<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,273,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 23:01:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260619T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19062026-TRY-02" position.sequence="02" ex-ref="19062026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் (17.6.2026) மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="13"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">தேர்­தல் வாக்­கு­று­தி­களைக் கைவிரித்திட விஜய் அரசு திட்­டம்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">நலத்­திட்­டங்­களை நிறை­வேற்றி – கழக ஆட்­சி­யில் வாங்­கிய கடனை விட </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">குறை­வான கடனை நீங்­கள் வாங்­கி­னால் நான் பொறுப்­பி­லி­ருந்து வில­கத் தயார்!</lang>
	<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">த.வெ.க. அர­சுக்கு – முன்­னாள் நிதி­ய­மைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு சவால்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thalaviar176_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="1_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன்.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“வெள்ளை அறிக்கை அல்ல,  அது வெற்று அறிக்கை!” வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற மாட்­டோம் என கைவி­ரிக்­கவே இந்த வெள்ளை அறிக்கை தங்­க­ளின் இய­லா­மையை மூடி மறைக்­கும் உத்தி என்­றும் நலத்­திட்­டங்­களை நிறை­வேற்றி தி.மு.க. ஆட்­சி­யில் வாங்­கிய கடனை விட குறை­வான கடன் நீங்­கள் வாங்­கி­னால் நான் பொறுப்­பில் இருந்து வில­கிக் கொள்­கி­றேன். இது சவால் என்­றும் ஒன்­றிய அர­சால் கடந்த ஆண்­டில்  ரூ.41,411 கோடி வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டது பற்றி கூற­வில்­லையே ஏன்.. அவ்­வ­ளவு பயமா..? என்­றும் முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முன்­னாள் அமைச்­சர் தங்­கம் 
தென்­ன­ரசு நேற்று முன்தினம் (17.6.2026) சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் உள்ள கழக அலு­வ­ல­கத்­தில் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­தித்­தார். அதன் விவ­ரம் பின்­வ­ரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று (16.6.2026) இந்த அரசு வெளி­யிட்ட வெள்ளை அறிக்கை என்­பது ஒரு வெற்று அறிக்கை தான். இதன் உண்­மை­யான நோக்­கம் என்­பது, இந்த அரசு தன்­னு­டைய இய­லா­மையை மூடி மறைக்க கூடிய உத்­தி­யாக இதை வெளி­யிட்­டுள்­ளது. மக்­க­ளி­டம் அவர்­கள் கொடுத்த தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு வழி தெரி­யா­மல் கையை விரித்து, தங்­கள் இய­லா­மையை மூடி மறைத்து தப்­பித்­துக்­கொள்­ளும் வித­மாக ஒரு எஸ்­கேப்­பி­ச­மாக இந்த வெற்று அறிக்­கை­யைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வெள்ளை அறிக்கை வெளி­யி­டு­வது என்­பது இது முதல் முறை அல்ல. ஏற்­க­னவே 2001, 2021 ஆம் ஆண்­டு­க­ளில் வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள வெள்ளை அறிக்கை என்­பது மூன்­றா­வது வெள்ளை அறிக்கை. இப்­படி மூன்று முறை வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தா­லும் தற்­போ­தைய வெள்ளை அறிக்­கைக்­கும் இதற்கு முன்­பான வெள்ளை அறிக்­கைக்­கும் நிறைய வேறு­பாடு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மறைப்­ப­தற்­கான கார­ணம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2001 ஆம் ஆண்டு அப்­போ­தைய முத­ல­மைச்­ச­ராக இருந்த போது ஜெய­ல­லிதா அவர்­கள் வெளி­யிட்ட வெள்ளை அறிக்கை அதற்கு முன்­பான 10 ஆண்­டு­கால நிதி நிலை அறிக்­கையை கொண்­டி­ருந்­தது. அதற்­குப் பிறகு கடந்த எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் 2021 ஆம் ஆண்டு வெளி­யிட்ட வெள்ளை அறிக்­கை­யா­னது அதற்கு முந்­தைய 15 ஆண்­டு­கால நிதி­நிலை அறிக்­கையை உள்­ள­டக்கி இருந்­தது. ஆனால் தற்­போது இவர்­கள் வெளி­யிட்­டுள்ள வெள்ளை அறிக்­கை­யில் கடந்த ஐந்­தாண்­டின் நிதி நிலை அறிக்கை மட்­டுமே உள்­ளது. அதற்கு முன்பு இருந்த நிதி நிலை பற்­றிய எந்த தக­வல்­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. தி.மு.க. ஆட்­சியை மட்­டும் குறிப்­பிட்டு அதற்கு முன்­பி­ருந்த அ.தி.மு.க. ஆட்­சி­யின் நிதி நிலைமை பற்றி மறைப்­ப­தற்­கான கார­ணம் என்ன.? யாரைக் காப்­பாற்­று­வ­தற்­காக இந்த வெள்ளை அறிக்­கை­யில் அ.தி.மு.க. ஆட்­சி­யின் நிதி நிலை அறிக்கை இடம்­பெ­ற­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது. தீர்ந்து போன சக்தி என இவர்­கள் குறிப்­பிட்­டார்­களே அவர்­க­ளி­டம் இருந்து இன்­னும் யாரை­யா­வது கவர்ந்து கொள்­வ­தற்­காக, இந்த வெள்ளை அறிக்­கை­யில் அவர்­கள் ஆட்சி நிதி நிலை பற்றி மறைக்­கப்­பட்­டுள்­ளதா? அதை மக்­க­ளின் பார்­வைக்கே விட்­டு­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த வெள்ளை அறிக்­கை­யின் நோக்­கமே மக்­க­ளி­டம் என்ன சொல்லி தப்­பித்­துக் கொள்­வது என்­ப­தாக உள்­ளது. ஆழம் தெரி­யா­மல் காலை விட்டு நிறை­வேற்ற முடி­யாத தவ­றான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை நம்ப வைத்­தது ஆட்­சிக்கு வந்­து­விட்­ட­தால் இதை வைத்து தப்­பித்­துக் கொள்ள நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பொய்­யான வாக்­கு­று­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­கள் 2021 ஆம் ஆண்­டில் வெள்ளை அறிக்கை வெளி­யிட்ட போதே இந்த வெள்ளை அறிக்­கையை கார­ணம் காட்டி நாங்­கள் தேர்­த­லின் போது கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மல் இருப்­ப­தற்­காக அல்ல அதற்­காக இதை வெளி­யி­ட­வில்லை என்­பதை தெளி­வாக மக்­க­ளி­டம் கூறி­னோம். ஆனால் இப்­போது இவர்­கள் வெளி­யிட்­டுள்ள வெள்ளை அறிக்­கை­யி­லேயே நிதி நிலையை கார­ணம் காட்டி புதிய திட்­டங்­கள் தொடங்­கு­வது சிர­மம் என ஆரம்­பத்­தி­லேயே சொல்­கி­றார்­கள். அப்­படி என்­றால் இவர்­கள் நோக்­கம் வெள்ளை அறிக்­கையை கார­ணம் காட்டி தாங்­கள் அளித்த பொய்­யான வாக்­கு­று­தி­க­ளில் இருந்து தப்­பித்­துக் கொள்­வது மட்­டுமே. எடுத்த எடுப்­பி­லேயே தாங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாது என கைவி­ரித்­து­விட்­டது இந்த அரசு. நிதி நிலை மோச­மான சூழல் இருந்த போதும் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிய எங்­க­ளின் முத­ல­மைச்­சர் எங்கே, நிதி நிலை கட்­டுக்­குள் இருந்­தும் அதை கார­ணம் காட்டி வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாது என சொல்­லும் இவர் எங்கே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வழக்­க­மாக நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யும் முன்­பாக வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­ப­டும். ஆனால் நாளை ஆளு­நர் உரை­யில் புதிய திட்­டங்­கள் பற்றி கூற வேண்­டும் என்­ப­தால் அதில் இருந்து தப்­பித்­துக் கொள்ள தற்­போதே புதிய திட்­டங்­களை எதிர்­பார்க்­கா­தீர்­கள் என மக்­க­ளி­டம் சொல்­லும் வித­மாக வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர்­கள் வெளி­யிட்­டுள்ள வெள்ளை அறிக்­கை­யில் கடந்த ஆட்­சி­யில் கடன் இரு மடங்­காக அதி­க­ரித்து விட்­டது என்­கி­றார். பொது­வாக நிதி நிர்­வாக தன்­மை­யும் வர­லாற்று ரீதி­யாக இந்த நிதி­நி­லைமை, கடன் எவ்­வாறு உள்­ளது என்­ப­தை­யும் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஆட்­சி­யில்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கடன் அளவு உயர்ந்ததா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2006–2007 ஆம் ஆண்டு 57,457 கோடி ரூபாய் கடன் இருந்­தது. அதே 2011–12 ஆம் ஆண்­டு­க­ளில் ரூ.1,01,350 கோடி­யாக இரு­ம­டங்­காக உயர்ந்­தி­ருந்­தது. 2016–17 ஆம் ஆண்டு ரூ.2,11,066 கோடி­யாக உயர்ந்­தது. 2020–21 ஆம் ஆண்­டில் ரூ.4,85,000 கோடி என 2.7 மடங்கு உயர்ந்­தி­ருந்­தது. தற்­போது ரூ.10 லட்­சம் கோடி என உள்­ளது. ஆகவே இது தொடர்ச்­சி­யாக வர கூடிய ஒன்­று­தான் ஆனால் ஏதோ தி.மு.க. ஆட்­சி­யில் தான் கடன் அளவு இவ்­வ­ளவு அதி­க­ரித்­துள்­ளது போல தவ­றாக குறிப்­பி­டு­கி­றார்­கள். இந்த அர­சுக்கு நான் சவால் விடு­கி­றேன். ஐந்­தாண்­டு­கள் நீங்­கள் ஆட்சி செய்­தால் தமிழ்­நாட்­டின் கடன் ரூ.20 லட்­சம் கோடி­யாக இருக்­கும் என சவா­லாக சொல்­கி­றேன். அதை யாரா­லும் தடுக்க முடி­யாது. இன்­னொன்­றை­யும் சொல்­கி­றேன் கடந்த எங்­க­ளது ஆட்­சி­யின் திட்­டங்­களை தொடர்ந்து, நீங்­கள் அளித்­துள்ள வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்றி, உங்­க­ளின் நிதி மேலாண்­மை­யால் தி.மு.க. ஆட்­சி­யில் நாங்­கள் ஒவ்­வொரு ஆண்­டும் வாங்­கிய சரா­சரி கடனை விட குறை­வான கடனை வாங்­கி­னால் நான் பொறுப்­பில் இருந்து வில­கிக் கொள்­கி­றேன். இது சவால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முக்­கி­யத்­து­வம் தர­வில்லை என்­பது எந்­த­வ­கை­யில் பொருந்­தும்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டை குஜ­ராத்­தோடு ஒப்­பிட்டு கூறி உள்­ளார்­கள் இது அபத்­த­மா­னது . குஜ­ராத் ஒரு நலத்­திட்­டங்­கள் வழங்­கும் மாநி­லம் அல்ல. ஆனால் நாம் விடி­யல் பய­ணம், காலை உணவு, மக­ளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ்­பு­தல்­வன் உள்­ளிட்ட எண்­ணற்ற மக்­கள் நலத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வந்­துள்­ளோம். ஆகவே அவர்­க­ளோடு நம்மை ஒப்­பி­டு­வது தவறு. அதே போல Capital Expenditure எது­வும் சரி­யாக செய்­ய­வில்லை என கூறி இருந்­தீர்­கள். உங்­க­ளின் தேர்­தல் அறிக்­கை­யில் மக­ளி­ருக்கு மாதம் 2500 ரூபாய், 6 சிலிண்­டர்­கள் இல­வ­சம், 200 யுனிட் இல­வச மின்­சா­ரம், விவ­சா­யக் கடன் தள்­ளு­படி, திரு­மண உதவி திட்­டம், பிறக்­கும் குழ்­ந­தை­க­ளுக்கு தங்க மோதி­ரம் இப்­படி நீங்­கள் பல வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்­ளீர்­களே, அவை எல்­லாம் Capital Expenditure இல் வரு­கி­றதா.? Capital Expenditure பற்றி எது­வுமே உங்­க­ளின் வாக்­கு­று­தி­யில் இல்­லையே ஏன்? தற்­போது விளம்­ப­ரப்­ப­டுத்தி தொடங்கி உள்­ளீர்­களே சிங்க பெண் திட்­டம் Capital Expenditure இல் வரு­கி­றதா.? எங்­க­ளின் ஆட்­சி­யில் அறி­விக்­கப்­பட்ட Capital Expenditure திட்­டங்­க­ளான ECR high way, பரந்­தூர் ஏர்­போர்ட் உள்­ளிட்ட திட்­டங்­களை நிறுத்தி விட்­டீர்­கள். அனைத்து Capital Expenditure பணி­க­ளை­யும் நிறுத்தி வைத்து விட்டு எங்­களை மூல­தன செல­வுக்கு முக்­கி­யத்­து­வம் தர­வில்லை என சொல்­வது எந்த வகை­யில் பொருத்­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல வரு­மான பற்­றாக்­கு­றை­யா­னது அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் அதி­க­மாக இருந்து தி.மு.க. ஆட்­சி­யில் குறைக்­கப்­பட்­டது. 2020 – 2021 ஆம் ஆண்­டில் ரூ.62,325 கோடி­யாக இருந்­தது 2024–25 கழக ஆட்­சி­யில் ரூ.45000 கோடி­யாக குறைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பா.ஜ.க. அரசு பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வாய்­தி­றக்­கா­தது ஏன்? பயமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மொத்த GSDP யில் 3.48 ஆக இருந்த வரு­வாய் பற்­றாக்­குறை 1.47 ஆக குறைக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு ரூ.78,000 கோடி வரக் கார­ணம் என்ன என மட்­டும் கூறா­தது ஏன்? அதற்கு கார­ண­மான ஒன்­றிய பா.ஜ.க. அரசு பற்றி வாய் திறக்­கா­தது ஏன்? GST மறு­சீ­ர­மைப்­பின் கார­ண­மாக நமக்கு ரூ.11,809 கோடி இழப்பு, TANGEDCO இழப்­பீட்டு நிதி ரூ.16,507 கோடி, SSA கல்வி நிதி ரூ.3548 கோடி, ஜல் ஜீவன் குடி­நீர் நிதி ரூ.3,112 கோடி, நிதி ஆணை­யத்­தின் மானி­யம் ரூ.2,246 கோடி, GRF ரூ.3087 கோடி, ஒன்­றிய அர­சின் வரி பகிர்வு ரூ.1200 கோடி ஆக மொத்­தம் ரூ.41,411 கோடி ரூபாய் கடந்த ஆண்டு நமக்கு ஒன்­றிய அர­சால் ஏற்­பட்ட இழப்பு. இதை ஏன் இந்த அரசு மக்­க­ளி­டம் கூற­வில்லை அவ்­வ­ளவு பயமா?. இந்த வரு­வாய் பற்­றாக்­கு­றைக்கு கார­ண­மான ஒன்­றிய அர­சின் செயலை மறைத்து விட்டு ஏதோ கடந்த ஆட்­சி­யின் நிதி மேலாண்­மை­யில் ஏற்­பட்ட தவறு போல சித்­த­ரிக்க முயல்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே போல State own tax revenue மாநில வரி வரு­வாய் ஆதா­ரம் பற்றி குறிப்­பி­டு­கை­யில் குறைந்­துள்­ளது என கூறி­னார்­கள். ஆனால் அது அ.தி.மு.க. ஆட்­சி­யி­லேயே குறைந்து இருந்­தது. 2011 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்­சி­யின் முடி­வில் 7.9% ஆக இருந்­தது. 2021 அ.தி.மு.க. ஆட்­சி­யின் முடி­வில் அது 5.46% ஆக குறைந்­தது. தி.மு.க. ஆட்­சி­யில் 6.33 % ஆக அதி­க­ரித்­தது தற்­போது 5.47 % ஆக குறைந்­த­தற்கு கார­ணம் ஒன்­றிய அரசு GST வரி விகி­தத்­தில் மாற்­றம் கொண்டு வந்­தது. இதன் பாதிப்பு கர்­நா­டகா , குஜ­ராத் உள்­ளிட்ட மாநி­லங்­ளி­லும் எதி­ரொ­லித்­துள்­ளது. அத­னால் அவர்­கள் சொல்­வது போல எங்­க­ளால் அது குறை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கடன் அள­வில் சுருக்கிப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பார்க்க முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு போக்­கு­வ­ரத்து துறை­யின் கடன் , TANGEDCO கடன் என்­பது இல­வச பஸ்­பாஸ், இல­வச மின்­சா­ரம் உள்­ளிட்ட மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­கள் செய்­ல­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­லும், இந்த துறை­கள் மக்­க­ளுக்­கான சேவைத் துறை­கள் என்­ப­தா­லும் கடன் என்ற அள­வில் மட்­டும் இதை சுருக்கி பார்க்க முடி­யாது. அப்­படி கடன் இல்­லா­மல் இத்­து­றையை மாற்­று­கி­றோம் என்­றால் இல­வச பஸ்­பாஸ், மக­ளிர் இல­வச பய­ணம், விவ­சா­யி­கள் இல­வச மின்­சா­ரம் இவற்றை எல்­லாம் நிறுத்­திப்­பா­ருங்­கள். நீங்­கள் என்ன செய்ய போகி­றீர்­கள் என மக்­கள் பார்க்க தான் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு ஆட்­சி­யில் கடன் என்­பது முக்­கி­யம் கிடை­யாது, அதை எப்­படி மக்­கள் நல­னுக்­காகசெலவு செய்­கி­றீர்­கள் என்­ப­து­தான் முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">GSDP வரம்­பிற்­குள் கடன் அளவை எவ்­வாறு வைத்­துள்­ளீர்­கள் என்­பது தான் முக்­கி­யம். ஆனால் இவற்றை எல்­லாம் கார­ணம் காட்டி தாங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற மாட்­டோம் என இப்­போதே கைவி­ரித்­தி­ருப்­பது மக்­களை ஏமாற்­றும் செயல். அதற்­காக தான் இந்த வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>