<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,646,960,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 23:03:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260619T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19062026-TRY-04" position.sequence="04" ex-ref="19062026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திருப்பூரில் கடந்த 12 நாட்களில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal2_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திருப்­பூர், ஜூன் 19 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பள்ளி மற்­றும் கல்­லூ­ரி­க­ளில் புதிய கல்வி ஆண்டு தொடங்­கி­யுள்ள நிலை­யில், தங்­க­ளது பிள்­ளை­க­ளின் உயர் கல்­விக்­காக கடன் தேடும் நடுத்­தர மற்­றும் ஏழை, எளிய பெற்­றோர்­களை குறி­வைத்து ஆன்­லைன் மோசடி கும்­பல் தீவி­ர­மாக வலை­வி­ரித்து வரு­ கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்ஸ்­டா­கி­ராம், பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற முன்­னணி சமூக வலை­தள பக்­கங்­க­ளில், சிபில் ஸ்கோர் தேவை­யில்லை, வெறும் 2 சத­வீத வட்டி, 24 மணி நேரத்­தில் ஒன்­றிய அர­சின் மானி­யத்­து­டன் கூடிய கல்­விக்­க­டன் வழங்­கப்­ப­டும் என அதி­ரடி விளம்­ப­ரங்­ களை இந்த கும்­பல் அறி­விக்­கி­றது. தனி­யார் வங்­கி­கள் மற்­றும் அரசு வங்­கி­க­ளில் கடன் கிடைக்­கா­மல் அலைந்து திரி­யும் பெற்­றோர்­கள், இந்த கவர்ச்­சி­க­ர­மான விளம்­ப­ரங்­களை நம்பி அதில் உள்ள எண்­களை தொடர்பு கொள்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அவ்­வாறு தொடர்பு கொள்­ளும் பெற்­றோர்­களை தங்­க­ளது சாது­ரி­ய­மான பேச்­சால் நம்ப வைக்­கும் மோசடி கும்­பல், உங்­க­ளுக்கு லோன் பாஸ் ஆகி­விட்­டது எனக் கூறி, போலி­யாக தயா­ரிக்­கப்­பட்ட வங்கி ஒப்­பு­தல் ஆவ­ணங்­களை வாட்ஸ் அப்­பில் அனுப்பி வைக்­கி­றது. இதனை உண்மை என்று நம்­பும் பெற்­றோர்­க­ளி­டம், ஆவண சரி­பார்ப்பு கட்­ட­ணம், ஜிஎஸ்டி, இன்­சூ­ரன்ஸ் தொகை மற்­றும் முத்­தி­ரைக்­கட்­ட­ணம் என பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூறி, கூகுள் பே அல்­லது போன் பே மூலம் சில ஆயி­ரம் ரூபாய்­களை முன் பண­மாக பெற்­றுக்­கொண்டு, அதன் பிறகு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஏமாற்­றி­வி­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மறு­பு­றம், பின்­ன­லாடை நக­ரான திருப்­பூ­ரின் முக்­கிய அங்­க­மாக விளங்­கும் தொழி­லா­ளர்­க­ளின் அவ­சர பணத்­தே­வை­க­ளை­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வறு­மை­யை­யும் முத­லீ­டா­கக் கொண்டு ஆன்­லைன் லோன், ஆப் மோச­டி­கள் அசுர வேகத்­தில் பெரு­கி­விட்­டன. தங்­க­ளின் அன்­றாட குடும்ப செல­வு­கள், மருத்­துவ செல­வு­கள் மற்­றும் அவ­சர தேவை­க­ளுக்­காக பணத்தை தேடும் தொழி­லா­ளர்­களை குறி­வைத்து. உட­னடி கடன் அல்­லது ஆவ­ணங்­களோ இன்றி நிமி­டங்­க­ளில் கடன், மானி­யத்­தில் கடன் என பல்­வேறு கவர்ச்­சி­க­ர­மான விளம்­ப­ரங்­களை சமூக வலைத் பரப்­பு­கின்­ற­னர். அவ­சர தேவைக்­காக இந்த ஆன்­லைன் செய­லி­களை தொழி­லா­ளர்­கள் தங்­க­ளது மொபைல் போனில் பதி­வி­றக்­கம் செய்­யும் போது, அவர்­க­ளின் அறி­யா­மையை பயன்­ப­டுத்தி மொபை­லில் உள்ள போன் எண்­கள் மற்­றும் புகைப்­பட கேலரி ஆகி­ய­வற்­றுக்­கான அனு­ம­தியை இந்த செய­லி­கள் திருடி விடு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆரம்­பத்­தில் மிகக் குறைந்த தொகை­யைக் கட­னாக வழங்­கும் இந்த நிறு­வ­னங்­கள், அடுத்த சில நாட்­க­ளி­லேயே கந்­து­வட்­டியை­ விட மோச­மான வட்டி மற்­றும் அப­ரா­தங்­களை விதிக்­கின்­றன. தொழி­லா­ளர்­கள் தாங்­கள் வாங்­கிய அசல் தொகையை விடப் பல மடங்கு தொகையை திருப்பி செலுத்­திய பிற­கும், கடன் தீர­வில்லை என்று கூறி அவர்­க­ளின் மொபை­லில் இருந்து திரு­டப்­பட்ட புகைப்­ப­டங்­களை ஆபா­ச­மாக சித்­த­ரித்து, அவர்­சு­ளின் நண்­பர்­கள் மற்­றும் உற­வி­னர்­க­ளுக்கு அனுப்பி விடு­வ­தாக மிரட்­டு­கின்ற­ னர். இந்த அவ­மா­னத்­திற்­கும், மிரட்­ட­லுக்­கும் பயந்து தொழி­லா­ளர்­கள் தங்­க­ளின் உழைப்­புப் பணத்தை மொத்­த­மாக இழந்து தவிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது­மட்­டு­மன்றி, வீட்­டுச் செல­வு­க­ளுக்­குத்­து­ணை­யாக இருக்க வேண்­டும், வீட்­டி­லி­ருந்­த­ப­டியே மொபைல்­போன் மூலம் வரு­மா­னம் ஈட்­ட­லாம் என நினைக்­கும் நடுத்­தர குடும்­பத்து இல்­லத்­த­ர­சி­கள் மற்­றும் இளம் பெண்­களை குறி­வைத்து பகுதி நேர வேலை என்ற பெய­ரில் நூதன மோச­டி­யும் நக­ரில் அரங்­கேறி வரு­கி­றது. உங்­க­ளது மொபைல் போனில் வரும் விளம்­ப­ரங் ­களை பார்த்­தால் போதும், அல்­லது யூடி­யூப் வீடி­யோக்­க­ளுக்கு லைக் செய்து, கூகுள் மேப்­ஸில் பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்கு ரேட்­டிங் கொடுத்­தால் போதும், தின­மும் ரூ.5,000 வரை சம்­பா­திக்­க­லாம் என டெலி­கி­ராம் மற்­றும் வாட்ஸ் அப் மூலம் ஆசை வார்த்­தை­க­ளைக் கூறு­கின்­ற­னர். இதனை நம்பி ஆரம்­பத்­தில் இணை­யும் பெண்­க­ளுக்கு. அவர்­கள் செய்­யும் சிறு வேலை­க­ளுக்கு உட­னுக்­கு­டன் சில நூறு ரூபாய்­களை லாப­மாக அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் செலுத்தி அசைக்க முடி­யாத நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். பெண்­கள் இதனை முழு­மை­யாக நம்­பி­ய­வு­டன். அடுத்த கட்ட டாஸ்க் என்று கூறி, அதிக லாபம் பெற வேண்­டும் 
என்­றால் குறிப்­பிட்ட தொகையை முத­லீடு செய்ய வேண்­டும் என வற்­பு­றுத்­து­கின்­ற­னர். இதனை நம்பி பெண்­கள் தங்­க­ளது சேமிப்பு பணம் மற்­றும் நகை­களை அடகு வைத்து நூறு­கள் தொடங்கி பல்­லா­யி­ரக் கணக்­கான ரூபாய் வரை ஆன்­லை­னில் முத­லீடு செய்­த­வு­டன், அந்த பணத்தை எடுக்க முடி­யா­த­வாறு அக்­க­வுண்ட் லாக் செய்­து­விட்டு மொத்­த­மாக ஏமாற்றி விடு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொழில் நக­ரான திருப்­பூர் மாந­க­ரில் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் இத்­த­கைய திட்­ட­மிட்ட ஆன்­லைன் மோச­டி­க­ளால், அப்­பாவி பொது­மக்­கள், ஏழை எளிய தொழி­லா­ளர்­கள் மற்­றும் இல்­லத்­த­ர­சி­கள் என ஏரா­ள­மா­னோர் தங்­க­ளின் வாழ்­நாள் உழைப்­பை­யும், சேமிப்­பை­யும் இழக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டுள்­ளது. திருப்­பூர் மாந­கர சைபர் கிரைம் காவல் நிலை­யத்­தில், கடந்த 12 நாட்­க­ளில் மட்­டுமே இது போன்ற பல்­வேறு சைபர் கிரைம் மோச­டி­கள் தொடர்­பாக 167 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>