<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 16 2026 16:19:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260617T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="17062026-MDU-07" position.sequence="07" ex-ref="17062026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">பா.ஜ.க.– காங்கிரஸ் – தி.மு.க: அரசியல் கட்சிகளின் வரலாற்று இயங்கியல் எத்தகையது?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup705942_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="M1bw_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M3bw_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M5_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்­தியா கூட்­டணி தலை­வர்­கள் சந்­திப்­பின் இறு­தி­யில் ராகுல் காந்தி உணர்ச்­சி­மிகு உரை­யாற்­றி­யுள்­ளார். நூறாண்­டு­க­ளுக்கு முன்­னால் கால­னீய ஆட்­சிக்கு 
எதி­ராக காங்­கி­ரஸ் எதிர்ப்­பி­யக்­கம் துவங்­கி­ய­து­போல இப்­போது மீண்­டும் துவங்க வேண்­டிய நேரம் வந்­து­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்! நாடு முழு­வ­தும் இலட்­சக்­க­ணக்­கான காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் போரா­டத் தயா­ராக 
உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்! அந்­தப் போராட்­டத்­தில் பா.ஜ.க.-வுடன்  முரண்­ப­டும், நாட்­டின் மக்­க­ளாட்சி அமைப்­பு­களை காக்க விரும்­பும் அனைத்­துக் கட்­சி­க­ளும் இணைய வேண்­டும் என கோரிக்கை விடுத்­துள்­ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், அவ­ரு­டைய நோக்­கம் மாநி­லக் கட்­சி­க­ளு­டன் மோது­வது அல்ல, பா.ஜ.க.-விற்கு எதி­ராக அனை­வ­ரை­யும் ஒருங்­கி­ணைப்­ப­து­தான் என்று கூறி­யுள்­ளார்! அது மட்­டு­மல்­லா­மல் பா.ஜ.க.விற்கு எதி­ரான போராட்­டத்­தில் தி.மு.க.-வும் இணைந்து நிற்­கும் என்று உத்­தி­ர­வா­தம் கொடுத்­துள்­ளார்! காங்­கி­ரஸ் அனை­வ­ரை­யும் அன்­பால், அஹிம்­சை­யால், சத்­தி­யத்­தால் ஒருங்­கி­ணைக்­கும் என்று கூறி­யுள்­ளார். காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் ஒரு நாளும் ஆர்.எஸ்.எஸ்.-சிற்கு அடி­ப­ணிய மாட்­டார்­கள்; காங்­கி­ரஸ் அடிப்­ப­டை­யி­லேயே ஆர்.எஸ்.எஸ். கருத்­தி­ய­லுக்கு எதி­ரா­னது என்று கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமாஜ்­வாதி கட்சி, ராஷ்ட்­ரிய ஜனதா தளம், திரி­ணா­முல் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட மாநி­லக் கட்­சி­க­ளெல்­லாம் தேர்­தல்­க­ளில் வழக்­கம் போல வெல்­ல­லாம் என்று 
நம்­பு­வது தவறு என்­றும், பா.ஜ.க. தேர்­தல் கமி­ஷன் உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளை­யெல்­லாம் கைப்­பற்றி விட்டது என்­றும் கூறி­யுள்­ளார். ஆனால் காங்­கி­ரஸ் ஒரு எதிர்ப்­பியக்­க­மா­கவே பிறந்து வளர்ந்­தது என்­ப­தால் அது போரா­டத் தயங்­காது என்று கூறி­யுள்­ளார். அனைத்­துக் கட்­சி­களும் அத­னு­டன் சேர்ந்து போராட வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார். அவ­ரது உரை பல­ரா­லும் சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­சி­யம் பா.ஜ.க.-விற்கு எதி­ராக அனைத்துக் கட்­சி­களும் ஒருங்­கி­ணைந்து இயங்க வேண்­டும் என்­ப­தில் ஐய­மில்லை. ஆனால், ராகுல் காந்தி மாநி­லத் தேர்­தல்­களில் இயங்­கும் முறை அவ­ரு­டைய இந்­தப் பேச்­சிற்கு எதி­ராக உள்­ளது. மாநி­லங்­க­ளில் பா.ஜ.க.-வை எதிர்த்து நிற்­கும் கட்­சி­களை அவர் கடு­மை­யாக விமர்­சிக்­கி­றார். அவற்­று­டன் ஒத்­து­ழைக்க மறுக்­கி­றார். பீஹார் தேர்­த­லில் தேஜஸ்வி யாத­வு­டன் அவர் இணக்­க­மான உற­வைப் பேண­வில்லை. மேற்கு வங்­கத்­தில் திரி­ணா­முல் காங்­கி­ர­ஸு­டன் கூட்­டணி அமைக்­க­வில்லை. தமிழ்­நாட்­டில் தி.மு.க-.வுடன் பிணக்­கத்தை உரு­வாக்­கி­ய­து­டன், தேர்­தல் முடிந்­த­வு­டன் தி.மு.க-.வை கடு­மை­யாக எதிர்த்த த.வெ.க.-வுடன் சென்று இணைந்­து­விட்­டார். கேர­ளா­வில் பின­ரயி விஜ­ய­னைக் கடு­மை­யா­கத் தாக்­கி­ய­து­டன், 
சி.பி.ஐ. (எம்) கட்­சிக்­கும் பா.ஜ.க.-விற்­கும் ரக­சிய உறவு இருக்­கி­றது என்று கூறி­னார். தமிழ்­நாடு, கேரளா தேர்­தல் முடி­வு­க­ளைப் பற்றி அவர் என்ன நினைக்­கி­றார் என்­பது தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் கட்­சி­யின், ராகுல் காந்­தி­யின் இந்த முரண்­பட்ட நிலையை எப்­படி புரிந்­து­கொள்­வது? ஒரு புறம் 
மாநி­லத் தேர்­தல்­க­ளில் பா.ஜ.க.-வை கடு­மை­யாக எதிர்க்­கும் மாநி­லக் கட்­சி­களை எதிர்க்­கி­றார். மற்­றொ­ரு­பு­றம் தேசிய அள­வில் அவற்றை பா.ஜ.க.-விற்கு எதி­ராக 
ஒருங்­கி­ணைக்க விரும்­பு­கி­றார். என்­னால் பின­ரயி 
விஜ­யனை கட்­டிப் பிடிக்க முடி­யாது என்­கி­றார். நீங்­கள் கட்­டிப் பிடிக்க வேண்­டாம், எதற்­காக எட்டி உதைக்­கி­றீர்­கள் என்று கேட்­கி­றார் இட­து­சாரி தோழர் ஒரு­வர். இப்­படி ஒரு குழப்­ப­மான நிலை எப்­படி உரு­வா­கி­யது என்­பதை சிந்­தித்­துப் பார்ப்­பது அவ­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சம­கால அர­சி­ய­லின் வர­லாற்று வேர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமக்கு அறி­யக்­கூ­டிய வர­லாற்­றில் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இந்­தி­யா­வில் பெளத்­தம் பர­வி­ய­போ­து­தான் பேர­ரசு உரு­வாக்­க­மும் வலு­வ­டைந்­தது. அதன் பின் வேத­கால சமஸ்­கி­ரு­தம் பேசிய ஆரி­யர்­கள் புரா­ணங்­கள், இதி­கா­சங்­கள், தர்ம சாஸ்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை இயற்றி தங்­களை மறு­த­க­வ­மைப்பு செய்­து­கொண்ட பின், பெரும்­பா­லும் இந்­திய அர­சி­ய­லில், சமூக ஒழுங்கை வடி­வ­மைப்­ப­தில் கணி­ச­மா­கப் பங்­காற்­றி­னார்­கள். நால்­வர்ண சமூக அமைப்பு என்­பது அதன் முக்­கி­ய­மான கட்­ட­மைப்­பாக இருந்­தது. ஐரோப்­பா­வி­லும், பிற இடங்­க­ளி­லும் மூவ­டுக்கு சமூ­க­மாக, பூசா­ரி­கள், அர­சர்­கள் மற்­றும் நிலப்­பி­ர­புக்­கள், பொது­மக்­கள் என்று இருந்­தது இந்­தி­யா­வில் நால­டுக்­காக வடி­வம் பெற்­றது. ஆனால் பிற இடங்­க­ளில் இல்­லா­த­படி இது பிறப்­ப­டை­யா­ள­மா­க­வும், மறு­பி­ற­விக் கோட்­பாட்­டு­டன் பிணைக்­கப்­பட்டதாக­வும் ஒரு கருத்­தி­யல் வலு­வாக இறை­நம்­பிக்­கை­யு­டன் சேர்ந்து உரு­வாக்­கப்­பட்­டது. அதா­வது ஒரு­வர் செய்­யும் பாவ, புண்­ணி­யங்­ க­ளுக்­கேற்ப அவர் அடுத்த பிற­வி­யில் குறிப்­பிட்ட வர்­ணத்­தில் பிறப்­பார் என்று கூறப்­பட்­டது. யாரா­வது இந்த ஏற்­றத்­தாழ்­வைக் கேள்வி கேட்­டால், அது போன ஜென்­மத்­தில் செய்த பாவத்­தால் அல்­லது புண்­ணி­யத்­தால் விளைந்­தது என்று கூறி­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நால்­வர்ண கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் பல்­வேறு ஜாதிப் பிரி­வி­னை­கள் தோன்றி அவை பல்­வேறு தொழில்­க­ளு­டன் பிணைக்­கப்­பட்டு சமூக ஒழுங்கு என்­பது இறுக்­க­மா­ன­தா­கக் கட்­ட­மைக்­கப்­பட்­டது. அவர்­ணர்­கள் என தீண்­டப்­படாத பிரி­வி­ன­ரும் உரு­வா­னார்­கள். எந்த சமூக அமைப்­பும் நெகிழ்­வுத்­தன்மை இல்­லா­மல் இருக்­காது என்­ப­தால் சில­பல தளர்­வு­கள் ஏற்­பட்­டன என்­றா­லும் பர­வ­லாக இந்த வர்ண அமைப்பு அர­சு­ரு­வாக்­கங்­க­ளின், பேர­ரசு உரு­வாக்­கங்­க­ளுக்கு அனு­ச­ர­ணை­யா­கவே இருந்­தது. பூசா­ரி­க­ளா­க­வும், சமஸ்­கி­ரு­தம் பயின்­ற­ வர்­க­ளா­க­வும், இந்த வர்ண தர்­மத்தை கட்­டிக் காப்­ப­வர்­க­ளா­க­வும், அரசு நிர்­வா­கத்­தில், வரி வசூ­லில் எல்­லாம் பங்­க­ளிப்­ப­வர்­க­ளா­க­வும் இருந்த பார்ப்­ப­னர்­கள் மிக முக்­கி­ய­மான அர­சி­யல் சக்­தி­க­ளாக இருந்­தார்­கள். சத்­தி­ரி­யர்­கள் போரிட்டு நிலங்­களை கைப்­பற்றி அர­ச­மைத்­தா­லும். ஆட்­சியை நிலை­நி­றுத்த பார்ப்­ப­னர்­கள் தேவைப்­பட்­டார்­கள். மராத்­திய பேர­ர­சர் சிவா­ஜிக்கு முடி­சூட எப்­படி காக­பட்­டர் என்ற விஷ்­ணு­குப்­த­ரின் அங்­கீ­கா­ரம் தேவைப்­பட்­டது என்ற வர­லாற்று நிகழ்வை மையப்­ப­டுத்தி அண்ணா எழு­திய “சந்­தி­ர­மோ­கன் அல்­லது சிவாஜி கண்ட இந்து சம்­ராஜ்­யம்” நாட­கம் இந்த நெடிய வர­லாற்­றின் முக்­கிய அம்­சங்­களை விளக்­கும் ஆற்­றல் பெற்­றது என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஐரோப்­பா­வில் வர்த்­த­கம் பெருகி, தொழில்­மு­னை­வோர்­கள் தோன்றி, முத­லீட்­டிய உற்­பத்தி முறை உரு­வா­கத் துவங்­கி­ய­போது நில­பி­ர­புத்­து­வம் பல­வீ­ன­ம­டைந்­தது. அப்­போது அச்சு இயந்­தி­ரம் வடி­வ­மைக்­கப்பட்­ட­தால் நூல்­கள் அச்­சி­டப்­ப­டத் துவங்கி, கல்வி பர­வ­லா­னது. அதன் விளை­வாக அறி­வு­சே­க­ரம் சமூக இயக்­க­மாக மாறி­ய­தில் பல்­வேறு புதிய இயந்­தி­ரங்­களை உரு­வாக்­கு­வ­தும், புதிய கண்­டு­பி­டிப்­பு­களை நிகழ்த்­து­வ­தும் அதி­க­ரித்­தது. இவை­யெல்­லாம் மன்­னா­ராட்­சிக்கு பல கட்­டுப்­பா­டு­களை விதிப்­ப­தும், மக்­கள் தொகு­தி­க­ளின் பிர­தி­நி­தி­கள் முடி­வெ­டுப்­ப­தில் பங்­கெ­டுப்­ப­து­மான பல்­வேறு குடி­ய­ரசு வடி­வங்­கள் உரு­வா­கத் துவங்­கின. இதன் விளை­வாக ஐரோப்­பிய வர்த்­த­கர்­கள் உல­கம் முழு­வ­தும் பய­ணம் செய்து கால்­ப­திக்­கத் துவங்­கி­னார்­கள். இந்­தி­யா­விற்கு வந்த ஐரோப்­பி­யர் ­க­ளில், ஆங்­கி­லே­யர்­க­ளின் கிழக்­கிந்­திய கம்­பெனி அதி­கம் வேரூன்றி, இந்­திய மன்­னர்­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களில் பங்­கெ­டுக்­கத் துவங்கி, மெல்ல மெல்ல ஆட்­சி­ய­தி­கா­ரத்­தில் பங்­கெ­டுக்­கத் துவங்­கி­னார்­கள். இறு­தி­யில் 
பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்­டின் மத்­தி­யில் இந்­தியா நிலப்­ப­குதி முழு­வ­தை­யும் நேர­டி­யாக இங்­கி­லாந்து மன்­ன­ராட்­சி­யில் இணைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் பிற­கான காலனி ஆட்­சி­யில் இந்­தி­யா­வில் ஐரோப்­பா­வில் நடந்து கொண்­டி­ருந்த மாற்­றங்­க­ளெல்­லாம் கால்­ப­திக்­கத் துவங்­கின. அச்சு இயந்­திர பயன்­பாடு, கல்வி, தொழில் வளர்ச்சி, ரயில் போன்ற போக்­கு­வ­ரத்து வச­தி­கள், அறி­வி­யல் தொழில்­நுட்­பம், நீதி­ப­ரி­பா­ல­னம், ஆட்சி முறை என நவீன வாழ்க்கை முறை தோன்­றி­யது. என்­றுமே கல்­வியை தங்­கள் தனி உரி­மை­யாக வைத்­தி­ருந்த பார்ப்­ப­னர்­கள் ஆங்­கி­லக் கல்வி கற்­ற­து­டன், துரி­த­மாக கால­னீய ஆட்­சி­யின், நவீன சமூ­கத்­தின் பல்­வேறு துறை­க­ளி­லும் முக்­கிய பங்கு வகிக்­கத் துவங்­கி­னார்­கள். இந்­திய வர்த்­தக சமூ­கத்­தி­ன­ரும் தங்­க­ளுக்­குக் கிடைத்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி பொரு­ளா­தார வளம் பெற்­றார்­கள். அதே சம­யம் பிரிட்­டிஷ் ஆட்சி இந்­தி­யா­வின் வளங்­க­ளைச் சுரண்­டிய அளவு, இந்­தி­யா­விற்கு நல்­லாட்சி வழங்­க­வில்லை என்­றும் உணர்ந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச் சூழ்­நி­லை­யில்­தான் பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்­டின் இறு­தி­யில் மூன்­று­வி­த­மான அர­சி­யல் போக்­கு­கள் உரு­வா­யின. இந்த மூன்­றை­யும் நாம் தெளி­வா­கப் புரிந்­து­ கொண்­டால்­தான் சம­கால அர­சி­யல் முரண்­பா­டு­ க­ளை­யும் முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல் வகை இறை­யாண்மை தீவி­ர­வா­தி­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மராத்­திய பேஷ்­வாக்­க­ளின்  ஆட்­சி­யில் மேலா­திக்­கம் பெற்­றி­ருந்த பார்ப்­பன சமூ­கத்­தி­னர் ஆங்­கி­லே­யர் ஆட்­சியை உடனே போரிட்டு விரட்ட வேண்­டும்; இந்­தி­யர்­கள் மீண்­டும் தங்­க­ளையே ஆண்­டு­கொள்ள வேண்­டும் என்ற தீவி­ர­வாத நோக்­கைக் கொண்­டி­ருந்­தார்­கள். இவர்­கள் இந்­திய மன்­னர்­கள் 1857-ஆம் ஆண்டு கல­கம் செய்த பிரிட்­டிஷ் ராணு­வத்­தில் பணி­யாற்­றிய வீரர்­க­ளு­டன் சேர்ந்து ஆங்­கி­லே­யர்­க­ளுக்கு எதி­ராக தொடுத்த போரின் தொடர்ச்­சி­யா­கவே சிந்­தித்­தார்­கள். இவர்­க­ளுக்கு பார்ப்­ப­னீய இந்து அடை­யா­ளமே இந்­திய தேசிய அடை­யா­ள­மாக இருந்­தது. 
வங்­காள பார்ப்­பன சமூ­கத்­தி­லும் இத்­த­கைய நோக்கு இருந்­தது.  வந்தே மாத­ரம் பாடலை தன் நாவ­லில் 1882-ஆம் ஆண்டு எழு­திய பங்­கிம் சந்­தி­ரர் ஒரு உதா­ர­ணம். இன்­றைய இந்­துத்­துவ அர­சி­ய­லின் வேர்­கள் இந்­தப் பிரி­வினரே. இவர்­கள்­தான் இந்து மஹா­சபை, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்­பு­களை உரு­வாக்­கி­னார்­கள். தில­கர், சாவர்க்­கர், ஹெட்­க­வார், கோல்­வார்­கர் ஆகி­யோர் இப்­பி­ரி­வின் முக்­கி­ய­ மான தலை­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரண்­டாம் வகை சுயாட்சி மித­வா­தி­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய குடி­மைச் சமூக உரு­வாக்­கத்­தின் அடித்­த­ள­மாக இருந்த வக்­கீல்­கள், பேரா­சி­ரி­யர்­கள் உள்­ளிட்­ட­வர்­கள். இவர்­கள் ஆங்­கி­லே­யர்­க­ளி­டம் ஆட்சி அதி­கா­ரத்­தில் பங்கு கேட்­பது, சுயாட்சி உரி­மை­க­ளைக் கோரு­வது ஆகி­ய­வற்­று­டன் இந்­திய சமூ­கம் பழைய அமைப்­பி­லி­ருந்து மாற்­றம் பெற வேண்­டும் என்ற சீர்­தி­ருத்த நோக்­கும் கொண்­ட­வர்­கள். மக்­க­ளி­டம் கல்­வி­யும், நவீன சிந்­த­னை­க­ளும் உரு­வான பிற­கு­தான் சுயாட்­சிக்­கான ஆற்­றல் பிறக்­கும் என்ற எண்­ணம் கொண்­டி­ருந்த மித­வா­தி­கள். மோதி­லால் நேரு, ரானடே, கோகலே உள்­ளிட்­ட­வர்­கள் இப்­பி­ரி­வின் உதா­ர­ணங்­கள். காந்தி, நேரு, காங்­கி­ரஸ் கட்சி இந்­தப் பிரி­வின் அர­சி­யல் வடி­வங்­கள். இவர்­கள் மர­பு­வா­தம், சுதந்­தி­ர­வா­தம் ஆகி­ய­வற்­றிற்கு இடையே ஊச­லா­டு­ப­வர்­கள். மதம், ஜாதி ஆகி­யவை தனி­வாழ்க்கை தொடர்­பானவை, பொது­வாழ்க்­கை­யில் அவற்றை நுழைக்க வேண்­டி­ய­தில்லை என்ற எண்­ணம் கொண்­ட­வர்­கள். கோயில் பூசா­ரி­க­ளாக பார்ப்­ப­னர்­களே இருப்­பது தனி வாழ்க்­கையா, பொது­வாழ்க்­கையா என்­றால் இவர்­களால் உறு­தி­யாக பதில் கூற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மூன்­றாம் வகை சமூ­கப் புரட்­சி­யா­ளர்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­கள் 
முத­லில் நால்­வர்ண சமூக அடுக்­கின் ஏற்­றத்­தாழ்­வு­கள் ஒழிய வேண்­டும் என நினைத்­த­வர்­கள். தீண்­டா­மை­யும், பெண்­ண­டி­மைத்­த­ன­மும் ஒழிய வேண்­டும், அனைத்து மனித உயிர்­க­ளும் சம­மா­னவை என்ற எண்­ணம் உரு­வாக வேண்­டும் என்­ப­தற்கு முன்­னு­ரிமை கொடுத்­த­வர்­கள். மராத்­திய மாநி­லத்­தின் மகாத்மா ஜோதிபா பூலே­வும், அவர் மனைவி சாவித்ரி பாய் பூலே­வும் இதற்கு முக்­கி­ய­மான உதா­ர­ணங்­கள். இவர்­கள் ஆங்­கி­லேய ஆட்சி 
ஏற்­ப­டுத்­திய கல்வி வாய்ப்­பு­களை சமூக மாற்­றத்­திற்­கான கார­ணி­க­ளா­க­வும், அவர்­க­ளது நவீன நீதி­ப­ரி­பா­லன நடை­மு­றை­களை முன்­னேற்­ற­மா­க­வும் கரு­தி­னார்­கள் என்­ப­தால் கால­னீய ஆட்­சியை எதிர்க்­கும் அர­சி­யல் வேலைத்­திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை தர­வில்லை. நவீன இந்­திய அர­சி­ய­லில் அம்­பேத்­கர் இந்­தப் பிரி­வின் மிக முக்­கி­ய­மான ஒரு தலை­வர். அர­சி­யல் இயக்­க­மாக சொன்­னால் தமிழ்­நாட்­டில் துவங்­கிய பார்ப்­ப­ன­ரல்­லா­தோர் இயக்­கம், பின்­னா­ளில் இதன் மாற்று வடி­வ­மான பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கம், வட மாநி­லங்­க­ளில் ராம் மனோ­ஹர் லோஹியா, கன்ஷி ராம் ஆகி­யோ­ரின் இயக்­கங்­கள் ஆகி­யவை முக்­கி­ய­மான தொடர்ச்­சி­கள். இன்று இத்­தொ­டர்ச்­சி­கள் பல்­வேறு மாநில அள­வி­லான பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், தலித் கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ரஸ் கட்சி என்ற இரு­த­லைக் கொள்ளி எறும்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரும்­பான்மை இந்து மத அடை­யா­ள­வா­தம் பேசும் பா.ஜ.க., தெளி­வா­கவே மூட நம்­பிக்­கை­க­ளை­யும், 
மீட்­பு­வாத சிந்­த­னை­யை­யும், பார்ப்­ப­னர், பூசாரி வர்க்க நல­னை­யும் முன்­வைக்­கக் கூடி­யது. அனைத்து இந்­தி­யர்­களும் இந்­துக்­கள் என ஒற்றை தேசிய அடை­யா­ளத்தை முன்­வைப்­பது அவர்­க­ளுக்கு சாத்­தி­ய­மா­கி­றது. காங்­கி­ரஸ் தலை­வர்­கள் பலர் பொது­வாழ்க்­கை­யில் மதச் சார்­பின்மை என்று கூறி­னா­லும், தனிப்­பட்ட முறை­யில் பார்ப்­ப­னீய கலாச்­சார அடை­யா­ளங்­களை ஏற்­ப­வர்­கள். 
இத­னால் இவர்­க­ளால் ஒரு போதும் அம்­பேத்­கர் போல, பெரி­யார் போல ஜாதி ஒழிய வேண்­டும், குறிப்­பாக பார்ப்­ப­னீய மேலா­திக்­கம் எதிர்க்­கப்­பட வேண்­டி­யது என்று பேச முடி­யாது. அத­னால் காங்­கி­ரஸ் பன்­மைத்­து­வம் என்று பேசி­னா­லும் அந்­தப் பன்­மைத்­து­வத்தை வரை­ய­றுப்­ப­தில் ஒரு சிக்­கலை சந்­திக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிக முக்­கி­ய­மான உதா­ர­ணம் காங்­கி­ரஸ் கட்சி பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டை ஒன்­றிய அர­சுத் துறை­க­ளில், நிறு­வ­னங்­க­ளில் நடை முறைப்­ப­டுத்த முன்­வ­ர­வில்லை. மாநில அர­சு­கள் வேண்­டு­மா­னால் அதனை நடை­மு­றைப்படுத்­திக்­கொள்­ள­லாம் என்று கூறி­விட்­டது. அத­னால் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலன், முன்­னேற்­றம் என்­பது மாநி­லம் சார்ந்­த­தாக மாறி­யது. மேலும் பார்ப்­ப­னர்­கள் உள்­ளிட்ட உயர் வகுப்­பி­னர்­கள் சமஸ்­கி­ருத பின்­னணி, ஆங்­கி­லக் கல்வி என இந்­திய அள­வி­லான வலைப்­பின்­ன­லாக இருக்க, வெகு­மக்­க­ளான பிற்­ப­டுத்­தப் ­பட்­டோர் அந்­தந்த மாநில மொழி­க­ளி­லேயே அர­சி­யல் செய்­ப­வர்­க­ளாக இருந்­த­னர். தலித் மக்­க­ளும் அந்­தந்த மாநில மொழி­க­ளில்­தான் அர­சி­யல் பேசு­வார்­கள் என்­ப­தால் தலித்-­ப­கு­ஜன் அர­சி­யல் என்­பது மாநி­லத் தன்மை கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெகு­மக்­கள் அர­சி­யல் அணி­தி­ரட்­டல் என்­பது மாநில அள­வி­லேயே நடக்­கும் என்­ப­தால், மக்­க­ளாட்சி நடை­முறை­கள் வலுப்­பெ­றும்­போது பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் மாநி­லக் கட்­சி­கள் தோன்றி, காங்­கி­ர­ஸின் அர­சி­யல் இடத்தை எடுத்­துக் கொள்­ளத் துவங்­கின. குறிப்­பாக நெருக்­கடி நிலைக்­குப் பிறகு உத்­தி­ரப் பிர­தே­சம், பீஹார்உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் தோன்­றிய காங்­கி­ரஸ் எதிர்ப்பு சக்­தி­கள் மாநில அள­வி­லான பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் அணி­க­ளாக நிலை­பெற்­று­விட்­டன. ஜனதா கட்சி ஆட்­சி­யில் நிய­மிக்­கப்­பட்ட மண்­டல் கமி­ஷன் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் இட ஒதுக்­கீட்­டிற்­காக பரிந்­து­ரை­களை வழங்­கி­ய­போ­தும் காங்­கி­ரஸ் அதனை கிடப்­பில் போட்­டது. மீண்­டும் வி.பி.சிங் தலை­மை­யில் ஜனதா தள ஆட்சி ஏற்­பட்ட போது­தான் அந்­தப் பரிந்­து­ரை­கள் நடை­மு­றைப் படுத்­தப்­பட்­டன. காங்­கி­ரஸ் அதனை ஆத­ரிக்­க­வில்லை. மண்­டல் அலை­யில் உ.பி, பீஹார் மாநி­லங்­க­ளில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் அணி சேர்க்கை மாநி­லங்­களை கைப்­பற்­றி­யது. இப்­போது காங்­கி­ர­ஸால் மீண்­டும் அங்கே காலூன்ற இய­ல­வில்லை. மாறாக, இந்­துத்­துவ சித்­தாந்­தம் கொண்ட பா.ஜ.க., சிறு­பான்மை வெறுப்­ப­ர­சி­யல் மூல­மாக அங்கே மாநி­லக் கட்­சி­க­ளுக்கு எதி­ர­ணி­யாக உரு­வா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில்­தான் காங்­கி­ரஸ் இந்­துத்­துவ அணி­களை ஒரு­பு­ற­மும், மாநில அர­சி­யல் கட்­சி­களை மறு­பு­ற­மும் எதிர்­கொள்ள நேர்­கி­றது. ஒவ்­வொரு மாநி­லத் தேர்­தல் வர­லாற்­றை­யும் முழு­மை­யாக ஆராய்ந்­தால் இந்த சிக்­க­லின் முழு பரி­மா­ணத்­தைப் புரிந்­து­கொள்ள முடி­யும். காங்­கி­ரஸ் எப்­ப­டி­யா­வது தான் இழந்த மாநில அர­சி­யல் இடத்தை மீண்­டும் வென்­றெ­டுக்க வேண்­டும் என்று நினைக்­கி­றது. அதற்­காக மாநி­லக் கட்­சி­க­ளு­டன் முரண்­ப­டு­கி­றது. மற்­றொ­ரு­பு­றம் பா.ஜ.க. ஒன்­றிய அரசை கைப்­பற்றி இந்­துத்­துவ கருத்­தி­யல் பிடியை வலுப்­ப­டுத்­து­வ­தால் அத­னை­யும் எதிர்க்க வேண்­டி­யுள்­ளது. அதற்கு மாநி­லக் கட்­சி­க­ளின் துணை வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கொள்­ளிக்­கட்­டை­யின் மீது ஒரு எறும்பு பய­ணிக்­கி­றது என்று வைத்­துக்­கொள்­வோம். அந்த கொள்­ளிக்­கட்­டை­யின் இரண்டு முனை­க­ளி­லும் நெருப்பு பற்­ற­வைக்­கப்­பட்­டால் அந்த எறும்பு எங்கே செல்­லும்? அது­தான் இரு­த­லைக் கொள்ளி எறும்பு என்ற சொல்­லாக்­கம். காங்­கி­ர­ஸால் இந்­திய பெருந்­தே­சி­யத்­தின் பக்­க­மும் போக முடி­வ­தில்லை; மாநில உரி­மை­கள் பக்­க­மும் போக முடி­வ­தில்லை. வர்ண தர்ம சிந்­த­னையை ஏற்­க­வும் முடி­வ­தில்லை; முற்­போக்­காக முற்­றி­லும் மறு­த­லிக்­க­வும் முடி­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ர­ஸின் இத்­த­கைய குழப்­பத்­தின் உச்­ச­கட்ட வெளிப்­பா­டு­தான் தி.மு.க-.வுட­னான அதன் எழு­பத்­தைந்து ஆண்­டு­கால உற­வும், முர­ணும். பெரி­யா­ரின் இட ஒதுக்­கீடு தீர்­மானத்தை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளா­த­தால்­தான் 1925-ஆம் ஆண்டு காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யே­றி­னார். ஆனால் காங்­கி­ர­ஸில் முற்­போக்­கான சிந்­த­னை­யுள்­ள­வர்­கள் எடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு தி.க., தி.மு.க. இரண்­டுமே ஆத­ரவு அளித்­துள்­ளன. பிற்­போக்­கான திட்­டங்­களை எதிர்த்­துள்­ளன. ஆனால் காங்­கி­ரஸ் ஒரு போதும் தி.மு.க-.வின் சமூக நீதி, மாநில சுயாட்சி கருத்­தி­யலை முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­ட­தில்லை. மீண்­டும்,மீண்­டும் தி.மு.க.-விற்கு எதி­ரான நீர்த்­துப்­போன கொள்­கை­க­ளைக் கொண்ட கட்­சி­களை ஆத­ரித்து தி.மு.க-வை தனி­மைப்­ப­டுத்­த­வும், பல­வீ­னப்­ப­டுத்­த­வும் முயற்சி செய்­து­கொண்டே வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­கான கார­ணத்தை கண்­ட­றி­வது கடி­ன­மல்ல. காங்­கிர­ஸின் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்­பது சிறு­பான்­மை ­யி­ன­ருக்கு எதி­ரான வெறுப்­ப­ர­சி­யல் எதிர்ப்­பாக மட்­டுமே நிற்­பது. அந்த வெறுப்­ப­ர­சி­ய­லின் உள்­ள­டக்க வடி­வ­மான பார்ப்­பனீய வர்ண தர்ம சிந்­த­னையை எதிர்ப்­ப­தில் காங்­கி­ரஸ் முனைப்­புக் காட்­டாது. தி.மு.க. வர்ண தர்ம சிந்­த­னையை சனா­தன தர்­மம் என்று தமிழ் வழக்­கப்­படி அழைக்­கி­றது; அதனை ஒழிப்­பதை அர­சி­யல் இலட்­சி­ய­மாக எதிர்­கட்சி தலை­வர் உத­ய­நிதி சட்­ட­மன்­றத்­தில் கூறி­யுள்­ளார். காங்­கி­ர­ஸால்அவ்­வாறு கூற முடி­யாது என்­ப­து­டன், தி.மு.க-வின் சமூக நீதி, மாநில சுயாட்சி இலட்­சி­யங்­களை அத­னால் முற்­றி­லும் ஏற்­க­வும் முடி­வ­தில்லை. அத­னால் தங்­க­ளுக்கு உறுத்­தாத, கருத்­தி­ய­லற்ற ஒரு மாநிலக் கட்­சி­யாக நடி­கர் விஜய் கட்சி உரு­வா­ன­வு­டன் அது அந்­தக் கட்­சி­யு­டன் ஒரு­மித்து சங்­க­மித்­து­விட்­டது. காங்­கிரஸ் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்­பின் அடிப்­படை கருத்­தி­யல் பல­வீ­னம் இது­தான்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">– நன்றி:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">மின்னம்பலம் இணையதளம்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>