<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,662,959,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 15 2026 16:13:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260616T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16062026-MDU-02" position.sequence="02" ex-ref="16062026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மூலப்பொருள் விலை உயர்வு - இயந்திர மானியம் மறுப்பு! ஜி.எஸ்.டி. கெடுபிடி, மின்கட்டணம் உயர்வு!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">கோவையில் அபாயக் கட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="48"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ஒன்றிய, மாநில அரசுகள் பாராமுகம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ponmudiphoto1_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கோவை, ஜூன் 16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒன்­றிய, மாநில அர­சு­க­ளின் பாரா­மு­கம் கார­ண­மாக கோவை­யில் குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் அபாய கட்­டத்தை நோக்கிச் செல்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் 12 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­கள் உள்­ளன. கோவை மாவட்­டத்­தில் மட்­டும் சுமார் 1 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்­றன. இந்­நி­று­வ­னங்­க­ளில், இன்­ஜி­னீ­ய­ரிங், ஆட்டோ மொபைல், ரயில்வே, ராணு­வம், கப்­பல் போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட பெரிய துறை­களை சார்ந்த நிறு­வ­னங்­கள் கொடுக்­கிற ஜாப் ஆர்­டர்­கள் பெறப்­பட்டு, அதற்­கான உதி­ரி­பா­கங்­கள் தயா­ரித்து கொடுக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யம் சார்ந்த டிராக்­டர், மோட்­டார், பம்­பு­செட், கிரைண்­டர் தயா­ரிப்­பு­க­ளுக்கு தேவை­யான உதி­ரி­பா­கங்­க­ளும் தயா­ரித்து கொடுக்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­று­வ­னங்­கள், சுமார் 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை மனி­த­வ­ளத்தை மட்­டுமே, நம்­பியே இயங்­கின. அந்த காலக்­கட்­டத்­தில் உற்­பத்­தி­யும் தர­மாக 
இருந்­தது. ஆனால், உல­க­ம­ய­மாக்­க­லுக்கு பிறகு இக்­கு­றுந்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் பெரும் சவாலை எதிர்­கொண்டு வரு­கின்­றன. உல­க­ம­ய­மாக்­கல் கொள்கை அம­லுக்கு வந்­த­வு­டன், பெரிய நிறு­வ­னங்­  கள், பெரிய நிறு­வ­னங்­கள், உதி­ரி­பா­கங்­கள் வேண்டி  
சர்­வ­தேச அள­வில் தேடு­தல் வேட்­டையை துவக்க ஆரம்­பித்­த­னர். இத­னால், உள்­ளூ­ரில் இயங்கி வந்த குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­­களுக்கு ஜாப்­ஆர்­டர் குறைய துவங்­கி­யது. முன்­பெல்­லாம், 100 சத­வீ­தம் லாபம் சம்­பா­தித்து வந்த இக்­கு­றுந் தொழில் நிறு­வ­னங்­கள் தற்­போது 5 சத­வீ­தம் லாபம் பெறு­வ­தற்கே படா­த­பாடு படு­கின்­றன. பல குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­  ­களில், ஊழி­யர்­க­ளுக்கு 
சம்­ப­ளம் கொடுக்க முடி­யாத நிலை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சூழ­லில் ஒன்­றிய, மாநில அர­சு­க­ளின் நட­வ­டிக்கை இத்­தொ­ழி­லுக்கு விரோ­த­மா­கவே அமைந்­து­விட்­டன. ஒன்­றிய அர­சின் வங்­கிக்­க­டன் மறுப்பு, கொரோனா முடக்­கம், பணம் மதிப்­பி­ழப்பு, ஜிஎஸ்டி வரி, மூலப்­பொ­ருள் விலை உயர்வு, மாநில அர­சின் மின்­கட்­ட­ணம், லைசென்ஸ் கட்­ட­ணம். தொழில்­வரி போன்­றவை இத்­தொ­ழிலை புரட்டி எடுத்­து­விட்­டது. இனி எக்­கா­லத்­தி­லும் இத்­துறை எழுந்து நிற்­கவே முடி­யாது என்ற நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக குறுந்­தொ­ழில் முனை­வோர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­பற்றி கோவை தொழில் கூட்­ட­மைப்பு (போசியா) தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஜேம்ஸ் கூறி­ய­தா­வது: தமிழ்­நாடு அர­சின் மின்­சா­ரத்­துறை, நிலைக் கட்­ட­ணம் என்­கிற ஒரு கட்­ட­ணத்தை குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் மீது திணிக்­கி­றது. முன்பு ஒரு கே.வி.ஏ.வுக்கு 35 ரூபாய் என்­றி­ருந்த நிலைக் 
­கட்­ட­ணம் தற்­போது 165 ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு விட்­டது. அதா­வது, பயன்­ப­டுத்­தாத மின்­சா­ரத்­துக்கு மாத­கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதே போல மின்­இ­ழப்பு கட்­ட­ணம் செலுத்த வேண்­டும் என “பவர் பேக்ட்” கொண்டு வந்­துள்­ளார்­கள். கோவை மாவட்­டத்­தில் சுமார் 40 சத­வீ­தம் குறுந்­தொ­ழில் ஆலை­கள் வாடகை கட்­டி­டத்­தில் இயங்கி வரு­கி­றது. இவற்­றுக்கு வாடகை கொடுக்க முடி­யா­மல் திண­றும் நேரத்­தில், சொத்து வரி விதிப்பு, ஆலை­க­ளுக்கு ரன்­னிங் லைசென்ஸ் இது­போன்ற பேரி­டி­களை மாநிலஅரசு இறக்­கிக்­கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­­  களின் நிதிச்­சு­மையை குறைப்­ 
பதற்­காக சுமார் 30 ஆண்­டு­ க­ளுக்கு முன்பு, இயந்­திர மானி­யம் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. புதி­தாக இயந்­தி­ரங்­கள் வாங்­கும்­போது 25 சத­வீ­தம் மானி­யம் தமி­ழக அர­சால் வழங்­கப்­ப­டும். ஆனால் மாவட்ட தொழில்­மை­யம் 25 சத­வீ­தம் கூடு­தல் உற்­பத்தி காட்­டி­னால் மட்­டுமே மானி­யம் தரு­வோம் என கெடு­பிடி செய்­கி­றார்­கள். கோவை மாவட்­டத்­தில் மட்­டும் கடந்த 3 ஆண்­டு­க­ளில், சுமார் 5 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக மானி­யத்­தொகை நிலுவை உள்­ளது. குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு 5சத­வீதவட்­டி­யில் வங்­கிக்­க­டன் வழங்­க­வேண்­டும் என நீண்ட கால­மாக கோரிக்கை விடுத்து வரு­கி­றோம். ஆனால், தேசி­ய­மய மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளில் 15 சத­வீ­தம் வட்டி வசூ­லிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­ க­ளுக்கு தேவை­யான காப்­பர்,  அலு­மி­னி­யம், காஸ்­டிங், இரும்பு தாது, எஸ்.எஸ்.மெட்­டீ­ரி­யல் போன்றை கொள்­மு­தல் செய்­யும்­போது. அதற்கு 18 சத­வீ­தம் ஜி.எஸ்.டி வரி விதிக்­கி­றார்­கள். இவற்றை பொருட்­க­ளாக வடி­வ­மைத்து, பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு விற்­பனை செய்­யும் போது. அதற்­கும் 18 சத­வீ­தம் ஜி.எஸ்.டி வரி விதிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி அடி மேல் அடி கொடுத்­தால், இந்த ஆலை­களை எப்­படி இயக்க முடி­யும்? அத­னால்­தான் அன்­றா­டம் பல குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் மூடும் அள­வுக்கு நிலைமை மோச­மாக செல்­கி­றது. சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை ஒன்­றிய, மாநில அர­சும் இணைந்து மேற்­கொண்­டால், இத்­துறை பிழைக்­கும். இல்­லை­யேல், குறுந்­தொ­ழில் துறை­யின் அழிவை 
யாரா­லும் தடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">கழக கொள்கை குன்று முன்னாள் அமைச்சர் ஐயா ஏ.கோவிந்தசாமி அவர்களின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த ஐயா ஏ.கோவிந்தசாமி அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கழக துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் 
க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  உடன் ம.ஜெயச்சந்திரன், தயா.இளந்திரையன், இரா.சக்கரை, ஜெய.ரவிதுரை, பி.வி.ஆர்.சு.விசுவநாதன், ஜெ.ஜெயபால், வே.கில்பர்ட்ராஜ், பூக்கடை கணேசன், தமிழ்ச்செல்வி பிரபு, சங்கீதஅரசி, ஓம்சிவசக்திவேல், சித்திக் அலி, செ.தினகரன், இரா.கிருஷ்ணராஜ், அன்பழகன், செல்வ.பிரேம், செ.அமர்ஜி, ராஜசேகர், பி.கே.சங்கர், சிவக்குமார், மோகன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>