<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1060" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 15 2026 06:42:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260615T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="15062026-CHN-05" position.sequence="05" ex-ref="15062026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">மின்வெட்டால் இருளில் தமிழ்நாடு! வெடிக்கும் மக்கள் போராட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழி போடும் அமைச்சர்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="07bw_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="05bw_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ன் அரசை பொறுத்தவரை என்னை தவிர வேறு எந்த அதிகார மையமும்’ இருக்காது. திரைமறைவு அரசியல் எனக்கு தெரியாது, எதுவாக இருந் தாலும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக நடக்கும்” என பதவியேற்பு விழாவில் எழுதி கொடுத்த பஞ்ச்  டைலாக்கை பக்காவாக பேசிய தவெக தலைவரான விஜய் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்து விட்டது. இதில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக “200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்” வழங்கும் கோப்பில் விஜய் தனது முதல் கையெழுத்திட்டார். ஆனால், அந்த முதல் கையெழுத்தின் ஈரம் காய்வதற்குள், இன்று ஒட்டுமொத்த தமிழகமும் கடுமையான, அறிவிக்கப் படாத தொடர் மின்வெட்டால் இருளில் தவித்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“மக்கள் என் மீது வைக்கிற விமர்சனங்களை நான் வெறும் பேச்சா பார்க்கல, அதைத்தான் என்னோட அடுத்த கட்ட நல்ல காரியங்களுக்கான எனர்ஜியா எடுத்துக்கிறேன் “ என கூறிய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தினசரி மக்களின் எனர்ஜிய (மின்சாரம்) கட் செய்து வருவது எந்த வகையில் நியாயம் என விமர்சனம் எழுந்துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">தூக்கத்தை இழந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">மக்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடந்த ஒரு மாத காலமாக நள்ளிரவிலும், பகலிலும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தோடு, இந்த அறிவிக்கப்படாத மின் தடையால் பொது மக்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மாலையிலும், நள்ளிரவிலும் மணி கணக்கில் மின்சாரம் நிறுத் தப்படுவதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்துள்ளது. இதனால், மக்கள் தினமும் இரவில் சாலை மறியலில், மின்வாரிய அலுவலகங்களை முற்றுகை, மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு போடுவது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">நாடகத்தை அரங்கேற்றிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">அமைச்சர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மருத்துவமனைகளில் அடிக்கடி மின்வெட்டால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் சிறு வணிகங்கள் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த மின்வெட்டு பிரச்சி னையை சமாளிக்க முடியாமல் செய்வதறி யாது இருந்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வாரியத்தின் ஊழலை களையெடுப்பேன் என போர்க்கொடி தூக்கிய நிலையில் அண்மையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த கால ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பான ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இதனால் மக்கள் திசை திரும்புவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவை நடக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து மின்வெட்டுக்கு தொழில் 
நுட்ப கோளாறுகள் காரணமல்ல என்றும், இது கடந்த தி.மு.க. ஆட்சியின் தவறான உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டி யுள்ளார். சில பகுதிகளில் மர்ம நபர்கள் வேண்டுமென்றே மின் கம்பங்களில் உள்ள ‘பியூஸ் கேரியர்களை’ கழற்றி திருடுவதால் தான் மின் தடை ஏற்படுகிறது என அமைச்சர் வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">உண்மையை ஒப்பக் கொண்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">மின்வாரியத் தலைவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், அமைச்சரின் இந்த அரசியல் பழிசுமத்தல்களுக்கு மாறாக, தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான், அதை நாங்கள் மறைக்கவோ- மறுக்கவோ இல்லை” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இரவு நேரங்களில் மின்தடை புகார்கள் அதிகளவில் வருவதை ஏற்றுக்கொண்ட அவர், உள் ளூர் அளவிலான விநியோக கோளாறுகளைச் சரிசெய்யவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் அதிகாரிகள் தீவிரமாக பணி யாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்சர் கடந்த ஆட்சியாளர்கள் மீது பழிபோட தமிழக மின்வாரிய தலைவரோ மின்வெட்டு பிரச்னை இருப்பது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இருவரின் பேச்சுகளுமே சந்தேகத்தை எழுப்புகிறது. விளம்பர  அரசியல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் தங்களை இருளில் தவிக்கவிட்டுள்ள தாக வாக்களித்த மக்கள் த.வெ.க. அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இந்த நிர்வாகச் சீர்குலைவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. “பொய்க்கால் குதிரை அரசு காரணங் 
களைச் சொல்லாமல் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரி 
வித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கர்ஜித்த முதல்வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">நடவடிக்கை எடுப்பாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று யாரும் ஆட்டம் ஆட வேண்டாம்; என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்” என்று பதவியேற்பு விழாவில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய், இன்று தனது சொந்த தலைமையிலான மின்சார வாரி யத்தில் நிலவும் குளறுபடி களையும், மக்களின் துயரங்களையும் தீர்க்க முடியாமல் திணறி வருகிறார். இலவச மின்சார வாக்குறுதியை விட தடையற்ற அடிப்படை மின்சாரத்தையே மக்கள் முதன்மையாக எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து, த.வெ.க. அரசு பழிபோடும் அரசிலைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் உள்கட்ட மைப்பைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">மின்னகத்தில் ஒரே மாதத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">8 லட்சம் புகார்கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் நில வும் கடுமையான கோடை வெப்பம் மற்றும் உள்கட்டமைப்பு கோளாறுகள் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்திற்குப் புகார்கள் வரலாறு காணாத அளவில் குவிந்துள்ளன. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 புகார்கள் வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் நாள் ஒன்றுக்கு 45,000 முதல் 60,000 புகார்களாக உயர்ந்துள்ளது. கடந்த மே முதல் ஜூன் வரையிலான தவெக ஆட்சியின் முதல் ஒரு மாத காலத்தில் மட்டும், மின்வெட்டு மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்பு பழுதுகள் மின்னகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள் ளன. இதில் சென்னை (மற்றும் புறநகர் பகுதிகள்), கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட் டங்களில் இருந்துதான் 65 சத விதத்திற்கும் அதிகமான மின் தடை புகார்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பல்லாயிரக்க ணக்கான மக்கள் நள்ளிரவில் அழைப்பதால், மின்னகத்தின் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தும் பெரும்பாலான நேரங்களில் ‘அனைத்து இணைப்புகளும் பிஸியாக உள்ளன’ என்ற பதிலே வருவ தாக பொதுமக்கள் குற்றம் சாட் டுகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இருளில் முதல்வர் விஜய் தொகுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. தலைவரும் முதல்வருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் வென்றுள்ள நிலையில் அங்கும் மின்வெட்டு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதி மக்கள், கடந்த சில தினங்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் மட்டுமின்றி நள்ளிரவிலும் பல மணி நேரம் அறிவிக்கப்ப டாத மின் தடை ஏற்படுவதாலும், இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டால் எந்தவொரு முறையான பதிலும் கிடைக்காததாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கினர். போராட்டம் நள்ளிரவில் தீவிரமடைந்ததை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்சாரத்தை மீட் டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பே மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியிலேயே மின்சார வாரி யத்தை முறையாக நிர்வகிக்க முடியவில்லை என எதிர்க்கட் சிகள் த. வெ. க.அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வரு கின்றன. “வாக்களித்த சொந்த தொகுதி மக்களையே இருளில் தவிக்கவிடும் முதல்வர், தமிழ கத்திற்கு எப்படி தடையற்ற மின் சாரம் வழங்குவார்?” என சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">தொடர் மின்தடை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">500 ஏக்கர் பயிர்கள் கருகியது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1.57 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கிய தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுவரை இல்லாத அளவிற்கு தொடர் மின் வெட்டு காரணமாக விவசாயிகள் விழிபிதுங்கியுள்ளனர். தஞ்சாவூர் அடுத்த ராமபுரத்தில் மின் வெட்டு பிரச்சினையால் நாற்றங்கால் நடவு செய்யப்பட்ட நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 500 ஏக்கரில் உள்ள நாற்றங்கால் பழுப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால் விவசா யிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலைதான் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை பகுதிகளிலும் நிலவுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">அலட்சியம் காட்டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">அமைச்சர் – அதிகாரிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டோம். இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்படாது என உறுதியாக தெரிந்த நிலையில் ஏற்கனவே சாகுபடிக்காக பாய் நாற் றங்கால் வாங்கி வைத்துள்ள நாங்கள் மாற்றம் அடைந்துள்ளோம். ஆழ்துளை கிணறை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ளலாம் என நினைத்து ரூ.12,000 மதிப்புள்ள பாய் நாற்றங்கால் வாங்கி நடவு செய்ய முடிவு செய்தோம். தொடர் மின்தடையால் மும்முனை மின்சாரமும் முறையாக கிடைக்கவில்லை. இதனால் 21 நாட்களுக்குள் நட வேண்டிய பாய் நாற்றங்கால், நாட்கள் கடந்தும் நடவு செய்யாதால் கருகி பழுக்க தொடங்கி விட்டது. இதனால் பெரும் இழப்பு ஏற் பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண்மை அமைச்சர் ஒரு முறை கூட வரவில்லை. வேறு எங்கும் சென்று விட்டாரா? என தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்சியில் துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே களத்துக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் தற்போது அதி காரிகள் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு எதையும் கண்டு கொள்ளவதில்லை. அதிகாரிகள், அமைச்சரின் இந்த செயல் அலட்சியத்தை காட்டுகிறது. மேட்டூர் அணையும் திறக்க போவதில்லை, மின்வெட்டு பிரச்சனையையும் தீர்க்க போவதில்லை. விவசாயிகள் நாங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து நஷ் டத்தை சந்தித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அப்போது கூட இந்த அரசு எட்டி பார்க்காது. மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கினாலே போதும். நாங்கள் பிழைத்து கொள் வோம். அதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை” என்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">நன்றி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="15">‘தினகரன்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">நாள் : 14.6.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>