட்­டார் என்று கேட்­டார்­க­ளாம்? அம்­பேத்­கர் சொன்­னா­ராம், “இவர் பனியா ஜாதி – யார் காந்தி? பெரிய பணக்­கா­ரர். தன­வந்­த­ராக இருந்த காந்தி தன்­னு­டைய எளி­மை­யைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­கா­கக் கோவ­ணத்­தோடு போவ­தில் தவ­றில்லை, அது அவர் அர­சி­யல் ஸ்டைல். கோவ­ணம் கட்­டி­யி­ருந்த என் சமூ­கம், கோட் போடு­வது என் ஸ்டைல். அத­னால் நான் கோட்­டு­தான் போட வேண்­டும்... அவர் கோவ­ணம்­தான் கட்ட வேண்­டும்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ராஜா கோட்டு போட்­டால் நியா­யம் இருக்­கி­றது. ஒரு தாழ்த்­தப்­பட்ட சமு­தா­யத்­தில், எங்­கேயோ படித்து, பெரி­யா­ரால், அண்­ணா­வால், அம்­பேத்­க­ரால் வந்து, நான் கோட்டு போட்­டேன் என்­பது... நீ நடிப்­பதே கோட்டு போட்­டுத்­தான் நடிக்­கி­றாய்... சினி­மா­வி­லே­யும் கோட்டு போட்­டுத்­தான் நடிக்­கி­றாய்; அப்­பு­றம் ஏன் இங்கே வந்து கோட்டு போட வேண்­டும். “நான் போடக்­கூ­டாதா?” யார் தம்பி உன்னை போடக்­கூ­டாது என்­றது, நன்­றா­கப் போட்­டுக்­கொள்­ளப்பா, நன்­றா­கப் போட்­டுக்­கொள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதில் வேறு, “நான் கருப்பு போட்­டி­ருக்­கி­றேன் ஏன் தெரி­யுமா?” இங்கே பார்... இது­வ­ரைக்­கும் நீ பேசி­யது சரி, இந்­தக் கருப்­புக்­குச் சொந்­தம் கொண்­டாட வந்­தால், காளி ஆட்­டம் ஆகி­வி­டு­வோம். என்ன விளை­யா­டு­கி­றாயா? பெரி­யார் யார் தெரி­யுமா? இதில் வேறு, கொள்­கைத் தலை­வர்­கள், என்ன கொள்­கைத் தலை­வர்­கள்? முட்டி போட்டு ஒரு இடத்­தில் நடப்­பது, அதைத்­தான் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மதத்­தைத் தாண்­டி­ய­வர்­கள் நாங்­கள்... மதமா? நெற்­றிக்கு ஒரு மதம்; கையில் ஒரு மதம்; சொல்­லிக்­கொள்ள பெய­ருக்கு ஒரு மதம்! மதத்­தைத் தாண்டி வர வேண்­டும் என்­றால், எல்லா மதத்­தை­யும் ஒன்­றாக உள்­ளுக்­குள் போட்­டால்... இப்­படி ஒரு அயோக்­கி­யத்­த­னம் தமிழ்­நாட்­டில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­கள் சொன்­னார்­கள், “குழந்தை சொன்­ன­தற்­கெல்­லாம் தாத்தா கேட்­பாரா?” என்று. குழந்தை சொல்லி தாத்தா கேட்­டு­விட்­டார். ஆனால், இனி வரு­கிற குழந்­தை­க­ளா­வது அப்­ப­டிச் சொல்­லா­மல் மட்­டு­மல்ல, எந்­தக் குழந்தை இப்­ப­டிச் சொன்­னதோ, அந்­தக் குழந்­தையை வரு­கின்ற குழந்தை திருத்தி, தாத்­தா­வின் இறுதி நாளில் இன்­னொரு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, அந்­தத் தாத்தா உயி­ரோடு இருக்­கும்­போதே முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கின்ற நாளை எல்லா தலை­மு­றை­யும் சேர்ந்து செய்ய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்­காக உழைப்­போம், கலை­ஞர் புகழ் பாடு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு ஆ.இராசா எம்.பி. பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>