<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1030,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 16 2026 03:38:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260616T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16062026-CHN-03" position.sequence="03" ex-ref="16062026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் கொடூரத்திற்கு பலி! –</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">த.வெ.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ரீல்ஸ் அரசியலில் மட்டுமே அரசு தீவிரம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup730146_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="15062026குழந_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரு­வள்­ளூர், ஜூன் 16:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் நேற்று ஒரே நாளில் மூன்று பெண் குழந்­தை­கள் பாலி­யல் குற்­றங்­க­ளுக்கு ஆளான சம்­ப­வங்­கள் தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் அதிர்ச்­சி­யை­யும், வேத­னை­யை­யும், கொந்­த­ளிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த தொடர் சம்­ப­வங்­கள் பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பு குறித்து பொது­மக்­கள், பெற்­றோர்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் கடும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள் ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கும்­மி­டிப்­பூண்டி சிப்­காட் தொழிற்­பேட்­டை­யில் பணி­பு­ரி­யும் வட­மா­நி­லத்­தைச் சேர்ந்த தம்­ப­தி­ய­ரின் 3 வயது பெண் குழந்தை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான நிலை­யில் முட்­பு­த­ரில் மீட்­கப்­பட்டு முத­லில் கும்­மி­டிப் பூண்டி அரசு மருத்­து­வ­ம­னை­யி­லும், பின்­னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யி­லும் அனு­ம­திக்­கப்­பட்டு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், சிகிச்சை பல­னின்றி குழந்தை உயி­ரி­ழந்­தது தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்­ப­வரை போலீ­சார் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். உயி­ரி­ழந்த சிறு­மிக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்­டும்; குற்­ற­வா­ளிக்கு சட்­டத்­தில் உள்ள மிகக் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்­டும் என்று பொது­மக்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதே­போல், பூவி­ருந்­த­ வல்லி அருகே வசிக்­கும் கூலித் தொழி­லாளி தம்­ப­தி­ய­ரின் 7 வயது மகள், வீட்­டின் அருகே விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது பாலி­யல் துன்­பு­றுத்­த­ லுக்கு ஆளா­ன­தாக பெற்­றோர் அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், அதே பகு­தி­யைச் சேர்ந்த சர­வ­ணன் மீது போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­கி­றது. ஆரம்ப கட்­டத்­தில் மக­ளிர் காவல்­து­றை­யி­னர் அலட்­சி­ய­மாக செயல்­பட்­ட­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இத­னு­டன், திரு­வள்­ளூர் அடுத்த திருப்­பாச்­சூர் பகு­தி­யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­நர் நந்­த­கு­மார், அதே பகு­தி­யைச் சேர்ந்த அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில் 7-ஆம் வகுப்பு படிக்­கும் மாண­வி­யி­டம் கஞ்சா போதை­யில் அடிக்­கடி பாலி­யல் சீண்­ட­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. மாணவி அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் அனைத்து மக­ளிர் காவல் நிலைய போலீ­சார் நந்­த­கு­மாரை போக்சோ சட்­டத்­தின் கீழ் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒரே நாளில் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் மூன்று பெண் குழந்­தை­கள் பாலி­யல் குற்­றங்­க­ளுக்கு ஆளான சம்­ப­வம் பெற்­றோர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குழந்­தை­களை பள்­ளிக்­கும், வீட்­டின் வெளி­யி­லும் பாது­காப்­பாக அனுப்ப முடி­யாத சூழல் உரு­வாகி வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தச் சம்­ப­வங்­களை சுட்­டிக்­காட்டி பொது­மக்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் மாநில அரசை கடு­மை­யாக விமர்­சித்­து ள்­ளன. பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தாக வாக்­கு­றுதி அளித்து ஆட்­சிக்கு வந்த அரசு, அந்த அடிப்­படை பொறுப்­பையே நிறை­வேற்­றத் தவ­றி­விட்­ட­தாக அவர்­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ள ­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாநி­லம் முழு­வ­தும் பெண்­கள், சிறு­மி­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள் தொட ர்ச்­சி­யாக நடை­பெற்று வரும் நிலை­யில், குற்­றத் தடுப்­பில் அரசு போது­மான கவ­னம் செலுத்­த­வில்லை என்­றும், சட்­டம்-­­ஒ­ழுங்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக ரீல்ஸ், விளம்­ப­ரங்­கள், நிகழ்ச்சி அர­சி­யல் மற்­றும் சமூக வலை­த­ளப் பிர­சா­ரங்­க­ளி­லேயே ஆட்­சி­யா­ளர்­கள் அதிக ஆர்­வம் காட்­டு­வ­தா­க­வும் எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள “சிங்­கப்­பெண்” சிறப்­புப் படை தரை­யில் எந்த அள­வுக்கு செயல்­ப­டு­கி­றது என்­பது குறித்து அரசு மக்­க­ளுக்கு விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு உணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அதன் செயல்­பா­டு­களை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மூன்று வயது குழந்தை கூட பாது­காப்­பாக வாழ முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது மாநி­லத்­தின் சட்­டம்-­­ஒ­ழுங்கு நிலைமை குறித்து கடு­மை­யான கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன. ஒவ்­வொரு சம்­ப­வத்­திற்­குப் பிற­கும் வழக்­குப் பதிவு செய்து கைது நட­வ­டிக்கை எடுப்­பது மட்­டுமே தீர்­வாக இருக்க முடி­யாது; குற்­றங்­கள் நடை­பெ­று­வ­தற்கு முன்பே அவற்­றைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களே அர­சின் முதன்­மைப் பொறுப்­பாக இருக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கும்­மி­டிப்­பூண்­டி­யில் உயி­ரி­ழந்த 3 வயது சிறு­மி­யின் குடும்­பத்­திற்கு உரிய இழப்­பீடு, சட்ட உதவி மற்­றும் முழு­மை­யான அரசு ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும். மேலும், பாதிக்­கப்­பட்ட மற்ற சிறு­மி­க­ளுக்­கும் மருத்­து­வம், உள­வி­யல் ஆலோ­சனை, சட்ட உதவி உள்­ளிட்ட அனைத்து உத­வி­க­ளை­யும் அரசு உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பு என்­பது எந்த அர­சுக்­கும் முதன்­மை­ யான பொறுப்­பா­கும். அந்­தப் பொறுப்பை நிறை­வேற்­றத் தவ­றி­னால், சட்­டம்-­­ஒ­ழுங்கு குறி த்து மக்­கள் அர­சி­டம் கடு­மை­யான கேள்­வி ­களை எழுப்­பு­வது இயல்­பா­னது. விளம்­ப­ரங்­க­ ளை­யும் ரீல்ஸ் அர­சி­ய­ லை­யும் விட, மக்­க­ளின் உயிர் மற்­றும் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டிய நேரம் இதுவே என  தெரி­வித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கும்­மி­டிப்­பூண்­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதி வழங்க வேண்­டும், குற்­ற­ வா­ளி­கள் மீது உட­னடி மற்­றும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பை உறுதி செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பொது­மக்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­திய காவல்­து­றை­யி­னர், பின்­னர் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்து அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதற்­கி­டை­யில், சம்­பவ இடத்­திற்கு வந்த த.வெ.க. நிர்­வா­கி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் பர­ப­ரப்­பும் பதற்­ற­மும் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103–வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  திருவள்ளூர்மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில்  மாவட்டக் கழக செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் ஆலோசனைப்படி, பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய செயலாளர் பி.டி.சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அறுசுவை உணவுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முரளி சேனா, நிர்வாகிகள் பி.டி. குமரேசன், வி.வி. மணி, ஆர். மணிகண்டன், எம். செல்வம், பி.டி. ராஜேந்திரன், ஆரோன், சம்பத், பிச்சிகான், கிரி, விமல், பாஸ்கரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>