<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1185" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 13 2026 16:34:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260614T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14062026-MDU-07" position.sequence="07" ex-ref="14062026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">14.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">த.வெ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும், </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">பொறுப்பு இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சூழல் நிலவுகிறது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">சென்னை கிழக்கு மாவட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup699530_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup699703_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூன்.14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில், எழும்­பூர் தெற்கு பகு­தி­யில், மாவட்ட மக­ளிர் அணி சார்­பாக முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் 103வது பிறந்­த­நாள் மற்­றும் புத்­தெ­ழுச்சி நாள் விழாவை முன்­னிட்டு, “புத்­தெ­ழுச்சி–12: வாழ்த்­தட்­டும் பெண்மை! வள­ரட்­டும் நன்மை!” எனும் தலைப்­பில் மாவட்ட மக­ளிர் அணி கொண்­டா­டும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பிறந்­த­நாள் விழா சென்னை – வேப்­பேரி, ஒய்.எம்.சி.ஏ டவுட்­டன் ஹாலில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­கழ்ச்­சி­யில், சிறப்பு அழைப்­பா­ள­ராக தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான 
கனி­மொழி கரு­ணா­நிதி கலந்­து­கொண்டு, 
நலத்­திட்ட உத­வி­களை வழங்கி சிறப்­பு­ரை­ 
யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாழ்த்­தட்­டும் பெண்மை! வள­ரட்­டும் நன்மை! என்று பேச்சை தொடங்­கிய  கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.; நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டும் வகை­யில் இங்கு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் இந்த சிறப்­பான மக­ளிர் நடத்­தும் இந்­தக் கூட்­டத்­தில் மற்­றெட்ட பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் பெறு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மாவட்­டச் செய­லா­ளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சேகர்­பா­புவுக்குப் பாராட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்­தக் கூட்­ட­மாக இருந்­தா­லும், எந்த நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும், தொடர்ந்து ஒரு மனி­தன் எப்­படி இப்­படி உழைக்க முடி­கி­றது என்று எல்­லா­ரை­யும் வியக்க வைக்­கும் அள­வுக்கு செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் அதே நேரத்­தில், பல நேரங்­க­ளில் மக­ளிர்­களை ஒதுக்­கு­வ­தையே பணி­யாக சிலர் வைத்­தி­ருப்­பார்­கள். மக­ளிரை ஊக்­கப்­ப­டுத்தி, அவர்­க­ளை­யும் அர­வ­ணைத்து தன்­னு­டைய மாவட்­டத்தை நடத்­திக் கொண்­டி­ருக்­கும் நம் மாவட்ட கழக செய­லா­ளர் சேகர் பாபு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அரங்­கத்­துக்­குள் நான் நுழை­கின்ற பொழுது, இங்கே சில சகோ­த­ரி­கள் என்னை அணைத்­துக்­கொண்டு கண்­ணீர் விட்­டார்­கள். மேடை­யில் இருந்­த­வர்­கள்­கூட கனத்த முகத்­து­ட­னும், கண்­க­ளில் கண்­ணீ­ரு­ட­னும் உரை­யா­டி­ய­தைப் பார்த்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்றை நாம் நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும். தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய பிறந்­த­நாளை கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். தன் வாழ்­நா­ளில் தான் போட்­டி­யி­டும் இடங்­க­ளில் தோல்­வியை காணாத ஒரு தலை­வர் என்­றால் அது தலை­வர் கலை­ஞர் அவர்­கள். ஆனால் பொது வாழ்க்­கை­யில் இயக்­கத்­தின் எத்­த­னையோ தோல்­வி­களை தன் தோளில் சுமந்த தலை­வர்­தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­கள் பணி­யில் அவர் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த காலத்தை விட, ஆட்­சிப் பொறுப்­பில் இல்­லா­மல் எதிர்க்­கட்­சி­யா­கப் பணி­யாற்­றிய காலங்­கள்­தான் அதி­கம். ஆனால், அவர் தன்­னு­டைய வாழ்க்­கை­யில் தாரக மந்­தி­ரம் என்­பது நாம் ஒரு­வ­ருக்கு நல்­லது செய்­கி­றோம் என்­றால் அவர்­கள் அதற்­காக நன்­றி­யோடு இருப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி இல்லை என்ற கார­ணத்­திற்­காக நாம் நன்மை செய்­வதை நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து அவர்­க­ளுக்­கா­கப் பணி­யாற்ற வேண்­டி­யது நம்­மு­டைய கடமை என்று தன் வாழ்­நாள் தாரக மந்­தி­ர­மாக ஏற்­றுக் கொண்ட தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவ­ரு­டைய பிறந்­த­நாளை நாம் கொண்­டா­டு­கி­றோம். நான் பல முறை பார்த்­தி­ருக்­கி­றேன். தேர்­தல் முடி­வு­கள் இப்­போ­தெல்­லாம் ஒரு நான்கு மணி நேரத்­துக்­குள் தேர்­தல் முடி­வு­கள் தெரிந்து விடு­கின்­றன. முன்­னா­ளில் வாக்கு எண்­ணு­ப­வர்­கள் பெட்­டி­யைத் திறந்து எண்ணி, தக­ராறு நடக்­கும், சண்டை நடக்­கும், எல்­லா­வற்­றை­யும் தாண்டி அதன் முடி­வு­கள் மாலை வர வரத்­தான் தெளி­வா­கத் தெரிய ஆரம்­பிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி மதி­யம் எல்­லாம் ஒரு இறுக்­க­மான சூழல் இருக்­கும். அதைத் தாண்டி மாலை வர வர தோல்­வியா வெற்­றியா என்­பது ஏறத்­தாழ உறுதி செய்­யப்­ப­டும் அந்த நேரத்­தில்­தான், “அடுத்த நாள் நன்றி அறி­விப்­புக் கூட்­டம்” என்று அறி­வித்த தலை­வர் தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த நாள் முர­சொ­லி­யில் கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்கு கடி­தம் எழு­திய தலை­வர் தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அடுத்து பணி என்ன, அடுத்து போராட்­டம் என்ன, அடுத்து ஆர்ப்­பாட்­டம் என்ன, மக்­க­ளுக்­காக எதற்­கா­கக் குரல் கொடுக்க வேண்­டும், எதற்­கா­கப் போராட வேண்­டும் என்ற கருத்­து­களை நாம் அங்கே சட்­ட­மன்­றத்­தில் எடுத்து வைத்து, அங்கே வாதாட வேண்­டும், பேச வேண்­டும், யார் எதைப் பற்­றிப் பேச வேண்­டும் என்று அடுத்த நிமி­டமே சிந்­திக்­கத் தொடங்­கிய தலை­வன் தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னால், வெற்­றி­க­ளும் தோல்­வி­க­ளும் நம்­மு­டைய இயக்­கத்­திற்கு புதி­தல்ல. இந்­தத் தோல்­வி­யைக் கண்டு மனம் தள­ரவோ, கண்­ணீர் வடிக்­கவோ அவ­சி­ய­மில்லை. ஒரு மகிழ்ச்­சி­யான விஷ­யம் என்­ன­வென்­றால், வீரி­யத்­தோ­டும், தைரி­யத்­தோ­டும், அடக்­கத்­தோ­டும், தெளி­வோ­டும் பேசக்­கூ­டிய எத்­தனை பெண்­களை கொண்ட இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதை, நாம் எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போ­து­தான் உண­ரத் தொடங்­கி­யி­ருக்­கி­றோம். இதற்­காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டு மக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பல திட்­டங்­களை முன்­னாள் முத­ல­மைச்­சர் உரு­வாக்­கித் தந்­துள்­ளார். அந்­தத் திட்­டங்­கள் தொட­ருமா என்ற கவலை அனை­வ­ருக்­கும் இருக்­கி­றது. அந்­தக் கவலை நமக்­கும் இருக்­கி­றது; வாக்­க­ளித்த மக்­க­ளுக்­கும் இருக்­கி­றது. சிலர், ‘ஒரு ஓட்­டு­தானே’ என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். ஆனால், அது எப்­படி என்று நினைத்து அவர்­கள் வாக்­க­ளித்­தார்­கள் என்­பது தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் முத­ல­மைச்­சர் கொண்டு வந்த திட்­டங்­கள் தொடர்ந்து செயல்­ப­டுமோ, இல்­லையோ என்ற கவ­லை­யில் மக்­கள் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். முத­ல­மைச்­சர் விஜய் பத­வி­யேற்ற நாளி­லேயே என்ன சொன்­னார்? ‘பணம் இல்லை’ என்­றார். அதன்­மூ­லம், அந்­தத் திட்­டங்­கள் தொட­ருமா என்ற சந்­தே­கத்­திற்­கான அடித்­த­ளத்தை முத­லில் அவரே உரு­வாக்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் கலை­ஞர் அடிக்­கடி சொல்­வார், ‘எது நடந்­தா­லும் என் மீது­தான் பழி போடு­வார்­கள்’ என்று. அது­தான் தற்­போது நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இன்று பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளும், குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளும் தினந்­தோ­றும் நடை­பெற்று வரு­கின்­றன. அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத சூழ­லில் இந்த அரசு இருப்­பதை நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு நடை­பெ­றும் குற்­றங்­களை பற்றி கேட்­டால், அதற்கு திமுக ஆட்­சி­தான் கார­ணம் என்று சொல்­கி­றார்­கள், எப்­படி? மக்­கள் நலத் திட்­டங்­கள் தொட­ருமா என்று கேட்­டால், திமுக ஆட்­சி­யில் நிதி­நிலை ஒன்­றும் இல்­லா­மல் செய்­து­விட்டு சென்று விட்­டார்­கள் என்று பதில் சொல்­கி­றார்­கள். நான்கு மணி நேரம் மின்­தடை ஏற்­பட்­டது என்று கேட்­டால், ‘பியூஸை எடுத்து சென்று விடு­கி­றார்­கள்’ என்று அமைச்­சர் விளக்­கம் அளிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி, எதற்கு எடுத்­தா­லும் முந்­தைய திமுக அரசை குறை சொல்­வது தான், அவர்­க­ளுக்கு தெரிந்த பதில். எந்­தப் பிரச்­சி­னை­யை­ யும் தீர்ப்­ப­தற்கோ, அதைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­திப்­ப­தற்கோ அவர்­கள் தயா­ராக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் ஆட்­சிப் பொறுப்­பேற்­கும் முன்பு, பத்து ஆண்­டு­கள் அ.தி.மு.க. ஆட்சி நடை­பெற்­றது. அந்த ஆட்சி எவ்­வாறு நடை­பெற்­றது என்­பது மக்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். குறிப்­பாக, கொரோனா பேரி­டர் காலத்­தில் மக்­களை காப்­பாற்ற தவ­றிய ஒரு ஆட்சி நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நமது தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­கும் முன்பே, தேர்­த­லில் வெற்றி பெற்­று­விட்­டோம் என்­பது உறு­தி­யா­ன­வு­டன் அதி­கா­ரி­களை அழைத்து, கொரோனா பேரி­ட­ரி­லி­ருந்து மக்­களை எவ்­வாறு பாது­காப்­பது என்று ஆலோ­சித்து செயல்­ப­டத் தொடங்­கி­னார். மக்­க­ளின் நல­னையே முதன்­மை­யா­கக் கருதி சிந்­தித்த ஆட்­சி­தான் திரா­விட மாடல் ஆட்சி. ஆனால் இன்று, ஆட்சி பொறுப்­புக்கு வந்த பிற­கும், பொறுப்பு இல்­லா­மல் பேசிக்­கொண்டு இருக்­கக்­கூ­டிய ஒரு சூழலை நாம் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">ஸ்டிக்­கர் ஒட்டி திட்­டத்தை அறி­விக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘சிங்­கப்­பெண் படை’ என்று இருந்த திட்­டத்தை, ‘காப்­பி–­பேஸ்ட்’ செய்து, ஸ்டிக்­கர் ஓட்­டு­கி­றார்­கள். என்­னென்ன திட்­டங்­கள் இருக்­கி­றது என்று அவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. முதன்­மு­த­லாக பெண்­களை காவல் துறைக்கு கொண்­டு­வந்து தலை­வர் கலை­ஞர். பெண்­கள் பாது­காப்­புக்­காக ஒரு தனி­யான பிரிவை உரு­வாக்­கி­யது முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­னின் திரா­விட முன்­னேற்ற கழக ஆட்­சி­யா­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு புதி­தாக ஒரு சீரு­டையை வழங்­கி­னால், புதிய திட்­ட­மாக மாறி­வி­டுமா? இந்த ஆட்­சி­யில், தய­வு­செய்து பெண்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­குங்­கள். எதை செய்ய முடி­யுமோ, அதை மட்­டும் தேர்­தல் அறிக்­கை­யாக கொடுங்­கள் என்று முன்­னாள் முத­ல­மைச்­சர் சொன்­னார். எதை செய்­கி­றோம், அதை செய்­கி­றோம் என்று மக்­களை ஏமாற்­றா­தீர்­கள். நாம் நினைத்து இருந்­தால், எதை வேண்­டு­மா­னா­லும் சொல்­லி­யி­ருக்­க­லாம். ஆனால்,  செய்ய முடி­யுமோ அதை மட்­டுமே தேர்­தல் அறிக்­கை­யில் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு ஆட்சி பொறுப்­பில் உள்­ள­வர்­கள்,எதை­யெ­தையோ சொன்­னார்­கள். 
6 சிலிண்­டர் தரு­கி­றோம் என்று. தற்­போது ஒரு சிலிண்­டர் கிடைப்­பது கன­வாக மாறிக்­கொண்டு இருக்­கும் சூழ­லில் 6 சிலிண்­டர் வரும், ஆனா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிதி­நிலைஅறிக்கை தாக்­கல் செய்­யப்­ப­டும் போது, மாநி­லத்­தின் நிதி­நிலை குறித்து திமுக அமைச்­சர்­கள் தெளி­வாக எடுத்­து­ரைத்­துள்­ள­னர். ஆனால், தேர்­தல் நேரத்­தில் நினைத்­த­தை­யெல்­லாம் வாக்­கு­று­தி­யா­கக் கூறி­விட்டு, தேர்­தல் முடிந்­த­வு­டன், நிதி இல்லை என்று சொல்­கி­றார்­கள். நாம் ஆட்சி பொறுப்­போக்கு வந்­த­போது, தமிழ்­நாடு நிதி­மிகை மாநி­ல­மாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு வளர்ந்து வரும் மாநி­லம், மக்­க­ளுக்­கா­கச் செல­விட நிச்­ச­ய­மா­கக் கடன் வாங்­கும். இது அடிப்­படை பொரு­ளா­தா­ரம். கடன் வாங்­கு­வ­தற்கு ஒரு வரம்பு உள்­ளது; அந்த வரம்­பைத் தாண்­டக்­கூ­டாது. தமிழ்­நாடு அந்த வரம்பை ஒரு­போ­தும் தாண்­ட­வில்லை. உங்­க­ளை­விட நூறு மடங்கு ஒன்­றிய அரசை எதிர்த்­த­வர்­கள் நாங்­கள்; இப்­போ­தும் தொட ர்ந்து எதிர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டிற்கு எந்த நிதி­யும் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனா­லும், தமிழ் மக்­க­ளைப் பாது­காப் 
ப­தி­லும், அவர்­க­ளுக்கு தேவை­யான திட்­டங் களை வழங்­கு­வ­தி­லும் தமிழ்­நாடு முன்­மா­தி­ரி­யாக இருந்­தது. நாடு முழு­வ­தும் உள்ள பல மாநி­லங்­க­ளி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு வந்து, இங்­குள்ள திட்­டங்­கள் எவ்­வாறு செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பதை கற்­றுக்­கொண்டு சென்ற நிலை இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு தமிழ்­நாட்­டிற்கு வர வேண்­டிய முத­லீ­டு­கள் எங்கே செல்­கின்­றன என்று தெரி­ய­வில்லை. அவை பிற மாநி­லங்­க­ளுக்­குச் செல்­கின்­றன. ஆனால், தமிழ்­நாட்­டிற்கு பல லட்­சம் கோடி ரூபாய் முத­லீ­டு­க­ளைக் கொண்டு வந்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, வருத்­தத்­தோடு இதைச் சொல்­கி­றேன். என்­னு­டைய தூத்­துக்­குடி தொகு­தி­யில் ஒரு கப்­பல் கட்­டும் தொழிற்­சாலை வர வேண்­டி­யி­ருந்­தது. அதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் (MoU) கையெ­ழுத்­தா­கி­யி­ருந்­தது. ஆனால், தற்­போது அந்­தத் திட்­டம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரக்­கூ­டிய ஒரு தொழிற்­சாலை அது. உப்­ப­ளங்­க­ளில் கடி­ன­மாக உழைத்­துக் கொண்­டி­ருந்த மக்­க­ளுக்கு ஒரு மாற்­றுப் பாதை­யை­யும், சிறந்த எதிர்­கா­லத்­தை­யும் உரு­வாக்­கித் தரக்­கூ­டிய வாய்ப்­பாக அது இருந்­தது. ஆனால், அந்­தத் தொழிற்­சாலை இன்று இல்லை. இது­தான் மாற்­றமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த மாற்­றத்­தி­லி­ருந்து மக்­க­ளைப் பாது­காக்க வேண்­டி­யது நம்­மு­டைய கடமை. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனது கட­மை­யைச் செய்­வ­தில் என்­றுமே தவ­றி­ய­தில்லை. ஆட்­சிப் பொறுப்­பில் இருக்­கி­றோமா இல்­லையா என்­பதுகுறித்து திமு­க­வி­ன­ருக்கு கவ­லையே கிடை­யாது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் உடன்­பி­றப்­பு­க­ளுக்கு, மக்­க­ளைப் பாது­காப்­ப­து­தான் நம்­மு­டைய கடமை. அத­னால், ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும், எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும், தொடர்ந்து மக்­க­ளுக்­கா­கப் பாடு­ப­டு­வோம்; மக்­க­ளுக்­கா­கப் போரா­டு­வோம். மக்­கள் எந்த முடிவை எடுத்­தா­லும் அது குறித்து எங்­க­ளுக்கு வருத்­த­மில்லை. ஆனால், நம்­மு­டைய முடிவு ஒன்­று­தான். தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக எப்­போ­தும் பணி­யாற்­று­வோம் என்­ப­து­தான் என்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த நிகழ்­வில், சென்னை கிழக்கு மாவட்­டக் கழக செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ., திமுக மாண­வர் அணி செய­லா­ளர் ஈரோடு.வீர­மணி, சென்னை மாந­க­ராட்சி மேய­ரும் தலைமை செயற்­குழு உறுப்­பி­ன­ரு­மான பிரியா ராஜன்,  தி.மு.க. செய்தி தொடர்­புக்­குழு இணைச் செய­லா­ளர் தமி­ழன் பிர­சன்னா, சென்னை கிழக்கு மாவட்­டக் மக­ளிர் தொண்­டர் அணி அமைப்­பா­ளர் ராஜேஸ்­வரி ஸ்ரீதர், திமுக மக­ளிர் அணி நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>