<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,495,1264" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 17 2026 03:44:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260617T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="17062026-MDU-08" position.sequence="08" ex-ref="17062026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">    </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="45">கூட்டணியாரே… கொஞ்சம் பதற்றத்தைக் குறையுங்கள்!     </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup597550_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ர­சி­ய­லில் நிலைப்­பா­டு­களோ கூட்­ட­ணி­களோ மாறு­வது புதி­தல்ல. ஆனால் அதற்­கான குறைந்­த­பட்ச நியா­யங்­கள் ஏதும் இல்­லா­விட்­டால் அதைப் பச்­சோந்­தித்­த­னம் என்றோ ஆதாய அர­சி­யல் என்­றோ­தான் கூற­மு­டி­யும். இன்று த.வெ.க. கூட்­ட­ணி­யில் இருக்­கும் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் ஒவ்­வொரு நாளும் தி.மு.­க.­­விற்கு எதி­ராக கூறி­வ­ரும் கருத்­துக்­கள் அறம் பிறழ்ந்த அர­சி­ய­லின் வெளிப்­பா­டு­க­ளாக இருக்­கின்­றன. காங்­கி­ரஸ் தி.மு.­க.­விற்கு இழைத்த துரோ­கம் வெளிப்­ப­டை­யா­னது. தி.மு.க.வின் முது­கில் ஏறி சவாரி செய்து ஒரு நாடா­ளு­மன்ற இடத்­தை­யும் ஐந்து சட்­ட­மன்ற இடங்­க­ளை­யும் பெற்­றுக்­கொண்டு அடுத்த நாளே த.வெ.க.வி­டம் மண்­டி­யிட்டு இடம்­பி­டித்­தார்­கள். அதற்­கான கண்­ட­னத்தை இந்­தியா கூட்­ட­ணி­ யி­லி­ருக்­கும் பல கட்­சி­க­ளி­லி­ட­மி­ருந்து ராகுல் காந்தி சந்­தித்து வரு­கி­றார்.  தி.மு.­க.­­விற்கு காங்­கி­ரஸ் இழைத்த துரோ­கம் ‘இந்­தியா’ கூட்­ட­ணியை சிதைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் இட­து­சா­ரி­கள் ‘இந்­தியா’ கூட்­ட­ணியை உடைத்து த.வெ.­க.­வி­டம் போய் கூட்­டணி வைக்­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் கேர­ளா­வில் பின­ராயி விஜ­ய­னுக்கு எதி­ராக ராகுல் காந்­தி­தான் அம­லாக்­கத்­துறை சோத­னை­யைத் தூண்­டி­னார் என்று ‘இந்­தியா’ கூட்­டணி கூட்­டத்­தில் கொந்­த­ளிக்­கி­றார்­கள். அதா­வது தமிழ்­நாட்­டில் த.வெ.க.- காங்­கி­ரஸ் கூட்­டணி மந்­திரி சபைக்கு ஆத­ரவு, கேர­ளத்­தில் எதிர்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் சொல்­லா­மல் கொள்­ளா­மல் ஓடிப்­போன காங்­கி­ர­ஸை­விட சொல்­லி­விட்­டுப் போன கட்­சி­க­ளின் நடத்­தை­தான் கேலிக்­கூத்­தாக இருக்­கி­றது. தி.மு.­க.­ தலை­வர் அனு­மதி அளித்­தால்­தான் த.வெ.­க.­விற்கு ஆத­ரவு அளிப்­போம் என்­றெல்­லாம் பேசிய இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்­கின் இன்­றைய கூட்­டணி அமைச்­சர் ஷாஜ­கான் அடுத்த ஐம்­பது வரு­டத்­திற்கு தி.மு.­க.­ துடைத்து எறி­யப்­ப­டும் என்று பேசு­கி­றார். ஐம்­பது வரு­டத்­திற்கு மேலாக இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்கை தாங்­கிப்­பி­டித்து தமிழ்­நாட்­டில் அதனை ஒரு கட்­சி­யாக உயி­ரோடு வைத்­தி­ருந்­தது தி.மு.­க.­  ஒவ்­வொரு தேர்­த­லி­லும் தி.மு.­க.­ கூட்­டணி உடன்­ப­டிக்­கையை அறி­விக்­கும்­போது முத­லில் இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்­கு­டன் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம்­தான் முத­லில் அறி­விக்­கப்­ப­டும். கலை­ஞர் காலத்­தி­லி­ருந்து கடந்த சட்­ட­மன்­றத் தேர்­தல்­வரை இது­தான் வழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் ’அந்த சோஃபா­வில்’ அமர்ந்­த­தும் என்ன மாயமோ தெரி­ய­வில்லை அதன் மந்­தி­ர­சக்­தி­யால் நேற்­று­வரை அவ்­வ­ளவு உற்ற நண்­பர்­க­ளாக இருந்­த­வர்­கள் மனம் பிறழ்ந்து நிலை தடு­மாறி வித­வி­த­மாய் பேசு­கி­றார்­கள். ஒரு மாநி­லத்­தில் ஒரு மந்­திரி பதவி இவ்­வ­ளவு மயக்­கத்தை கொடுக்­கும் என்­றால் பாஜ­க­வு­டன் போய் கூட்­டணி வைத்­தி­ருந்­தால் மோடி தேசிய அள­வி­லான பத­வி­
க­ளைக் கொடுத்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வி.சி.க. தலை­வர் திரு­மா­வ­ள­வன் ஒவ்­வொரு நாளும் 
கூட்­டணி குறித்து கூறி­வ­ரும் கருத்­துக்­கள் குழப்­ப­மானவை 
மட்­டு­மல்ல அவர் ஏதோ­வொரு குற்­ற­வு­ணர்­வுக்கு ஆட்­பட்­டி­ருப்­பது போல் தெரி­கி­றது. யாரு­டைய நிர்ப்­பந்­தத்­தாலோ முரண்­பட்ட கருத்­துக்­களை கூறி­வ­ரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சமீ­பத்­தில் நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய திரு­மா­வ­ள­வன் பின்­வ­ரும் கருத்தை கூறி­னார். “த.வெ.­க.­வுக்கு நாங்­கள் ஆத­ரவு அளிக்­கும் விவ­கா­ரத்­தில் திமு­க­வும் நெகிழ்­வுத்­தன்­மை­யு­டன் இருந்­தது எங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘நம் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வா­ன­வர்­கள்­தான் த.வெ.­க.வை எதிர்த்து வாக்­க­ளித்­துள்­ள­னர். எனவே, த.வெ­.க.­வுக்கு வி.சி.க., இட­து­சா­ரி­கள் ஆத­ரவு தரக்­கூ­டாது’ என தி.மு.­க.­ கூறி­யி­ருக்க வேண்­டும். ஆனால், தி.மு.­க.­ அதை செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘ஏற்­கெ­னவே இட­து­சா­ரி­கள் வெளி­யில் இருந்து ஆத­ரவு அளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளன. திரு­மா­வ­ள­வ­னும் அதே முடிவை எடுப்­பது எந்த நேரத்­தி­லும் பிரச்­சி­னை­தான். திடீ­ரென ஆத­ரவை அவர் திரும்­பப் பெற்­றால் என்ன செய்­வது. ஆத­ரவு அளிப்­ப­தாக கூறிக்­கொண்டே தி.மு.­க.­ கூட்­ட­ணி­யில் தொடர்­வ­தாக அவர் பேசு­கி­றாரா’ என்­றெல்­லாம் தவெ­க­வி­னர் கவலை கொண்­ட­னர். த.வெ.­க.­வின் சந்­தே­கத்தை போக்­கத்­தான் ஆட்சி அமைக்க ஆத­ரவு கொடுத்­தோம், அதற்கு பரி­சாக த.வெ.க. அமைச்­ச­ர­வை­யில் எங்­க­ளுக்கு இடம் தரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்த சூழ்­நி­லை­யில் தி.மு.க. கூட்­டணிக் கட்­சி­கள் 
த.வெ.க. அர­சிற்கு ஆத­ர­வ­ளிப்­பதை தி.மு.­க.­ தலை­வர் ஏற்­றுக்­கொண்­டார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். எந்­தக் கட்­சிக்­கும் பெரும்­பான்மை கிடைக்­காத நிலை­யில் தமிழ்­நாட்­டில் கவர்­னர் ஆட்சி வந்­து­வி­டும், அது பா.ஜ.­க.­வின் நேரடி ஆட்­சி­யாக அமைந்­து­வி­டும் என்ற சூழல் நில­வி­ய­போது அதிக இடங்­களை பெற்­றி­ருந்த த.ெவ.க. அர­சிற்கு வெளியே இருந்து ஆத­ர­வ­ளிக்­கும் முடி­விற்கு தி.மு.க. தலை­வர்  ஒப்­பு­தல் அளித்­தார். தி.மு.­க.­ தலை­வ­ரின் சம்­ம­தத்­து­டன் வெளியே நின்று ஆத­ர­வ­ளிப்­ப­தாக சொல்­லி­விட்டு போன­வர்­கள் ஒவ்­வொ­ரு­வராக த.வெ.க. மந்­திரி சபை­யில் போய் அமர்ந்­தது மட்­டு­மல்­லாமல்  தி.மு.­க.­ கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யே­றும் முடி­வை­யும் அறி­வித்­தார்­கள். த.வெ.க. அரசை ஆத­ரித்­தா­லும் தி.மு.க. கூட்­ட­ணி­யில் தான் நீடிக்­கி­றோ­மென்று ஒரு நாள் சொல்­லு­வார்­கள் மறு­நாள் இப்­போ­துள்ள சூழ­லில் தி.மு.­க.­ கூட்­ட­ணி­ யில் நீடிக்க முடி­யாது என்று கூறு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­மா­வ­ள­வன் ஒரு­படி மேலே போய் தாங்­கள் அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­று­விட்­ட­தா­லேயே தவெக கூட்­ட­ணி­யில் இருக்­கி­றோம் என்று பொரு­ளல்ல என்­கி­றார். இவ்­வ­ள­வை­யும் எந்­தத் தயக்­க­மும் இன்­றிச் செய்­து­விட்டு தி.மு.­க.­ தலை­வர் த.வெ.­க.­வி­டம் நெகிழ்­வுத் தன்­மை­யு­டன் இருந்­தா­ராம், அது திரு­மா­வ­ள­னுக்கு அதிர்ச்சி அளித்­த­தாம். யாரை சந்­தோ­சப்­படுத்த  இந்த அவ­தூறு திருமா அவர்­களே?  இதை­யெல்­லாம் பார்த்து அதிர்ச்­சி­ய­டைய வேண்­டி­யது தி.மு.க.வே தவிர திரு­மா­வ­ள­வன் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. அரசை வெளியே இருந்து ஆத­ரிக்­கப் போன­வர்­கள் உள்ளே போய் உட்­கார்ந்­து­கொண்டு தி.மு.­க.­ தலை­வர் எங்­களை தடுத்­தி­ருக்க வேண்­டு­மென்று சொன்­னால் என்ன வகை­யான நிலைப்­பாடு இது ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘’த.வெ.­க.­வின் சந்­தே­கத்தை போக்­கத்­தான் ஆட்சி அமைக்க ஆத­ரவு கொடுத்­தோம், அதற்கு பரி­சாக த.வெ.க. அமைச்­ச­ர­வை­யில் எங்­க­ளுக்கு இடம் தரப்­பட்­டது.’’ என்­றால் இந்­தக் கூட்­டணி எத்­த­கைய பரஸ்­பர நம்­பிக்­கை­யில் அமைந்­தி­ருக்­கி­றது? மந்­திரி சபைக்­குள் போனால்­தான் தங்­கள் கற்பை நிரூ­பிக்க முடி­யும் என்ற அவல நிலை­யில் விசிக இருந்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­மா­வ­ள­வன் தி.மு.­க.­ தலை­வர்­பற்றி பதி­வு­செய்­யும் 
இன்­னொரு கூற்­றை­யும் பாருங்­கள்.  “தி.மு.­க.­, - அ.தி.­மு.க. இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்து ஒரு கருத்து நில­வு­வதாக தி.மு.­க.­ தலை­வர் எங்­க­ளி­டம் கூறி­னாரே தவிர, 
தி.மு.­க.­, - அ.தி­.மு.க. இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­லாம் என கூற­வில்லை.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் இதற்­கு­முன் ’தி.மு.­க.­,- அ.தி.­மு.க. கூட்­டணி பற்றி உங்­க­ளி­டம் யாரும் பேசி­னார்­களா என்று  திரு­மா­வி­டம் கேட்­ட­போது ’தி.மு.­க.­ தலை­மை­யில் இருந்து அப்­படி யாரும் பேச­வில்லை. இரண்­டாம் கட்­டத் தலை­வர்­க­ளி­டையே அப்­படி ஒரு பேச்சு அடி­ப­டு­வ­தாக கேள்­விப்­பட்­ட­தாக’ கூறு­கி­றார். இரண்­டில் எது உண்மை? ஏன் இத்­தனை தடு­மாற்­றங்­கள் ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பொது­வாக அர­சி­யல் தலை­வர்­கள் தனிப்­பட்ட உரை­யா­டல்­களை மேற்­கோள் காட்ட மாட்­டார்­கள். ஏனெ­னில் அதற்கு சான்­று­கள் ஏது­மில்லை. அதோடு தனிப்­பட்ட உரை­யா­ட­லில் சொன்­ன­தாக மனம்­போன போக்­கில் மாற்றி மாற்றி பேசிக்­கொண்டே இருந்­தால் நாளை எந்த தலை­வ­ரும் உரை
­யா­டவே அஞ்­சு­வார்­கள். அது மிகப்­பெ­ரிய நம்­ப­கத்­தன்­மை ­யின்­மையை ஏற்­ப­டுத்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய், பா.ஜ.க. கூட்­ட­ணி­யி­லி­ருக்­கும் அ.தி.­மு.க. 
ஆத­ரவை கோரா­மல் தி.மு.­க.­ கூட்­டணி கட்­சி­க­ளின் ஆத­ரவை கோரி­ய­தால் அவ­ரது மத­ச்சார்­பற்ற நிலையை ஆத­ரித்து தாங்­கள் த.வெ.­க.வை ஆத­ரித்­த­தாக திரு­மா­வ­ள­வன் வியாக்­கி­ யா­னம் கூறு­கிறார். விஜய் மத­ச்சார்­பற்ற கட்­சி­க­ளின்­மேல் அவ்­வ­ளவு நம்­பிக்கை கொண்­டி­ருந்­தால் எல்லா கட்­சித் தலை­வர்­க­ளை­யும் போய் பார்க்­கும்­போது அ.தி.­மு.­க.­வின் பொதுச்­செய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச்­சா­மியை தவிர்த்­து­விட்டு அங்கே கல­கம் செய்­து­வ­ரும் எஸ்.பி.வேலு­ம­ணியை ஏன் போய் சந்­தித்­தார்? பா.ஜ.க. கூட்­ட­ணி­யி ­லி­ருந்து வென்ற அ.ம.­மு.க. வேட்­பா­ளரை ஏன் குதிரை பேரத்­தில் வாங்­கி­னார். வேலு­மணி கோஷ்டி த.வெ.க. அர­சிற்கு ஆத­ர­வாக நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் வாக்­க­ளித்­த­தும் நான்கு அ.தி.­மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு த.வெ.­க.­வில் போய் இணைந்­த­தும் எந்த மதச்­சார்­பின்­மையை வலுப்­ப­டுத்த ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­மா­வ­ள­வன் அவர்­கள் அதி­கா­ரத்­தில் பங்­கேற்க விரும்­பு­வ­தில் தவ­றில்லை. ஆனால் ஒரு மந்­திரி சபை இடத்­திற்­காக த.வெ.­க.­விற்கு தகு­தி­யற்ற சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தும் வந்தே மாத­ரத்­தில் தொடங்கி ஊரக வேலை­வாய்ப்பு திட்­டம் வரை ஒன்­றிய அர­சி­டம் ஒடுங்­கிப்­போய் நிற்­கும் த.வெ.க. அர­சின் தோல்­வி­க­ளுக்கு முட்­டுக்­கொ­டுப்­­ பதும் பரி­தா­ப­க­ர­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்சி என்ற எல்­லை­யைத் 
தாண்­டி­யும் அனைத்து தரப்பு மக்­க­ளின் மதிப்பை பெற்­ற­வர் திரு­மா­வ­ள­வன். ஆனால் இன்று த.வெ.க. தமது பாசிச கோர முகத்தை மறைக்க திரு­மா­வ­ள­வ­னை­யும் இட­து­சா­ரி­க­ளை­யும் ஒரு முக­மூ­டி­யாக பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது.  திரு­மா­வ­ள­வ­னுக்கோ இட­து­சாரி தலை­வர்­க­ளுக்கோ தாங்­கள் எதை இழந்து கொண்­டி­ருக்­கி­றோம் என்­ப­தைப்­பற்றி எந்­தக் கவ­லை­யும் இல்லை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திரு­மா­வ­ள­வன் அவர்­கள் ’நாங்­கள் எந்த நேரத்­தி­லும் த.வெ.க. அமைச்­ச­ர­வை­யில் இருந்து வெளி­யேறு­வோம் 
என்­கி­றார். திருத்­திக் கொள்­ளுங்­கள் நீங்­கள் எந்த நேரத்­தி­லும் த.வெ.க. அமைச்­ச­ர­வை­யில் இருந்து வெளி­யேற்­றப்­பட­லாம். உங்­கள் கூற்று உங்­கள் நிச்­ச­ய­மின்­மை­யையே வெளிப்­படுத்து­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>