<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,38,959,1229" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 16 2026 03:43:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260616T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16062026-MDU-06" position.sequence="06" ex-ref="16062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">16.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">திராவிட முன்னேற்றக் கழகம்  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">அன்றும் – இன்றும் – -என்றும் இளைஞர்களின் இனமான பாசறைதான்! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup727964_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் தாய்க் கழ­க­மான 
திரா­வி­டர் கழ­க­மும், ஒரே திசை வழி­யில் சமூக - பொரு­ளா­தார - கல்வி - பெண்­ணு­ரிமை - சாதி - மத வேறு­பா­டற்ற பகுத்­த­றி­வுள்ள சமத்­துவ சகோ­த­ரத்­துவ சமு­தா­யம் என்ற அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­புக்­கள், அனைத்து மக்­க­ளுக்­கு­மா­ன­தா­க­வும், சமத்­து­வ­மா­க­வும், மக்­க­ளாட்­சி­யின் மூலம் பெற்­றிட வேண்­டு­மென தந்தை பெரி­யார் பேர­றி­ஞர்­அண்ணா ஆகிய சிந்­த­னை­யா­ளர் ­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட இயக்­கங்­கள் என்­பதை தமிழ்­நாட்­டின் வர­லாறு தெளி­வா­கப் பதிவு செய்­துள்­ளது. இன்­றைய இந்த சமு­தாய - அர­சி­யல் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­கள் எந்த அள­விற்கு, திரா­விட இயக்­கங்­க­ளின் பல்­லாண்­டு­கா­லப் பிரச்­சா­ரங்­க­ளின் பய­னா­க­வும், அர­சி­யல் அதி­கா­ரத்­தின் உரிய அம­லாக்­கத்­தா­லும், அடித்­தட்டு மக்­க­ளுக்­கும் விளிம்பு நிலை மக்­க­ளுக்­கும் இதன் தாக்­கம் ­சென்­ற­டைந்­தி­ருக்­கி­றது என்­பதை எந்த சக்­தி­யா­லும் எந்­தக் காலத்­தி­லும் மறைக்­கவோ, மறுக்­கவோ இய­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய ஒன்­றிய நிலப்­ப­ரப்­பில் விடு­த­லைக்­குப் பின்­னர், அனைத்­துத் துறை­க­ளி­லும் முன்­னே­றிய மாநி­ல­மாக உரு­வாகி­யி­ருப்­ப­தற்கு; திரா­விட  முன்­னேற்­றக் கழ­கத்­தின் பங்கு என்­பது மகத்­தா­னது மட்­டு­மல்ல வியப்­பிற்­கு­ரி­யது!  தமிழ்­நாடு இந்த உயர்ந்த நிலையை அடைந்­த­தற்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பய­ணித்த வழித்­த­டங்­கள் கர­டு­மு­ர­டா­னவை என்­பது தமிழ்­நாட்­டின் வர­லாற்றை அறிந்­த­வர்­க­ளுக்­குத் தெளி­வா­கவே புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அத்­த­கைய தடை­க­ளைத் தகர்த்து தொடர்ந்து அர­சி­யல் பய­ணத்தை  அச்­ச­மின்றி மேற்­கொண்­டு­வ­ரும் ஓர் உயி­ரோட்­ட­முள்ள இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். ஆம்!  தமிழ் மண்­ணுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் தமிழ் மொழிக்­கும் என்­றும் அர­ணா­க­வும், அக­ழி­யா­க­வும் அக­லாது நிலைத்து நின்று பாது­காக்­கும் இயக்­க­மாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1925 ஆம் ஆண்டு தந்தை பெரி­யா­ரால் தொடங்­கப்­பட்ட சுய­ம­ரி­யாதை இயக்­கம் தொடர்ந்து நீதிக்­கட்­சி­யின் வழி­யாக 1944 ஆம் ஆண்டு திரா­வி­டர் கழ­க­மாகப் பரி­ணாம வளர்ச்சி பெற்று, 1949 ஆம் ஆண்டு செப்­டம்­பர் திங்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மாக சமூக - அர­சி­யல் களத்­தில் தன் பணி­யினை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு, 1957ஆம் ஆண்டு தேர்­தல் களத்­தில் தொடங்கி, அர­சி­யல் வெற்றி தோல்­வி­க­ளுக்­குப் பின்­ன­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தமிழ்­நாட்­டி­லும், இந்­திய ஒன்­றி­யத்­தி­லும் ஒரு நிரா­க­ரிக்க முடி­யாத நிரந்­தர அர­சி­யல் சக்­தி­யாக தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பது இந்த இயக்­கத்­தின் வர­லா­றா­கும். தேர்­தல் தோல்­வி­கண்டு துவண்டு போகா­ம­லும், வெற்றி கண்டு வெறி­யாட்­டம் கொள்­ளா­ம­லும், அர­சி­யல் பண்­பாட்­டு­டன் தொடர்ந்து மக்­கள் பணி­யாற்­றி­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கடந்த காலங்­க­ளில் சந்­திக்­காத சந்­தர்ப்­பங்­களே இல்லை, எதிர்­கொள்­ளாத பிரச்சி்­னை­க­ளும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இயக்­கம் ஒரு மாநிலக் கட்சி என்று கரு­தப்­பட்­டா­லும், அகில இந்­திய அர­சி­யல் களத்­தில் இந்­திய அர­சி­யல் சட்­டம் வடி­வ­மைத்­துள்ள ஜன­நா­யக் குடி­ய­ர­சிற்கு (Democratic Republic) அவ­ச­ர­கால பிர­க­ட­னத்­தின் (Declaration of Energy) மூலம், பேரா­பத்தை உரு­வாக்­கிய கால­கட்­டத்­தில் அந்­தக் கொடிய நகர்வை எதிர்த்து மிகப்­பெ­ரிய போராட்­டத்­தில் ஈடு­பட்டு ஜன­நா­யக் குடி­ய­ர­சைக் காப்­பாற்­றிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதை வர­லாறு பதி­வு­செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈழத்­த­மி­ழர்­க­ளின் வாழ்க்கை சிதைக்­கப்­பட்டு சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டபொ­ழுது, ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­காக பல­போ­ராட்­டக் களங்­களை எதிர்­கொண்டு கழக ஆட்­சியே விலை­யாக கொடுத்த இயக்­க­மும்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். எனவே, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது தேர்­தல் வெற்றி, தோல்­வி­க­ளின் தாக்­கத்­தால் கழ­கத்­தின் பய­ணத்­தில் என்­றும் வேகம் குறை­யாது. மாறாக, வேக­மும் வீரி­ய­மும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்­கும். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய நெடிய இந்த தொடர் பய­ணத்­தில் எதிர்­கொண்ட எத்­த­கைய  சூழ்­நி­லை­க­ளும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்ற இந்த வர­லாற்­றுப் பேரி­யக்­கத்­திற்கு எத்­த­கைய சிதை­வி­னை­யும் ஏற்­ப­டுத்த இய­ல­வில்லை, இனி­யும் ஏற்­ப­டுத்த இய­லாது என்­பது உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­தல் களத்­திலே வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைக்­கு­மா­னால், தாங்­கள் பிர­க­ட­னப்­ப­டுத்­திய கொள்­கைக்­கோட்­பா­டு­க­ளுக்கு சட்ட வடி­வ­மும், திட்ட வடி­வ­மும் கொடுத்து நிறை­வேற்­றிக் காட்­டி­யுள்­ளது. அப்­ப­டிப்­பட்ட வர­லாற்­றுச் சாத­னை­க­ளை­யும், கடந்த காலத்­தில் நிகழ்த்தி இருக்­கி­றது. எனவே, இந்த 2026 ஆம் ஆண்டு நடை­பெற்ற தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருந்­தா­லும் அத­னால் துவண்டு போய்­வி­டா­மல், அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் ஆய்ந்­த­றிந்து புறம்­தள்ள வேண்­டி­ய­வை­க­ளைப் புறந்­தள்­ளி­விட்டு, ஈர்க்­கப்­பட வேண்­டிய சக்­தி­களை உள்­வாங்­கிக் கொண்டுஅடுத்த அர­சி­யல் தேர்­தல் ­க­ளத்­திற்கு எள்­ளின் முனை­ய­ள­வு ­கூட தொய்­வின்றி தன் பணி­களை விரைந்து மேற்­கொள்­ளக்­கூ­டிய அற்­பு­த­மான பேரி­யக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­த­லில் தமி­ழக வெற்­றிக் கழ­கம் வெற்றி பெற்று, கூட்­டணி ஆட்சி அமைத்­தி­ருப்­ப­த­னால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எந்­தப் பின்­ன­டை­வை­யும் சந்­திக்­கப் போவ­தில்லை. மாறாக, முன்­னை­விட பன்­ம­டங்கு உற்­சா­கத்­துடனும், உந்து சக்­தி­யோ­டும் பணி­யாற்­று­வ­தற்­கான படிக்­கட்­டா­கவே இந்த தோல்­வியை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மாற்றி அமைத்­துக் கொள்­ளும். தமி­ழக வெற்­றிக் கழ­கம் இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில்  பெற்­றி­ருக்­கக் கூடிய வெற்றி என்­பது சாத­னை­களை அடித்­த­ள­மாகக் கொண்ட வெற்றி அல்ல. மாறாக, அறி­வி­யல் நவீன கைபே­சித் தொடர்பு மூலம் உரு­வாக்­கிய மாயத் தோற்­றத்­தின் அடிப்­ப­டை­யில்  உரு­வாக்­கப்­பட்ட  வெற்­றி­தான் இந்த தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இனி­வ­ரும் ­கா­லங்­க­ளில், மக்­கள்  குறிப்­பாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சாதித்த சாத­னை­க­ளை­விட இந்த அர­சி­ட­மிருந்து எதிர்­பார்ப்­பு­கள் அதி­க­மா­கவே இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. ஆனால், மக்­க­ளின் அந்த எதிர்­பார்ப்­பு­களை தமிழ்­நாட்­டில் ஆட்சி அமைத்­துள்ள தமி­ழக வெற்­றிக் கழ­கம்சாதிக்க முடி­யுமா? என்­ப­தும் மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யா­கும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­கி­டை­யில் வருங்­கால சமு­தா­யத்­தின் வார்­ப­டங்­க­ளாம் இளை­ஞர்­க­ளுக்கு ஒன்றை தெளி­வு­ப­டுத்­து­வது தங்­க­ளின் மூத்த சகோ­த­ரன் என்ற அடிப்­ப­டை­யில் எனது கடமை என்­பதை உணர்ந்து தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைய இளை­ஞர்­கள்­தான் எதிர்­கால சமு­தா­யம். எனவே, அத்­த­கைய இளை­ஞர்­கள் முறை­யா­கப் பயிற்­று­விக்­கப்­பட்டு, சமு­தா­யத்­தின் ஒளி­வி­ளக்­காக உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் தொடர்ந்து அக்­க­றை­யும் ஆர்­வ­மும் கொண்ட இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்­ணா­வின் கடி­தங்­கள் அனைத்­தும் “தம்­பிக்கு” என்­று­தான் தொடங்­கும். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் கடி­தங்­கள் அனைத்­தும் “உடன்­பி­றப்பே” என்­று­தான் தொடங்­கும், இன்­றைய கழ­கத்­த­லை­வர் தள­ப­தி­யா­ரின் கடி­தங்­கள் அனைத்­தும் “உங்­க­ளில் ஒரு­வன்” என்­று­தான் தொடங்­கும். இந்த முப்­பெ­ரும் தலை­வர்­க­ளின் கடி­தங்­கள் குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்­காக எழு­தப்­ப­டு­கி­றது என்­பதை உணர்த்­து­வ­தற்­கா­கத்­தான் இந்த முப்­பெ­ரும் தலை­வர்­க­ளின் கடி­தங்­க­ளில் “தம்­பிக்கு” என்­றும், “உடன்­பி­றப்பு” என்­றும், “உங்­களில் 
ஒரு­வன்” என்­றும் விளிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக இளை­ஞர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை உரு­வாக்­கிட நடத்­தப்­பட்ட மேடைப்­பேச்­சு­கள், கருத்­த­ரங்­குகள், பட்­டி­மன்­றங்­கள், நாட­கங்­கள் ஆகிய நிகழ்ச்­சி­கள் மூலம் பல்­வேறு பொருள்­கள் பற்­றிய கருத்­துக்­க­ளும், உல­க­ளா­விய செய்­தி­க­ளும், வர­லா­று­க­ளும் பல்­வேறு கோணங்­க­ளில் எடுத்து வைக்­கப்­ப­டும், விவா­திக்­கப்­ப­டும். இந்த நிகழ்­வு­க­ளைக் கண்­டு­க­ளித்த அறி­ஞர் பெரு­மக்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மாலை நேரத்­துப் பல்­க­லைக்­க­ழ­கம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று விமர்­சிப்­பார்­கள். இந்த அள­விற்கு இளை­ஞர்­க­ளின்­பால் அக்­கறை எடுத்­துக்­கொண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இனி­யும் உரிய கவ­ன­மும், அக்­க­றை­யும் எடுக்­கத் தயங்­காது, தொடர்ந்து எந்த நேர­மும் தயா­ரா­கவே இருக்­கும். வற்­றாத ஜீவ­ந­தி­யும் வான்­ம­ழை­யும் முறைப்­ப­டுத்­தப்­ப­டா ­விட்­டால், கடல்­நீ­ரோடு, பய­னின்­றிக் கலந்­து­வி­டும். ஆனால், வற்­றாத ஜீவ­ந­தி­யை­யும் வான்­ம­ழை­யை­யும் அணை­கள் மூலம் தடுத்து நிறுத்தி முறைப்­ப­டுத்­திப் பயன்­ப­டுத்­தி­னால் மனி­த­ கு­லத்­திற்கு எத்­த­கை­யப் பயன்­களை விளை­விக்­கும் என்­ப­தனை விளக்­கத் தேவை­யில்லை என்றே கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏழை - பணக்­கா­ரன் என்ற வேறு­பாட்டை தவிர்த்து ஏழையை வாழ்­விக்க வேண்­டும் என்ற உணர்வை இளை­ஞர் மத்­தி­யில் உரு­வாக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே பேர­றி­ஞர் அண்­ணா­வால் முன்­மொ­ழி­யப்­பட்ட “கருத்­துப் பெட்­ட­கம்­தான்” “ஏழை­யின் சிரிப்­பில் இறை­வ­னைக் காண்­போம்” என்­ப­தா­கும். மக்­க­ளாட்­சி­யின் மாண்­பு­களை உணர்த்­தும் முறை­யில் பேர­றி­ஞர் அண்­ணா­வால் இளை­ஞர்­க­ளுக்­காக தெரி­விக்­கப்­பட்ட சொல் ஓவி­யம்­தான் “எதை­யும் தாங்­கும் இத­யம் வேண்­டும்” என்­ப­தா­கும். “மாற்­றான் தோட்­டத்து மல்­லி­கைக்­கும் மன­முண்டு” என்ற பொருள் பொதிந்த வாச­கங்­க­ளா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி இளை­ஞர்­க­ளைப் பக்­கு­வப்­ப­டுத்தி தமிழ் மண்­ணை­யும், மக்­க­ளை­யும், தமிழ்­மொ­ழி­யை­யும் காப்­பாற்­று­வ­தற்­காக வாளா­க­வும் கேட­ய­மா­க­வும் பயன்­பட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றும் இளை­ஞர்­க­ளின் பாச­றை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆம்!  தமி­ழக இளை­ஞர்­க­ளின் தாய்­வீ­டும் - பாச­றை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்­பதை உணர்­வீர் - திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பாசறை நோக்கி உங்­கள் 
பய­ணம் தொட­ரட்­டும்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>