<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,37,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 16 2026 03:51:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260616T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="16062026-VLR-04" position.sequence="04" ex-ref="16062026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">16.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">அனைத்துத் தரப்பினரும் முன்னேறிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி சாதனை படைத்த முத்தமிழறிஞர்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">கலைஞர், உலக மக்களே வியக்கக்கூடிய தலைவராகத் திகழ்ந்தவர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய   
கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் புகழாரம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588852_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588779_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588724_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="EREswaranKong_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூன். 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“அனைத்துத் தரப்பினரும் முன்னேறிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி சாதனை படைத்த முத்தமிழறிஞர் கலைஞர், உலக மக்களே வியக்கக் கூடிய தலைவராகத் திகழ்ந்தவர் என்று – சென்னை கிழக்குமாவட்ட தி.மு.க. சார்­பில்  மாவட்­டச்செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு 
எம்.எல்.ஏ. முன்­னின்று நடத்­திய  முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்கூட்­டத்­தில் உரை­யாற்­றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் 
ஈ.ஆர்.ஈஸ்வரன் புக­ழா­ரம்  சூட்­டி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொளத்தூர் கிழக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கற்றவர்கள் வியக்கிற கலைஞர் அவர்கள் மட்டுமல்ல; இந்த உலகத்தில் இருக்கிற தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களுமே வியக்கக்கூடிய ஒரு தலைவராகத் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருக்கிறார். நம்முடைய சகோதரி எழிலரசி அவர்கள் சொன்னது போன்று, அந்த முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால், அவருடைய பேச்சை ஒருமுறை கேட்டுவிட்டால், எந்த அளவுக்கு நாம் அவரிடத்திலே அடிமை யாகிப் போவோம் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும். நான் ‘அடிமை’ என்று சொல்வது வேறு கோணத்தில் அல்ல; அது பாசத்தின் காரணமாக, அன்பின் காரணமாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நகைச்சுவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">உணர்வுகொண்டவர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்போது எதைப் பேசினாலும், நகைச்சுவை உணர்வோடு கருத்துக்களைச் சொல்லக்கூடியவர். 2009–ஆம் ஆண்டு நாங்கள் கோயம் புத்தூரிலே அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துவிட்டு, ஒரு பெரிய மாநாட்டை நடத்திவிட்டு, அறிவால யத்தில் தலைவர் கலைஞர் அவர்களை நான் சந்திக்கிறேன். என்னோடு நம் கட்சியின் பொறுப்பா ளர்கள் 10 பேர் வந்திருந்தார்கள். தலைவர் கலைஞர் எங்களைப் பார்த்த உடனேயே, “கவுண்டர்கள் எல்லாம் கம்முனுதானே இருந்தீர்கள், எப்போது ‘கவுண்டர்’ கொடுக்க ஆரம்பித்தீர்கள்?” என்று கேட்டார். அதாவது, எவ்வளவு இறுக்க மாக  இருந்தால் கூட, நகைச்சுவை யோடு சிரிப்பை உண்டாக்கக் கூடிய ஒரு தலைவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">மக்கள் பயன்பெறும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">எண்ணற்ற திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் செய்யாததே கிடையாது. இந்தத் தமிழ்நாட்டிற்கு அவர் எதை யெல்லாம் ஆரம்பித்து வைத்தாரோ, எதையெல்லாம் அடித்தளமாக அமைத்தாரோ, அதை வைத்துத்தான் இன்றைக்கு இத்தனை விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தனை திட்டங்கள், அத்தனை துறைகள்; எந்தத் துறையை எடுத்தாலும், அவர் ஆரம்பித்ததாகத்தான் இருக்கும்; அவர் ஆரம்பிக்காததே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரின் வழியிலே வந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமை, இங்கு அமர்ந்திருக்கிற அத்தனை பேருமே, அந்தப் பெருமையோடு அமர்ந்தி ருக்கிறீர்கள். அவர் கொண்டு வராத திட்டங்களை வேறு யாரும் கொண்டு வரவில்லை என்று சொன்னாலும், நம்முடைய முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேடித் தேடிப் பிடித்து அவருக்குப் புலப்படாத பல திட்டங்களை கொண்டு வந்தார். மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம், கல்லூரி செல்லும் பெண் 
களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மருத் துவத்தில் எத்தனை திட்டங்கள் என்று பல திட்டங்கள் சென்ற ஆட்சியில் தொடங்கப்பட்டவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்போது ‘சிங்கப்பெண்’ என்று ஆரம்பித்திருக்கிறார்களே, அது என்ன இன்றைக்குத் தொடங்கப்பட்ட திட்டமா? அவ்வாறு பல்வேறு திட்டங்களைஆரம்பித்திருக்கிறார். அதையெல்லாம் ஒழுங்காக நடத்தினாலே போதும்; அதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. அதை நடத்தினாலே இப்போது இருக்கும் ஆட்சி நல்ல பெயர் வாங்கிவிடலாம். ஆனால், அப்படிப்பட்ட எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">அனைத்துத் தரப்பினரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">வளரக்கூடிய திட்டங்களைத் தந்தவர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலைவர் கலைஞர் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி என்று சொன்னால், அது ஏதோஒரு சாரார் வளர்வது அல்ல; அனைத்துத்தரப்பினரும் ஒன்றாக வளரக்கூடிய அளவுக்குத் திட்டங்களைத் தீட்டியவர். ஜாதிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கையாக இருக்கலாம்; ஆனால், ஒரு ஜாதி கூட விட்டுவிடக் கூடாது. அத்தனை ஜாதியைச் சார்ந்த இளைஞர்களும் முன்னேற வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டைக் கொடுத்து, அத்தனை பேரையும் முன்னேற்றியவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்படிப்பட்ட இயக்கத்தை வளர்த்திருக்கிறார்! இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க.வினுடைய சட்டமன்ற உறுப்பினர்களைப் பாண்டிச்சேரியிலேகொண்டு போய் அடைத்து வைத்தார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது எங்கேயாவது பாதுகாக்க வேண்டும் என்று தலைவருக்குத் தோன்றியதா? அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வளர்ந்த விதம் அப்படி. இன்றைக்கு அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பனையூருக்குச் சென்று, முன்வாசலில் கேட் திறக்காததால், பின்வாசல் வழி யாக உள்ளே போய்க் கொண்டிருக் 
கிறார்கள். நமக்குப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது, வேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டா? எவ்வளவு வலிமையான இயக்கம்! அவ்வளவு வலிமையான இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர் அதைக் கொண்டு வந்து, இந்த அளவிற்கு வலிமையாக வளர்த்தெடுத்திருக் 
கிறார்கள். அப்படிப்பட்ட இயக்கத் 
தில்தான் எல்லோரும் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">கூட்டணிக் கட்சிகளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">உண்மை முகம் தெரிந்துவிட்டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை இந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும், வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால்அவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்;ஒரு தோல்வி வந்தால் தான் உண்மை முகம் தெரிகிறது. இது ஏதோ திடீரென்று அவர்களுக்குத் தோன்றியதா? கடந்த தேர்தலின் போதே முடிவெடுத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலின் போதே முடிவெடுத்து, தேர்தல் பணிகளிலேயே சுணக்கம் இருந்திருக்க வேண்டும்; திடீரென்று நடந்திருக்காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியே கைவிட்டுவிட்டது. அப்படிப்பட்ட சூழலிலே, இந்த நாட்டினுடைய பிரதமர் வேட்பாளராக தலைவர் அவர்கள் அறிவித்தார். அந்த நன்றி உணர்ச்சி வேண்டாமா? நான் தலைவர் அவர்களோடு அனைத்து இந்தியா கூட்டணி கூட்டங்களுக்கும் ஒரு கட்சித் தலைவர் என்கிற முறையிலே சென்றி ருக்கிறேன். அங்கே இருக்கிற அத்தனை கட்சித் தலைவர்களும் காங்கிரஸை விரும்பாதவர்கள், தலைவரிடத்திலே காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை நாம் தேசிய அளவில் அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்திக் கொண்டிருந்தவர்கள். ஆனால் காங்கிரஸை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவர், ராகுல் காந்தியைத் தூக்கிப் பிடித்தவர் நம்முடைய தலைவர் அவர்கள். இல்லை என்று சொன்னால், 2024–லிலேயே காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைத்திருந்தால், மத்தியிலே ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நிலை உருவாகி இருக்கும். காங்கிரஸ் இல்லை என்று சொன்னால் சந்திரபாபு நாயுடு நம்மோடு இருந்திருப்பார், சந்திரசேகர் ராவ் நம்மோடு இருந்திருப்பார், பல தலைவர்கள் ஏன் நிதீஷ் குமார் வெளியே போய் இருக்கமாட்டார். காங்கிரஸால் அவர் வெளியேபோனார். இப்படி அத்தனை தலைவர் களும் நம்மோடு இருந்திருந்தால், அப்படி ஒரு கூட்டணி அமைத்திருந்தால், அண்ணன் திருச்சி சிவா அவர்கள் இன்றைக்கு அமைச்சராக நம்மிடையே அமர்ந்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தி.மு.க. இல்லாத இந்தியா கூட்டணியை விரும்பாத தலைவர்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்படித் தூக்கிப் பிடித்த, அப்படிப் பாதுகாத்த அந்த காங்கிரஸ் இன்றைக்கு என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள். “தி.மு.க. இல்லாமல் இந்தியா கூட்டணிக் கூட்டமா? அட போங்கடா உங்க இந்தியா கூட்டணிக் கூட்டமும் நீங்களும்!” நான் ஒவ்வொரு கூட்டத்துக்கும் போய் பார்த்திருக்கிறேன். அத்தனை கட்சித் தலைவர்களும் நம்முடைய தலைவரோடு எவ்வளவு குளோஸாக இருப்பார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன். எங்கிருந்து வந்தார்கள் அந்த கிரிஷ் சோடங்கரும், பிரவீன் சக்கரவர்த்தியும்? எங்கே இருந்தீர்கள் நீங்கள் இதுவரைக்கும், யாருக்காவது தெரியுமா? கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி என்று யாரையாவது நமக்குத் தெரியுமா? கிறிஸ்டோபர் திலக் என்ற ஒருவரைத் திருச்சியிலிருந்து இப்போது எம்.பி.வேறு ஆக்கி இருக்கிறார்கள்.நம்முடைய எம்.எல்.ஏ.க்கள், நம்முடையஅண்ணன் தி.மு.க. தலைவர் கொடுத்தது அது. இப்போது அந்த பிரவீன் சக்கரவர்த்தி. இவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நம்முடன் காங்கிரஸ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">இருந்ததால் நிதி கிடைக்கவில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காங்கிரஸ் ஒன்றுதான் நமக்குப் பிரச்சினை. காங்கிரஸ் நம்முடைய கூட்டணியில் இல்லாமல் இருந்திருந் தால், கடந்த ஐந்து வருடங்களில் இப்போது செய்த திட்டங்கள் போன்று இன்னொரு மடங்கு செய்திருக்க முடியும். காரணம் நிதி பிரச்சினை. காங்கிரஸ் கூட இருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் நமக்கு நிதி டெல்லியிலிருந்து வருவது குறைந்தது. காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு நிதி பிரச்சினையே இருந்திருக் காது. அப்படி ஒரு பக்கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்வொருவரையும் பாருங்கள்... “இது கொள்கைக் கூட்டணி என்றார்கள்; நாங்கள் தேர்தலுக்காக தி.மு.க.வோடு கூட்டணி இல்லை என்று சொன்னார்கள்.” அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கம்யூனிஸ்ட்காரர் சண்முகம் அவர்களே... தமிழ்நாட்டில் “தி.மு.க. கூட்டணி இல்லை” என்று சொல்வதற்கு நீங்கள் யார்? ஏன் நாங்களெல்லாம் கூட்டணியில் இல்லையா! முடிவு செய்வதற்கு நீங்கள் யார்? “கம்யூனிஸ்ட் தி.மு.க. கூட்டணியில் இல்லை” என்று நீங்கள் சொல்லுங்கள். ஆனால் “தி.மு.க. கூட்டணி இல்லை” என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்ன நினைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">தலைவரின் பெருந்தன்மை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதேபோலப் பார்த்தீர்கள் என்றால், இன்னொருவர் இரண்டே இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆக வேண்டுமாம். ஆனால் அவர் கொள்கைத் தலைவராம், தமிழ்நாட்டில் ஒரே கொள்கைத் தலைவர் அவர்தானாம். இரண்டே எம்.எல்.ஏ.க்கள் வைத்துக் கொண்டு தன்னை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்று இரண்டு நாள் கதவைத் திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார். “நாங்கள் ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம், ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கி றோம்” என்று, நீங்கள் சொன்னீர்களா? அல்லது தி.மு.க. தலைவர் சொன்னாரா? தி.மு.க.வில் யாராவது சொன்னார்களா? நீங்கள்தானே பேட்டிக் கொடுத்தீர்கள். “நாங்கள் அனைவரும் ஆதரிக்கிறோம், ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கி றோம்.” அப்போது சொன்ன வாய், இப்போது ஏன் மாற்றிச் சொல்கிறது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">ஆதாயத்தைத் தேடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">ஏமாற்றுப் பேர்வழிகள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்களுக்கெல்லாம் நம்முடைய தலைவர் எவ்வளவு மரியாதை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு கூட்டணிக் கூட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். தூக்கித் தூக்கி வைப்பார். தலைவருக்கு இருக்கிற பெருந்தன்மையை நீங்கள் யாருடனும் ஒப்பிடவே முடியாது. அவ்வளவு மென்மை, அவ்வளவு பெருந்தன்மை. ஏன், கரூரில் 41 பேரைக் கொன்றார்கள், அப்போதும் கூடப் பெருந்தன்மையாக இருந்தார். சில நேரங்களில் நானே யோசிப்பது உண்டு, ஒருவேளை அவருடைய பெருந்தன்மைதான் நமக்குப் பலவீனமாக ஆனதோ என்று. இன்றைக்குச் சர்வசாதாரணமாக அனைவரும் அவர்கள் ஆதாயத்தைத் தேடி ஏமாற்றிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்தக் கொள்கைத் தலைவர் வரலாறு பார்த்தீர்கள் என்றால் தெரியும்... 2006–இல் அ.தி.மு.க. கூட்டணி, தோற்ற உடனே 2011–இல் தி.மு.க. கூட்டணி; 2011–இல் தி.மு.க. கூட்டணியில் தோற்ற உடனே, 2016–இல் மக்கள் நலக் கூட்டணி; 2016–இல் மக்கள் நலக் கூட்டணி தோற்ற உடனே, 2019–இல் தி.மு.க. கூட்டணி; 2019–இல் தி.மு.க. கூட்டணி, 2021–இல் தி.மு.க. கூட்டணி, 2024–இல் தி.மு.க. கூட்டணி, தொடர்ந்து வெற்றி பெறும் வரைக்கும்... இப்போது 2026–இல் தோற்ற உடனே எந்தக் கூட்டணி? யோசித்துப் பாருங்கள், இவர்கள்தான் கொள்கைக் க்காரர்களா? அப்படிப்பட்ட இந்த நிலைமையில்தான், இவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்னொரு தலைவர் சொன்னார், “நான் கலைஞரை விட்டுப் பிரிந்து சென்று மிகவும் வேதனைப்பட்டு விட்டேன், வருத்தப்பட்டுவிட்டேன். இனி என் கடைசி உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன்தான் இருப்பேன், அவரைத் தூக்கி நிறுத்துவதுதான் என் வேலையே” என்று நீங்கள் பேசியதை, நான் மேடையில் இருந்து பல கூட்டங்களில் பார்த்தவன். அவர் இப்போது, “உதயசூரியனில் போட்டி யிட்டது துரதிர்ஷ்டவசமானது” என்கிறார். அப்படிப் பேசிய ஒரு கட்சித் தலைவருக்கு, இன்றைக்கு உதய சூரியனில் போட்டியிட்டது துரதிர்ஷ்ட வசமாகப் போனதாம்? என்ன அநியாயம் என்று பாருங்கள். இப்படிப்பட்டவர்களை எல்லாம் நம்முடைய தலைவர் பெருந்தன்மை யோடு, மென்மையாக அணுகி வைத்தார். இது நம்முடைய தலைவருக்கே ஒரு பாடம், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">பிரச்சினைகளுக்குக் காரணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நிர்வாகத் திறமையின்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்முடைய தலைவர் ஆறு மாதங்கள் டைம் கொடுத்திருக்கிறாராம். பள்ளிக்கூடத்துக்கு ஒரு பிள்ளை போக முடியவில்லை, கல்லூரிக்கு ஒரு பெண் போக முடியவில்லை, வயதான பாட்டி ரோட்டில் நடக்க முடியவில்லை, எந்த இடத்திலும் தனியாக உட்கார முடிய வில்லை. ஆறு மாதங்கள் கழித்து, ஆயிரக்கணக்கான பேர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பின்னர், நாங்கள் பேச வேண்டுமா? ஆறு மாதங்களுக்கு கம்மென்று இருக்க வேண்டுமா? நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் ஆறு மாதம் கேட்கவில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மக்களைப் பாதிக்கும்போது கேட்போம்; வீட்டிற்குச் சென்றால் மின்சாரம் இருக்குமோ இருக்காதோ தெரியாது, நான் கேரண்டி கிடையாது. ஐந்து வருடங்கள் எங்கே மின்வெட்டு இருந்தது? அதே அதிகாரிகள் தானே, அதே மின்சாரம் தானே, எப்போது மின்வெட்டு இருந்தது? இன்றைக்கு ஏன் மின்வெட்டு வருகிறது. வேறு ஒன்றும் இல்லை, நிர்வாகத் திறமையின்மை; அதுதான் காரணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">அரசை விமர்சிக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">சேனல்கள் பிளாக்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்வெட்டு என்று செய்தி வெளியிடும் தொலைக்காட்சிகளை எல்லாம் பிளாக் செய்துவிட்டார்கள். பாலிமர் டி.வி., நியூஸ் தமிழ் 24x7 டி.வி., தமிழ் ஜனம் டி.வி. இந்த மூன்று டி.வி.யும் அரசு கேபிளில் பிளாக். 5 நாட்கள் ஆகிவிட்டன. கேட்டால், “நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. தொழில்நுட்பக் கோளாறு.” தொழில்நுட்பக் கோளாறு அந்த மூன்றுக்குத்தான் வருமா? சன் டி.வி.யைத் தொடுவதற்குப் பயமாக இருக்கிறது போல, அதனால் சன் டி.வி.யைத் தொடவில்லை, கலைஞர் டி.வி.யைத் தொடவில்லை. இதெல்லாம் என்ன அதிகாரம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">எதற்கும் பதில் சொல்லாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">கல்லுளி மங்கன்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தனிமனித ஒழுக்கம் வேண்டுமாம்; தனிமனித ஒழுக்கம் இருந்தால், தமிழ்நாட்டில் தவறு நடக்காதாம்... இதை ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே நாமெல்லாம் பேசி இருக்கி றோம். ஏன், உங்களுடைய குட்டி நண்பா, குட்டி நண்பிகளிடம் இங்கிருந்து ஒரு கோரிக்கை விட வேண்டியதுதானே? “உங்கள் வீட்டில் உங்கள் அப்பாவையும், அண்ண னையும் குடிக்க வேண்டாம்” என்று சொல்லுங்கள். ஓட்டுப் போடச் சொன்னாய் அல்லவா... அதே குட்டீஸிடம் ஏன் கோரிக்கை வைக்கக் கூடாது? “கடைக்கு அனுப்பாதே, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் விடாதே” என்று சொல்லக் கூடாதா? சொல்லிப் பாருங்கள். அதேபோன்று, உங்கள் வீட்டில் இருக்கிற உங்கள் அண்ணனையோ, உங்கள் அப்பாவையோ பாலியல் தொந்தரவில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லுங்கள். யார் ஈடுபடுகிறார்கள்? அங்கிருந்துதான். அப்போது அந்தக் குட்டீஸிடம் சொல்ல வேண்டியது தானே... என்ன பேச்சு பாருங்கள்... எதற்கும் பதில் கிடையாது. ‘கல்லுளி மங்கன்’ என்று சொல்லுவார்கள் அல்லவா... கொங்கு மாவட்டங்களில் அதிகமாகச் சொல்லுவார்கள், “கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறான்” பாருங்கள் என்று சொல்வார்கள். எதற்கும் பதில் சொல்வதே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பார்த்துப் பார்த்துத் தொழிற்சாலை கொண்டு வந்தார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முன்னேற்றி வைத்திருக்கி றோம். அடுத்த டார்கெட் என்ன? உலகத்தில் இருக்கிற சின்னச் சின்ன நாடுகளை விட நம்முடைய மாநிலம் ஒரு சிறந்த மாநிலமாக, வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற வேண்டும் என்பது தி.மு.க. தலைவர் தளபதியுடைய நோக்க மாக இருந்தது. இன்றைக்கு என்ன ஆனது? MoU போட்டு கையெழுத்துப் போட்டதெல்லாம் ஆந்திராவுக்குப் போகிறது; வேலைவாய்ப்பு ஆந்திரா வுக்குப் போகிறது. என்ன காரணம்? ஏன் அது வரவில்லை? நீங்கள் எதற்கும் பேசமாட்டீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">டெல்டா மாவட்டங்கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">பாலைவனமாகும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜூன் 12–ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டும். ஐந்து வருடங்களாக 12–ஆம் தேதி மேட்டூர் அணையை நம்முடைய தளபதி அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்; ஒரு வருடம் 12–ஆம் தேதிக்கு முன்பே திறந்திருக்கிறார். கர்நாடகாவிற்குச் சென்று தண்ணீர் வாங்கிவிட்டு வந்திருக்க வேண்டுமா, இல்லையா? தண்ணீர் வாங்கி வந்தால் திறக்கலாம் அல்லவா... 12–ஆம் தேதியில் திறக்க முடியாது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு திறக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் மேட்டூர் அணை திறக்கவில்லை என்று சொன்னால், டெல்டா மாவட்டம் முழுவதும் காலி ஆகிவிடும். ஒரு போகம் பயிரிடுவதே போய்விடும். அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையிலே இன்றைக்குத் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">தமிழ்நாட்டை பாழ்படுத்தி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மறுபடியும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் என்பதிலே எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தி.மு.க.வின் தலைவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார். அதிலே எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்குள் தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்து வார்களோ என்று பயமாக இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, இப்போது நாம் டெவலப் செய்து வைத்துள்ள அனைத்தையும் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் என்றால், மீண்டும் நாம் ‘ஜீரோ’ விலிருந்து வேலை பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட நிலைக்கு இந்தத் தமிழ்நாட்டைத் தள்ளி விடுவார்களோ என்ற நிலையில் இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்றைக்குப் போர் தண்ணீர் கீழே போய்விட்டது. போர் மோட்டாருக்கு 3 பேஸ் கரண்டும் கிடையாது. மேட்டூர் அணையும் திறக்கவில்லை என்று சொன்னால் என்னவென்று நினைத்துப் பாருங்கள். டெல்டா மாவட்டத்துக்குத் தான் பிரச்சினை என்று பார்க்கிறீர்களா? இங்கே குடிக்கத் தண்ணீர் வராது. மேட்டூர் அணையைத் திறந்தால்தான் வீராணத்துக்குத் தண்ணீர் வரும், வீராணத்துக்குத் தண்ணீர் வந்தால்தான் சென்னைக்குக் குடிநீர் வரும். வீராணத்தில் இப்போது தண்ணீர் இல்லை. அப்படிப்பட்ட சூழல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்போது பார்க்கும்போது, இவர்களைவிட ஜனாதிபதி ஆட்சியே பரவாயில்லையோ என்று தோன்று கிறது? ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை வேலைகள் நடந்தது. இவர்களைவிட அதுவே மேல் என்று யோசிக்கும் அளவிற்கு இன்றைக்கு இந்த நிலைமை மாறி இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணன் சிவா அவர்கள் கலைஞருடைய வரலாற்றைப் பற்றி, நம்முடைய ஒவ்வொரு சிரமத்திற்கும் பரிகாரம் தரக்கூடியவர்; கலைஞர் இருந்தால் எப்படி அதைச் செய்திருப்பார் என்கிற நிலையிலே பரிகாரத்தைத் தரக்கூடியவர். அப்படிப்பட்ட அண்ணன் சிவா அவர்களுக்கு இந்த நேரத்திலே வழிவிட்டு, எனக்கு ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி, நான் கொங்கு மண்டலத்துக்காரன் என்று சொன்னாலும், உங்களோடு பேசு வதற்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்தப் பகுதிக் கழகத்தின் அத்தனை பொறுப்பாளர்க ளுக்கும், அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணன் சேகர்பாபு அவர்களை சட்டமன்றத்துக்குள் எப்படித்தான் சமாளிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போதே அவர் நெருப்பு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது நான் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன். அப்போதே நெருப்பாகப் பறப்பார். இப்போது எதிர்க்கட்சியாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அவரை எப்படிச் சமாளிப்பார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. அவர் சேகர்பாபு அல்ல, ‘செயல் பாபு’ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணன் சொல்லி யிருக்கிறார். அப்படி அனைவருக்கும் இந்த நேரத்திலே இந்த வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் 
ஈ.ஆர்.ஈஸ்வரன் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>