<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,958,775" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 03:36:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260609T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09062026-CHN-04" position.sequence="04" ex-ref="09062026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தி.மு.க. ஏன் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup713712_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ற்­றுக் கட்­சி­யி­னர் அணி அணி­யாக தி.மு.கவில் இணை­யும் காட்­சி­களை அன்­றா­டம் பார்த்­து­வ­ரு­கி­றோம். தி.மு.க. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஒரு பின்­ன­டைவை சந்­தித்­த­பி­ற­கும் இவர்­கள் தி.மு.க.வில் வந்து இணை­வ­தன் பொருள் என்ன? வென்­ற­வர்­க­ளி­டம் போய் சேர்ந்­து­கொள்­வ­து­தான் உலக இயல்பு. ஆனால் சமீ­பத்­தில் பெரிய தேர்­தல்­கள் எது­வும் இல்­லாத நிலை­யி­லும்­கூட இந்த இணைப்­பு­கள் எதைக்­காட்­டு­கின்­றன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் உறு­தி­யான எதிர்­கா­லம் உள்ள ஒரே கட்சி தி.மு.க.தான் என்­ப­து­தான் கள எதார்த்­தம். தனக்­கென கொள்­கை­யுள்ள ஒரே கட்­சி­யா­க­வும் மாநில நலன் சார்ந்த சம­ர­ச­மற்ற போர்க்­கு­ணம் கொண்ட  தலை­வ­ரைக்­கொண்ட இயக்­க­மா­க­வும் தி.மு.க. மட்­டுமே இருக்­கி­றது. இன்று காற்­றில் வண்­ண­ம­ய­மாக இருக்­கும் நீர்க்­கு­மி­ழி­கள் உடை­வ­தற்கு அதிக நேர­மா­காது. தி.மு.க. எந்த நேரத்­தி­லும் பல­மடங்கு வலி­மை­யு­டன் எழுந்­து­வ­ரும் என்­பது அர­சி­ய­லில் அடிப்­படை அறிந்த அனை­வ­ருக்­கும் தெரி­யும். இந்த இணைப்­பு­கள் மேலும் மேலும் தொட­ரப்­போ­கின்­றன. தற்­கா­லிக ஆதா­யங்­க­ளுக்­காக தி.மு.க.விட்டு வில­கிச் சென்­ற­வர்­கள் தங்­கள் கட்­சி­களை இழந்­து­ கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­து­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நம்­ப­க­மான தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி,மு,க.வை அர­சி­யல் ரீதி­யாக எதிர்க்­கும் கட்­சி­க­ளுக்­குக் கூட தி.மு.க.விற்கு இழைக்­கப்­பட்ட துரோ­கம் பெரும் அதிர்ச்­சியை அளித்­துள்­ளன. இந்­திய பிர­த­மர் மோடி சில தினங்­களுக்கு முன்பு காங்­கி­ரஸ் தி.மு.க.விற்கு இழைத்த துரோ­கத்தை சுட்­டிக் காட்­டிப் பேசி­னார். நாம் தமி­ழர் கட்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர்  சீமான் தி.மு.க. கூட்­டணி மூலம் காங்­கி­ரஸ் பெற்ற பத்து நாடா­ளு­மன்ற இடங்­களை ராஜி­னாமா செய்­து­விட்டு தி.மு.க. கூட்­ட­ணி­யை­விட்டு வெளி­யே­றட்­டும் என்­றார். அ.ம.மு.க. கட்சி பொதுச் செய­லா­ளர் டி.டி.வி. தின­கரன்’ தி.மு.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் கரு­ணை­யால் விஜய் ஆட்சி நடத்­து­கி­றார். த.வெ.க. அர­சிற்கு ஆத­ர­வ­ளிக்­கும் கட்­சி­கள் விரை­வில் வருத்­த­ப­டு­வார்­கள்’ என்று கூறி­யி­ருக்கி­றார். தி.மு.க.வை சுற்றி நடப்­பவை அனைத்­தும் இன்று தமிழ்­நாட்­டின் அன்­றாட பேசு பொரு­ளா­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு அர­சி­ய­லில் மட்­டு­மல்ல, இந்­திய அர­சி­ய­லுமே தி.மு.க.வை மைய­மிட்டே சுழல்­கின்­றன. இந்­தியா கூட்­ட­ணி­யி­லி­ருந்து தி.மு.க. வெளி­யே­றும் முடிவு பல கட்­சி­க­ளை­யும் அதிர்ச்­சி­ய­டைச் செய்­துள்­ளது. பதி­னைந்து ஆண்­டு­க­ளாக பா.ஜ.கவிற்கு எதி­ராக தேசிய அள­வில் சம­ர­ச­மற்ற போராட்­டத்தை நடத்தி இந்­தியா கூட்­ட­ணியை வலி­மை­பெ­றச் செய்­த­வர் தி.மு.க. தலை­வர். அவர் இந்­தியா கூட்­ட­ணி­யின் தேசிய முகம். பல்­வேறு மாநில- தேசிய தலை­வர்­க­ளி­டம் கலை­ஞ­ருக்கு நிக­ரான மதிப்­பும் நட்­பு­ணர்­வும் கொண்­ட­வர். பா.ஜ.க. எதிர்ப்­பின் நம்­ப­க­மான தலை­வர் என்ற நிலை­யினை 
நீண்­ட­கா­ல­மாக காத்­து­வ­ரு­ப­வர். மேலும் தேசிய அள­வில் எந்­தப் பத­வி­யை­யும் கோரா­த­வர் என்­ப­தால் எவ­ருக்­கும் அவ­ரோடு போட்­டி­யில்லை. அவர் இந்­தியா கூட்­ட­ணி­யின் மையப் புள்ளி. தி.மு.க. இந்­தியா கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யே­று­வது அந்­த கூட்­ட­ணியை எவ்­வ­ளவு தூரம் பல­வீ­னப்­படுத்­தும் என்­பது கூட்­ட­ணி­யி­லி­ருக்­கும் எல்­லாக் கட்­சி­க­ளுக்­கும் தெரி­யும். கூட்­ட­ணி­யின் பல தலை­வர்­கள் முரண்­பட்டு நின்ற நேரத்­தில்­கூட அதைப் பாது­காத்­த­வர் முத்­து­வேல் 
கரு­ணா­நிதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆனால் இந்த அஸ்­தி­வா­ரத்­தையே அசைக்­கும் வேலையை தமிழ்­நாட்­டில் தி.மு,கவிற்கு எதி­ராக மட்­டு­மல்ல பல மாநி­லங்­க­ளில் தங்­க­ளது பல நண்­பர்­க­ளுக்கு எதி­ராக காங்­கி­ரஸ் செய்­தி­ருக்­கி­றது. காங்­கி­ர­ஸிற்கு என்று தேசிய அள­வில் கூட்­ட­ணிக் கொள்­கை­களோ ஒன்­று­பட்ட தேசிய நலன்­களோ கிடை­யாது. அந்­தந்­தந்த தேர்­தல்­க­ளில் அந்­தந்த மாநி­லத்­தில் உள்­ளூர் காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளின் அர­சி­யல் ஆதா­யங்­க­ளுக்­காக 
தங்­கள் தேசி­யக் கூட்­டணி நண்­பர்­க­ளுக்கு எதி­ராக குழி தோண்­டு­வது. பிறகு அதே கட்­சி­களை நோக்கி ‘’வாருங்­கள்…பா.ஜ.க.வை எதிர்த்து காங்­கி­ரஸை ஆட்­சி­யில் அமர்த்­து­வோம் ‘’என்று அழைப்­பது. இப்­படி ஒரு குரூ­ர­மான அர­சி­யலை காங்­கி­ரஸ் தொடர்ந்து நடத்­து­வ­தால்­தான் இந்­தியா கூட்­டணி தொடர்ந்து பல­வீ­ன­ம­டைந்து வந்­தி­ருக்­கி­றது. காங்­கி­ர­சின் இந்த இரட்­டைக்­கு­திரை சவா­ரிக்­குத்­தான் தி.மு.க. இப்­போது முடிவு கட்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பீகார் மற்­றும் பல மாநி­லங்­க­ளில் மாநி­லக் கட்­சி­களை நிர்­பந்­தித்து கூடு­தல் இடங்­க­ளைப் பெற்று அவற்­றில் பெரு­மளவு தோற்று அக்­கட்­சி­க­ளை­யும் பல­வீ­னப்­ப­டுத்­து­வது, தாங்க எதிர்த்­த­வர்­க­ளி­டமே குதிரை பேரங்­க­ளில் ஈடு­பட்டு கட்­சி­தா­வல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­வது போன்­ற­வை­யெல்­லாம் காங்­கி­ர­ஸின் வழக்­க­மான செயல்­மு­றை­க­ளா­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அர­விந்த் கெஜ்­ரி­வா­லுக்கு எதி­ராக காங்­கி­ரஸ் நடத்­திய தாக்­கு­தல், மேற்கு வங்­கத்­தில் திரி­ண­மூல் காங்­கி­ரஸை‘ பயங்­க­ர­வாத இயக்­கம்’ என்­றும் ராகுல் காந்தி வர்­ணித்­தது எல்­லாம் அந்­தக் கூட்­ட­ணி­யி­யின் வலி­மை­யான சக்­தி­களை சித­ற­டித்­து­விட்­டன. கேர­ளத்­தில் சி.பி.எம்., பா.ஜ.க.வு­டன் கூட்­ட­ணி­யி­லி­ருக்­கி­றது என்று ராகுல் காந்தி பேசி­யது அங்கு பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. காங்­கி­ரஸ் கட்­சி­யி­டம் இதற்­காக சி.பி.எம். விளக்­கம் கேட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தி­யா­வில் ஒரு வலி­மை­யான மாற்று அணியை யாரால் கட்ட முடி­யும் என்­றால் அது தேசிய பொது­ந­ல­னில் அக்­க­றை­கொண்ட நம்­பகத்தன்மை கொண்ட தி.மு.க. தலை­வ­ரால் மட்­டுமே முடி­யும். இந்­தியா கூட்­ட­ணி­யில் தி.மு.க. தொட­ர­வேண்­டும் என்று சில காங்­கி­ரஸ் தலை­வர்­கள் கோரு­வது இத­னால்­தான். ‘தமிழ்­நாடு காங்­கி­ரஸ்­தான் த.வெ.க. கூட்­ட­ணி­யி­லி­ருக்­கி­றது, இந்­திய தேசிய காங்­கி­ரஸ் அல்ல’ என்­றெல்­லாம் அவர்­கள் பேசு­வது ம்இத­னால்­தான். தங்­க­ளுக்கு எது ஆதா­யமோ அது மட்­டுமே எங்­கள் அன்­றைய தின அர­சி­யல் நிலைப்­பாடு என்ற கொள்கை கொண்­ட­வர்­களை காலம் கடு­மை­யா­கத் தண்­டிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க கடந்த நாற்­ப­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக தேசிய அர­சி­ய­லில் ஒரு நிர்­ணய சக்­தி­யா­கத் திகழ்ந்து வந்­தி­ருக்­கி­றது. பல பிர­த­மர்­க­ளை­யும் குடி­ய­ர­சுத்­த­லை­வர் களை­யும் உரு­வாக்­கிய கட்சி. இந்­தி­யா­வில் அர­சி­யல் குழப்­பங்­கள் நில­விய காலங்­க­ளில் நிலை­யான அர­சு­கள் உரு­வாக உறு­து­ணை­யாக இருந்த கட்சி. தி.மு.க. அளவு ஒன்­றிய அர­சு­க­ளில் நீண்­ட­கா­லம் பங்­கேற்ற மாநி­லக் கட்­சி­கள் வேறு எது­வும் இல்லை. மாநி­லத்­தி­லும் தி.மு.க.வை­போல நீண்ட கால கூட்­ட­ணியை  வேறு எந்த மாநி­லக் கட்­சி­யும் நிலை நிறுத்­தி­ய­ தில்லை. ஒரு கூட்­டணி 
ஆட்­சியை ஒன்­றி­யத்­தில் எப்­படி உறு­தி­யாக நடத்­த­வேண்­டும் என்று தி.மு.க.விற்­குத் தெரி­யும். தேசிய அள­வி­லும் மாநில அள­வி­லும்  முரண்­பட்ட கட்­சி­களை ஒரு குடைக்­குள் கொண்­டு­வந்து எப்­படி ஒரு வலி­மை­யான கூட்­ட­ணியை அமைக்க வேண்­டும் என்­ப­தும் தி.மு.க.விற்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த.வெ.க.வின் புதிய நண்­பர்­க­ளின் சங்­க­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்று த.வெ.க.வோடு இணைந்து நிற்­கும் கட்­சி­கள் நெருக்­க­டி­களை சந்­திக்­கத் தொடங்­கி­யுள்­ளன. த.வெ.க. அர­சின் செயல்­பா­டு­க­ளும் பல பிரச்­சி­னை­க­ளில் அவர்­க­ளது நிலைப்­பா­டு­க­ளும் அவர்­களை சங்­க­டத்­தில் நெளிய வைக்­கின்­றன. குர்­பானி மாறு அறுப்­ப­தற்­குத் தடை, திருப்­பரங்­குன்­றம் ஆவ­ணப்­ப­டத்­திற்­குத் தடை, மின் வெட்டு, அமைச்­சர்­க­ளின் அரா­ஜ­கங்­க­ளும் கேலிக்­கூத்­து­க­ளும் என பல­வற்­றிற்­கும் அவர்­கள் பதில் சொல்ல நிர்­பந்­திக்­கப்­ப­டு­கி­றார்­கள். ஒரு இட­து­சா­ரித்  தலை­வர்’  தி.மு.க. கூட்­டணி என்ற ஒன்றே இப்­போது இல்லை’ என்­கி­றார். இன்­னொரு தலை­வர்  
‘நாங்­கள் தி.மு.க. கூட்­ட­ணி­ யில் நீடிக்­கி­றோம்’ என்­கி­றார். மற்­ற­வர்­கள் கூச்­சத்­தி­லும் சங்­க­டத்­தி­லும் சமா­ளிக்க முடி­யா­த­ வற்றை எல்­லாம் சமா­ளித்­துக்­கொண்டு திண­றிக் ­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளுக்கு இன்­னும் இங்கே எவ்­வ­ள­வு­நாள் தாக்­குப் பிடிக்க முடி­யும் என்ற சந்­தே­கம் வந்­து­விட்­டது. கூட்ட்­ணியை விட்டு வெளி­யே­றி­னால் அவர்­கள் அ.தி.மு.க.வி­டம் செல்ல முடி­யாத­படி ஏற்­க­னவே த.வெ.க.,  அ.தி.மு.க.வை விழுங்கி வரு­கி­றது. பா.ஜ.க. விழுங்­கி­ய­தன் மிச்­சம் அது. இந்­நி­லை­யில் தமிழ்­நாட்­டின் நிலை­யான வளர்ச்­சிக்­கான மக்­கள் நல அரசை தி.மு.க.வே கொடுக்க முடி­யும் என்­பதை மக்­கள் உண­ரத் தொடங்­கி­விட்­டார்­கள். விரை­வில் கூட்­ட­ணி­யை­ விட்­டுச் சென்ற பற­வ­கள் கூடு திரும்­­வேண்­டிய காலம் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.விற்கு எதி­ரான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொடர் பொய்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் ஊட­கங்­க­ளி­லும் தி.மு.க. தேர்­த­லுக்­குப்­பின்­னும் ஒரு பேசு­பொ­ரு­ளாக இருப்­ப­தன் கார­ணம்,  தி.மு.க.வை ஒரு பல­வீ­ன­மான சக்­தி­யாக காட்­டு­வ­தற்­காக பொய்ச் செய்­தி­க­ளும் புரட்­டு­க­ளும் தொடர்ந்து பரப்­ப­ப­டு­ வ­தன் கார­ணம் தி.மு.க. என்ற நெருப்பு கனன்­று­கொண்­டி­ருக்­கி­றது, அது எந்த நேர­மும் காட்­டுத்­தீ­யாக மாறும் என்­ப­து­தான். அதை எப்­ப­டி­யா­வது நீரூற்றி அணைத்­து­வி­ட­லாம் என கனவு காண்­கி­றார்­கள். தி.மு.க.வின் தோல்வி தொடர்ந்து போஸ்­மார்ட்­டம் செய்­யப்­ப­டு­வ­தும் தி.மு.க.வின் அணி­கள், சில தலை­வர்­கள் தொடர்ந்து தாக்­கப்­ப­டு­வ­தும், விஜய் அடுத்த பதி­னைந்து வரு­டங்­க­ளுக்கு ஆட்­சி­யில் 
இருப்­பார், தி.மு.க. மீளவே முடி­யாது என கதை அளப்­ப­தும் தி.மு.­க.­வைப்­பற்­றிய பதற்­றத்­தி­னா­லும் பயத்­தி­னா­லும்­தான். தி.மு.க. மீதான எதிர்­மறை பொய்ப்­பிம்­பங்­க­ளைக் கட்­டு­வதன் மூல­மாக அதை அழித்­து­வி­ட­லாம் என்ற அவர்­க­ளது நம்­பிக்­கையை தி.மு.க. தலை­வ­ரும், சட்டமன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தி.மு.க. பின்­னால் திர­ளும் இளை­ஞர்­க­ளும் சித­ற­டித்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. ஆட்­சி­யில் இருந்­தா­லும் சரி இல்லா­
விட்­டா­லும் சரி, தலைப்­புச் செய்­தி­களை தி.மு.க.தான் 
தீர்­மா­னிக்­கும். அன்று அர­சி­ய­லில் எது பேசப்­ப­டும் 
என்­பதை கலை­ஞர் தீர்­மா­னித்­தார். இன்று முத்­து­வேல் 
கரு­ணா­நிதி ஸ்டாலின் தீர்­மா­னிக்­கி­றார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>