<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 13 2026 03:32:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260613T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13062026-CBE-05" position.sequence="05" ex-ref="13062026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">திராவிட இயக்க அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="104">திராவிட இயக்க அரசியலால்தான் – வட இந்தியாவின் அரசியல் படையெடுப்பைத் தடுக்க முடியும்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய   </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">‘கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில்' தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. புகழாரம்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup721500_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup723290_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup707719_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="thameemunansar_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூன் 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திரா­விட இயக்க அர­சி­யல் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­றும் திரா­விட இயக்க அர­சி­ய­லால்­தான் – வட இந்­தி­யா­வின் அர­சி­யல் படை­யெ­டுப்­பைத் தடுக்க முடி­யும் என்­றும் – சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் – மாவட்­டச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. முன்­னின்று நடத்­திய  ‘முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்­கூட்­டத்­தில்’ தமீ­முன் அன்­சாரி 
எம்.எல்.ஏ. புக­ழா­ரம் சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­கழ்­வில் தமீ­முன் அன்­சாரி எம்.எல்.ஏ. ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“யானை படுத்­தா­லும் குதிரை உய­ரம்”­­­என்று சொல்­வார்­கள். சென்­னை­யிலே போராட்­டக் களத்­திலே ஒரு தற்­கா­லி­கப் பின்­ன­டை­வைச் சந்­தித்­தி­ருந்தா ­லும், எங்­க­ளு­டைய உணர்­வு­களை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது என்ற நம்­பிக்­கையை ஊட்­டும் விதத்­தில் இந்­தப்­பொ­துக்­கூட்­டத்தை அவர்(சேகர்­பாபு) ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது தேர்­தல் வெற்­றி­களை கவ­னத்­தில் கொண்டு செயல்­ப­டக்­கூ­டிய ஓர் இயக்­கம் அல்ல. தமிழ்­நாட்­டின் மறு­ம­லர்ச்­சிக்­காக, தமி­ழர்க­ ளுடைய எழுச்­சிக்­காக, திரா­விட இனத்­தி­னு­டைய மீட்­சிக்­கா­கச் செயல்­ப­டக்­கூ­டிய ஒரு சமு­தாய இயக்­கம் என்­ப­து­தான் எதார்த்த உண்மை. அத­னால்­தான் வெற்றி தோல்­வி­க­ளைக் கடந்து, எப்­போ­தும் அங்கே தொண்­டர்­க­ளும் தலை­வர்­க­ளும் உற்­சா­க­மா­கச் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். எதிர்­பா­ராத ஒரு தோல்­வி­யைச் சந்­தித்த ஒரு கட்சி, இதே போன்ற எழுச்­சி­யோடு இந்­தி­யா­வில் எங்­கே­யா­வது எழுந்து நின்று கள­மா­டிக் கொண்­டி­ருக்­கி­றதா என்று சொன்­னால், “இல்லை” என்­று­தான் சொல்­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்கு வங்­கத்­திலே பார­திய ஜனதா கட்­சிக்­குச் சிம்ம சொப்­ப­ன­மாக இருந்த மம்தா பானர்ஜி, தோல்­விக்­குப் பின்­னாலே இன்­னும் எழ­வில்லை; அவர் எழ முயற்­சிக்­கும் பொழு­தெல்­லாம் பல இடை­யூ­று­கள் அங்கே ஏற்­ப­டு­கின்­றன. கேர­ளா­விலே நம்­மு­டைய இட­து­சா­ரித் தோழர்­கள் ஆட்­சியை இழந்­தார்­கள்; இழந்த பின்­னாலே உட­ன­டி­யாக மக்­க­ளைச் சந்­தித்­தார்­களா என்று சொன்­னால், “இல்லை” என்­று­தான் நான் சொல்­வேன். ஆனால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சியை இழந்­தி­ருக்­கக்­கூ­டிய நிலை­யில், யாரும் எதிர்­பா­ராத முறை­யில் நம்­மு­டைய தள­பதி அவர்­கள் கொளத்­தூர் தொகு­தி­யிலே வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்­தச் சூழ­லி­லும், ஒரு வாரம் அந்­தத் தேக்­கம் இருந்­தது, அந்த ஏக்­கம் இருந்­தது. ஆனால் அதன் பின்­னாலே, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தொண்­டர்­க­ளுக்கே உரிய வர­லாற்று எழுச்­சி­யோடு அந்­தத் தொண்­டர்­க­ளும் தலை­வர்­க­ளும் களத்­தில் இறங்கி மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். வெற்றி பெற்­ற­வர்­கள் மக்­க­ளைச் சென்று சந்­திப்­ப­தற்கு ஒரு மாதம் எடுத்­துக்­கொண்­டார்­கள்; ஆனால் நம்­மு­டைய தள­பதி அவர்­கள் வெற்றி வாய்ப்பை இழந்த 24 மணி நேரத்­தில் தொகு­திக்கு வந்­தாரே! இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டக்­கூ­டிய ஓர் அர­சி­யல் எழுச்­சித் தலை­வ­ராக அவர் நம் முன்­னாலே நிற்­ப­தற்கு அது­தான் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர்: மூன்று தலை­மு­றை­க­ளைக் கட்­டிப்­போட்ட பன்­முக ஆளுமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொண்­டர்­க­ளி­டம் வலி, குடும்­பத்தி­ னரி­ட­மும் கூடச் சோகம், கட்சி அர­சி­ய­லைத் தாண்­டிப் பொது­மக்­க­ளி­டம் ஒரு மிகப்­பெ­ரிய அனு­தாப அலை; ஆனால் அவர் முடங்­கிக் கிடக்­க­வில்லை. அறி­வா­ல­யத்­திற்கு வரு­கி­றார், தொகு­திக்கு வரு­கி­றார். தொகு­திக்கு வந்த நிலை­யி­லும், “என்னை ஏமாற்­றி­விட்­டீர்­களே” என்று ஒரு வார்த்தை கூடப் பேச­வில்லை. “நல்லா வாயில் வருது” என்­றது போன்ற வார்த்­தை­களை எல்­லாம் அவர் விட­வில்லை. “நான் உயர்ந்­த­வன், கலை­ஞ­ரால் வளர்க்­கப்­பட்­ட­வன்” என்­பதை நிரூ­பிக்­கும் வித­மாக அந்­தத் தொகுதி மக்­க­ளி­டம் பார்த்­துப் பார்த்து நன்­றி­யைச் சொல்­லி­விட்டு வந்­தாரே! அப்­ப­டிப்­பட்ட தள­பதி அவர்­க­ளு­டைய இந்த இயக்­கத்­தில்­தான், இன்­றைய தினம் கலை­ஞர் இல்­லா­விட்­டா­லும் கலை­ஞ­ரு­டைய பிறந்த தினத்­திலே அவ­ரைப் பற்­றிப் பேசு­வ­தற்­காக நாம் இங்கே கூடி­யி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரு­டைய அர­சி­யல் என்­பது சாதா­ரண அர­சி­யல் அல்ல. 14 வய­திலே பய­ணத்­தைத் தொடங்­கிய அவர், 94 வயது வரை­யி­லும் இந்­தி­யா­வு­டைய கவ­னத்­தைப் பெற்ற தலை­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார். இந்­தி­யா­வி­லேயே 50 ஆண்டு காலம் பத்­தி­ரி­கை­க­ளிலே முதல் பக்­கச் செய்­தி­யில் இடம்­பெற்ற ஒரே அர­சி­யல் தலை­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் மட்­டும்­தான். வேறு யாருக்­கா­வது இப்­படி ஒரு வர­லாறு உண்டா? கலை­ஞ­ரு­டைய காலத்­திலே ஓடத் தொடங்­கி­ய­வர்­கள், ஓட்­டத்தை நிறுத்தி இருக்­கி­றார்­கள் அல்­லது ஓட முடி­யா­மல் தவித்தி ­ருக்­கி­றார்­கள்; ஆனால் மூன்று தலை­மு­றைத் தமி­ழர்­க­ளை­யும் கட்­டிப்­போட்ட ஒரே தலை­வ­ரா­கக் கலை­ஞர் தமிழ்­நாட்­டிலே வாழ்ந்து சென்­றி­ருக்­கி­றார். பெரி­யா­ரு­டைய புரட்­சி­க­ரச் சிந்­த­னை­களை, அண்­ணா­வின் கன­வு­க­ளைத் தன் ஆட்­சிக் காலத்­தில் செயல்­ப­டுத்­திய ஒரு மாபெ­ரும் தலை­வ­ரா­கத் தமிழ்­நாட்­டி­னு­டைய வர­லாற்­றிலே தடம் பதித்­துச் சென்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேறு எந்­தத் தலை­வ­ருக்­கும் கிடைக்­காத வர­லாற்­றுச் சிறப்­பு­கள் கலை­ஞ­ருக்கு உண்டு. தான் எதை­யெல்­லாம் நினைத்­தாரோ, அதை­யெல்­லாம் ஆட்­சிக் காலத்­திலே செயல்­ப­டுத்­தி­னார். அவர் ஓர் அர­சி­யல் தலை­வ­ராக மட்­டும் இருந்­த­தில்லை; மிகச் சிறந்த இலக்­கி­ய­வா­தி­யாக இருந்­தார். அவ­ரு­டைய செயல்­பட்ட வாழ்­நா­ளிலே சரா­ச­ரி­யாக ஒவ்­வொரு நாளும் ஐந்து முதல் எட்டு பக்­கங்­கள் எழு­திக்­கொண்டே இருந்­தி­ருக்­கி­றார். அது இத­ழி­யல் துறை­யாக இருக்­கட்­டும், இலக்­கி­யத் துறை­யாக இருக்­கட்­டும்; அவர் எழு­து­வதை நிறுத்­தி­ய­தில்லை, பேச்சை நிறுத்­தி­ய­தில்லை. தன்­னு­டைய சிந்­த­னை­களை, செயல்­பா­டு­களை முர­சொ­லி­யிலே வெளிப்­ப­டை­யா­கக் கொட்­டித் தீர்த்த ஒரே அர­சி­யல் தலை­வ­ராக அவர்­தான் இருந்­தார். யாருக்­கா­வது சிலே­டை­யா­கச் செய்தி சொல்ல வேண்­டும் என்று சொன்­னால், ... என்ற பகு­தி­யைப் பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உல­கி­லேயே எனக்­குத் தெரிந்து, பத்­தி­ரி­கை­யா­ளர்­களை எல்­லோ­ரும் சந்­திப்­பார்­கள்; ஆனால், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­திக்க முடி­யாத நேரத்­தில் கூட, பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேட்­கக்­கூ­டிய கேள்­வி­க­ளைக் ‘கேள்­வி-­­­ப­தில்’ என்ற பெய­ரிலே அறிக்­கை­யா­கத் தயா­ரித்து வெளி­யிட்ட ஒரே அர­சி­யல் தலை­வர் கலை­ஞர்­தான். அதிலே நக்­கல் இருக்­கும், நையாண்டி இருக்­கும், சிலே­டை­யான செய்­தி­கள் இருக்­கும், தொண்­டர்­களை உற்­சா­க­மூட்­டக்­கூ­டிய வார்த்தை ­கள் இருக்­கும். இன்று இந்­தி­யா­விலே அந்த இடத்­திலே வேறு எந்­தத் தலை­வ­ரா­வது இருக்­கி­றாரா? யோசித்­துப்­பா­ருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆழ­மான செய்­தி­க­ளைக் கூட எளி­மை­யான வார்த்­தை­க­ளில் எழு­தக்­கூ­டிய ஆற்­றல்­மிக்க எழுத்­தா­ள­ராக இருந்­தார். உலக அர­சி­ய­லை­யும் பேசக்­கூ­டிய ஒரு தலை­வ­ராக இருந்­தார்; உலக அர­சி­யல் நிகழ்­வு­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்து, அதை­யும் முர­சொ­லி­யிலே கட்­டு­ரை­யா­கத் தீட்­டக்­கூ­டிய ஓர் அர­சி­யல் பன்­னாட்டு ஆளு­மை­யா­க­வும் இருந்­தார். இதை­யெல்­லாம் மறக்க முடி­யுமா? அடிக்­கடி சொல்­லு­வார், “இன்று இட­து­சா­ரி­கள் நம்­மி­டம் இல்­லா­மல் இருக்­க­லாம்; நான் தி.மு.க.வில், திரா­விட இயக்­கத்­தில் இணை­யா­மல் இருந்­தி­ருந்­தால், கம்­யூ­னிச இயக்­கத்­தில்­தான் இருந்­தி­ருப்­பேன்” என்று சொல்­லக்­கூ­டிய ஒரு சோஷ­லி­சக் காத­ல­ராக இருந்­தார் 
கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரு­டைய ஆட்­சிக் காலத்­திலே அவர் முன்­னெ­டுத்த ஒவ்­வொரு திட்­டங்­க­ளை­யும் வரி­சைப்­ப­டுத்­திப் பார்க்­கின்­றோம்; அனைத்­தி­லும் சமூக நீதி இருந்­தது, மனி­த­நே­யம் நிறைந்­தி­ருந்­தது. அவ­ரு­டைய ஒவ்­வொரு மேடை­யும் பாடம் எடுத்­தது, அர­சி­யல் வகுப்பு எடுக்­கப்­பட்­டது. அந்த அர­சி­யல் வகுப்­பிலே உரு­வான எண்­ணற்­ற­வர்­கள் மத்­திய அமைச்­சர்­க­ளாக இருந்­தார்­கள், மாநில அமைச்­சர்­க­ளாக இருந்­தார்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்­கள், அர­சி­யல் அதி­கா­ரத்­தில் கோலோச்­சி­ய­வர்­க­ளாக இருந்­தார்­கள். எல்­லோ­ரை­யும் தன்­னு­டைய உரை­யின் மூல­மாக, எழுத்­தின் மூல­மாக மாண­வர்­க­ளாக மாற்­றிய பெருமை கலை­ஞ­ருக்­குத்­தான் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எதிர்ப்­பு­க­ளை­யும் துரோ­கங்­களை­ யும் வென்ற வர­லாறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எத்­தனை எத்­தனை இடர்ப்­பா­டு­களை அவர் சந்­தித்து வந்­தார்! கலை­ஞர் சந்­தித்த இடர்ப்­பா­டு­களை வேறு எந்­தத் தலை­வ­ரா­வது சந்­தித்­தி­ருந்­தால், அர­சி­யலை விட்டே அவர்­கள் வில­கிப் போயி­ருந்­தி­ருப்­பார்­கள். வாழ்­நாள் முழுக்­கப் போராட்­டங்­கள், வாழ்­நாள் முழுக்க எதிர்ப்­பு­கள், வாழ்­நாள் முழுக்க நம்­பிக்­கைத்­து­ரோ­கங்­கள்... இவற்­றை­யெல்­லாம் கடந்து ஓர் இயக்­கத்­தைத் தத்­துவ இயக்­க­மா­கவே வளர்த்­தெ­டுத்­தாரே, அந்த ஆளு­மைக்கு நிகர் ஏது? திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தொண்­டர்­க­ளுக்கு ஆட்­சி­யில் இருக்­கும்­போ­தும் சரி, ஆட்­சி­யில் இல்­லா­த­போ­தும் சரி, அரிய அர­சி­யல் கருத்­துக்­களை எடுத்­துக்­கூ­றிக்­கொண்டே வந்­தார்; அது­தான் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரு­டைய அர­சி­யல் அறிக்­கை­யிலே ஒரு தத்­து­வம் இருக்­கும், ஒரு வர­லாற்­றுச் செய்தி இருக்­கும். யாரா­வது ஒரு தலை­வர் இறந்­து­விட்­டால், உட­ன­டி­யாக அவ­ரு­டைய இரங்­கல் அறிக்­கை­யைப் பார்த்­தால், நமக்கே தெரி­யாத, அந்­தக்­கட்­சி­யு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கே தெரி­யாத, அந்­தக் கட்­சி­யி­னு­டைய தொண்­டர்­க­ளுக்கே தெரி­யாத பல செய்­தி­களை அவர் பட்­டி­ய­லிட்­டி­ருப்­பார். வார்த்­தை­க­ளிலே அவ­ரு­டைய வசீ­க­ரத்தை, எதி­ரி­க­ளும் பாராட்­டி­னார்­கள். இப்­ப­டிப்­பட்ட எண்­ணற்ற சிறப்­பு­க­ ளுக்­குச் சொந்­தக்­கா­ர­ரா­கக் கலை­ஞர் வாழ்ந்­தார்; வாழ்ந்­தது மட்­டு­மல்ல, தன்­னு­டைய உடன்­பி­றப்­பு­க­ளை­யும் அதே பாதை­யிலே அழைத்­துச் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சி­ய­லிலே சாது­ரி­ய­மாக எதை எப்­ப­டிப் பேசு­வது என்­பது, இந்­தி­யா­விலே கலை­ஞர் வாழ்ந்த காலத்­திலே பார்க்­கின்ற போது எந்­தத் தலை­வ­ருக்­கும் இல்­லாத ஒரு கலை­யாக இருந்­தது. தன்­னு­டைய நண்­பர்­க­ளைக் கூடச் சிலே­டை­யா­கக் கிண்­டல் செய்­வ­திலே கலை­ஞ­ருக்கு நிகர் யாரும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு நாள் பாண்­டிச்­சே­ரி­யில் இருந்­த­வாறு கவி­ஞர் கண்­ண­தா­சன், கலை­ஞ­ரைத் தொலை­பே­சி­யிலே தொடர்பு கொள்­கி­றார். கண்­ண­தா­சன் சொல்­கி­றார், “நான் பாண்­டிச்­சே­ரி­யில் நிற்­க­லாம் என்று கரு­து­கி­றேன்” என்று சொல்­கி­றார்; உட­ன­டி­யாக கலை­ஞர் சொல்­கி­றார், “உன்­னால் பாண்­டிச்­சே­ரி­யில் நிற்க முடி­யாது” என்று சொல்­கி­றார். எப்­ப­டிப்­பட்ட வார்த்தை ஜாலங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­முறை அதே கண்­ண­தா­சன் சொல்­கி­றார், “நான் வெளி­நாட்­டுக்­குச் செல்­கி­றேன், உங்­க­ளுக்கு என்ன வாங்கி வர வேண்­டும்?” என்று கேட்­கி­றார்; உடனே கலை­ஞர் சொல்­கி­றார், “நல்ல பெயரை வாங்கி வா” என்று சொல்­கி­றார். இப்­ப­டிப்­பட்ட உரை­யா­டல்­களை எந்த மாநி­லத்­தில் எந்­தத் தலை­வ­ரி­டம் பார்க்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­முறை அறி­வா­ல­யத்­திலே கலை­ஞர் கடு­மை­யான மன­வி­ரக்­தி­யோடு இருக்­கி­றார். ஒரு கூட்­டம் நடக்­கி­றது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய செயற்­குழு கூட்­டமா அல்­லது வேறு என்ன கூட்­டம் என்று தெரி­ய­வில்லை; கலை­ஞர் ஒரு­வ­கை­யான அதி­ருப்­தி­யில் “பேச மாட்­டேன்” என்று சொல்­கி­றார். அந்த நேரத்­திலே ஒரு தொண்­டர் எழுந்து, “கலை­ஞரே, நீங்­கள் இரண்டு வார்த்­தை­யா­வது பேச வேண்­டும்” என்று சொல்­கி­றார். உடனே கலை­ஞர் சொல்­கி­றார், “சரி அமரு, நீ கேட்­டது இரண்டு வார்த்தை; அந்த இரண்டு வார்த்­தையை நான் கூறி­விட்­டேன்” என்று சொல்­கி­றார். இப்­படி எல்­லாம் பேசு­வ­தற்கு, உரை­யா­டு­வ­தற்கு யாரா­வது இருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பரா­சக்­தி­யின் புரட்­சி­யும் புதிய ஆட்­சி­யின் மீதான விமர்­ச­ன­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரு­டைய சட்­ட­மன்ற உரை­கள் இலக்­கி­யங்­க­ளாக இருந்­தன. பரா­சக்தி படத்­தைப் பாருங்­கள்; இன்­றும் பலர் நடிக்­கி­றார்­கள், தங்­க­ளு­டைய நடிப்பை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­து­கி­றோம் என்று கூறு­கி­றார்­கள். ஒரு பரா­சக்தி ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தை உங்­க­ளு­டைய ஒரு வச­னம் ஏற்­ப­டுத்தி இருக்­குமா? மொத்­தத் தமிழ்­நாட்­டை­யும் புரட்­டிப்­போட்ட புரட்­சிக்­குப் பரா­சக்தி படம் ஒரு கார­ண­மாக இருந்­தது. முழு­நீ­ளப் படத்­தை­யும் கடைசி நேரத்­திலே நீதி­மன்ற வச­ன­மாக நான்­கரை நிமி­டத்­தில் சொல்லி முடித்த அர­சி­யல் ... சொந்­தக்­கா­ரர் கலை­ஞர். முழு­நீ­ளத் திரைப்­ப­டத்­தின் செய்­தி­க­ளை­யும் அந்த நான்­கரை நிமிட நீதி­மன்ற வச­னங்­க­ளிலே சொன்­னாரே, அப்­ப­டிப்­பட்ட எழுத்து வல்­லமை இன்­றைய அர­சி­யல் தலை­வர்­கள் யாருக்­கா­வது உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அனைத்து துறையிலும் தடம் பதித்த வர் கலைஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில தலை­வர்­கள் எழுத்­தா­ளர்­க­ளாக இருப்­பார்­கள், சில தலை­வர்­கள் பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்­கள், சில தலை­வர்­கள் களப்­ப­ணி­யா­ளர்­க­ளாக இருப்­பார்­கள்; ஆனால் கலை­ஞர் அப்­படி அல்ல. சிறந்த எழுத்­தா­ள­ராக, சிறந்த பேச்­சா­ள­ராக, சிறந்த நிர்­வா­கி­யாக மட்­டு­மல்­லா­மல், சிறந்த இலக்­கி­ய­வா­தி­யா­க­வும் இருந்­தார். பேர­றி­ஞர் அண்ணா இறந்த நேரத்­தில் அவர் எழுதி வாசித்த அந்­தக்­க­விதை ஏரா­ளம்:”நிழ­லாய் இருந்­தாய் நீயே நிலத்­த­டி­யில், நிழல் தேடச் சென்­றது நியா­யம்­தானா?”என்று கேட்­கி­றார். உலக அர­சி­ய­லிலே தென்­னாப்­பி­ரிக்­கா­வு­டைய வர­லாற்­றைப் பேசா­மல் யாரும் கடந்து போய்­விட முடி­யாது. நெல்­சன் மண்­டேலா இறந்­த­வு­டன் அடுத்த நாள் முர­சொ­லி­யில் எழு­து­கி­றார்:”கருப்பு நிலா கரைந்­தது!”ஒரே வார்த்தை, “கருப்பு நிலா கரைந்­தது.” எவ்­வ­ளவு பெரிய சோகத்தை மூன்று வார்த்­தை­க­ளிலே சொல்ல முடி­யக்­கூ­டிய அர­சி­யல் ஞானம் கலை­ஞ­ரி­டம் இருந்­தது. இன்று அப்­ப­டிப்­பட்ட தலை­வர்­களை நீங்­கள் அடை­யா­ளம் காட்ட முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா அறி­வா­ல­யம் எழுந்து நிற்­கி­றது; அண்ணா அறி­வா­ல­யத்­தி­னு­டைய கலை­ஞ­ரு­டைய குறும்­ப­டச் செய்­தி­கள் ஒளி­ப­ரப்­பா­கின்­றன, அனைத்­தும் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.நீங்­கள் கேட்­க­லாம், வட இந்­தி­யா­விலே எத்­த­னையோ தலை­வர்­கள் இருந்­தார்­கள்... ராம் மனோ­கர் லோகியா இருந்­தார்;ஜெயப்­பி­ர­காஷ்நாரா­ய­ணன் இருந்­தார்;நேரு இருந்­தார்;இந்­திரா காந்தி இருந்­தார்; எண்­ணற்ற வட இந்­தி­யத் தலை­வர்­கள் இருந்­தார்­கள். அவர்­க­ளுக்­குப் பின்­னாலே பல கட்­சி­கள் தேசி­யக் கட்­சி­க­ளா­க­வும் இருந்­தன, மாநி­லக் கட்­சி­க­ளா­க­வும் இருந்­தன. அங்­கெல்­லாம் வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா? அந்­தத் தலை­வ­ரு­டைய உழைப்பு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா? ஆனால் கலை­ஞர் தான் எண்­ணி­ய­தைச் செய்­தார், செய்­ததை எல்­லாம் வர­லா­றாக ஆவ­ணப்­ப­டுத்­தி­னார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அசா­தா­ர­ண­மான உழைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை­யில் 5 மணிக்கு விழிப்­பில் தொடங்கி, யோகா போன்ற உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்து, காலை­யி­லேயே பத்­தி­ரி­கை­க­ளைப் பார்த்­து­விட்டு... அந்­தப் பத்­தி­ரி­கை­க­ளிலே நம் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளைப் பற்­றிய செய்தி வந்­தால், 6 மணிக்கே தொலை­பே­சி­யிலே தொடர்பு கொண்டு, “உன்­னைப் பற்றி இந்­தச் செய்தி வந்­தி­ருக்­கி­றது, உனக்­குத் தெரி­யுமா?” என்று கேட்டு, அந்­தத் தொண்­ட­னை­யும் விழிப்­ப­டை ­யச் செய்து, ஆரோக்­கி­ய­மா­கச் சிந்­திக்க வைத்­த­வர் கலை­ஞர். காலை ஆறு மணிக்கு அச­ரா­மல் தொண்­டர்­க­ளி­டம் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தார் கலை­ஞர்; அந்த உழைப்பு சாதா­ரண உழைப்பா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரவு 8 மணி வரை அறி­வா­ல­யத்­திலே மக்­க­ளை­யும் தொண்­டர்­க­ளை­யும் சந்­தித்­து­விட்டு, 9 மணிக்கு உறங்­கச் செல்­ல­வில்லை; இரவு உணவை உண்­டு­விட்டு, அடுத்த நாள் முர­சொ­லிக் ­குக் கட்­டுரை எழுதி, தொண்­டர்­க­ளுக்­குத் தேவை­யான செய்­தி­க­ளை­யும் அறிக்­கை­க­ளாக எழுதி, விடி­யற்­கா­லம் அவர்­க­ளுக்­குக் கொண்டு சேர்க்­கக்­கூ­டிய அள­விற்கு அய­ரா­மல் உழைத்­துக் கொண்­டி­ருந்­தாரே, அந்த உழைப்­புக்கு ஈடு இணை ஏது? அந்த உழைப்­பு­தான் இன்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆற்­றல்­மிக்க தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய அண்­ணன் தள­பதி முத்து­ வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை உற்­சா­க­மாக இயங்க வைக்­கி­றது. எதிர்­பா­ராத ஒரு தோல்­வி­யைச் சந்­தித்த பின்­னா­லும் துணிச்­ச­லோடு கள­மா­டிக் கொண்­டி­ருக்­கி­றாரே, துணிச்­ச­லோடு தொண்­டர்­க­ளோடு வலம்வந்­து­கொண்­டி­ருக்­கி­றாரே... இந்­தத் தைரி­யத்தை, இந்த அர­சி­யல் துணிச்­சலை எது தந்­தது? பெரி­யா­ரின் சிந்­த­னை­கள் கொடுத்­தது, அண்­ணா­வின் சிந்­தனை­ கள் கொடுத்­தது, கலை­ஞ­ரின் சிந்­த­னை­கள் கொடுத்­தது! தொட­ரோட்­ட­மாக 
இருக்­கக்­கூ­டிய ஒரு திரா­விட இயக்­கத்­தி­னு­டைய எழுச்­சி­யும் வளர்ச்­சி­யும்­தான், இன்று தி.மு.க.வை உயிர் துடிப்­பு­மிக்க ஒரு கட்­சி­யாக இயக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் அடித்­துச் சொல்­வேன், இந்­தி­யா­விலே பல மாநி­லக் கட்­சி­கள் எமர்­ஜென்சி காலத்­திலே உரு­வா­கின; அவை­யெல்­லாம் எமர்­ஜென்சி முடிந்த பின்­னாலே காணா­மல் போயின. இன்­னும் பல மாநி­லக் கட்­சி­கள் இருக்­கின்­றன; அத­னு­டைய தலை­வர்­கள் தத்­து­வங்­க­ளைப் பேசு­கி­றார்­கள். மம்தா பானர்ஜி பேசாத தத்­து­வமா? லாலு­அ­வர்­க­ளு­டைய மகன் தேஜஸ்வி யாதவ் பேசாத தத்­து­வமா? உத்­த­ரப் பிர­தே­சத்­திலே சமாஜ்­வாதி கட்­சி­யி­னு­டைய தலை­வர் முலா­யம் சிங் யாத­வி­னு­டைய மகன் அகி­லேஷ் யாதவ் பேசாத தத்­து­வமா? அவர் பேசு­கி­றார், அர­சி­ய­லைப் பேசு­கி­றார், சமூக நீதி­யைப் பேசு­கி­றார்; நான் சொன்ன தலை­வர்­க­ளும் பேசு­கி­றார்­கள். ஆனால், இரண்­டாம் கட்­டத் தலை­வர்­க­ளுக்கு அந்­தச் சிந்­தனை கடத்­தப்­பட்­டதா? “இல்லை.” ஆனால் தி.மு.க. வில்­தான் தள­பதி என்ன நினைக்கி­ றாரோ, கடைசி நிலைத் தொண்­ட­னும் அதே­போல் நினைக்­கி­றான். தொண்­டர்­களை அர­சி­யல் படுத்­திய இயக்­கம் தி.மு.க., தொண்­டர்­களை ஜன­நா­ய­கப்­ப­டுத்­திய இயக்­கம் தி.மு.க.; அத­னால்­தான் தோல்­வி­க­ளைக் கடந்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">யானை படுத்தாலும் குதிரை உயரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­திலே ஒரு பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் என்­னைக் கேட்­டார்­கள், “பெரிய தோல்­வி­யைத் தி.மு.க. சந்­தித்­து­விட்­டதே, திரா­வி­டக் கட்­சி­க­ளி­னு­டைய எதிர்­கா­லம் என்ன?” என்­றெல்­லாம் கேட்­டார்­கள். நான் சொன்­னேன், “யானை படுத்­தா­லும் குதிரை உய­ரம்; தி.மு.க. தோற்­றா­லும் அதற்­கென்று ஒரு கம்­பீ­ரம் இருக்­கி­றது” என்று சொன்­னேன். இன்­றைய அர­சி­ய­லிலே டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் சூழ்ச்­சி­யா­ளர்­கள் திட்­டம் போடு­கி­றார்­கள், “தி.மு.க.வைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும், அ.தி.மு.கவை பிள­வு­ப­டுத்தி அழிக்க வேண்­டும்” என்று சொல்­கி­றார்­கள். நான் சொன்­னேன், இந்­தத் திட்­டத்­தோடு ஏற்­க­னவே ஒரு முழக்­கத்தை எச். ராஜா முன்­வைத்­தார்; “கழ­கங்­கள் இல்­லாத தமிழ்­நாடு, கவ­லை­கள் இல்­லாத தமிழ்­நாடு” என்­ப­தைத்­தான் சொன்­னார். அப்­போது சொன்­னேன், “நாங்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை; எங்­கள் கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய சிலர் நகர்ந்­தி­ருக்­க­லாம்.ஆனால் எங்­கள் கூட்­டணி அப்­ப­டியே இருக்­கி­றது;உயிர்த்­து­டிப்­போடு இருக்­கி­றது;நாங்­கள் எல்­லாம் இருக்­கின்­றோம். போன­வர்­கள் கூட அடித்த பந்­தைப் போலத் திரும்பி வரு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் உண்டு. அதே நேரத்­தில், அ.தி.மு.கவைப் பந்­தா­டி­யது போல் தி.மு.க.வை உங்­க­ளால் பந்­தாட முடி­யாது” என்று சொன்­னேன். ஏனென்று சொன்­னால், இது ஒரு தத்­துவ இயக்­கம், ஒரு கொள்கை இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மம்தா பானர்­ஜி­யின் மீது நான் மரி­யாதை கொண்­ட­வன், அவ­ரு­டைய எழுச்­சி­யான அர­சி­யலை ரசிக்­கக்­கூ­டி­ய­வன்; ஆனால், தன் தொண்­டர்­களை, நிர்­வா­கி­களை அவர் தத்­து­வ­ம­ய­மாக்கி இருந்­தால், இன்று திரி­ணா­முல் காங்­கி­ரஸ் இப்­போ­தைய சோத­னை­க­ளைச் சந்­தித்­தி­ருக்­காது, இது­தான் உண்மை. ஆனால் தி.மு.க. எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் துணிச்­ச­லோடு கள­மா­டு­கி­றது என்று சொன்­னால், தத்­து­வம் இவர்­களை இயக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது, திரா­வி­டம் இவர்­களை இயக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது இந்த நேரத்­திலே தமிழ்­நாட்­டிலே புதி­தாக ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்;ஆட்­சிக்கு வந்­த­வர்­கள் எப்­படி வந்­தார்­கள்?ஏன் வந்­தார்­கள்? என்­ப­தைப் பற்றி விவா­தங்­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், இந்த ஆட்­சிக்கு வந்­த­வர்­கள், இந்த ஆட்­சியை எவ்­வாறு பார்க்­கி­றார்­கள்? இவர்­களை ஏன் எதிர்க்­கி­றோம்? சொன்­னார்­கள், “அவர்­க­ளும்­தானே மதச்­சார்­பின்மை பேசு­கி­றார்­கள், அவர்­க­ளும்­தானே சமூக நீதி பேசு­கி­றார்­கள்” என்று சொல்­கி­றார்­கள். ஆனால் சமூக நீதி­யும், மதச்­சார்­பின்­மை­யும் காகி­தத்­தில் எழுதி வைத்­தி­ருக்­கக்­கூ­டிய அறிக்­கை­கள் அல்ல; நடை­முறை வாழ்க்­கை­யில் செயல்­ப­டுத்­தக்­கூ­டிய சமூ­க­வி­யல் திட்­டங்­கள்! அந்­தத் திட்­டங்­க­ளைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் துணிச்­ச­லா­கப் பேசு­கி­றது; அந்த அர­சி­யல் திட்­டத்­தோடு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நகர்­கி­றது. “சம­ர­சம் இல்­லா­மல் நாங்­கள் இப்­ப­டித்­தான் இருக்­கி­றோம்” என்று சொல்­கி­றது. இப்­படி வெளிப்­ப­டை­யா­கப் பேசக் ­கூடிய துணிச்­சல் இன்று ஆட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளி­டம் இருக்­கி­றதா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­திலேநகர்­வு­க­ளைப் பார்க்­கி­றோம், எல்­லோ­ருக்­கும் தெரிந்த செய்தி, முஸ்­லிம் பெரு­மக்­கள் பக்­ரீத் பண்­டிகை என்று சொல்­லக்­கூ­டிய ஹஜ் பெரு­நாள் அன்று ஆடு, மாடு, ஒட்­ட­கங்­களை இறை­வ­னுக்­கா­கக் குர்­பானி கொடுப்­பார்­கள். நீதி­மன்ற த்திற்­குச் சென்று திடீ­ரென்று ஒரு தடை உத்­த­ர­வைப் பெற்று, ஒரு சூழ்ச்சி நடை­பெற்று, “அவை­யெல்­லாம் தடுக்­கப்­பட வேண்­டும்” என்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு ­கி­றது. இந்த நேரத்­தில் ஓர் அரசு என்ன செய்­தி­ருக்க வேண்­டும்? அர­சி­யல் சாச­னச் சட்­டம் தந்த உரி­மை­க­ளின் அடிப்­ப­டை­யில், “அவர்­க­ளு­டைய கலாச்­சா­ரத்தை, பண்­பாட்டை, மத நம்­பிக் ­கையை அவர்­கள் பேணு­கி­றார்­கள்” என்­பதை அரசு சொல்லி இருக்க வேண்­டும். ஆனால் அதி­கா­ரி­கள் வீட்­டுக்­குள்ளே இருந்த கால்­ந­டை­களை எல்­லாம் கைப்­பற்­றிச் செல்­லக்­கூ­டிய சூழல் நடந்­ததா, இல்­லையா? நீங்­கள் வணி­கத்­துக்­காக அவ்­வாறு பொது இடங்­க­ளிலே யாரா­வது அத்­து­மீ­றல் செய்­தால் நீங்­கள் தடுக்­க­லாம்; வரு­டத்­திற்கு ஒரு­முறை அவர்­கள் தன்­னு­டைய மத நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் செய்­யக்­கூ­டிய ஒரு நம்­பிக்­கை­யைத் தடுத்து நிறுத்­தக்­கூ­டிய வேலை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, “ஏதோ அதி­கா­ரி­கள் தவறு செய்­து­விட்­டார்­கள்” என்று நாம் நினைக்­க­லாம்; இரண்டு நாட்­க­ளுக்கு அப்­பு­றம் அதே உயர் நீதி­மன்­றத்­திலே அர­சுத் தரப்­பில் வழக்­க­றி­ஞர் சொல்­கி­றார், “நீங்­கள் சொன்ன எல்லா வேலை­யை­யும் சிறப்­பா­கச் செய்து முடித்து ­விட்­டோம்” என்று. அப்­போது என்ன அர்த்­தம் இது? இது என்ன உத்­த­ரப் பிர­தே­சமா?இது என்ன குஜ­ராத்தா? இதை மேல்­மு­றை­யீடு செய்­யக்­கூ­டிய துணிச்­சல் இந்த அர­சுக்கு இல்லை! இந்த அர­சுக்­குச் சிலர் பாது­காப்­பாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்­கள்; நீங்­கள் எந்த முடிவை வேண்­டு­மா­னா­லும் எடுத்­துக்­கொள்­ளுங்­கள், அது உங்­கள் கட்­சி­யி­னு­டைய உள்­வி­வ­கா­ரங்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் நீங்­கள் இருந்­த­த­னால்­தான் உங்­க­ளுக்கு மக்­கள் வாக்­க­ளித்­தார்­கள்; இந்த உண்­மையை நீங்­கள் சொல்­லா­விட்­டா­லும் மன­திலே நிறுத்­திக்­கொள்­ளுங்­கள். அங்கே சென்­றீர்­களே, இது போன்ற தவ­று­களை நீங்­கள் தட்­டிக் கேட்­கி­றீர்­களா? முட்­டுக் கொடுக்­கி­றீர்­கள், மௌனம் காக்­கி­றீர்­கள்; இதைத்­தான் நாங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றோம். இந்த அரா­ஜ­கங்­களை, ஒரு சமூக மக்­க­ளின் மத நம்­பிக்­கை­க­ளைப் பாழ்ப்­ப­டுத்­தக்­கூ­டிய வேலை­கள் நடக்­கின்ற போது, ஒரு முத­ல­மைச்­சர் வேடிக்கை பார்க்­க­லாமா, மௌனம் காக்­க­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வேடிக்கை பார்க்கும் முதல்வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிது புதி­தாக இன்று அர­சி­யல் சந்­தைக்­குச் சரக்­கு­கள் வந்து சேரு­கின்­றன; அவர்­க­ளு­டைய நோக்­கம் என்ன தெரி­யுமா? “தி.மு.க., அண்ணா தி.மு.க.” என்ற அர­சி­யல் நிலை­யைத் தகர்க்க வேண்­டும். “இப்­பொ­ழுது தி.மு.க., தவெக” என்ற நிலையை உரு­வாக்­கி­விட்­டோம் என்று உள்­ளுக்­குள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள். அடுத்து அவர்­க­ளு­டைய திட்­டம் என்ன தெரி­யுமா, கனவு என்ன தெரி­யுமா? அது நடக்­கப்­போ­வ­தில்லை என்­பது வேறு விஷ­யம். தி.மு.க.வை நகர்த்­தி­விட்டு, அந்த இடத்­திலே “த.வெ.க. தங்­க­ளுக்கு விருப்ப­ முள்ள ஒரு­வர்” என்று மாற்ற நினைக்­கி­றார்­கள். எல்­லோ­ரும் பெரு­சா­கப் பேசு­கி­றார்­கள்,அண்­ணா­மலை அவர்­கள் கட்சி ஆரம்­பிக்­கப் போகி­றார், அவர் பின்­னாலே ஒரு பெரிய இளை­ஞர் கூட்­டம் புறப்­ப­டப் போகி­றது, அவர் மாற்று அர­சி­ய­லைச் செய்­யப் போகி­றார் என்று; அது ஏமாற்று அர­சி­ய­லாக இருக்­கப் போகி­றது என்­பதை மக்­கள் மறந்­து­வி­டக் கூடாது. அண்­ணா­மலை என்ன மோடி­யி­னு­டைய தவ­றான அர­சி­ய­லைக் கண்­டித்­து­விட்டு தனி­யா­கக் கட்சி ஆரம்­பிக்­கி­றாரா? அண்­ணா­மலை என்ன இந்தி எதிர்ப்பை, இந்தி ஆதிக்­கத் திணிப்பை எதிர்த்­து­விட்டு கட்சி ஆரம்­பிக்­கி­றாரா? அண்­ணா­மலை என்ன நீட் தேர்வை ரத்து செய்ய வேண்­டும் என்­ற­கோ­ரிக்­கையை முழங்­கி­விட்டு அர­சி­யல் கட்சி ஆரம்­பிக்­கி­றாரா? அண்­ணா­மலை என்ன மாநில உரி­மை­க­ளைக் காக்க வேண்­டும் என்று குரல் கொடுத்­து­விட்டு கட்சி ஆரம்­பிக்­கி­றாரா? அமித் ஷாவு­டன் பேசி முடி­வெ­டுத்­து­விட்டு, “இனி பா.ஜ.க. தமிழ்­நாட்­டில் நிலைக்­காது; பா.ஜ.க.வினு­டைய நிலை தேய்­நிலை, எனவே தமிழ்­நாட்டு அர­சி­ய­லுக்கு ஏற்­பத் தங்­க­ளு­டையகொள்கை­ களை அமல்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு கட்சி வேண்­டும்” என்று, ஒரு  கட்­சி­யைத்­</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>