<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1025,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 17 2026 03:31:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260617T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="17062026-CBE-03" position.sequence="03" ex-ref="17062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் கொடூரத்திற்கு பலி! –</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">த.வெ.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ரீல்ஸ் அரசியலில் மட்டுமே அரசு தீவிரம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரு­வள்­ளூர், ஜூன் 17–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் நேற்று ஒரே நாளில் மூன்று பெண்குழந்­தை­கள் பாலி­யல் குற்­றங் க­ளுக்குஆளான சம்­ப­வங்­கள் தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் அதிர்ச்­சி­யை­யும், வேத­னை­யை­யும், கொந்­த­ளிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த தொடர்சம்­ப­வங்­கள் பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பு குறித்து பொது­மக்­கள், பெற்­றோர்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் கடும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கும்­மி­டிப்­பூண்டி சிப்­காட் தொழிற்­பேட்­டை­யில் பணி­பு­ரி­யும் வட­மா­நி­லத்­தைச் சேர்ந்த தம்­ப­தி­ய­ரின் 3 வயது பெண் குழந்தை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான நிலை­யில் முட்­பு­த­ரில் மீட்­கப்­பட்டு முத­லில் கும்­மி­டிப் பூண்டி அரசு மருத்­து­வ­ம­னை­யி­லும், பின்­னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யி­லும் அனு­ம­திக்­கப்­பட்டு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், சிகிச்சை பல­னின்றி குழந்தை உயி­ரி­ழந்­தது தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் சோகத்தைஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்­ப­வரை போலீ­சார் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். உயி­ரி­ழந்த சிறு­மிக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்­டும்; குற்­ற­வா­ளிக்கு சட்­டத்­தில் உள்ள மிகக் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்­டும் என்று பொது­மக்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், பூவி­ருந்த­ வல்லி அருகே வசிக்­கும் கூலித் தொழி­லாளி தம்­ப­தி­ய­ரின் 7 வயது மகள், வீட்­டின் அருகே விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது பாலி­யல் துன்­பு­றுத்தலுக்கு ஆளா­ன­தாக பெற்­றோர் அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், அதே பகு­தி­யைச் சேர்ந்த சர­வ­ணன் மீது போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­கி­றது. ஆரம்ப கட்­டத்­தில் மக­ளிர் காவல்­து­றை­யி­னர் அலட்­சி­ய­மாக செயல்­பட்ட­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இத­னு­டன், திரு­வள்­ளூர் அடுத்த திருப்­பாச்­சூர் பகு­தி­யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­நர் நந்­த­கு­மார், அதே பகு­தி­யைச் சேர்ந்த அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில்7-ஆம் வகுப்பு படிக்­கும் மாண­வி­யி­டம் கஞ்சா போதை­யில் அடிக்­கடி பாலி­யல் சீண்­ட­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. மாணவி அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் அனைத்து மக­ளிர் காவல் நிலைய போலீ­சார் நந்­த­கு­மாரை போக்சோ சட்­டத்­தின் கீழ் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரே நாளில் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் மூன்று பெண் குழந்­தை­கள் பாலி­யல் குற்­றங்­க­ளுக்கு ஆளான சம்­ப­வம் பெற்­றோர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குழந்­தை­களை பள்­ளிக்­கும், வீட்­டின் வெளி­யி­லும் பாது­காப்­பாக அனுப்ப முடி­யாத சூழல் உரு­வாகி வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தச் சம்­ப­வங்­களை சுட்­டிக் காட்டி பொது­மக்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் மாநில அரசை கடு­மை­யாக விமர்­சித்து ள்ளன. பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தாக வாக்­கு­றுதி அளித்து ஆட்­சிக்கு வந்த அரசு, அந்த அடிப்­படை பொறுப்­பையே நிறை­வேற்­றத் தவ­றி­விட்­ட­தாக அவர்­கள் குற்­றம்­சாட்­டி­யுள்ள ­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மாநி­லம் முழு­வ­தும்பெண்­கள், சிறு­மி­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள் தொட ர்ச்சியாக நடை­பெற்று வரும் நிலை­யில், குற்­றத்தடுப்­பில் அரசு போது­மான கவ­னம் செலுத்­த­வில்லை என்­றும், சட்­டம்-­­­ஒ­ழுங்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக ரீல்ஸ், விளம்­ப­ரங்­கள், நிகழ்ச்சிஅர­சி­யல் மற்­றும் சமூக வலை­த­ளப் பிர­சா­ரங்­க­ளி ­லேயே ஆட்­சி­யா­ளர்­கள் அதிக ஆர்­வம் காட்­டு­வ­தா­க­வும் எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பெண்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள “சிங்­கப்­பெண்” சிறப்­புப் படை தரை­யில் எந்த அள­வுக்கு செயல்­படு­கி­றது என்­பது குறித்து அரசு மக்­க­ளுக்கு விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு உணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அதன் செயல்­பா­டு­களை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மூன்று வயது குழந்தை கூட பாது­காப்­பாக வாழ முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது மாநி­லத்­தின் சட்­டம்-­­­ஒ­ழுங்கு நிலைமை குறித்து கடு­மை ­யான கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன. ஒவ்­வொரு சம்­ப­வத்­திற்­குப் பிற­கும் வழக்­குப் பதிவு செய்து கைது நட­வ­டிக்கை எடுப்­பது மட்­டுமே தீர்­வாக இருக்க முடி­யாது; குற்­றங்­கள் நடை­பெ­று­வ­தற்கு முன்பே அவற்­றைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களே அர­சின் முதன்­மைப் பொறுப்­பாக இருக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கும்­மி­டிப்­பூண்­டி­யில் உயி­ரி­ழந்த 3 வயது சிறு­மி­யின் குடும்­பத்­திற்கு உரிய இழப்­பீடு, சட்ட உதவி மற்­றும் முழு­மை­யான அரசு ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும். மேலும், பாதிக்­கப்­பட்ட மற்ற சிறு­மி­க­ளுக்­கும் மருத்­து­வம், உள­வி­யல் ஆலோ­சனை, சட்ட உதவி உள்­ளிட்ட அனைத்து உத­வி­க­ளை­யும் அரசு உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பெண்­கள் மற்­றும் குழந்­தை­ க­ளின் பாது­காப்பு என்­பது எந்த அர­சுக்­கும் முதன்மை­ யான பொறுப்­பா­கும். அந்­தப் பொறுப்பை நிறை­வேற்­றத் தவ­றி­னால், சட்­டம்-­­­ஒ­ழுங்கு 
குறித்து மக்­கள் அர­சி­டம் கடு­மை­யான கேள்விகளை எழுப்­பு­வது இயல்­பா­னது. விளம்­ப­ரங்களையும் ரீல்ஸ் அர­சிய­லையும் விட, மக்­க­ளின் உயிர் மற்­றும் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டிய நேரம் இதுவே என  தெரி­வித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கும்­மி­டிப்­பூண்­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதி வழங்க வேண்­டும், குற்ற­ வாளி­கள் மீது உட­னடி மற்­றும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்குபாது­காப்பை உறுதி செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பொது­மக்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­திய காவல்­து­றை­யி­னர், பின்­னர் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்து அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதற்­கி­டை­யில், சம்­பவ இடத்­திற்கு வந்த த.வெ.க. நிர்­வா­கி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். 
இத­னால் அப்­ப­கு­தி­யில் பர­ப­ரப்­பும் பதற்­ற­மும் ஏற்­பட்­டது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>