<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1096" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 13 2026 03:54:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260613T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="13062026-VLR-05" position.sequence="05" ex-ref="13062026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஒரே வடிவில், ஒரே செயல்திட்டத்துடன் இருப்பதில்லை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தத்துவார்த்தப் பார்வையின்றி ‘நடப்புப் பிரச்சினைகளை எதிர்க்கிறார்கள்’ என்பதற்காக எவரையும் ஆதரித்துவிட முடியாது!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">‘கரப்பான் பூச்சி ஜனதா’ பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘‘நாம் எதிர்க்­கும் பா.ஜ. க.வை, தத்­து­வார்த்­தப் பார்­வை­யில் அல்­லா­மல் சில நடப்­புப் பிரச்­சி­னை­ க­ளுக்­காக சி.ஜே.பி. எதிர்க்­கி­றார்­கள் என்ற ஒரே கார­ணத்­துக்­காக, அந்­தக் குழுவை சம­யோ­சி­த­மாக ஆத­ரிக்­க­லாம் என்று (Political Expediency) எவ­ரை­யும் ஆத­ரித்­து­விட முடி­யாது. இளை­ஞர்­க­ளின் எதிர்ப்­பு­ணர்­வை­யும், போராட்­டங்­க­ளை­யும் நாம் குறைத்து மதிப்­பிட வேண்­டி­ய­தில்லை என்­றா­லும், அவ­ச­ரப்­பட்டு விழுந்து ஆத­ரிக்க வேண்­டி­ய­தில்லை. ‘கரப்­பான்­பூச்சி ஜனதா’ கொஞ்­ச­கா­லம் கண்­கா­ணிப்­பி­லேயே இருக்­கட்­டும்’’ என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர்   கி.வீர­மணி அவர்­கள் அறிக்கை விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த மாதம் 15 ஆம் தேதி உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி சூர்­ய­காந்த், வேலை­யற்ற இளை­ஞர்­களை கரப்­பான்­பூச்­சி­கள் என்­றும், ஒட்­டுண்­ணி­கள் என்­றும், வேலை­யில்­லாத கார­ணத்­தால் தக­வல் அறி­யும் உரி­மைப் போரா­ளி­க­ளா­க­வும், பொது நல வழக்­குத் தொடுப்­ப­வர்­க­ளா­க­வும் கிளம்­பி­விட்­டார்­கள் என்­ப­தா­க­வும் நீதி­மன்­றத்­தி­லேயே தெரி­வித்­தார் என்­றொரு செய்தி வெளி­யா­னது. பின்­னர் அடுத்த நாளே அதனை மறுத்து, ‘‘தாம் குறிப்­பிட்­
டது போலிச் சான்­றி­தழ்­கள் பெற்று வழக்­கு­ரை­ஞர்­க­ளா­க­வும், வேலை­யி­லும் இருக்­கும் இளை­ஞர்­க­ளைப் பற்­றியே என்­றும், பொது­வாக அனை­வ­ரை­யும் குறிப்­ப­ தல்ல’’ என்­றும் ஒரு விளக்­கம், நீதி­பதி தரப்­பில்இருந்து வெளி­யி­டப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘காக்­ரோச் ஜனதா பார்ட்டி’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், அவ­ரது இந்­தக் கருத்து இளை­ஞர்­கள் மத்­தி­யில்  கடும் எதிர்ப்­ப­லையை ஏற்­ப­டுத்­தி­யது உண்மை. குறிப்­பாக கரப்­பான்­பூச்­சி­கள் - காக்­ரோச்­சஸ் என்று அவர் கூறிய வார்த்­தை­யையே கொண்டு ‘காக்­ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற பெய­ரில் சமூக ஊட­கங்­க­ளில் ஒரு பக்­கம் உரு­வாக்­கப்­பட்டு, அவ­ரது கருத்­தை­யும், நாட்டு நடப்­பு­க­ளை­யும் எள்­ளல் தொனி­யில் பரி­க­சிக்­கும் பதி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. இளை­ஞர்­களை வெகு­வா­கக் கவர்ந்த இந்­தத் தலைப்பு எதிர்ப்பு, ஒரே நாளில் பெரும் வர­வேற்­பைப் பெற்று, பல லட்­சக்­க­ணக்­கா­னோர் விரும்­பும் சமூக ஊட­கப் பக்­க­மாக மாறி­விட்­டது. பார­திய ஜனதா கட்­சிக்கு (பி.ஜே.பி) எதி­ராக சி.ஜே.பி. என்­னும் பெய­ரில் உரு­வான இந்­தப் பெயர் திடீ­ரென இளை­ஞர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மாகி, அது ஓர் அமைப்­பாக உரு­வா­வ­தற்­கான சூழல் எழும் முன்னே அந்­தப் பெய­ரில் மது­ரை­யில் ஒரு பேரணி எல்­லாம்­கூட நடை­பெற்று முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இச் சமூக ஊட­கப் பக்­கத்தை உரு­வாக்கி நடத்­து­ப­வர் யார் என்று தேடி, அமெ­ரிக்­கா­வில் பயி­லும் மகா­ராட்­டி­ரா­வைச் சேர்ந்த ஊட­க­வி­யல் மாண­வர் அபி­ஜித் தீப்கே என்­ப­வர் தான் என்­பதை அறிந்து, அவ­ரும் இணை­யம் வழி­யாக ஊட­கங்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார். இத­னி­டையே சி.பி.எஸ்.இ தேர்வு விடைத்­தாள் திருத்­தக் குள­று­படி, நீட் தேர்வு மோச­டி­கள் என்று எழுந்த பிரச்­சி­னை­க­ளை­யும் சி.ஜே.பி. கண்­டிக்க, அத­னை­யொட்டி டில்­லி­யில் போராட்­டத்­தை­யும் அந்த அமைப்பு அறி­வித்­தது. போராட்­டத்­திற்கு அபி­ஜித் தீப்கே நேரில் வந்­தார். பாபா சாகேப் டாக்­டர் அம்­பேத்­கர் புத்­த­கத்­தைத் தூக்­கிக் காட்­டி­ய­படி அவர் விமான நிலை­யத்தை விட்டு வெளி­யில் வரும் காட்சி ஊட­கங்­க­ளில் வெளி­யா­னது. இளை­ஞர்­கள் பலர் பங்­கேற்க, புது டில்லி ஜந்­தர் மந்­த­ரில் ‘‘போராட்­ட­மும்’’ நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­க­ளின் 
சமூ­கக் கோபம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளின் சமூ­கக் கோப­மும், அது இப்­படி பல வடி­வங்­க­ளி­லும் வெளி­வ­ரு­வ­தும் இயல்­பா­னதே! தொடர்ந்து பல நாடு­க­ளி­லும், மாநி­லங்­க­ளி­லும் கூட அமைப்பு ரீதி­யாக அல்­லாத இத்­த­கைய திடீர் போராட்­டங்­கள் பேரு­ருக் கொள்­வ­தை­யும் பார்த்து வந்­தி­ருக்­கி­றோம். எந்­த­வொரு போராட்­ட­மும், அதற்­கான உணர்­வும் ஓரிரு பிரச்­சி­னை­க­ளுக்­கான உட­னடி எதிர்­வி­னை­யாக அமை­வதை மட்­டும் வைத்து நாம் முடி­வெ­டுத்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் இத்­த­கைய திடீர் போராட்­டங்­க­ளின் வர­லாற்­றுப் பின்­னணி என்ன? அவர்­க­ளின் கருத்­தி­யல் அல்­லது கொள்­கைத் தெளிவு என்ன என்­ப­தைப் பொறுத்து தான், இத்­த­கைய போராட்­டங்­களை முன்­னெ­டுப்­போர் அல்­லது அதன் வழி நடப்­போரை மதிப்­பிட முடி­யும். ஏமாந்­து­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘இட ஒதுக்­கீடு பற்றி சிஜேபி பேச மறுக்­கி­றதே, சமூக நீதி குறித்­தும், ஒடுக்­கப்­பட்­டோர் மீதான பிரச்­சி­னை­கள் குறித்­தும் இந்த அமைப்­பி­னர் என்ன நினைக்­கி­றார்­கள்?’ என்ற கேள்வி எழுந்­த­போது, இந்த சி.ஜே.பி. நிறு­வ­னர் அபி­ஜித் தீப்கே, ‘தான் ஒரு தலித்’ என்­றும், அதுவே போது­மான பதி­லைச் சொல்­லும் என்­றும் ‘எக்ஸ்’ தளத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார். உடனே, உயர்­ஜா­தி­யி­னர் பலர், அதற்கு மோச­மான எதிர்­வி­னை­களை வழக்­கம் போல ஆற்­றி­யி­ருந்­த­னர். “ஆக, தன்­னைத் தானே தலை­வ­ராக முன்­னி­றுத்­திக் கொண்ட இந்த ஜென் ஸீ (Gen Z) தலை­வர், ‘‘தகுதி - திற­மைக்கு எதி­ரா­ன­வர் அப்­ப­டித்­தானே!” என்று தொடங்கி, இன்­னும் ஏரா­ள­மான வசை மொழி­கள் வரை பொழிந்­துள்­ள­னர். ஒரு­வர் தான் என்ன சமூ­கத்­த­வர் என்று சொன்­ன­தும், அதைக் கொண்டே அவரை இழி­வு­ப­டுத்­தும் இந்த மோச­மான போக்கு சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் இளை­ஞர்­க­ளி­ட­மும் ஏரா­ள­மாக இருக்­கி­றது இந்­தி­யா­வெங்­கும்! முக­மூடி புரி­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே வேளை, 30 வயது கொண்ட அந்த இளை­ஞர் அபி­ஜித் தீப்கே, முன்பு டில்­லி­யில் படித்­த­போது 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்­சி­யின் ஆத­ர­வா­ள­ராக, சமூக ஊட­கங்­க­ளில் செயல்­ப­டு­ப­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார். காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் ஊழல் என்­பதை முன்­னி­றுத்தி, ஆர்.எஸ்.எஸ். பின்­பு­லத்­தில் அன்னா ஹசாரே என்­ப­வர் தொடங்­கிய போராட்­டத்­தில் பங்­கேற்ற அர­விந்த் கெஜ்­ரி­வால் போன்ற சில­ரால் தோற்­று­விக்­கப்­பட்­டது தான் ஆம் ஆத்மி! அது எப்­போ­தும் சமூ­க­நீ­திக்கு ஆத­ர­வாக இருந்­த­தில்லை, அதன் தலை­வர் இட­ஒ­துக்­கீட்­டுக்கு எதி­ரா­ன­வ­ரா­கவே ஆரம்ப காலத்­தில் சொல்­லப்­பட்­டது - கட்சி உரு­வாகி, ஆட்­சி­யில் அமர்ந்­து­விட்ட பின்­ன­ரும் கூட இட ஒதுக்­கீடு குறித்து எதி­ரான நிலைப்­பா­டு­க­ளையே அவர்­கள் கொண்­டி­ருந்­தார்­கள். பொரு­ளா­தா­ரத்­தில் நலிந்­துள்ள உயர்­ஜா­தி­யி­ன­ருக்­கான இட­ஒ­துக்­கீடு என்ற பா.ஜ.க.வின் சூழ்ச்­சிக்கு ஆத­ர­வா­கத் தான் இருந்­தார்­கள். அத்­த­கைய அமைப்பை ஆத­ரித்த ஒரு­வரை, அவ­ரது சமூ­கத்தை வைத்து மட்­டும் முடிவுசெய்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வெகு­ஜ­னப் புத்­திக்குஊாட்­ட­ம­ளிக்­கும் ஆர்.எஸ்.எஸ்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­த­கைய போராட்­டங்­க­ளி­லும், அமைப்­பு­க­ளி­லும், திடீர் ஈர்ப்பு கார­ண­மா­கப் பலர் இணை­வ­ துண்டு. ஆனால், அவர்­க­ளின் கொள்­கைப் பின்­பு­ல­ மும், பார்­வை­யும் எப்­ப­டி­யி­ருக்­கும்என்­ப­தை­யும், அதை நெறிப்­ப­டுத்­தக் கூடி­ய­தாக இத்­த­கைய அமைப்­பு­கள் இருக்­குமா என்­ப­தை­யும் அவ­ச­ரப்­பட்டு முடிவு செய்ய முடி­யாது. கடந்த காலங்­க­ளில் இத்­த­கைய அமைப்­பு­கள் வெகு­ஜ­னப் புத்­திக்கு ஊட்­ட­ம­ளிக்­கும் ஆர்.எஸ்.எஸ்.சின் பின்­பு­லத்­தில் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தைப் பார்த்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டி­லும் கூட அப்­ப­டி­யொரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் ‘ஆசீர்­வா­தத்­து­டன்’ ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­பதை நாம் அறி­வோம். ஆர்.எஸ்.எஸ். எப்­போ­தும் ஒரே வடி­வில், ஒரே செயல்­திட்­டத்­து­டன் இருப்­ப­தில்லை என்­ப­தை­யும் நாம் எச்­ச­ரிக்­கை­யோடு நினைவு கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முறை­யா­கத் திரண்­
டெ­ழுந்து ஒரு முழு­மை­யான புரி­தல் நிறைந்­த­தாக மாற வேண்­டிய எதிர்ப்­பு­ணர்­வுக்கு வடி­கா­லா­க­வும், இத்­த­கைய சூழ­லில் அர­சுக்­கும், ஆதிக்­கத்­திற்­கும் எதி­ராக இளை­ஞர்­கள் உண்­மை­யான சமூ­க­நீதி, திரா­விட, பொது­வு­டைமை இயக்­கங்­க­ளுக்­குச் செல்­லா­மல் மடை மாற்­ற­வும் இத்­த­கைய அமைப்­பு­கள் உரு­வாக்­கப்­ப­டவோ அல்­லது கொண்டு செல்­லப்­ப­டவோ வாய்ப்­பு­கள் நிறைய உண்டு. கடந்த காலங்­க­ளின் அனு­ப­வம் அதுவே! பேரெ­ழுச்­சி­யு­டன் வந்த சில அமைப்­பு­கள் காலத்­தால் காணா­மல் போய்­வி­டு­கின்­றன - அஸ்­ஸாம் கண பரி­ஷத் போல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஊட­கங்­கள் உரு­வாக்­கும் பிம்­பம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏற்­கெ­னவே இருக்­கும் அமைப்­பு­கள் மீது ஊட­கங்­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கும் பிம்­ப­மும், இளை­ஞர்­க­ளுக்கு இருக்­கும் சலிப்­புமே இத்­த­கைய திடீர் அமைப்­பு­களை நோக்கி அவர்­க­ளைக் கொண்டு செல்­கி­றது. அது நெடுங்­கா­ல­மா­கப் பல்­வேறு சூழல்­க­ளைப் பார்த்து, எதிர்­கொண்டு, அமைப்பை நிரு­வ­கித்து, அதன் ஏற்ற இறக்­கங்­களை அனு­ப­வித்து, கவ­ன­மா­கச் செயல்­பட்டு, பல சாத­னை­க­ளைப் புரிந்­தி­ருக்­கும் அமைப்­பு­கள் மீது ஊட­கங்­க­ளும், ஆதிக்­க­வா­தி­க­ளும் உண்­டாக்­கி­யி­ருக்­கும் திட்­ட­மிட்ட சலிப்­பு­ணர்வு. இதை­யெல்­லாம் எதிர்­கொள்­ளக் கூடி­ய­ வர்­களா? என்று யோசிக்­கும் முன்பு, இதை­யெல்­லாம் எதிர்­நோக்­கி­யி­ருப்­பார்­களா என்­பதே சந்­தே­கம் தான்! ஆர்.எஸ்.எஸ். ஆக்­டோ­ப­ஸின் கரங்­க­ளின் அணைக்­க­வும், விழுங்­க­வும், அடிக்­க­வும், அழிக்­க­வும் நிரம்­பப் பழக்­கப்­பட்­டவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எவ்­வ­ளவோ பார்த்­து­
விட்­டோம்... இதைப் பார்க்­க­மாட்­டோமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் எதிர்க்­கும் பா.ஜ.க. வை, தத்­து­வார்த்­தப் பார்­வை­யில் அல்­லா­மல் சில நடப்­புப் பிரச்­சி­னை­ க­ளுக்­காக அவர்­க­ளும் எதிர்க்­கி­றார்­கள் என்ற ஒரே கார­ணத்­துக்­காக, அந்­தக் குழுவை சம­யோ­சி­த­மாக ஆத­ரிக்­க­லாம் என்று (Political Expediency) எவ­ரை­யும் ஆத­ரித்­து­விட முடி­யாது. இளை­ஞர்­க­ளின் எதிர்ப்­பு­ணர்­வை­யும், போராட்­டங்­க­ளை­யும் நாம் குறைத்து மதிப்­பிட வேண்­டி­ய­தில்லை என்­றா­லும், அவ­ச­ரப்­பட்டு விழுந்து ஆத­ரிக்க வேண்­டி­ய­தில்லை. கரப்­பான்­பூச்சி ஜனதா கொஞ்­ச­கா­லம் கண்­கா­ணிப்­பி­லேயே இருக்­கட்­டும்! எவ்­வ­ளவோ பார்த்­து­விட்­டோம்... இதைப் பார்க்­க­மாட்­டோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கி.வீர­மணி அவர்­கள் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>