<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,608,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 03:37:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260618T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="18062026-CHN-06" position.sequence="06" ex-ref="18062026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">கட்சித்தாவல் தடைச் சட்டமும், ‘ஆயா ராம் காயா ராம்’  கட்சி மாறிகளும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup734250_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ர­சி­யல் கட்­சி­க­ளின் நேர்மை மற்­றும் ஒழுக்­கத்­தைப் பேணு­வ­தற்­குச், சட்ட மீறல் செய்த உறுப்­பி­ன­ரைத் தகுதி நீக்­கம் செய்­வ­தற்­கான முடிவு மிக முக்­கி­ய­மா­னது” என்று தான் 1985 ஆம் ஆண்டு 52 ஆவது திருத்­தச் சட்­டம் மூலம் கட்­சித் தாவல் தடைச் சட்­டம் அர­சி­யல் அமைப்­புச் சட்­டத் திருத்­த­மாக 10 ஆவது அட்­ட­வ­ணை­யில் சேர்க்­கப்­பட்­டது. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தனிப்­பட்ட ஆதா­யத் ­திற்­கா­கக் கட்சி மாறு­வ­தைத் தடுக்க; பாரா­ளு­மன்­றத்­திற்­கும் மற்­றும் மாநில சட்­ட­மன்­றங்­க­ளுக்­கும் இது பொருந்­தும். இச் சட்­டத்­தின் படி ஓர் உறுப்­பி­னர் தானாக முன்­வந்து கட்­சி­யின் உறுப்­பி­னர் பத­வி­யைத் துறந்­த­தற்­காக, எதி­ராக வாக்­க­ளித்­த­தற்­காக, தகுதி நீக்­கம் செய்­யப்­ப­டு­வார். மக்­க­ள­வை­யின் தலை­வர், மாநில சட்­ட­மன்ற அவைத் தலை­வர்­க­ளுக்கு நீக்­கம் தொடர்­பான வழக்­கு­க­ளில் முடிவு எடுக்­கும் அதி­கா­ரம் உள்­ளது எனச் சட்­டம் சொல்­லு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">*தற்­போ­தைய கட்­சித் தாவல் தடைச் சட்­டம் பற்றி அர­சி­யல் வாதி­கள், சட்ட வல்­லு­நர்­கள், ஏன்; நீதி­ப­தி­கள் மத்­தி­யில் கூட இன்­ற­ள­வும் சில, பல விமர்­ச­னங்­கள் உண்டு (Criticism of the Anti-Defection Law). அதா­வது மாற்­றுக் கருத்தை அல்­லது எதிர்ப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் (Curb on Dissent), உள்­ளது. கட்­சிச் சார்­பு­டை­ய­வர் என்­ப­தால் தீர்ப்­பில் அவைத் தலை­வ­ரின் மனச்­சாய்வு (Speaker’s Bias) அடங்­கி­யுள்­ளது. தீர்ப்பு வழங்க குறிப்­பிட்ட கால வரம்பு இல்லை (No fixed time limit), குதிரை பேரம் நடத்­தும் வாய்ப்பு (Horse trading) இருக்­கி­றது, கட்­சிக் கொறடா உத்­த­ர­வு­க­ளில் வெளிப்­ப­டைத் தன்மை இல்­லாமை (Lack of transparency in whips) என இப்­ப­டி­யான குறை­பா­டு­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">*இந்­திய வர­லாற்­றில் கூட்­டணி அமைத்­துத் தேர்­த­லைச் சந்­தித்த பிறகு, உட­ன­டி­யா­கக் குறு­கிய காலத்­திற்­குள் எதி­ர­ணிக்­குத் தாவித் துரோ­கம் இழைத்த சம்­ப­வங்­கள் பல நிகழ்ந்­துள்­ளன. ஜன­நா­ய­கத்­தைக் கேலிக் கூத்­தாக்­கும் விதத்­தில்; கட்­சித் தாவல்­கள் மற்­றும் முது­கில் குத்­தும் புரூட்­டஸ் கூட்­ட­ணித் துரோக நிகழ்­வு­கள் தொடர்­கின்­றன. இந்­திய அர­சி­ய­லில் சுய­ந­லத்­திற்­காக இப்­படி அடிக்­க­டிக் கட்சி மாறும் அர­சி­யல்­வா­தி­க­ளைப் பற்­றிப், புகழ்­பெற்ற’ சொற்­றொ­ட­ரான “ஆயா ராம், காயா ராம் (Aaya Ram Gaya Ram) என்று கட்சி தாவும் நபர்­க­ளைக் குறிக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏன் கட்­சித் தாவல் தடைச் சட்­டம் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது? எதிர்ப்­புக் குரலை அடக்­கு­கி­றது. கட்­சிக்­குள்­ளான ஜன­நா­யக இன்­மை­யைப் பேச மறுக்­கி­றது கட்­சி­க­ளின் பிள­வு­களை ஆத­ரிப்­ப­தோடு, சீர்­கு­லைவு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கி­றது. சபா­நா­ய­க­ரின் சர்ச்­சைக்­கு­ரிய மனச்­சாய்வு பங்கு பெற இடை­ம­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் த.வெ.க. 108 இடங்­க­ளில் தான் வெற்றி பெற்­றி­ருந்­தது. அதில் இரு தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு ஜோசப் விஜய் வெற்றி பெற்­ற­தால் 107 தொகு­தி­யா­கக் கரு­தப்­பட்­டது. ஆட்சி அமைக்க போதிய 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு இல்­லா­த­தால், திமுக கூட்­ட­ணி­யில் இடம் பெற்று தேர்­த­லில் வெற்றி பெற்­றி­ருந்த காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள், வலது, இடது கம்­யூ­னிஸ்­டு­கள், இந்­திய தேசிய முஸ்­லிம் லீக் ஆகிய கட்­சி­கள் ஆத­ர­வு­டன் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்­தார் . கடந்த மே மாதம் 13 அன்று தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் த. வெ.க.அரசு நம்­பிக்கை கோரும் வாக்­கெ­டுப்பு நடத்­தி­யது. அப்­போது 47 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கொண்ட அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.பி. வேலு­மணி, சி.வி.சண்­மு­கம் தலை­மை­யில் 25 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யின் முடி­வுக்கு எதி­ரா­க­வும், சட்­ட­மன்­றக் கொறடா அக்ரி கிருஷ்­ண­மூர்த்­தி­யின் உத்­த­ரவை மீறி­யும், ஜோசப் விஜய் அர­சுக்கு ஆத­ரவுதெரி­வித்து வாக்­க­ளித்­த­னர். 144 எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­தால்,தனது பெரும்­பான்­மையை நிரூ­பித்­தார் எனச் சட்­ட­மன்ற அவைத் தலை­வர் ஜே .சி. டி. பிர­பா­கர் அறி­விப்பு செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. கட்­சி­யின் தலைமை கட்­ட­ளையை மீறி, விஜய் அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது பதவி பறிப்பு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பில் சபா­நா­ய­கர் இடம் புகார் அளிக்­கப்­பட்­டது. த.வெ.க.வுக்கு ஆத­ரவு கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்­சர் பதவி வழங்­கப்­ப­டும் என்று குதிரை பேரம் நடத்தி, முதல்­வர் விஜய் தரப்­பில் இருந்து உறு­தி­மொழி அளிக்­கப்­பட்­டது என்­றும், ஆனால் மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை இல்­லா­த­தால் த.வெ.க.வுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத­ரவு கொடுத்­த­தால், அவர்­க­ளது எம்.எல்.ஏ. பதவி பறி­போ­கும் அபா­யம் ஏற்­பட்­டது. இதை அடுத்து த.வெ.கவி­டம் இனி அமைச்­சர் பதவி கிடைக்க வாய்ப்­பில்லை எனப்  அ.தி.மு.க.பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி இடம் 25 எம்.எல்.ஏ.க்களும் சர­ணா­கதி அடைந்­த­னர். அதை அடுத்து அதற்­கான மன்­னிப்­புக் கடி­தத்தை சபா­நா­ய­க­ரி­டம் கொடுத்­தார். இதற்கு இடை­யில் விரக்தி அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்­கள் ஜெயக்­கு­மார் (பெருந்­துறை) மர­க­தம் குமா­ர­வேல் (மது­ராந்­த­கம்) இசக்கி சுப்­பையா (அம்பா சமுத்­தி­ரம்) சத்­தி­ய­பாமா (தாரா­பு­ரம்) ஆகிய 4 பேரும் தங்­கள் எம்.எல்.ஏ. பதவி ராஜி­னாமா செய்­து­விட்டு, த.வெ.க.வில் இணைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மே 27-இல் அளித்­துள்ள நான்கு கடி­தங்­கள் அடிப்­ப­டை­யில், 21 -சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளது மன்­னிப்­புக் கோரிக்­கையை ஏற்று, அவர்­கள் மீது தகுதி நீக்க மேல் நட­வ­டிக்கை தேவை­யில்லை எனக் கைவி­டு­வ­தா­க­வும் கடந்த ஜூன் 9 அன்று அவைத்­த­லை­வர் ஜே.சி. டி. பிர­பா­கர் அறி­வித்­தார். எனி­னும் பத­வியை ராஜி­னாமா செய்த நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மீது தகுதி நீக்க நட­வ­டிக்கை குறித்து பின்­னர் அறி­விக்­கப்­ப­டும் என்று கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்­ரி­கி­ருஷ்­ண­மூர்த்தி தலை­மை­யில் ஏற்­கெ­னவே தமி­ழக ஆளு­ந­ரி­டம் மே 30 அன்று சந்­தித்து குதிரை பேரம் நடத்­திய ஜோசப் விஜய் அரசு மீது சி.பி.ஐ. விசா­ரணை வேண்­டு­மென்று மனு அளித்­தி­ருந்­த­னர். தற்­போது 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் மன்­னிக்­கப்­பட்­ட­தால், பத­வியை ராஜி­னாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்த நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மீது பதவி இழப்­புக்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டும் என்று அ.தி.மு.க. தலைமை கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச்­சாமி கோரிய கொறடாஉத்­த­ரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நட­வ­டிக்கை நிலு­வை­யில் இருக்­கும் போது, அ.தி.மு.க.வின் 4 எம்.எல்.ஏ.க்களின் இரா­ஜி­னாமா கடி­தங்­களை ஏற்று அர­சி­த­ழில் வெளி­யிட்­டது செல்­லாது என­வும், அதனை ரத்து செய்­யக் கோரி­யும், இரா­ஜி­னாமா செய்த நான்கு பேரும் த.வெ. க.வில் இணைந்­தது எப்­ப­டிச் செல்­லும்? என்­றும், இது கட்­சித் தாவல் தடைச் சட்­டத்தை நீர்த்­துப் போகச் செய்­யும் வகை­யில் அமைந்து உள்­ள­தா­க­வும்; ஆகவே, தகுதி நீக்­கம் செய்­யக் கூடிய மனுக்­களை விசா­ரித்து முடி­வெ­டுக்க சபா­நா­ய­க­ருக்கு உத்­த­ர­விட வேண்­டும் எனக் கோரி சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தேசிய மக்­கள் சக்தி கட்­சித் தலை­வர் எம்.எல்.இரவி வழக்கு தாக்­கல் செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதற்கு இடை­யில் 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜி­னாமா செய்த சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் நடத்­தத் தடை கோரி அ.தி.மு.க. உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு போட்டு உள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் தனது வலைத்­த­ளப் பதி­வில் “நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின்­போது, ஆட்சி தக்க வைக்க அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆத­ர­வாக வாக்­க­ளிக்க, விலை பேசி­ய­து­டன்,அ.ம. மு.க உறுப்­பி­னர் ஒரு வரைக் கொசு­றாக வாங்­கி­யது. அ.தி.மு.க.விலி­ருந்து உறுப்­பி­னர்­கள் சிலரை விலக வைத்து, தலை­மைச் செய­ல­கத்­தி­லேயே இணைத்­துக்­கொண்­டது. இந்­தக் கண்­றா­விக் காட்­சி­க­ளை­யும் பார்க்க வேண்­டித்­தான் மக்­கள் வாக்­க­ளித்­தார்­களா? தங்­க­ளைத் “தூய சக்தி” என்று சுயத் தம்­பட்­டம் அடித்­த­வர்­கள், தற்­போது “துய­ரச் சக்தி” என்று அம்­ப­லப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். குதிரை வேகத்­தில் குதிரை பேர ஆட்சி நடக்­கி­றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை முதல்­வர் விஜய் “ஷாப்­பிங்” செய்து கொண்­டி­ருக்­கி­றார் . பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் எப்­ப­டிக் குதிரை பேரம் நடத்தி மாற்­றுக் கட்சி எம்­எல்­ஏக்­களை விலைக்கி வாங்கி ஆட்­சி­யைப் பிடிக்­கி­றதோ; அதே பாணி­யைத்­தான் த.வெ.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வாக்­கெ­டுப்­பின் போது குதிரை மற்­றும் மைனா­ரிட்டி அரசு என்று கடு­மை­யாக குற்­றம் சாட்­டிப் பேசி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின். த.வெ.க. அரசு சொகுசு சோபா செட்­டு­க­ளை­யும், பிற சலு­கை­க­ளை­யும் இலஞ்­ச­மாக கொடுத்து, சோபா மாடல் (Sofa Model) ஆட்சி நடத்­து­கின்ற இது ஒரு மைனா­ரிட்டி அரசு” என்று கடு­மை­யாக சட்­ட­மன்­றத்­தில் விமர்­ச­னம் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மந்­திரி பதவி, நிதி ஆதா­யம் கருதி அ.தி.மு.க.வின் 25 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் டி.டி.வி தின­க­ர­னின் அ.ம.மு.க கட்­சி­யின் காம­ராஜ் போன்­றோர் குதிரை பேரம் நடத்­திய த.வெ.க . அரசு, டி.டி.வி. தின­க­ரன் கட்சி அ.ம.மு.க.வின் எம்.எல்.ஏ காம­ராஜ்- இன் வாக்­க­ளிப்­பும் சட்ட விரோ­த­மா­னவை. 25 பேர் கட்­சித்­தா­வல் தடைச் சட்­டத்­தின் படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய நபர்­க­ளா­வர். ஆனால், அதில் 21 பேர் தந்த மன்­னிப்­புக் கடி­தம் ஏற்று அவைத்­த­லை­வ­ரி­டம் 15 நாள்­க­ளில் வழங்­கி­ய­தால், அவர்­கள் தகுதி நீக்­கத்­தி­லி­ருந்து தப்­பித்­துள்­ள­னர். எனி­னும், மீத­முள்ள நான்கு பேர் கட்­சி­யின் தலைமை, கொறடா உத்­த­ரவை மீறி வாக்­க­ளித்து இந்த எம்­எல்­ஏக்­கள் மீது தகுதி நீக்­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டும். அது போல் அ.ம.மு.க. வில் இருந்து வாக்­க­ளித்­து­விட்டு பின்­னர் நீக்­கப்­பட்ட சுயேச்­சை­யாக செயல்­ப­டும் காம­ராஜ் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யை­யும் பறிக்­கப்­பட வேண்­டும் என்­ப­து­தான் சட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உச்ச நீதி­மன்­றம் அளித்த இராஜா ராம் பால் (Raja Ram Pal) வழக்­கின் தீர்ப்பை மேற்­கோள் காட்டி மூத்த வழக்­க­றி­ஞர் வில்­சன் எம்.பி. இது போன்ற பணப் பரி­மாற்ற புகார்­களை விசா­ரிக்க அவைத் தலை­வர் உடனே ஒரு குழுவை அமைத்­தி­ருக்க வேண்­டும் என்று குற்­றச்­சாட்டை எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பா­டிக்கு மட்­டுமே கட்­சி­யின் கொற­டாவை நிய­மிக்­கும் அதி­கா­ரம் உள்­ளது. கட்­சித் தலை­மை­யின் உத்­த­ர­வுக்கு மாறாக, அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளது பத­வியை பறிப்­பது தான் முறை­யா­கும். ஆனால் அதற்கு மாறா­கக் குதிரை பேரம் நடத்­தி­யது மிகப்­பெ­ரிய குற்­றச் செய­லா­கும். 1993இல் நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பில் ஜார்க்­கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்­பிக்­க­ளி­டம் குதிரை பேரம் நடத்தி,அந்த எம்­பிக்­கள் ஆத­ர­வைப் பெற்ற காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் இந்­தி­யப் பிர­த­மர் நர­சிம்­ம­ராவ் மற்­றும் பூட்­டா­சிங் ஆகி­யோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்­தது. அது போல், ஜோசப் விஜய் யின் அரசு மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடி­யும். அதற்­கான கார­ணங்­கள் வலு­வாக உள்­ளன. ஆளு­ந­ரி­டம் அளித்த மனு வேலை செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் நடை­பெற்ற நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின்­போது, கட்­சி­யின் அதி­கா­ரப்­பூர்வ கொறடா வழங்­கும் உத்­த­ரவு மீறி வாக்­க­ளித்­தாலோ அல்­லது வாக்­கெ­டுப்பை புறக்­க­ணித்­தாலோ அவர்­கள் உட­ன­டி­யாக தகுதி நீக்­கம் செய்­யப்­பட வாய்ப்பு உள்­ளது என்று உச்ச நீதி­மன்­றம் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி மராட்­டிய சிவ­சேனா வழக்­கில் தீர்ப்பு வழங்கி உள்­ளது. தனி அணி செல்­லாது என்­றும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தாங்­க­ளா­கவே ஒன்று கூடி ஒரு புதிய கொற­டாவை நிய­மிக்க முடி­யாது; அது சட்­டப்­படி தவ­றா­னது; தலை­மையே முடிவு செய்­யும் அக்­கட்­சி­யின் அதி­கா­ரப்­பூர்வ தலைமை யாரை கொற­டா­வாக நிய­மிக்­கி­றதோ அவரே இறு­தி­யா­ன­வர். அர­சி­யல் கட்சி எதிர் சட்­ட­மன்­றக் கட்சி என்ற வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் அர­சி­யல் கட்­சியே உயர்ந்­தது எனத் தீர்ப்பு சொல்­லி­யுள்­ளது. தலைமை எடுக்­கும் முடிவே சட்­டப்­படி செல்­லும் என தீர்ப்பு சொல்­லி­யுள்­ளது. மராட்­டிய சிவ­சேனா ஏக்­நாத் சிண்டே மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­கள் இருந்­தார்­கள் எனி­னும் அங்­கி­கா­ரம் இல்லை எனில், அவர் தனி­யாக அறி­வித்த கொறடா நிய­ம­னம் செல்­லாது என உச்ச நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, பிரிந்து செல்­லு­தல் மற்­றும் இணைத்­தல் என்ற பிரி­வில் பல பிரச்­சி­னை­கள் இருப்­ப­தால்; 2004 ஜன­வரி ஒன்­றாம் தேதி அன்று அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் திருத்­தத்­தில் அந்­தப் பிரிவு முற்­றி­லும் நீக்­கப்­பட்டு விட்­டது. இணைத்­தல் மட்­டுமே தற்­போது உள்­ளது. அதன்­படி ஒரு அர­சி­யல் கட்சி மற்­றொரு கட்­சி­யு­டன் இணை­யும் போது, அந்த கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளின் மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­கள் அதற்கு ஒப்­பு­தல் தர வேண்­டும். இந்­தப் பிரி­வின் அடிப்­ப­டை­யில் அடிக்­கடி கட்சி மாற்­றம் நடை­பெ­று­வ­தால் குறை­பா­டு­கள் இந்­தப் பிரி­வில் உள்­ளது அர­சி­யல் கட்சி என்­பது தேர்­தல் ஆணை­யத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுக் கட்சி சட்­டத் திட்­டங்­க­ளின் படி சட்­டப்­பே­ர­வைக்கு வெளியே இயங்­கு­வது; நிர்­வ­கிப்­பது; சட்­டப்­பே­ர­வை­கள் அந்த கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் 2/3 பங்கு உறுப்­பி­னர்­கள் சேர்ந்து மற்­றொரு கட்­சி­யு­டன் இணைய விரும்­பி­னால் மட்­டுமே, இணைப்பு நடை­பெ­றும். இது அண்­மை­யில் சுபாஷ் தேசாய் என்­ப­வர் மராட்­டி­யத்­தில் மாநில ஆளு­ந­ருக்கு எதி­ரா­கத் தொட­ரப்­பட்ட வழக்­கில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கட்­சி­யின் ஒப்­பு­தல் இன்றி அவைக்­குள் பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் கட்­சி­க­ளின் இணைப்பை ஏற்­றுக் கொண்­டால்; அது பெரிய அள­வி­லான கட்­சித் தாவலை உரு­வாக்­கு­வ­து­டன், அர­சி­யல் சந்­தர்ப்­ப­வா­தத்தை ஊக்­கி­விக்­கி­றது. இது போன்ற சூழல்­க­ளில் அவைத்­த­லை­வர் ஊக்­கு­வித்து அங்­கீ­க­ரித்­தால் அது பத்­தா­வது அட்­ட­வ­ணை­யின் மதிப்பு குறைந்­து­வி­டும் உண்­மை­யான கட்சி எது? அந்­தக் கட்சி இணைப்­புக்­குத் தயா­ராக உள்­ளதா? அந்­தக் கட்­சி­யின் சின்­னம் யாரி­டம் உள்­ளது? என்­பதை ஆய்வு செய்து செயல்­ப­டும் “அர­சி­யல் அமைப்­புத் தீர்ப்­பா­யம் தான் அவைத் தலை­வர்” என்­ப­தைப் புரிந்து கொள்ள வேண்­டும். வாக்­க­ளித்த மக்­க­ளின் நம்­பிக்­கைக்கு துரோ­கம் செய்­யக்­கூ­டாது என அர­சி­டம் சட்­டம் பத்­தா­வது அட்­ட­வணை கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மூத்த வழக்­க­றி­ஞர் இரா­ஜ­கோ­பால் என்­ப­வர் “உச்ச நீதி­மன்ற தீர்ப்­பின்­படி அர­சி­ய­ல­மைப்­பின் 10 - ஆவது அட்­ட­வ­ணை­யை­யும், வாக்­கா­ளர்­க­ளின் நம்­பிக்­கை­யை­யும் பாது­காப்­பது மிக அவ­சி­ய­மாக உள்­ளது. ஆகவே, வாக்­கா­ளர்­க­ளின் நம்­பிக்­கையை பாது­காப்­பது முக்­கி­ய­மும், அவ­சி­ய­மும் ஆகும். அவைக்­குள் கட்­சித் தாவலை அவை தலை­வரே ஊக்­கப்­ப­டுத்­தி­வி­டக் கூடாது” என்று கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் கட்­சித் தாவல் தடைச் சட்­டம் பத்­தா­வது அட்­ட­வணை தொடர்­பாக உச்ச நீதி­மன்­றம் வழங்­கிய மிக முக்­கி­ய­மான மற்­றும் வழி­காட்­டு­த­லான தீர்ப்­பு­கள் பல்­வேறு வழக்­கு­க­ளில் கூறப்­பட்­டுள்­ளன. கிஹோட்டா ஹொல்­லா­ஹன் வழக்கு 1992 இல் “சபா­நா­ய­கர் ஒரு தீர்ப்­பா­ய­மா­கச் செயல்­ப­டு­வ­தால், அவர் முடி­வு­கள் நீதித்­துறை மறு ஆய்­வுக்கு உட்­பட்­டது (Judicial Review) எனத் தீர்ப்­ப­ளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ரவி எஸ். நாயக்­கர் வழக்கு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">(Ravi S. Naik versus Union of India - 1994) ஒரு உறுப்­பி­னர் தனது கட்­சி­யில் இருந்து சுய விருப்­பத்­து­டன் வெளி­யே­று­கி­றார் என்­ப­தற்கு அவ­ரது வெளிப்­ப­டை­யான நட­வ­டிக்­கை­கள் மற்­றும் செயல்­பா­டு­களை போது­மா­னவை அதற்கு முறை­யான ராஜி­னாமா கடி­தம் தேவை­யில்லை என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கேஷம் மெளச்­சந்­திரா சிங் வழக்கு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">(Keishan Megha Chandra Singh-V-Speaker 2020) இவ்­வ­ழக்­கில் தகுதி நீக்­கம் குறித்து சபா­நா­ய­கர் கால­வ­ரை­யின்றி நிலு­வை­யில் வைப்­பது என்­பதை உச்ச நீதி­மன்­றம் கடு­மை­யாக சாடி­யது. இது போன்ற வழக்­கு­க­ளில் சிறப்பு சூழ்­நி­லை­க­ளைத் தவிர மூன்று மாதங்­க­ளுக்­குள் முடி­வெ­டுக்க வேண்­டும் என்று வழி­காட்­டு­தல்­களை வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பாடி கவு­சி­கி­ரட்டி வழக்கு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">(Padi Kaushik Reddy Vs The state of Telungana 2025) தெலுங்­கா­னா­வில் பி.ஆர்.எஸ்.10 எம்­எல்­ஏக்­கள் காங்­கி­ர­சுக்­குத் தாவிய விவ­கார வழக்­கில், சபா­நா­ய­கர் உரிய காலத்­தில் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் கால­தா­ம­தம் செய்து முடக்­கம் செய்­தார். அதனை உச்­ச­நீ­தி­மன்­றம் கண்­டித்­தது. சபா­நா­ய­கர் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்­றத்­தின் சிறப்பு உரி­மை­யின்­கீழ் , உறுப்­பு­கள் (122/ 212) சட்­ட­பூர்­வ­மான, முழு­மை­யான பாது­காப்­பைப் பெற முடி­யாது எனத் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­ய­து­டன் மூன்று மாத காலக்­கெ­டு­வுக்­குள் முடிவு எடுக்க உத்­த­ர­விட்­டது. கால தாம­தம் படுத்­தும் சபா­நா­ய­க­ருக்கு அர­சி­யல் அமைப்பு சட்­டம் பாது­காப்பு கிடை­யாது என கண்­டிப்பு செய்­தது. “Operation successful; but patient died” அறு­வைச் சிகிச்சை வெற்றி; ஆனால் நோயாளி மர­ணம்!” என்ற நிலை­மையை ஏற்க முடி­யாது என்று உச்ச நீதி­மன்­றம் கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கியோ மின்ட் லவ் ஜோங் எதிர் சபா­நா­ய­கர், மணிப்­பூர்- 2020 வழக்­கில்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கட்­சித் தாவல் தடைச் சட்­டத்­தின் கீழ் தகுதி நீக்­கம் செய்ய சபா­நா­ய­கர் கால­வ­ரை­யின்­றித் தாம­தம் செய்­யக்­கூ­டாது. தகுதி நீக்க மனுக்­கள் மீது நியா­ய­மான காலத்­திற்­குள் குறிப்­பாக மூன்று மாதத்­திற்­குள் சபா­நா­ய­கர் இறுதி முடிவு எடுக்க வேண்­டும் என்று கண்­டிப்பு காட்டி உத்­த­ரவு பிறப்­பித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சுபாஷ் தேஜாய் எதிர் மகா­ராஷ்­டிரா ஆளு­நர் 2023:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வழக்­கில் மராட்­டி­யத்­தில் சிவ­சேனா கட்­சிக்­குள் பிளவு மற்­றும் ஆட்சி மாற்­றத்­தின் போது, உச்ச நீதி­மன்­றம் இந்த வழக்கை விசா­ரித்­தது. கட்­சித் தலை­வ­ருக்­கும், சட்­ட­மன்ற தலை­வ­ருக்­கும் இடை­யே­யான அதி­கா­ரம் எல்லை மற்­றும் சபா­நா­ய­கர் செயல்­பா­டு­கள் குறித்து அர­சி­யல் சாசன அமர்வு முக்­கிய விளக்­கங்­களை அளித்­தது. நீதி­மன்ற அதி­கார வரம்பு பற்றி கூறும்­போது, சபா­நா­ய­கர்­கள் கட்­சித் தாவல் புகார்­கள் மீது முடிவு எடுக்­கும் போது, அர­சி­யல் சாச­னத்­தின் படிச் சுதந்­தி­ர­மா­கச் செயல்­பட வேண்­டும்; அவ­ரு­டைய முடி­வு­கள் பார­பட்­ச­மாக இருக்­கும் பட்­சத்­தில், நீதி­மன்­றங்­கள் அதில் தலை­யிட்­டுத் தீர்வோ வழங்க முடி­யும்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது­போன்று பல்­வேறு வழக்­கு­க­ளில் சட்­ட­மன்ற அவைத் தலை­வ­ரின் கால­தா­மத முடி­வு­கள் சட்­டத் தவ­றான முடி­வு­கள் போன்­ற­வற்­றைக் கண்­டித்து உச்­ச­நீ­தி­மன்­றம் கண்­டித்து கடு­மை­யான உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­துள்­ளது. ஆகவே, சட்­ட­மன்­றத்­தில் நடந்­துள்ள கட்­சித் தாவல் முறை­கே­டு­க­ளை­யும், ஜோசப் விஜய் 
அர­சின் குதி­ரைப் பேர அர­சி­ய­லை­யும் உட­ன­டி­யாக விசா­ரித்­துத் தீர்ப்­பு­கள் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>