<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 03:40:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260609T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09062026-CHN-08" position.sequence="08" ex-ref="09062026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="1">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">சில கேள்விகளும், சில விளக்கங்களும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup710165_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">“எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ந்­தக் கட்­சிக்­கும் தங்­க­ளது அர­சி­யல் முடி­வைத் தீர்­மா­னிக்­கும் உரிமை உண்டு. யார் மனத்­தை­யும் புண்­ப­டுத்­தும் சொற்­க­ளைப் பேச வேண்­டாம்” என்று தொடக்­கத்­தி­லேயே தொண்­டர்­க­ளுக்­குத் தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் கூறி­யி­ருந்­தார். சென்னை அறி­வா­ல­யத்­தில் மாற்­றுக் கட்­சி­யி­னர் கழ­கத்­தில் இணை­யும் விழா­வில் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்­சிக்கு வர வேண்­டும் என்­ப­தற்­காக, நம்­மோடு கூட்­டணி அமைத்த கட்­சி­க­ளின் தய­வில் தான் தமிழ்­நாட்­டில் ஒரு ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. நாங்­கள் செல்­கி­றோம் என்று சொன்ன போது, அது உங்­கள் விருப்­பம்; அது  உங்­க­ளுக்கு இருக்­கும் ஜன­நா­ய­கம்; அதை நான் தடுக்க மாட்­டேன்”  என்று அந் நிகழ்ச்­சி­யில் பேசும்­போது குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">2026 நடை­பெற்ற சட்­ட­மன்­றத்தேர்­த­லில் திமுக கூட்­ட­ணி­யில் பங்­கேற்று, ஒரு ராஜ்­ய­சபா இட­மும் 28 சட்­ட­மன்ற தொகுதி இடங்­களை பெற்­றது காங்­கி­ரஸ். ஐந்து இடங்­க­ளில் மட்­டும் வெற்றி பெற்ற காங்­கி­ரஸ் கட்­சி­யா­னது; இதற்­காக தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்­தார் மு.க.ஸ்டாலின் ஆனால், காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் இரா­குல் காந்தி; தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது, திமுக தலை­வர் தள­பதி ஸ்டாலி­னு­டன் பங்­கேற்­றுப் பிரச்­சா­ரம் செய்ய முன் வர­வில்லை. தேர்­தல் முடிந்த பின்­ன­ரும் திமுக தலை­மைக்கு நன்றி கூடக் கூற வர­வில்லை. அந்­தக் காங்­கி­ரஸ் கட்­சி­யா­னது நான்கு கால் பாய்ச்­ச­லில் த.வெ.க. கூட்­டணி அர­சில் பங்­கேற்று அமைச்­சர்­கள் பதவி பெற்று பூவோ­டும் பொட்­டோ­டும் மங்­கல வாழ்க்கை நடத்­திக் கொண்டு  இருக்­கி­றது. த.வெ.க. அமைச்­ச­ர­வை­யில் சேர்ந்த காங்­கி­ரஸ் கட்சி திமு­க­வின் முது­கில் குத்தி துரோ­கம் செய்­து­விட்டு இப்­பொ­ழுது ‘இண்டியா’ கூட்­டணி அழைப்பு விடுத்­தி­ருப்­பதை திமுக அதில் பங்­கேற்­கா­மல் புறக்­க­ணித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உலக வர­லாற்­றில் நடை­பெற்ற அர­சி­யல் துரோ­கம் என்­பது ஜூலி­யஸ் சீசர் படு­கொலை செய்­தது தான். சீச­ரின் அதீத அதி­கார வளர்ச்சி கண்டு பயந்த ரோமா­னிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் (செனட்) சிலர் சூழ்ந்து நின்று  சீச­ரைக் கத்­திப் பாய்ச்­சல் நடத்­திய போது, எதிர்­பா­ராத வகை­யில் சீச­ரின் நண்­பன் மார்க்­கஸ் ஜூனி­யர் புருட்­டஸ்­சும் திடீ­ரெ­னக் கத்­தி­யால்  அடி வயிற்­றில் குத்­தி­னான். “நீயுமா புருட்­டஸ் (ET tu Brute? (you too, Brutes?...) என்­ற­வாறு துரோ­கி­க­ளி­டம்  23 கத்­திக் குத்­து­களை வாங்­கிய சீசர் மர­ணத்­தின் மடி­யில்  சரிந்து விழுந்­தான். இது கி.மு.44 இல் மார்ச் 15 இல் சீச­ரைக் கொன்ற வர­லாறு. ஆனால், காங்­கி­ரஸோ பத­வி­வெறி பிடித்த காங்­கி­ரஸோ கூட்­ட­ணித் தர்­மத்தை மீறித், தனது துரோ­கச் செயல்­பா­டு­க­ளால் நன்றி மறந்து அர­சி­யல் படு­கொ­லை­கள் நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காங்­கி­ரஸ் கட்சி இப்­பொ­ழுது மட்­டு­மல்ல; 1952இல் சுதந்­திர இந்­தி­யா­வில் சென்னை மாகா­ணச் சட்­ட­மன்­றத்­திற்கு நடந்த முதல் தேர்­த­லில்,  தி.மு.க. போட்­டி­யி­ட­வில்லை. எனி­னும், திமு­க­வின் ஆத­ரவு பெற்று அதன் “திரா­விட நாடு திரா­வி­ட­ருக்கே” கொள்கை, மாநில உரி­மைக் கொள்கை, பொரு­ளா­தா­ரக் கொள்­கையை ஏற்று விழுப்­பு­ரம் எஸ்.எஸ். இரா­ம­சாமி படை­யாட்­சி­யின் உழைப்­பா­ளர் கட்சி (Tamil Nadu Toilors Party TTP) யும், மாணிக்­க­வேலு நாயக்­க­ரின் தலை­மை­யில் உள்ள பொது­வு­ட­மைக் கட்சி எனும் காமன் வீல் (Common Weal Party) கட்­சி­யும் அண்ணா தலை­மை­யி­லான தி.மு.க.வின் உறு­தி­மொ­ழிப் பத்­தி­ரத்­தில் (Affidavit) கையெ­ழுத்­து­போட்­டு­விட்டு நின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவர்­க­ளில்  8 பேர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், 42 பேர் சட்­ட­மன்­றத்­திற்­கும் வெற்றி பெற்­றுத் தேர்ந்­தெ­டுக்க பட்­டி­ருந்­த­னர். மொத்­தம் 376 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 152 பேர் மட்­டுமே காங்­கி­ரஸ் இருந்­த­தால், போதிய பெரும்­பான்­மை­யின்றி   ஆட்சி அமைக்க இய­ல­வில்லை. உடனே, காம­ரா­ஜர் களத்­தில் இறங்­கி­ய­தால், கழ­கத்­தின் ஆத­ர­வோடு வெற்றி பெற்­ற­வர்­கள் பலர் ஒப்­பந்­தத்தை மறந்து ஆயா­ராம், காயா­ராம் போன்று கட்சி மாறி­க­ளா­கப் பயன்­பெற்று அமைச்­சர்­க­ளாக்­கப்­பட்­ட­னர். இரு கட்­சி­க­ளை­யும் சுயேச்­சை­க­ளை­யும் விலை­பேசி இரா­ஜாஜி தலை­மை­யில் காங்­கி­ரஸ் ஆட்சி அமைத்த வர­லாறு இன்­றும் காங்­கி­ரஸ் செய்த தேர்­தல் துரோ­கம் பற்­றிப் பேசும். கட்சி மாறிப் பதவி பெற்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக அண்­ணா­வின் ஆலோ­சனை பேரில் வாலா­ஜா­பாத்­தில்  திமுக கருப்­புக்­கொடி காட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. கூட்­ட­ணி­யில் இருந்து வெற்றி பெற்று ஆளுங்­கட்சி அமைச்­ச­ர­வை­யில்  பங்­குப்­பெற்ற  கட்­சி­யின் சில தலை­வர்­கள், திமுக பற்றி விமர்­ச­னங்­கள் செய்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மக்­கள் வரிப்­ப­ணத்­தில் இயங்கி வரும் அர­சின் தலை­மைச் செய­ல­க­மா­னது, த.வெ.க.வின் தலைமை அலு­வ­ல­க­மாக மாறி விட்­டது.  பிற அர­சி­யல் கட்­சி­யி­ன­ரைக் சேர்ப்­ப­தும், காங்­கி­ரஸ் கட்சி மூத்த தலை­வர் ப. சிதம்­ப­ரமே சென்று அர­சி­யல் பேசி மாநி­லங்­க­ளவை  எம்.பி. சீட் வாங்­கு­வ­து­மான கரை வேட்­டி­கள் நட­மா­டும் அர­சி­யல் கட்­சி­கள்  தற்­போது கோட்­டை­யில் கொடி­கட்­டிப் பறக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஊழல் தவறே செய்­யாத நபர் என்­றும் உத்­த­ம­புத்­தி­ரர்­கள் என்­றும் பாராட்டு தெரி­வித்து நடி­கர் விஜய் ஆட்­சிக்கு ஆத­ர­வும் அமைச்­ச­ர­வை­யில் பங்கு பெற்­றும் பேசி வரு­கி­றார்­கள் சிலர். அது  உண்­மையா? சென்னை உயர் நீதி­மன்­றமே உறு­திப்­ப­டுத்­து­கிற அள­வுக்கு, தான் நடித்த திரைப்­ப­டத்­தில் வாங்­கிய ரூபாய் 15 கோடி வரு­மா­னத்­தைக் கணக்கு காட்­டா­மல் மறைத்த ஊழல் “புலி” அல்­லவா அந்த நடி­கர்? சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தனது அசை­யும் சொத்து விவ­ரம் கொடுத்த போது, பெரம்­பூர் வேட்பு மனு­வில் ரூபாய் 115.13 கோடி என்­றும், திருச்சி கிழக்கு தொகு­தி­யில் ரூபாய் 220.15 கோடி என்­றும், சுமார் 105 கோடிக்கு மேல் ஏமாற்­றிக் கணக்கு காட்­டிய இந்த உத்­தம  நபர் மீது உயர்­நீ­தி­மன்­றத்­தில் இன்று வழக்கு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. வரு­மா­ன­வ­ரித் துறைக்­கும் தேர்­தல் ஆணை­யத்­துக்­கும் நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டுள்­ளது. இவர் தான் ஊழலை ஒழிக்­கப் போகி­றா­ராம்? இப்­ப­டி­பட்ட நபரை  நம்பி, அர­சில் அமைச்­சர்­க­ளா­கப் பங்­கேற்­றும்  அரிச்­சந்­திர மகா­ராஜா இவர் தான் என்று சில கட்­சி­கள் த.வெ.க. அர­சுக்கு ஆத­ரவு  கொடுக்­கின்­ற­னவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழ­கக் கூட்­ட­ணி­யில் இருந்­த­போது தேர்­தல் பரப்­பு­ரை­யில் வி.சி.க. கட்­சித் தலை­வர் நண்­பர் திரு­மா­வ­ள­வன் என்ன பேசி­னார்?... இன்­றும் அவ­ரு­டைய பேச்­சு­கள் வீடியோ காணொ­ளிப் பேழை­யில் பதி­வா­கிச் சாட்­சி­யங்­க­ளாக இருக்­கின்­றன. “யாரி­டம் வாலாட்­டு­கி­றாய்? பத­வி­யைப் பார்த்­துப் பல்லை இளிக்­கி­ற­வன் இல்லை இந்­தத் திரு­மா­வ­ள­வன்... பதவி இந்­தத் தலை­யில் இருக்­கும் முடிக்­குச் சம­மா­கக் கரு­து­கி­ற­வன்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டுமா பேசி­னார். “தம்பி சீமா­னும், தம்பி விஜய்­யும் ஆர்.எஸ்.எஸ். பெற்று எடுத்த பிள்­ளை­கள்; அவர்­கள் பா.ஜ.க.வின் பிள்­ளை­கள் என்­பது அம்­ப­ல­மாகி இருக்­கி­றது! தி.க. காரர்­கள், தி.மு.க.காரர்­கள் பேசா­மல் வாய் மூடி மௌனித்­தி­ருக்­க­லாம்... ஆனால், திரு­மா­வ­ள­வ­னால் அப்­படி இருக்க முடி­யாது!..... நீங்­கள் தமி­ழுக்­கா­க­வும், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கா­க­வும், தமிழ் மண்­ணுக்­கா­க­வும் போரா­டக் கட்சி தொடங்­க­வில்லை; தி.மு.க.வை வீழ்த்­து­வ­தற்கு ஆர்.எஸ்.எஸ்.க்காகக் கட்சி தொடங்கி இருக்­கி­றீர்­கள். பெரி­யார், அம்­பேத்­கர் பேசிய அர­சி­ய­லை­யும் சேர்த்து வீழ்த்­து­வ­தற்கு நீங்­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்!.... “விசில்” அடிப்­ப­வர்­க­ளைத் தியேட்­ட­ருக்கு அனுப்­புங்­கள்; சட்­ட­ச­பைக்கு வேண்­டாம்!.. சட்­ட­ச­பை­யில் விசில் அடிக்க முடி­யாது. தியேட்­ட­ருக்கு வேண்­டு­மா­னால் அனுப்­புங்­கள்!..” என்று  சிம்­மக் குரல் எழுப்பி ஓங்­கிப் பேசி­ய­வர் தான் நம் நண்­பர் திரு­மா­வ­ள­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல;  சென்னை ஒய்.எம்.சி.ஏ. திட­லில் நடை­பெற்ற தி.மு.க. பவள விழா­வில் (17-09-2024) கலந்­து­கொண்ட திரு­மா­வ­ள­ வன் பேசும்­போது “தி.மு.க.,தி.க.; எனும் இரட்­டைக் குழ­லு­டன் மூன்­றா­வது குழ­லாக வி.சி.க. இருக்­கும்...” எனச்  சத்­தி­யம் செய்து நெஞ்சை நிமிர்த்­திக் கட்­ட­பொம்­ப­னாக மாறி அர­சி­யல் பேசிய திரு­மா­வ­ள­வ­னது மூன்­றா­வது துப்­பாக்­கிக் குழல் என்ன ஆனது? பொம்­மைத் “துப்­பாக்­கி”ப் பட கதா­நா­ய­க­னின் ஆட்­சி­யில் அவ­ரது கட்­சி­யும் அவ­ரும்  பங்­கேற்று இருக்­கின்­ற­னர். மத­வெறி பிடித்த சக்­தி­களை வீழ்த்­து­வ­தற்­குத் தி.மு.க. அணி­யில் பங்­கேற்று இருந்­த­வர்­க­ளின் கொள்­கை­யா­னது; இன்று ஒரே ஒரு அமைச்­சர் பத­விக்­கா­கத் தனது மூன்­றா­வது குழாய் துருப்­பி­டித்து உடைந்து போய்­விட்­டது போலும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. கூட்­ட­ணி­யில் எட்டு இடங்­க­ளைப் பெற்ற வி.சி.க. இரண்டு இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் நாடு முழு­வ­தும் சென்று திரும்­பிய நிலை­யில்; களைப்­புற்று இளைப்­பா­றா­மல்   திண்­டி­வ­னம் தொகு­தி­யில் நின்ற வன்னி அரசை ஆத­ரித்து வெற்றி பெற வைப்­ப­தற்­காக தி.மு.க. இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர்  உத­ய­நிதி ஸ்டாலின் பிரச்­சா­ரத்­தில்  கலந்து கொண்­டார். அவர் பேசிய போது,” எனது சேப்­பாக்­கம் தொகு­திக்­குக் கூட நான் பிரச்­சா­ரத்­திற்கு முழு­மை­யா­கச் செல்ல முடி­ய­வில்லை. ஆனால், நம் அண்­ணன்  வன்னி அரசு வெற்றி பெற வேண்­டும் என்­ப­தற்­காக உங்­க­ளி­டத்­தில் வாக்கு கேட்­கி­றேன். வெற்றி பெற வைப்­பீர்­களா?.... உறு­தி­யாக வெற்றி பெறச் செய்­யுங்­கள்!” என்று வாக்­கா­ளர்ப் பெரு­மக்­க­ளி­டத்­தில் மூச்சு இறைக்க, இறைக்க பேசி­னார். அதில் வெற்றி பெற்ற வன்னி அரசு,’’ தூய சக்தி ஆட்சி?” யில் இன்று அமைச்­ச­ராக்­கப்­பட்டு மஞ்­சள் குங்­கு­மம் கொள்கை உறு­தி­யோடு அமைச்­ச­ர­வை­யில் இருந்து செயல்­பட்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">2001 இல் அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் நின்று  மங்­க­ளூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நின்று வெற்றி பெற்ற திரு­மா­வ­ள­வன் பின்பு திமுக கூட்­ட­ணிக்கு மாறி­னார். 2004 இல் பிப்­ர­வ­ரி­யில் மங்­க­ளூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்­தார். அதற்­குக் கார­ணம், சிதம்­ப­ரம் மக்­க­ள­வைத் தொகு­தி­யில் நிற்க,  தனக்கு வாய்ப்பு வழங்­க­வில்லை என்­றும், ஈழத் தமி­ழர் விவ­கா­ரத்­தில் அதி­ருப்தி ஏற்­பட்­ட­தா­க­வும் கூறிக் கூட்­ட­ணித் தர்­மம் கருதி ராஜி­னாமா செய்­வ­தா­கக் கூறி­னார். அப்­ப­டி­யெல்­லாம் சுய­ம­ரி­யாதை கொண்டு கூட்­ட­ணித் தரு­மம் காத்து வந்த திருமா அவர்­கள்... இன்று கூட்­ட­ணித் தர்­மத்தை விட்­டுக் கொள்­கை­யைக் குழி தோண்­டிப் புதைத்து விட்­டுத் தேர்­தல் ஈரம் காய்­வ­தற்­குள் த.வெ.க அமைச்­ச­ர­வை­யில் சேர்ந்­தது எப்­படி? என்று சொல்ல வேண்­டும்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கூட்­ட­ணித் தலை­வர் மு.க. ஸ்டாலி­னைச் சந்­தித்த இந்­திய யூனி­யன் முஸ்­லிம் கட்­சித் தலை­வர் கே.எம்.காதர் மொய்­தீன் அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்டி அளித்த போது,  “தி.மு.க. கூட்­ட­ணி­யில் நீடிப்­போம்; மு.க. ஸ்டாலின் எடுக்­கும் முடிவே எங்­கள் முடிவு. த.வெ.க. அர­சுக்கு ஆத­ரவோ, அல்­லது அர­சில் பங்­கேற்­கவோ மாட்­டோம்” என்று உறு­தித்­தொ­னி­யில் பேசி­னார். ஆனால், முந்­தைய நிலைப்­பாட்டை மாற்­றித் தனது கட்­சி­யின் பாப­நா­சம்  சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஏ.எம். ஷாஜ­கா­னைச் சிறு­பான்­மைத் துறை அமைச்­ச­ரா­கப் பங்­கேற்க வைத்­தார். இது பற்­றிக் கடு­மை­யான விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“இது அர­சி­யல் சந்­தர்ப்­ப­வா­தம். தி.மு.க.வில் அனைத்­தும் அனு­ப­வித்து விட்­டுத் தற்­போது அதி­கா­ரத்­தில் பங்கு வேண்­டும் என்று த.வெ.க.பக்­கம் தாவி விட்­டார்; முதல்­வர் விஜய்யை அள­வுக்கு அதி­க­மா­கப் புகழ்­கி­றார்; தனது சுய­ந­லத்­தோடு பாராட்டி விஜய்­யின் இர­சி­கர் மன்­றத் தலை­வர் போல் செயல்­ப­டு­கி­றார்; கொள்கை உறு­தி­யில்­லா­மல் வாக்­க­ளித்த மக்­க­ளுக்­குத் துரோ­க­மி­ழைத்­துள்­ளார்” என்று கடு­மை­யான விமர்­ச­னங்­கள் தமிழ்­நாட்­டில் சிறு­பான்மை மக்­கள் மற்­றும் இஸ்­லா­மிய அமைப்­பு­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளன .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“என் வலது கையில் சூரி­ய­னை ­யும், இடது கையில் சந்­தி­ர­னை­யும் வைத்­தா­லும், நான் ஏகத்­துவ பிரச்­சா­ரத்தை இஸ்­லாம் பணியை கை விட மாட்­டேன்” என்று கொள்­கை­யில் உறு­தி­யாக நின்­ற­வர் நபி­கள் நாய­கம் (ஸல்) அவர்­கள். அவர் வழி­யில் வந்­த­வர்­கள் நேற்று ஒரு வாச­கம்; இன்று ஒரு வாச­கம் சொல்லி அர­சி­ய­லில் அறம் பிறழ்ந்து  செல்­வது எப்­படி நியா­ய­மா­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">1972 ஏப்­ரல் மாதம் கண்­ணி­ய­மிகு காயிதே மில்­லத் முக­மது இஸ்­மா­யில் சாகிப்  அவர்­கள் உடல் நலங் குன்றி ஸ்டான்லி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த போது, முதல்­வ­ராக இருந்த கலை­ஞர், வெளி­யூர் நிகழ்ச்­சி­களை ரத்து செய்து விட்டு வந்து சந்­தித்­தார். “நான் கரு­ணா­நிதி வந்­தி­ருக்­கி­றேன்” என்று சொன்­னார். இறுதி மூச்சு நெருங்­கிய நேரத்­தி­லும், “கலை­ஞர் அவர்­களே நீங்­கள் தான் இனி இந்த இஸ்­லா­மி­யச் சமு­தா­யத்­தின் காவ­லர். இவர்­களை எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் கைவிட்டு விடா­தீர்­கள்” என்று உருக்­க­மாக கேட்­டுக்­கொண்­டார். இது பற்றி நெஞ்­சுக்கு நீதி நூலில் கலை­ஞர் எழு­திப் பதிவு செய்­துள்­ளார். ஏ.கே. ரிபாயி (A.K. Rifaie) என்­ப­வ­ரும்  இச் செய்­தி­யைத்  தனது “கவ்­மின் காவ­லர்” என்ற நூலி­லும் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இசு­லா­மி­யர்­கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­க­ளுக்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணித்­துக் கொண்ட சமூக நீதி இயக்­கம் என்­பதை யாரும் மறந்து விட முடி­யாது. மறுத்­தும் ஒதுக்கி விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சிறு­பான்மை மக்­கள் குறித்து தி.மு.க. தலை­வ­ராக இருந்த கலை­ஞ­ரி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, “அவர்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­வர்­கள் (Protectable Society)” என்­றார். உடனே நிரு­பர்­கள், அப்­ப­டி­யா­னால் பெரும்­பான்மை மக்­கள் பற்றி என்ன சொல்­கி­றீர்­கள்? என்று கேட்­ட­போது, “அவர்­கள் மதிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­கள் (Respectable Society)” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காயிதே மில்­லத் பிறந்­த­நா­ளின் போது, அவ­ரது கல்­ல­றை­யில் மலர்ப் போர்வை போர்த்தி விட்­டுத் திரும்­பிய  நேரத்­தில், நிரு­பர்­கள் எழுப்­பிய சிறு­பான்மை மக்­கள் பற்­றிய  கேள்வி ஒன்­றுக்கு, பதி­ல­ளித்த கலை­ஞர், “சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஒரு ஆபத்து, தீங்கு என்­றால்; அது என் பிணத்­தைத் தாண்­டித் தான் நடக்­கும்” என்­றார். அச்­செய்தி இந்­தியா முழு­வ­தும் எதி­ரொ­லித்­தது மட்­டு­மல்­லா­மல் தொடர்ந்து கலை­ஞர் அதன்­ப­டியே நடந்து வந்­தார் இயக்­கத்­தை­யும் நடத்தி வந்­தார். அதே போலத் தான் நீதிக்­கட்­சி­யின் தலை­வர்­கள் தொடர்ந்து, பெரி­யார்,  அண்ணா, கலை­ஞர் மற்­றும் இன்று தள­பதி மு.க.ஸ்டாலின் எனக் கட்­சி­யி­லும், ஆட்­சி­யி­லும்  சிறு­பான்மை மக்­க­ளுக்­குப் பாது­காப்­பும், நலம் சார்ந்த திட்­டங்­க­ளும் செய்து கொண்­டி­ருப்­பது தி.மு.க. என்­பது யாரும் மறுக்க முடி­யாத வர­லாற்­றுச் செய்­தி­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சிதம்­ப­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நின்று வெற்றி பெற்ற மனித நேய ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­வர் மு. தமி­முன் அன்­சாரி, திமுக தலை­வர் மு.க. ஸ்டாலி­னைச் சந்­தித்து நன்றி கூற வந்த போது, “நான் எனது எம்.எல்.ஏ. பத­வியை விட்டு வில­கு­கி­றேன்; தாங்­கள் அந்த இடத்­தில் நின்று வெற்றி பெற்­றுச் சட்­ட­சபை செல்ல வேண்­டும்” என்று ஆதங்­கத்­தோடு  சொன்­னார். ஆனால் “அப்­படி ஏதும் செய்து விடா­தீர்­கள்; தாங்­கள் சட்­ட­மன்­றத்­தில் இருக்க வேண்­டும்” என்று தள­பதி அவர்க்கு ஆறு­த­லும் அறி­வு­ரை­யும் கூறி அனுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருச்­சி­யில் பேசிய ம.தி.மு.க.வின் தலை­வர் வைகோ­வின் மகன் துரை வைகோ  “திமுக கூட்­ட­ணி­யில்  உதய சூரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டது துர­திஷ்­ட­மா­னது” என்று கூறி செய்­தி­கள் வரு­கின்­றன. உத­ய­சூ­ரி­யன் சின்­னம் கொண்ட தி.மு.க.வில் தான் மாநி­லங்­க­ள­வைக்கு 4 முறை நின்று 24 ஆண்­டு­கள், மக்­க­ள­வை­யில் ஒரு முறை 5 ஆண்­டு­கள் என  எம்.பி. பதவி பெற்று 29 ஆண்­டு­கள் பொறுப்­பில் இருந்­த­வர்­தாம் வைகோ.  வி.சி. கட்சி, பொது­வு­ட­மைக் கட்­சி­கள் அவ­ர­வர் சின்­னத்­தைப் பெற்­றுக் கேட்டு நின்­ற­னர். ஆனால், வைகோ அவர்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டது ஏன்?  திமுக ஆட்­சி­யி­லும், கட்­சி­யி­லும் பல்­வேறு பய­ன­டைந்­த­வர்­கள் திமுக ஆட்சி வெற்றி பெற்று இருந்­தால்; இந்­தத் துர­திஷ்­டப் பேச்சு நடந்து இருக்­காது. மாஜி நடி­கர் விஜய்­யோடு தி.மு.க தலை­வர் மு.க. ஸ்டாலினை  இணைத்­துப் பேசு­வது என்­பதை எந்த விதத்­தி­லும் கழ­கத் தொண்­டன் ஏற்­றுக்­கொள்ள மாட்­டான்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>