<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,68,958,831" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 14 2026 22:09:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260615T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="15062026-TRY-04" position.sequence="04" ex-ref="15062026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சுதந்திர நாளில் தேசியக் கொடியேற்றும் உரிமையை – இந்தியாவின்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">ஒவ்வொரு முதல்வருக்கும் பெற்றுத்தந்த காலச்சிற்பி கலைஞர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதை தேரடித் திடலில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் கோபால் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Nakeeranbw_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் 103ஆம்­ஆண்டு பிறந்­த­நாள் விழா வாழ்த்­த­ரங்க நிகழ்ச்சி சைதை தேர­டித் திட­லில் 3–6–2026 அன்று மாலை 6 மணிக்­குத் தொடங்கி நடை­பெற்­றது. இவ்­வி­ழா­வில் நக்­கீ­ரன் கோபால் கலந்­து­கொண்டு   உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அவ்­வுரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மே–10ஆம் தேதி எந்த புண்­ணி­ய­வான் நேரம் குறித்­துக்­கொ­டுத்­தாரோ தெரி­ய­வில்லை. அன்­றி­லி­ருந்து இன்­று­வரை கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு, பாலி­யல் பலாத்­கா­ரம் இன்­றைக்கு வரைக்­கும் 40 எண்­ணிக்­கை­யில் இருக்­கி­றது. இதற்­கு­மேல் இரவு ஆனால் எவ்­வ­ளவு கூடும் என்று தெரி­யாது. இதை எந்த ஜோசி­யக்­கா­ரர் குறித்­துக்­கொ­டுத்­தாரோ அவரை நீங்­கள் பாராட்ட வேண்­டும். அவர் நேரம் குறித்­துக்­கொ­டுத்­தி ­ருக்­கி­றார். இந்த நேரத்­தில் இந்த சேர்ல போய் உட்­காரு என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நான் கலை­ஞ­ரைப் பற்­றித்­தான் பேச வந்­தி­ருக்­கி­றேன். வேற எது­வும் பேச­வில்லை. போர போக்­கில் எதை­யும் சொல்­லா­மல் போய்­விட்­டால், இவர் இப்­படி சொல்­லா­மல் போய்­விட்­டாரே என்று சொல்ல முடி­யா­தல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திருச்­சி­யில் நன்­றி­சொல்­வ­தற்கு சென்­றார்­கள். அந்த உரை முடி­வில் Confident ஆக இருங்­கள். Confident ஆக இருங்­கள் வெற்றி நிச்­ச­யம் என்று சொல்­கி­றார். அவ­ருக்கு யாரா­வது ஒரு­வர் போய் நீங்­கள்­தான் முத­ல­மைச்­சர் என்­பதை சொல்ல வேண்­டும். அதை சொல்ல வேண்­டும் அல்­லவா? ஒரு­வ­ரும் அதை அவ­ருக்கு சொல்­ல­மாட்­டேன் என்­கி­றார்­கள். எதற்கு கான்­பி­டன்­டாக இருங்­கள் என்று சொல்­கி­றார் என்று தெரி­ய­வில்லை. இப்­போ­து­தானே தேர்­தல் முடிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஜன­நா­ய­கன் பட அதி­ப­ருக்­கும் அவர் மாளி­கைக்­கும் என்ன சம்­பந்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மந்­திரி சபை அமைப்­ப­தற்கு கவர்­ன­ரைச் சந்­தித்­த­வர்­கள், ஜன­நா­ய­கன் பட அதி­பர், மற்­றொ­ரு­வர் விஷ்­ணு­ரெட்டி என்­ப­வர். இவர்­கள் இரண்­டு­பே­ரும் கவர்­ன­ரி­டம் என்ன வேலை என்று யாரா­வது கேட்­டார்­களா? மந்­திரி சபை அமைப்­ப­தற்­கும், இவர்­கள் போய் கவர்­னரை சந்­திப்­ப­தற்கு என்ன சம்­பந்­தம் இருக்­கி­றது? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது நமது தலை­வர் ஆறு மாதம் பொறுத்­தி­ருப்­போம் என்று சொல்­லி­விட்­டார். நீங்­கள் பொறுத்­தி­ருக்­க­லாம். நாங்­கள் பொறுத்­தி­ருக்­க­மாட்­டோம். நீங்­கள் சும்மா இருக்­க­லாம். நாங்­கள் சும்மா இருக்க முடி­யாது. நமது அமைச்­ச­ரை­யும் சேர்த்­து­தான். அவ­ரும் தலை­வர் சொன்­ன­மா­தி­ரி­தான் சொன்­னார். கொஞ்­சம் வருத்­த­மா­கத்­தான் இருந்­தது. நமது சுப.வீ. அவர்­க­ளி­டம்­தான் புலம்­பி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">காலச்­சிற்பி  முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், இன்­றைக்கு நான் இந்த இடத்­தில் நிற்­கி­றேன் என்­றால், அவ­ரில்­லா­மல் வந்­தி­ருக்­க­மு­டி­யாது. நிச்­ச­ய­மாக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் படிக்­கும்­போது, சீனி­வா­சன் என்­கிற இந்தி பண்­டிட் இருந்­தா­ராம். அவர் கலை­ஞரை இந்தி கத்­துக்­கொள். கத்­துக்­கொள் என்று சொல்­வா­ராம். அந்த இந்தி வகுப்பை மட்­டும் புறக்­க­ணித்­து­விட்டு சென்­று­வி­டு­வா­ராம். அந்த இந்தி பண்­டிட் ஹோமி­யோ­பதி மருத்­து­வர் ஆகி­விட்­டா­ராம். அவர் ஒரு இன்ஸ்ட்­டி­யூட் ஆரம்­பிக்­கி­றார். அந்த இன்ஸ்ட்­டி­யூட்­டிற்கு முத­ல­மைச்­ச ­ரா­கி­விட்ட கலை­ஞரை சிறப்பு விருந்­தி­ன­ராக அழைத்­தா­ராம். அப்­போது வர­வேற்று பேசும்­போது சீனி­வா­சன் சொன்­னா­ராம், நான் இந்தி பண்­டிட்­டாக இருந்­தேன். கலை­ஞர் படித்த பள்­ளி­யில், நான் இந்தி படி­யுங்க, படிங்க என்று சொன்­னேன். அப்­போது இந்தி படித்­தி­ருந்­தால், இப்­போது டெல்லி போகும்­போது இந்­தி­யிலே நிறைய பேரி­டம் பேச­லாம் அல்­லவா, அதை விட்­டு­விட்­டார் என்­றா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் பேசும்­போது சொன்­னா­ராம், நல்­ல­வேளை உங்­கள் பேச்­சைக் கேட்­க­வில்லை. உங்­கள் பேச்சை கேட்­கா­ம­லி­ருந்­த­தால்­தான் நான் இப்­போது முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன். இல்­லை­யென்­றால் நான் ஒரு இடத்­தில் கணக்­கப்­பிள்­ளை­யாக இருந்­தி­ருப்­பேன் என்று தெரி­வித்­தா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ரீல்­சில்­தான் ஆட்­சியே நடக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது வந்­தி­ருக்­கிற முத­ல­மைச்­சர் 5, 10 மணித்­து­ளி­க­ளில் சந்­திப்­பெல்­லாம் கிடை­யாது. இப்­போது எல்­லோ­ரும் கேட்­கி­றார்­கள். முத­ல­மைச்­சர் சென்­றார், செலவு மட்­டும் ரூ.50 கோடி ஆகி­விட்­டது. பிர­தம மந்­தி­ரியை பார்த்­தார். வெறும் பத்து நிமி­டம் என்­கி­றார்­கள். சார் நாங்க வந்து ரீல்­ஸில்­தான் ஆட்­சி­யையே நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றோம். எங்­க­ளுக்­குத் தேவை இரண்டு நிமி­டம்­தான். அதி­க­மாக தேவைப்­பட்­டால் மூன்று நிமி­டங்­கள் மட்­டும்­தான். அது­மட்­டும் போதும். ஒன்று பூச்­செண்டு கொடுப்­பது, வாங்க, பொன்­னாடை போர்த்த, அதை திரும்பி வாங்க, உக்­கார, பல்­லிக்க, எந்­திரி, நீ போ என்று அவர் சொல்ல, அவ்­வ­ள­வு­தான். இது­போ­தும்­சார். இந்த ரீல்ஸ்­ஸில் வாழ்க்­கையை நடத்­தி­வி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அது தெரி­யா­மல் நாம். ஏன்? முத­ல­மைச்­சர் பிர­தம மந்­தி­ரி­யைப் பார்த்­தார். ஏன் ஒன்­றும் பேச­வில்லை. ஏனென்­றால் அவர் என்ன முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலினா? இல்லை முத்­த­மி­ழ­றி­ஞரா? இரும்­புப் பெண்­மணி இந்­தி­ரா­காந்­தி­யி­டமே போய் தமிழ்­நாட்­டிற்கு தனிக்­கொடி வேண்­டும் என்று கேட்­ட­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அந்­தக் கொடி­யின் வடி­வத்­தை­யும் கையோடு எடுத்­துச் சென்­று­விட்­டா­ராம். உடனே இந்­தி­ரா­காந்தி, இவர்­போல் ஒவ்­வொரு மாநி­லத்­தி­லே­யும் கேட்­டார்­கள் என்­றால் என்ன செய்­வது? கொஞ்­சம் பொறுங்­கள். பிறகு விவா­திக்­க­லாம் என்று சொல்­லி­விட்­டா­ராம். அப்­ப­டி­யில்­லை­யென்­றால் சுதந்­தி­ரத்­தி­னத்­திற்கு தேசி­யக் கொடி­யேற்­று­கிற உரி­மை­யா­வது கொடுங்­கள் என்று தெரி­வித்து அந்த உரி­மை­யைப் பெற்­ற­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வர இருக்­கிற ஆகஸ்டு–15 அன்று சுதந்­தி­ரத்­தி­னத்­திற்கு தாம்­தான் முத­ல­மைச்­சர் என்­ப­தையே மறந்­திட்டு இருக்­கி­ற­வர், ஆக.15 அன்று கொடி­யேற்ற வேண்­டும். அந்த கயி­ரைத்­தொ­டும்­போது ஒரு ஷாக் அடிக்­கும் பாருங்­கள். அந்த ஷாக்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வாங்­கிக்­கொ­டுத்­தது. அவர் இல்­லை­யென்­றால் அந்த உரி­மை­யைப் பெற்­றி­ருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முதல் வரி­சை­யில் திரிஷா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">3வது இடத்­தில் தமிழ்­தாய் வாழ்த்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரு மாநில முத­ல­மைச்­சர் பிர­த­ம­ரி­டம் எந்த உரி­மை­யைப் பெற வேண்­டும் என்­பதை தொடங்கி வைத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அதே­போல்­தான் தமிழ்த்­தாய் வாழ்த்தை அனைத்து அரசு நிகழ்ச்­சி­க­ளி­லும் முத­லில் பாட வேண்­டும் என்ற உத்­த­ர­வைப் போட்­ட­வர் முத்­த­மி­ழ­றி­ஞர். முதல்­வ­ரி­சை­யில் திரி­ஷா­வை­யும், மூன்­றா­வது இடத்­தில் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லைப் பாடி­ய­தை­யும் இந்த அர­சாங்­கத்­தில் பார்த்­து­விட்­டோம். ஏனென்­றால் உரி­மை­க­ளைப் போராடி பெற்­ற­வர்­க­ளுக்­குத்­தான் தெரி­யும் அந்த வலி. அதன்­பி­றகு எல்­லோ­ரும் சொல்­கி­றார்­கள் முன்­வ­ரி­சை­யில் திரிஷா வரக்­கூ­டாது, தமிழ்த்­தாய் வாழ்த்­து­தான் அரசு நிகழ்ச்­சி­க­ளில் பாட வேண்­டும் என்று சொன்­ன­பி­றகு, அடுத்த நிகழ்ச்­சி­யில் நாங்­கள் தமிழ்த்­தாய் வாழ்த்தை முத­லில் பாடு­வோம் என்று தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இந்த நாடு எதை நேக்­கிப் 
போய்க்­கொண்­டி­ருக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடை­சி­யாக நன்­றி­சொல்­கி­றக் கூட்­டத்­தில் அங்­கே­போய் தமிழ்த்­தாய் வாழ்த்­தைப் பாடி­னார்­கள். எப்­போ­தும் நல்­ல­வற்­றையே அனு­ப­விக்­க­மு­டி­யா­தல்­லவா? கெட்­ட­தை­யும் அனு­ப­விக்க வேண்­டு­மல்­லவா? இதை­யெல்­லாம் பார்க்­க­ணும் என்­பது ஒரு வித­மான விதி. சுப.வீ.க்கு விதி­மேல் நம்­பிக்கை இல்லை. நல்­ல­தையே பார்த்­தி­யி­ருக்­கி­றோம். இப்­போது பட்­டு­வேட்டி கட்டி வந்­த­தையே ரீல்ஸ் போடு­கி­றார்­கள். அதை பார்க்­கி­றார்­கள். இந்த நாடு எதை­நோக்­கிப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேக­தாது, மேக­தாது என்­றார்­கள். அது சரி. மேக­தாது என்­றால் என்­ன­வென்று முத­லில் சொல்­லிக்­கொ­டுக்க வேண்­டு­மல்­லவா? சேர்ந்­த­வர்­க­ளெல்­லாம் சிவ­லிங்­க­மாக இருந்­தால் என்ன செய்­வார்­கள்? மேக­தா­து­விற்கு யார் போரா­டு­வது? கர்­நா­ட­கக்­கா­ரன் நான் அணைக் கட்­டு­வேன் என்­கி­றான். தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ருக்கு காது­கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தமி­ழுக்­கா­கவே உழைத்த மகான் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரோடு சேர்ந்து கொஞ்­ச­நாள் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றோம். மேடை­யில் இருக்­கிற அத்­து­ணை­பே­ரும் கலை­ஞ­ரோடு இருந்து பணி­யாற்­றி­ய­வர்­கள்­தான். ஆனால் ஒரு மனி­தன் 85 வயது வரை ஒரு நாளைக்கு நான்கு அல்­லது ஐந்து மணி­நே­ரத்­திற்கு உறங்­கி­விட்டு, மீதி­யி­ரு க்­கிற நேரங்­க­ளில் தமி­ழர்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றிய மனி­தன், அது பத­வி­யில் இருந்­தா­லும் சரி, பத­வி­யில் இல்­லை­யென்­றா­லும் சரி, அவர்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். தமி­ழுக்­கா­கவே உழைத்த ஒரு மகான்­தான் கலை­ஞர். அவ­ருக்­குத்­தான் இன்­றைக்கு வாழ்த்­த­ரங்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1962இல் சைதாப்­பேட்­டை­யில் வெற்­றி­பெ­று­கி­றார். 1963இல் கடற்­க­ரை­யில் கூட்­டம், வர­யி­ருக்­கிற 1967 தேர்­த­லில், எப்­படி நாம் தேர்­தலை சந்­திப்­பது என்று கூட்­டம்­போ­டு­கி­றார்­கள். அப்­போது கலை­ஞர்­தான் சொன்­னா­ராம், வர­இ­ருக்­கிற 1967 தேர்­த­லில் நாம் எத்­த­னைத் தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டு­வது என்று கணக்­கெ­டுக்க சொல்­கி­றார் கலை­ஞர். 200 தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டப்­போ­கி­றோம். ஒரு தொகு­திக்கு ரூ.5000 செல­வா­கும் என்று வைத்­துக்­கொண்­டாம் என்­றால், 200 தொகு­திக்­கும் நமது தேவை பத்து லட்­சம் ரூபாய். பத்து லட்­சம் ரூபாயை யார் திரட்­டப்­போ­கி­றோம் என்று கலை­ஞர் கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அப்­போது ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பார்த்­துக்­கொள்­கி­றார்­க­ளாம். இப்­போ­து­தான் வெற்­றி­பெற்று வந்­தோம். ஒரு ஆண்­டு­தான் ஆகி­றது. 1967 வரு­வ­தற்கு இன்­னும் நிறைய ஆண்­டு­கள் இருக்­கி­றது. அதற்­குள் ஏன் அவ­ச­ரப்­ப­டு­கி­றீர்­கள் என்­கி­றார்­க­ளாம். இல்லை திட்­ட­மி­ ட­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சைதாப்­பேட்டை தொகுதி வேட்­பா­ளர் 
ரூ.11 லட்­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1966ஆம் ஆண்டு வள­ச­ர­வாக்­கத்­தில் ஒரு சிறப்பு மாநாடு போடு­கி­றார்­கள். கலை­ஞர்  மாநாட்­டில் நான் பொறுப்­பேற்­றுக் கொள்­கி­றேன் என்று  சொல்­லி­வி­டு­கி­றார். அந்த மாநாட்­டில் ரூ.11 லட்­சத்­தைத் திரட்டி அண்­ணா­வி­டம் கொடுத்­து­வி­டு­கி­றார் கலை­ஞர். 1967 தேர்­த­லில் வேட்­பா­ளர் தேர்வு வரு­கி­றது. ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் யார் யார் போட்­டி­யி­டு­கி­றார்­கள் என்று சொல்­லும்­போது, சைதாப்­பேட்டை, சைதாப்­பேட்டை என்று இரண்­டு­த­டவை அறி­விக்­கி­றா­ராம் அறி­ஞர் அண்ணா. இரண்­டா­வது தடவை சைதாப்­பேட்­டையை குறிப்­பிட்டு அவர்­சொன்ன வார்த்தை 11 லட்­சம் என்று தெரி­வித்­தா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த சைதாப்­பேட்­டைத் தொகு­தி­யில் கலை­ஞர் போட்­டி­யி­டும்­போது அவ­ருக்கு வைத்த பெயர் 11 லட்­சம். அப்­போது வெற்­றி­பெற்று கலை­ஞர் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராகி, தமிழ்­நாட்­டிற்கு உழைத்­தது இந்த பத­வி­யி­லி­ருந்து ஆரம்­பித்­தது தான். அடுத்து திரு­வா­ரூக்கு செல்­கி­றார். கலை­ஞ­ரின் 7ஆம் வகுப்பு ஆசி­ரி­யர் சேது­ரா­மய்­யர். படித்து முடித்­து­விட்­டார். மீண்­டும் அதே ஊருக்­குச் செல்­கி­றார். ஆசி­ரி­யர் கூட்­டணி மாநாடு நடக்­கி­றது. அதற்கு கலை­ஞர் செல்­கி­றார். அந்த மாநாட்­டில் சேது­ரா­மய்­யர் எங்கே என்று கேட்­கி­றார்? அவர் ஓய்வு பெற்­று­விட்­டார் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் படித்த பள்­ளி­யில்­தான் அந்த மாநாடு. ஓய்­வுப் பெற்­று­விட்­டால் விட்­டு­வி­டு­வீ ர்­களா என்று கேட்­கி­றார் கலை­ஞர். கூட்­டம் முடிந்­த­வு­டன், கலை­ஞர் நண்­பர் தென்­னன் அவர்­களை கலை­ஞர் கூப்­பிட்டு, சேது­ரா­மய்­யர் வீட்­டிற்­குச் செல்­வோம் என்று கூறி, சென்­ற­வு­டன் அவர் வீடு, உட்­கா­ரு­வ­தற்­குக் கூட இருக்கை இல்­லை­யாம். பர­ப­ரத்­துப்­போய் இருந்­தார்­க­ளாம். வேக­மா­கப் போய் பெஞ்­சில் கலை­ஞர் அமர்ந்­து­விட்­டா­ராம். அப்­போது கலை­ஞர் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">என்ன திடீர் என்று வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று ஆசி­ரி­யர் கேட்­டா­ராம். எனக்கு தக­வல் தெரி­ய­வில்லை என்று தெரி­வித்­தா­ராம். உங்­க­ளி­டம் படிக்­கும்­போது எனக்கு ஒரு சிறிய நிகழ்வு நினை­வி­ருக்­கி­றது என்று கலை­ஞர் தெரி­வித்­தா­ராம். என்ன சொல்லு என்று ஆசி­ரி­யர் சொன்­ன­வு­டன், 55 எண்­ணிக்­கை­யில் கத்­தை­யான நோட்­டுக்­கள் எல்­லாம் என்­னி­டம் கொடுத்து, நீ போகும்­போது வீட்­டில் கொடுத்­து­விட்டு போ என்று சொல்­லி­வி­டு­வீர்­கள். உங்க வீடு இருப்­பது ரொம்­ப­தூ­ரம். நோட்­டு­கள் அதி­கம் கன­மா­னவை. நான் தலை­யில் சுமந்­து­கொண்டு உங்­க­ளைத் திட்­டிக்­கொண்டே செல்­வேன். இனி­மேல் இவ­ரி­டம் படிக்­கவே கூடாது என்று சொல்­லிக்­கொண்டே செல்­வேன்.  நாளைக்­குக் கொடுத்­தால் வாங்­கக் கூடாது என்று நினைத்­து க்­கொண்டே செல்­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வீட்­டில் கொடுத்­த­வு­டன், இவ்­வ­ளவு கன­மாக இருக்­கி­றதே என்று அம்மா அவர்­கள் வாங்­கி­வைத்­துக்­கொண்டு, டேய் உள்ளே வாடா, ஒரு கப் காபி சாப்­பிட்­டு­விட்டு போ என்று சொன்­னார்­கள். அப்­போ­து­தான் காபி எப்­படி இருக்­க­வேண்­டும் என்­ப­தைத் தெரிந்து கொண்­டேன். இது­வ­ரைக்­கும் இப்­படி ஒரு காபியை நான் குடித்­ததே இல்லை என்று கலை­ஞர் சொன்­னா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அடுத்­த­நாள் உங்­க­ளி­டம் நான் கேட்­டேன், சார், இன்­றைக்கு நோட்­டு­கள் இல்­லையா? நான் வீட்­டில் கொண்­டு­போய் கொடுக்க என்று கேட்­டேன். அதற்கு நீங்­கள், நோட்­டு­கள் இல்லை. ஆனால் நீ வீட்­டிற்­குப் போ. உனக்கு வேலை ஏதோஇருக்­கி­ற­தாம் என்று தெரி­வித்­தா­ராம். அப்­போது மீண்­டும் நீங்­கள் அனுப்­பி­னீர்­கள். போனேன் ஒரு காபி கொடுத்­தார்­கள். குடித்­து­விட்டு வந்­தேன். அப்­போது தினந்­தோ­றும் நீங்­கள் வீட்­டிற்கு போய்­விட்டு போ என்று சொல்­வீர்­கள். அப்­போது தினந்­தோ­றும் நான் வீட்­டிற் ­குச் சென்று காபி சாப்­பிட்டு செல்­வேன் என்று கூறி­னா­ராம். அது­போல் காபியை இன்­று­வரை நான் சாப்­பிட்­டதே இல்லை என்று கலை­ஞர் சொன்­னா­ராம். செய்­நன்றி என்­பது இருக்­கி­ற­தல்­லவா? அந்­தக் கருத்­திற்­கு­தான் வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2010ஆம் ஆண்டு பெரி­யார் விருது கொடுத்­தார்­கள். முதல்­நாள் மாவட்ட ஆட்­சி­யர் போன்­செய்­தார். பெரி­யார் விருது என்­பது மிகப்­பெ­ரிய விருது. அர­சாங்க வாக­னத்­தில் நாங்­களே வந்து அழைத்­துச்­சென்று, விருது பெற்­ற­வு­டன் வீட்­டிற்கு அழைத்­துச்­சென்று விட்­டு­வி­டு­வோம் இது அர­சாங்க மரபு. அப்­போது கலை­ஞ­ருக்கு போன்­செய்­து­விட்டு, சென்­றேன். அவ­ரைப் பார்த்து நன்றி சொல்­வ­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ரொம்ப நன்­றிங்க அண்ணே. பெரி­யார் விருது கொடுத்­த­மைக்கு என்று சொன்­னேன். அப்­போது நான் சொன்­னேன். என்னை வீட்­டி­லி­ருந்து அழைத்­துச்­செல்­வ­தற்கு பதி­லாக என் தந்­தையை அழைத்­துச்­செல்­லுங்­கள் என்று தெரி­வித்­தேன். சரி­யென்று சொல்­லி­விட்டு, சண்­மு­க­ நா­த­னி­டம் தெரி­வித்­தார் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1967–68ஆம் ஆண்டு வாக்­கில் எனது அப்பா நெடுஞ்­சா­லைத்­து­றை­யில் பியூ­னாக வேலை­பார்த்­தார். அவ­ருக்கு சம்­ப­ளம் அப்­போது ரூ.150 வாங்­கிக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது ரூ.30 பள்­ளிக்­கட்­ட­ணம் கட்­டா­த­தால் என்னை வெளியே நிறுத்­தி­விட்­டார்­கள். அப்­போது வீட்­டில் வந்து சொன்­ன­வு­டன், அப்­போது அப்பா அலு­வ­ல­கம் வந்து வாங்­கிச்­செல்­லும்­படி தெரி­வித்­து­விட்­டார்­கள். காலை­யில் அலு­வ­லக வாச­லில் நின்று, கார் வந்து வாச­லில் நிற்­கும். அப்பா வந்து காரைத் திறந்து, உள்­ளே­யி­ருந்து ஒரு உத­விப்­பொ­றி­யா­ளர் வரு­வார். அவர் வைத்­தி­ருந்த ஃபைல், சாப்­பா­டுக்­கூடை வாங்­கிச்­செல்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அடுத்து ஜீப்­பில் ஒரு­வர் வரு­வார். அப்­போ­தும் அப்பா கத­வைத் திறந்து, அதே­போல் செய்­வார். அடுத்து ஒரு ஜீப் வரும் அந்­தக் கதவை அப்பா திறப்­பார்­கள். அதில் ஒரு கான்ட்­ராக்­டர் வரு­வார் அவர்­தான் தங்­க­பாண்­டி­யன். பையன் யார் என்று என் அப்­பா­வி­டம் கேட்டு, தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளி­டம் ரூ.50 வாங்கி என் கையில் கொடுத்து, ரூ.20 அம்­மா­வி­டம் கொடு, ரூ.30 பள்­ளிக்­கட்­ட­ணம் கட்­டச்­சொல்லி விடு­வார். இது­தான் அப்­போ­தைய காலம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அடுத்து 2010 ஆகஸ்ட் – 15. அதே­போல் மதி­யம் 3 மணிக்கு அரசு வாக­னம் வீட்­டிற்கு வரு­கி­றது. நான்­போய் அப்­பா­வி­டம் சொல்லி, உங்­களை அழைத்­துச்­செல்ல வரு­கி­றார்­கள் என்று தெரி­வித்து, நாங்­கள் எல்­லாம் வேடிக்கை பார்க்­கி­றோம். காரில் வந்த மாவட்ட ஆட்­சி­யர் கார் கத­வைத் திறக்­கி­றார். எனது தந்தை காரில் ஏறு­கி­றார். மாவட்ட ஆட்­சி­யர் காரின் கதவை மூடி­ய­பி­றகு கார் செல்­கி­றது. இது­தான் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரு காலத்­தில் எனது தந்தை அவ­ரது மேல­தி­கா­ரிக்கு கத­வைத் திறந்­தார். அதே அப்­பா­வுக்கு ஒரு கலெக்­டர் கார் கத­வைத் திறக்­கி­றார். என்­னடா செய்­தார் கலை­ஞர் என்று கேட்­கி­றார்­கள் அல்­லவா? என் வாயில் ஏதா­வது வந்­து­வி­டப்­போ­கி­றது? நான் முத­ல­மைச்­சர் இல்லை அல்­லவா? அத­னால் பேச­லாம். அப்­ப­டி­யொரு மாற்­றத்தை செய்­தார் அல்­லவா? அவர்­தான் கலை­ஞர். காலச்­சிற்பி. நன்றி வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு நக்­கீ­ரன் கோபால் அவர்­கள்உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>