<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,956,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 10 2026 21:12:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260611T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11062026-CBE-03" position.sequence="03" ex-ref="11062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">காங்கிரஸ் உமியும், மாநில கட்சி அரிசியும்: ஒட்டுண்ணி அரசியலுக்குப் பெயர் கூட்டணியா?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame714579_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup714631_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M2bw_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M4bw_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M6bw_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="M5bw_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ரு கிரா­மத்து சொல­வடை உண்டு. “நான் உமி கொண்டு வரு­கி­றேன், நீ அரிசி கொண்டு வா; நாம் ஊதி ஊதி தின்­ன­லாம்” என்­ப­து­தான் அது. ஊதி­னால் உமி பறந்து போய்­வி­டும்; உமியை சாப்­பி­ட­வும் முடி­யாது. அப்­போது அரி­சி­யைத்­தான்  பகிர்ந்து உண்ண முடி­யும். ஆனால் உமி­யைக் கொண்­டு­வந்­த­வ­ரும் ஏதோ பங்­க­ளிப்பு செய்­த­து­போல பேசு­வதை கிண்­டல் செய்­யத்­தான் இந்த சொல­வடை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­திய தேர்­தல் முறை­யில் பிறரை விட அதிக ஓட்டு வாங்­கு­ப­வர்­தான் ஒரு தொகு­தி­யில் வெல்ல முடி­யும். அத­னால் பர­வ­லா­கச் சித­றிய ஆத­ர­வா­ளர்­க­ளைக் கொண்டசிறிய கட்­சி­க­ளைச் சார்ந்த வேட்­பா­ளர்­க­ளால் எந்த தொகு­தி­ யி­லும் வெல்ல முடி­யாது. அதன் பொருட்டு பெரிய கட்­சி­க­ளி­டம் கூட்­டணி வைத்­துக்­கொண்­டால்­தான் சில தொகு­தி­க­ளில் வெல்ல முடி­யும். அப்­படி கூட்­டணி அமைக்க முனை­யும்­போது எத்­தனை தொகு­தி­களை சிறிய கட்­சிக்கு ஒதுக்க வேண்­டும் என்­ப­தில் பேரம் நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏனெ­னில் கட்­சி­க­ளின் வாக்கு சத­வீ­தத்­தைத் துல்­லி­ய­மாக அளக்க முடி­யாது என்­ப­து­டன், அது தேர்­த­லுக்­குத் தேர்­தல் சற்றே மாறு­ப­ட­லாம். அதைத் தவி­ர­வும் தொகு­தி­களை ஒதுக்­கித் தரும் பெரிய கட்­சிக்­கும், அந்த கட்­சிக்­கும் உள்ள உற­வின் தன்­மை­யும் முக்­கி­யத்­து­வம் பெறும். ஏனெ­னில் தலைமை தொகு­தி­களை ஒதுக்­கி­னா­லும், பெரிய கட்­சி­யின் வாக்­கா­ளர்­கள் சிறிய கட்­சிக்­கும் வாக்­க­ளிக்க வேண்­டு­மல்­லவா? அத­னால்­தான் கூட்­ட­ணி­யில் கணி­தம் (அரித்­மெ­டிக்ஸ்) மட்­டும் போதாது, வேதி­யி­யல் (கெமிஸ்ட்ரி) வேண்­டும் என்று பல உரு­வ­கங்­க­ளைச் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரண்டு கட்­சி­கள் கொள்கை, கருத்­தி­யல் அள­வி­லும், தலை­வர்­கள், உள்­ளூர் பிர­தி­நி­தி­கள், கட்­சித் தொண்­டர்­கள் ஆகி­யோ­ரி­டையே உள்ள இணக்­க­மான உறவு என்ற அள­வி­லும் பொருந்­திப் போனால் கூட்­டணி சிறப்­பாக அமைந்து ஒரு கட்­சி­யின் வாக்­கு­கள் இன்­னொரு  கட்­சிக்­குச் செல்­லும். உற­வில் எந்த மட்­டத்­தில் கசப்பு இருந்­தா­லும், கொள்கை வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் ஒரு கட்­சி­யின் வாக்­கு­கள் இன்­னொரு கட்­சிக்கு விழா­மல் போக­லாம். அப்­போது கூட்­டணி இரண்டு கட்­சி­க­ளுக்­குமே பலன் தராது போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாடா­ளு­மன்ற தேர்­தல் வந்­தால் எல்லா மாநில கட்­சி­ க­ளி­ட­மும் இனிக்க, இனிக்க பேசு­கி­றது. இனிப்பு வாங்­கித் தரு­கி­றது. ஆனால் அந்­தந்த மாநில தேர்­தல்­கள் வந்­தால் மாநில கட்­சி­களை வதைக்­கி­றது. அதிக தொகு­தி­கள் கேட்டு முரண்டு பிடிப்­பது, எங்­க­ளுக்­கும் ஆட்­சி­யில் பங்கு வேண்­டும் என்­பது, தலை­வர்­களை கண்­டு­கொள்­ளா­மல் இருப்­பது, போட்டி வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வது, வேறு­பட்டு பேசு­வது என பல அழிச்­சாட்­டி­யங்­களை செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பார­தீய ஜனதா கட்சி நரேந்­திர மோடி தலை­மை­யில் மூன்­றா­வது முறை­யாக நாடா­ளு­மன்ற தேர்­தல்­க­ளில் வென்று ஒன்­றிய அரசை நடத்தி வரு­கி­றது. காங்­கி­ரஸ் சுதந்­திர இந்­தி­யா­வில்­தான் உரு­வாக்கி, காப்­ப­தாக பெருமை கொள்­ளும் பன்­மைத்­துவ, மத­சார்­பற்ற விழு­மி­யங்­களை தொடர்ந்து சிதைத்து வரு­கி­றது. அது இது­வரை ஆட்சி செய்­யாத மேற்கு வங்க மாநி­லத்­தி­லும்      ஆட்­சி­யைக் கைப்­பற்றி விட்­டது. காங்­கி­ரஸ் இல்­லாத     இந்­தி­யாவை உரு­வாக்­கு­வோம் (காங்­கி­ரஸ் முக்த் பாரத்) என்று முழக்­கத்­தையே உரு­வாக்கி செயல்­ப­டுத்தி 
வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இப்­படி கடும் நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்ள காங்­கி­ரஸ், பா.ஜ.க.-வை எதிர்ப்­ப­தில்­தானே முழு­மை­யாக கவ­னம் செலுத்த வேண்­டும்? அது­தான் இல்லை. காங்­கி­ரஸ்பா.ஜ.க.-வை எதிர்த்து நிற்­கும் மாநில கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்த விரும்­பு­கி­றது. மாநில தேர்­தல்­க­ளில் பா.ஜ.க.-வை எதிர்க்­கும் கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்­தி­விட்டு, நாடா­ளு­மன்ற  தேர்­த­லில்  அவற்­று­டன்  கூட்­டணி  அமைக்­கக்  கூப்­பி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போ­துள்ள  மக்­க­ள­வை­யில்  காங்­கி­ரஸ்  99  உறுப்­பி­னர்­களை கொண்­டுள்­ளது. அதில் குறைந்­தது மூன்­றில் ஒரு  பங்கு மாநில கட்­சி­க­ளின் கூட்­ட­ணி­யால் கிடைத்­தவை. எதிர்­வ­ரும் தேர்­த­லில் ஒரு­வேளை பா.ஜ.க.         ஆத­ரவு சரிந்­தா­லும் காங்­கி­ரஸ் தனி­யாக போட்­டி­யிட்டு வெல்­லக் கூடிய பெரிய மாநி­லங்­கள் எட்­டு­தான். அந்த அட்­ட­வ­ணை­யைப் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவற்­றில் 100 தொகு­தி­க­ளில் வென்­றாலே அது பெரும் வெற்­றி­யா­கத்­தான் இருக்­கும். இந்த நிலை­யில் மாநில கட்­சி­க­ளு­டன்  வலு­வான  கூட்­டணி  அமைக்­கா­மல்  காங்­கி­ர­ஸால் ஒன்­றிய அர­சில் கூட்­டணி அமைச்­ச­ரவை கூட அமைக்க முடி­யாது என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி போன்ற உண்­மை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே சம­யம், பா.ஜ.க. செல்­வாக்கு சரிந்­தால் மாநில கட்­சி­கள் தனி­யா­கவோ, பிற மாநில கட்­சி­க­ளு­டன் 
கூட்­டணி  அமைத்தோ  அவற்­றின்  பலத்­தால்  வெல்­லக்­கூ­டிய பெரிய மாநி­லங்­கள் பன்­னி­ரெண்டு மாநி­லங்­கள். அவற்­றின் பட்­டி­யல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வலு­வான கூட்­டணி அடை­யா­ளத்தை உரு­வாக்கி, பொது­வான கொள்­கை­கள், கருத்­தி­யலை வடி­வ­மைத்து, தலை­மை­யை­யும் உரு­வாக்­கி­னால்  மாநி­லக் கட்­சி ­க­ளின் மூன்­றா­வது அணி­யால் பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான 272 தொகு­தி­க­ளைக் கூட வெல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. காங்­கி­ர­ஸை­விட வலு­வாக பல மாநி­லங்­க­ளில் வேரூன்­றி­யி­ருப்­ப­தால், (உதா­ர­ண­மாக மஹா­ராஷ்­டிரா, பீஹார், மேற்கு வங்­கம்) அதனை எதிர்க்க காங்­கி­ர­ஸும், பிற மாநில கட்­சி­க­ளும் இணைந்து கூட்­டணி அமைப்­பதே நல்­லது என்று பல­ரும் கரு­த­லாம். ஆனால் காங்­கி­ரஸ் அப்­படி நினைக்­க­வில்லை. அது மாநில கட்­சி­கள் வலு­வாக உள்ள மாநி­லங்­க­ளில் தானே கால்­ப­திக்க வேண்­டும், மாநில கட்­சி­க­ளு­டன் போட்­டி­யிட வேண்­டும் என்­று­தான் நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்கு காங்­கி­ரஸ் சொல்­லும் கார­ணம் வினோ­த­ 
மா­னது. மாநில அர­சி­யல் வேறு; ஒன்­றிய அர­சி­யல் வேறு என்று கூறு­கி­றது. மாநில அர­சி­ய­லில் மாநில கட்­சி­கள் பல­வீ­ன­மா­னால் அவை எப்­படி நாடா­ளு­மன்ற தேர்­த­லில் வலு­வா­கப் போட்­டி­யி­டும்? மேலும் காங்­கி­ரஸ் அந்த கட்­சி­க­ளுக்கு எதி­ராக மாநில தேர்­த­லில் பேசி­னால், அந்த கட்­சி­க­ளின் வாக்­கா­ளர்­கள் எப்­படி நாடா­ளு­மன்ற தேர்­த­லில் காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைப்­பதை ஏற்­றுக் கொள்­வார்­கள்? மாநில கட்சி வாக்­கு­கள் எப்­படி காங்­கி­ர­ஸிற்கு விழும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநில கட்­சி­கள் ஏன் பா.ஜ.க.-வை எதிர்க்­கின்­றன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாநில கட்­சி­க­ளில் இரண்டு வகை. ஒரு வகை காங்­கி­ர­ஸையே எதிர்த்து உரு­வா­னவை. மற்­றொரு வகை காங்­கி­ர­ஸி­லி­ருந்து உரு­வா­னவை. காங்­கி­ர­ஸையே எதிர்த்து கட்­சி­கள் உரு­வாக ஒரு கார­ணம், அந்த மாநி­லங்­க­ளில் காங்­கி­ர­ஸில் நில உடமை/ ஜாதீய/ முத­லீட்­டிய ஆதிக்க  சக்­தி­கள்  செல்­வாக்கு  செலுத்­தி­யது.  மற்­றொரு கார­ணம் மாநில அடை­யா­ளத்­திற்கு காங்­கி­ரஸ் கட்­சி­யில் முக்­கி­யத்­து­வம் இல்­லா­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே காங்­கி­ர­ஸிற்கு எதி­ரா­கக் கேர­ளா­வில் கம்­யூ­னிஸ்­டு­கள், தமிழ்­நாட்­டில் தி.மு.க, வட மாநி­லங்­க­ளில் ராம் மனோ­ஹர் லோஹியா, ஜெயப்­பி­ர­காஷ் நாரா­ய­ணன் போன்­ற­வர்­கள் தலை­மை­யில் சோஷ­லிஸ்­டு­கள், காஷ்­மீ­ரில் தேசிய மாநாடு, பஞ்­சா­பில் அகாலி தளம் போன்­றவை உரு­வா­யின. பெரும்­பா­லும் தலித் பகு­ஜன் சமூ­கங்­கள் காங்­கி­ர­ஸிற்கு எதி­ரான அணி­க­ளா­கவே மாறின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் கட்­சி­யி­னுள் அதி­கார மையம் டில்­லி­யில் இருந்­தது. மாநில காங்­கி­ர­ஸிற்கு தலை­வர் எல்­லாம் இருந்­தா­லும், எல்லா முடி­வு­க­ளை­யும் டில்­லி­யில்­தான் எடுப்­பார்­கள். காலப்­போக்­கில் மக்­க­ளாட்சி வேரூன்­றி­ய­போது, மாநி­லத்­தில் தலை­வர்­க­ளாக உரு­வா­ன­வர்­க­ளால் டில்லி கட்­டுப்­பாட்­டில் இயங்க முடி­ய­வில்லை என்­ப­தால் அவர்­கள் பிரிந்து சென்று மாநில கட்­சி­களை உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு உரு­வான மாநில கட்­சி­கள் மாநில நலன்­களை, மாநில அடை­யா­ளத்தை முன்­னி­றுத்­து­பவை. இவை வெகு­ஜன அர­சி­ய­லில் ஒன்­றி­யத்­தில் அதி­கா­ரம் குவி­வதை எதிர்த்து இயங்­கும் மைய விலக்கு விசை­கள். இவ்­வாறு மாநில கட்­சி­கள் அதி­க­ரித்­த­தற்கு எதி­ரா­கத்­தான் பெரும்­பான்­மை­வாத இந்து மத அடை­யா­ளத்தை முன்­னி­றுத்தி அதி­கா­ரத்தை மையத்­தில் குவிக்­கும் பா.ஜ.க. வலு­வ­டைந்­தது. அது மைய ஈர்ப்பு விசை­யின் வடி­வ­மா­னது. எனவே பா.ஜ.க.-விற்­கான முழு­மை­யான முர­ண­ர­சி­யல் எதி­ரி­க­ளாக பல மாநில கட்­சி­களே இயங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் கட்சி இரண்­டும் கெட்­டா­னாக இருக்­கி­றது.அத­னால் பா.ஜ.க. போல பெரும்­பான்மை மத அடை­யா­ள­வாத அர­சி­யல் செய்ய முடி­யாது. அதே நேரம் மைய விலக்கு மாநில விசை­களை முழு­மை­யாக அங்­கீ­க­ரிக்­க­வும் முடி­யாது. அதன் வர­லாற்­றில் அது­வும் மைய ஈர்ப்பு விசை­யா­கத்­தான் விளங்­கி­யுள்­ளது. காங்­கி­ரஸ் மித­வாத மைய ஈர்ப்பு விசை; பா.ஜ.க. தீவி­ர­வாத மைய ஈர்ப்பு விசை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் கட்­சி­யின் 
கட்­ட­மைப்பு உணர்த்­து­வது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் கட்­சி­யின் பிரச்­சினை வாரிசு அர­சி­யல் தலைமை என்று பலர் கூறு­வார்­கள். உண்­மை­யில் அது பிரச்­சி­னை­யே­யில்லை என்று கூற­வேண்­டும். அது கட்­சியை ஒருங்­கி­ணைக்­கும் சர­டாக இருப்­ப­தால் எந்த சிக்­க­லு­மில்லை. உண்­மை­யான பிரச்­சினை என்­ன­வென்­றால் அத­னால் மாநில தலை­மை­களை உரு­வாக்க முடி­யா­த­து­ தான். மாநில காங்­கி­ரஸ் அதன் முடி­வு­களை எடுக்­கும் சுதந்­திரத்தை அதன் மையஈர்ப்­புத் தன்­மை­யால் வழங்க முடி­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்சி வெற்­றி­பெற்­றால் யார் முதல்­வ­ரா­வது என்­பதை அந்த மாநில கமிட்­டி­தானே முடிவு செய்ய வேண்­டும்? அல்­லது வெற்­றி­பெற்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கூடித்­தானே முடிவு செய்ய வேண்­டும்? அப்­படி நடக்­காது. பல்­வேறு குழுக்­கள் சென்று டில்­லி­யில் முற்­றுகை இடு­வார்­கள். மேலிட பார்­வை­யா­ளர்­கள் மாநி­லத்­திற்கு வந்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வார்­கள். ஏகப்­பட்ட பஞ்­சா­யத்து நடந்த பிற­கும் திருப்­தி­க­ர­மான தீர்வு பல சம­யம் உரு­வா­காது. பஞ்­சாப் பஞ்­சா­யத்­தில் முதல்­வ­ராக இருந்த அம­ரீந்­தர் சிங் பா.ஜ.க.-விலேயே இணைந்து விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது கேர­ளா­வில் வென்ற பிற­கு­கூட சதீ­சனை தேர்வு செய்­வ­தில் நெருக்­கடி ஏற்­பட்­டது. மேலி­டம் கே.சி.வேணு­கோ­பாலை முதல்­வ­ராக்க விரும்­பி­யது. சதீ­சன் கடு­மை­யா­கப் போரா­டித்­தான் தன் உரி­மையை நிலை­நாட்ட வேண்­டி­யி­ருந்­தது.  கர்­நா­ட­கா­வில் சீதா­ரா­மை 
­யா­வும், டி.கே.சிவ­கு­மா­ரும் எத்­தனை முறை டில்லி சென்­றி­ருப்­பார்­கள் என்­ப­தற்­குக் கணக்­குக் கிடை­யாது. அவர்­க­ளது 2.5 ஆண்டு+2.5 ஆண்டு முதல்­வர் பதவி பகிர்வு நடை­மு­றைக்கு வந்த பின்­னும், புதிய மந்­திரி சபை அமைக்க டில்­லி­யில் பல­ரும் முகா­மிட்­ட­னர். கட்­சி­யி­லேயே எந்த முடி­வை­யும் மாநி­லத்­தில் எடுக்க முடி­யாது என்­றால் அந்­தக் கட்சி எப்­படி மாநில சுயாட்­சிக்கு ஆத­ர­வாக இருக்க முடி­யும்? அத­னால் வேறுவழி­யில்­லா­மல்­தான் வேண்டா வெறுப்­பாக மாநில கட்­சி­க­ளு­டன் 
கூட்­டணி வைக்­கி­றது காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் கட்சி வர­லாற்­றி­லேயே தமிழ்­நாட்­டில் இப்­போது நடந்­தி­ருப்­பது போன்ற அபத்­தம் நடந்­தி­ருக்­காது என்­று­தான் தோன்­று­கி­றது. ஜெய­ல­லிதா, கலை­ஞர்  மறைந்­த­பி­றகு எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டில் கால்­ப­திக்க வேண்­டும் என்று நினைத்த பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க-.வை பிளந்­தும், ஒட்­டி­யும் பொம்­ம­லாட்­டம் நடத்­தத் துவங்­கி­யது. தி.மு.க தலை­வ­ராக பொறுப்­பேற்ற ஸ்டாலின் தன் முதல் உரை­யி­லேயே தன்­னு­டைய அர­சி­யல் பா.ஜ.க.-வை எதிர்த்­துத்­தான் என்­பதை ஐயம் திரி­புற அறி­வித்­தார். அதன்­ப­டியே காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்டு கட்­சி­கள், 
விடு­தலை சிறுத்­தை­க­ளு­டன் கூட்­டணி அமைத்து 2019 நாடா­ளு­மன்ற தேர்­தல், 2021 சட்­ட­மன்ற தேர்­தல், 2024 நாடா­ளு­மன்ற தேர்­தல் ஆகி­ய­வற்­றில் பெரும் வெற்­றி­களை ஈட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த தேர்­தல்­க­ளில் நிகழ்ந்த முக்­கி­ய­மான மாற்­றம் என்­ன­வென்­றால், மே 2009 ஈழப்­ப­டு­கொ­லை­களை ஒட்டி காங்­கி­ரஸ் மீது பர­வ­லாக ஏற்­பட்­டி­ருந்த கசப்பு மறைந்து, ராகுல் காந்­திக்கு தமிழ்­நாட்­டில் உரு­வான வெகு­ஜன ஏற்பு என­லாம். மு.க.ஸ்டாலி­னுக்­கும் அவ­ருக்­கும் இடை­யி­லான இணக்­க­மான உறவு பா.ஜ.க. எதிர்ப்­பின் முக்­கிய அம்­ச­மாக பார்க்­கப்­பட்­டது. ராகுல் காந்­தியை பிர­த­மர் வேட்­பா­ள­ராக 2019-ஆம் ஆண்டே முன்­மொ­ழிந்­தார் ஸ்டாலின். ராகு­லின் பாரத் ஜோடோ யாத்­தி­ரையை கன்­னி­யா­கு­ம­ரி­யில் கொடி­ய­சைத்­துத் துவக்கி வைத்­தார். சமீ­பத்­திய தேர்­த­லுக்கு முன்­னால் கூட தொலை­காட்சி நேர்­கா­ண­லில் ராகுல் காந்­தியை  நம்­பிக்கை நட்­சத்­தி­ரம் என்று வர்­ணித்­தார் ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் விஜய் கட்சி துவங்கி, பெரிய அள­வில் கூட்­டம் சேர்­வதை பார்த்­த­போது ராகுல் காந்தி மன­தில் ஒரு ஊச­லாட்­டம் பிறந்­துள்­ளது. கார­ணம் 2009-ஆம் ஆண்டே விஜயை டில்­லிக்­குக் கூப்­பிட்டு பேசி­யுள்­ளார் ராகுல் காந்தி. இதில் பெரும் வியப்­பென்­ன­வென்­றால் ராகு­லின் அர­சி­யல் பயிற்­சிக்கு முற்­றி­லும் எதிர்­ம­றை­யா­னவை விஜ­யின் அர­சி­யல் செயல்­பா­டு­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ராகுல் நாடு முழு­வ­தும் மக்­க­ளோடு மக்­க­ளாக நடந்து சென்­ற­வர். தின­சரி நூற்­றக்­க­ணக்­கா­ன­வர்­க­ளோடு அமர்ந்து மனம் விட்டு பேசி­ய­வர். இந்­தி­யா­வா­னா­லும், வெளி நாடு­க­ளா­னா­லும் மாண­வர்­களை சந்­திக்­கும்­போது அவர்­கள் கேள்­வி­க­ளுக்­கெல்­லாம் முகம் சுளிக்­கா­மல் பதில் சொல்­ப­வர். ஊட­கங்­களை தொடர்ந்து சந்­திப்­ப­வர். விஜயோ ஊட­கம், நேர்­கா­ணல் என்­றாலே பத­றி­ய­டித்து வில­கிச் செல்­ப­வர். எழு­திக்­கொ­டுத்த வச­னங்­களை  மட்­டும்  படித்­து­விட்­டுச்  செல்­ப­வர். ராகுல் திறந்த புத்­த­கம் என்­றால், விஜய் ஓட்­டுக்­குள் பதுங்­கிய ஆமை. அதைப்­பற்றி ராகுல் கவ­லைப்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விஜய் தன் கூட்­டக்­காட்சி அர­சி­ய­லுக்­காக தாம­த­மா­கச்சென்­ற­போது ஏற்­பட்ட நெரி­ச­லில் 41 பேர் மர­ண­ம­டைந்த போது கூட ராகுல் விஜயை அழைத்­துப் பேசி­னார். விஜய் பொது­வெ­ளி­யில் அந்த துய­ரத்­திற்கு தன்­ன­ள­வில் தார்­மீ­கப் பொறுப்­பேற்று வருத்­தம் கூட தெரி­விக்­க­வில்லை என்­பது ராகு­லுக்­குத் தவ­றா­கத் தோன்­ற­வில்லை. பாசி­சத்தை எதிர்க்க முனை­யும் ராகு­லுக்கு விஜய் பிம்ப வழி­பாட்­டின் அவ­லம் புரி­ய­வில்லை என்­பதைஎப்­ப­டிப் புரிந்­து­கொள்­வது என்று திகைப்­பாக இருக்­கி­றது.இத்­த­னைக்­கும் விஜய் பா.ஜ.க.-வை கண்­டித்து எது­வுமே பேசு­வ­தில்லை; ராகுல் காந்­தி­யின் பா.ஜ.க. எதிர்ப்பு          முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு விஜய் எந்த ஆத­ர­வும் தெரி­வித்­த­தில்லை. ஜனநாய­கன் படம் சென்­சா­ரால் முடக்­கப்­பட்ட போது தனக்­கா­கக் குரல் கொடுத்த ராகுல் காந்­திக்கு நன்­றி­கூட கூற­வில்லை விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத்­த­னைக்­கும் பிற­கும் தமிழ்­நாட்டு அர­சி­யல் களத்­திற்­குத் தொடர்­பே­யில்­லாத பிர­வீன் சக்­ர­வர்த்­தியை விஜ­யு­டன் பேசு­வ­தற்கு அனுப்­பி­னார் ராகுல். தமிழ்­நாட்­டில் கூட்­ட­ணியை தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் செல்­வப்­பெ­ருந்­த­கை­தானே பேசி முடிவு செய்ய வேண்­டும்? அது­தான் கிடை­யாது. அவர் ஒரு பேச்­சுக்­குத்­தான் தலை­வரே தவிர, டில்­லி­யு­டன் தொடர்­புள்ள அத்­தனை பேருமே காங்­கி­ரஸ் சார்­பாக கருத்­துக்­களை தெரி­விப்­பார்­கள். யாருமே செல்­வப்­பெ­ருந்­த­கையை தலை­வர் என்­று­கூட குறிப்­பிட மாட்­டார்­கள். தலைக்­குத் தலை நாட்­டாமை என்­ப­து­தான் தமிழ்­நாடு காங்­கி­ரஸ். சத்­தி­ய­மூர்த்தி           பவ­னில் கட்­சிக் கூட்­டங்­கள் பெரும் கல­வ­ரத்­தில் முடி­யும் என்­பது அனை­வ­ரும் நன்­க­றிந்த நடை­மு­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">செல்­வப்­பெ­ருந்­தகை என்­றல்ல. வேறு யார் தலை­வ­ராக இருந்­தா­லும் இது­தான் நிலை. ஏனெ­னில் மாநி­லத்­தில் முடி­வெ­டுப்­பது என்ற பழக்­கமே கிடை­யாது. எது­வா­னா­லும் டில்­லி­தான். மேலி­டம்­தான். இந்த நிலையை மாற்­று­வ­தற்­கான எந்த முயற்­சி­யை­யும் ராகுல் காந்தி எடுப்­ப­தில்லை. மாறாக கோவா­வைச் சேர்ந்த கிரீஷ் சோடங்­கரை கூட்­டணி பேச்­சு­வார்த்­தைக்­காக அனுப்­பி­னார். எதற்­காக மாநி­லத்­திற்கு தொடர்­பற்ற ஒரு­வர் கூட்­டணி பேச வர­வேண்­டும்? அது­தான் காங்­கி­ரஸ் மரபு. அப்­போ­து­தான் அவர்­கள் தேசிய கட்சி என்­பது உறு­திப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க ஏற்­றுக்­கொள்­ளாது என்று நன்கு தெரிந்தே ஆட்­சி­யில் பங்கு கேட்­டார்­கள். அதிக தொகு­தி­க­ளைக் கேட்டு அடம் பிடித்­தார்­கள். அத்­த­னைக்­கும் பிற­கும் ராகுல் ஸ்டாலி­னு­டன் சேர்ந்து பிரச்­சா­ரம் செய்ய மறுத்­தார். அவர்­கள் கோரிப்­பெற்ற 28 தொகு­தி­களை வெல்ல வேண்­டும் என்ற அக்­கறை கூட அவ­ருக்கு இல்லை. அவர் மீது வைத்த மரி­யா­தைக்­காக தி.மு.க-வை முடிந்த வரை தண்­டித்­தார் ராகுல் (Congress Parasitic Politics). இப்­போது விஜய் அமைச்­ச­ர­வை­யில் இரண்டு அமைச்­சர்­க­ளைப் பெற்­ற­தும். பிர­வீன் சக்­ர­வர்த்தி மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் ஆன­தும்­தான் சாத­னை­கள் என்று நினைக்­கி­றாரா என்று வியப்­பாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதெல்­லாம் கூட பிரச்­சி­னை­யில்லை. தவெக அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­று­விட்ட பிறகு, இந்­தியா கூட்­டணி கூட்­டத்­திற்கு த.வெ.க.-வைதானே கூப்­பிட வேண்­டும்? எந்த நம்­பிக்­கை­யில் தி.மு.க-வை கூப்­பி­டு­கி­றார்­கள் என்று புரி­ய­வில்லை. பிரச்­சா­ரம் முழு­வ­தும் தி.மு.க-.வை தீய சக்தி என்று வெறி­பி­டித்­தது போல கூவி­னார் விஜய். அவ­ரு­ட­னும் கூட்­டணி; தி.மு.க-.வு­ட­னும் கூட்­டணி என்­றால் தி.மு.க. தொண்­டர்­க­ளும், வாக்­கா­ளர்­க­ளும் என்ன நினைப்­பார்­கள் என்று சிறி­தா­வது சிந்­தித்­துப் பார்க்­கி­றதா காங்­கி­ரஸ்? பார்க்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கார­ணம் இத்­தனை முரண்­பா­டு­க­ளுக்­கும் மூலா­தா­ரம் ஒன்று இருக்­கி­றது. அது­தான் குரி­யன் ஜோசப் குழு அறிக்கை. தி.மு.க. தன் தேர்­தல் அறிக்­கை­யில் முதல் புள்­ளி­யாக மாநில சுயாட்சி குறித்த குரி­யன் ஜோசப்குழு அறிக்­கையை வைத்­துள்­ளது. காங்­கி­ர­ஸும், ராகு­லும்அந்த அறிக்கை குறித்து என்ன நினைக்­கி­றார்­கள்? இந்­தியா கூட்­டணி அந்த அறிக்­கையை ஏற்­றுக்­கொண்­ட­தாக அறி­விக்­கத் தயாரா? இந்த கேள்­விக்­கான பதி­லில் இருக்­கி­றது எல்லா புதிர்­க­ளுக்­கான விளக்­கங்­க­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க., காங்­கி­ரஸ் இரண்­டுமே மாநி­லங்­கள் வெறும் நிர்­வாக அல­கு­க­ளாக, தன்­ன­ள­வி­லான மாநி­லங்­க­ளாக (state- in- itself) இருக்க வேண்­டும் என்று நினைக்­கின்­றன; தனக்­கான மாநி­லங்­க­ளாக (state- for- itself) தன்­னு­ணர்வு பெறு­வதை விரும்­பு­வ­தில்லை. பிர­வீன் சக்­ர­வர்த்­தி­கள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­ வ­தன் மர்­மம் அது­தான். மாநில கட்­சி­கள் இந்த மாய்­மா­லத்தை உணர்ந்து தெளிவு பெற வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>