<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,711,611,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 11 2026 03:37:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260611T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="11062026-CHN-04" position.sequence="04" ex-ref="11062026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">திராவிடம் வெல்லும் – வரலாறு அதைச் சொல்லும்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வல்லமை பெறட்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23"> திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup719975_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="veeramani_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஜூன் 11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க.வின் தகை­சான்ற தலை­வ­ருக்­கும், கொள்கை வீரர்­க­ளுக்­கும் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் தமி­ழர் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">திரா­வி­டத்தை உயிர் மூச்­சா­கக் கொண்ட திரா­விட அர­சி­யல் இயக்­க­மான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பவள விழா (75ஆண்டு) கண்ட ஓர் இணை­யற்ற இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">1916 இல் தொடங்­கப் பெற்­றது 110 ஆண்­டு­க­ளுக்கு முன்னே, சர் பிட்டி தியா­க­ரா­யர், டாக்­டர் நாயர், டாக்­டர் நடே­ச­னார் போன்ற திரா­வி­டர் தலை­வர்­க­ளால் பார்ப்­ப­ன­ரல்­லா­தார் இயக்­கம். (The Non-Brahmin Movement) தந்தை பெரி­யார் அவர்­கள், 1926 இல் காங்­கி­ர­சில் பார்ப்­பன ஆதிக்­கம், சமூ­க­நீ­திக்கு எதி­ரான நிலைப்­பாடு கார­ண­மாக வெளி­யேறி, சுய­ம­ரி­யாதை இயக்­கம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்­டாமை அழிப்பு, பெண்­ண­டிமை நீங்­கிய சமத்­து­வம், சம­தர்ம மூட நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ரான புதி­ய­தோர் பகுத்­த­றி­வுச் சிந்­த­னைப் பண்­ணை­யாக உரு­வாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">பழைய நீதிக்­கட்சி அர­சி­ய­லில் சந்­தித்த தேர்­தல் தோல்வி கார­ண­மா­க­வும், பதவி அர­சி­யல் உள்­ள­டி­க­ளா­லும், 1937 இல் படு­தோல்வி அடைந்த நிலை­யில், காங்­கி­ரஸ் பார்ப்­ப­னர்­கள் நீதிக்­கட்சி என்ற திரா­வி­டர் இயக்­கத்தை 500 அடி ஆழத்­தில் குழி­தோண்டி புதைத்­து­விட்­டோம் என்று ஆர்ப்­ப­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">நீதிக்­கட்சி, சுய­ம­ரி­யாதை இயக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">1944 இல் நீதிக்­கட்­சி­யும், சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் இணைந்து, பண்­பாடு, கல்வி மற்­றும்  சமூ­கப் புரட்சி கொள்­கை­கள், சுய­ம­ரி­யாதை இயக்­கக் கொள்கை, கோட்­பா­டு­களை உள்­ள­டக்கி, சேலத்­தில் 1944 இல் திரா­வி­டர் கழக பெயர் மாற்­றம் செய்­யப்­பட்ட மாநாட்­டில், ‘அண்­ணா­துரை தீர்­மா­னம்’ என்றே தந்தை பெரி­யார் பெய­ரிட்டு ஒரு புத்­தெ­ழுச்சி புது­மு­றுக்­கு­டன் சமூக இயக்­கம் கண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">1949 இல் அதன் அர­சி­யல் பிரி­வாகி, திரா­வி­டர் கழக இணை­யான இரட்­டைக் குழ­லாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தோன்றி, பத்­தாண்­டு­கள் – எதிர்க்­கட்­சி­யா­கப்பணி­யாற்றி, 1967 இல் அறி­ஞர் அண்ணா தலை­மை­யில் ஆட்­சி­யும் அமைத்­தது. ஒரு புதிய அர­சி­யலை, திரா­வி­டர் உரி­மை­களை அடிக்­கட்­டு­மா­னத்தை எழுப்­பிய நீதிக்­கட்சி, தந்தை பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்க கொள்­கை­கள், திட்­டங்­களை – தனது அர­சி­யல் இலக்கு ஆக்­கிக் கொண்டு, முறையே அறி­ஞர் அண்ணா, கலை­ஞர் ஆகி­யோ­ருக்­குப் பின், தள­பதி மு.க.ஸ்டாலின் தலை­மை­யில், ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யாக 5 ஆண்­டில், 50 ஆண்­டுக்­கான சாதனை, சமூக மாற்ற வளர்ச்சி என்ற முந்­தைய தலை­வர்­க­ளின் மாண்பை இணைத்து மேலும் வலு­வான கொள்­கைச் சாத­னை­க­ளைச் செய்த சரித்­தி­ரம் இன்­றும் மாற்றி எழு­தப்­பட முடி­யாத வர­லாற்­றுப் பெட்­ட­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் வெற்றி, தோல்விஎன்­பது அவ்­வப்­போது வாக்­கா­ளர்­க­ளின் மன­நி­லை­யைப் பொறுத்து ஏற்­ப­டும் தீர்ப்பே தவிர, ஆழ்ந்து அடுத்த தலை­மு­றைப்­பற்­றிச் சிந்­தித்து, அறி­விக்­கும் முடி­வாக இருப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">93 ஆண்­டு­க­ளில், 83 ஆண்டு அனு­ப­வம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">93 ஆண்­டு­கா­லத்­தில் 83 ஆண்டு அனு­ப­வத்­தில், முதல் தேர்­தல் முதல் கடை­சி­யாக நடந்த தேர்­தல்­வரை பார்த்து, வெற்றி– தோல்வி சரித்­தி­ரம் கண்ட ஒரு ஒரு பொது வாழ்க்­கைத் தொண்­டன் – தந்தை பெரி­யா­ரின் மாண­வன் – என்­றும் தாய்க் கழ­கம், தன் குஞ்­சு­க­ளைத் தூக்­கும் பருந்தை எதிர்க்­கும் தாய்க்­கோழி போன்று களத்­தில் நின்று, சில பல நிலை­களை, உரி­மை­யோ­டும், கொள்கை உறவு நிலை­யோ­டும், மலை குலைந்­தா­லும், மனங்­கு­லையா மாவீ­ரன் தள­பதி சகோ­த­ரர் மு.க.ஸ்டாலின் அக்­கட்­சி­யின் உடன்­பி­றப்­பு­க­ளுக்கு நினை­வூட்ட வேண்­டிய கட­மை­யைச் செய்­வது இவ்­வ­றிக்­கை­யின் நோக்­கம். ஊன்றி படித்து உண­ர­வேண்­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">1969 இல், முத­ல­மைச்­சர் அண்ணா மறைந்­த­வு­டன், ஆரி­யம் கொக்­க­ரித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">‘‘இனி தி.மு.க. கலைந்த சீட்­டுக் கட்டு – சரிந்த மணல் வீடு – பத­விச் சண்­டை­யால் அக்­க­ழ­கம் ஒழிந்­து­வி­டும்’’ என்று நினைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தந்தை பெரி­யார் ஒரு மாதம் சென்­னை­யில் தங்கி, அறிக்கை மற்­றும் தக்­க­வர்­கள் மூலம் முந்­தைய நீதிக்­கட்சி நிலை­பற்றி முன் உதா­ர­ணங்­களை எல்­லாம் கூறி, கலை­ஞரை வற்­பு­றுத்தி முத­ல­மைச்­சர் பொறுப்பை ஏற்­கச் செய்­தார். அப்­போது அவர் தந்த அறிவு (அனு­பவ) உரை இரண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">தி.மு.க.வுக்கு தந்தை பெரி­யார் வலி­யு­றுத்­திய அந்­தக் ‘‘கட்­டுப்­பாடு!’’
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">1. ‘‘தி.மு.க. என்­பது ஒரு கெட்­டி­யான பூட்டு; அதை எவ­ரா­லும் அவ்­வ­ளவு எளி­தில் அழித்­து­வி­டவோ, உடைத்­து­வி­டவோ முடி­யாது. ஆனால், அந்­தப் பூட்­டிற்­குள் யாரா­வது கள்­ளச்­சாவி போட்­டுத் திறந்­து­வி­டக் கூடாது. அதில் தான் தோழர்­கள் மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும்!’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">2. ‘‘அண்ணா அவர்­கள் வகுத்­துத் தந்த ‘கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு’ என்ற மூன்று பண்­பு­க­ளில், மற்ற இரண்டை விட­வும் மிக­மிக முக்­கி­ய­மா­னது ‘கட்­டுப்­பாடு’ தான்! கட­மை­யும், கண்­ணி­ய­மும் பல­வி­த­மான சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப மாறக்­கூ­டிய தன்மை கொண்­டவை. ஆனால், கட்­டுப்­பாடு என்­பது எவ­ருக்­கும், எப்­போ­தும், எந்­தச் சூழ­லி­லும் மாறா­மல் பொருந்த வேண்­டிய ஒன்­றா­கும். இதை ஒரு­போ­தும் மற­வா­தீர்’’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இன்று அதன் தேவை – முன்­பை­விட தேர்­த­லில் தோற்ற ஒரு சூழ­லில் அதி­முக்­கி­யம் வாய்ந்த ஒன்­றா­கும். தி.மு.்க.வினர் அனை­வ­ரும் தலை­மைக்கு, ராணு­வக் கட்­டுப்­பாட்­டு­டன் அதை நிரூ­பிக்க வேண்­டிய முக்­கிய தரு­ணம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இயக்­கத்­தில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­கள், இயக்­கத்­தின் அடிக்­கட்­டு­மா­னம் முதல் மேல்­த­ளம் வரை பழுது பார்த்து, வலி­வும், பொலி­வும் உள்­ள­தாக ஆக்க இயற்கை அதற்கு வழங்­கிய நல் வாய்ப்பு! நல்ல சம­யம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இதனை நழு­வி­டக் கூடாது என்று ‘கப்’­பென்று பற்­றிக்­கொண்டு, மள­ம­ள­வென தேவை­யான மாற்­றங்­களை இயக்க அமைப்­பி­லும், கொள்­கைத் திட்ட செயல் முறை­யி­லும் செய்ய தலை­மைக்கு முழு அதி­கா­ரம் தர, தொண்­டர்­கள், தோழர்­கள், இயக்­கக் காவ­லர்­கள் எழுச்­சி­யோடு ஏந்­திப் பிடிக்­க­வேண்­டிய தரு­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இளைய தலை­முறை பொறுப்­பேற்க வேண்­டும் என்ற குர­லுக்கு முக்­கி­யத்­து ­வம் தரப்­ப­டும் என்றே கரு­து­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க.வின் இளைய தலை­மு­றை­யி­னரை முன்பு எப்­போ­தும் இல்­லாதஎழுச்­சி­யோடு வழி­ந­டத்த மான­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் இயக்­கத்­திற்­குத் தக்க நேரத்­தில் கிடைத்த ஒரு கொள்கை நிதி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அவ­ரது ஆற்­றல், ஆளுமை, பிரச்­சார முறை, இயக்­கத்­த­வர்­க­ளி­டம் காட்­டும் அன்­பும், பண்­பும் கலந்த மரி­யாதை, கொள்கை லட்­சி­யத்­தில் சிறந்­தோங்கி, பின்­வாங்­காது, சம­ர­ச­மில்லா சண்­ட­மா­ரு­த­மாய் தலை­வர் தள­ப­திக்­குக் கிடைத்த ஒரு பெரும் அசை­யும் சொத்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அத­னால்­தான் ஆரி­யம், அர­சி­யல் எதி­ரி­கள் அவ­ரையே குறி வைத்­துள்­ள­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அது­போல, கொள்­கை­யா­ளர்­கள், இளை­யர்­கள், ஒடுக்­கப்­பட்ட சமூ­கத்­தி­லி­ருந்து நல்ல அனு­ப­வ­மும், ஆற்­ற­லும் உள்ள, கலை­ஞ­ரால் கண்­டெ­டுக்­கப்­பட்ட பலர், இளமை கருத்து, கொள்கை வள­மை­யோடு இருப்­ப­வர்­கள் அடை­யா­ளம் காணப்­ப­ட­வேண்­டும்.  சிறு­பான்­மைச் சமு­தா­யம் பல தலை­மு­றை­க­ளாக ‘திரா­விட இயக்­கத்­தி­னையே தங்­கள் பாடி­வீ­டா­கப் பார்த்­துப் பர­வச உறவு கொள்­ளும், குறிப்­பாக இஸ்­லா­மிய சமூ­கத்­த­வர்­க­ளுக்­கு­ரிய பிர­தி­நி­தித்­து­வம் அளிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். மக­ளிர் அணியை கொள்கை முத்­தி­ரை­யோடு வார்த்­தெ­டுக்க  கவி­ஞர் கனி­மொழி போன்­ற­வர்­க­ளை­யும், புதிய ஆற்­றல் பொதிந்­துள்­ள­வர்­க­ளை­யும் இணைத்து, கம்­பீ­ர­மாக செயல்­பட வைப்­பது காலத்­தின் கட்­டா­யம். ஓர் எழுச்­சிப் பாச­றை­யாக உள்ள இவர்­க­ளைப் போன்­ற­வர்­கள் சில உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இயக்க மூத்­த­வர்­கள் – மாவட்ட இயக்­கத்­தைப் பல ஆண்­டு­கள் நெருக்­கடி காலம் தொடங்கி, இன்­று­வரை கட்டி வந்த அனை­வ­ரை­யும்­கூட அர­வ­ணைத்து, கலை­ஞர் அவர்­கள் அடிக்­கடி கூறும் ‘தென்னை மரத்து மட்­டை­கள்’உவ­மையை மன­திற்­கொண்டு செயல்­பட்­டால், புத்­தொளி, புத்­து­ணர்ச்­சிக்கு, புது முறுக்கு – ஓர் இரா­ணு­வக் கோட்­டம்­போல், களம் காண ஆயத்­த­மா­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தோல்வி – வெற்றி என்­பது தேர்­தல் சக்­க­ரத்­தில் சுழன்று வரு­பவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">கொள்கை சறுக்­க­லற்ற தொண்­ட­றத் தோழர்­களே, இதன்­மூல பலம். அவர்­களே இரத்த நாளங்­கள், நாடி நரம்­பு­கள் என்­ப­தால், அவர்­க­ளது கருத்­துக்கு என்­றும் மதிப்­ப­ளிப்­ப­வர், அவர்­க­ளதுஅருமை உணர்ந்­த­வர் தலை­வர் மு.க.ஸ்டாலின் என்­பது கல்­லின்­மேல் எழுத்து! அவர்­தம் சாத­னை­க­ளும், உழைப்­பும் வர­லாறு மறக்க முடி­யா­தவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அவ­ரது ஒப்­பிலா உழைப்பை எத்­தனை சோத­னை­கள் வந்­தா­லும், பறிக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">விழு­வது முக்­கி­ய­மல்ல, எவ்­வ­ள­வுக்­கெவ்­வ­ளவு எழு­வது என்­பதே முக்­கி­யம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">எழுக, தி.மு.க. வல்­லமை பெறட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">திரா­வி­டம் வெல்­லும்; வர­லாறு என்­றும் அதைச் சொல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம்  ஆலோசனைபடி முத்தமிழ் அறிஞர்  கலைஞர் கருணாநிதி அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அலமாதி ஊராட்சியில் உள்ள Home of Love ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒன்றிய செயலாளர் மீ.வே.கருணாகரன் கேக் வெட்டி அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மு.கீதாராமன், பா,சேகர், கே. தமிழ்வாணன், எம்.முகம்மது அலி அ.து மணி, பத்மநாபன், 
எம்.இரத்தினமாலா, ராஜசேகர்,மு.பாஸ்கர்,கு.கலைவாணன் அன்பு, சன்சேகர், பக்கிரி, தாஸ், சுரேஷ், இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் சி.சிவசங்கர், எம்.எஸ். மணிகண்டன், ஆர். ரூபேஷ், எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கிளை கழக பொறுப்பாளர் சி.சுரேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>