<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 13 2026 03:41:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260613T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13062026-CHN-09" position.sequence="09" ex-ref="13062026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் கடும் உழைப்பே காரணம்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">‘கலைஞர்’ என்ற பெயர் ஒரு சரித்திரம்; எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய   
கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup699301_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="VairamuthuNew_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூன். 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“தமிழ்­நாட்­டில் காணப்­ப­டு­கின்ற 
பசு­மைக்கு – சாலை­க­ளுக்கு தலை­வர் ஸ்டாலின் அவர்­க­ளின் உழைப்பே கார­ணம்” என்­றும் “கலை­ஞர் என்ற பெயர் ஒரு சரித்­தி­ரம்; எதிர்­கா­லத்­திற்­கான வழி­காட்­டு­தல் என்­றும் – சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் 
மாவட்­டச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. முன்­னின்று நடத்­திய  முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்கூட்­டத்­தில் உரை­யாற்­றிய கவிப்­பே­ர­ரசு வைர­முத்து புக­ழா­ரம் 
சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செயல் புயல் சகோ­த­ரர் சேகர்­பாபு அவர்­கள் உங்­க­ளைக் கர­வொலிசெய்­யச் சொன்­னார், நீங்­க­ளும் கர­வொலி செய்­தீர்­கள். அது அவ­ருக்­குப் போத­வில்லை; மீண்­டும் மீண்­டும்“இன்­னும் இன்­னும்” என்று உங்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­தார். இந்­தக் கட்­ட­டத்­தின் செங்­கல் பிதுங்­கு­கிறஅள­விற்கு நீங்­கள் கர­வொலி செய்­தீர்­கள்.அந்­தக் கர­வொலி எல்­லாம் எனக்கு வந்­த­தாக எண்­ணிக்­கொண்­டால், நான் தமிழ் அறி­யா­த­வன் என்று பொருள்! மண்­ணில் சிந்­து­கிற மழை எல்­லாம் தாவ­ரங்­க­ளுக்­குச் சொந்­த­மில்லை, மண்­ணுக்­குச் சொந்­தம்; உங்­கள் கர­வொலி எல்­லாம் கவி­ஞ­னுக்­குச் சொந்­த­மில்லை, கலை­ஞ­ருக்­குச் சொந்­தம்! உங்­கள் கர­வொலி எல்­லாம் கலை­ஞ­ரின் புகழ் பாடு­கின்ற ஒலி­கள்; கலை­ஞரை வாழ்த்­து­கின்ற கர ஒலி­கள்! உங்­க­ளு­டைய ஒலி­கள், தமிழ் மொழி­யின் ஒலியை உயர்த்­திப் பிடிக்­கிற ஆணை­கள் என்று நான் கரு­திக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சேகர்­பாபு அவர்­களே... உங்­களை நான் எப்­படி எடை போடு­வது என்றே எனக்­குத் தெரி­ய­வில்லை. இதோ ஓர் இடை­வே­ளைக்­குப் பிறகு நாங்­கள் உள்ளே வரு­கி­றோம்; அதே வெளிச்­சம் மாற­வில்லை; அதே ‘வாழ்க’ குரல்­கள் ஓய­வில்லை; அதே கர­வொலி தேய வில்லை; அதே உற்­சா­கம் குறைய வில்லை; அதே எழுச்சி மறைய வில்லை! இது சேகர்­பாபு செய்­கிற, இயக்­கத்­துக்­கா­கச் செய்­கிற பெரிய மாயம் என்று நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தோல்வி என்­பது புடம் போடும் தங்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தோல்வி என்ன செய்­யும்? தோல்வி என்­பது மனி­த­னுக்கு வந்­தாக வேண்­டிய ஒரு விஞ்­ஞான அனு­ப­வம். ஆனால், தோல்­வி­யைப் புரிந்து கொள்­கி­ற­வன் ஞானி, துவண்டு போகி­ற­வன் அறி­விலி. தோல்­வி­யைப் புரிந்து கொள்­கிற ஞானி­க­ளாக நாம் இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழுத்­தில் தங்­கம் இருக்­கி­றது; கழுத்­தில் இருந்­தா­லும், அது கழற்றி வைக்­கப்­பட்­டா­லும் தங்­கம் தங்­கம்­தான்! பத­வி­யில் இருந்­தா­லும் இல்லா விட்­டா­லும் சேகர்­பா­பு­வின் செயல் சேகர்­பாபு! கழுத்­தி­லி­ருந்து கழற்­றப்­பட்ட தங்­கம் அட­குக்­குப் போகி­றது என்று கரு­தி­னால் அது பிழை; கழுத்­தி­லி­ருந்து கழற்­றப்­பட்ட தங்­கம் அட­குக்­குப் போக­வில்லை, புடம் போடப் போகி­றது! இன்­னும் மெருகு கூடி, இன்­னும் ஒளி கூடி வரும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... நான் எண்ணி 20 முதல் 22 நிமி­டங்­கள் உங்­க­ளோடு உரை­யாற்ற வேண்­டும் என்று விரும்பி வந்­தி­ருக்­கி­றேன். இந்த 22 நிமி­டங்­க­ளும் உங்­கள் கண்­க­ளும் என் கண்­க­ளும் ஒரே புள்­ளி­யில் சந்­தித்­துக் கொள்­ளட்­டும்; உங்­கள் இத­ய­மும் என் உத­டும் அரு­க­ருகே இருக்­கட்­டும்; உங்­கள் செவி­கள் என்­னு­டைய ஒலி­யோடு கலந்­தி­ருக்­கட்­டும்; உங்­கள் கைத்­தொ­லை­பே­சி­கள் மூடப்­பட்டி ருக்­கட்­டும், காது­கள் திறந்­தி­ருக்­கட்­டும். உங்­க­ளோடு மனம் விட்­டுச் சில செய்­தி­களை உரை­யாட வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">‘கலை­ஞர்’ என்ற சொல்­லின் காந்தசக்தி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... ‘கலை’ என்ற சொல் தமி­ழில் மிகப்­ப­ழை­யது; ‘கலை­ஞன்’ என்ற சொல் தமி­ழில் மிகப்­ப­ழை­யது. அதுவே ‘அன்’ விகுதி அல்­லா­மல் ‘அர்’ விகுதி போட்டு ‘கலை­ஞர்’ என்று சொன்­னா­லும், அந்­தச் சொல் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளா­கத் தமி­ழில், தமிழ் நெடுங்­க­ணக்­கில் கையா­ளப்­பட்டு வந்த சொல். இந்த பழைய சொல்­லுக்கு 20–ஆம் நூற்­றாண்­டில் ஒரு புத்­தம் புதிய மின்­சா­ரத்­தைப் பாய்ச்­சி­ய­வர் கலை­ஞர்! அது­வ­ரைக்­கும் இல்­லாத பொருள், அது­வ­ரைக்­கும் இல்­லாத வேகம், அது­வ­ரைக்­கும் இல்­லாத உய­ரம், அது­வ­ரைக்­கும் ஆளப்­பட்­டி­ராத சொற்­கோவை... ‘கலை­ஞர்’ என்ற தனி­ம­னி­த­னால் அந்­தச் சொல்­லுக்­குப் பெருமை உண்­டா­னது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘கலை’ என்று சொல்­லிப் பாருங்­கள்... அதில் பெரிய எழுச்சி இல்லை; ஒரு பொருள் அவ்­வ­ள­வு­தான். ‘கலை­ஞர்’ என்று சொல்­லிப் பாருங்­கள் – நாத­சு­ரக் கலை­ஞர், இசைப்­பாட்­டுக் கலை­ஞர், வாய்ப்­பாட்­டுக் கலை­ஞர், கல் கலை­ஞர், சொல் கலை­ஞர் என்று கலைக் கலை­ஞர் என்­பது பொதுச்­சொல்­லா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. ஆனால், ‘கலை­ஞர்’ என்­றால் திருக்­கு­வ­ளை­யில் முத்­து­வே­ல­ருக்கு மக­னா­கப் பிறந்த மு. கரு­ணா­நிதி என்ற ஒரு­வரை மட்­டும்­தான் குறிக்­கும் என்று தமிழ்­நாடு பொருள் கொள்­ளப்­பட்ட பிறகு, அந்­தச் சொல்­லுக்கு வந்த அடர்த்தி, ஆண்மை, பொருள், செறிவு, திட்­பம், நுட்­பம் எல்­லாம் அதி­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று கலை­ஞ­ரின் 103–ஆவது பிறந்­த­நா­ளைச் சேகர்­பாபு அவர்­கள் இந்த மன்­றத்­தில் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றார். நீங்­கள் எல்­லாம் நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள், கலை­ஞ­ருக்­குப் புகழ் சேர்க்க வந்­தி­ருக்கி றோம் என்று; அப்­படி நினைத்­தால் அது ஒரு மனப்­பிழை என்று நான் கரு­து­கி­றேன். கலை­ஞ­ருக்­குப் புகழ் சேர்ப்­ப­தற்­காக இந்த விழா இங்கு நிக­ழ­வில்லை; நமக்கு நாமே அவர் பெய­ரைச் சொல்லி எழுச்­சி­யூட்­டிக் கொள்­வ­தற்­காக வந்­தி­ருக்­கி­றோம் என்­ப­து­தான் உண்மை. அவர் பெயர் ஒரு வெற்றி; அவர் பெயர் ஒரு சரித்­தி­ரம்; அவர் பெயர் ஓர் ஆறு­தல்; அவர் பெயர் ஒரு வியூ­கம்; அவர் பெயர் எதிர்­கா­லத் திற்­கான வழி­காட்­டு­தல் என்று கரு­திக்­கொண்­டால், அவரை 
நீங்­கள் புரிந்து கொள்­வது இந்த நேரத்­திற்­குப் பொருத்­த­மாக இருக்­கும் என்று நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ரப்­பர் மரத்­தின் ரணங்­க­ளும் தமிழ்ச் சாதி­யின் நன்­றி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இந்த இயக்­கம் காணாத தோல்­வியா? இயக்­கத் தலை­வர்­கள் காணாத பின்­ன­டைவா? இல்லை. என் நண்­பன் ஒரு­வன் நன்­றா­கச் சொன்­னான், “ரப்­பர் மரத்­திற்கு ரணங்­கள் புதி­தல்ல”. ரப்­பர் மரத்தினுடைய குணமே அது அறி­வா­ளால் கீறப்­ப­டு­வ­து­தான், வெட்­டப்­ப­டு­வ­து­தான்; வெட்­டு­கிற பள்­ளத்­தி­லி­ருந்து ரப்­பர் பால் வழிந்து வந்து பாத்­தி­ரத்­தில் நிறை­யும். ரப்­பர் மரத்தை வெட்­டி­னால்­தான் ரப்­பர் பால்; அந்த ரப்­பர் பால்­தான் நாம் பயன்­ப­டுத்­து­கிற பொருள்­க­ளு­டைய கச்­சாப் பொருள். எனவே, ரப்­பர் மரம் இந்த இயக்­கம்; ரப்­பர் மரத்­திற்கு ரணங்­கள் புதி­தல்ல, அது இருந்­தால் தான் அது பால் வடிக்­கும் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... இந்த நேரத்­தில் என்­னு­டைய ஆதங்­கம் ஒன்றை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன். தி.மு.க. கூடத் தோற்­க­லாம், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தோற்­றி­ருக்­கக் கூடாது! நிலா தேய­லாம், வானம் தேய்ந்­து­வி­டக் கூடாது; காற்­றில் ஈரப்­ப­தம் குறை­ய­லாம், கட­லில் ஈரப்­ப­தம் குறைந்­தி­ருக்­கக்கூடாது! இது­தான் என்­னு­டைய ஆதங்­கம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“நன்மை செய்து தீமை வாங்­கும் இத­யம் கேட்­பேன்” என்று கண்ண தாசன் ஒரு பாட­லில் எழு­தி­யி­ருக்­கி­றார். அந்த இத­யம் எதைக் கேட்­கி­றது? ஓர் இத­யத்­தைக் கேட்­கி­றது; அது எதைத் தாங்­கு­கிற இத­யம்? தீமை­யைத் தாங்­கு­கிற இத­யம். தீமை செய்து தீமை தாங்­கு­கிற இத­யத்­தைக் கவி­ஞன் கேட்­க­வில்லை; நன்மை செய்து தீமை வாங்­கு­கிற இத­யத்­தைக் கவி­ஞன் கேட்­கி­றான். நன்மை செய்­தார், தமிழ்­நாட்­டுக்கு நன்மை செய்­தார், தொண்டு செய்­தார், இரவு பக­லாக உழைத்­தார்; கொளத்­தூர் தொகு­தியை, இது தமிழ்­நாட்­டின் ஒரு தொகு­தியா, சிங்­கப்­பூ­ரின் ஒரு பகு­தியா என்று கேட்­கும் அள­விற்கு மாற்றி வைத்­தார். அவர் தோற்­க­டிக்­கப்­பட்­டார் என்­றால், தமி­ழச் சாதி­யின் நன்றி உணர்ச்­சி­யின் மீது நமக்­கெல்­லாம் சந்­தே­கம் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... அந்­தத் தோல்வி ஒரு தோல்வி அல்ல; மே நான்கு ஒரு நாள் மட்­டும்­தான் தள­பதி ஸ்டாலின் தோற்­றி­ருக்­கி­றார், அந்­தத் தொகுதி மக்­கள் 365 நாளும் தோற்­க­டிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! நான் தள­பதி ஸ்டாலி­னுக்­காக வருந்­து­வதை விட, அந்­தத் தொகுதி மக்­க­ளுக்­காக அதி­கம் வருந்­து­கி­றேன்.ஆனா­லும் அந்­தத் தொகுதி மக்­கள் தமி­ழர்­கள் என்­பத னாலும், தமிழ்­நாட்டு எல்­லைக்­குள் குடி­யி­ருக்­கிற வாக்­கா­ளர்­கள் என்­பதனாலும், தமிழ்­நாட்­டின் சகல உரிமைகளை­யும் அனு­ப­விக்க உரிமை பெற்­ற­வர்­கள் என்­ப­த­னா­லும், அவர்­கள் அப்­படி வாடி­வி­டக்­கூ­டாது என்று ஒரு கவி­ஞ­னாக, எழுத்­தா­ள­னாக, சக குடி­மகனாக அந்த மக்­கள் துன்­பப்­ப­டக்­கூ­டாது என்­றும் நான் விரும்­பு­கி­றேன் தோழர்­களே…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">50 ஆண்­டு­கா­லப் பய­ண­மும் தமிழ் மீதுள்ள காத­லும</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஓர் உண்­மை­யைச் சொல்­லட்­டுமா உங்­க­ளுக்கு? இது­தான் மிகப்­பெ­ரிய உண்மை. நான் 50 ஆண்­டு­க­ளாக இந்த இயக்­கத்­தோடு உங்­க­ளுக்கு இருக்­கி­றேன். இந்த இயக்­கத்­தோடு இருப்­பது எதற்­காக என்று உங்­க­ளில் யாரா­வது நினைத்­துப் பார்த்­தீர்­களா? நான் உள்ளே வரு­கி­ற­போது எனக்­குக் கிடைத்த அன்­பு­தான், நான் சம்­பா­தித்தி ருக்­கிற மிகப்­பெ­ரிய தமிழ்ச் சொத்து என்று நினைக்­கி­றேன். என் மீது உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு பெரிய ஆசை, எவ்­வ­ளவு பெரிய அன்பு, நம்­பிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்றே ஒன்று சொல்ல வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன்; இந்த இயக்­கத்­தில் 50 ஆண்­டு­க­ளாக நான் உடன் இருக்­கி­றேன். வெற்­றி­யி­லும் தோல்­வி­யி­லும் பக்­கத்­தில் இருக்­கி­றேன்; கழுத்­திற்கு மாலை வந்­தா­லும், கழுத்­திற்­குக் கத்தி வந்­தா­லும் அரு­கில் இருந்து நான் காக்க முயன்­றி­ருக்­கி­றேன் அல்­லது தோளுக்கு மாலையை நான் மதித்­தி­ருக்­கி­றேன். பத­விக்­கா­கவா, பணத்­துக்­கா­கவா, மந்­திரி பத­விக் காகவா, சட்­ட­மன்ற உறுப்­பின ருக்­கா­கவா, ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கா­கவா? இவை யெல்­லாம் எனக்­குச் சரி­யாக வராது என்று தெரிந்­த­வன் நான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் மிக­வும் மதிப்­பது எனது சுதந்­தி­ரத்­தைத்­தான். என் சுதந்­தி­ரத்­தின் கழுத்­திற்­குக் கத்தி வைக்­கிற எதை­யும் நான் ஆரா­திப்­ப­தில்லை; தமிழ் எனக்­குக் கொடுத்த சுதந்­தி­ரத்தை மட்­டும்­தான் நான் பெருஞ்­செல்­வ­மா­கத் கருது கிறேன். ஆனா­லும் கலை­ஞர் என்­றால் எனக்­குக் காதல், தள­பதி என்­றால் ஓர் அன்பு, உத­ய­நிதி என்­றால் ஒரு பாசம், சேகர்­பாபு என்­றால் ஒரு நம்­பிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“பிறகு ஏன் இந்த இயக்­கத்­தோடு பய­ணிக்­கி­றாய்?” என்று கேட்­பீர்­கள். உங்­க­ளுக்­கெல்­லாம் ... 16 ஒளிப்­ப­தி­வுக் கரு­வி­கள் இந்­தக் கூடத்­தில் இருக்­கின்­றன, எனக்­குத் தெரி­யும். ஒவ்­வொரு ஒளிப்­ப­தி­வுக் கரு­விக்­கும் பின்­னால் பத்­தா­யி­ரம் மக்­கள் இருப்­பார்­கள் என்­பதை நான் உணர முடி­கி­றது. ஒரு லட்­சத்து அறு­ப­தா­யி­ரம் பேர் இந்த நிகழ்ச்­சி­யைப் பார்ப்­ப­தற்கு வாய்ப்பு இருக்­கி­றது. இப்­போது ஒரு நாற்­ப­தா­யி­ரம் பேர் இந்த நிகழ்ச்­சி­யைக் கண்­ணுற்­றும் செவி­யுற்­றும் கொண்­டி­ருக்­க­லாம்; இன்­னும் பல­பேர் அதைக் காண­லாம். இதன் வழி­யா­கத் தமிழ்ச் சமு­தா­யத்­திற்கு ஓர் உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“பிறகு ஏன் இந்த இயக்­கத்­தோடு உனக்கு நெருக்­கம்?” என்று கேட்­டால், என் இத­யம் சொல்­லு­கிற ஒரே பதில், தமிழ் மொழிக்­கும் இனத்­திற்­கும் தியா­கம் செய்த இயக்­க­மும், இன்­னும் தியா­கம் செய்­யக்­கூ­டிய உறுதி வாய்ந்த இயக்­க­மும், எனக்கு நம்­பிக்கை தரு­கிற இயக்­க­மும், இருக்­கிற இயக்­கங்­க­ளில் பல­மும் வள­மும் வாய்ந்­த­தான இயக்­க­மும், இன்­னும் நூறாண்டு களுக்­குப் பய­ணிக்­கக்­கூ­டிய இயக்­க­மும் இது­தான் என்ற நம்­பிக்­கை­யோடு நான் என் தமிழை அழைத்­துக் கொண்டு இவர்­க­ளோடு உரை­யா­டிக் கொண்டி ருக்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் நேசிக்­கிற தமிழ் உங்­க­ளி­ட­மும் இருக்­கி­றது; உங்­க­ளி­டம் உள்ள தமிழை நானும் நேசிக்­கி­றேன். ஒடுக்­கப்­பட்ட பகு­தி­யில் இருந்து வந்­த­வன் நான்; ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உங்­கள் இயக்­கம் காட்­டு­கிற உறு­தி­யும் அன்­பும் என்­னையே மீட்­டெ­டுப்­ப­தா­கத் தோன்­று­கி­றது என்று நான் உறு­திப்­ப­டு­கி­றேன். பெரி­யா­ரும், பேர­றி­ஞர் அண்­ணா­வும், கலை­ஞ­ரும், அதன் வழியே இன்று இருக்­கிற தள­ப­தி­யும் பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கிற இந்த இயக்­கம், தமி­ழுக்கு இன்­னும் நம்­பிக்கை உள்ள இயக்­கம், தமி­ழர்களுக்கு இன்­னும் நம்­பிக்கை உள்ள இயக்­கம் என்ற உறு­தி­யான வேர்வை யில் நான் பாடிக்­கொண்டிருக்­கி­றேன் நண்­பர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தலை­வ­னின் மாண்­பும் ஜப்­பா­னிய உவ­மை­யும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... தோல்­வியை நீங்­கள் எப்­படி எடுத்­துக் கொள்­கி­றீர்­களோ, அதில் இருக்­கி­றது உங்­கள் மேன்மை; அதில் இருக்­கி­றது உங்­க­ளு­டைய எதிர்­கா­லத்­தின் நன்மை. காத­லி­யின் பெருமை பிரி­வில் தெரி­யும், தாயின் பெருமை அவள் மறை­வில் தெரி­யும், நண்­ப­னின் பெருமை வறு­மை­யில் தெரி­யும், ஒரு தலை­வ­னின் பெருமை தோல்­வி­யில்­தான் தெரி­யும்! வெற்றி என்­பது உங்­க­ளுக்­குப் பகிர்ந்து கொடுப்­ப­தற்கு; தோல்வி என்­பது ஒரு தலை­வன் மட்­டும் தாங்­கிக் கொள்வதற்கு. எது பெரி­யது? உங்­க­ளுக்­குப் பகிர்ந்து கொடுக்­கிற வெற்­றியை விட, “தனி ஒரு தலை­வன் நானே தாங்­கிக் கொள்­கி­றேன்” என்று சொல்­வ­து­தான் ஒரு தலை­வ­னின் மாண்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செயற்­குழு கூட்­டத்­தில் தள­பதி ஸ்டாலின் பேசிய பேச்சு என் இத­யத்­தில் ஓர் அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யது. அவர் சொன்­னார், “யாரும் யாரை­யும் குறை சொல்­லா­தீர்­கள்; தோல்­விக்­குக் கார­ணம் யார் என்று யாரை­யும் விரல் சூட்­டா­தீர்­கள், தோல்­வி­யின் முழுப் பொறுப்­பை­யும் நான் ஒரு­வன் மட்­டுமே ஏற்­றுக் கொள்­கி­றேன்” என்று சொன்ன திராணி, என்று சொன்ன அருமை அவ­ருக்­கல்­லவா தெரி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே... ஓர் உண்­மை­யைச் சொல்­லு­கி­றேன், இந்­தத் தோல்­விக்­குச் பிறகு நாம் காலத்­தைப் புடம் போட வேண்­டும். இயக்­கத்தை இந்­தத் தோல்­விக்­குச் பிறகு நாம் செம்மை யுறுத்த வேண்­டும்; என்ன நிகழ்ந்­தது என்­பதை நமக்கு நாமே சுய பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும். நான் ஒன்றே ஒன்­றைச் சொல்­லிக் கொள்ள வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன்; நான் எளி­ய­வன், அர­சி­யல் அறி­யா­த­வன், உங்­க­ளோடு பய­ணிக்க வாய்ப்­பற்­ற­வன் அல்­லது தகுதி கூட இல்­லா­த­வன். ஆனா­லும் நான் சொல்­கி­றேன், இந்­தத் தோல்­விக்­குக் கார­ண­மான ஆட்­கள் என்று நீங்­கள் கரு­து­கிற ஆட்­கள் யார் மீதும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கு­ரிய காலம் இது அல்ல; யார் மீதும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கு­ரிய காலம் இது அல்ல என்று நான் சொல்­வ­தற்கு கார­ணமே, எல்­லார் மீதும் தவறு இருந்­தால் யார் மீது நட­வ­டிக்கை எடுப்­பது? இது நம்மை நாமே தேற்­றிக் கொள்ள வேண்­டிய காலம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஜப்­பா­னில் ஒரு கதை­யைச் சொல்­வார்­கள்... இந்­தத் தோல்­வியை நாம் உர­மாக இட்­டுக் கொள்ள வேண்­டும். ஜப்­பா­னிய எரி­மலை வெடிக்­கும்; எரி­ம­லைக் குழம்­பு­கள் விசி­றிப் பர­வும், பல ஊர்­களை எல்­லாம் அக்­கி­னிக் குழம்பு நனைக்­கும். எரி­ம­லைக் குழம்பு வந்து விழுந்த கிரா­மத்து மக்­கள் ஊரை விட்டு ஓடி விடு­வார்­கள். சில மாதங்­கள் கழித்து ஊருக்­குத் திரும்­பு­வார்­கள்; எரி­ம­லைக் குழம்­பு­கள் ஆறிக்­கி­டக்­கும் சாம்­ப­லாக. அந்­தச் சாம்­பலை அள்ளி நிலத்­திலே விதைப்­பார்­கள்; அந்­தச் சாம்­ப­லைப் போன்ற உயர்ந்த உரம் உல­கத்­தில் இல்லை என்­பதை ஜப்­பா­னி­யன் அறி­வான்! அந்­தச் சாம்­பலை நிலத்­தில் விதைத்த பிறகு சாகு­படி செய்­வான்; ஒரே ஒரு விளைச்­ச­லில் மூன்று மடங்கு சாகு­படி காணக்­கூ­டிய வலிமை அந்­தச் சாம்­ப­லுக்கு உண்டு. அந்­தச் சாம்­பல்­தான் இந்­தத் தோல்வி; அந்த விவ­சா­யி­தான் நீங்­கள், அந்த விளைச்­சல்­தான் எதிர்­கா­லத்­தில் நீங்­கள் காணப்­போ­கிற வெற்றி என்று நீங்­கள் கரு­திக் கொள்ள வேண்­டும்! இது­தான் மக்­களை அதி­க­மா­கச் சந்­திக்­கிற காலம் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக்­க­ளைச் சந்­திக்­கும் நேர­மிது: கலை­ஞர் காட்­டிய வழி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரைப் பற்றி ஒரு உறு­தி­யான சம்­ப­வத்­தைப் பற்றி நான் சொல்லு கிறேன். எந்­த­வொரு சம்­ப­வத்­தை­யும் ஆதா­ரம் இல்­லா­மல் மேடை­யில் பேசு­கி­ற­வன் கோழை அல்­லது பொய்­யன்; எதை­யும் ஆதா­ரத்­தோடு பேச வேண்­டும் என்­பது என்­னு­டைய பேச்­சுக் கொள்­கை­க­ளுள் ஒன்று. இப்­போது நான் சொல்­லப்­போ­கும் சம்­ப­வத்­திற்கு மிகப்­பெ­ரிய ஆதா­ரம் உண்டு; அந்த ஆதா­ரம் யார் என்­றால் நான்­தான், கண்­கண்ட சாட்சி, சாட்சி செவி­யுற்ற சாட்சி நான்­தான், பக்­கத்­தில் இருந்து பார்த்­த­வன் நான்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார் கலை­ஞர். ஒரு கூட்­டம் முடி­கி­றது; அப்­போது ஆலி­வர் ரோட்­டில் அவர் குடி­யி­ருந்­தார். அமைச்­சர்­கள் கார்­கள் பின்­தொ­டர ஆலி­வர் ரோடு இல்­லத்­திற்கு மாலை 5 மணிக்கு வரு­கி­றார். அங்­குச் சிறிது ஓய்­வெ­டுத்­து­விட்­டுப் பெரி­யார் திட­லுக்­குச் செல்ல வேண்­டும் என்­பது அடுத்த நிகழ்வு; பெரி­யார் திட­லில் ஆசி­ரி­யர்­கள் மாநாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போது ஒரு தக­வல் வரு­கி­றது, ஆட்சி கலைக்­கப்­பட்­டு­விட்­டது என்று.அப்­போ­தெல்­லாம் இ–மெ­யில் கிடை­யாது;ஃபேக்ஸ் எனப்­ப­டும் தொலை­ந­கல் தான். அந்த ஃபேக்ஸ்–­இல் செய்தி வரு­கி­றது, ஆட்சி கலைக்­கப்­பட்­டு­விட்­டது என்று. உடனே அந்த இடத்­தின் மொத்த வானி­லை­யும் மாறி­விட்­டது; சொற்­கள் மறைந்­து­விட்­டன, மகிழ்ச்சி உறைந்து விட்­டது. சற்றே வெளியே பார்த்­தேன்; எந்­தக் காரி­லும் தேசி­யக் கொடி இல்லை, கட்­சிக் கொடி பறக்­கி­றது. ஓர் அமைச்­சர் சொல்­கி­றார், “வேண்­டாம் அண்ணா, இந்த மக்­க­ளுக்கு இவ்­வ­ளவு பாடு­பட்டு கடை­சி­யில் என்ன கண்­டீர்­கள்? இந்­தக் கூட்­டத்­திற்கு எல்­லாம் போக வேண்­டாம் அண்ணா, கொஞ்­சம் டீ சாப்­பிட்டு ஓய்­வெ­டுங்­கள் அண்ணா” என்று சொல்­லு­கி­றார். பெயர் தெரி­யும்; ஆனால் இப்­ப­டிச் சொன்ன அமைச்­ச­ருக்­குப் புகழ் வராது என்­ப­த­னால் அவர் பெயரை நான் இத­யத்­தில் பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் சொன்­னார், “என்­னது? கூட்­டத்­திற்­குப் போக வேண்­டாமா? மக்­க­ளைச் சந்­திக்க வேண்­டிய நேரமே இது­தான், எடு வண்­டியை!” கலை­ஞர் சொன்ன இந்­தச் செய்­தி­யைத்­தான் இயக்­கம் இன்று தன் இத­யத்­தில் எழுதி வைத்­துக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. மக்­க­ளைச் சந்­திக்க வேண்­டிய நேரம் இது­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யும் நம் 
தமிழ்­நாட்­டுத் தலை­வ­ரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­போ­தும் மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருந்­த­வர் தள­பதி ஸ்டாலின். எனக்கு அவ­ரி­டம் பிடித்த விஷ­யம் என்ன தெரி­யுமா? அவ­ரு­டைய பணி களுக்­குக் கிழமை கிடை­யாது, தேதி மட்­டும்­தான் உண்டு! சனி, ஞாயிறு விடு­முறை என்று அவ­ருக்­குத் தெரி­யாது;  “17 எங்கே? 18 எங்கே?” இப்­ப­டித்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யைப் பற்­றிக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன்; வெள்­ளிக்­கி­ழமை மாலை வார இறுதி வந்­து­விட்­டால், தன் கோட்­டைக் கழற்­றித் தூர எறி­வார். ஜனா­தி­பதி பத­வி­யை­யும் கோட்­டோடு களைந்து விடு­வார்; அரைக்­கால் சட்டை போட்­டுக் கொள்­வார். “இன்­னும் இரண்டு நாட்­க­ளுக்கு நான் அமெ­ரிக்­கா­வின் ஜனா­தி­பதி அல்ல; நான் ட்ரம்ப், என் நாய்க்­குட்­டி­யோடு பேசு­வேன், என் புல்­வெ­ளி­யில் விளை­யா­டு­ வேன், என் பேரன்–­பேத்­தி­க­ளோடு கால்­பந்து விளை­யா­டு­வேன், மீன் இல்­லாத குளத்­தில் மீன் பிடிப்­பேன், கட­லுக்­குப் போவேன், படகு ஓட்­டு­வேன், எனக்­குப் பிடித்த சாண்ட்­விச் சாப்­பி­டு­வேன், இன்­றைக்கு மட்­டும் சர்க்­கரை போட்­டுத் தேநீர் அருந்­து­வேன், இரவு 10 மணி வரைக்­கும் நான் விழித்­தி­ருப்­பேன், விடிய விடி­யப் படம் பார்ப்­பேன்; எந்த அலு­வ­ல­கத் தொலை­பே­சி­யும் என் காதுக்கு வந்­து­வி­டக் கூடாது, இரண்டு நாட்­க­ளுக்கு என் செல்­போன் ஊமை யாக இருக்­கும்; நான் நானாக இருப்ப தற்கு இந்­தச் சனி, ஞாயி­றைத் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்­கி­றேன்” என்று உல­கத்­தின் வல்­ல­ர­சா­கிய அமெ­ரிக்காவின் ஜனா­தி­பதி எடுக்­கிற முடிவு அது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்ச ராக இருந்த ஸ்டாலின் 24 மணி நேர­மும்உழைத்­தாரே தவிர, இப்­படி ஓய்­வெ­டுக்­க­வில்லை; அந்த உழைப்­பு­தான் அவர் இன்­னும் உங்­க­ளைக் கைதட்டவைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது! இன்­னும் தமிழ்­நாட்­டில் காணப்­ப­டு­கிற 
பசு­மைக்கு, சாலை­க­ளுக்கு அவர் உழைப்­பு­தான் கார­ணம்; இன்­னும் மகிழ்­கிற மகிழ்ச்­சிக்கு அவர் உழைப்பு தான் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அண்­ணா­வின் வர­லாறு காட்­டும் எதிர்­கால வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரே ஒரு செய்­தியை மட்­டும் சொல்லி நான் விடை­பெற வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன். தோல்­வி­க­ளைத் தள­பதி ஸ்டாலின் அவர்­கள் ஒரு நேர்­ம­றை­யாக எடுத்­துக்­கொண்­டால், இந்த இயக்­கத்­திற்­குப் பெரிய பெரிய வெளிச்­சம் இருப்­ப­தாக எங்­க­ளைப் போன்­ற­வர்­கள் நம்­பு­கி­றோம். தோல்­வி­யில் நீங்­கள் அண்­ணா­விற்கு இணை­யாக நிற்­கி­றீர்­கள்; கலை­ஞர் தோல்­வி­ய­டைந்­ததே இல்லை, கலை­ஞர் ஆட்­சி­யில் தோற்­க­டிக்­கப்­பட்டிருக்­கி­றார், தேர்­த­லில் அவரை யாரா­லும் தோற்­க­டிக்க முடி­ய­வில்லை, அவர் தோல்­வி­யைச் சந்­தித்­த­றி­யா­த­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா தோல்­வி­யைச் சந்­தித்­தி­ருக்­கி­றார். சுப. வீர­பாண்­டி­யன் அழ­கான வர­லாற்­றுச் செய்­தி­களை எல்­லாம் தொகுத்­துச் சொன்­னார்; அவர் வர­லாறு படித்­த­வர். தமி­ழச்சி தங்­கப்­பாண்­டி­யன் வர­லாறு படித்­த­வர்; இந்த இயக்­கத்­தின் வேர்­க­ளை­யும் விழு­து­க­ளை­யும் தெரிந்து கொண்டு பொது வாழ்க்­கைக்கு வந்­த­வர்­கள் இந்தஇரு­வ­ரும். வீர­பாண்­டி­ய­னுக்­குத் தெரிந்தஒரு தக­வலை நான் உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1962–இல் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­த­லில் நிற்­கி­றது; 50சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை வெல்­கி­றது.கலை­ஞர் உட்­பட 50 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்; அண்ணா மட்­டும் தோற்­றுப் போனார், காஞ்­சி­பு­ரத்­தில் அண்ணா தோற்­க­டிக்­கப்­பட்­டார். 50 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சட்ட மன்­றத்­திற்­குச் செல்­லு­கி­றார்­கள், அண்ணா வெளியே நிற்­கி­றார்; சோர்ந்து போக­வில்லை அண்ணா, தளர்ந்து போக­வில்லை, தன் புன்­ன­கையை உதட்­டி­லி­ருந்து பிரித்­தெ­டுத்­துத் தெரு­வில் போட்­டு­வி­ட­வில்லை, தன் உற்­சா­கத்தை இழந்­து­ 
வி­ட­வில்லை. அண்ணா வர­லாறு படித்­த­வர்; சொன்­னார், “கலங்­கா­தீர் தம்­பி­மார்­களே, ஒரு வர­லாற்­றுக் கதை சொல்­கி­றேன் உங்­க­ளுக்கு. ஐரோப்­பா­வில் கிறிஸ்­த­வர்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக்­ கும் ஒரு பெரிய போர்நடந்­தது. கிறிஸ்­த­வர்­க­ளுக்­குத் தலைமைதாங்­கி­ய­வன் ரிச்­சர்ட்; இஸ்­லா­மி­யர்களுக்­குத் தலைமை தாங்­கி­ய­வன் சலா­டின் என்­னும் மன்­னன். எதற்­குத் தெரி­யுமா போர்? இயேசு பிறந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிற ஜெரு­ச­லேம் அன்­றைக்கு இஸ்­லா­மி­யர்­க­ளின் கையில் இருந்­தது. அந்த கிறிஸ்­த­வர்­க­ளின் தலை­வன் ரிச்­சர்ட் கேட்­டான், ‘வேறொன்­றும் வேண்­டாம், ஜெரு­ச­லேத்­திற்­குள் நுழைந்து எங்­களை அங்கே தரி­சிக்க அனு­ம­தி­யுங்­கள்’ என்று கேட்­டான். ‘இல்லை, இது எங்­கள் கட்­டுப்­பாட்­டில் இருக்­கி­றது; ஒரு கிறிஸ்­த­வர் கூட ஜெரு­ச­லேம் நக­ரத்­திற்­குள் வர முடி­யாது, மோதிப்­பார்’ என்­றான் சலா­டின். ரொம்­பப் பெரிய சிக்­க­லுக்­குப் பிறகு, போர் ஒரு முடி­வுக்கு வந்­தது. அந்த முடி­வில், சலா­டின் என்ற இஸ்­லா­மிய மன்­னன் ஒரே­யொரு நிபந்­தனை விதித்­தான், “இந்­தப்­போ­ரில் ஈடு­பட்ட அனைத்­துக் கிறிஸ்­த­வர்­க­ளும் ஜெரு­ச­லேம் நக­ரத்­திற்­குள் வர­லாம், தலைமை தாங்­கிய ரிச்­சர்­டைத் தவிர; ரிச்­சர்ட் மன்­னன் மட்­டும் உள்ளே வரக்­கூ­டாது, போரா­டி­ய­வர்­கள் எல்­லாம் வர­லாம்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா சொன்­னார், “தம்­பி­மார்­களே! எல்­லோ­ரை­யும் ஜெரு­ச­லேம் நக­ரத்­திற்­குள் அனுப்பி விட்டு ரிச்­சர்ட் மட்­டும் வெளியே நின்­றது போன்று, 50 சட்­ட­மன்ற உறுப்பினர்­களை உள்ளே அனுப்­பி­விட்டு உங்­கள் தலை­வன் நான் வெளியே நிற்­கி­றேன்” என்­றார். அன்று அண்ணா வெளியே நின்­றார், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சட்­ட­மன்­றம் சென்­றார்­கள்; இன்­றைக்­குத் தள­பதி வெளியே நிற்­கி­றார், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்ளே சென்­றார்­கள். ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அண்ணா முத­ல­மைச்­சர் ஆனார்; தள­ப­தி­யும் ஆவார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>