<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,70,960,1503" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 12 2026 12:46:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260613T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13062026-CBE-06" position.sequence="06" ex-ref="13062026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="92">தமிழ்நாட்டிலே  ஒரு பொற்கால ஆட்சி என்றால் – கடந்த ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சிதான்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup719730_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Nagaikanthavad_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerargal2_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொடங்­கு­வ­தற்­கான ரக­சி­யச் செயல்­திட்­டத்­தோடு களம் இறங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­களே தெளி­வாக இருங்­கள்! மகா­ராஷ்­டி­ரா­வில் பார­திய ஜனதா கட்சி ஆரம்­பத்­திலே சோபிக்­க­வில்லை. மண் மணம் வீசக்­கூ­டிய,மராட்­டிய உணர்வு பொங்கி வரக்­கூ­டிய அர­சி­யல் தான் மராட்­டிய மண்­ணிலே நிலை­நி­றுத்­தும் என்று கருதி, அங்கே சிவ­சே­னாவை ஒரு மாநி­லக் கட்­சி­யாக உரு­வாக்­கி­னார்­கள். மகா­ராஷ்­டி­ரா­வில் சிவ­சேனா உரு­வாக்­கி­ய­தற்­குப் பின்­னால் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல். தமிழ்­நாட்­டிலே ஆர்.எஸ்.எஸ். எடு­ப­டாது என்று சொன்­ன­வு­டன் இந்து முன்­ன­ணி­யைக் கொண்டு வந்­தார்­கள். அது­போ­லத்­தான் பா.ஜ.க. எடு­ப­டாது என்று சொன்­ன­வு­டன், தமிழ்­நாட்­டிலே அண்­ணா­மலை மூல­மாக ஒரு அர­சி­யல் கட்­சியை உரு­வாக்­கத் திட்­ட­மி­டு­கி­றார்­கள். இந்த நுட்­ப­மான அர­சி­ய­லைத் தமிழ்­நாட்டு மக்­கள் கண்­டு­ணர வேண்­டும்; இந்த ஆபத்­தான அர­சி­ய­லில் நாம் அக்­கறை கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைப் பாது­காக்க வேண்­டும் என்று சொன்­னால், டெல்­லி­யின் இந்­தப்­ப­டை­யெ­டுப்பு அர­சி­யலை நாம் முறி­ய­டிக்க வேண்­டும். தமிழ்­நாட்­டு­டைய வாழ்­வு­ரி­மை­கள் காக்­கப்­பட வேண்­டும் என்று சொன்­னால், திரா­விட இயக்க அர­சி­யல் பாது­காக்­கப்­பட வேண்­டும். திரா­விட இயக்க அர­சி­ய­லி­னால் தான் வட இந்­தி­யா­வு­டைய அர­சி­யல் படை­யெ­டுப்­பைத் தடுத்து நிறுத்த முடி­யும் என்­பதை நான் ஆணித்­த­ர­மாக வாதிட்­டுச் சொல்­கின்­றேன். தமிழ்­நாட்­டு­டைய இன­மான உணர்வு காக்­கப்­பட வேண்­டும் என்று சொன்­னால், தமிழ்­நாட்­டு­டைய சமூ­க­நீ­திக் கோட்­பா­டு­கள், மர­பு­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று சொன்­னால், தமிழ்­நாட்­டு­டைய எதிர்­கா­லம் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று சொன்­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பாது­காக்­கப்­பட வேண்­டும், வலி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனென்று சொன்­னால், நான் தி.மு.க.காரன் அல்ல; அந்தக் கூட்­ட­ணி­ யில் இடம் பெற்­றி­ருக்­கின்­றேன். ஆனால் தமிழ்­நாட்­டி­னு­டைய அர­சி­ய­லைப் பாது­காக்க வேண்­டும் என்று சொன்­னால், பெரி­யார், அண்ணா, கலை­ஞர் சித்­தாந்­தங்­க­ளைக் காக்­கக்­கூ­டிய ஒரே கட்­சி­யாக தி.மு.க.தான் இருக்­கி­றது. திரா­வி­டத்­தின் பெய­ரைப் பல கட்­சி­கள் வைத்­தி­ருக்­கி­றார்­கள்; ஆனால் அவர்­க­ளெல்­லாம் தி.மு.க. அள­விற்­குத் திரா­வி­டத்தை அழுத்­த­மா­கப் பேசு­கி­றார்­களா? யோசித்­துப்­பா­ருங்­கள். என­வே­தான், நுனிப்­புல் மேயும் அர­சி­ய­லி­லி­ருந்து வள­ரும் தலை­மு­றை­யைக் காக்க வேண்­டிய கட­மைக்கு நாம் வந்­தி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கவர்ச்சி அர­சி­ய­லின் ஆபத்­தும் தத்­துவ எழுச்­சி­யின் தேவை­யும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­பெல்­லாம் பெற்­றோர்­கள் பேச்­சைப் பிள்­ளை­கள் கேட்­பார்­கள்; இன்­றைக்­குப் பிள்­ளை­கள் பேச்­சைக் கேட்­டுத் தவறு செய்­து­விட்­டோம் என்று சொல்­லக்­கூ­டிய ஓர் அர­சி­யல் அவ­லத்­திற்­குத் தமிழ்­நாடு தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. அமி­தாப் பச்­சன் உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்; எங்­கே­யா­வது உத்­த­ரப் பிர­தே­சக்­கா­ரன் அமி­தாப் பச்­ச­னைப் பிர­த­ம­ராக்க வேண்­டும் என்று சொல்­கி­றானா? பம்­பா­யில் எந்த மராட்­டி­ய­ரா­வது அமீர்­கான் முத­ல­மைச்­சர் ஆக வேண்­டும், ஷாருக்­கான் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஆக வேண்­டும் என்று சொல்­கி­றானா? கேர­ளா­வில் யாரா­வது மம்­மூட்டி முத­ல­மைச்­சர் ஆக வேண்­டும், மோகன்­லால் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக வேண்­டும் என்று சொல்­கி­றானா? ஆனால், முற்­போக்கு பேசக்­கூ­டிய மாநி­லத்­தில், கவர்ச்சி அர­சி­ய­லிலே ஒரு தலை­முறை தவறு செய்­து­விட்­டதே! அதை நினைத்­துத் தூங்க முடி­ய­வில்லை. இதற்­குப் பெயர் என்ன புரட்­சியா? “புரட்­சி­கர வாழ்த்­துக்­கள்” என்று சொல்­லப் போகி­றார்­களே, இதில் என்ன புரட்சி? தத்­து­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஓர் எழுச்சி ஏற்­பட்டு, அது புரட்­சி­யாக மாறி­னால் அதை நாம் வர­வேற்­போம்; ஆனால் எந்­தத் தத்­துவ எழுச்­சி­யும் ஏற்­ப­ட­வில்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேக­தாது விஷ­யத்­தில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன என்­ப­தைச் சொல்ல முடி­யுமா? நாளைக்கே முல்­லைப் பெரி­யாறு விவ­கா­ரம் வந்­தால், உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன என்­பதை நீங்­கள் சொல்ல முடி­யுமா? நீட் தேர்­வில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன என்­ப­தைத் தெளி­வா­கச் சொல்ல முடி­யுமா? மேடை­க­ளில் வீர­வ­ச­னம் பேசு­கி­றீர்­கள், மேடை­யில் பாய்ந்து பிராண்­டு­கி­றீர்­கள்; ஆனால் சட்­ட­மன்­றத்­தில் பூனைக்­குட்டி மாதிரி அமை­தி­யாக உட்­கார்ந்­தி­ருக்­கி­றீர்­கள்! ஆனால், சட்­ட­மன்­ற­மாக இருந்­தா­லும் மக்­கள்­மன்­ற­மாக இருந்­தா­லும், திரா­விட முன்­னேற் ­றக் கழ­கத்­தி­னு­டைய தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் புள்­ளி­மா ­னா­கத் துள்­ளிக் குதித்து மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உண்­மை­யி­லேயே பாராட்­டு­கி­றேன்; திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தலை­வர், அத­னு­டைய இளை­ஞ­ர­ணித் தலை­வர், அத­னு­டைய முன்­னணி நிர்­வா­கி­கள் அனை­வ­ரை­யும் பாராட்­டு­கின்­றேன். ஏனென்று சொன்­னால், வெற்றி தோல்­வி­களை ஒரு பொருட்­டா­கக் கரு­தா­மல், “மக்­க­ளுக்­காக உழைப்­போம், போரா­டு­வோம்” என்ற நம்­பிக்­கை­யிலே நீங்­கள் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றீர்­களே, அந்­தச் சித்­தாந்த எழுச்சி உண்­மை­யி­லேயே என்னை மகிழ்ச்­சி­ய­டைய வைக்­கின்­றது. இந்­தச் சித்­தாந்த எழுச்சி தேசிய அள­வில் இல்­லா­மல் போய்­விட்­டது. ‘... பெல்ட்’ என்று சொல்­லக்­கூ­டிய இந்தி பேசக்­கூ­டிய மாநி­லங்­க­ளிலே இந்த அர­சி­யல் தெளி­வுத்­தன்மை இல்­லா­மல் போன­த­னால் தான், இந்த நாடு மிகப்­பெ­ரிய சிக்­க­லிலே தவித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாட­லின் உண்­மை­யான ஜன­நா­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்­குப் பேசு­கி­றார்­கள், சாதி பார்க்­க­வில்லை, மதம் பார்க்­க­வில்லை, மக்­கள் ஜோசப் விஜய்க்கு வாக்­க­ளித்­து­விட்­டார்­கள் என்று சொல்லி... சாதி பார்க்­க­வில்லை, மதம் பார்க்­க­வில்லை, ஜோசப் விஜய் என்­ப­வரை மக்­கள் வாக்­க­ளித்­துத் தேர்வு செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், திரா­விட இயக்­கம் தமிழ்­நாட்­டைச் சிந்­திக்க வைத்­த­தன் விளை­வா­கத்­தான் அது நடந்­தி­ருக்­கி­றது. அது­வும் திரா­விட இயக்­கத்­தி­னு­டைய ஒரு சாதனை என்­பதை நீங்­கள் ஒப்­புக்­கொள்ள வேண்­டும். இந்த மன­நிலை மாற்­றத்­தைக் கொண்டு வந்­தது யார்? இந்­தத் திரா­விட இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் ‘திரா­விட மாடல் அரசு’ என்­கிற ஒரு சொல்­லாட்­சியை நாம் ஐந்­தாண்டு காலம் பயன்­ப­டுத்தி வந்­தோம். நான் யோசித்­துப்­பார்த்­தேன், திரா­விட மாடல் என்­றால் என்ன? அதிலே ஜன­நா­ய­கம் இருக்­கி­றது. தி.மு.க.வுடைய தலை­வ­ருக்கு என்று ஒரு கொள்கை இருக்­கி­றது, அண்­ணன் சேகர் பாபு அவர்­க­ளுக்கு என்று ஒரு கொள்கை இருக்­கி ­றது, நண்­பர் தாய­கம் கவிக்­கும், தமி­ழன் பிர­சன்­னா­வுக்­கும் ஒரு கொள்கை இருக்­கி­றது; ஆனால் ஆட்சி அதி­கா­ரம் என்று வந்த பிறகு, தங்­க­ளு­டைய நேரிய கொள்­கை­களை யாருக்­கும் பாதிப்­பில்­லா­மல் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­களே, அது­தான் திரா­விட மாடல் அரசு, ...ஜன­நா­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே அமைச்­சர் அண்­ணன் சேகர்­பாபு அமர்ந்­தி­ருக்­கி­றார்; உண்­மை­யி­லேயே உங்­களை நான் பாராட்­டு­கி­றேன். இது­வரை எந்த ஆட்­சி­யும் அர­சும் செய்­யாத அள­விற்கு, இந்து சமய அற­நி­லை­யத் துறைக்­குச் சொந்­த­மான 8 ஆயி­ரம்­கோடி ரூபாய் மதிப்­பி­லான சொத்­துக்­களை மீட்­டெ­டுத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­களே! பார­திய ஜனதா கட்சி ஆட்­சி­யில் இருந்­தி­ருந்­தா­லோ­அல்­லது அவர்­க­ளைச் சார்ந்­த­வர்­கள் இருந்­தி­ருந்­தாலோ இத்­த­கைய சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்க முடி­யுமா? “யாருக்­கும் எதி­ரா­ன­வர்­கள் அல்ல, எல்­லோ­ருக்­கும் உங்­க­ளு­டைய தேவை­களை நிறை­வேற்­றக் கூடி­ய­வர்­க­ளாக இருப்­போம்” என்­பதை அந்­தத் திரா­விட மாடல் அரசு சொன்­னது. 8 ஆயி­ரம்­கோடி ரூபாய் சொத்து சாதா­ரண சொத்தா? அதே­போன்று 4,500-க்கும் அதி­க­மான கோயில்­க­ளுக்­குக் கும்­பா­பி­ஷே­கம் நடத்­தி­யி­ருக்­கி­றார். மத நம்­பிக்கை உள்­ள­வர்­கள் என்று சொல்­லக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­கள் செய்­யாத சாத­னை­களை எல்­லாம் திரா­விட மாடல் அரசு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்­தச் சமூ­கத்­திற்கு எதி­ரா­க­வும் அவர்­கள் செயல்­பட்­டார்­களா? சமூக நீதியை நிலை­நாட்­டி­னார்­கள், ஆட்­சி­யிலே மனி­த­நே­யத்தை நிலை­ நாட்­டி­னார்­கள். இந்து அற­நி­லை­யத் துறை மிகச் சிறப்­பா­கச் செயல்­பட்­டது என்று சொன்­னால், கடந்த ஆட்­சி­யில் தான் என்­று­நான் அடித்­துச் சொல்­வேன். இந்­தி­யா­விலே ஒவ்­வொரு ஆட்­சி­யி­லும் ஒவ்­வொரு கால­கட்­டத்­தைப் பொற்­கா­லம் என்று சொல்­வார்­கள், இது சோழர்­க­ளின் பொற்­கா­லம், இது குப்­தர்­க­ளின் பொற்­கா­லம், இது விஜ­ய­ந­க­ரப் பேர­ர­சின் பொற்­கா­லம், இது முக­லா­யர்­க­ளின் பொற்­கா­லம் என்று சொல்­வார்­கள். தமிழ்­நாட்­டிலே சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னாலே ஒரு பொற்­கால ஆட்சி நடந்­தது என்று சொன்­னால், அது கடந்த ஐந்து ஆண்­டு­கள் நடை­பெற்ற திரா­விட மாடல் அர­சின் ஆட்­சி­தான் என்று சம­ர­ச­மின்றி சொல்­வேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எவ்­வ­ளவு திட்­டங்­கள், எவ்­வ­ளவு நுட்­ப­மான பெயர்­க­ளிலே எளிய மக்­க­ளு­டைய முன்­னேற்­றங்­க­ளுக்­கான வசதி வாய்ப்­பு­க­ளைச் செய்து கொடுத்­தார்­கள்! ஏழை எளிய மக்­க­ளு­டைய உள்­ளங்­க­ளில் எவ்­வ­ளவு பெரிய மகிழ்ச்சி! கல்­விக்­காக அவர்­கள் அளித்த திட்­டங்­கள் என்ன? மக­ளி­ரி­னு­டைய பொரு­ளா­தா­ரத்தை ‘விடி­யல் பயண’ இல­வ­சப் பேருந்­துத் திட்­டம் எந்த அள­விற்­குச் சேமித்­துக் கொடுத்­தது? மக­ளிர் உரி­மைத் தொகை­யி­னு­டைய வர­வின் மூல­மாக எத்­தனை குடும்­பங்­கள் மகிழ்ச்­சி­யாக இருந்­தன என்­பதை நினைத்­துப் பார்க்­கி­றோம். அப்­ப­டிப்­பட்ட சாத­னை­கள் செய்த ஓர் ஆட்­சிக்கு மக்­கள் தோல்­வி­யைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். பார்த்­துப் பார்த்­துத் தன் குடும்­பத்­துப் பிள்­ளை­களை எப்­படி வளர்த்து ஆளாக்கி, அவ­ரு­டைய முன்­னேற்­றத்­திற்கு ஒரு தந்­தை­யாக இருந்துஎன்­ன­வெல்­லாம் செய்­வாரோ, அதே­போன்று கொளத்­தூர் தொகு­திக்கு மாறி மாறி உழைத்து உழைத்­துச் செய்­தார், அங்கு தோல்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சர்ச்­சி­லின் வர­லா­றும், தள­ப­தி­யின் உன்­ன­தப் பண்­பும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் கவ­லைப்­ப­டக் கூடாது; வர­லாற்­றைப் படித்­த­வர்­கள் கவ­லைப்­பட மாட்­டார்­கள். இரண்­டாம் உல­கப்­போர் நடை­பெற்ற போது, ஜெர்­ம­னி­யு­டைய போர் விமா­னங்­க­ளும், கப்­பல்­க­ளும் இங்­கி­லாந்­தைச் சுற்றி வந்­தன. போரிலே ஹிட்­லர் வெற்றி பெறப் போகி­றார் என்று சொன்­ன­வு­டன், இங்கே சென்­னை­யில் இருக்­கக்­கூ­டிய சில பேர்... (யார் என்று நான் சொன்­னால் நன்­றாக இருக்­காது; அதை அண்­ணன் சேகர்­பா­புவோ அல்­லது தமி­ழன் பிர­சன்­னாவோ, தாய­கம்கவியோ சொல்­ல­லாம்) “இனி ஆங்­கி­லம் தேறாது, ஜெர்­மன் மொழி­யைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்” என்று சொல்லி, ஜெர்­மன் ஹாலைச் சென்­னை­யிலே தொடங்­கி­ய­வர்­கள் யார் என்­பது நமக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த நேரத்­தில் இங்­கி­லாந்து மக்­க­ளு­டைய நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­றும் வித­மாக, அவ­ரு­டைய பிர­த­ம­ராக இருந்த வின்ஸ்­டன் சர்ச்­சில் சிறப்­பா­கச் செயல்­பட்டு அந்­தப் போரிலே இங்­கி­லாந்­திற்கு வெற்­றி­யைத் தேடித் தந்­தார். வர­லாறு காணாத வெற்­றியை ஜெர்­ம­னிக்கு எதி­ரான அந்­தப் போரிலே வின்ஸ்­டன் சர்ச்­சில் பெற்­றுக் கொடுத்­தார்.அடுத்து வந்த தேர்­த­லிலே, அவ்­வ­ளவு பெரிய வெற்­றி­யைப் பெற்­றுக் கொடுத்த வின்ஸ்­டன் சர்ச்­சிலை இங்­கி­லாந்து மக்­கள் தேர்­த­லிலே தோற்­க­டித்­தார்­கள்! இது­தான் ஜன­நா­ய­கம். இரண்­டாம் உல­கப்­போ­ரிலே நாட்­டைக் காத்த ஒரு தலை­வ­னுக்கே தோல்­வி­யைக் கொடுத்த வர­லாறு இங்­கி­லாந்­திலே உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­போ­லத்­தான், மாபெ­ரும் சிறப்­பான ஆட்­சியை நடத்­திய நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆற்­றல்­மிகு தலை­வர்  தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் அங்கே ஒரு தோல்­வி­யைச் சந்­தித்­தி­ருக்­க­லாம்; ஆனால் உல­க­மெங்­கும் வாழக்­கூ­டிய தமி­ழ­ரு­டைய உள்­ளத்­திலே மாபெ­ரும் வெற்­றி­யைச் சம்­பா­தித்­தி­ருக்­கி­றார்! எனக்கு என்ன ஒரு பெரிய ஆச்­ச­ரி­யம் என்­றால், தன்­னு­டைய தொண்­டர்­கள் கலங்­கி­வி­டக் கூடாது என்று அன்று மாலையே அறி­வா­ல­யத்­திற்கு வரு­கி­றார்; “ஓய்­வெ­டுத்­து­வி­டக் கூடாது, நம்­மு­டைய தொண்­டர்­கள் துவண்­டு­வி­டக் கூடாது” என்று சொல்லி அடுத்த நாளே தொகு­திக்கு வரு­கி­றார். அவ்­வாறு வந்த இடத்­தில் எங்­கா­வது வசை­பா­டி­னாரா? ஆற்­றா­மையை வெளிப்­ப­டுத்­தி­னாரா? அது­தான் ஒரு தலை­வ­னுக்­கான தகுதி! அது­தான் ஒரு தலை­வ­ருக்­கான உய­ரிய பண்பு! மக்­க­ளைச் சந்­திக்­கி­றார், தான் செய்த சாத­னை­க­ளைச் சொல்­கி­றார்; இவை­யெல்­லாம் எங்­க­ளு­டைய ஆட்­சி­யிலே நடை­பெற்­றது என்று சொல்லி, “மீண்­டும் மீண்­டும் மக்­க­ளைத் தேடியே நான் வரு­வேன்” என்­பதை நிரூ­பித்­து­விட்­டுச் சென்­றார். அது­தான் தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். வேறொரு தலை­வ­ருக்கு இந்­தத் தோல்வி ஏற்­பட்­டி­ருந்­தால், ஒரு வாரம் அவர்­கள் வீட்டை விட்டு வெளியே வந்­தி­ருக்க மாட்­டார்­கள்; ஆனால் வெளியே வந்து மக்­க­ளைச் சந்­தித்து, உற்­சா­க­மூட்டி, இப்­போது வரை மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சிதம்­ப­ரத்­தின் வெற்­றி­யும் தள­ப­தி­யின் சுய­ம­ரி­யாதை உணர்­வும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனக்கு இன்­னொரு ஆச்­ச­ரி­யம்... நான் சிதம்­ப­ரத்­திலே ஒரு வெற்றி பெற்று வரு­கி­றேன். என்­னு­டைய வெற்றி என்­பது, அண்­ணன் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் அவர்­கள், தள­பதி அவர்­க­ளு­டைய உத்­த­ரவை ஏற்­றுச் சிறப்­பாக எனக்­கா­கப் பணி­யாற்­றி­னார். இந்தி எதிர்ப்­புப் போராட்­டக் களத்­தைக் கூர்­தீட்­டிய பூமி எது என்று சொன்­னால், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக வளா­கம்! அங்கு தமி­முன் அன்­சாரி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வெற்றி பெற்­றான் என்று சொன்­னால், இந்தி எதிர்ப்­புப் போராட்­டத் தியா­கி­க­ளுக்­குக் கிடைத்த வெற்­றி­யா­கத்­தான் அதைக் கரு­து­கின்­றேன். 25 ஆண்­டு­கா­லம் எதிர் முகா­மில் இருந்த தொகுதி அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த மகிழ்ச்­சி­யோடு தள­பதி அவர்­க­ளைச் சந்­திக்க வரு­கி­றேன்; ஆனால் நான் மகிழ்ச்­சி­யாக இல்லை. அவ­ரி­டமே சொன்­னேன், அப்­போ­தான் சொன்­னேன், “அண்ணே, நான் இரண்டு தொகுதி கேட்­டேன், ஒரு தொகுதி கட்­சிக்­குத் தந்­தீர்­கள்; நான் வெற்றி பெற்று வந்­து­விட்­டேன். நான் ராஜி­னாமா செய்­கி­றேன், நீங்­கள் அங்கே நின்று போட்­டி­யி­டுங்­கள்” என்று சொன்­னேன். உட­ன­டி­யாக அந்­தப் பெருந்­தன்மை... “அந்த வார்த்­தையை நீங்­கள் சொல்­லக் கூடாது” என்­றார். ஒரு உன்­ன­த­மான, உயர்­வான பண்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன் பிறகு நிறைய உரை­யா­டி­னோம். அந்­தச் சம­யத்­தில் ஒரு காட்சி... அவர் மீது எனக்கு இன்­னும் மரி­யாதை கூடி­விட்­டது. அந்த வீட்­டில் நிற்­கி­றேன்; பல தொண்­டர்­கள் வரி­சை­யாக வரு­கி­றார்­கள். அண்­ணன் கோவி. செழி­யன் அவர்­கள் வரு­கி­றார்; தகுதி வாய்ந்த ஒரு­வ­ரைத் தகுதி வாய்ந்த பொறுப்­புக்கு அமர்த்­தி­ய­வர் தள­பதி. அந்த வீட்­டிலே பல­ரும் வருகை தந்து தள­பதி அவர்­க­ளைச் சந்­தித்­து­விட்டு, கை குலுக்­கி­விட்டு, தங்­க­ளு­டையமனக் குமு­றல்­க­ளைச் சொல்­லி­விட்­டுச் செல்­கி­றார்­கள்; நான் எல்­லா­வற்­றை­யும் கூர்ந்து கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். அந்த நேரத்­தில் ஒரு தொண்­டர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு, நம்­மு­டைய அண்­ணன் முன்­னாள் முதல்­வர் தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளு­டைய காலிலே விழப்­போ­கி­ றார்; கோபத்­தோடு அதைத் தடுத்த அண்­ணன் தள­பதி ஸ்டாலின் அவர்­கள், “காலில் எல்­லாம் விழக்­கூ­டாது” என்று சொல்லி, சுய­ம­ரி­ யாதை உணர்­வைப் பின்­பற்­றித் தொண்­டர்­க­ளுக்­கும் அந்­தச் சுய­ம­ரி­யா­தையை அந்த நேரத்­தி­லும் எடுத்­துச் சொன்­னாரே, நான் உண்­மை­யி­லேயே மகிழ்ச்­சி­ய­டைந்­தேன்! பல பேர்­பே­சு­வார்­கள், ஆனால் அறைக்­குள்ளே சம­ர­சங்­க­ளைச் செய்து கொள்­வார்­கள். அந்த இடத்­தி­லும்­கூ­டத் தன் தொண்­டன் தன் காலிலே விழக்­கூ­டாது என்று தடுத்து, சுய­ம­ரி­யா­தையை ஊட்­டிய ஒரு தலை­வ­ரா­கத் தள­பதி அவர்­கள் நிற்­கி­றார்; அத­னால்­தான் நாம் யாரும் கவ­லைப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் வாக்கு வங்­கி­யும் சிறு­ பான்­மை­யி­ன­ரின் அர­ணும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது ஆட்­சிக்கு வந்­தி­ருப்­ப­வர்­கள் ஒரு வகை­யான மிதப்­பில் இருக்­கி­றார்­கள்; யாரை­யும் அவ்­வ­ளவு எளி­தா­கச் சந்­திப்­பது இல்லை. மிகப்­பெ­ரிய தலை­வர்­க­ளா­கத் தங்­க­ளைக் காட்­டிக் கொண்­ட­வர்­கள் எல்­லாம், இரண்­டாம் நிலைத் தலை­வர்­க­ளுக்கு முன்­னால் ­தான் துண்­டு­போட்டு சேரக்­கூ­டிய நிலை­யில்­தான், அவர்­க­ளு­டைய ஆணவ அர­சி­யல் இன்­றைக்கு இருந்து கொண்­டி­ருக்­கி­றது. அத­னால் தமிழ்­நாட்டு மக்­கள் மிகுந்த நம்­பிக்­கை­யோடு இருக்­கி­றார்­கள், காலம் நமக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றது. தத்­துவ அர­சி­யலை முன்­னெ ­டுக்­கக்­கூ­டிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கையில் மீண்­டும் ஆட்­சியை ஒப்­ப­டைக்­கத் தமிழ்­நாடு காத்­தி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிகழ்­கா­லச் சோத­னை­கள் கடந்து போகும். “இது­வும் கடந்து போகும்” என்­பார்­களே, அதே­போன்று இந்த நாட்­களை நாம் கடந்து போவோம். திரா­விட மாடல் ஆட்சி ஏற்­ப­டுத்­திய அதே சாத­னை­களை மீண்­டும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்லி, மீண்­டும் ஒரு திரா­விட மாடல் அரசை அமைக்­கும் வரை உற்­சா­க­மா­கப் பணி­யாற்ற நாம் எல்­லோ­ரும் தயா­ரா­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளு­டைய மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யிலே என்­றும் தொட­ரும் என்று கூறிக்­கொண்டு... ஒரு சிலர் நன்றி மறந்து போயி­ருக்­கி­றார்­கள்; போகட்­டும். ஆனால், அந்த நேரத்­தி­லெல்­லாம் தள­பதி அவர்­கள் மேடை­யில் பார்க்­கும்­போது முகத்­தை­யெல்­லாம் தட­விக் கொடுத்­தார்­கள். ரொம்­பக் கொண்­டா­டி­னார்­கள். “அண்­ணன், அண்­ணன்” என்­றார்­கள். ‘தகை­சால் தமி­ழர்’ என்ற விருதை பெரி­ய­வர் காதர் மொகி­தீன் அவர்­க­ளுக்கு கொடுத்­தார். “அண்­ணன் அண்­ணன்” என்­று­தான் சொல்­லு­வார். எங்­க­ளைப் போன்ற இளை­ ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும், பெண்­க­ளை­யும் கூடத் தள­பதி அவர்­கள் அடுத்த நிலை­யிலேவைத்­து­விட்டு, அவர்­க­ளைக் கொண்­டா­டி­னார். ஆனால் என்ன செய்­கி­றார்­கள்? கூட்­டணி மாறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் கூட்­டணி மாறு­வது உங்­கள் உரிமை; தள­பதி அவர்­களே சொல்­லி­விட்­டார்­களே, “ஒவ்­வொரு கட்­சி­யும் அவ­ர­வர் விருப்­பத்­தின்­படி ஜன­நா­யக அடிப்­ப­டை­யில் முடி­வெ­டுத்­துக் கொள்­ள­லாம்” என்று சொல்­லி­விட்­டார்.யாரை­யும்கட்­டிப்­போ­ட­வில்லை. ஆனால் பிரிந்து போகும்­போது கூட நண்­பர்­க­ளாக நீங்­கள் பிரிந்து போயி­ருக்க வேண்­டும்; பழைய வர­லா­று­க­ளை­யும் எதிர்­கா­லத்­தை­யும் மன­திலே கொண்டு நீங்­கள் யோசித்­தி­ருக்க வேண்­டும். ஆனால், “எங்­க­ளால்­தான் நீங்­கள் ஜெயித்­தீர்­கள்” என்று சொன்­னீர்­களே... உங்­க­ளு­டைய முஸ்­லிம் லீக் கட்­சி­யி­னு­டையவாக்­கு­கள் வேறு, முஸ்­லிம் சமு­தா­யத்­தின்வாக்­கு­கள் வேறு என்­பதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­த­லிலே தமிழ்­நாடு எங்­கும் பார்க்­கின்­றோம்; நீங்­கள் மண்­ண­டி­யிலே எடுத்­துப் பாருங்­கள்... புள்­ளி ­வி­வ­ரம், சரா­ச­ரி­யாக 70 முதல் 90 சத­வீ­தம் முஸ்­லிம்­க­ளு­டைய வாக்­கு­கள் தி.மு.க. தலை­மை­யி­லா­ன­கூட்­ட­ணிக்­குத் தான் விழுந்­தி­ருக்­கி­றது. ஓரிரு இடங்­க­ளில் அத­னு­டைய எண்­ணிக்கை முன்­பின் இருக்­க­லாம்; ஆனால் எந்த இடத்­தி­லும் 70 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மா­கத்­தான் தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கு வாக்­கு­கள் விழுந்­தி­ருக்­கி­றது. பல இடங்­க­ளிலே 95 சத­வீத வாக்­கு­கள், மொத்­த­மாக முஸ்­லிம் சமு­தா­யத்­தி­னு­டைய வாக்­கு­கள் இங்கு விழுந்­தி­ருக்­கி­றது. ஏன் தெரி­யுமா? முஸ்­லிம்­கள், சிறு­பான்மை மக்­கள் நம்­பு­கி­றார்­கள்; என்­ன­வென்று சொன்­னால், வட இந்­தியா முழுக்­கக் கல­வ­ரக் காடு­க­ளாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது, வகுப்­பு­வாத சக்­தி­கள், மத­வாத சக்­தி­கள் தலை­வி­ரித்து ஆடு­கி­றார்­கள், இந்த நேரத்­திலே தமிழ்­நாடு அமை­தி­யாக இருக்க வேண்­டும் என்று சொன்­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வந்­தால் மட்­டும்­தான் அது சாத்­தி­ய­மா­கும் என்று மன­தார உணர்ந்த கார­ணத்­தி­னால்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கெல்­லாம் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் இருந்­ததோ, முஸ்­லிம்­கள் வாழ்ந்த பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய எண்­ணிக்­கையை நீங்­கள் ஆய்வு செய்து பார்த்­தால், பெரும்­பா­லான இடங்­க­ளிலே90 சத­வீ­தம், 95 சத­வீ­தம்­உ­த­ய­சூ­ரி­ய­னுக்­கும், அந்­தக் கூட்­ட­ ணிக்­கும் தான் விழுந்­தி­ருக்­கி­றது. சிறு­பான்மை மக்­கள் தங்­க­ளு­டைய அன்­பிற்­கி­னிய ஒரு நண்­ப­ராக, அண்­ண­னா­கத் தள­பதி அவர்­க­ளைக் கரு­து­கி­றார்­கள்; திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் ஒரு சமூக நீதி அர­ணா­கக் கரு­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­ விட்­டேன், அர­சி­ய­லுக்­கா­கப் பேசு­வது என்­பது வேறு, கூட்­ட­ணிக்­கா­கப் பேசு­வது என்­பது வேறு. ஆனால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சமூக நீதி, மதச்­சார்­பின்மை விஷ­யத்­திலே அவர்­கள் அர­சி­ய­லுக்­கா­கப் பேசு­வ­தில்லை; சமூ­க­வி­யல் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­கா­கப் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். அத­னால்­தான் இந்­தத் கூட்­ட­ணி­ யில் நாங்­கள் தொடர்­கி­றோம், தொடர்­வோம் என்ற நம்­பிக்­கை­யைக் கூறிக்­கொண்டு...எழுச்­சி­மிக்க இந்­தக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்த அண்­ணன் சேகர்­பாபு அவர்­க­ளுக்­கும், அவ­ரு­டன் இருக்­கக்­கூ­டியதோழர்­க­ளுக்­கும் என்­னு­டைய புரட்­சி­க­ர­மான வாழ்த்­துக்­க­ளைக் கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு அவர் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகில் சித்தர்காடு சந்தைப்பேட்டையில்  ஏற்பட்ட தீ வீபத்தில்  மூன்று வீடுகள் எரிந்து சேதம் ஏற்பட்டது. முற்றிலுமாக தீக்கிரையாகின. இந்த 
தீ விபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினரை மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற தொகுதி   உறுப்பினருமான நிவேதா முருகன் நிதி உதவி மற்றும் அரிசி மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். உடன் மாவட்ட கழக  துணை செயலாளர் எஸ்.செல்வமணி, மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மூவலூர் எம். மூர்த்தி, மயிலாடுதுறை நகர செயலாளர் குண்டாமணி (எ) என். செல்வராஜ்,  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம். கே.மருது  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>