<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 19 2026 03:44:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260619T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="19062026-MDU-05" position.sequence="05" ex-ref="19062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">‘தமிழ்வெல்லும்’ என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">முத்தமிழறிஞர் கலைஞருக்கு இணையான தலைவர் உலகத்தில் எங்கும் இல்லை! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய    கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 6ஆம் பக்கம்</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup597295_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup589214_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="velubw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூன். 19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘‘60 ஆண்டு காலம் மக்கள் பிரதிநிதி – நின்ற 13 தேர்தல்களிலும் வென்ற ஒரே தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இணையான தலைவர் உலகத்தில் எங்கும் இல்லை’’ என்று சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்  கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை கிழக்கு மாவட்­டம், துறை­ மு­கம் கிழக்­குப் பகு­தி­யில் நடை­பெற்ற முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்­கூட்­டத்­தில் முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘தமிழ் வெல்­லும்’ என்ற தாரக மந்­தி­ரத்­திற்­குச் சொந்­தக்­கா­ரர். 60 ஆண்டு காலம் மக்­கள் பிர­தி­நி­தி­யாக இருந்­த­வர்; நின்ற 13 தேர்­தல்­க­ளி­லும் வென்ற ஒரே தலை­வர், ஜன­நா­ய­கத்­தில் உல­கத்­தி­லேயே அண்­ணன் கலை­ஞர் அவர்­கள் மட்­டும்­தான். கலை­ஞ­ருக்கு இணை­யான தலை­வரை உல­கத்­தில் எங்­குத் தேடிப் பார்த்­தா­லும் கிடைக்­க­வில்லை. அவ­ருக்கு இணை அவர்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய வர­லாற்­றின் போக்கை மாற்­றிக் காட்­டி­ய­வர் நம்­மு­டைய அருமை அண்­ணன் கலை­ஞர் அவர்­கள். ஏனென்­றால், இந்­தி­யா­வில் பெரும்­பான்­மை­யான பிர­த­மர்­க­ளை­யும், குடி­ய­ர­சுத் தலை­வர்­க­ளை­யும் உரு­வாக்­கிய வர­லாறு, கோபா­ல­பு­ரத்து கோம­க­னாக இருக்­கிற என் தலை­வர் கலை­ஞ­ரையே சேரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘தமி­ழர்’ என்ற ஒரே ஒரு சொல் அடை­யா­ளத்­தைக் கொண்டு, இந்த ஜாதி, அந்த ஜாதி, மேல் ஜாதி, கீழ் ஜாதி, இது ஒதுக்­கப்­பட்ட ஜாதி, இது நடு ஜாதி என்று பார்க்­கா­மல், அத்­தனை பேரை­யும் ஒரே குடை­யின் கீழ் “தமி­ழர்­களே, தமி­ழர்­களே!” என்று அர­வ­ணைப்­போடு அழைத்­தார் நம்­மு­டைய அண்­ணன் கலை­ஞர் அவர்­கள். அத­னால், அவரை ‘தமிழ் ஞானத் தந்தை’ என்று சொன்­னால் கூட அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">அறி­வி­யக்­க­மா­கத் திக­ழும் 
திரா­விட இயக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது ஒரு அறி­வி­யல் இயக்­கம். அத­னால்­தான், வட­சென்­னை­யில் உள்ள ராய­பு­ரத்­தில் இருந்த தலைமை நிலை­யத்­திற்கு அண்ணா அவர்­கள், ‘அறி­வ­கம்’ என்று பெய­ரிட்­டார். அவ­ரது வழித்­தோன்­ற­லாக இருக்­கிற, இன்­றைய பிறந்­த­நாள் விழா­வின் நாய­கன் அண்­ணன் கலை­ஞர் அவர்­கள், அண்­ணா­சா­லை­யில்கண்ட தலை­மைக்­க­ழ­கத்­திற்கு ‘அண்ணாஅறி­வா­ல­யம்’ என்று பெயர் வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கல்வி கற்­றால்­தான் அறிவு பெரு­கும்; அறிவு பெற வேண்­டும் என்று சொன்­னால் கல்­விக்­கூ­டம் தேவை. கல்­விக்­கூ­டம் இல்லை என்­றால் அறிவு வள­ராது. எனவே, கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் தர வேண்­டும் என்று நினைத்த இயக்­கம் திரா­விட இயக்­கம். மூவேந்­தர்­கள் ஆண்ட போதும் சரி, அதற்­குப் பின்­னால் ஆண்­ட­வர்­க­ளும் சரி, எந்­தக் கால­மாக இருந்­தா­லும், தமிழ்­நாட்­டில் படிப்­ப­றிவு கிடை­யாது. முதன்­மு­த­லில் நாம் படிக்க வேண்­டும் என்று நினைத்­த­வர்­கள் பிரிட்­டிஷ் 
கா­ரர்­கள்­தான். ஆங்­கி­லே­யர் காலத்­தில்­தான் முதன்­மு­த­லா­கப் பள்­ளிக்­கூ­டங்­கள் உரு­வா­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தமி­ழ­கக் கல்வி வளர்ச்­சி­யின் 
வர­லாற்­றுப் பின்­னணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1901 பிரிட்­டிஷ்­கா­ரர்­கள் காலத்­தில், 100 பேரில் எத்­தனை பேர் படித்­தார்­கள் என்­றால், ஏழு பேர்­தான் படித்­தார்­கள். அது­வும் பட்­டப் படிப்பு என்று நினைத்­து­ 
வி­டா­தீர்­கள்; ஏதோ கை எழுத்­துப் போடத் தெரி­யும்; ஐந்­தா­வது வரைக்­கும் படித்­தி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்­தப் படிப்பு கூட, அந்த ஏழு பேரில் யாருக்­குக் கிடைத்­தது என்று சொன்­னால், முற்­போக்கு என்று நம்மை அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்த இன மக்­கள்­தான் ஆறு பேர் படித்­தார்­கள்; நம்­மு­டைய ஆட்­கள் ஒரு­வன்­தான் படித்­தி­ருந்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1921-ஐ எடுத்­துக்­கொண்­டோம் என்று சொன்­னால், எட்டு பேர்­தான் படித்­தி­ருக்­கி­றார்­கள். 1931-ஐ எடுத்­தால் ஒன்­பது பேர் படித்­தி­ருக்­கி­றார்­கள். 1952-இல் நாடு சுதந்­தி­ரம் பெற்­ற­தற்­குப் பின்­னால் படித்­த­வர்­க­ளு­டைய எண்­ணிக்கை 15 பேர்; அதா­வது 100-க்கு 15 பேர்­தான் படித்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">குலக்­கல்­வித் திட்­டத்தை உடைத்­தெ­றிந்தகாம­ரா­ஜ­ரும் திரா­விட இயக்­க­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதுவே 1952-இல் முத­ல­மைச்­ச­ராக இருந்த ராஜா­ஜிக்கு பிடிக்­க­வில்லை. “நீங்­கள் எல்­லாம் என்ன படிப்­பது? உங்­க­ளுக்­குப் படிப்பே வராது, அத­னால் குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றேன்” என்று சொல்லி, குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவன் அப்பா என்ன ஜாதியோ, அந்த ஜாதித் தொழி­லைத்­தான் நீ செய்ய வேண்­டும்; மண்­பாண்­டம் செய்­கிற குய­வ­ராக இருந்­தால், நீ மண்­பாண்­டம் செய்; சிகை அலங்­கா­ரம் கடை நடத்­திக் கொண்­டி­ருக்­கின்ற என்­னு­டைய அன்­புச் சகோ­த­ர­ராக இருந்­தால், சிகை அலங்­கா­ரம் கடை வைத்­துக் கொள்; தச்­சு­தான் உன்­னு­டைய குடும்­பத் தொழில் என்­றால், அதைச் செய் என்று குலத்­தொ­ழில் திட்­டத்தை 1952-இல் ராஜாஜி கொண்டு வந்­து­விட்­டார். அப்­போதே நம்மை படிக்­கக் கூடாது என்று நினைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்­குப் பின்­னால் வந்த பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­கள்­தான், 1954-இல் அனைத்து கிரா­மங்­க­ளி­லும் பள்­ளிக்­கூ­டம் வேண்­டும் என்று நினைத்­தார். அத­னால்கிரா­மங்­க­ளிலே பள்­ளிக்­கூ­டங்­கள் வந்­தன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை உணர்ந்த திரா­விட இயக்­கம், 1967-இல் ஆட்­சிக்கு வந்­தது. “படி, படி” என்று சொன்­ன­வர் அண்ணா அவர்­கள்; ஆனால் காலம் அவரை நம்­மி­ட­மி­ருந்து விரை­வா­கப் பிரித்­து­விட்­டது. 1969-இல் அண்­ணன் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பின்பு, “படி, படி” என்று சொன்­ன­வர் பெரி­யார்; “எழுது, எழுது” என்று எழு­தி­ய­வர் அண்ணா; இவை இரண்­டை­யும் சேர்த்து, “கல்­லூரி தேவை” என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சமத்­து­வக் கல்­வி­யும் கலை­ஞர் உரு­வாக்­கிய கல்வி அமைப்­பும்! (System)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னால்­தான் அவர் ஒரு சிஸ்­டத்­தைக் கொண்டு வந்­தார். ஒரு பள்­ளிக்­கூ­டம் என்று சொன்­னால், ஒரு கிலோ­மீட்­ட­ருக்கு ஒரு தொடக்­கப் பள்ளி இருக்க வேண்­டும்; 3 கிலோ­மீட்­ட­ருக்கு ஒரு நடு­நி­லைப் பள்ளி இருக்க வேண்­டும்; 5 கிலோ­மீட்­ட­ருக்கு ஒரு உயர்­நி­லைப் பள்ளி இருக்க வேண்­டும்; 8 கிலோ­மீட்­டர் இருந்­தால் ஒரு மேல்­நி­லைப் பள்ளி இருக்க வேண்­டும் என்று ஒரு ஆணை பிறப்­பித்­தார். அனைத்து ஜாதி­யி­ன­ரும் படிக்க வேண்­டும் என்று சொன்­ன­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யில் இருக்­கிற உங்­க­ளுக்கு இதெல்­லாம் தெரி­யாது. நான் கிரா­மத்­தில் பிறந்­த­வன்; திரு­வண்­ணா­ம­லைக்­குப் பக்­கத்­தில் 9 கிலோ­மீட்­ட­ரில் இருக்­கிற ‘...’ என்ற பஸ் செல்­லாத ஊரில் பிறந்­த­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பள்­ளிக்­கூ­டத்­தில்­கூ­டத் தீண்­டாமை தலை­வி­ரித்து ஆடிய காலங்­கள் எல்­லாம் உண்டு. அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் கழ­கம் ஆட்­சிக்கு வந்த பிற­கு­தான், ஒரு பள்­ளிக்­கூ­டம் என்று சொன்­னால் அனை­வ­ரும் ஒரே பெஞ்­சில் உட்­கார வேண்­டும் என்­றார்­கள். எங்­கள் ஊரில் நான் மிக­வும் பெரிய வீட்­டுப் பிள்ளை. அத­னால், அந்­தப் பள்­ளிக்­கூ­டத்­திற்­குச் செல்­ல­வில்லை. பெரிய வீடா­வது, சின்ன வீடா­வது; அனை­ரை­யும் ஒன்­றாக உட்­கார சொன்­னார் ஆசி­ரி­யர். இது­தான் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஜாதியை ஒழித்து, பள்­ளிக்­கூ­டத்­தில் அனை­வ­ரும் சமம் என்று சொன்­னது கழக ஆட்சி; கலை­ஞர்­தான் அதைக் கொண்டு வந்­தார். காலப்­போக்­கில் இதை­யெல்­லாம் நாம் மறந்­து­வி­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தக­வல் தொழில்­நுட்­பப் புரட்­சி­யும் சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் பாராட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­கள் ஊரில் ஒரு­வன் கல்­லூ­ரிக் கல்வி படிக்க வேண்­டும் என்­றால், ஒன்று சென்னை மாநி­லக் கல்­லூ­ரிக்கு வர வேண்­டும், இல்­லை­யென்­றால் சிதம்­ப­ரம் அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத்­தான் செல்ல வேண்­டும்; 100 கிலோ­மீட்­ட­ருக்­குள் கல்­லூ­ரியே இல்லை; இது­தான் எங்­கள் ஊர் நிலை­மையே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் இன்­றைக்கு, தமிழ்­நாட்­டில் நக­ராட்சி எங்­கெல்­லாம் இருக்­கி­றதோ, அங்­கெல்­லாம் கலைக் கல்­லூ­ரி­கள்; மாவட்­டத் தலை­ந­க­ரங்­கள் எங்­கெல்­லாம் இருக்­கி­றதோ, அங்­கெல்­லாம் மருத்­துவ கல்­லூ­ரி­கள்; இன்­றைக்கு கலைக் கல்­லூ­ரி­கள், பொறி­யி­யல் கல்­லூ­ரி­கள், மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் என்று போட்டி போட்­டுக் கல்­லூ­ரி­கள் வந்­தி­ருக்­கி­றது என்று சொன்­னால், அதற்­குக் கார­ணம் கழக ஆட்சி, கலை­ஞர். அதை யாரும் மறந்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏனென்­றால், நம்மை அறி­வா­ளிச் சமு­தா­ய­மாக உரு­வாக்க வேண்­டும் என்று எண்­ணி­ய­வர் அண்­ணன் கலை­ஞர். அத­னால்­தான், 1997-இல் அவர் முத­ல­மைச்­ச­ ராக இருந்த போது, கணி­னிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும் என்று நினைத்­தார். அத­னால்­தான், கல்­லூ­ரி­க­ளி­லெல்­லாம் தக­வல் தொழில்­நுட்­பம், கணி­னிப் படிப்­பு­களை பாடத் திட்­டத்­தில் கொண்டு வந்­தார். ஐ.டி., எலக்ட்­ரா­னிக்ஸ் அண்ட் கம்­யூ­னி­கே­ஷன் போன்ற புதிய உட்­பி­ரி­வு­க­ளைக் கொண்ட உல­கத்­த­ரம் வாய்ந்த பாடத்­திட்­டத்­தைக் ஒவ்­வொரு கல்­லூ­ரி­யி­லும் கொண்டு வந்­தார். அதன் விளை­வாக, நம் பிள்­ளை­கள் ஐ.டி. படித்த கார­ணத்­தி­னால்­தான், இன்­றைக்கு அமெ­ரிக்கா, ஜெர்­மனி போன்ற வெளி­நா­டு­க­ளி­லும், இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­திற்­குச் சென்­றா­லும் உயர்­ப­த­வி­க­ளில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு­முறை ஆந்­தி­ரா­வி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக இருக்­கிற அண்­ணன் சந்­தி­ர­பாபு நாயுடு அவர்­களே சொன்­னார், “இன்­றைக்கு உல­கத்­தில் எங்கு சென்­றா­லும் தமி­ழன் என்று ஒரு­வன் இருக்­கி­றான்; அந்­தத் தமி­ழன் அங்­கி­ருப்­ப­தற்­குக் கார­ணம் என்­ன­வென்­றால், கலை­ஞ­ரும் அண்­ணா­வும் கொண்டு வந்த இரு­மொ­ழிக் கொள்­கை­தான்; ஒன்று ஆங்­கி­லம், இன்­னொன்று தமிழ். தாய்­மொ­ழி­யான தமிழை நாம் பேசு­கி­றோம்; ஜப்­பான், அமெ­ரிக்கா எங்கு சென்­றா­லும் இணைப்பு மொழி­யாக ஆங்­கி­லம் இருக்­கி­றது. இந்த இரு­மொ­ழிக் கொள்கை தமிழ்­நாட்­டில் இருந்த கார­ணத்­தி­னால்­தான் இவ்­வ­ளவு பேர் உலக அரங்­கிற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்” என்று நான் சொல்­ல­வில்லை, ஆந்­தி­ரா­வில் இருந்த முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு அவர்­களே ஒரு பேட்­டி­யில் 
சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு உலக அள­விலே பெரி­யாட்­கள் இருக்­கிற கார­ணத்­தி­னால்­தான், தமிழ்­நா­டாக இருந்­தா­லும் சரி, இந்­தி­யா­வாக இருந்­தா­லும் சரி, இன்­றைக்­குப் பொரு­ளா­தா­ரத்தை வளர்த்­தெ­டுத்­தி­ருக்­கி­றோம் என்று சொன்­னால், வெளி­நாட்­டிலே பணி­யாற்­று­கிற அத்­தனை பேரும் இந்­தி­யா­வுக்­கும், தமிழ்­நாட்­டுக்­கும் டாலர் கணக்­கா­கப் பணத்தை அனுப்­பு­கிற கார­ணத்­தி­னால்­தான், இங்கே பொரு­ளா­தா­ரம் முன்­னேறி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பத்து தலை இரா­வ­ண­னும் பன்­மு­கக் கலை­ஞர் அவர்­க­ளும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­ப­டிப்­பட்ட அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளு­டைய பரி­ணாம வளர்ச்சி என்று சொன்­னால் பல­வற்­றைச் சொல்­ல­லாம். நான் எப்­போ­தும் சொல்­லு­வேன், ‘பத்து தலை இரா­வ­ணனை’ நாம் நேரில் பார்த்­த­தில்லை; அவ­னது ஆற்­ற­லைப் பற்­றிப் பேசு­கிற போது, பத்து தலை இரா­வ­ணன் என்று சொல்­லு­வார்­கள். பத்து தலை இருந்­ததா என்­றால், பத்து தலை அல்ல; அவ­னு­டைய பரி­ணாம வளர்ச்சி, அவன் பன்­மு­கத் திறமை கொண்­ட­வன். அப்­ப­டிப்­பட்ட ஆற்­ற­லா­ளன், வீரன், விவே­கன், இசை­வா­ணன், இலக்­கி­ய­வாதி என்­ப­து­தான் பத்து தலை இரா­வ­ணன் என்று சொல்­வார்­கள். ‘பன்­மு­கம் கொண்­ட­வன்’ என்­ப­தற்­குப் பதி­லாக எளி­மை­யா­கப் பத்து தலை இரா­வ­ணன் என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­ப­டிப் பார்த்­தோம் என்று சொன்­னால், பன்­மு­க­மும் தெரிந்­தி­ருக்­கிற இலக்­கி­ய­வா­தி­யாக இருக்­க­லாம்; திரைப்­ப­ட­ 
வா­தி­யாக இருக்­க­லாம்; வச­ன­கர்த்­தா­வாக இருக்­க­லாம்; நாடக ஆசி­ரி­ய­ராக இருக்­க­லாம்; எழுத்­தா­ள­ராக இருக்­க­லாம்; சிறந்த நிர்­வா­கி­யாக இருக்­க­லாம்; இன்­னும் சொல்­லப்­போ­னால் இந்­தி­யா­வி­லேயே சிறந்த முத­ல­மைச்­ச­ரில் முத­லி­டத்­தில் இருப்­ப­வ­ராக இருக்­க­லாம். இப்­ப­டிப் பன்­மு­கம் கொண்ட தலை­வர் யார் என்று சொன்­னால், அது கலை­ஞர் மட்­டும்­தான்; அவ­ருக்கு இணை­யா­ன­வர் யாரும் கிடை­யாது. அவர் பெரிய எழுத்­தா­ளர், இலக்­கி­ய­வாதி; ... திரைப்­பட வச­ன­கர்த்தா மட்­டு­மல்ல, 28-க்கும் மேற்­பட்ட திரைப் 
ப­டங்­க­ளைத் தயா­ரித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டிப்­பட்ட பன்­மு­கத்­தன்மை கொண்ட தலை­வர் அண்­ணன் கலை­ஞர் என்று சொன்­னால் அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் சொல்­லப்­போ­னால், அவர் ஒரு இலக்­கி­ய­வாதி. நான் அவரை ‘தமிழ் ஞானத் தந்தை’ என்று சொன்­ன­தற்கு ஒரே கார­ணம், அங்கே கடைசி வரி­சை­யில் இருக்­கிற தொண்­டர்­க­ளும் சரி, என்­னை­யும் சரி, ஏன் தமிழ்­நாட்­டில் இருக்­கிற ஒட்­டு­மொத்த தமி­ழ­னை­யும் சரி, இல்லை இல்லை உல­கத்­தில் இருக்­கிற அத்­தனை தமி­ழ­னை­யும், “உடன்­பி­றப்பே வா!” என்ற ஒற்­றைச் சொல்­லி­லேயே நம்­மைக் கட்­டிப் போட்ட தலை­வன் அந்­தத் தலை­வன். அப்­ப­டிப்­பட்ட தலை­வ­ருக்கு இங்கே சிறப்­பான பிறந்­த­நாள் விழாவை நம்­மு­டைய சேகர்­பாபு அவர்­க­ளும், அவ­ரோடு சேர்ந்த உடன்­பி­றப்­பு­க­ளும் மிகச் சிறப்­பாக நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">1991-ஆம் ஆண்­டின் சோத­னை­யும் பீனிக்ஸ் பற­வை­யான தி.மு.க.வும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்கு துறை­மு­கம் என்று சொன்ன உடனே, ஒன்று நினைவு வந்­தது. தம்பி செந்­தில்­வே­லன் இங்கே பேசு­கிற போது மிகச் சிறப்­பா­கப் பேசி­னார். தொண்­டர்­கள் எல்­லாம் உற்­சா­கப்­ப­டு­கிற அள­வுக்­குத் தன்­னு­டைய உரையை அமைத்­துக் கொண்­டி­ருந்­தார். நம் ஆட்­கள் எங்கே சோர்­வ­டைந்­தி­டப் போகி­றார்­களே என்ற கார­ணத்­தி­னால் தூக்கி நிறுத்­தி­னார். 
அவ­ரு­டைய வார்த்­தை­களை எல்­லாம் பார்த்­துக் கொண்­டு­தான் இருந்­தேன். “துவண்டு விடா­தீர்­கள்; இதோ வரு­கி­றது உள்­ளாட்­சித் தேர்­தல், அதிலே நம்­மு­டைய திற­மை­களை, நம்­மு­டைய ஆற்­ற­லைக் காட்­டு­வோம்” என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது ஒரு பீனிக்ஸ் பறவை; என்ன ஆனா­லும் சரி, இது எழுந்து கொண்­டே­தான் இருக்­கும், இதை ஒன்­றும் செய்ய முடி­யாது. அதற்கு உதா­ர­ணம் இந்­தத் துறை­மு­கம் மண்­தான். என்ன கார­ணம் என்று சொன்­னால், 1991 பொதுத் தேர்­த­லில், தமிழ்­நாட்­டின் 234 தொகு­தி­க­ளி­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் கூட்­ட­ணி­யோடு நின்­றா­லும் கூட, இரண்டு இடங்­க­ளில்­தான் வென்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதில் ஒரு இடம் எது தெரி­யுமா? அன்­றைக்­கும் நன்றி உணர்­வோடு இந்­தத் தொகுதி மக்­கள் அண்­ணன் கலை­ஞ­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்­கள். அந்த நன்றி உணர்வு தொடர்ந்து இந்த மண்­ணில் இருக்­கிற கார­ணத்­தி­னால்­தான் என் தம்பி சேகர்­பா­பு­வுக்­கும் - உத­ய­சூ­ரி­ய­னுக்­கும் ஓட்­டுப் போட்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இரண்டே இரண்டு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளோடு நாம் சட்­ட­மன்­றத்­திற்­குள்ளே சென்ற கால­கட்­டத்தை நான் எண்­ணிப் பார்க்­கி­றேன். நான் ‘பீனிக்ஸ் பறவை’ என்­பதை சொற்­றொ­ட­ருக்­கா­கச் சொல்­ல­வில்லை; 1991-இல் இரண்டே இரண்டு பேர்­தான் தி.மு.க. என்று சட்­ட­மன்­றத்­திற்­குள் சென்­றோம். ஆனால் அதற்­குப் பின்­னால், 1996-இல் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளு­டைய தலை­மை­யிலே வெற்றி பெற்­றோம். 2006-இல் இரண்­டா­வது முறை­யாக தி.மு.க. ஆட்­சிக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">உண­வுத்­துறை அமைச்­ச­ரா­கப் 
பணி­யாற்­றிய நினை­வு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதில் அடி­யேன் ஆகிய நான், கூட்­டு­றவு மற்­றும் உண­வுத்­துறை அமைச்­ச­ராக இருந்து, சிறப்­பாக, ஏன் உச்ச நீதி­மன்­றமே பாராட்­டும் அள­வுக்கு அந்­தத் துறை­யைச் சிறப்­பாக நடத்­திக் கொடுத்­தேன். ஏன் என்­றால், அமைச்­ச­ருக்கு என்ன துறை என்று தெரி­ய­வில்லை என்று செந்­தில்­வே­லன் மிக­வும் வருத்­தப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்கு நன்­றாக நினைவு இருக்­கி­றது. அந்­தத் துறையை நான் எடுக்­கி­ற­போது, ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் எனக்கு அங்கே துண்டு போட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள்.. ஆரணி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சிவா­னந்­தம், எனக்­குத் துண்­டைப் போட்­டு­விட்டு கட்டி அழு­தார். “நம்­மு­டைய அண்­ணன் அமைச்­சர் ஆகி­விட்­டார், அது­வும் இரண்டு துறை­க­ளைப் போட்­டுக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்” என்று ஆனந்­தக் கண்­ணீர் வடிக்­கி­றார் என்று பார்த்­தேன், அவர் “மகிழ்ச்சி மகிழ்ச்சி” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் “ஒரு நிமி­டம் வாருங்­கள்” என்­றார். “என்ன” என்­றேன். “ஐயோ! இந்­தத் துறை யாருக்­கும் சரி­யாக வரா­தத் துறை ஆயிற்றே? அமைச்­ச­ராக இருப்­ப­வர்­கள் பாதி­யி­லேயே சென்­று­வி­டு­வார்­களே... இந்­தத் துறையை உனக்கு எதற்கு கொடுத்­தார்­கள்? அது­வும் நம்­மு­டைய மாவட்­டத்­திற்கு சரி­யாக இருக்­காதே?” என்­றார். “என்ன விஷ­யம்” என்­றேன். உண­வுத் துறை­யில் ... இருந்­தார். பாதி­யிலே போய்­விட்­டார். அதி­லும் அவர் எங்­கள் மாவட்­டத்­துக்­கா­ரர். ... என்று ஒரு அமைச்­சர் இருந்­தார். உண­வுத் துறை அமைச்­ச­ராக டெல்­லிக்­குச் சென்­றார், அவர் திரும்பி வரும்­போது அமைச்­சர் பதவி இல்­லா­த­வ­ராக வந்­தார் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் சொல்­லப்­போ­னால், திற­மைக்கே ஒட்­டு­மொத்த உரு­வ­மாக இருக்­கிற என் அண்­ணன் ஆர்க்­காட்­டார் கூட உணவு அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கி­றார். அது­வும் இடை­யில் போய்­விட்­டது. அன்­றைக்­குத் தான் அமைச்­சர் ஆகி­யி­ருக்­கி­றேன், இந்த மூன்­றை­யும் என்­னி­டம் சொல்லி, “ஒத்து வரா­தத் துறையை எதற்கு அண்ணா உனக்­குக் கொடுத்­தார்­கள்” என்­றார். ஆனால், ஐந்து ஆண்டு காலம் அண்­ணன் கலை­ஞ­ரு­டைய அறி­வு­ரை­யோடு, உச்ச நீதி­மன்­றமே பாராட்­டும் அள­வுக்கு நடத்­தி­னேன். ‘டைம்ஸ் ஆஃப் இந்­தியா’, ‘தி இந்து’ பத்­தி­ரி­கை­கள் எல்­லாம் முழுப் பக்­கத்­திற்கு, “பொது விநி­யோ­கத் திட்­டத்­திற்­குத் தமிழ்­நா­டு­தான் உதா­ர­ணம்” என்று எழு­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எழப் போகும் உத­ய­சூ­ரி­ய­னும், 
தள­ப­தி­யின் அடுத்த கழக ஆட்­சி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே, இரண்டே இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு, 1996-இல் நாம்­தான் ஆட்­சி­யைப் பிடித்­தோம், 2006-இலும் தி.மு.க.தான் ஆண்­டது. 2021-இல் எல்­லா­ருக்­கும் எல்­லாம் கிடைக்­கிற ‘திரா­விட மாடல்’ ஆட்சி, தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் என் அண்­ணன் மு.க.ஸ்டாலின் தலை­மை­யிலே சிறப்­பாக நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இரண்டு பேர் வெற்றி பெற்ற போதே நாங்­கள் மூன்று முறை ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோம் என்­றால், இன்­றைக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஏறத்­தாழ 59 பேரோடு உள்ளே செல்­கி­றோம் என்று சொன்­னால், நான் சொல்­கி­றேன், எழுதி வைத்­துக் கொள்­ளுங்­கள்; அடுத்து நடை­பெ­று­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், இதே சட்­ட­மன்­றத்­திலே உத­ய­சூ­ரி­யன் மீண்­டும் மல­ரும்! தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக அருமை அண்­ணன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் மீண்­டும் வரு­வார். நம்­பிக்­கை­தான் வாழ்க்கை, வாழ்க்­கையே நம்­பிக்­கை­தானே; நிச்­ச­யம் கழக ஆட்சி மீண்­டும் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கரூ­ரின் சோக­மும் தலை­வ­ரின் 
தாய் உள்­ள­மும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர், இப்­ப­டிச் சொன்­னால் நன்­றாக இருக்­கும் என்று நினைக்­கி­றேன். மிஸ்­டர் சி.எம். சார்... இல்­லா­த­தும் பொல்­லா­த­தும் எல்­லாம் எங்­க­ளி­டத்­தில் சொன்­னீர்­கள். நான் உள்­ள­ ப­டியே ஒப்­புக் கொண்டு பேசு­கி­றேன்; ஒரு கணம் நாங்­கள் ஏமாந்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் ஏமாந்­து­விட்­டோம் என்று சொல்­வதை விட, தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ரு­டைய தாய் குணம் அதற்கு ஒரு கார­ண­மாக அமைந்­து­விட்­டது. 41 பேர் கரூ­ரிலே இறந்­தி­ருக்­கி­றார்­கள்; காவல்­துறை வழக்­குப் பதிவு செய்ய வேண்­டுமா, 
இல்­லையா? அதி­கா­ரி­கள் எல்­லாம் எஃப்.ஐ.ஆர்.போட வேண்­டும் என்று சொல்­கி­றார்­கள். ஆனால், என் தலை­வ­னு­டைய பேட்­டியை நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், “எந்­தக் கட்­சித் தலை­வ­னா­வது தன் தொண்­டன் சாக வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பானா? எந்­தக் கட்­சித் தலை­வ­னா­வது தன் தொண்­டன் சாக வேண்­டும் என்று சதி செய்­வானா?” என்று சொல்லி, அத்­தனை பேரும் எஃப்.ஐ.ஆர். போட வேண்­டும் என்று சொன்ன போது கூட, “அவர் மீது எஃப்.ஐ.ஆர். போட வேண்­டாம்” என்று சொன்ன தாய் உள்­ளம் கொண்ட தலை­வர். ஒரு கணம் அன்­றைக்­குப் எஃப்.ஐ.ஆர். போட்­டி­ருந்­தால், இன்­றைக்கு நிலை­மையே வேறாக மாறி இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கொள்கை விரோ­தி­யும் அர­சி­யல் விரோ­தி­யும்: ஒரு விளக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் அனைத்து மேடை­க­ளி­லும் சொன்­னார்; “டெல்­லி­யில் இருக்­கி­ற­வர்­கள் எல்­லாம் கொள்கை விரோ­தி­யாம்; இங்கே இருக்­கிற நாம் அர­சி­யல் விரோ­தி­யாம்!” ஐயா, இந்த ஒரு வார்த்­தைக்கு மட்­டும் நான் பல­முறை அறை­யில் தனி­யாக உட்­கார்ந்து சிந்­தித்து சிந்­தித்தே என் தலைக்கு மேல் இருக்­கி­றது எல்­லாம் போய்­விட்­டது. இந்த வார்த்­தைக்கு என்­ன­தான் பொருள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். நம்­மோடு இருந்­தார்; அண்­ணன் கலை­ஞ­ரு­டைய 40 ஆண்டு கால நண்­பர் அவர். இன்­னும் சொல்­லப்­போ­னால், திரை­ யு­ல­கத்­திலே இரண்டு பேரும் நண்­ப­ராக இருந்த கார­ணத்­தி­னால்­தான், அன்­றைக்கு அவ­ரைப் பக்­கு­வப்­ப­டுத்­திப் பேர­றி­ஞர் அண்­ணா­வி­டத்­திலே கொண்டு வந்து, மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆரைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் சேர்த்­தார். அது வர­லாறு! 1953-இல் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திலே இணைத்­துக் கொண்­டார்­கள். திரை­யு­ல­கத்­திலே எம்.ஜி.ஆரும் அண்­ணன் கலை­ஞ­ரும் நண்­பர்­கள்; ஒரு­வரை ஒரு­வர் விட்­டுக் கொடுக்­கக் கூடாது என்று எண்­ணி­ய­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அண்­ணன் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக வர வேண்­டும் என்று அண்­ணா­வுக்­குப் பின்­னால் போட்டி போட்ட காலத்­திலே, பரங்­கி­மலை தொகு­தி­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ஒரு­முறை அல்ல,இரண்டு முறை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில்நின்று வென்­ற­வர் மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ராக அண்­ணன் கலை­ஞர் இருந்த போது, பொதுச்­செ­ய­லா­ள­ராக நாவ­லர் இருந்த போது, பொரு­ளா­ள­ராக தி.மு.க.வில் இருந்­த­வர் மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். எனவே, தி.மு.க. எம்.எல்.ஏ, தி.மு.க.வினு­டைய பொரு­ளா­ளர், 40 ஆண்டு கால திரை­யு­ல­கத்­தின் மூல­மாக என் அண்­ணன் கலை­ஞ­ருக்கு 
நண்­பர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு அமைச்­சர் அந்­தஸ்­தில் இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக, தன்­னு­டைய நண்­ப­ருக்­குச் சிறு­சே­மிப்­புத் திட்­டத்­தின் துணைத்­த­லை­வர் பத­வி­யைக் கொடுத்­த­வர். அவ­ருக்­கும் அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளுக்­கும் இடை­வெளி ஏற்­பட்­ட­போது வெளியே போய், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்., “எனக்­கும் அவ­ருக்­கும் அர­சி­யல் விரோ­தம்” என்று சொன்­னால் கூட அது பொருத்­த­மாக இருந்­தி­ருக்­கும். “எனக்­கும் என்­னு­டைய நண்­பர் கலை­ஞ­ருக்­கும் அர­சி­யல்­ரீ­தி­யாக எங்­க­ளுக்­குள் விரோ­தம்” என்று சொன்­னால் கூட அது பொருத்­த­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.வை விமர்­சிக்­கும் 
தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் கேட்­கி­றேன், மாண்­பு­மிகு மிஸ்­டர் சி.எம். சார்! நீங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திலே கிளைச் செய­லா­ள­ராக இருந்­த­வரா? வட்­டச் செய­லா­ளரா? பகு­திச் செய­லா­ளரா? மாவட்­டச் செய­லா­ளரா? செயற்­குழு உறுப்­பி­னரா? பொதுக்­குழு உறுப்­பி­னரா? அணி அமைப்­பா­ளரா? தி.மு.க.வுக்­கும் உங்­க­ளுக்­கும் என்ன சம்­பந்­தம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­களை ‘அர­சி­யல் விரோதி’ என்று நாடு முழு­வ­தும் பறை­சாற்­றி­னீர்­களே! நாங்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் இடத்­திலே கேட்­டோம், ஒரு பக்­கம் செய்தி சென்­று­கொண்டே இருக்­கி­றது. “அண்ணா, அவர்­களை விமர்­சிக்க விடுங்­கள்” என்று நாங்­கள் கேட்ட போது, “இல்லை, அதை இக்­னோர் செய்­யுங்­கள், அது ஒரு பெரிய விஷ­ய­மல்ல; நாட்டு மக்­கள் மீது எனக்கு நம்­பிக்கை இருக்­கி­றது; நாட்டு மக்­க­ளுக்கு அனைத்­து­மாக நான் இருக்­கி­றேன்; எனக்­காக அவர்­கள் இருப்­பார்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது; அவரை விமர்­சிக்­கக் கூடாது” என்று சொன்ன தாய் உள்­ளம் கொண்ட தலை­வர். நாங்­கள் விமர்­சித்து இருந்­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளும் விசி­லுக்கு விழுந்த ஓட்­டு­க­ளும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதோடு மட்­டு­மல்ல, ஏதோ மக்­கள் ஏமாந்­தார்­கள். “நண்பா, நண்பி, குட்­டீஸ்” என்று குழந்­தை­க­ளைத் தன்­வ­சப்­ப­டுத்தி, “உங்­கள் அப்பா - அம்­மா­வி­டம், உங்­கள் அத்தை - மாமா­வி­டம், உங்­கள் தாத்தா - பாட்­டி­யி­டம், சாக்­லேட்­டுக்­காக நீ அழ மாட்­டாயா? அதே­போன்று, விஜய் மாமா­வுக்­காக, நீ ஓட்­டுக்­காக அழுது எனக்கு வாங்­கிக் கொடு” என்று அந்த இளம் சிறார்­களை அழ வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் ஒரு ஆதா­ர­பூர்­வ­மான செய்­தியை இங்கே சொல்­கி­றேன். ஆழ்­வார்­பேட்­டை­யிலே என் வீட்­டிற்­குப் பக்­கத்­தில் ‘கீர்த்­தி­லால்’ என்று ஒரு கடை இருக்­கி­றது. அந்­தக் கீர்த்­தி­லால் கடைக்­குப் பக்­கத்­தில், ரோட்­டில் ஒரு பழக்­கூடை வைத்­துக் கொண்டு ஒரு 70 வயது மூதாட்டி கடை நடத்தி வரு­கி­றார். என்­னு­டைய ஓட்­டு­நரை அனுப்­பிப் பழம் வாங்­கு­வது போன்று, “எதற்கு ஓட்டு போட்­டீர்­கள்?” என்று கேட்டு வரச் சொன்­னேன். என் ஓட்­டு­நர் அந்த மூதாட்­டி­யி­டம் ஒரு கிலோ ஆப்­பிள் வாங்­கிக் கொண்டு, “பாட்டி, நீங்­கள் எதற்கு ஓட்டு போட்­டீர்­கள்?” என்று கேட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் திரும்­பித் திரும்­பிப் பார்த்­து­விட்டு, “என் சொந்த ஊர் திண்­டி­வ­னம்; நான் மயி­லாப்­பூ­ருக்கு வாழ்க்­கைப்­பட்டு வந்­தேன். என் வீட்­டுக்­கா­ரர் அந்­தக் காலத்­தி­லி­ருந்து இந்­தக் காலம் வரைக்­கும் தி.மு.க.. எங்­கள் குடும்­பத்­தில் 17 ஓட்­டு­கள் இருக்­கின்­றன. நாங்­கள் காலம் முழு­வ­தும் உத­ய­சூ­ரி­ய­னுக்கு ஓட்­டுப் போட்டே பழக்­கப்­பட்ட குடும்­பம். ஆனால், இந்த முறை எங்­கள் பேரப்­பை­யன் வந்து தொல்லை கொடுத்­தான்; ஆயா, இந்த ஒரு முறை மட்­டும் விசி­லுக்கு ஓட்­டுப் போடு ஆயா என்று கெஞ்­சி­னான். ஐயோ, குழந்­தைப் பிள்ளை வந்து கேட்­கி­றதே, அப்­படி நானும் எங்­கள் வீட்­டுக்­கா­ர­ரும் யோசித்­தோம். குழந்தை அழு­கி­றதே... விசில் கேட்­கிற குழந்தை; விசி­லுக்கு ஓட்­டுப் போடு என்று கேட்­கி­றதே என்று நினைத்­தோம்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் மேலும் சொன்­னார், “இப்­போது எனக்கு வயது 70 ஆகி­றது, நான் 20 வய­தில் வாழ்க்­கைப்­பட்டு வந்­தேன்; அன்­றை­யி­லி­ருந்து நடந்த தேர்­த­லில் எல்­லாம் உத­ய­சூ­ரி­ய­னுக்­குப் போட்ட இந்­தக் கைதான், என் பேரக்­கு­ழந்­தைக்­காக இந்த ஒரே ஒரு முறை விசி­லுக்­குப் போட்­டது. நான் விசி­லுக்கு ஓட்­டுப் போட்­டா­லும், தி.மு.க. வரா­மல் போகாது; அந்த நல்ல மனு­ஷன் வந்­து­வி­டு­வான் என்று நம்­பித்­தான் அங்கே போட்­டேன்” என்று சொல்­கி­றார். என் தாய் மீது ஆணை­யிட்­டுச் சொல்­கி­றேன், இந்­தச் சம்­ப­வத்தை நான் காதால் கேட்­டேன்; இது­தான் தமிழ்­நாட்­டின் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">24 மணி நேர­மும் மக்­க­ளுக்­காக உழைத்த முத­ல­மைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் விசி­லுக்கு ஓட்­டுப் போட்­டால், மு.க. ஸ்டாலின் வெற்றி பெறா­மலா போகப் போகி­றார்? அவர் கட்­டா­யம் வெற்றி பெறு­வார். நாட்டு மக்­க­ளுக்கு</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>