<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,68,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 17 2026 16:48:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260618T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="18062026-TRY-05" position.sequence="05" ex-ref="18062026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">FCRA மசோதா – குடி­மைச் சமூ­கத்­தின் மீதான ஒன்­றிய அர­சின் அத்­து­மீ­றல்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame591216_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="BWvagaiphoto_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="wilsonMPPhoto_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் – மூத்த வழக்­க­றி­ஞ­ரு­மான  பி. வில்­சன்  , ஒன்­றிய அர­சால் மக்­க­ள­வை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள “வெளி­நாட்டு நிதிப் பங்­க­ளிப்பு ஒழுங்­கு­முறை (திருத்த) மசோதா 2026” குறித்து தி இந்து நாளி­த­ழில் (12.06.2026) எழு­திய கட்­டுரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">வெ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ளி­நாட்­டுப் பங்­க­ளிப்பு ஒழுங்­கு­முறை (திருத்த) மசோதா 2026, தொண்டு நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­க­ளைப் பறி­மு­தல் செய்­யும் அதி­கா­ரத்­தின் மூலம் இந்­தி­யா­வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் நம்­பி­யி­ருக்­கும் நலத்­திட்ட உத­வி­களை முடக்­கக்
­கூ­டும் என்ற கடு­மை­யான கவ­லை­களை எழுப்­பி­
யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மார்ச் 25 அன்று மக்­க­ள­வை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வெளி­நாட்­டுப் பங்­க­ளிப்பு (ஒழுங்­கு­முறை) திருத்த மசோதா, 2026 என்­பது ஒரு வழக்­க­மான ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­யை­யும் தாண்டி ஆபத்­தா­ன­தா­கும். இது மேம்­பட்ட வெளிப்­ப­டைத்­தன்மை மற்­றும் தேசி­யப் பாது­காப்பை நோக்­கிய ஒரு நட­வ­டிக்­கை­யாக முன்­வைக்­கப்­பட்­டா­லும், உண்­மை­யில் இது ஒன்­றிய அர­சின் நிர்­வாக தலை­யீட்டை கணி­ச­மாக அதி­க­ரிக்­கி­றது; இதன் மூலம், வெளி­நாட்டு நிதி­யு­த­வி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் ஒரு சட்­ட­மாக இருந்த FCRA-வை, அரசு சாரா நிறு­வ­னங்­கள் (NGOs), அறக்­கட்­ட­ ளை­கள் மற்­றும் கல்வி மற்­றும் மத நிறு­வ­னங்­கள் மீது அர­சின் விரி­வான கட்­டுப்­பாட்­டைச் செயல்­ப­டுத்­தும் ஒரு கரு­வி­யாக இது மாற்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கண்­கா­ணிப்­பில் இருந்து அத்­து­மீ­றல் நோக்கி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தற்­போது நடை­மு­றை­யில் இருந்து வரும் FCRA சட்­டமே, உல­கில் உள்ள எந்­த­வொரு ஜன­நா­யக நாடு­க­ளி­லும் இல்­லாத வகை­யில், குடி­மைச் சமூ­கத்தை மிக­வும் கடு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தும் சட்­டங்­க­ளில் ஒன்­றாக ஏற்­க­னவே இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2020-ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட திருத்­தங்­கள் பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருந்­தன, அவை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அனைத்து வெளி­நாட்­டுப் பங்­க­ளிப்­பு­க­ளும் புது டெல்­லி­யில் உள்ள பாரத ஸ்டேட் வங்­கி­யின் ஒரே ஒரு குறிப்­பிட்ட கிளை­யின் வழி­யாக மட்­டுமே வர வேண்­டும் என்று கட்­டா­ய­மாக்­கி­யது, நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­கான உச்­ச­வ­ரம்பை 50% லிருந்து 20% ஆகக் குறைத்­தது. சிறிய அமைப்­பு­க­ளுக்­குத் நிதி பகிர்ந்து வழங்­கு­வ­தைத் தடை செய்­தது மற்­றும் உரி­மங்­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கும் அதி­கா­ரத்தை விரி­வு­ப­டுத்­தி­யது போன்ற இவ்­ந­ட­வ­டிக்­கை­ க­ளா­னது, ஆயி­ரக்­க­ணக்­கான தொண்டு நிறு­வ­னங்­களை, குறிப்­பாக, சிறிய அள­வி­லான சம­யச் சார்­பு­டைய அறக்­கட்­ட­ளை­கள் மற்­றும் அமைப்­பு­க­ளைக் கடு­மை­யாக நிலை­கு­லை­யச் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஆனால், 2026 ஆம் ஆண்­டின் இந்த புதிய மசோதா இதற்­கும் ஒரு­படி மேலே சென்­றுள்­ளது. இந்த மசோதா முந்­தைய பிரிவு 15-ஐ நீக்­கி­விட்டு, புதிய அத்­தி­யா­யம் IIIA-வை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தன் மூல­மும், தற்­போ­துள்ள சொத்து மேலாண்மை விதி­களை மாற்­று­வ­தன் மூல­மும், அரசு எந்­த­வொரு இழப்­பீடோ அல்­லது மேலாண்­மைப் பொறுப்போ இன்றி, அமைப்­பு­க­ளின் சொத்­துக்­கள் மற்­றும் உடை­மை­களை அரசு மிக எளி­தா­கத் தன் வசம் எடுத்­துக்­கொள்­வ­தற்­கான ஒரு புதிய வழி
­மு­றையை இது உரு­வாக்­கு­கி­றது. புதி­தாக முன்­மொ­ழி­ யப்­பட்­டுள்ள பிரிவு 14B ஆனது தொண்டு நிறுவ­னங்­
க­ளின் FCRA பதிவை தானா­கவே ‘ரத்து செய்­யும்’ முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது, ஒரு நிறு­வ­னத்­தின் புதுப்­பித்­தல் விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டால் மட்­டு­மன்றி, குறிப்­பிட்ட காலத்­திற்­குள் விண்­ணப்­பிக்­கத் தவ­றி­னாலோ அல்­லது அதன் புதுப்­பித்­தல் விண்­ணப்­பம் அர­சின் பரி­சீ­ல­னை­யில் நிலு­வை­யில் இருந்­தாலோ கூட, தனது பதிவை இழக்க நேரி­டும். இது நிறு­வ­னங்­க­ளின் தவ­றான செயல்­பாட்டை நிரூ­பிப்­ப­தன் மூலம் அல்­லா­மல், வெறும் நடை­மு­றைத் தாம­தங்­கள் மூல­மா­கவே அவற்­றின் செயல்­பா­டு­களை முழு­மை­யாக முடக்­கு­வ­தற்கு வழி­வகை செய்­கி­றது. இதன் விளை­வாக, சட்ட நடை­மு­றை­யைப் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு, நிர்­வாக அதி­கா­ரி­க­ளின் விருப்­பத்­திற்கே அதிக முக்­கி­யத்­து­வம் கிடைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மசோ­தா­வின் ஆகப்­பெ­ரிய கவ­லைக்­கு­ரிய அம்­சம், புதிய அத்­தி­யா­யம் IIIA-வின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரிவு 16A ஆகும். இதன்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் FCRA பதிவுரத்து செய்­யப்­ப­டும்­போதோ, ஒப்­ப­டைக்­கப்­ப­டும்­போதோ அல்­லது ரத்து செய்­யப்­பட்­ட­தா­கக் கரு­தப்­ப­டும்­போதோ, அனைத்து அந்­நி­யப் பங்­க­ளிப்­பு­க­ளும் மற்­றும் அவற்­றின் மூலம் பெறப்­பட்ட சொத்­துக்­க­ளும், முன்­கூட்­டியே எந்­த­வொரு நீதி­மன்ற மறு­ஆய்வோ அல்­லது சுதந்­தி­ர­மான நீதித்­துறை விசா­ர­ணையோ இன்றி, அரசு நிய­மிக்­கும் அதி­கா­ரி­யின் வசம் தானா­கவே தற்­கா­லி­க­மாக ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று குறிப்­பி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதன் பொருள் என்­ன­வென்­றால், ஒரு சாதா­ரண நிர்­வாக முடி­வின் மூலமே ஒரு அமைப்பு தனது நிதி மற்­றும் சொத்­து­க­ளின் கட்­டுப்­பாட்டை இழக்க முடி­யும். பிரிவு 14-இன் கீழ் ரத்­து­செய்­தல் என்­பது பொது நலன் போன்ற பரந்த மற்­றும் உள்­ளார்ந்த கார­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அமை­ய­லாம் என்­ப­தால், சிறிய, நடை­முறை சார்ந்த அல்­லது சர்ச்­சைக்­கு­ரிய மீறல்­க­ளுக்­கா­கக் கூட நிறு­வ­னங்­கள் தங்­கள் சொத்­துக்­க­ளின் மீதான கட்­டுப்­பாட்டை இழக்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பிரிவு 14-இன் கீழ் ஒரு பதிவை ரத்து செய்­யும் நட­வ­டிக்கை, பிரிவு 16A அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குப்­ப­தால், நடை­முறை சார்ந்த - சிறிய அல்­லது சர்ச்­சைக்­கு­ரிய மீறல்­க­ளுக்­கா­கக் கூட நிறு­வ­னங்­கள் தங்­கள் சொத்­துக்­களை இழக்­கும் அபா­யத்தை எதிர்­கொள்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னைத் தொடர்ந்து, அரசு நிய­மிக்­கும் அதி­காரி அச்­சொத்­துக்­களை நிர்­வ­கிக்­க­வும், மாற்­ற­வும் அல்­லது விற்­க­வும் முழு அதி­கா­ரம் வழங்­கப்­ப­டு­கி­றது. மேலும், விற்­பனை வரு­வாய் அனைத்­தும் இந்­தி­யத் தொகுப்பு நிதி­யத்­தில் சேர்க்­கப்­ப­டு­கி­றது. இந்த நிபந்­தனை அதி­கப்­ப­டி­யான அதி­கார வரம்­பைக் கொண்­டுள்­ளது, ஏனெ­னில் உள்­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­நாட்­டி­லி­ருந்­தும் நிதி மற்­றும் சொத்­துக்­கள் இரண்­டை­யுமே உள்­ள­டக்கி, பல தசாப்­தங்­க­ளா­கக் கட்­டப்­பட்ட பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், ஆத­ர­வற்­றோர் இல்­லங்­கள், மத நிறு­வ­னங்­கள், அறக்­கட்­டளை அமைப்­பு­கள் மற்­றும் தேவா­ல­யங்­கள், மசூ­தி­கள், கோயில்­கள் போன்ற வழி­பாட்­டுத் தலங்­களை அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை இது உரு­வாக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சாங்­கத்­தால் நிய­மிக்­கப்­ப­டும் அதி­கா­ரிக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­கள் அசா­தா­ர­ண­மா­னவை. ஏனெ­னில், அதி­கார அமைப்­பா­னது சொத்­துக்­களை தன் கட்­டுப்­பாட்­டில் எடுக்­க­வும், நிறு­வ­னங்­களை நிர்­வ­கிக்­க­வும், நிதி­யா­தா­ரங்­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும், மேலும் தெளி­வற்ற முறை­யில் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள ‘பொது நலம்’ என்ற பெய­ரில் அவற்­றின் அன்­றாட செயல்­பா­டு­களை மாற்­றி­ய­மைக்­க­வும் முடி­யும்.. இதன் மூலம் நிர்­வா­கத்­து­றைக்கு அதி­கப்­ப­டி­யான தன்­னிச்­சை­யான அதி­கா­ரத்தை வழங்­கு­கி­றது. ஒரு நிறு­வ­னம் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் தனது பதிவை புதுப்­பிக்­கத் தவ­றி­னாலோ அல்­லது மறு­ப­திவு பெறத் தவ­றி­னாலோ, அந்­தப் பதிவு நிரந்­த­ர­மாக முடி­வ­டைந்­த­தாக கரு­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னைத் தொடர்ந்து, அந்த அர­சால் நிய­மிக்­கப் ­பட்ட அதி­கா­ரி­யால் அச்­சொத்­துக்­களை மாற்­றவோ அல்­லது விற்­பனை செய்­யவோ முடி­யும். மேலும், விற்­ப­னை­யின் மூலம் கிடைக்­கும் வரு­வாய், அனைத்­தும் முழு வரு­வா­யும் இந்­திய அர­சின் ஒருங்­கி­ணைந்த நிதி­யத்­தில் சேர்க்­கப்­ப­டும். இது, சட்­டப்­பூர்வ செயல்­மு­றை­யின் மூலம் நிர்­வாக ரீதி­யி­லான சொத்து பறி­மு­த­லுக்கு வழி­வ­குக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத்­த­கைய செயல்­பா­டு­கள், அந்த நிறு­வ­னங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மட்­டு­மல்­லா­மல், அப்­ப­குதி மக்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருக்­கும் அத்­தி­யா­வ­சி­யச் சேவை­க­ளை­யும் மற்­றும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் கூட ஆபத்­துக்­குள்­ளாக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், நிலம், கட்­ட­டங்­கள், வாக­னங்­கள், உப­க­ர­ணங்­கள் மற்­றும் செல­வி­டப்­ப­டாத நிதி ஆகி­யவை FCRA சொத்­துக்­க­ளின் வரம்­பிற்­குள் அடங்­கும் என்­ப­தால், இந்த நிறு­வ­னங்­கள் நடை­மு­றை­யில் முழு­மை­யாக முடக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழ­லை­யும் உரு­வாக்­கு­கி­றது. வெளி­நாட்டு நன்­கொ­டை­யா­ளர்­கள் இந்­தி­யா­வில் உள்ள பின்­தங்­கிய சமூ­கங்­க­ளுக்கு உத­வ­வும், கல்­வியை மேம்­ப­டுத்­த­வும், பொதுச் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­த­வும், மற்­றும் பிற பொது நலன் சார்ந்த இலக்­கு­களை முன்­னெ­டுக்­க­வுமே இந்­திய அறக்­கட்­ட­ளை­க­ளுக்கு உதவி செய்­கின்­ற­னர். இந்­தப் பங்­க­ளிப்­பு­கள் என்­பது தொண்டு நிறு­வ­னங்­கள் உறு­தி­யான சமூ­கப் பலன்­களை வழங்­கு­வ­தற்கு உத­வு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பல­வீ­ன­மான அல்­லது சர்ச்­சைக்­கு­ரிய மற்­றும் நிரூ­பிக்­கப்­ப­டாத, குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் தொண்டு நிறு­வ­னங்­க­ளின் நிதி­க­ளைப் பறித்து இந்­தி­யத் தொகுப்பு நிதி­யத்­தில் சேர்ப்­பது என்­பது, அந்த நன்­கொ­டை­கள் அளிக்­கப்­பட்­ட­தன் அசல் நோக்­கத்­தையே முழு­மை­யாக சிதைத்­து­வி­டு­கி­றது. அது­மட்­டு­மின்றி, இந்த புதிய விதி­மு­றை­கள் இந்­தி­யத் தொண்டு நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­கள் எந்­நே­ர­மும் அர­சாங்­கத்­தால் பறி­மு­தல் செய்­யப்­ப­ட­லாம் என்ற அச்­சத்­திற்கு உள்­ளாக்­கு­வ­தோடு மட்­டு­மல்­லா­மல், நன்­கொ­டை­யா­கப் பெறப்­பட்ட நிதி­க­ளை­யும் மற்­றும் அவற்­றின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளை­யும் ஒரு­சேர ஆபத்­தில் ஆழ்த்­து­கின்­றன. மேலும் இந்­தக் கட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­தால் நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரி­யி­டம் தொண்டு நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் சொத்­துக்­களை தற்­கா­லி­க­மாக ஒப்­ப­டைப்­ப­தற்­கும் - நிரந்­த­ர­மாக ஒப்­ப­டைப்­ப­தற்­கும் விரி­வான நடை­மு­றை­களை நிறு­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மசோ­தா­வில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள திருத்­தங்­கள், ஒரு நிறு­வ­னத்­தின் பதிவு நிறுத்­தி­வைக்­கப்­ப­டும் காலத்­தி­லும் மற்­றும் விசா­ரணை நடை­பெ­றும் காலத்­தி­லும், நிர்­வா­கத் துறை­யின் கட்­டுப்­பாட்டை மேலும் தீவி­ரப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக திருத்­தப்­பட்ட பிரிவு 13, பதிவு நிறுத்­தி­ வைக்­கப்­பட்­டுள்ள காலத்­தில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் சொத்­துக்­களை முன் அனு­மதி இன்றி நிர்­வ­கிப்­ப­தைத் தடை செய்து அதன் ஒட்­டு­மொத்த செயல்­பா­டு­க­ளை­யும் முடக்­கி­வி­டு­கி­றது. திருத்­தப்­பட்ட பிரிவு 43ல், FCRA விதி­மீ­றல்­கள் குறித்து மாநில முகமை ஏதே­னும் விசா­ரணை நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக ஒன்­றிய அர­சின் ஒப்­பு­த­லைப் பெற வேண்­டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தன் மூலம் சட்ட அம­லாக்க அதி­கா­ரங்­களை முழு­மை­யாக ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டிற்­குள் மையப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முக்­கிய நிர்­வா­கி­கள் என்ற சொல்­லின் வரை­ய­றையை மிக­வும் விரி­வு­ப­டுத்­து­கி­றது. அலு­வ­லர்­க­ளின் தனிப்­பட்ட பொறுப்­பை­யும் அதி­க­ரிக்­கி­றது. இச்­சட்ட மசோதா குடி­மைச் சமூக அமைப்­பு­க­ளின் பங்­கேற்பை ஊக்­க­மி­ழக்­கச் செய்­யும் வகை­யி­லான ஒரு அச்­சச் சூழலை உரு­வாக்­கும் அபா­யத்­தைக் ஏற்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொறுப்­பு­ணர்வு மற்­றும் 
வெளிப்­ப­டைத்­தன்மை குறை­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2026 ஆம் ஆண்­டின் FCRA திருத்த மசோதா, செயல்­ப­டாத  அல்­லது முடங்­கிய நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­களை முடக்­கு­வதை கையா­ளும் இச்­சட்­டத்­தின் தற்­போ­தைய பிரிவு 22-ஐ நீக்­கு­வ­தற்கு இந்த மசோ­தா­வின் திருத்­தங்­கள் முன்­மொ­ழி­கி­றது. இந்­தச் சட்­டத்­தில் FCRA உரி­மங்­கள், அனு­ம­தி­கள், பதி­வு­கள் மற்­றும் புதுப்­பித்­தல்­களை அனு­ம­திப்­ப­தற்கோ அல்­லது நிரா­க­ரிப்­ப­தற்கோ தெளி­வான காலக்­கெடு எது­வும் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை.. இது ஒரு­வித நிச்­ச­ய­மற்ற தன்­மை­யை­யும் கால­தா­ம­தத்­தை­யும் உரு­வாக்­கு­கி­றது. இந்­தத் தாம­தங்­கள் வெளி­நாட்டு நிதியை நம்­பி­யி­ருக்­கும் திட்­டங்­க­ளைப் பெரி­தும் பாதிப்­ப­தோடு, பின்­தங்­கிய விளிம்­பு­நி­லைச் சமூ­கத்­தி­ன­ரை­யும் கடு­மை­யாக பாதிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பெரும்­பா­லும், தேசி­யப் பாது­காப்­புக் கார­ணங்­க­ளைக் காட்டி, உரி­மம் ரத்து செய்­யப்­பட்­ட­தற்­கான உண்­மை­யான கார­ணங்­கள் பொது­வெ­ளி­யில் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. இது போன்ற தன்­னிச்­சை­யான முடி­வு­களை எதிர்த்து நிறு­வ­னங்­கள் நீதி­மன்­றத்­தில் சட்­டப்­பூர்­வ­மா­கப் போரா­டு­வதை அல்­லது மேல்­மு­றை­யீடு செய்­வதை மிக­வும் கடி­ன­மாக்­கு­கி­றது. நடை­முறை ரீதி­யி­லான சிறு தவ­று­க­ளுக்­கா­கக் கூட, உரி­மங்­கள் ரத்து செய்­யப்­ப­டவோ அல்­லது தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­ப­டவோ இந்த மசோதா வழி­வகை செய்­கி­றது. இது பொது­மக்­க­ளுக்­குச் சேவை­யாற்றி வரும் இத்­த­கைய நிறு­வ­னங்­கள் முற்­றி­லு­மாக மூடப்­ப­டும் அபா­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சிறு­பான்­மைச் சமூ­கங்­கள், குறிப்­பா­கக் கிறிஸ்­த­வர்­கள் மீதான இந்த மசோதா ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் மிகுந்த கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது. கிறிஸ்­தவ அமைப்­பு­க­ளா­னது ஆயி­ரக்­க­ணக்­கான பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், மருத்­து­வ­ம­னை­கள், ஆத­ர­வற்­றோர் இல்­லங்­கள், பழங்­கு­டி­யி­னர் நல அமைப்­பு­கள் மற்­றும் அறக்­கட்­ட­ளை­களை நடத்தி வரு­கின்­றன. இவற்­றில் பெரும்­பா­லா­னவை உல­கெங்­கி­லும் உள்ள தேவா­ல­யங்­கள், புலம்­பெ­யர்ந்­தோர் குழுக்­கள் மற்­றும் மனி­த­நேய உதவி அமைப்­பு­க­ளின் தொடர்ச்­சி­யான நிதி ஆத­ர­வோ­டு­தான் இயங்கி வரு­கின்­றன. கேரளா, தமிழ்­நாடு, நாகா­லாந்து, மிசோ­ரம் மற்­றும் மேகா­லயா ஆகிய மாநி­லங்­க­ளில் இது போன்ற எண்­ணற்ற நிறு­வ­னங்­கள் இயங்கி வரு­கின்­றன..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சிறு­பான்­மை­யி­னர் நடத்­தும் தொண்டு அமைப்­பு­கள், பெரும்­பா­லும் பெரும்­பான்­மைச் சமூ­கத்­தி­ன­ருக்கே பய­ன­ளிக்­கின்­றன என்­பது ஒரு மறுக்க முடி­யாத உண்­மை­யா­கும். புதிய பிரிவு 16A-இன் கீழ், இந்த அமைப்­பு­க­ளின் பதி­வுக்­கா­லம் முடி­வ­டைந்­தாலோ, புதுப்­பித்­தல் தாம­த­மா­னாலோ அல்­லது உரிம ரத்து நடை­மு­றை­கள் தொடங்­கப்­பட்­டாலோ கூட, அவை அர­சாங்­கத்­தால் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டும் என்ற சூழலை எதிர்­கொள்ள நேரி­டும். நீண்­ட­கா­ல­மா­கச் செயல்­பட்டு வரும் புகழ்­பெற்ற கான்­வென்ட் பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், மிஷன் மருத்­து­வ­ம­னை­கள் மற்­றும் ஆத­ர­வற்­றோர் இல்­லங்­கள் போன்ற நிறு­வ­னங்­கள், மிக எளி­தாக அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வ­ரப்­ப­டும் பேரா­பத்தை எதிர்­கொள்­கின்­றன. குறிப்­பாக, அர­சாங்­கம் திட்­ட­மிட்டே அடுத்­த­டுத்த நிறு­வ­னங்­க­ளைக் குறி­வைத்து வரு­கி­றது. 2014 முதல் 2026 வரை­யி­லான காலக்­கட்­டத்­தில், எந்­த­வொரு முறை­யான அல்­லது நம்­ப­க­மான கார­ணங்­க­ளும் இன்றி சுமார் 22,000 FCRA உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது மறுக்க முடி­யாத நிதர்­ச­னம் ஆகும். சிறு­பான்­மை­யி­னர் நடத்­தும், உண்­மை­யில் பெரும்­பான்­மைச் சமூ­கத்­தி­ன­ருக்கே பெரு­ம­ள­வில் பயன்­பட்டு வரு­கின்ற இத்­த­கைய நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­களை தங்­க­ளின் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வ­ரவே அர­சாங்­கம் குறி­வைக்­கி­றதோ என்ற கவ­லையை இந்த திருத்த மசோதா எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">FCRA உரி­மங்­கள் ரத்து செய்­யப்­ப­டு­வது, பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் தற்­போது நடை­பெற்று வரும் தொடர் முயற்­சி­க­ளான குழந்­தைப் பாது­காப்பு, தடுப்­பூசி செலுத்­து­தல், மகப்­பேறு மற்­றும் குழந்தை ஆரோக்­கி­யம், ஊட்­டச்­சத்து, ஆரம்­பக்கல்வி கற்­றல், பெற்­றோர் பங்­க­ளிப்பு, இளை­ஞர்­க­ளுக்­கான திறன் மேம்­பாடு மற்­றும் அரசு திட்­டங்­களை கொண்டு சேர்க்­கும் போன்ற தொடர்ச்­சி­யான முயற்­சி­க­ளுக்கு 
அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தால், ஒவ்­வொரு அமைப்­பின் மூல­மும் பய­ன­டைந்து வந்த சுமார் நான்கு முதல் எட்டு லட்­சம் வரை­யி­லான தனி­ந­பர்­கள் அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளைப் பெறும் வாய்ப்பை இழக்­கின்­ற­னர்; மேலும், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் (GDP) சுமார் 2% பங்­க­ளிப்பை வழங்­கும் இத்­துறை பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது. புள்­ளி­வி­வ­ரம் மற்­றும் திட்ட அம­லாக்க அமைச்­ச­கத்­தின் 2014-ஆம் ஆண்டு அறிக்­கை­யின்­படி, பொதுத்­துறை வேலை­வாய்ப்­பு­களை விட அதி­க­மாக, குடி­மைச் சமூக அமைப்­பு­கள் 27 லட்­சம் வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் 34 லட்­சம் முழு­நேர தன்­னார்­வ­லர் பணி­க­ளை­யும் உரு­வாக்­கு­கின்­றன. 515 தொண்டு நிறு­வ­னங்­க­ளில் நடத்­தப்­பட்ட ஒரு தனிப்­பட்ட கணக்­கெ­டுப்­பில், அவற்­றில் 47% நிறு­வ­னங்­கள், தாங்­கள் செயல்­ப­டும் பாதிக்­கும் மேற்­பட்ட உள்­ளூர் பகு­தி­க­ளில் முதன்­மை­யான வேலை­வாய்ப்பு ஆதா­ர­மாக விளங்­கு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருத்­தங்­கள், வெறும் நிறு­வ­னங்­க­ளின் இருப்பை மட்­டு­மல்­லா­மல், கோடிக்­க­ணக்­கான மக்­கள் நம்­பி­யி­ருக்­கக்­கூ­டிய உள்­கட்­ட­மைப்­பு­கள் மற்­றும் சமூக வளங்­க­ளை­யும் சேர்த்தே அச்­சு­றுத்­து­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் நமக்கு வழங்­கி­யுள்ள அடிப்­படை உரி­மை­களை பெரும் 
அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மசோ­தாவை குடி­மைச் சமூ­கத்­தி­னர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நிறு­வ­னங்­க­ளுக்­கும் விரிக்­கப்­
பட்­டுள்ள ஒரு கடு­மை­யான அச்­சு­றுத்­த­லா­கவே விமர்­ச­கர்­கள் பார்க்­கின்­றார்­கள். இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தெளி­வற்ற “பொது­ந­லன்” என்ற அள­வு­கோல், சிறு­பான்­மை­யி­னர் உரி­மை­கள், பழங்­கு­டி­யி­னர் நலன், சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு, மனித உரி­மை­கள் மற்­றும் பொது மக்­க­ளுக்­கான ஆத­ர­வுத் தளங்­க­ளில் பணி­யாற்­றும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் அபா­யம் உள்­ளது. இதன் விளை­வாக, நன்­கொ­டை­யா­ளர்­கள், அறங்­கா­வ­லர்­கள் மற்­றும் தன்­னார்­வ­லர்­கள் என எவ­ரும் இத்­த­கைய அமைப்­பு­க­ளுக்­குத் தங்­க­ளது ஆத­ரவை வழங்க முன்­வ­ரா­மல் பின்­வாங்­கும் நிலை உரு­வா­கக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மசோதா நமது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் பிரி­வு­கள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்­றும் 300A ஆகி­ய­வற்­றின் கீழ் குடி­மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் சார்ந்த கேள்­வி­க­ளை­யும் கவ­லை­க­ளை­யும் எழுப்­பு­கி­றது. நிர்­வா­கத்­தில் வரம்­பற்ற அதி­கா­ரங்­களை குவித்து வைப்­ப­தன் மூலம், குழு­மங்­க­ளின் சங்­கம் அமைக்­கும் சுதந்­தி­ரம், மத மற்­றும் கல்வி நிறு­வ­னங்­க­ளின் சுயாட்சி தன்மை மற்­றும் சொத்­து­ரிமை ஆகி­ய­வற்றை முற்­றி­லு­மா­கச் சிதைக்­கும் அபா­யத்­தைக் கொண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வெளி­நாட்டு நிதிப் பங்­க­ளிப்­பு­களை முறைப்
­ப­டுத்­தும் எந்­த­வொரு ஒழுங்­கு­மு­றை­யும், முறை­யான சட்­டச் செயல்­முறை, சுதந்­தி­ர­மான மேற்­பார்வை மற்­றும் அர­சின் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் இருக்க வேண்­டும். இத்­த­கைய சட்­டப் பாது­காப்பு அம்­சங்­கள் இல்­லாத பட்­சத்­தில், இந்த மசோதா நவீன இந்­தி­யா­வின் குடி­மைச் சமூ­கத்­தைப் பாதிக்­கக்­கூ­டிய மிகக் கடு­மை­யான, ஒடுக்­கு­மு­றைச் சட்­டங்­க­ளில் ஒன்­றாக மாறி­வி­டும் போக்­கைக் கொண்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>