<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 12:42:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260610T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10062026-CBE-03" position.sequence="03" ex-ref="10062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">கலைஞர் விதைத்த விதைகளும் – மு.க.ஸ்டாலினின் அறத்தின் அரசியலுமே – இன்றைய தமிழ்நாட்டின் மேன்மைக்குக் காரணங்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="104">தமிழ்நாட்டைப் பொற்காலமாக மாற்றியது, தளபதி மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">‘முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில்' நடிகர் சத்யராஜ் புகழாரம்! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="sathyaraj_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூன் 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கலை­ஞர் விதைத்த விதை­க­ளும் – மு.க.ஸ்டாலி­னின் அறத்­தின் அர­சி­ய­லுமே – இன்றைய தமிழ்­நாட்­டின் மேன்­மைக்­குக் கார­ணங்­கள்! என்றும்,  தமிழ்­நாட்­டைப் பொற்­கா­ல­மாக மாற்­றி­யது, தள­பதி மு.க.ஸ்டாலி­னின் திரா­விட மாடல் ஆட்சி! என்றும், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் – மாவட்­டச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. முன்­னின்று நடத்­திய ‘முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்­கூட்­டத்­தில்’ நடி­கர் சத்­ய­ராஜ் 
புக­ழா­ரம் சூட்டினார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர் ஆற்றிய உரை வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">என்­னு­டைய அன்­புத் தம்பி செயல்­வீரர் சேகர்பாபு அவர்­கள் கட்­டுப்­பாட்­டில்­தான் பல பகு­தி­கள் உள்­ளன. இன்­றைக்­கும் அவர்­தான் இங்கே தலை­வர். “தம்பி, எந்­தப் பகுதி?” என்று கேட்­டேன். “கொளத்­தூர்” என்­றார். அத­னால் என்­னு­டைய உரையை இப்­படி ஆரம்­பிக்­க­லாம் என்று இருக்­கி­றேன். கொளத்­தூ­ரில் பேசு­வ­த­னால் முதல் கேள்வி: நியா­யமா? 
நீங்­கள் செய்­தது நியா­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பொன்­வண்­ண­னின் உரைக்கு மறு­மொ­ழி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">108 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் அறி­வும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">என்­னு­டைய தம்பி பொன்­வண்­ணன் அவர்­கள் ஒரு பெரிய அர­சி­யல் வர­லாற்­றைப் பேசி­னார். தம்பி பொன்­வண்­ணன் அவர்­களே, நீங்­கள் பேசி­னீர்­களே மனி­த­கு­லத்­தின் வர­லாறு... எப்­பொ­ழுது மனி­தன் ஆரம்­பித்­தான்? எப்­ப­டிக் கடல் வழி­யில் போனான், எப்­படி வந்­தான்? 1920–இல்எப்­படி இரட்டை ஆட்சி முறை வந்­தது? முதன்­மு­த­லில் நீதிக்­கட்சி வந்­தது... இதெல்­லாம் உங்­க­ளுக்­குப் புதி­தாக இருக்­க­லாம், எனக்கு ரொம்­பப் பழசு. ஏனென்­றால், இப்­போது 108 எம்.எல்.ஏ.க்கள் வென்­றி­ருக்­கி­றார்­கள் அல்­லவா... அவர்­களி­டத்­தில் நான் கேட்­டுத் தெரிந்­து­கொண்­டேன்.பெரிய அறி­வுப் பெட்­ட­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நீங்­கள் பேசி­யது கம்­மி­தான், அவர்­களுக்கு முன்­னாடி இதெல்­லாம் ஒன்­றுமே இல்லை. நீங்­கள் அங்கே பேசி­னீர்­கள் என்று வைத்­துக் கொள்­ளுங்­க­ளேன், ‘வால்­கா­வி­லி­ருந்து கங்கை வரை’ பேசு­வார்­கள். எனக்கு என்­ன­வென்­றால், தம்பி பொன்­வண்­ணன் பேசி­யது அந்த 108 எம்.எல்.ஏ.க்களு­டைய அறி­விற்கு முன்­னாடி இது ‘ஜூஜூபி’, ஒண்­ணுமே கிடை­யாது. அவர்­க­ளெல்­லாம் பெரிய ஆட்­கள். பெரி­யார் களஞ்­சி­யம் என்­றெல்­லாம் புத்­த­கம் வந்­தி­ருக்­கி­றது அல்­லவா... அந்­தப் புத்­த­கத்­தில் இருப்­ப­தைத் தாண்டி அவர்­க­ளெல்­லாம் பெரிய களஞ்­சி­யம்! அதை நிரூ­பித்­துக்­கொண்டே இருக்­கி­றார்­கள். ஒரு அமைச்­ச­ருக்கு அவ­ரு­டைய துறையே எது என்று தெரி­ய­வில்லை! என்­னத்தை 
பண்­றது? காமெ­டி­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">1967–இல்­தான் முதன்­மு­றை­யா­கத் தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி வரு­கி­றது. அதற்கு முன்­னாடி காங்­கி­ரஸ் கட்­சி­தான் ஆட்­சி­யில் இருந்­தது. அது எனக்­குத் தெரி­யும், தம்பி பொன்­வண்­ண­னுக்­குத் தெரி­யும். அது ஒரு பண்­ணை­யார் கட்சி. என் மாமன், மச்­சா­னெல்­லாம் மிட்­டா­மி­ராசு, பண்­ணை­யார்­கள், ஜமீன்­தார்­கள்; அவர்­களெல்­லாம்­தான் காங்­கி­ரஸ் கட்­சி­யில் அமைச்­ச­ராக இருப்­பார்­கள். அப்­ப­டித்­தான் இருந்­தது அந்­தக் காங்­கி­ரஸ் கட்சி. அது என் வய­துக்­கா­ரர்­க­ளுக்­குத்­தான் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">1967–க்கு முன்­னாடி இந்த நாட்­டில் நடந்து கொண்­டி­ருந்­தது, அந்த மாதி­ரிப்பணக்­கா­ரர்­க­ளு­டைய ஆட்­சி­தான். ஏழைப்பங்­கா­ள­னா­கப் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் இருந்­தார்; ஆனால்,அதி­கா­ரத்­தில் இருந்­த­வர்­கள் எல்­லாம் பெரிய பெரிய பணக்­கா­ரர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முதல்வர் நாற்­கா­லி­யில் அண்ணா அமர்ந்­தார் – 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு நிமிர்ந்­தது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முதல்­மு­றை­யாக 1967–இல் பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி வந்­த­துக்கு அப்­பு­றம்­தான் தமிழ்­நாடு நிமிர்ந்­தது. அதை ஒருத்­தர் பதிவு போட்­டி­ருந்­தார், ‘முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அண்ணா அமர்ந்­தார், தமிழ்­நாடு நிமிர்ந்­தது’ என்று. அவர் ஒரு வரு­டத்­தி­லேயே நம்மை விட்­டுப் போய்­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அதற்­குப்­பி­றகு தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சிக்கு வரு­கி­றார்.அவ்­வாறு ஆட்­சிக்கு வந்து 1977 வரைக்­கும் ஒன்­பதுஆண்­டு­கால ஆட்­சி­யில் கலை­ஞர் விதைத்தவிதை­கள்­தான், இன்று தமிழ்­நாட்டை வள­மாக்கி, அறு­வ­டை­யாக்கி, தமிழ்­நாட்டை எங்­கேயோ கொண்டு போய் வைத்­தி­ருக்­கி­றது. அதை அப்­ப­டியே செயல்­ப­டுத்­திக் காட்­டி­ய­வர் நம்­மு­டைய முதல்­வர் ஸ்டாலின் அவர்­கள். முதல்­வர்­தான், எங்­க­ளுக்கு அவர்­தான் முதல்­வர்! அன்­பின் முதல்­வர், பண்­பின் முதல்­வர், பெருந்­தன்­மை­யின் முதல்­வர். சொன்­னார் அல்­லவா சட்­ட­ச­பை­யில், “கரூ­ரில் 41 பேர் இறந்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால், எந்­தக் கட்­சிக்­கா­ர­ரும் தன் சொந்­தக் கட்­சிக்­கா­ரர் சாக வேண்­டும் என்று ஆசைப்­பட மாட்­டார்; அதை அர­சி­யல் ஆக்­கா­தீர்­கள். அந்த வழக்கு நீதி­மன்­றத்­திற்­குப் போய்­விட்­டது; சிபி­ஐ–க்கு போய்­விட்­டது. தய­வு­செய்து அதை வைத்து அர­சி­யல் ஆதா­யம் தேட வேண்­டாம்” என்று சொன்­னார் இல்­லையா... அவர் முதல்­வர்! பெருந்­தன்­மை­யின் முதல்­வர், அறத்­தின் முதல்­வர். அப்­ப­டிப்­பட்ட முதல்­வர்­தான் இன்­றும் எனக்கு முதல்­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போ­தும் சரி, எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போ­தும் சரி... 2020–க்கு முன்பே என்­னு­டைய அன்­புத் தம்பி சேகர்­பாபு கலை­ஞ­ ரு­டைய பிறந்­த­நாள் விழா­விற்கு என்னை அழைப்­பார். பெரி­யார் திட­லுக்கு நான் வந்­தி­ருக்­கி­றேன். அதற்­குப்­பி­றகு, ஒரு­முறை நம்­மு­டைய தலை­வர் ஸ்டாலின் அவர்­க­ளு­டைய பிறந்­த­நா­ளுக்கு அழைத்­த­போது நான் சொன்­னேன், “தம்பி, கலை­ஞர் அவர்­கள் வச­னத்­தில் நான் இரண்டு படம் நடித்­தி­ருக்­கி­றேன்; கலை­ஞர் இப்­போது நம்­மி­டம் இல்லை, இப்­போது அவர் பொது­வா­ன­வர் ஆகி­விட்­டார். அத­னால் வரு­வது சரி. நான் தலை­வர் ஸ்டாலின் பிறந்­த­நா­ளுக்கு வந்­தால், நான் தி.மு.க. அனு­தா­பி­தான், நான் கிட்­டத்தட்ட தி.மு.க.கார­னா­கவே ஆகி­வி­டு­வேன்தம்பி, அது எனக்­குப் பெரிய பிரச்சி ­னை­யாக இருக்­கி­றது” என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­போது இந்த மேடைக்கு வரும்­போது, தி.மு.க. ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போது வந்­த­தை­விட மிக­வும் ‘கெத்­தாக’ வந்­தி­ருக்­கி­றேன். ஏனென்­றால், ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போது வந்­தால் ‘காக்கா பிடிக்க’ வந்­தி­ருக்­கி­றான் என்று சொல்­வார்­கள். அய்­யய்யோ இது வேற... நம்­மு­டைய சூப்­பர் ஸ்டார் ரஜினி சார் ஒரு காக்கா, கழுகு கதை சொன்­னார் அல்­லவா... அந்­தக் காக்கா இல்லை! காக்கா பிடிப்­பது என்­றால், ‘ஐஸ் வைப்­பது’. அந்­தக் காக்கா என்று நினைத்­துக் கொள்­ளா­தீர்­கள், காக்கா பிடிக்க வந்­தி­ருக்­கி­றான் என்று சொல்­வார்­கள். இப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போது வரும்­போ­து­தான் தம்பி எனக்கு 
ரொம்­பப் பெரு­மை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான் பெரி­யா­ரு­டைய தொண்­டன், அத­னால் திரா­வி­டக் கருத்­தி­யல் ஆத­ர­வா­ளன். நான் எந்­தக் கட்­சி­யி­லும் உறுப்­பி­னர் இல்லை. இருந்­தா­லும்­கூட, எந்­தக் கட்சி ஆட்­சி­யில் இருந்­தா­லும், அந்­தக் கட்­சி­யில் நல்ல நலத்­திட்­டங்­கள் நடக்­கும்­போது போவேன். அது­மா­திரி முதல்­வர் ஸ்டா லின் அவர்­க­ளு­டைய பிறந்­த ­நா­ளுக்­குத் தம்பி சேகர் பாபு அவர்­கள் பல நலத்­திட்­டங்­கள் அறி­விப்­பார், “அதை வழங்­கி­விட்­டுச் செல்­லுங்­கள் அண்ணா, மற்­ற­படி இது அர­சி­யல் இல்லை” என்று சொல்லி அழைப்­பார், வரு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வரும்­போ­து­கூட ஒரு தயக்­கம் இருக்­கும், “என்­னடா, நாம் ஆளுங்­கட்­சிக்­குப் போய் ஜால்ரா அடிக்­கி­றோமோ” என்று. ஆனால் ஐந்து வரு­டங்­க­ளாக சேகர் பாபு தம்பி கூப்­பிட்­ட­போ­தெல்­லாம் நான் வந்­த­தற்­குக் கார­ணம், தலை­வர் ஸ்டாலின் அவர்­க­ளு­டைய செயல்­பா­டு­கள்­தான்; அவ­ரு­டைய வளர்ச்­சித் திட்­டங்­கள்­தான்; அவ­ரு­டைய நலத்­திட்­டங்­கள்­தான். ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போது தயங்­கித் தயங்கி வந்த நான், இப்­போது சொல்­கி­றேன், “ஒரு தி.மு.க. அனு­தா­பி­யாக 
வந்­து­விட்­டுச் சென்­றேன் தம்பி. ஏனென்­றால் நல்ல நல்ல விஷ­யங்­கள் எல்­லா­ரும் செய்­கி­றீர்­கள் என்­ப­தற்­காக... இப்­போது சொல்­கி­றேன் தம்பி, நான் தி.மு.க.தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எனக்­குக் கொளத்­தூ­ரில் தலை­வர் தோற்­றது கொஞ்­சம் கஷ்­ட­மாக இருக்­கி­றது. நான், மிக­வும் கிண்­ட­லான நக்­கல் பிடித்த ஆள், என்னை சினி­மா­வில் பார்த்­தி­ருப்­பீர்­கள்; எல்­லாத்­தை­யும் விளை­யாட்­டாக எடுத்­துக் கொள்­வேன். இதை அப்­படி எடுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. சரி, பட்­டுத் திருந்­தி­னால்­தான் புத்தி வரும். படுங்­கள், படுங்­கள்; பட்­டுத் திருந்­துங்­கள், அப்­போ­து­தான் புத்தி வரும். இப்­ப­டிப்­பட்ட தலை­வ­ரைத் தோற்­க­டித்­தி­ருக்­கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முதல்­வ­ருக்கு உதா­ர­ண­மாக இருந்­த­வர், அண்ணா; கலை­ஞர் வழி­யில் ஸ்டாலின் அவர்­கள். ஒரு முதல்­வர் பேசு­கிற பேச்சா இது? “வாயில் நன்­றாக வரும்” என்று. எனக்­கும்­தான் நன்­றாக வரும், நன்­றாக நன்­றாக வரும்; எவ்­வ­ளவு வேண்­டு­மா­னா­லும் நன்­றாக வரும். இன்ஸ்­டா­கி­ரா­மில் இருக்­கும் ‘வாரி­யர்ஸ் வெங்­கா­யம்’ எல்­லாம், என்னை திட்­டு­வார்­கள்; கவ­லையே பட­மாட்­டேன். இங்கே புடுங்கி வீசு­வ­தற்கு ஒன்­றும் இல்லை; இங்­கி­ருந்து புடுங்கி வீசி­விட்­டுப் போய்­வி­டு­வேன். தேவை என்­றால் சொல்­லுங்­கள், எனக்கு நிறை­யக் கெட்ட வார்த்­தை­கள் தெரி­யும். நான் மரி­யா­தை­யாக இதை­யெல்­லாம் அமுக்கி வைத்­தி­ருக்­கி­றேன். உங்­க­ளுக்கு ஏதாச்­சும் தேவை என்­றால், நான் நிறைய எடுத்­துக் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் சாத­னை­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய அர­சுக்கு அறி­வு­ரை­யும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­தத் தமிழ்­நாட்­டைப் பொற்­கா­ல­மாக மாற்­றி­யது ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­தான். பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம­வு­ரிமை கொண்டு வந்­தாரே தலை­வர் கலை­ஞர், அதை­வி­டவா? அவர் கொண்டு வந்த அத்­தனை சட்­டத்­தை­யும் வழி­நடத்தி முன்­னாடி கொண்டு வந்­தாரே நம்­மு­டைய தலை­வர் ஸ்டாலின் அவர்­கள், அதை­வி­டவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­போது ஆட்­சி­யில் இருக்­கி­ற­வர்­களுக்கு நான் ஒரே ஒரு அறி­வுரை சொல்­கி­றேன். நீங்­கள் ஒன்­றுமே பண்ண வேண்­டாம்; ஸ்டாலின் அவர்­கள் செய்த நலத்­திட்­டங்­க­ளுக்­குப் பெயரை மட்­டும் மாற்றி, ‘ஸ்டிக்­கரை’ மாற்­றி­வி­டுங்­கள், உங்­க­ளுக்கு நல்ல பெயர் கிடைத்­து­வி­டும்! ‘நான் முதல்­வன்’ திட்­டமா... வேறு ஏதா­வது பெயர் வைத்­துக் கொள்­ளுங்­கள்; ‘விடி­யல் பய­ணம்’ திட்­டமா... வேறு பெயர் வைத்­துக் கொள்­ளுங்­கள். அந்­தப் பெயரை மட்­டும் மாற்­றி­னீர்­கள் என்­றாலே உங்­க­ளுக்கு நல்ல பெயர் வந்­து­விடும். ஆனால், அவர் கொண்டு வந்த நலத்­திட்­டத்­தை­யும் வளர்ச்­சித் திட்­டத்­தை­யும்மாற்­றி­னீர்­கள் என்­றால் சரிப்­பட்டு வராது,கண்­டிப்­பா­கச் சரிப்­பட்டு வராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">என்­ன­வென்­றால், ஒரு சினிமா மோகம் இருக்­கும்; நானும் சினிமா நடி­கன்­தான். சினி­மா­வில் கவர்ச்­சி­யெல்­லாம் இருக்க வேண்­டி­ய­து­தான், இல்லை என்று 
சொல்­ல­வில்லை. ஆனால், நாம் சிந்­தித்­துச் சீர்­தூக்­கிப் பார்க்க வேண்­டும். நமக்கு ஒரு மாற்­றம் வேண்­டும் என்­றால், என்ன மாதி­ரி­யான மாற்­றம் என்­பதை யோசித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சமூ­க­நீ­திக்கு நேர்­மா­றான கருத்­தி­யல்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­போது நான் வெளிப்­ப­டை­யா­கச் சொல்­கி­றேன். இப்­போது கொள்கை ரீதி­யாக ஒரு மாற்­றம் வேண்­டுமா என்­றால்... திரா­வி­டக் கருத்­தி­ய­லான சமூக நீதிக்கு நேர் மாறான ஒரு கருத்­தி­யல் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.–யின் சனா­த­னம். உங்­க­ளுக்கு இது பிடிக்­க­வில்­லையா, அங்கே ஓட்­டுப் போட்­டு­வி­டுங்­கள். கருத்­தி­யல் ரீதி­யாக இதை­விட இன்­னும் வேக­மாக ஒன்று வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றீர்­களா... கம்­யூ­னிஸ்ட் கட்­சியை ஆட்­சிக்­குக் கொண்டு வந்து அவர்­களை முத­ல­மைச்­சர் ஆக்­குங்­கள், தவறே கிடை­யாது. விடு­த­லை­யி­லேயே மிக முக்­கி­ய­மான விடு­தலை வந்து பட்­டி­யல் இனத்­த­வர்­க­ளு­டைய விடு­தலை என்­கி­றீர்­களா... விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சியை வெற்றி பெற வையுங்­கள். என்ன மாற்­றம் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முதல்­வர், என்­னு­டைய அன்­புத் தம்பி விஜய் அவர்­கள்கட்சி ஆரம்­பிக்­கும்­போதேஎன்ன சொன்­னார், “என்­னு­டைய கொள்­கைத் தலை­வர்­கள் பெரி­யார், அம்­பேத்­கர்; திரா­வி­ட­ மும், தமிழ் தேசி­ய­மும் எனது இரண்டு கண்­கள்” என்­றார். அப்­போது அது தி.மு.க. தானே. தி.மு.க., அண்ணா தி.மு.க., அது எல்­லாம் ஒன்­று­தான். தலை­வர்­கள், நபர்­கள் மட்­டும்­தான் மாறு­கி­றார்­கள். அந்­தத் தலை­வர்­களும், நபர்­க­ளும் மாறும்­போது நீங்­கள் யோசித்­துப்பார்க்க வேண்­டாமா, ஸ்டாலின் என்­னென்ன செய்­தார் என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கேள்வி கேட்­டுப் பழ­குங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நிச்­ச­ய­மாக எல்­லாக் கட்­சி­யி­லும் ஒரு குறை இருக்­கும், விமர்­ச­னம் இருக்­கும். ஆனால், அதற்­காக நீங்­கள் என்ன பண்­ணு­வீர்­கள், எங்­கேயோ கொண்­டு­போய் ஓட்­டைப் போட்­டு­வி­டு­வீர்­களா? ஒரு அப்­பா­வுக்­கும் மக­னுக்­கும் நடு­வில் கருத்து வேறு­பாடு இருக்­கி­றது, “அப்பா என்ன இப்­படி பண்­ணி­விட்­டார்” என்று மகன் சொல்­வான், “மகன் சரி­யில்லை” என்று அப்பா சொல்­வார்; கண­வன் மனை­விக்கு நடு­வில் கருத்து வேறு­பாடு இருக்­கி­றது; அண்­ணன் தம்­பிக்கு நடு­வில் கருத்து வேறு­பாடு இருக்­கி­றது; இரண்டு நண்­பர்­க­ளுக்கு நடு­வில்கருத்து வேறு­பாடு இருக்­கும். அது­போன்று,ஐந்து வரு­டம் ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் மேல் ஒரு கருத்து வேறு­பாடு இருக்­கும், விமர்­ச­னம் இருக்­கும், குறை­கள் தெரி­யும். ஆனால், அதை நிவர்த்தி செய்­யும் ஒரு­வ­ருக்கு ஓட்­டுப் போடு­கி­றோமா என்றுநாம் யோசிக்க வேண்­டாமா? சரி, போட்­டு­விட்­டீர்­கள். இனி­மே­லா­வது கேள்வி கேட்­டுப் பழ­குங்­கள். பெரி­யார் நமக்­குச் சொல்­லிக் கொடுத்­தது, அண்­ணல் 
அம்­பேத்­கர் சொல்­லிக் கொடுத்­தது, காரல் மார்க்ஸ் சொல்­லிக் கொடுத்­தது, “ஏன் என்ற கேள்வி கேளுங்­கள்” என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் உத­ய­நி­தி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஆளு­மை­யும் ‘பரா­சக்தி’ நினை­வு­க­ளும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு ரீல்­ஸில், காமெ­டி­யாக போடு­வார்­கள், எதையோ திட்­டு­வார்­கள்; அதற்­கெல்­லாம் நாம் பதில் சொல்­ல­ணும்.ஆனால், இப்­போது எனக்கு என்ன பெரியமகிழ்ச்சி என்­றால், அங்கே சட்­ட­ச­பை­யிலே எதிர்­வ­ரி­சை­யில் உட்­கார்ந்­தி­ருக்­கி­றார் பாருங்­கள் நம்­மு­டைய தம்பி உத­ய­நிதி! அய்­யய்யோ... ‘நோண்டி நொங்கு எடுத்­து­வி­டு­வார்­கள்’ என்று சொல்­வார்­கள் அல்­லவா? ‘கிழி கிழி’ என்று கிழித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். நீங்­கள் இரண்டு பேரும் நண்­பர்­கள்­தானே? சினி­மா­வில் ஒன்­றா­கத்­தானே இருந்­தீர்­கள்? முத­லி­லேயே போன் பண்­ணிச் சொல்ல வேண்­டாமா, “நாளைக்கு நான் இந்­தக் கேள்­வி­யெல்­லாம் கேட்­கப் போறேன்” என்று? அவர் ஏதா­வது பதில் தயா­ரித்­துக்­கொண்டு வரு­வார். தடா­லென்று சட்­ட­ச­பை­யில் எழுந்து ஒரு கேள்வி கேட்­டீர்­கள் என்­றால்,அவர் எப்­ப­டிப் பதில் சொல்­வார்? போய் ட்விட்­ட­ரில்­தான் பதில் சொல்லி ஆக வேண்­டும், வேறு வழி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாம் சில இடங்­க­ளில் அமை­தி­யாக இருப்­போம்; சில இடங்­க­ளில் ஆக்­ரோ­ஷ­மா­கப் பேசு­வோம். அது­மா­திரி நாம் சில இடங்­க­ளில் அமை­தி­யாக இருந்து கொள்­கி­றோம்;அந்த அமை­தி­யாக இருக்­கிற இடம் வந்து சட்­ட­சபை, நன்றி தெரி­விக்­கப் போன இடத்­தில் ஆக்­ரோ­ஷ­மா­கப் பேசு­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எப்­ப­டிப்­பட்ட தலை­வர் பாருங்­கள், கொளத்­தூ­ரில் தோற்­று­விட்­டார். நான் அடுத்த நாள் தலை­வ­ருக்­குப் போன் செய்­கி­றேன்; எனக்கு என்ன சொல்­வ­தென்று தெரி­ய­வில்லை, “என்­னங்க இப்­படி...” என்­ற­தும், அவர் “அதை விடுங்­கள், நான் இப்­போது நன்றி சொல்­வ­தற்­கா­கப் போய்க் கொண்­டி­ருக்­கி­றேன்” என்­கி­றார். நன்றி தெரி­விக்­கிற கூட்­டத்­தில் மக்­கள் அத்­தனை பேரும் அழு­கி­றார்­கள். அவ­ரு­டைய தொகு­தி­யில் மட்­டு­மல்ல; அன்­பில் மகேஷ் போகிற இடத்­தில், தம்பி தமி­ழன் பிர­சன்னா போகிற இடத்­தில்... எங்கே, எப்­படி, என்ன, எப்­படி ‘ஸ்லிப்’ ஆனது என்று தெரி­ய­வில்லை, ஆகி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">‘பரா­சக்தி’ படம் பார்த்­த­வர்­கள் எத்­தனை பேர் இருக்­கி­றீர்­கள் என்று தெரி­யாது. நடி­கர் தில­கம் சிவாஜி அவர்­கள், ரங்­கூ­னி­லி­ருந்து தன்­னு­டைய தங்­கச்­சி­யைப் பார்ப்­ப­தற்­கா­கச் சென்­னைக்கு வரு­வார். அவ்­வாறு வந்த இடத்­தில் வம்பு செய்து, அவர் ஒரு கவர்ச்சி நட­னத்­திற்கு கூப்­பிட்­டுப் போய், “ஓ ரசிக்­கும் சீமானே வா...”. கலை­ஞர்­தான் அந்­தப் பாட்டு எழு­தி­னார் என்று நினைக்­கி­றேன். நடி­கர் 
தில­கம் ரங்­கூ­னி­லி­ருந்து வரும்­போது அவ­ரு­டைய பர்ஸை ‘பிக்­பாக்­கெட்’ அடித்­துக் கொண்டு போய்­வி­டு­வார்­கள், சோற்­றுக்கே வழி இருக்­காது. அப்­போ­தான் தலை­வர் கலை­ஞர் வச­னம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“காண வந்த தங்­கை­யைக் கண்­டேன், கண்­ணற்ற ஓவி­ய­மாக! ஆம், கைம்­பெண்­ணாக! தங்­கை­யின் பெயரோ கல்­யாணி, ஆனால் கழுத்­தில் மாங்­கல்­யம் இல்லை! செழித்து வாழ்ந்த குடும்­பம் சீர­ழிந்­து­ விட்­டது; கண்­ணிலே நீர், கையிலே பிள்ளை, கல்­யாணி அலைந்­தாள்... கல்­யா­ணிக்­காக நான் அலைந்­தேன்!” என்று சிவாஜி சார் பேசு­வார். அந்த மாதிரி எங்­கேயோ கவர்ச்சி நட­னம் பார்க்­கப் போய், இருப்­பதை எல்­லாம் அடித்­துக்­கொண்டு போய்­விட்­டார்­கள். இது மறு­ப­டி­யும் ‘ரிவைவ்’ ஆகு­வ­தற்கு, மறு­ப­டி­யும் தி.மு.க. ஆட்சி வந்­து­தான் சரி­பண்­ண­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இக்­கிகை தத்­து­வ­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உதய சூரி­ய­னின் மீள் எழுச்­சி­யும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அநே­க­மாக, நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக திரு. முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில்­தான் கலை­ஞ­ரின் 104–வது பிறந்­த­நாள் நடக்­கும் என்று நினைக்­கி­றேன், நடக்க வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன். அது­தான் தமிழ்­நாட்­டுக்கு நல்­லது. இப்­போது தலை­வர் ஸ்டாலின் அவர்­கள் வெற்றி வாய்ப்பை இழந்­தது என்­பது, நன்­றாக யோசித்­துப்­பார்த்­தால், அது அவ­ருக்கு நல்­லது; கொஞ்­சம் ஓய்வு எடுக்கமுடி­யும், நன்­றாக உடற்­ப­யிற்­சி­கள் செய்யமுடி­யும், மனதை நன்­றாக இன்­னும் தேற்­றிக்­கொண்டு... ஒரு ஓய்­வு­தானே! ஆனால்,அவ­ருக்கு அது ஓய்வு கிடை­யாது, உழைப்­பு­தான் ஓய்வு. உழைப்­பு­தான் ஸ்டாலின் அவர்­க­ளுக்கு ஓய்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">‘இக்­கிகை’ என்று ஒரு ஜப்­பான் தத்­து­வத்தை நீங்­கள் படித்­தி­ருப்­பீர்­கள் என்று நினைக்­கி­றேன் தம்பி பொன்­வண்­ணன் அவர்­களே... ஜப்­பா­னில் ‘ஒகி­னாவா’ என்ற கிரா­மத்­தில் 100 வய­திற்கு மேல் வாழ்­வார்­கள். அதற்கு என்ன கார­ணம் என்­றால், அவர்­கள் எல்­லாம் சமூ­கத்­திற்கு ஏதோ ஒரு சேவை செய்­து­கொண்டே இருப்­பார்­கள். அத­னால்­தான், தந்தை பெரி­யார் 95 வயது, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 95 வயது, நல்­ல­கண்ணு ஐயா 102 வயது, சங்­க­ரைய்யா அவர்­கள் 101 வய­தை­யும் கடந்து... அது­மா­திரி சேவை மனப்­பான்மை இருக்­கிற நம்­மு­டைய முதல்­வர், அன்­பின் முதல்­வர், பண்­பின் முதல்­வர், நாக­ரி­கத்­திற்கு முதல்­வர் ஸ்டாலின் அவர்­கள் கண்­டிப்பா நிச்­ச­ய­மாக ஆட்­சிக்குவரு­வார். ஏனென்­றால், நமக்கு வெயி­லில் போனால்­தான் நிழ­லின் அருமை தெரி­யும். நிழல் வர­வேண்­டும் என்­றா­லும்­கூட உத­ய­சூ­ரி­யன் உதிக்­கும் போது­தான் வரும். நிச்­ச­ய­மாக உத­ய­சூ­ரி­யன் உதிக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சூரி­யன் மீண்­டும் உத­ய­மா­கும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான் எம்.ஜி.ஆர். ரசி­கன். அடிக்­கடி அவ­ரு­டைய வச­னத்­தைப் பேசு­வேன். ‘ஆயி­ரத்­தில் ஒரு­வன்’ படத்­தில் வில்­லன் மனோ­கர் எம்.ஜி.ஆரைப் பார்த்­துச் சொல்­லு­வார், “நீ அணை­யும் விளக்கு, அஸ்­த­மிக்­கும் சூரி­யன்!” என்­பார். எம்.ஜி.ஆர். திருப்­பிச் சொல்­லு­வார், “அஸ்­த­மிக்­கும் சூரி­யன் அடுத்த நாளே மீண்­டும் உத­ய­மா­கும்!” என்­பார். ஞாப­கம் இருக்­கி­றதா ஆயி­ரத்­தில் ஒரு­வன் பார்த்­த­வர்­களுக்கு? கப்­ப­லில் பேசு­வார் மனோ­க­ரி­டத்­தில்; வெள்ளை நிறச் சட்டை, சிவப்பு நிறக் காலர், சிவப்பு நிற பெல்ட், சிவப்பு நிற ஷூ... போட்டு அடிப்­பார் பார்த்­தீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அந்த மாதிரி சூரி­யன் அஸ்­த­மிப்­பதே இல்லை; நம்­மு­டைய சுழற்­சி­யின் கார­ண­மாக இருட்டு வரு­கி­றதே ஒழிய, சூரி­யன் அப்­ப­டி­யே­தான் இருக்­கி­றது. உல­கம் சுற்­றும்­போது நமக்கு இருட்டு வரு­கிற மாதிரி இருக்­கி­றது; சூரி­யன் நிரந்­த­ர­மா­னது, அதை முத­லில் புரிந்து கொள்­ளுங்­கள். எனவே, இந்­தச் சூரி­யன் மீண்­டும் உத­ய­மா­கும், உத­ய­மா­கும்! ஏனென்­றால் அது அஸ்­த­மிக்­கவே இல்லை, அது­தான் இயற்கை என்று கூறி என்­னு­டைய உரையை முடித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்வாறு நடிகர் சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>