<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,70,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 10 2026 21:24:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260611T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11062026-VLR-06" position.sequence="06" ex-ref="11062026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">சிகரத்தை   தகரம்   பழிக்கலாமா?</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup717153_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ம்.ஜி.ஆர். இறந்த போது. 1988 ஆம் வரு­டம் 
ஜன­வ­ரி­யில், அ.தி.மு.க. பிளவு பட்ட நேரத்­தில். எம்.ஜி.ஆர், மனைவி ஜானகி அம்­மை­யா­ருக்கு காங்­கி­ரஸ் ஆத­ரவு தரும் என அன்­றைய குடி­ய­ர­சுத் தலை­வர் வெங்­கட்­ரா­ம­னி­டம் கூறி­விட்டு கடைசி நேரத்­தில் பல்டி அடித்து, ஜானகி எம்.ஜி.ஆர். ஆட்­சி­யைக் கலைக்­கக் கார­ண­மாக இருந்­த­வர்­கள்­தானே காங்­கி­ர­சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘‘1976 ஆம் ஆண்டு ஜன­நா­யக குரலை அடைக்­கா­தீர்­கள், இந்­தி­யா­வின் மூத்த தலை­வர்­களை வெளி­யில் விடுங்­கள்’’ என்று தீர்­மா­னம் போட்­ட­தற்கு தி.மு.க. ஆட்­சி­யையே குடி­ய­ர­சுத் தலை­வரை வைத்து கலைத்­த­வர்­கள்­தானே காங்­கி­ர­ஸி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1991-ல் ‘விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ரவு’ என கார­ணம் காட்டி. தி.மு.க. ஆட்­சி­யைக் கலைத்த புண்­ணி­ய­வான்­கள் தானே காங்­கி­ர­சி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­ஸால் திமு­க­வுக்கு. துரோ­கம் நடக்­கும் போது மென்­மை­யான பதி­லைத் தந்து, தி.மு.க.விற்கு வரு­ட­லைத் தந்த கார்த்­திக் சிதம்­ப­ரம் போன்­றோ­ரின் அறிக்கை காங்­கி­ரசை வளர்க்­குமா? மாணிக்­கம் தாகூர் போன்று 
தர­மின்றி பேசு­ப­வர்­க­ளால் காங்­கி­ரஸ் வள­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தி.மு.க.வில் வாரிசு அர­சி­ய­லாம்” மாணிக்­கம் தாகூர் கூறு­கி­றார். கசாப்­புக் கடைக்­கா­ரன் காருண்­யம் பேசு­கி­றான், ஈயத்­தைப் பார்த்து இளிக்­கி­றது பித்­தளை என்­ப­து­போல, சிக­ரத்தை தக­ரம் பழிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாரிசு அர­சி­யலை இந்­தி­யா­விற்­குத் தந்­ததே காங்­கி­ரஸ்­தான். முத­லில் நேரு, பின் நேரு மகள் இந்­திரா, இந்­திரா மகன் ராஜிவ், ராஜிவ் மனைவி சோனியா, சோனியா மகன் ராகுல், ராகுல் தங்கை பிரி­யங்கா என அத்­தனை பேரும் எம்.பி.க்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாணிக்­கம் தாகூர் மட்­டும் என்ன வாழு­தாம். சுதர்­சன நாச்­சி­யப்­ப­னின் அண்­ணன் மகன் என்­கிற தகு­தி­யோடு டெல்லி சென்று திரும்­பி­ய­தால், எம்.பி. ஆன­வர். தமி­ழ­கத்­தில் பல போராட்­டங்­கள் செய்து சிறைக்­குச் சென்று எம்.பி. ஆன­வரா மாணிக்­கம்­தா­கூர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘காங்­கி­ரசை ஆத­ரிக்­கா­த­வர் எல்­லாம் பா.ஜ.க. தான்’ என்­கிற கேவ­ல­மான, தரம் கெட்ட வார்த்­தை­களை 
மீண்­டும் மீண்­டும் மாணிக்­கம் தாகூர் கூறக்­கூ­டாது என எச்­ச­ரிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேற்கு வங்­கா­ளத்­தில் மம்தா பானர்ஜி காங்­கி­ர­ஸுக்கு இரண்டு இடம்­தான் தரு­வேன் என்­ற­தால் கோபித்­துக் கொண்டு வெளி­யே­றி­னீர்­கள். காங்­கி­ரஸ் - திரி­ணா­முல் காங்­கி­ரஸ் மோதல் என்­றாலே திரி­ணா­முல் காங்­கி­ர­சும் - பா.ஜ.க.வும் உறவு என்­பதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில், காங்­கி­ர­சு­டன் சமாஜ்­வாடி மோதி­னால், சமாஜ்­வாடி பா.ஜ.க. உடன் உறவு என்­பதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரி­ணா­முல் காங்­கி­ரஸ், சமாஜ்­வாடி கட்­சி­க­ளு­டன் காங்­கி­ரஸ் கட்சி மேற்கு வங்­கா­ளத்­தி­லும், உத்­தி­ர­பி­ர­தே­சத்­தி­லும் சீட்டு எண்­ணிக்­கை­யில் தேர்­த­லுக்கு முன்பே பிரிவு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிரிவு என்­பது வேறு, துரோ­கம் என்­பது வேறு. ஈரம் காயா­மல் எதி­ரி­யி­டம் ஓடிச் சென்­றது காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளு­நர் ஆட்சி கூடாது என்­ப­தற்­கா­கத்­தான் தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு ஆத­ரவு என்­றால், கம்­யூ­னிஸ்ட் 
கட்­சி­கள் மாதிரி வெளி­யில் இருந்து ஆத­ரவு தர  
வேண்­டி­ய­து­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கம்­யூ­னிஸ்ட்­கள், விடு­த­லைச் சிறுத்­தை­கள், முஸ்­லிம் லீக் மாதிரி தி.மு.­க.­வி­டம் சொல்­லி­விட்­டுச் செல்ல வேண்­டி­யது தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் அல்­லாத ஆட்சி என்­கிற பேச்சு சில­ரால் எழுந்­தது எப்­போது? நீங்­கள் ஆத­ரவு தந்­தது எப்­போது? நீங்­கள் அடுத்த நாளே ஆத­ரவு. இந்த பேச்சு சில நாள் கழித்து தான். அப்­படி வந்­த­போ­தும் இரண்டு தலை­மை­யும் 
முளை­யி­லேயே கிள்ளி வீசி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எம்.ஜி.ஆர். காலத்­தில் ஒரி­சா­வின் அன்­றைய தலை­வர் பிஜு பட் நாயக் தி.மு.க. - அ.தி.மு.க. இரண்டு கட்­சி­க­ளும் ஒன்று சேர முயற்சி எடுத்­தார். முடிவு நெருங்­கி­யது உண்மை. கடைசி நேரத்­தில் அது உடைந்து போனது. ஆனால் அது போல் ஒரு சத­வி­கி­தம் கூட இப்­போது 
நடந்­ததா என்­றால் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தள­பதி அவர்­கள் முதல்­வர் பத­விக்கு ஆசைப்­பட்­டி­ருந்­தால் ஜெய­ல­லிதா இறந்­த­வு­டன் அதி­ருப்தி அ.தி.மு.க.
வின­ரின் தோழ­மை­யோடு முதல்­வ­ராகி இருக்­கக் கூடாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2024-ல் பா.ஜ.க.விற்கு 20 எம்.பி. தேவை என்­கி­ற­போது தள­பதி அவர்­கள் பா.ஜ.க.வுடன் போகக்­கூ­டாதா? நான்கு அமைச்­சர் பதவி வாங்கி இருக்­க­லாமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாண்­டிச்­சே­ரி­யில் ரங்­க­சா­மிக்கு 2011, 2026 
இரண்­டி­லும் மெஜா­ரிட்டி பெறாத போது தி.மு.க. அதற்கு 
ஆசைப்­பட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளு­நர் ஆட்சி வரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் காங்­கி­ரஸ் ஆத­ரவு என்­றால் அமைச்­ச­ரு­டன் இருக்க வேண்­டி­ய­து­தானே? எதற்­காக முட்டி போட்டு, பல் இளித்து, 
மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் கேட்டு வாங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிச்சை கேட்­ப­தற்­கும் ஒரு தகுதி வேண்­டாமா? தேர்­த­லில் நின்ற தி.மு.க. வென்று இருந்­தால், தி.மு.க.விடம் கேட்­டி­ருக்­க­லாம். 5 சீட்டை வைத்­துக்­கொண்டு தேர்­த­லில் எதிரி காலில் விழுந்து கேட்­க­லாமா? தமி­ழக வெற்­றிக்­க­ழ­க­மும் பாத்­தி­ரம் அறிந்து பிச்சை போட வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாணிக்­கம் தாகூர், உத­ய­நி­திக்கு ஆலோ­சனை கூற வேண்­டாம். ஒற்றை செங்­க­லில் நாடா­ளு­மன்­றத்தை கல­க­லக்க வைத்­த­வர் எங்­கள் இளை­ஞர் அணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘ராகுல் அர­சி­ய­லில் நேர்­மை­யா­ன­வ­ராம்’ மாணிக்­கம் தாகூர் கூறு­கி­றார். ராகு­லின் அர­சி­யல் நேர்மை தான் எங்­க­ளுக்கு தெரி­யுமே! தேஜஸ்வி யாத­வினை முதல்­வர் 
வேட்­பா­ளர் என உடன் அறி­விக்­கா­மல், பீகா­ரில் 
குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­விட்ட ராகுல் அர­சி­யல் தான் தெரி­யுமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். காங்­கி­ரஸ் கொடுத்த தீர்­மா­னம், பதவி இழப்பு விதி­கள் சரி­யில்லை என நாடா­ளு­மன்­றத்­தில் காங்­கி­ரஸ் பிர­த­மர் மன்­மோ­கன் சிங் முன்பே முன்பே கிழித்து எறிந்து விட்டு ராகுல் அதே சட்­டத்­தால் பதவி இழந்து மீண்ட கதை தெரி­யுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ராகு­லின் அர­சி­யல் தூய்மை தான் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மயி­லா­டு­து­றை­யில் ஒன்­று­பட்ட தஞ்சை மாவட்ட மண்­ணின் மைந்­தன் திரு­நா­வுக்­க­ர­ச­ருக்கு கொடுக்­கா­மல், திருப்­பெ­ரும்­பு­தூர் சுதா­வுக்­குக் கொடுத்த போதே அவ­ரின் அர­சி­யல் பண்­பாட்­டைத் தெரிந்து கொண்­டோமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாண்­டிச்­சே­ரி­யில் தி.மு.க.வுக்கு 14 இடங்­கள் கொடுத்து, அதில் ஆறு இடங்­க­ளுக்கு காங்­கி­ரஸ்­கா­ரர்­களை விண்­ணப்­பிக்க வைத்­த­தோடு அந்த ஆறு பேரு­டன் ராகுல் புகைப்­ப­டம் வேறு எடுத்­துக் கொண்­டது 
அசிங்­க­மில்­லையா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வார்டு அள­வில் கட்சி நடத்­து­ப­வர்­கள் கூட இந்த இழி­செ­யலை. துரோ­கத்தை செய்ய மாட்­டார்­கள். அப்­ப­டிச் 
செய்­த­தால் தான் “லூசுக்கு எதுக்­குடா வேஸ்ட்” என ஒரே ஒரு சீட்டை விட கூடு­த­லாக வெற்றி பெற வைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘தி.மு.க. பாடம் கற்க வேண்­டு­மாம்’ மாணிக்­கம் தாகூர் கூறு­கி­றார். பாடம் கற்க வேண்­டி­யது காங்­கி­ரஸ் 
இல்­லையா? கொடுத்த 28-ல் 5-ல் ஒரு பங்கு கூட முழு­மை­யாக வெற்றி பெறாது 5 உடன் நின்­றது காங்­கி­ரஸ், நின்ற தொகு­தி­யில் மூன்­றில் ஒரு பங்கு பெற்­றது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. காங்­கி­ர­சுக்கு எத்­தனை ஒத்­து­ழைப்பு, 
எந்­தெந்த வகை­யில் உழைப்பை பொரு­ளா­தா­ரத்­தைத் தந்­தது என்­ப­தைப்­பற்றி தேர்­த­லில் நின்ற காங்­கி­ரஸ் 
வேட்­பா­ளர்­க­ளைக் கேட்­டால் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு மாநி­லத்­தில் ஆண்ட தி.மு.க. 
காங்­கி­ர­சிற்கு எவ்­வ­ளவோ பொரு­ளா­தார உதவி செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பக்­கத்­தில் தெலுங்­கானா, கர்­நா­ட­கா­வில் ஆளும் 
காங்­கி­ரஸ், தி.மு.க. வேட்­பா­ளர்­க­ளுக்கு சல்­லிக்­காசு தந்­தது உண்டா? பாண்­டிச்­சே­ரி­யில் தி.மு.க. மொத்­தம் ஐந்து. அதில் இப்­போது 2026-ல் பாண்­டிச்­சே­ரி­யில் கையை எதிர்த்து சூரி­யன் இரண்டு இடத்­தில் வென்­றதா? 
இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பத­விக்­காக ஆசைப்­ப­டு­ப­வர் இல்லை ராகுல் என்­றால், பொது எதி­ரி­யான பா.ஜ.க.வை வீழ்த்த திரி­ணா­முல் காங்­கி­ர­ஸி­டம். பீகா­ரில் தேஜஸ்வி யாத­வி­டம், பாண்­டிச்­சே­ரி­யில் தி.மு.க.விடம் விட்­டுப் போகா­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. புது­டெல்­லி­யில் ஆட்­சி­யில் இருந்­தும், தமிழ்­நாட்­டில் வளர்ந்­தும். 27 இடங்­க­ளு­டன் நிறைவு. ஒரே ஒரு இடம் மட்­டுமே வெற்றி பெறும் அளவு. 26 தோற்­கும் தொகு­தியை அ.தி.மு.க. பா.ஜ.க.வுக்கு தந்­தது என்­றா­லும் பொது எதிரி தி.மு.க.-காங்­கி­ரஸ் தோற்­றுப் போகட்­டும் என விட்­டுக் கொடுக்­கி­றது பா.ஜ.க. ஆனால் காங்­கி­ரஸ் கட்­சியோ தனது கூட்­டா­ளி­களை அழிக்க நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு காலத்­தில் 5 எம்.பி. க்களை மக்­க­ள­வை­யில் பெற்ற கட்சி பா.ஜ.க. சி.பி.ஆர்., பொன்­னார்,  திருநாவுக்கர­சர், 
நீல­கிரி மதன். ரங்­க­ரா­ஜன் குமா­ர­மங்­க­லம் என ஐந்து 
எம்.பி.க்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">25 ஆண்­டில் பல மடங்கு உயர்ந்­தும், அடக்கி வாசித்­தது பா.ஜ.க. ஆனால் காங்­கி­ரஸ் 28 பெற்­றும், ராஜ்­ய­சபா வந்­தும் அடங்­காது, எதி­ரி­யி­டம் ஓடோடி இரண்டு அமைச்­சர். ஒரு ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் பெற்­றது. ஆனால் பதவி ஆசை பிடிக்­காத காங்­கி­ரஸ் என பெருமை வேறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் பரம்­ப­ரை­யாக ஆண்ட பாண்­டிச்­சே­ரி­யில் ஒரே இடம். அதி­லும் முதல்­வர் வேட்­பா­ளர் வைத்­தி­ய­லிங்­கத்­திற்கு டெபா­சிட் போனது. என்­றா­லும் அடங்­கா­மல் பேசக்­கூ­டாது காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. தின­மும் ஒரு நிலைப்­பா­டாம். எங்கே? காங்­கி­ர­ஸிலா? தி.மு.க.விலா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று வரை கர்­நா­ட­கத்­தின் முதல்­வர் சித்­த­ரா­மைய்யா, இன்று சிவக்­கு­மார். நேற்று முன் தினம் அமைச்­ச­ரான ராம­லிங்­கம் ரெட்டி பதவி ஏற்பு. நேற்று ராஜி­னாமா.  இன்று மீண்­டும் பதவி ஏற்பு. தினம் ஒரு நிலைப்­பாடு காங்­கி­ரஸ் என்­ப­தற்கு உதா­ர­ணம் போதுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­வரை தெலுங்­கானா, பீகார். கர்­நா­டகா காங்­கி­ர­ஸிற்கு தி.மு.க. ஆத­ரவு. இனி அங்­கும் காங்­கி­ர­சின் எதி­ரியே எங்­கள் தோழன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளின் தரம் இல்லா நட­வ­டிக்­கை­க­ளால் இந்­தியா முழு­வ­தும் காங்­கி­ரஸ் தோற்­றால் அதற்கு மாணிக்­கம் தாகூரே பொறுப்பு. எத்­தனை பட்­டா­ளம் கூட்டி வந்­தா­லும் காங்­கி­ரஸ் ஒரு எம்.பி. தொகுதி கூட வெல்ல முடி­யாது. ஒன்­றி­யத்­தில் கூட்­ட­ணி­க­ளின் துணை­யோடு தி.மு.க. ஆட்­சி­யில் அம­ரும். அந்த ரக­சி­யத்தை சொல்ல முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரட்டை வேடம் தி.மு.க. போடு­கி­ற­தாம். மாணிக்­கம் தாகூர் கூறு­கி­றார். ஆமாம் நாங்­கள் தான் கேர­ளா­வில் 
கம்­யூ­னிஸ்ட் பின­ராயி விஜ­யனை வீழ்த்­தித் துரத்தியது. தமிழ்­நாட்­டில்கம்­யூ­னிஸ்ட் அலு­வ­ல­கம் சென்று துண்டு போட்டு பிர­வீன் சக்­க­ர­வர்த்தி மாநில அமைச்­சர்­க­ளு­டன் சென்று எம்.பி.க்கு வாக்கு கேட்டு கெஞ்­சு­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீனோடு சண்டை மீன் குழம்­போடு ராசி. மார்க்­சிஸ்­டின் முதல்­வ­ரோடு சண்டை தமி­ழ­கத்­தின் மார்க்­சிஸ்ட் 
எம்.எல்.ஏ. உடன் ராசியா? தாடிக்­கொரு சீயக்­காய், தலைக்கு ஒரு சீயக்­காய் என்­பது போல, கேர­ளா­வுக்கு ஒரு சீயக்­காய் தமிழ்­நாட்­டிற்கு ஒரு சீயக்­காயா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் கட்சி நடத்­து­கி­றீர்­களா? இல்லை முனி­யாண்டி விலாஸ் ஓட்­டல் நடத்­து­கி­றீர்­களா? ஊருக்கு ஊர் முனி­யாண்டி விலாஸ் இருக்­கும். ஆனால் ஓனர் வேறு 
வேறு என்­பது போல. உங்­க­ளைப் போல நடக்க 
சொல்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஓடிப் போன­வளை ஓடிப் போன­வள் என்று தானே கூற முடி­யும், மாரத்­தான் ஓடு­கி­றார் என்றா சொல்ல முடி­யும்? மை காய்­வ­தற்­குள் ஓடி­ய­வளை, நாங்­கள் போட்ட நகை நட்­டு­டன் ஓடி­ய­வளை அந்த நகையை காட்டி சிகையை உயர்த்தி கொண்­ட­வர்­களை எப்­படி அழைப்­ப­தாம். 
நியா­யம் மீறி நடந்­ததை கூறி­னால் மேலும் காயப்­ப­டுத்­தா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏமாற்றி ஓடி விட்­டீர்­களே என வருந்­தி­னால் மருந்­தி­டுங்­கள் அல்­லது மறந்­தி­டுங்­கள். காலங்­கள் கூட காயங்­களை ஆற்­ற­லாம். மாற்­ற­லாம். பதி­லுக்கு பதில் என தப்­பாக 
பேசி தப்பு தாளம் வாசிக்க வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாண்­டிச்­சே­ரி­யி­லா­வது ஒரு சீட் காங்­கி­ர­சுக்கு கிடைத்­தது. தமிழ்­நாட்­டில் ஜீரோ­வுக்­கும் குறை­வான 
எண்­ணிக்கை இல்­லா­த­தால் ஜீரோ கிடைக்­கும் காங்­கி­ரஸ் ஜீரோ தான் தள­பதி ஸ்டாலின் என்­றைக்­கும் இந்­தி­யா­வின் ஹீரோ தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்று போபர்ஸ் ஊழல் முதல் இன்று நேஷ­னல் ஜெரால்டு ஊழல் வழக்­காடு மன்­றம் படிக்­கட்டு ஏறும். ஆனால் தள­ப­திக்கு பொய்­யாக கூட வழக்­கில்லை. எங்­கள் தள­பதி சலவை செய்­யப்­பட்ட நிலவு போல தூய்­மை­யான தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீண்டு வரு­வார் - மீண்­டும். மீண்­டும் வரு­வார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>